செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

நவக்கிரகங்களும் உயிர்கள் வளர்ச்சியும்;ஜோதிடம்

சூரியன் சந்திரன் இல்லாவிட்டால் உலகில் மனித வர்க்கமே தோன்றி இருக்காது..மற்ற எந்த ஜீவராசிகளும்,தாவரங்களும் தோன்றி இருக்கவும் நியாயமில்லை.சூரிய சந்திரனால் எல்லாம் உயிர் பெற்று வளர்கின்றன..வாழ்கின்றன..இவ்விரண்டு கோள்கள் போல மற்ற கிரகங்களும் தனக்கென தனித்தன்மை பெற்றிருக்கின்றன...இக்கோள்களின் மொத்த ஒளிக்கதிர்கள் ஒன்றாக சேர்ந்து பூமியில் விழும்போது மனிதனின் குணங்களில் ,ஜீவராசிகளின் குணங்களில் வாழ்க்கை முறையில் நிறைய மாறுதல்கள் உண்டாகின்றன...மனிதன் வாழ பலவித தேவைகள் பூர்த்தியாகின்றன...

பூமிக்கு ஆக்ர்ஷ்ண சக்தி இருப்பதால் சுமார் இரண்டு கிலோ மீட்டர்களுக்குண்டான எதையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும்.இந்த சக்தி மற்ற எந்த கோளுக்கும் இல்லை..இதனால்தான் பூமியை தவிர எங்கும் ஜீவராசிகள் வாழ வாய்ப்பில்லை என அக்கால நம் முனிவர்களும் ,சித்தர்களும் சொல்லிவிட்டு சென்றனர்.இக்கால விஞ்ஞானிகளும் அது உண்மை என ஒப்புக்கொள்கின்றனர்.

 மனித உடல் வளர்ச்சியில் தலை முதல் மார்பு வரையிலுள்ள மேல் பகுதியை கிரக மண்டலத்தின் இளவரசனான சூரியன் வளர்க்கிறான் என்கிறது ஜோதிடம்.அதுபோலவே சந்திரன் முகத்தையும் ,செவ்வய் மார்பையும் ,புதன் இடையையும் முதுகையும்,வயிற்றை குருவும்,கைகளை ராகுவும் கால்களை கேதுவும் வளர்க்கின்றனர் என ஜோதிடம் சொல்கிறது.ஜாதகத்தில் எந்த கிரகம் வலு குன்றி இருக்கிறதோ அதர்குறிய உடல் பாகங்கள் அழகில்லாமலோ ,வளர்ச்சி இல்லாமலோ,பாதிக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது!!

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ராசிக்கட்டம் ,ஜோதிடம்,வானியல்

ஆடி அமாவாசைக்கு சில நண்பர்கள் உதவியால் சிறப்பாக அன்னதானம் ,உடை தானம் செய்தோம்..உதவிய நண்பர்களுக்கு நன்றி..இந்த மாதமும் நிதி அனுப்பட்டுமா என சில நண்பர்கள் கேட்டார்கள்..வேண்டாம் உங்களுக்கு சிரமம் தர விரும்பவில்லை...புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு பெற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டேன்.

ஃபேஸ்புக்கில் சில வரிகளை எழுதிவிட்டு அப்படியே ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் நேரம் சரியாக போய்விடுவதால் ப்ளாக் பக்கம் வரவே முடியவில்லை..வாட்ஸ் அப்பில் ஒரு நண்பர் ப்ளாக்கையே மறந்துட்டீங்களா...தினமும் வந்து ஏமாந்து போகிறேன் .தினமும் ஒரு ஜோதிட பதிவு எழுதுங்க என வருத்தப்பட்டார்..இனி ஒழுங்காக எழுதுகிறேன் என சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

வானியலும் ராசிக்கட்டமும் ;

பூமியின் சுற்றுவட்ட பாதை சுமார் 149.59787 மில்லியன் கிலோமீட்டர். மணிக்கு 108000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றுகிறது. 360 டிகிரி வட்ட பாதையை நாள் ஒன்றிற்கு 1 டிகிரி விதம் கடக்கிறது.பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகும். இது ஓர் ஆண்டு என சூர்ய சித்தாந்தப்படி கணக்கிடப்படுகிறது. 360 டிகிரியைதான் 12 ராசிகட்டங்களாக ஒரு ராசிக்கு 30 டிகிரி வீதம் கணக்கிட்டு பிரிக்கப்பட்டிருக்கிறது..அதாவது மேசம் ராசிக்கு 30 டிகிரி..இந்த ராசி முதல் ராசி..அதாவது சூரியன் 360 டிகிரி சுற்றி வந்து ஒரு வருடம் முடிந்து அடுத்த வருடத்தை தொடங்குகிறார்.முதல் ராசியான மேசத்தில் சுற்றுப்பயணத்தை துவக்குகிறார்.. முதல் 30 டிகிரியான இதனை சித்திரை மாதம் வருடத்தின் முதல் மாதம் என கணக்கிடப்பட்டது.அதுதான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

