செவ்வாய், 31 ஜனவரி, 2012

சர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து

சர்க்கரை நோயை விரட்டும் அரிய மருந்து

நம் முன்னோர்கள்,சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட பல்வேறு குறிப்புகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர்.அதன்படி நடந்தால் இயற்கை வைத்தியம்,சித்த வைத்தியம் போன்ரவற்றை பின்பற்றினால் சுலபமாக சர்க்கரை நொயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்..விரட்டியும் அடிக்கலாம்...

ஒரு சித்தர் பாடல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது;

‘’நல்ல மணிச்சம்பா
நாடுகின்ற நீரிழிவைக்
கொல்லும் மிகுந்த சுகங்
கொண்டளிக்கும் -மெல்லப்
பசியளிக்கும் மூத்தோரைப்
பாலர்களை நாளும்
முசியாமலே நன்கு
வளர்க்கு முன்’’

எனக் குறிப்பிடுகிறது.

மணிச் சம்பா அரிசியானது நீரிழிவைக் கொல்லும்;அதி மூத்திர ரோகத்தை நீக்கும்.தேகத்திற்கு நல்ல சுகத்தை தரும்.கிரமமான பசியை உண்டாக்கும்.இனி அரிசி சாதத்தை விடுங்க.சம்பா அரிசியை பொங்கி சாப்பிடுங்க..! நிறைய நடங்க...நடைப்பயிற்சி அவசியம்...தியானம்,யோகா முயற்சி செய்யுங்க..சும்மா இருந்ததால்தான் சர்க்கரை நோய் வந்தது...இனியும் சும்மா இருந்தால் மிகுந்த வேதனைதான்..வாழ்வே நரகமாகிடும்...இனியாவது சுறுசுறுப்பா செயல்படுங்க...

சர்க்கரை நோய் diabetes பற்றிய விழிப்புணர்வு வீடியோ;

புலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்


அறிவித்தேன் அஞ்சுக்கு அஞ்சென்றாலும்
அப்பனே அப்பதிக்கு கோணந்தன்னில்
தெரிவித்தேன் திரவியம் காடியுண்டு
திடமான மனைகட்டி ஆளுவானாம்
குறிவித்தேன் ஆலயமும் பழுது பார்ப்பன்
கொற்றவனே ரஜிபர்த் திரமுங் கொள்வான்
புரிவித்தேன் பதியேனும் வியமா ரெட்டில்
பதறாதே பண்டு பொருள் விரயமாமே!

விளக்கம்;

ஐயனே! ஐந்திற்கு ஐந்தான பத்தாமிடத்ததிபதி அவனது ஸ்தானத்திற்கு  திரிகோணமான 1,5,9 ஸ்தானத்தில் நிற்க ஜாதகர் பொன் பொருள் நிலபுலன்கள் வாங்கி அதில் பெரிய வீடு கட்டிக் கொண்டு நலமுடன் வாழ்வான்.இவன் பழுதடைந்த கோவில்களை புதுப்பிப்பான்.பரோபகார சிந்தையுடன் பலருக்கு உதவியும் செய்வான்.ஆனால் லக்னாதிபதி 12,6,8 ஸ்தானங்களில் நின்றால் இந்த ஜாதகருக்கு எல்லா பொருள்களும் விரயமாகி பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறேன்!!




இன்னும் பல புலிப்பாணி ஜோதிட தகவல்களை பெற நல்ல நேரம் ப்ளாக்கின் வலது பக்கம் இருக்கும் கூகிள் சர்ச் கேட்ஜெட்டில் pulippaani jothidam  என தேடவும்!!

நியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி..? numerology

நியூமராலஜி ஜோதிடம் முறையில் அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி..? numerology (எண் ஜோதிடம்)

நமது பிறந்த தேதிக்கு பொருத்தமான எண்களில் பெயர் அமைந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.முன்னேற்றம் உண்டாகும்.பிரச்சினைகள் தீரும் என நியூமரலாஜி சொல்கிறது.

2,4,7,8 எண்ணுடைய தேதிகளில் பிறந்தவர்கள்தான் அதிகம் நியூமராலஜி படி பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் ..காரணம் இவர்களுக்கு பிரச்சினைகள்,தோல்விகள் அதிகம்.

2 ஆம் எண்களில் அதாவது 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ன் சந்திரன் சலனம் நிறைந்த எண் என்பதால்..,அதிக பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.பணம் தங்காமை,கடன்,குடும்ப வாழ்வு தோல்வி,மனைவியால் பிரச்சினை,தொழில் அமையாமை போன்றவை இவர்களுக்கு அதிகம்.முடிவே எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பர்.இவர்கள் எண் 1,5,6 எண் வரும்படியான எண்களில் பெயர் அமைத்துக்கொண்டால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது போல பல பிரச்சினைகளில் இருந்து தப்புவர்.பெயரை மாற்றினால் தலையெழுத்து மாறும் என நான் கதை விட மாட்டேன்.பெயரின் சிறு மாறுதல் செய்யலாம்..உதாரணம் K.SATHISHKUMAR என்பது 39 ஆம் எண்ணில் அமைந்துள்ளது.R.K.SATHISHKUMAR என்பது 41 ஆம் எண்ணில் அமைந்துள்ளது.இவ்வளவுதான் மாற்றம்.

