செவ்வாய், 31 ஜனவரி, 2012

சர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து

சர்க்கரை நோயை விரட்டும் அரிய மருந்து

நம் முன்னோர்கள்,சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட பல்வேறு குறிப்புகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர்.அதன்படி நடந்தால் இயற்கை வைத்தியம்,சித்த வைத்தியம் போன்ரவற்றை பின்பற்றினால் சுலபமாக சர்க்கரை நொயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்..விரட்டியும் அடிக்கலாம்...

ஒரு சித்தர் பாடல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது;

‘’நல்ல மணிச்சம்பா
நாடுகின்ற நீரிழிவைக்
கொல்லும் மிகுந்த சுகங்
கொண்டளிக்கும் -மெல்லப்
பசியளிக்கும் மூத்தோரைப்
பாலர்களை நாளும்
முசியாமலே நன்கு
வளர்க்கு முன்’’

எனக் குறிப்பிடுகிறது.

மணிச் சம்பா அரிசியானது நீரிழிவைக் கொல்லும்;அதி மூத்திர ரோகத்தை நீக்கும்.தேகத்திற்கு நல்ல சுகத்தை தரும்.கிரமமான பசியை உண்டாக்கும்.இனி அரிசி சாதத்தை விடுங்க.சம்பா அரிசியை பொங்கி சாப்பிடுங்க..! நிறைய நடங்க...நடைப்பயிற்சி அவசியம்...தியானம்,யோகா முயற்சி செய்யுங்க..சும்மா இருந்ததால்தான் சர்க்கரை நோய் வந்தது...இனியும் சும்மா இருந்தால் மிகுந்த வேதனைதான்..வாழ்வே நரகமாகிடும்...இனியாவது சுறுசுறுப்பா செயல்படுங்க...

சர்க்கரை நோய் diabetes பற்றிய விழிப்புணர்வு வீடியோ;

2 கருத்துகள்:

கோவை நேரம் சொன்னது…

தகவலுக்கு நன்றி மணிச் சம்பா அரிசி எங்க கிடைக்கும் ..?பொன்னி. கர்நாடக பொன்னி, சீராக சம்பா இது தான் தெரியும்...

Astrologer sathishkumar Erode சொன்னது…

சம்பா அரிசி எல்லாமே சாப்பிடலாம் என்றுதான் நினைக்கிரேன்..சீரக சம்பா அரிசி..,சம்பா கோதுமை....போன்றவை..