வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

சிவராத்திரியின் உண்மையான அர்த்தம் என்ன..?

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம்,ஆடைதானம் வழங்கப்பட்டது.....விரதம் இருந்தவர்களுக்கு பால் பழம் வழங்கப்பட்டது....மகா சிவரத்திரி விரதம் இருப்பதன் அடிப்படை, நம் உடலில் அதிகப்படியாக சுரக்கும் கெட்ட அமிலங்கள் குறிப்பிட்ட நாளில் நம் உடலுக்கு பாதகமாக மாறும்.. அன்று நாம் சாப்பிடும் உணவும் விசமாகலாம்..என்பதால் அன்று விரதம் இருந்து திட உணவுகள் உண்ணாமல் அமைதியான மனநிலையில் இருக்கவேண்டும் என்பதுதான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் நம் இந்து மதத்தில் பல விரதங்கள் வகுக்கப்பட்டுள்ளன..!! (புகைப்படம் பதிவேற்ற முடியவில்லை..சார்ஜர் பிரச்சினை..)பங்களிப்பு செய்த நண்பர்களுக்கு நன்றி..அவர்களுக்கு சிவப்பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...அடுத்து பங்குனி 30 அன்று பங்குனி உத்திரத்தில் அன்னதானம்,ஆடைதானம் செய்ய உத்தேசம்..!!

புதன், 26 பிப்ரவரி, 2014

தனுசு ராசியினருக்கு எப்போ நல்ல காலம்..?

தனுசு ராசிக்கு இப்போ ஏழாம் இடத்தில் குரு இருக்கிறது..இது குருபலம்தான்...ஆனா பணப்பிரச்சினை நிறைய இருக்கிறது.., தொழில் அப்படியே விழுந்துடுச்சி சார் என பல நண்பர்கள், வாடிக்கையாளர்கள் புலம்ப கேட்கிறேன்..இனிமே நல்லாருக்குமா என கேட்பவர்களிடம் சொல்ல சங்கடமாக இருக்கிறது..ராசிக்கு ஜூன் மதம் முதல் எட்டாம் இடத்தில் குரு வருகிறது...ஏழரை சனி நவம்பரில் துவங்குகிறது!! கொஞ்சம் கவலையன விசயம் தான் இருப்பினும் ராசி அதிபதி உச்சம் பெறுவதால் அவர் எட்டில் இருப்பதால் அதிர்ஷ்டம்தான் என சொல்லவேண்டும்...எட்டாம் இடம் எதிர்பாராத நன்மைகளையும் குறிக்கும்..ஏழரை சனி என மிரள வேண்டாம்.. ஏழரை சனியில் சொத்து வாங்கியவர்கள் தொழில் அதிபர் ஆனவர்கள் அனேகம் ஏழரை சனியில் வாங்கும் சொத்து நிலைக்கும் என்றும் சொல்வர்...பொங்கு சனி என்பது நடு வயதில் வரக்கூடியது ..உழைப்பால் பெரும் முன்னேற்றம் அடைவது பொங்கு சனியில்தான் பாடம் கத்துக்கொடுத்து இனி உன்னை மட்டும் நம்பு என ஆறுதல்படுத்தி முன்னேற்றச்செய்வதில் சனிக்கு நிகர் யாரும் இல்லை.மூன்றாவது ஏழரையாக வருபவர்கள் மட்டும் பாதிப்பு அதிகமிருக்கும் ஆரோக்கியம் கெடும்.

ராசிக்கு இரண்டாம் இடத்தை குரு பார்வை செய்வதால் குடும்பம் அமையும்...வருமானம் இருக்கும் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் எனலாம்..லக்னத்தில் இருந்து கவனித்தால் குரு பார்வை பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் அல்லது சுக்கிரனை பார்த்தால் திருமணம் விரைவில் அமையும் எனலாம்...

