செவ்வாய், 11 டிசம்பர், 2012

2013 ஆம் வருசம் எந்த ராசிக்காரருக்கு யோகம்..? ராசிபலன்

2013 ஆம் வருசம் எந்த ராசிக்காரருக்கு யோகம்..? ராசிபலன்

ஜோதிடம் பொறுத்தவரை ராசிபலனை தினபலன் பார்க்கும் விதத்தில் தான் வைத்திருக்கிறது..அதாவது சந்திரனை கொண்டு பார்ப்பது தின பலன் ..குருவை கொண்டு பார்ப்பது குருபெயர்ச்சி பலன்..சனியை கொண்டு பார்ப்பது சனி பெயர்ச்சி பலன்...மொத்தமாக எல்லா கிரகங்களும் எப்படி அமைந்திருக்கின்றன..உங்கள் ராசிப்படி அவை என்ன செய்யும் என பொத்தாம் பொதுவாக பார்ப்பது ஆண்டுபலன்...இது தவிர ஜோசியத்தின் இன்னும் பலன் அறியும் வழிமுறைகள் நிறைய இருக்கின்றன..ஒரு வீட்டில் இரண்டு ரிசப்ம் ராசியினர் இருவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை..காரணம் இருவருக்கும் வேறு ஜாதகம்..வேறு பூர்வபுண்ணியம்...வேறு திசா புத்தி..நடப்பதுதான்...எனவே ராசிபலன் பார்த்து எல்லாமே முடிவு செய்திட வேண்டாம்..உங்கள் ஜாதகப்படி யோகமான திசாபுத்தி இருந்தால் எந்த தீங்கும் வராது என்ன...அஷ்டம சனின்னா 100 ரூபா வரும் இடத்தில் 10 ரூபா தான் கிடைக்கும்...


கீழே இருக்கும் பலன்கள் எல்லாம் அவசரத்தில் செய்யும் டிஃபன் உப்புமா மாதிரி சில வரிகளில் தான் இருக்கும் காரணம் பிரச்சினைகளை நீட்டி முழக்கி உங்களை கண்ணீர் சிந்தவிட ! கூடாது என்ற நல்லெண்ணம் தான்!!

2013 ஆம் வருடத்தை பொறுத்த வரை ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ள கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினருக்கு சுமாரான பலன்கள் தான் ....அது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்....

அஷ்டம சனியின் தாக்கத்தில் உள்ள மீனம் ராசியினருக்கும் 2013 சுமாரான பலன்களையே கொடுக்கும்...

கண்டக சனி நடைபெறும் கடகம் ராசியினரும் 2013ல் கவனமாகவே செயல்பட வேண்டும்...

தனுசு ராசியினருக்கு 6ல் குரு இருப்பதால் விரய செலவுகள் அதிகரிப்பு,வருமான குறைவு என சிரமப்பட்டுக்கொண்டிருப்பர்...2013 மத்தியில் அந்த பிரச்சினையும் தீர்ந்துவிடும்..

மகரம்,கும்பம் பொறுத்தவரை சனி ராசியில் பிறந்தவர்கள் இயற்கையான போராட்டத்தை சந்தித்தாலும் குரு,சனி இவர்களை பாதிக்காமல் இருப்பதால் நன்மையான பலன்களையே பெறுவர்...

சிம்மம் ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியும் சிறப்பாக உள்ளது சனியும் முடிஞ்சிருச்சி...எனவே இவர்களும் நிம்மதி பெருமூச்சுடன் புதிய திட்டங்களை தீட்டி அதை 2013 ல் வெற்றிகரமாக செயல்படுத்துவர் இதுவரை இல்லாத தைரியம்,தன்னம்பிக்கை இனி உண்டாகும்..

மேசம் ராசியினருக்கு கேது தன் ராசியிஉல் வந்து உட்கார்ந்து விட்டதால் குழப்பம் தலையில் வந்து உட்கார்ந்தது போல...இருக்கும்..கோபம்,பிடிவாதம் எல்லாம் ஏற்கனவே எள்ளும் கொள்ளுமா வெடிக்கும்..அது இன்னும் கொஞ்சம் டபுளா வெடிக்கும்...குருபலன் இருப்பதால் ஓகே...சனியும் சாதகம்தான்...

ரிசபம் ராசிக்காரங்க...ராகு 6ல் வந்துட்டார்..இனி கலக்கல்தான் தொழில் சிறப்படையும் ..வருமானம் குவியும்..குருவும் மிதுனத்துக்கு வந்துட்டா பிரச்சினை இல்லை..2013 மத்தியில் சிறப்பான பலன்கள் உண்டு...சனியும் உங்களுக்கு ரொம்ப சாதகமா இருக்கார் நீண்டகால ஆசைகள்,லட்சியங்கள் எல்லாம் நிறைவேறும் வருடம் 2013...

