வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கைரேகை ஜோதிடம் சில உண்மைகள்


வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்....கையே இல்லாதவனுக்கு எதிர்காலம் இல்லையா என்பது போன்ற வரிகளை நானும் ரசித்தும் இருக்கிறேன்..ஆனால் கைரேகை என்பது உண்மை...அதை நான் நம்புகிறேன்..காரணம் அதை சொல்லி சம்பாதிக்கும் நோக்கமல்ல...அதை நான் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள பல ஊர் சுற்றியிருக்கிறேன்..பல நிபுணர்களை சந்தித்து இருக்கிறேன்...

நாம் சிறு வயதில் இருந்து கைகளை மடக்குவதினால்தா இந்த ரேகைகள் தோன்றுகின்றன..இதில் ஒன்றுமில்லை..என்பது சிலர் கருத்து..ஆனால் உண்மை என்னவென்றால் ஒருவர் ரேகை போல இன்னொருவருக்கு இருப்பதில்லை...ஒருவர் ஜாதகம் போல இன்னொருவருக்கு இருக்காது என்பது போல...காவல்துறையிலும் கைவிரல் ரேகைக்கு என்று தனிப்பிரிவே இயங்குகிறது....

இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த சீரோ என்னும் கைரேகை கலைஞர்தான் இக்கலைக்கு மிகப்பெரிய புகழை கொடுத்தவர்..அவரும் இக்கலையை இந்திய குரு மூலம்தான் கற்று சென்றார்...

ஒருவரது கைகளை பார்த்தவுடன் எப்போது எப்படி இறப்பார்,வாழ்வில் உயர்வு உண்டா..இல்லையா.. என்பது முதல் அவர் ஆரூடம் சொல்வதில் கைதேர்ந்தவர்..

ஜாதக கட்டத்தில் பலம்,பலவீனமாக இருக்கும் கிரக அமைப்புகளை கைரேகை மூலமாகவும் அறியலாம்..ஒருவர் 35 வயதகியும் திருமணம் ஆகாமல் இர்ந்தார்..அவர் ரேகையை பார்த்தவுடன் சுக்கிரன் கெட்டு இருக்கிறது...சனியும் கெட்டு இருக்கிறது..கல்யாணம் செய்துகொள்வதில் உங்களுக்கு பயம்..மனைவியுடன் தாம்பத்யம் செய்ய முடியாது என நீங்களே உங்களை சந்தேகப்பட்டுக்கொண்டு,தாழ்வு மனப்பானமையை வ்சளர்த்துக்கொண்டு, பயந்து போய் திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு கொண்டு இருக்கிறீர்கள் என சொன்னேன்..அவர் ஆமாம் சார் அதுதான் உண்மை என ஒப்புக்கொண்டார்..

வசதி வாய்ப்புகளுடன் சொகுசாக வாழ்பவர்கள் கையில் பெருவிரலில் கீழ் மேடாகவும் நிறைய கோடுகள்,குறுக்கு கோடுகள் இல்லாமலும் இருக்கும்...அப்படியிருந்தும் அவர்களுக்கு வசதி இருப்பின்,அதை அனுபவிக்க இயலாது...இதை சுக்கிரமேடு என கைரேகை சாஸ்திரம் சொல்கிறது!!

நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் உள்ளங்கையில் தொடர்பு உண்டு என விளக்கும் படம்தான் அருகில் பார்க்கிறீர்கள்!!
 

சனி, 21 ஏப்ரல், 2012

குரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மிதுனம் ராசிக்கு எப்படி..?


குரு பெயர்ச்சி பலன்கள் ;மிதுனம்



உங்கள் ராசிக்கு இதுவரை 11 ஆம் இடத்தில் இருந்து வந்த குருபகவான்,வரும் 17.5.2012 முதல் ராசிக்கு 12 ஆம் இடமாகிய விரயஸ்தானத்துக்கு பெயர்ச்சியாகிறார்.உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமாகிய சுகஸ்தானம்,6 ஆம் இடமாகிய ருண ஸ்தானம்,8 ஆம் இடமாகிய அஷ்டமஸ்தானம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்...இதனால் துன்பம் தரும் இடங்கள் எல்லாம் பலம் இழக்கின்றன..