தனுசு ராசிக்கு ராசிநாதன் குருதான் முக்கியம் அவர் மறைவது கொஞ்சம் சிக்கல்தான் மறைந்தால் என்ன பலன்..? தன்னம்பிக்கை குறையும் எதிலும் உற்சாகமாக செயல்படமுடியாத நிலை..செல்வாக்கு குறையும்..பணி செய்யுமிடத்தில் மதிப்பு குறையும் பணம் வருமானம் தடைபடும் எப்போதவது திடீர் அதிர்ஷ்டமாக எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும்.

பூராடம் போராடும் என்பார்கள்..மூலம் நிர்மூலம் என்பார்கள் ...அது இக்காலத்தில் செயல்படும் எனினும் திருமண வயதை எட்டியவர்கள் திருமண முயற்சி செய்பவர்கள் ஜூன் மாதத்துக்குள் திருமணம் உறுதி செய்வது நல்லது.சனி வக்ரம் குரு வக்ரம் வரும்போதெல்லாம் நீங்கள் அப்பாடா என நிம்மதியாக இருக்கலாம் அப்போதெல்லாம் எந்த பாதிப்பும் இருக்காது அப்போதிருக்கும் பிரச்சினைகள் தீரும். 

வழிபடவேண்டிய தெய்வம் முருகன் தான்...வியாழக்கிழமையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வணங்குங்கள் அல்லது தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கலாம்..தான தர்மங்கள் செய்யும் முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள்...

மகா சிவராத்திரி அன்னதானம் மற்றும் ஆடைதானம் நாளை வழங்க இருக்கிறேன் வெள்ளிகிழமை படங்கள் அப்டேட் செய்யப்படும்.

நன்கொடைகள் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி..அடுத்து பங்குனி உத்திரம் அன்று குழந்தைகளுக்கு,இனிப்புடன் கூடிய,அன்னதானம் ஆதரவற்றோர்க்கு உடைதானம் செய்ய இருக்கிறேன்...அதிக உதவியில்லாத மிக சிரமப்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் இதை செய்கிறேன்..வசதியாக இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்ய பலர் இருக்கின்றனர்..
contact;sathishastro77@gmail.com  cell;9443499003

திங்கள், 24 பிப்ரவரி, 2014

விருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு ஒரு எச்சரிக்கை

விருச்சிகம் ராசிக்கு இப்போது ஏழரை சனி நடக்கிறது..இரண்டாம் சுற்று நடப்பவருக்கு இது பொங்கு சனி எனப்படும் கடுமையாக உழைத்து முன்னேறும் காலம்..ஏழரை சனி நடக்குதுங்க..அதனால எதுவும் செய்யல..எதுவும் விளங்காதுன்னு ஜோசியர் சொன்னதால எதுவும் முயற்சி செய்யல..என்பவர்களை நான் வெறுக்கிறேன் அவர்கள் முன்னேறவே முடியாது ஏழரை சனியில் தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவர்கள் அதிகம்.எப்படி..? அதுதான் சனி..கடும் உழைப்பாளிகளை சனி கைவிட்டதில்லை..இது கன்னி,துலாம் ராசியினருக்கும் பொருந்தும்...திசாபுத்தி மோசமாக இருந்தால் மட்டும் சரிவு உண்டாக்கும்..4ஆம் அதிபதி கெட்டிருந்தால் உடல்நலன் பாதிக்கும்..இப்போ அஷ்டம குரு நடக்குது..வரும் ஜூன் மாதம் குரு பலம் வருகிறது அதுமுதல் நல்லதே நடக்கும்..!! நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி உங்களுக்கே..!!