மிதுன ராசிக்காரங்க குரு பலன் சுமாரா இருக்கு..சனி பலன் மோசம் என சொல்ல முடியாது...உடல்நலனில் கவனம் தேவை..குழந்தைகள் விசயத்தில் கவனம் தேவை மற்றபடி நார்மல்தான்...முடிவு எடுக்க முடியாத தடுமாற்றங்கள் இந்த வருடம் இன்னும் அதிகம்..ஏற்கனவே சொதப்புவோம்...இதுல இது வேறயான்னு சொல்றிங்களா...கரெக்டு!!






வெள்ளி, 7 டிசம்பர், 2012

ஜோதிடம்;திருமண வாழ்க்கை சிக்கல்கள்

ஜோதிடம்;திருமண வாழ்க்கை சிக்கல்கள்


ராசிபலன் மட்டும் பார்த்து திருமணம் செய்பவர்கள் யார் என்று பார்த்தால் நம் அந்தஸ்துக்கு தகுந்த இடம்,நமக்கு ஏத்த படிப்பு,பையனுக்கு நல்ல வருமானம்,பொண்ணு நிறைய சம்பாதிக்குறா ,பொண்ணு வீடு நல்ல வசதி என இவற்றை பார்ப்பவர்கள்தான் நட்சத்திரபொருத்தம் இருக்கு,ராசிபொருத்தம் ஓகே அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்கலாம் என அவசரப்படுகிறார்கள்..ஜோதிடரும் வேறு வழியின்றி இவர்கள் காட்டும் அவசரத்துக்கு ஏற்ப ஒப்புதல் கொடுத்து விடுகிறார்..

இருவரது ஜாதகத்திலும் களத்திர காரகன் 6,8,12ல் மறையாமல் இருக்கனும்,,சனி,சந்திரன் சேர்ந்தோ பார்வை பெற்றோ இருக்க கூடாது....அது சன்னியாசி ஜாதகம்..சங்கராச்சாரியார்,ராமானுஜர்,ஏசுநாதர்,புத்தர் ,வள்ளலார் போன்ற ஆன்மீக ஆய்வாளர்கள்,மக்களுக்கு சேவை செய்ய பிறந்த மகன்களின் ஜாதகத்தில்தான் சனி,சந்திரன் சேர்க்கை,சுக ஸ்தானம் கெட்டு இருத்தல் போன்றவை இருக்கும்...சனி,செவ்வாய் சேர்ந்து இருத்தல்,களத்திரகாரன் கேது நட்சத்திரம் சாரம் பெற்று இருத்தல் போன்றவையும் குடும்ப வாழ்க்கைக்கு ஆகாது...

முதல்வர் ஜெயலலிதா ஜாதகத்தில் பார்த்தால் களத்திரகாரன் கேது சாரம் பெற்று இருக்கும்...தனக்கு என குடும்பம் அமையாமல் மக்கள் சேவை ஆற்றுகிறார்....இன்று துணிச்சலுடன் சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரி நீரை பெற்று தந்திருக்கிறார்...அவருக்கு ஜாதகத்தில் மக்கள் தலைவர் அமைப்பு உள்ளதால் அவர் இவ்வாறு செயல்பட முடிகிறது

சாதாரண மனிதர்கள் மகிழ்ச்சியான குடும்ப வழ்க்கையை தான் எதிர்பார்ப்போம் அதற்கு ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறது...ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு எப்படி என பார்த்தே திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்...

திங்கள், 3 டிசம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்..? ராசிபலன்

ராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்..? ராசிபலன்;

ராகு கேது என்பவை நிழல் கிரகங்கள்..இவை கோள்கள் அல்ல..ஆனாலும் இவை நம் ஜாதகத்தில் அதிக வீரியமானவை..அதிக பாதிப்புக்ளை தரவல்லவை...கெட்ட எண்ணங்கள்,குறுக்கு வழி,வக்கிர உணர்ச்சிகள்,தாழ்வு மனப்பான்மை,எந்த சுகமும்,சந்தோசமும் கிடைக்காமை,தீயவர்களுடன் நட்பு,பாலியல் நோய் என நம் வாழ்வில் இவர்கள் செய்யும் விளைவுகள் அதிக பாதிப்புகளை தரவல்லவை...அத்தயக ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி  2.12.2012 காலை 10.53 க்கு பெயர்ச்சியானது...மத்த ராசிபலன்களில் நான் குறிப்பிருப்பவை எல்லாம் திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 ராகு கேது பெயர்ச்சி ஆகும்...

