புதன், 9 மே, 2018

ராஜயோகம் தரும் ஜாதகம் 2

திசா நாதனும்  , புத்தி நாதனும்  ஒருவருக்கொருவர்  எந்த  விதத்திலாவது  சம்பந்தம்   பெற்று  நட்போடும்  , பலத்தோடும் ,  ஒற்றுமையோடும்  இருந்து  விட்டால்   தங்களின்   திசா  புத்தி  நடைபெறும்   காலங்களில்  ஜாதகருக்கு   மேன்மையான  பலன்களைத்  தருவார்கள்   என்பது உண்மை .

   சூரியன் ,  சந்திரன்  , செவ்வாய்  ,  கேது   ஆகியோர்  குருவின்  நண்பர்கள்  ஆவர் .
புதன் , சனி  , ராகு  ஆகியோர்  சுக்கிரனின்  நண்பர்கள்   ஆவர் .
குருவின்   பிரிவில்  உள்ள   நண்பரின்  லக்கினங்களுக்கு 
சுக்கிரனின்  நண்பர்கள்  தரும்  யோகங்கள்  வேலை  செய்யாது  .
அதைப்போலவே  சுக்கிரனின்  பிரிவில்  உள்ள   நண்பரின்  லக்கினங்களுக்கு


குருவின் நண்பர்கள்   தரும்  யோகங்கள்  வேலை  செய்யாது  .  குறிப்பிட்ட   லக்கினங்களுக்கு    அதன்    நட்பு  கிரகங்கள்  தரும்   யோகங்கள்   மட்டுமே    செயல்  படும்  .  மற்ற  கிரக யோகங்கள்  அவ யோகங்களாகும் .

 நட்புக்கிரகங்களின்  யோகங்களே   ஒரு  மனிதனை   முன்னுக்கு   கொண்டுவரக்   கூடியவை  .
பகைக்கிரகங்கள்   யோகத்தைத்  தரும்  சூழ்நிலையில்   இருந்தாலும்
முமுமையாக  யோகம்  செய்யாது  .

  முக்கியவிதியாக  யோகம்  தரும்  வீடுகளில்  அதாவது  அந்த   பாவங்களில்    நட்புக்கிரகங்கள்  இருக்க  வேண்டும்  ,
பகைக்கிரகங்கள்   இருக்கக்  கூடாது  .

 நட்பு  வீட்டில் , நண்பருடன்  இருக்கும்  கிரகங்கள் யோகம்  தர  வேண்டிய  சூழ்நிலையில்  மிகப் பிரதமான  யோகங்களைத்  தருகின்றன.
       பகை வீட்டிலோ  , பகைவருடனோ  இருக்கின்ற  கிரகங்கள்   யோகத்தை  தர   வேண்டிய  நிலையில்  இருந்தாலும்  சும்மா  இருந்து  விடும் .

  லக்னாதிபதிக்கு  நட்புக்கிரகங்கள்   பலவீனமடைந்து  கெட்டிருந்தாலும்  அவர்களது   திசை  நடக்கும்  போது  பகை  கிரகங்களைப்  போல்  கெடுதல்  செய்யாது  .


 குல தெய்வ  சாபம் நீங்க   திருமியச்சூர்  கோவில்  சென்று   ஸ்ரீ  லலிதாம்பிக்கை   சமேத  நாதஸ்வாமியும்  ஸ்ரீ மின்னும் மேகலை  சமேத  ஸ்ரீ  ஸகல  புவனேஸ்வரர் எனும்    இளங்கோயில்   தெய்வத்தை  வழிபட வேண்டும் .   மயிலாடுதுறை   வழி  திருவாரூர் சாலை  பேரளம்  பஸ் நிலையம்  1 , கி  .மீ  தூரம் .

செவ்வாய், 8 மே, 2018

ராஜயோகம் தரும் ஜாதகம்


குருவுக்கு   கேந்திரத்தில்   செவ்வாய்  இருந்தால்     குரு  மங்கள  யோகம்  ஏற்படுகிறது  .
இதனால்   பூமி யோகம்  , மனை  யோகம்   , அசையாத   சொத்துக்கள்     சேரும்   அற்புத   யோகம்    யாவும்  உண்டாகும் .


 . சூரிய  பகவான்  3 , 6 , 11  ல்   இருக்கும்  போது   அபரிதமான   ராஜ யோகம்  ஏற்படுகிறது  .
சூரியன் 7 ல்   இருக்கும்    போது   களத்திர தோஷம்  ஏற்படும் .
சூரியன்  5  ல்   இருக்கும்  போது    புத்திர தோஷம்   ஏற்படும் .
சூரியன்   3  ல் இருக்கும்  போது   சகோதர  தோஷம்  ஏற்படும் .