மகா சிவராத்திரி அன்னதானம் குறித்து படிக்க; http://www.astrosuper.com/2014/02/2722014.html

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

நாகதோசம் என்ன செய்யும்..? தீர்வு என்ன..? ஜோதிடம்

லக்னத்திலோ இரண்டாம் பாவத்திலோ ராகுவோ கேதுவோ இருப்பது நாகதோசம் என்று சொல்கிறோம்..லக்னம் என்பது குணத்தை சொல்வது..அங்கு ராகு கேது இருந்தால் நல்ல குணத்தை தராது..கோபம்,பிடிவாதம்,பிறர் வெறுக்கும்படி நடந்துகொள்வதை சொல்கிறது...இதற்கு நேர் எதிர் 7ஆம் பவத்தில் ராகுவோ கேதுவோ இருக்கும்...அது கணவன் அல்லது மனைவியை பற்றியும் தாம்பத்திய சுகம் பற்றியும் சொல்லும் இடமாகும்....லக்னத்தில் எப்படி குனத்தை பாதிக்கிறதோ வெறுப்பு உண்டாக்குகிறதோ அதே போலத்தான் கணவன் / மனைவியின் குணத்தையும் கெடுக்கும் 7ஆம் இட ராகு /கேது...

இரண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் 8ஆம் பாவத்தில் கேது இருக்கும்..இரண்டாம் இடம் வருமானத்தை சொல்லும் இடம்..குடும்பத்தை சொல்லும் இடம்...பேச்சு எப்படி இருக்கும் என சொல்லும் இடம்...ராகு -திருடன் எனில் கேது சாமியார் அதாவது ஒண்ணுமில்லாதவன் என அர்த்தம்..இரண்டில் ராகு இருந்தால் கபடமான வஞ்சகமான பேச்சு..கேது இருப்பின் பேசினாலே பகை...வருமானம் கேது இருப்பின் தடை..ராகு இருந்தால் குறுக்கு வழி வருமானம் ..8ஆம் இடம் என்பது அதிர்ஷ்டத்தை சொல்வது ....ஆயுளை சொல்வது ..கணவன் /மனைவியின் பேச்சு தன்மை பற்றி  சொல்வது..அங்கு ராகு கேது இருந்தால் அந்த ஸ்தனங்கள் எல்லாம் கெடும்..இதனால்தான் நாகதோசம் என்றால் மக்கள் பயப்படக்காரணம்..!! பரிகாரமும் செய்கிறார்கள்..

நான் இந்த நாகதோசத்துக்காக பரிகாரம் செய்து வைக்கும்போது அவர்கள் பிறந்த நட்சத்திரத்துக்கு யோகமான நாட்களை தேர்ந்தெடுத்து ,குறிப்பிட்ட நாளில் ,சுக்கிர பலம் ஜாதகத்தில் வலுத்துள்ள பிராமணரை வைத்துதான் பரிகாரமே செய்து வைக்கிறேன் இதனால் பரிகாரம் செய்து கொள்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்துவிடுகிறது..காரணம் எனக்கும் சுக்கிர பலம் குருபலம் சிறப்பாக இருப்பதால் விரைவில் அந்த யோகம் அவர்களுக்கு கைகூடி விடுகிறது..பரிகாரமும் 2 மணி நேரத்துக்கு குறையாமல் அனைத்து மந்திரங்களையும் பொறுமையாக உச்சரித்துதான் செய்து வைக்கிறோம்..மூன்று நதி கூடும் புண்ணிய இடம் பவானி கூடுதுறை ...கூடும் துறையில் திருமண தோசம் பரிகாரம் செய்வதால் அவர்கள் விரைவில் துனையுடன் கூடுவர்.
காளஹஸ்தி,திருநாகேஸ்வரம் போய் வந்தால் பிரச்சினை தீர்ந்துவிடுவதில்லை...ஜாதகத்தில் நாகதோசம் மட்டும் இருந்தால் சரி..ஆனால் சுக்கிரன் கேதுவுடன் இருந்தாலோ லக்னத்தில் அல்லது 7 அல்லது 8ஆம் இடத்தில் சனி இருந்தால் என்ன செய்வது..? சிம்மத்தில் சுக்கிரன் இருந்தாலோ சுக்கிரனுடன் சூரியன் இருந்தாலோ என்ன செய்வது..? 5ஆம் பாவத்தில் ராகு ,கேது,சனி,செவ்வாய் ,சூரியன் இவர்களில் ஒருவர் இருந்தால் எப்படி திருமணம் கூடும்..? 7ஆம் அதிபதி அல்லது 5ஆம் அதிபது 6ஆம் இடத்திலோ 8ஆம் இடத்திலோ இருந்தால் அதுக்கு என்ன பரிகாரம்..? முறைப்படி எல்லா தோசங்களும் தீர என்ன செய்வது..? எனவே தான் நான் எல்லா தொசங்களையும் நிவர்த்தி செய்யும்படி ஆராய்ந்து சில பரிகார முறை மந்திரங்களை குரு மூலம் அறிந்துகொண்டு அதன் படி பரிகாரம் செய்து வைக்கிறேன்.. உடனே 48 நாட்களில் திருமணமும் கூடி வருகிறது.... பவானி கூடுதுறையும் 100க்கும் மேற்பட்ட ஐயர்கள் பூஜை செய்கின்றனர் 10 நிமிடத்தில் பரிகாரம் முடிந்துவிடும்...அது சரியல்ல..அப்படி செய்துவிட்டால் பரிகாரம் செய்தது ஆகாது..இது பற்றி அறிய தொடர்புகொல்ளவும் 9443499003
sathishastro77@gmail.com