 ரிசபத்தில் இருந்த கேது மேசத்திற்கும்,விருச்சிகத்தில் இருந்து வந்த ராகு துலாம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்...

மேசம்,மேசம்,கடகம்,கன்னி,மகரம்,கும்பம்,மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் வழிபாடு செய்து கொள்வது அவசியம்.,,,,உங்கள் பேச்சிலும்,செயலிலும்,உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனமுடன் இருப்பது அவசியம்..நிழல் கிரகங்கள் உங்கள் மனதில்,உடலில் நிழலாக படியும் ..அதாவது உண்மை,மனசாட்சியை நிழல் மறைக்கும்..மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்...

ரிசபம் ராசியினருக்கு இதுவரை தன் ராசியில் கேது இருந்ததால் நிறைய மன உல்ளைச்சல்கள்,கெட்ட பெயர்,அவமானம்,தொழில் மந்தம் என சிரமப்பட்டு வந்தார்கள்..அவர்கள் ராசியில் இருந்த கேது அவர்கள் குணத்தை கெடுத்து வந்தது...மனசை நிம்மதியில்லாமல் செய்து வந்தது..கேது விலகியது இனி அதிர்ஷ்டத்தை தரும்..கேட்டது கிடைக்கும்...

மிதுனத்துக்கு 4ல் வரும் ராகு ,11ல் வரும் கேது அதிக நன்மையும் இல்லை..கெடுதலும் இல்லை..உடல்நிலையில் கவனமுடன் இருக்கனும்...கல்வியில் அதிக கவனம் தேவை..மந்த தன்மையை கொடுக்கும்..மாணவர்கள் இந்த ராசியாய் இருந்தால் ஒழுங்கீனத்தை கொடுக்கும்..பெண்களுக்கு வீண் அவமானம் உண்டாகலாம்..சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம்...வயிறு வலி உபாதைகள் உண்டாகும்..

சிம்மம் ராசிக்கு 3ல் ராகு சிறப்பான யோகம்..வருமானம் பெருகும்...தைரியம்,துணிச்சலுடன் பல வெற்றிகளை பெறுவீர்கள்..பணி புரியும் இடத்தில் நல்ல பெயர் உண்டாகும்..சொத்துக்கள் சேர்க்கை உண்டகும்..கடன் தீரும்

விருச்சிகத்துக்கு ராசியில் இருந்து ராகு விலகுவது பெரும் நன்மையை தரும்...பகையாய் போன உறவுகள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்...பலரும் உங்களை பாரட்டுவர் வருமானம் பெருகும்..

 தனுசு ராசியினருக்கு 6ல் குரு இருந்து படுத்தி வந்தாலும்,இதனால் வருமானம் குறைந்து,செலவுகள் அதிகமாகி தடுமாறி வந்தாலும் ராகு லாப ஸ்தானமான 11ல் மாறியது நல்லதுதான்...விரயத்தில் இருந்த ராகு லாபத்துக்கு போவதால் வருமானம் அதிகரிக்கும்...புதிய நட்புக்கள் உண்டாகும்..


மகரத்துக்கு 4ல் கேது வருவதால் உடல்நலனில் கவனம் தேவை...சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்..தாயாருக்கு பாதிப்பு வரலாம்.. தொழிலில்,வருமானத்தில் பிரச்சினை இல்லை...




ஞாயிறு, 2 டிசம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி எந்த ராசிக்கு கெடுதல்..?பரிகாரம்

ராகு கேது பெயர்ச்சிஎந்த ராசிக்கு கெடுதல்..? ராசிபலன்;பரிகாரம்;

ராகு கேது என்பவை நிழல் கிரகங்கள்..இவை கோள்கள் அல்ல..ஆனாலும் இவை நம் ஜாதகத்தில் அதிக வீரியமானவை..அதிக பாதிப்புக்ளை தரவல்லவை...கெட்ட எண்ணங்கள்,குறுக்கு வழி,வக்கிர உணர்ச்சிகள்,தாழ்வு மனப்பான்மை,எந்த சுகமும்,சந்தோசமும் கிடைக்காமை,தீயவர்களுடன் நட்பு,பாலியல் நோய் என நம் வாழ்வில் இவர்கள் செய்யும் விளைவுகள் அதிக பாதிப்புகளை தரவல்லவை...அத்தயக ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 2.12.2012 காலை 10.53 க்கு நடக்கிறது..மத்த ராசிபலன்களில் நான் குறிப்பிருப்பவை எல்லாம் திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 ஆகும் ஆனால் ராகு கேது ஸ்தலங்களில் இன்றுதான் சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள் நடக்கிறது...

ரிசபத்தில் இருந்த கேது மேசத்திற்கும்,விருச்சிகத்தில் இருந்து வந்த ராகு துலாம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்...