. கால சர்ப்ப  தோஷத்தால்   பாதிக்கப்பட்ட   ஜாதகர்  சர்ப்ப  சாந்தி   செய்வதன்  மூலமும்  ,    நவக்கிரக   ஹோமம்   செய்வதன்  மூலம்   ராகு  , கேது   தோஷம்  அனைத்தும்   விலகும் .

 .  ஒருவருடைய  வீடு   வளமாக   இருக்க   தென்கிழக்கு   திசையில்  சமையல்  அறை  , தென் மேற்கு  திசையில்    படுக்கை அறை  , வட  கிழக்கில்   பூஜை  அறையும்  ,  கன்னி  மூலை  , உயர்ந்து  , ஈசான்யம்  வளர்ந்து  காணப்பட்டால்   வீட்டில்   வளமாக  வாழலாம் .

 . ஜாதகத்தில்  ஒரு  கிரகத்தின்  காரகத்துவம்  மற்றும்  கிரகம் ஏற்றுள்ள  ஆதிபத்தியத்தின்    தன்மைகளைத்   தராவிடாமல்   முழுமையாகத்   தடுக்கும் .( அ )  குறைக்கும்  ஆற்றல்  நவகிரகங்களில்    இராகுவிற்கு   மட்டுமே   உண்டு   என்று  அறியும்  .

 .   ஜாதகத்தில்   இராகுவிற்கு   8  எட்டு   டிகரிக்குள்  நெருக்கும்  கிரகம்  இராகுவினால்   சுத்தமாக  பலவீனமாக்கப்பட்டு   தனது  இயல்புகள்  அனைத்தையும்   பறி  கொடுத்துவிடும் .


அதாவது  அதிக  ஒளியையும்  , ஒளியே  இல்லாத   இருட்டையும்  நெருங்கும்    கிரகங்கள்   தங்களின்   சுய  தன்மையை  இழப்பார்கள்  .

 .   ஜாதகத்தில்   இராகுவிடம்  மிக  நெருங்கும்   குரு  பகவான்  
குழந்தைகளையும்   , அதிகமான   பண  வசதியையும்  , நேர்மையான   குணத்தையும்  ஆன்மிக  ஈடுபாட்டையும்   தரும்  சக்தி  அற்றவர்   ஆவார்

. இராகுவிடம்  நெருங்கி இணையும்  சுக்கிர  பகவான்  பெண்  சுகத்தையும்  , உல்லாசத்தையும்  ,    காதல்   அனுபவம்  மற்றும்   சுக வாழ்வு  தர மாட்டார் .

.  செவ்வாய்  பகவான்  தன்  இயல்புகளான  கோபம் , வீரம் , வெறித்தனம்  கடின மனம்  சகோதரம்  போன்றவற்றை   இழப்பார் .

   .      இராகுவிடம்  இணையும்   சனியால்   (   சரணடையும் )   சனியால்  வறுமை , தரித்தரம்  , கடன் , நோய்  , உடல்   ஊனம் போன்றவறைத்  தர  இயலாது  .

 . சந்திரன்   மனத்திற்கும்   , மனம்  எடுக்கும்  முடிவுகளுக்கும்  காரணமானவர்  என்பாதால்  இராகுவிடம்  நெருங்கும் போது  மனத்தைக்  கட்டுபடுத்தும் ஆற்றலை  ஜாதகர்   இழந்து   மன நலம்  குன்றுவார் . தாயன்பு  பரிபோகும் .



 .  இராகு  புதனுடன்  இணையும் போது    நிபுணத்துவம்  குறையும்  அறிவாற்றல்  அளவோடுதான்   இருக்கும் .
கணிதத்  திறமை  காணாமல்  போகும் .

. இராகு  சூரியனுடன்  இணையும்  போது  அரசுத் தொடர்பு , அரச லாபம் , தந்தையின்   ஆதரவு  போன்றாவற்றைத்  தரும்  வலிமையை  இழப்பார் .

 . ஒரு  கிரகம்  உச்சம் , மூலத்திரிகோணம்  , ஆட்சி  போன்ற  எத்தகைய   வலிமை  நிலையில்  இருந்தாலும்   சரி  , அது   இராகுவுடன்  மிகவும்   நெருங்கினால்   அத்தனை  வலிமையையும்  இழக்கும் .

.   ஒரு  கிரகம்   ஒரு  ராசியில்   ராகுவுடன்   குறிப்பிட்ட   டிகரி இடை வெளி தள்ளி   இணையும் போது   அந்த   சுப    கிரகங்களின்   இயல்பை   ராகு  பகவான்  பெற்று   தனது  திசையில்   அந்த    கிரகங்களின்  காரகத்துவம்  மற்றும்   ஆதிபத்திய  பலனைத்  தருவார்  .

