ஜோதிடம்;ஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்;
ஜோசியம்,ராசிபலன்,கைரேகை சொல்வதும், படிப்பதும் முட்டாள்தனம் அல்ல..அதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு அதன் மகத்துவம் புரியும்.ஆர்வம் இல்லாதவர்களுக்கு அதன் மகத்துவத்தை புரிய வைப்பது அல்ல என் வேலை.நம்பிக்கை உள்ளவர்களுடன் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவே.நியூமராலஜி நம்பும் மக்கள், நம்பாத மக்கள் எப்படியென்றால் கடவுளை நம்பாதவர்கள் ,நம்புபவர்கள் என்ற பிரிவை போலத்தான்.எல்லா விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன..? கடவுளை மறுப்பவனும்,ஜோதிடத்தை எதிர்ப்பவனும் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளவே இதை செய்கிறார்கள்.பாவம் இந்த முட்டாள்கள்.சூரியனை பார்த்து நாய் ஊளையிடுவது போலத்தான்.உண்மையில் இதை பற்றி ஆராய்ந்து சொன்னால் பரவாயில்லை.இது பத்தி கொஞ்சம் கூட ஆராயாமல் முட்டாள்தனம் என சிரிப்பர்.பவானியில் ஒரு தி.க கட்சிக்காரர் ஜோசியத்தை பொய் என நிரூபிப்பதற்காக அதை கற்க ஆரம்பித்தார்.அதில் இருக்கும் உண்மை அறிந்து ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்பதை ஒப்புக்கொண்டார்.அது போல ஜோசியத்தை முட்டாள்தனம் என்பவர்கள் அதில் மிக அனுபவம் வாய்ந்தவர்கள் பலரை சந்தித்து விவாதம் செய்து முடிவெடுக்க வேண்டும்.ஜோதிடம்,கடவுள் நம்பிக்கை இந்த அறிவாளிகளால் குறைவதும் இல்லை.மாறாக வளரவே செய்கிறது.(செவ்வாய் பத்தி எழுத ஆரம்பிச்சதுமே கோபம் பொத்துகிட்டு வருதே)
நான் ஜோதிட பதிவு எழுதுவதாலோ,அரசியலில் ஜெயலலிதா அவர்களை ஆதரித்தும் எழுதுவதாலோ நாத்திக மற்றும் கருணாநிதி ஆதரவாளர்கள் என் வலைப்பக்க விளம்பரங்களை தொடர்ச்சியாக க்ளிக் செய்து அதாவது சுமார் தினசரி நான்கு மணி நேரம் இதற்காக நேரம் ஒதுக்கி விளம்பரம் க்ளிக் செய்து அதன் மூலம் கூகுளுக்கு சந்தேகம் எழுப்ப செய்கிறார்கள்.இதனால் என் விளம்பர வருவாய் குறையும் என்பது அவர்கள் எண்ணம்.எனக்கு இவ்வளவு எதிரிகளா...ஆச்சர்யமாக இருக்கிறது.16,17,18 ஆம் தேதிகளில் மட்டும் என் நல்ல நேரம் பக்க விளம்பரத்தை 2000 முறை க்ளிக் செய்திருக்கிறார்கள்.இதனால் கூகிள் எனக்கு விளம்பரம் தராமல் தடை செய்யும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.எனக்காக ஒருத்தன் அவன் பொழப்பை கெடுத்துகிட்டு உட்கார்ந்திருக்கானே என்பதற்காக அந்த விளம்பரத்தை நீக்கி வைக்கிறேன்.
ஜாதகத்தில் செவ்வாய்;
லக்கினத்தில் இருந்து ஒன்றில் அதாவது லக்கினத்திலேயே செவ்வாய் இருப்பின்,சுயமாக முடிவெடுத்து தன்னிஷ்டப்படி செயல்படுவார்கள்.எதுவும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான்.கோபம் மலை மலையா வரும்.முகம் சுள்ளுன்னு வெடிக்கிற மாதிரி டென்சனா இருக்கும்.நாலாம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால் அம்மா வுக்கு பாதிப்புதான்.மொய்க்கு மொய்தான்.நான் இந்த உதவி செய்தேன்.அவன் மறுபடி ஏனக்கும் ஏன் செய்யலை...? எதிர்பார்த்துகிட்டிருப்பார்.