மேசம்,மேசம்,கடகம்,கன்னி,மகரம்,கும்பம்,மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம் வழிபாடு செய்து கொள்வது அவசியம்.,,,,உங்கள் பேச்சிலும்,செயலிலும்,உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனமுடன் இருப்பது அவசியம்..நிழல் கிரகங்கள் உங்கள் மனதில்,உடலில் நிழலாக படியும் ..அதாவது உண்மை,மனசாட்சியை நிழல் மறைக்கும்..மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்..

மீனம் ராசிக்காரர்களுக்கும்,கன்னி ராசியினருக்கும்,துலாம் ராசியினருக்கும்தன் சனியாலும்,ராகு கேதுவாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன..சோதனைகள் அதிகம் வரும் செலவுகள் அதிகம் காணப்படும்..தொழிலில் இடைஞ்சல்கள் அதிகம் வரும் எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து கோபத்தை காட்டாதீர்கள்...பிறரை எடுத்தெறிந்து பேசி விடாதீர்கள்..நம் மீது குற்றம் வந்தாலும் அதை பொறுமையாக சொல்லி விளக்குங்கள்..உதவி கேட்டு யார் வந்தாலும் உதவி செய்யுங்கள்..பிரதி பலன் பாராமல் உதவி செய்வது இக்காலத்தில் மிக அவசியம்...கேளிக்கை,விருந்து,கொண்டாட்டம் என செலவு செய்யாதீர்கள்..நீங்க பிறருக்காக செலவு செய்யும் நேரம் இது...
.

வெள்ளி, 30 நவம்பர், 2012

1-1-2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி? 2013 டிரைலர்

2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி?

வருசப்பிறப்பு வந்தாலெ கோயிலுக்கு போவோம்..இந்த வருசம் நான் நினைச்சது எல்லாம் நல்லபடியா நடக்கணும் இந்த வருசம் நான் வீடு வாங்கும் கனவு பலிக்கனும்..கலயாணம் நடக்கணும்..வேலை கிடைக்கனும்..தொழில் நல்ல அமோக லாபம் கொடுக்கணும் என்றெல்லாம் வேண்டிக்கொள்வோம்...இது வருசா வருசம் நடப்பதுதான்...பொதுவா சித்திரை தமிழ்ப்புத்தாண்டு பிறப்பைதான் தமிழர்கள் கொண்டாடுவர்..இப்போ மீடியாக்கள் வளர்ச்சியால் ஆங்கில புத்தாண்டையும் அமோகமாக கொண்டாட தொடங்கி விட்டோம்..பிறக்கப்போகும் புது வருடம் 2013 ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என எல்லா கிரக பெயர்ச்சியையும் வைத்து சுருக்கமான பதிவு ஒண்ணு எழுதப்போறேன் அதுக்கான முன்னோட்டம் தான் இந்த பதிவு..

1-1-2013 மொத்தமா கூட்டினா எட்டு வருதே என அலற வேண்டாம்...2013 மட்டும் கூட்டினா 6 வருது பாருங்க..மகாலட்சுமி...!! இருந்தாலும் காலண்டர்ல கடைசி இரண்டு நம்பர் மட்டும்தானே போடுவாங்க..அதை பார்க்கும்போதெல்லாம் கிலியை உண்டாக்குதே ...அது என்ன நம்பர்..? 13....சரி..ஓகே நாமளே இப்படி பயப்பட்டா அமெரிக்காகாரன் எப்படி பயப்படுவான்..? 12 வது மாடிக்கு அப்புறம் 14 ஆம் நம்பர் மாடிதான் அங்கெல்லாம்..அவன் என்ன பண்ணுவான்...நம்ம ஊர்ல 13 கண்டெல்லாம் பயப்பட மாட்டோம்...அதுவும் இல்லாம 13 ராகு ...காளியின் எண்...பெண் தெய்வம்..நம்ம ஊர்ல நடப்பது பெண் முதல்வர்...அவங்க தலைமையில நல்லது நடந்தா சரிதானே..என்ன நான் சொல்றது..? ஓகே...

கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரத்துல பிறக்குது புத்தாண்டு...செவ்வாய் உச்சம்..சூரியன்,புதன் நான்காம் இடத்துல..இந்தியாவோட ராச்க்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..இந்தியாவோட பலம் உலக நாடுகளுக்கு புரிய போற ஆண்டு 2013...இந்தியாவின் பேச்சுக்கும்,செயலுக்கும் பெரும் மரியாதையை பெற்று தரப்போகும் ஆண்டு இது...சரி எல்லா ராசிக்காரர்களுக்கும் எழுதுகிறேன்...