நம் முன்னோர்கள் ,பூமி சூரியனுக்கு வல இட பாகமாக செல்வதை இரண்டு அயனமாக பிரித்தார்கள்.பூமியிலிருந்து பார்வைக்கு சூரியன் வட பாகமாக செல்வதை உத்திராயண புண்ணியகாலம் என்றும் (ஆடி மாதம் முதல் மார்கழி வரை) பின்னர் தென்பாகமாக செல்வதை தட்சயனாயண புண்ணியகாலம் (தை முதல் ஆனி மாதம் வரை)என்றும் பெயரிட்டனர்.

  ரத்த கொதிப்பு கட்டுப்பட

மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்களுக்கு திருப்பதியின் நுழைவாயிலில் தத்ரூபமான சிலை உண்டு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா குரலை இந்துக்கள் வீடுகளில் , நாளின் ஏதாவது தருணத்திலாவது கேட்காமல் இருக்க முடியாது,இவர் 1930களில் பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்தனை சக்தி வாய்ந்தது,அதை ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் கேட்டு வர ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் வரும் என்பது கண்கூடு
(.-நன்றி -கீதப்ப்ரியன்)

 எப்போதும் வறுமை 

ஜாதகத்தில் மிக முக்கியமானது லக்னாதிபதி..4ஆம் அதிபதி 9ஆம் அதிபதி..1,4,9 என இந்த அதிபதிகள் 6,8ஆம் இடங்களில் மறைந்து போனால் எப்போதும் வறுமைதான்...2 ஆம் அதிபதி 6ல் இருந்தால் கடன் வாங்கிதான் வாழ்க்கை நடத்த முடியும்..2ஆம் அதிபதி 8ல் இருந்தால் எதை தொட்டாலும் நஷ்டம்.2 ஆம் அதிபதி 6,8,12ல் இல்லாமல் எங்கு இருந்தாலும் செல்வம் ,செல்வாக்கு வளரும்.


செவ்வாய், 22 ஜூலை, 2014

ஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅமாவாசை26.7.2014 astrology

சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.தாய்கிரகமாகிய சந்திரன் ராசியில் சூரியன் இருக்கும் மாதம் ஆடி மாதம்..வருடத்தில் மூன்று தினங்கள் நிச்சயமாக நம் முன்னோர்கள் நம் இல்லம் தேடி வருவார்கள் அது மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை,ஆடி அமாவாசை ...இந்த நாட்களில் நாம் அவர்களை வணங்கினால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அவர்கள் ஆசி கிடைக்கும்.நம் கஷ்டங்களை தீர்த்தும் வைப்பார்கள்.. அதிகாலையில் நதிக்கரையில் நீராடி பிராமணரை கொண்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு,மதியம் பூஜை அறையில் தலை வாழை இலை போட்டு, பருப்பு சாதம் வாழைக்காய் பொறியல் செய்து,அவல் நாட்டுசர்க்கரை வைத்து நெய் தீபம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி அதன் பின் காக்கைக்கு எள் சாதத்துடன் இதனையும் வைத்து காக்கை உண்டபின் உண்ண வேண்டும்....

ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாள்.அதுமட்டுமில்லாமல் எந்த வருடமும் இல்லாத சிறப்பு இந்த வருட ஆடி மாதத்துக்கு உண்டு..12 ஆண்டுகளுக்கு பின் குரு கடகத்தில் உச்சம் பெற்று இருக்கும்போது சூரியன்,சந்திரன் அங்கு கூடிகின்றனர்..இது மிகவும்  புனிதமான நாள் என்பதால் அன்று தான தர்மம் செய்வது வருடம் முழுக்க செய்ததற்கு சமமாகும்..எல்லா தோசங்களையும் நிவர்த்தி செய்து கொடுக்கும்.ஆடி அமாவாசை 26.7.2014 அன்று நான், ஆதரவற்ற ஊனமுற்ற,குழந்தைகளுக்கு 100 பேருக்கு மேல் அன்னதானமும் முதியவர்களுக்கு ஆடைதானமும் வழங்க இருக்கிறேன்...இணைந்து கொள்ள விரும்புபவர்கள்,நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் 9443499003 தகவல் தரலாம்...மெயில்;sathishastro77@gmail.com

வியாழன், 17 ஜூலை, 2014

ஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம்

ஆடி மாதம் பிறந்துவிட்டது...வேப்பிலை,மஞ்சள் வாசனை இனி மணக்க ஆரம்பித்துவிடும்..ஆடி மாதம் சூரியன் நீர் ராசியான கடகத்த்தில் சஞ்சரிப்பதால் தொற்று நோய் கிருமிகள் அதிகரிக்கும்...குறிப்பாக நீரால் பாதிப்பு அதிகம்..புதிய நோய்கள் உருவாகும்....திருமணம் போன்ற சுபகாரியம் இந்த மாதத்தில் விலக்கு விலக்கு கொடுக்கப்பட்டது...காரணம் சூரியன் யுத்த கிரகம் அது காதல் ராசியில் இருக்கும்போது காதல் எப்படி கனியும்..? அதனால் திருமணம் ஆகாது என சொல்லப்பட்டது..

