புதன், 23 நவம்பர், 2011

ஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்

மனைவி அமையும் யோகம்;ஜோதிடம்;ஜோதிடம் கற்க இது முழுமையான பாடம் அல்ல.ஆனால் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று.


ஜோதிட சாஸ்திரத்தில் இன்பத்தை பற்றி சொல்வதற்கு 7 இடங்கள்.துன்பத்தை பற்றி சொல்வதற்கு 5 இடங்கள்.ஐந்து இடங்கள் பற்றி தெரிந்து கொண்டாலே 7 இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

லக்கினம் முதல் எண்ண வரும் 3,6,8,12 இந்த நான்கு இடங்களும் மறைவு ஸ்தானங்களும் என்கிற விதியின் கீழ் ஜாதக்ஜனை அல்லல்படுத்தி அலைக்கழித்து பார்க்கிற இடங்கள்.எஞ்சியது ஒன்று.அது பாதக ஸ்தானம்.அது எப்படி அறிவது..?

12 ராசிகள்.இதி சர ராசி.ஸ்திர ராசி,உபய ராசி என்கிற மூன்று பிரிவுகள் உண்டு.மேசம்,கடகம்,துலாம்,மகரம்,இந்த நான்கு ராசிகளும் சர ராசி.இந்த ராசியை லக்கினமாக கொண்டு ஜனிக்கிற ஜாதகருக்கு அது முதல் எண்ண வரும் 11 ஆம் இடம் பாதக ஸ்தானம்.அங்கு அமரும் கிரகம் சுபராய் இருந்தாலும், கெட்டவன் .ஆகிறார்

இதனால் என்ன நடக்கும்..?

.அந்த கிரகம் கெடு பலனே தரும்.இதனால்தான் பெரும்பாலான சர லக்னகாரர்கள் சேமிக்க முடிவதில்லை..இவர்கள் கணக்கில் பணம் இருந்தாலும் கரைந்துவிடும்..குடும்பத்தார் பெயரிலோ ,பினாமி பெயரிலோ இருந்தால் தப்பிக்கும்.கடக லக்கினத்துக்கு பாதகாதிபதி சுக்கிரன்.

கடக லக்கினத்தார் சுக்கிரன் திசையில வாங்குனதெல்லாம் அதன் திசையிலேயே கெடுத்தும் வெச்சிரும்.பெண்களால் இவர்களுக்கு தொல்லை நேர்வதும்,மனைவியால் அல்லல்படுவத்ற்கும் சுக்கிரன் பாதகாதிபதியாவதுதான் காரணம்.அதனால்தான் மகான்கள் கடக லக்கினத்தில் பிறக்கிறார்களோ...காம எண்ணம் தூக்கல்தான்.கேந்திர சுக்கிரன் கெடுதல் செய்வார்னு புலிப்பாணி ஜோதிடத்துல விளக்கமா சொல்லியிருக்கார் சித்தர்.

துலாம் லக்கினத்துக்கு சூரியன்.ஆட்சி பெர்றால் அவ்வளவுதான்.திசா புத்தி வந்தா படுத்தி எடுத்துருவார்.இவங்களுக்கு 7ல் சூரியன் உச்சம் பெற்றால்..?பணக்கார மனைவி அமையும்.ஆனா 10 பைசாவுக்கு இவரை மதிக்காது.லாரியில சீர் கொண்டு வந்திருக்கே..? எப்படி மதிக்கும்?
துலாம் லக்கினத்துக்கு மூத்த சகோதரனாலோ அல்லது கள்ள உறவால்தான் சிக்கலே காத்திருக்கு.... 11 பாதகம் என்பதால் பிற பெண்களிடமோ,ஆண்களிடமோ இவர்கள் தகாத முறையில் பழகினாலே சிக்கல்தான்...நிரைய இழந்துவிடுவார்கள்...ரத்த கண்ணீர் ராதா கதையாகிவிடும்.

11 ஆம் இடமும் 11 ஆம் அதிபதியும் ஏழாம் அதிபதியோடு சம்பந்தம் பெறும்போது இரண்டாவது கல்யாணம் செய்றதுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பது உண்மை.ஆனா இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தா வெச்சிருக்குறதோடு சரி.கெட்டிமேளம் வரை போகாது.