அதே சமயம்..விஜயகுமார் என்ற பெயரை விஜய் என மாற்றினால்தான் நல்ல மாற்றம் வரும்.அது ஏன்..? அடுத்த பதிவில் சொல்கிறேன்..!!

வியாழன், 26 ஜனவரி, 2012

2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பார்க்கும் சூட்சுமம்

2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பார்க்கும் சூட்சுமம்;


ஜோதிடம் திருமண பொருத்தம் பார்க்க ராசிபலன் மட்டும் நம்பி இருக்கவில்லை.ராசிக்கட்டத்தைதான் பார்க்க சொல்கிறது.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து விட்டு 9 பொருத்தம் இருக்குன்னு சொன்னான்.இப்படி ஆகிடுச்சே ஜோசியம் பொய் என புலம்பாதீர்கள்...

ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறை எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..கொங்கு மண்டலத்தில் ஜோதிடம் மிக துல்லியமாக பார்க்கப்படும்.இங்கு வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பொஆர்ப்பதில்லை.பையன் ராசிக்கு பெண் ராசி பொருத்தம்,பெண் பிறந்த தமிழ் மாதம்,பையன் பிறந்த தமிழ் மாதம்..அதாவது சூரியன் நிற்கும் ராசியை கணக்கிட உதவும்...அதே போல சுக்கிரன் அமைப்பு இருவருக்கும் எப்படி...செவ்வாய் இருவருக்கும் எப்படி..இருவர் ஜாதகத்திலும் லக்னத்துக்கு 7,8 ஆம் இடங்கள் கிரகங்களுடன் இருக்கா,சுத்தமாக இருக்கா,பெண் ஜாதகத்தில் நாக தோசம்,செவ்வாய் தோசம் இருந்தால் பையன் ஜாதகத்திலும் அதே போல அமைப்பு வேண்டும்..என நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டே திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது!

பெண்ணுக்கு நடக்கும் திசா புத்தி 6,8,12 க்குடையவன் என்றால் சூரியன்,சந்திரன் ,செவ்வாய் திசை என்றால் எச்சரிக்கை தேவை.பையனுக்கு 6,8,12 க்குடையவன் திசா புத்தி நடந்தால் எச்சரிக்கை தேவை..

2012 ல் யாருக்கெல்லாம் கல்யாண யோகம் இருக்கு என்பது அவரவர் ஜாதகத்தில் 7,9,5 க்குடையவன் புத்தி,,குரு,சுக்கிரன்,செவ்வாய் புத்தி நடந்தால் சொல்லலாம்...இவருக்கு இந்த வருசம் கல்யாணம் உறுதின்னு..

சிம்மம்,துலாம்,தனுசு,மீனம் ராசியினருக்கு குருபலம் இருப்பதால் இந்த வருசம் கல்யாண யோகம் இருக்கு.அஷ்டம சனி நடக்கும் மீனம் ராசிக்காரங்க சுப செலவு பண்ணிட்டா அஷ்டம சனியும் பரிகாரமும் ஆச்சு.கல்யாணம் பண்ணின மாதிரியும் ஆச்சு..துலாம் ராசிக்காரங்களுக்கும் அப்படித்தான்..சரியா.

(திருமண பொருத்தம் சூட்சுமம் தொடரும்)


பங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்

பங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்;



இவர் ஒரு பெண்.ஜாதக ஆராய்ச்சிக்கு ஒரு ஜோதிடரிடம் வந்த ஜாதகம்.இவருக்கு சுக்கிர திசை வந்தபோது,உங்க கும்ப லக்னத்துக்கு யோகாதிபதி திசை வந்துவிட்டது.இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்,.நினைத்ததெல்லாம் நடக்கும் என புகழ்ந்திருக்கிறார்.இரண்டில் குரு இருப்பதால் நிதி சம்பந்தமான துறையில் வட்டிக்கு விடுதல்,பங்கு சந்தை போன்றப்வற்றில் ஆர்வம் இருக்குமல்லவா.உடனே இவரும் நான் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா எனக்கேட்க,தாராளமா செய்யலாம்.பணம் வந்து கொட்டும் என்றிருக்கிறார்.

பொதுவாக கும்ப லக்னத்துக்கு சுக்கிர திசை முதல் பத்து வருடத்துக்கு நல்லது செய்யாது என்பது விதி.அதன்படி..இவர் பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய,சுக்கிரதிசை சூரிய புத்தி பெரும் நஷ்டத்துடன் முடிந்தது.குடும்பத்தினர் சென்ற காரும் விபத்தில் மாட்டிக்கொண்டது.கணவருக்கும் உடல் பாதிப்பு சூரிய புத்தியில் ஏற்பட்டது.கணக்கு பார்த்தால் பங்கு சந்தையில் ஒரு கோடி இழந்தார்.

பங்கு சந்தையில் முதலீடு செய்யுமுன்,உங்கள் ஜாதகத்தில் 6,8,12 க்குடையவர் திசா புத்தி நடக்கிறதா..உங்கள் வீட்டு குழந்தை ஜாதகத்திலும் உங்களுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்பதை கவனித்து முதலீடு செய்யுங்கள்...2க்குடையவன் 6,8,12 ல் மறைந்திருந்தால் எவ்வளவு முதலீடு செய்தாலும் நஷ்டம்தான்!!

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!!!