உடல் மனக்காரகனாகிய சந்திரன் ராசியில் சூரியன் வரும்போது உடலையும் மனதையும் பலவீனமாக்கும்..அதனால் குழந்தை பிறந்தால் அது மிக சிரமப்படும்...என யூகித்து ,புரட்டாசி திருமணத்தயும் மார்கழி திருமணத்தையும் தவிர்த்தனர்..அதுவும் தொற்றுகிருமிகள் உருவாகும் காலம்தான்..ஆடி மாசம் புது தம்பதிகள் சேரவும் வேண்டாம் அப்படி சேர்ந்தால் 10 மாதம் கழித்து சித்திரையில் குழந்தை பிறந்து அக்னி நட்சத்திரத்தில் தாங்காமல் குழந்தை இறந்துவிடும் என கருதி அவர்களை இந்த மாதத்தில் பிரித்தும் வைத்தனர்.நோயிலிருந்து தப்பிக்க வேப்பிலை,மஞ்சள் போன்ற கிருமி நாசினி மூலிகைகளை அதிகளவில் பயன்படுத்தும் அம்மன் திருவிழாவை ஆரம்பித்தனர்..வேப்பம்பூ போட்ட சத்தான ஆரோக்கியமான ராகி கூழை தெருவெங்கும் மக்களுக்கு வினியோகம் செய்தனர் நம் முன்னோர் எவ்வளவு அறிவாற்றலுடன் நோய் வரும் முன் மக்களை காப்பாற்றி இருக்கின்றனர்..?

மூட்டுவலி ஆயில் பற்றி நிறைய நண்பர்கள் விசாரித்தனர்..ஏற்கனவே மூலிகை சாம்பிராணி மிக பரபரப்பாக நண்பர்கள் வாங்கி ஆதரவு தரும் நிலையில் மூட்டுவலி ஆயிலும் தரமாக இருக்கும் என எண்ணி விசாரிக்கும் நண்பர்களுக்கு நன்றி இப்போதுதான் இதன் உற்பத்தி வேலைகள் தர சோதனை ஆய்வுகள் முடிந்தன....100 மில்லி கிராம் 300 ரூபய்க்கு கொடுக்க இருக்கிறேன் வேண்டும் என்பவர்கள் என் செல்லில் தொடர்பு கொள்ளலாம் உங்க முகவரியை மெயிலுக்கு அனுப்பி விடவும் sathishastro77@gmail.com cell 9443499003

இந்த ரிலாக்ஸ் ஆயில் relax oil மொத்தம் 5 வகை எண்ணெய் 3 விதமான இயற்கை உப்புகள் மூலிகை மருந்துகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உடனடி வலி நிவாரணி ஆகும்.... நன்றி..!!

செவ்வாய், 15 ஜூலை, 2014

தொடர்புக்கு


EMAIL;  sathishastro77@gmail.com

cell;9443499003

வங்கி கணக்கு எண்;k.sathishkumar 20010801181 State bank of India ,chithode Ifsc;SBIN0018642

  

கட்டணம் ரூ 500 மட்டும்..


ஜாதகம் மெயில் மூலம் அனுப்பி பலன்களை அறியலாம்...

ஜாதகம் ஸ்கேன் செய்ய முடியாவிட்டால் உங்கள் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் உங்கள் பெயர் எழுதி அனுப்பவும்..கேள்விகள் இருப்பின் எழுதலாம். திருமணம் பொருத்தம் பார்க்க இருவரது விபரங்களும் அனுப்பவும்....

குழந்தைகளுக்கு நியூமராலஜி முறையில் பெயர்கள் தேர்வு செய்து அனுப்பவும் ஜாதக பலன்கள் அனுப்பவும் ,பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர்,தாய் ,தந்தை பெயர்கள் எழுதி ஆண் /பெண் விபரமும் குறிப்பிடவும்.

                                                             


office;செளந்தர்யா ஜோதிட நிலையம்

122,பிரகாஷ் காம்ப்ளகஸ்,கம் அருகில்,
சத்தி ரோடு,ச்ச்   சித்தோடு -638102,ஈரோடு மாவட்டம்.

  பஸ் ரூட்    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ,கோபி செட்டிபாளையம் செல்லும் பஸ்களில் ஏறி 12 கிமீ தொலைவில் இருக்கும் சித்தோடு வந்தடையலாம்..