மிதுன ராசிக்கு பாவியாகிய குரு மறைவது நல்ல பலன்கள் தரும் என்றாலும்,குரு தனாதிபதி என்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும்...கணவன்,மனைவிக்குள் சிறு பிணக்குகள் அடிக்கடி தோன்றும்..சும்மாவே அப்படித்தான்..இதுல இது வேறயா என்கிறீர்களா..குழந்தைகள் உயர்கல்விக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்...



திருமணம் ஆகாதவர்களுக்கு,குருபலம் இல்லாவிட்டாலும்,8 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும்...



பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள்,சிக்கல்கள் வரும்,.எச்சரிக்கையாக இருக்கவும்...மொத்தத்தில் குரு பெயர்ச்சி உங்களுக்கு வரும் வருமானத்தை செலவழிக்க வைக்ககூடியதாக,கடன் வாங்கியாவது சொத்துக்கள் வாங்க வைக்ககூடியதாக இருக்கிறது!!


 மிருகசிரீடம்,திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வண்டி வாகன்ங்களில் செல்கையில் கவனம் தேவை...முக்கியமான பொருட்கள் தொலைந்து போகலம்..பண இழப்பு ஏற்படலாம்..ஏமாறாமல் இருக்க வேண்டிய காலம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டகும் காலம் என்பதால் நெருங்கிய நண்பரக இருந்தாலும் பண விசய்த்தில் கவனம் தேவை...தேவையில்லாத விசயத்தில் தலையிட்டு வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள்...

வியாழன், 19 ஏப்ரல், 2012

குருப் பெயர்ச்சி பலன்கள் 2012 -2013 ;ரிசபம் ராசியினருக்கு நன்மை செய்யுமா..?

குருப் பெயர்ச்சி பலன்கள் 2012 -2013 ;ரிசபம் ராசியினருக்கு நன்மை செய்யுமா..?

கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்கள்,ரோகிணி,மிருகசிரீடம் 1,2


வரும் வைகாசி மாதம் 4 ஆம் தேதி மாலை 6.24க்கு மேசம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்..17.5.2012 முதல் 31.5.2013 வரை.

.இதனால் 12 ராசியினருக்கும் வாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் எழுதுகிறேன்..அதன் வரிசையில் இன்று ரிசபம்....ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடப்பின் பாதிப்பு அதிகம் இருக்காது...செவ்வாய்,ராகு,கேது,சனி,சூரியன்,ந்திரன்,திசா ந்டப்பவர்களுக்கும் லக்னத்துக்கு பாவிகள் திசா நடப்பவர்களுக்கும் குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி யோகமாக இல்லாவிடில் துன்பம் உண்டாகும்...



ரிசப ராசிக்கு சுக்கிரன் ராசி என்பதாலும்,சந்திரன் அங்கு உச்சம் ஆவதாலும் இவர்களுக்கு குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்துவதில்லை..இவர்கள்எப்போதும் ஃபீல் பண்ணும் ஆள் இல்லை..எதையும் சுலபமாக கையாளும் சாமர்த்தியம் கொண்டவர்கள்..வரும்முன் காப்போம் என்பதுபோல மிக எச்சரிக்கையாக இருப்பவர்கள் என்பதால் ,பணம் சம்பாதிப்பதிலும் அதை சேமிப்பதிலும் கெட்டிக்காரர்கள் என்பதால் வாழ்வில் எப்போதும் சக்ஸஸ்தான்...இருப்பினும் எதிர்பாராத தொழில் நெருக்கடி,மனைவி,குழந்தைகளால் பிரச்சினை,போன்றவற்றில்தான் அதிகம் குழம்பிவிடுவர்...

வைகாசி மாதம் குரு உங்கள் ராசிக்கு விரயத்தில் இருந்து ஜென்மத்துக்கு வருகிறார்..அதாவது ராசிக்கு ஜென்ம ராசியில் வரும் குரு இடப்பெயர்ச்சியை ஏற்படுத்தலாம்..வீடு,தொழில் செய்யும் இடம் ஆகியவற்றை இடம் மாறுதல் செய்தல்..ஆகியவை வரலாம்..அப்படி எண்ணம் இருந்தாலும் அதை உடனே செய்யுங்கள்..இதுவரை விரய ஸ்தானத்தில் குரு இருந்ததால் அதிக பணம் விரயமாகி கொண்டே வந்தது..சிலருக்கு கடன் கூட ஏற்பட்டிருக்கலாம்..இனி அது குறையும்...ராசிக்கு 5,7,9 ஆம் ஸ்தானங்களை குரு பார்ப்பதால் குழந்தைகள்,மனைவி,பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்..திருமணம் கைகூடும்..இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் தடை நீங்கி வெற்றியாகும்..தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்...