மகரம்  லக்கினத்துக்கு செவ்வாய் தான் எதிரி..செவ்வாய் கெட்டுட்டா நிலைமை மாறுமா.சரியா போச்சு.கெட்டு போற இடம் பாருங்க..7..காலாகாலத்துல கல்யாணம் ஆகுமா.கல்யாணம் பொருத்தம் பார்க்க கூட ஜாதகம் கிடைக்காம கல்யாண மாலை இணையத்துல பழியா கிடக்கணும்.தமிழ் மேட்ரிமொனி எவ்வளவு கேட்டாலும் கொடுத்துட்டு காத்திருக்கணும்.

சரி லக்கினத்தில் செவ்வாய் உச்சம் அடைந்தால்?

நாலு ஊர்ல நிலம்,தோப்பு இருக்கும்.ஆனா அதன் பலனை அனுபவிக்க முடியுமான்னா ம்ஹீம்.சொத்தை விற்கவும் முடியாம.,அதை பராமரிக்கவும் முடியாம திணறனும்.இவர் பெயரில் சொத்து உண்டுகைக்கெட்டினது வாய்க்கு எட்டாது...அவ்வளவுதான்.

புலிப்பாணி ஜோதிடம் 300 ;

சூடப்பா சரராசி செனித்த பேர்க்கு
சுகமில்லை லாபாதி பதியினாலே
ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்
அப்பனே அரசரிட தோசமுண்டாம்
தேடப்பா திரவியமு மளித்தரானால்
திடமான அரிட்டமடா தேடமாட்டான்
வீடப்பா கோணத்திலிருக்க நன்று
விளம்பினேன் புலிப்பாணி வினையை ப்பாரே


 ஸ்திர ராசிகளான...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் பத்தி தெரிஞ்சுக்கலாம்...

 ஸ்திர ராசிகளுக்கு 9ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகிவிடுகிறது 9ஆம் இடம் பாக்யம் ஆச்சே அது கெட்டா பாக்யம் எல்லாம் கெட்டுடுமே...சமூகத்தில் நல்ல புகழ் கிடைக்காதே ..நல்ல குழந்தைகள்,மனைவி,கணவன் எல்லாம் அப்போ ..அவுட்டா என்றால்,ஆமாம்....பாதகம் என்றாலே அதன்மூலம் வரும் பிரச்சினைகள் தான் சந்தோசம்,நிம்மதி யை குறிக்காது..

தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் எதிரிகள் ஆவார்கள்..சமூகத்தோடு ஒத்து போக முடியாது..பணம் சம்பாதிப்பதில்தான் நாட்டம்..ஊர் எப்படி போனா எனக்கென்னா டைப் தான்..உதாரணமா கும்ப லக்னத்தான் ஊருக்கு உழைச்சே திருவோடு ஏந்திடுவான்னு சொல்லுவாங்க...எவ்வளவு நல்லது செஞ்சாலும் எவ்வ்ளவு பணம் அடிச்சானோன்னு ஊர் பேசும்..அதுல என்ன பலன் இருக்கு..வட்டிக்கு கடன் வாங்கி இவர் ஊருக்கு ஒரு பொது கிணறு தோண்ட உதவினா, பெயர் என்ன கிடைச்சது பார்த்தீங்களா..அதுதான் பாதக ஸ்தானம்...

ஏட்டிக்கு போட்டியாய்தான் கணவன்/மனைவி அமையும்...ஆசைப்பட்டு கட்டிகிட்டாலும் பத்ரகாளிதான்...7ஆம் அதிபதி உச்சம் ஆச்சு..கொஞ்ச,நஞ்ச நிம்மதியும் போச்சு.அவங்க மேலதான் நீங்க கீழேதான்..குடும்ப வாழ்க்கை நிம்மதியாக போவதில்லை..அனுசரித்துதான் போயாக வேண்டும்..இந்த லக்னத்தாருக்கு இரண்டு பையன் அல்லது இரண்டு பொண்ணு பிறந்தால் யோகம்..பையன் ஒண்ணு... பொண்ணு ஒண்ணு என பிறந்தால் துன்பம்தான்..ஒருவருக்கு சிக்கலாகிவிடும்..நிம்மதி இருக்காது.கூட்டாளிகள் இவர்களை ஏமாற்றுவார்கள்..அதனால் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள்.நண்பர்களை நம்ப மாட்டார்கள் இதனால் நண்பர்கள் இவர்களுக்கு இல்லை..


3 கருத்துகள்:

naren சொன்னது…

ஜோதிடம் பற்றி அறிய நல்ல குறிப்புகள். தொடருங்கள்.

perumal shivan சொன்னது…

entha maathiri visayangalellaam naraiya ezhuthuppa mikka nanri .

சி.பி.செந்தில்குமார் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.