 .   அதே  போல்  பாபக்  கிரகங்களுடன்   இணைந்த ராகு   அவர்களின்   கெட்ட  காரகத்துவங்களை   தனது  திசையில்   பிரதிபலித்து  கஷ்டங்களுக்கு  உள்ளாக்குவார் .
குறிப்பாக   சனி  , செவ்வாயின்   பார்வைப் பெற்ற ராகு   தன்  திசையில்   நல்ல  பலன்களை  செய்வது   கடினம்   சனி  , செவ்வாய்   லக்னம்  சுபர்களாக   இருந்தாலும்   கஷ்டங்களை  கொடுத்து  விடுவார் .




வீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து


வாஸ்து

வீடு கட்டக்  கூடிய   மனை  சதுரமாகவோ  , நீள்  சதுரமாகவோ   அமைய  வேண்டும் .
முன்பாகம்  குறுகி  பின்  பாகம்  விரிவடையக்கூடாது  .  அது போல   முன் பாகம்   விரிந்து   பின் பாகம்   குறுகி  இருக்ககூடாது   .


·         வீட்டிற்கு  4  பக்கமும்   இடம்   விடு  இருக்க   வேண்டும் .
·         வடக்கு  ,  வட  கிழக்குப்  பகுதியில்   இடம்   அதிகமாக   விட வேண்டும் .
·         தெற்கு   , தென் மேற்கு  பகுதியில்   காலி  இடம்  இருக்க  கூடாது .
·         கிணறு    ,  போர் வெல்  வடகிழக்கு  பகுதியில்   அமைக்க  வேண்டும் .

·         சமையல்  அறை    தென் கிழக்கு  பகுதியில் நலம்


முடியாத  பட்சத்தில்     வட  மேற்குப்  பகுதியில்  (   திசையில் )  சமையல்  அறை  அமைக்கலாம்  .


·         வீட்டின்   பால்கனி  வடக்கு , கிழக்குப் பகுதியில்  அமைப்பது  உத்தமம்  .  முடியாத    பட்சத்தில்   வடகிழக்கு   திசை   அமைக்கலாம் .

·         வட  கிழக்கு   பகுதிகளில்   கதவுகள்  நிறைய  வைப்பது  . வென்டி லேட்டர்   குறைவாக   உத்தமம்  .

·           மேற்கு  திசையில்   ஜன்னல்  , வென்டி லேட்டர்  குறைவாக  வைப்பது  நன்மை  தரும் .
தெற்கு  , மேற்கு பகுதியில்   அகலமாக  அமைப்பது  உத்தம  பலனை   உண்டாக்கும்

·         வடக்கு  , வட   கிழக்கு  திசையில்  கதவுள்ள  வீடுகள்   அமோகமாக   இருப்பதை    பார்க்கலாம் .

·         மேற்கு  திசையில்   படுக்கை அறை  அமைக்கலாம் .

·         குளிக்கும்  அறை  வடக்கு  திசையிலோ   , தென்  கிழக்கு  ( அ )   வட மேற்கு  திசையிலோ அமைப்பது   கூட  உத்தம  பலனை    ஏற்படுத்தும் .

·          வட மேற்கு  வாயு  மூலை  அறை  அமைக்கலாம் .  அதை  படுக்கை  அறையாகவும்   பயன்படுத்தலாம்.
பொருட்கள்  வைத்து  பூட்டும்  செயல்  படுத்தவும் .

·         பூஜை  அறையை   வட கிழக்கில்   அமைக்க  வேண்டும் .  கிழக்கு   பார்த்து   சாமி   விக்ரங்களை   பூஜிக்க  வேண்டும் .

·         வீட்டிற்கு    தண்ணீர்த் தொட்டி   தெற்கு  , தென்  மேற்கு   திசையில்   உத்தம  பலன்  கொடுக்கும் .

வெள்ளி, 4 மே, 2018

யோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க!!

யோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் 
திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு நட்சத்திரத்தாருக்கும் ஒரு மிருகம் அடையாளமாக கொடுத்து மறைமுகமாக உதாரணமாக ஜோதிடத்தில் சொல்லி இருக்கிறார்கள் இந்த பொருத்தம் இல்லை என்றால் ஜோதிடர் யாரும் பொருத்தம் இல்லை என்றுதான் சொல்வார்கள்..பூரம் நட்சத்திரம் எலி என கொடுக்கப்பட்டுள்ளது ரோகிணிக்கு பாம்பு என கொடுக்கப்பட்டுள்ளது இவை ஒன்றுக்கொன்று பகை என்பது தெரிந்ததுதான் எலியை கண்டால் பாம்பு விழுங்கி விடும்..எலியின் வாழ்க்கை முறை சிறியது.தன் வீட்டை விட்டு வேறு எங்கும் போக விரும்பாது.அப்படித்தான் இந்த நட்சத்திரக்காரர்களின் குணமும் இருக்கும் ..அஸ்தம் எருமை கொடுக்கப்பட்டிருக்கும் எப்போதும் எரும சேத்துல கிடக்குற மாதிரி கடுமையான உழைப்பு குறைவு..அதிக தூக்கம் ..எருமைக்கு புலியை சேர்க்க முடியாது அடிச்சு தின்னுடும்.அது வேகம் அதிகம் இது வேகமே இல்லை.