சனி, 15 பிப்ரவரி, 2014

சுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்


 சுக்கிரன் பெயர்ச்சி ராசிபலன் 2014 ரிசபம் துலாம்;

ரிசபம் ராசி அன்பர்களே...வரும் 25 ஆம்தேதி உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9ஆம் இடமாகிய பாக்யஸ்தானத்துக்கு செல்லப்போகிறார்..அதிர்ஷ்டம் பல வழிகளிலும் பண வரவை அள்ளிக்கொடுக்கப்போகிறது..!! துலாம் ராசியினருக்கு 4ஆம் இடத்துக்கு சுக்கிரன் வருவதால் வருமானம் இரு மடங்கு அதிகமாகி உங்கள் பணப்பிரச்சினைகள் எல்லாம் தீரப்போகிறது!!

ராசிநாதன் ஒரு ராசிக்கு மறையாமல் இருக்கவேண்டும் ரிசபம் ராசி என்றால் சுக்கிரன் ராசிநாதன்...அவர் ஜதகத்தில் கெடாமல் இருந்தால் அவர்கள் நல்ல நிலைக்கு உயர்கிறார்கள் வாழ்வில் நல்ல வருமானமும் சொத்துக்களும் நல்ல வீடும் அமைகிறது அழகான மனைவியும் நல்ல வீடும் அமையும் அறிவான குழந்தைகளை பெற்றெடுப்பார்கள் ராசிநாதன் கெடாமல் இருந்தால்தான் தெளிவான சிந்தனையும் நல்ல பேச்சும் இருக்கும் எதை எப்போ எப்படி செய்வது என்ற குழப்பமில்லாமல் முடிவெடுக்க முடியும்..

ராசியில் சந்திரனோடு ராகு, கேதுவோ ,சனி, செவ்வாயோ இருந்தால் மனக்குழப்பம் ,குழப்பமான வாழ்க்கை ,கோபம், பிடிவாதம், மோசமான செயல்கள் என இருப்பார்கள்.எனவே சந்திரனும் கெடக்கூடாது 6,8,12ல் மறையக்கூடாது சந்திரனுக்கு இடம் கொடுத்த ராசி அதிபதியும் கெடக்கூடாது 25 ஆம் தேதி வரை துலாம்,விருச்சிக ராசிக்கு மறைந்து இருந்த சுக்கிரன் இப்போது ராசிக்கு மறையாமல் வெளிவருகிறார் எனவே நல்ல மாருதல் உண்டாக்குவார்

முக்கிய அறிவிப்பு;

வரும் 27.2.2014 அன்று மகா சிவராத்திரி வருகிறது அன்று முதியோர்கள்,ஆதரவற்றோர்,க்கு அன்னதானம் ,உடைதானம் செய்ய இருக்கிறோம் நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் sathishastro77@gmail.com
 தொடர்பு கொள்ளவும்....அல்லது என் செல்லுக்கு 9443499003 தொடர்பு கொள்ளவும்...