இரண்டில் செவ்வாய்;
வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தா வேற என்ன.வாயில் இருந்து வரும் சொற்கள் நெருப்பாய் கொதிக்கும்.கண்கள் விஜயகாந்த் போல ரத்த சிவப்பா கொதிக்கும்.அது சூரியன் வீடா இருந்தா.சிலருக்கு கல்வி பாதிக்கும்.விரய செலவுகள் நிறைய உண்டாகும்.சகோதரனால் பாதிப்பும் உண்டு.வாயால் கெட்டான் என்பார்களே அது இவங்களுக்கும் பொருந்தும்.செவ்வாய் தோசம் உண்டு.
மூன்றில் செவ்வாய்;
எடுத்தெறிஞ்சு பேசுவதில் இவருக்கு நிகர் இல்லை.எவனா இருந்தா எனக்கென்னடா...என்றுதான் பேச ஆரம்பிப்பார்கள்.திட்டம் போட்டு கட்டம் கட்டுவதில் சூரப்புலி.மனமதன் லீலை வென்றார் உண்டோ..ஆணுக்கு வீரிய ஸ்தானம் ஆச்சே.காம கதைகள் இவர் வாழ்வில் நிறைய உண்டு.கரும்பில்லாத மன்மதன்.குழல் இல்லாத கிருஷ்ணன்.முழு ஆண்மை சக்தி இவரிடம் வெளிப்படும்.சளைக்காத செக்ஸ் உறவு இவர் பலம்.பெண்கள் வலிய வருவார்கள்.துணிச்சல்,தைரியம் இவர் முக்கிய பலம்.
நான்கில் செவ்வாய்;
நிலம்,சொத்துக்கள் நிறைய சேரும்.புதையல் யோகம் உண்டு.அம்மா இவருக்கு பாதிப்பு.இவரால் அம்மாவுக்கும் பாதிப்பு.இவர் பிறந்ததும் அவர் மார்பில் சுரக்கும் பாலும் சுரக்காது..ஆனா எப்போதும் தகராறுதான்.புருசன் பொண்டாட்டிக்குள்ள வருசத்துல பாதி நாள் யுத்தம்தான்.பணம் சேர்க்கும் வெறி எப்போதும் இருக்கும்.இருக்குமிடம் பாவரால் பார்க்கப்பட்டு அல்லது பலவீனமாய் இருப்பின் ஆரோக்கியம் கெடும்.குடியிருக்கும் வீடு எதிரிகளால் மாந்திரீகம் செய்யப்பட்டு சூன்யம் ஆக்கப்படும்.வீடு சூன்யமான இடத்தில் அமர்ந்திருக்கும்.உக்கிர தெய்வ பாதிப்பு இருக்கும்.செவ்வாய் தோசம் உண்டு.
தொடரும்.
4 கருத்துகள்:
உங்களுக்கு இவ்வளவு வன்மமான எதிரிகளா????
செவ்வாய் பற்றி தகவல்களுக்கு நன்றி.
செவ்வாய் தோஷம் பற்றி உங்கள் பதிவு படித்தது ஞாபகம், அது இந்த தளத்தில் இல்லை பழைய தளத்தில் இருக்கிறதோ??
nice post
4ல் செவ்வாய் இருக்கிறது?ஆனால்
4ம் இடம் கடகமாக இருந்தாலும் செவ்வாய் தோஷமா?
4ம் இடம் மீனமாக இருந்தாலும் செவ்வாய் தோஷமா?
4 Il enakku SIMMA IDAM.. epadi palan amaiuum???
கருத்துரையிடுக