திருப்பதி,ஒப்பிலியப்பன் கோயில்,திருச்செந்தூர் போன்ற தலங்களில் ஏதேனும்,ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள்!!!


கார்த்திகை,மிருகசிரீடம் நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகனையும்,ரோகிணியில் பிறந்தவர்கள் திருப்பதியும் சென்று வருவது நல்ல பலன் தரும்..

குரு பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மேசம் ராசியினருக்கு என்ன செய்யும்..?



வரும் 17.5.2012 அன்று குரு மேஷம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்...இதனால் 12 ராசியினருக்கும் என்ன மாதிரியான பலன்களை குரு தருவார் என்பதை பார்ப்போம்...!!

அசுவினி,பரணி,கார்த்திகை 1 ஆம் பாதம்..

வைகாசி மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சி யால் அதிக நன்மைகள் மேஷம் ராசியினர் பெறுவார்கள்...ராசிக்கு,இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்திற்கு மாறும் குருவால்,தனலாபம் உண்டாகும்..பண வரவு தாராளமாக இருக்கும் நீண்ட நாள் எதிர்பார்த்த நல்லது ஒன்றும் நடக்கும்..வீட்டுஇல் சுபகாரியங்கள் நடைபெரும்...அலுவலகத்தில் நெருக்கடி கொடுத்து வந்த பிரச்சினைகள் தீரும்..

உங்கள் ராசிக்கு 6,8,10 ஆம் இடங்களை குரு பார்ப்பதால் பண நெருக்கடிகள் தீரும்,,நஷ்டம்,காரிய தடை என சங்கடத்தில் இருந்து வந்த நீங்கள் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்..இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில் இனி சுறு சுறுப்படையும்..

பதவி உயர்வு கிடைக்கும்...குடும்ப பிரச்சினைகள் தீரும்.மருத்துவ செலவுகள்,கடன் பிரச்சினை தீரும்...திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடச் செய்யும், குருபலம் வந்துவிட்டது..உங்கள் ராசிக்கு வசியமான நட்பான ராசியினரை திருமணம் செய்துகொள்ளுங்கள்..உங்கள் பிறன்ப்த தேதிக்கு நியூமராலஜி படி அமையும் திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்யுங்கள்...பெண்களுக்கு நிறைய நகைகள் சேரும்...வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்கள் பேச்சில் இனிமை கூடும்..உங்கள் திறமையால் சாதூர்யத்தால் நிறைய சம்பாதிப்பீர்கள்..மகான்களின் ஆசி கிடைக்கும்...இதுவரை நிலவிய இறுக்கம் தளர்ந்து உங்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சி உண்டாகும்!!!

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்று உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் சிவனுக்கு 5 விதமான அபிஷேகம் செய்தால் சொந்த வீடு அமையும்..எவ்வளவு நாள் தடையான கல்யாண தோசமும் நீங்கும்.தொழில் அமையும்...கோபம்,பிடிவ்பாதத்தை விடுங்கள்.உறவினர் நண்பர்களிடம் அன்பாக பழகுங்கள்...


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர் பாலினரிடம் கவனமாக பழகுங்கள்..அதாவது ஆன்களாக இருப்பின் பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை..எதையும் உடனே செய்து முடிக்கும் அவசரம் உங்களின் கூட பிறந்தது..பொறுமையும்,விடா முயற்சியும் வெற்றியை தரும்...அம்பாள் சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி பரணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடவும்...


கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகன் அருள் பெற்றவர்கள்....பலருக்கும் நன்மை செய்யக்கூடியவர்கள்...27 அல்லது 108 பேர்க்கு முருகன் சன்னதியில் அன்னதானம் செய்தால் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்..மலைமேல் இருக்கும் வெற்றிவேலனை வழிபடுங்கள்..பழனி,திருத்தணி,மருதமலை,திருப்பரங்குன்றம் போன்ற முருகன் ஆலயங்களில் ஒன்றில் வழிபடலாம்...சனி பெயர்ச்சியும் சாதகமாக இருப்பதால்; பிரச்சினை இல்லை..