Image result for தேவ கணம்


பாம்பு ரோகிணி...பழிக்கு பழி..வாங்கும் உயிரினம் இதுவும் தன் வளையை விட்டு எங்கும் போகாது.யாராவது குறிக்கிட்டால் ஆபத்து.இதன் உறவு முறை வித்தியாசமானது..எனவே யாரும் திருப்தி படுத்த முடியாது அதனால் சுகம் எப்போதும் முழுமை அடையாது.பாம்பை கண்டால் நாய் சும்மா விடாது அதனால் நாய் நட்சத்திரங்கள் எதிரி..அதாவது திருவாதிரை.இதே நாய் நட்சத்திறத்துக்கு பூனை நட்சத்திரங்கள் எதிரி..ஆயில்யம்..நாயும் பூனையுமா அடிச்சுக்குவாங்க...உடலுறவு சந்தோசம் தராது வாழ்க்கை போர்க்களம் .வேறு துணையையே விரும்புவாங்க.எலிக்கு எலி அமைஞ்சா நல்லதுதான் அதைதான் மகத்து புருசம் பூரத்து பொண்டாட்டி மாதிரினு சொல்வாங்க..
இதையே கூட்டாளிகளுக்கும் நண்பர்களுக்கும் பொருத்திபார்க்கலாம்...புலி விசாகம் ..இதுக்கு கூட்டாளி எலி வந்தாலும் சரி வாழ்க்கை துணை அமைஞ்சாலும் சரி...ஒத்து வருமா...ஒரே நாளில் பிச்சுக்கிட்டு போயிடும்...ஒவ்வொரு மிருகத்தையும் அதன் உடலுறவு முறை உடலுறவு காலம் அதன் மர்ம உறுப்பின் நீளம் ஆழம் என மறைமுகமாக இதில் சொல்லப்பட்ட விசயங்கள் ஏராளம்..தாம்பத்யம் நன்றாக அமைந்தால்தான் குடும்ப வண்டி ஓடும்.எனவே யோனி பொருத்தம் மிக முக்கியமானது

செவ்வாய், 1 மே, 2018

நாக தோசம் போக்கும் பரிகார கோயில்கள்

ராகு தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள்
 
தமிழ்நாட்டில் ராகு - கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் உள்ளது. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

*1. ஸ்ரீகாளஹஸ்தி* : இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை.

மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது.

மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.

*2. ராமேஸ்வரம்* : திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங் களிலும் ராகு ஈசனை வழிபட்டுள் ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.

*3. திருப்பாம்புரம்* : அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.

*4. நாகர்கோவில்* : இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.

*5. திருச்செங்கோடு* : ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.

*6. பேரையூர்* : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது.

கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன.

மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.

*7. ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி* : புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம்.

ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.

*8. ஸ்ரீஅரியநாச்சியம்மன்* : சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சி யம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.

*9. காளிவழிபாடு* : மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

*10. பஞ்சமிதிதி* : நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார்.

பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.

*11. ஸ்ரீரங்கம்* : ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன் களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.

*12. ஆதிசேஷன்* : பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் சென்னை திருவொற்றியூர்.

-- 1) இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

-- 2) கும்ப கோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிரா மங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

*13. கும்பகோணம்* : - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை
அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

*14. சிவகங்கை* : அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன் ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.

*15 காஞ்சிபுரம்* : - ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.

*16. ஸ்ரீவாஞ்சியம்* : நன்னிலம் - குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி நாகநாத சுவாமியையும் நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

*17. விருத்தாசலத்திற்கு தெற்கே* சுமார் 7கி.மீ தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் *கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை* வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷங்கள் விலகும்.

*18. திருப்பத்தூர்* - திண்டுக்கல் சாலையில் சிங்கம்புனரிக்கு அருகில் உள்ள ஸ்தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங் குன்றீசரை தேன் - தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.

*19. சென்னை மைலாப்பூரில்* கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

*20. திருச்சி* சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.

*21. சர்ப்பதோஷமுள்ளவர்கள்* : பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும்.

நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம் மகப்பேறு சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.

*22. திருவண்ணாமலை* மாவட்டம் செஞ்சி அருகில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்கி வழிபட்டு வர நினைத்ததை சாதிப்பீர்.

*23. திருத்தணிக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு* இங்கு சென்று முஞ்சிகேசமுனிவரும் கார்கோடகனும் (நாகம்) வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர வளம் பெருகும்.