செவ்வாய், 25 மார்ச், 2014

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன் -துலாம்,விருச்சிகம்,தனுசு

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன் -துலாம்,விருச்சிகம்,தனுசு

துலாம்;துலாம் ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்த ராகுவால் கெட்ட பெயர் அவமானம் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வந்தீர்கள்...குடும்பத்தில் குழப்பம்,அதிகப்படியான மன உலைச்சல்,எந்த காரியம் தொட்டாலும் தடை தாமதம் இழுபறி உண்டானது...இப்போது ஜூலை மாதம் முதல் ராசிக்கு 12 ராகு மறைகிறார் இதனால் கெட்டவன் கெட்டு விடுகிறார் இதனால் பல பிரச்சினைகள் தீரும் முக்கியமாக பணத்தட்டுபாடு நீங்கும் தொழில்,பணி செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்..வருமானம் அதிகரிக்கும்..குழந்தைகளால் நற்பெயர் உண்டாகும்...சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்...இதுவரை தடையாகி இருந்த வருமானம் வந்து சேரும்..கேது உங்கள் ராசிக்கு 6ல் மறைவதால் மருத்துவ செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்..ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும்...எதிரிகள் அடங்கிப்போவார்கள்..கடன் கட்டுக்குள் வரும்.தாய்மாமனுக்கு சிக்கலான காலம்..

விருச்சிகம்;விருச்சிகம் ராசியினருக்கு 11 ஆம் இடமாகிய லாப ஸ்தானத்தில் ராகு அமர்கிறார் ...லாபத்தில் ராகு இருக்க வருமானம் பலவிதத்திலும் வந்து கொட்டும் என்பார்கள் அதன்படி உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும் காலம் இது..5ல் கேது இருப்பதால் குழந்தைகள் உடல்நலனில் அதிக கவனம் தேவை...பூர்வீக வழியில் சில பிரச்சினைகள் உண்டாகலாம் மாமன் வழி யால் சங்கடங்கள் வரும்..கடுமையாக உழைக்கவேண்டிய காலமாக இது இருக்கிறது அலைச்சல் மிகும்..உரவுகள் மூலம் கசப்பான அனுபவங்களை எதிர்கொள்ளும் நேரம் இது.

தனுசு;ராசிக்கு 4ல் கேது வருகிறார் நான்காம் இடத்து உடல்நலத்தை கெடுக்கும் விபத்தை உண்டாக்கும் சொத்துக்கள் கைவிட்டு போகும்...கோர்ட் கேஸ் பிரச்சினைகள் உண்டாக்கும் என்பதுதான் இதன் பலன்.....4ல் கேது இருக்கும் காலம் அம்மாவுக்கு பாதிப்பு அவர்களுக்கு மருத்துவ செலவு செய்து அதன்மூலம் பண நெருக்கடி வரலாம்...பெண்களுக்கு கர்ப்பபை சம்பந்தமான பிரச்சினைகள்,வயிற்றுவலி திடீரென உண்டாகி மருத்துவ செலவை உண்டாக்கும்..10 ராகு இருந்தால் பணம் பறந்து வரும் என்பார்கள் அத்ன்படி வருமானமும் ஒரு பக்கம் அதிகரித்தாலும் செலவுகள் கூடத்தான் செய்கிறது!!

பரிகாரம்;கேது ஞனக்கரகன் அவருக்கு வினாய்கர்தான் அதிபதி..புதன்கிழமையில் எருக்கம்பூ  மாலை அணிவித்து ,நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்...கேது சாமியர் கிரகம் என்பதால் சாமியார் ஒருவருக்கு வாழை இலையில்,அறுசுவை உணவு படைத்து,மதிய உணவு விருந்து கொடுத்து அவர் கையில் மஞ்சள் கலந்த பச்சரிசி கொஞ்சம் கொடுத்து கிழக்கு பார்த்து நின்று வாழ்க என வாழ்த்தி அட்சதையை உங்கள் குடும்பத்தார் மீது தூவ சொல்லவும் அவர் காலில் விழுந்து ஆசி பெறவும்.

பங்குனி உத்திர அன்னதானம்;

பங்குனி உத்திரம் வரும் 13.4.2014 அன்று வருகிறது அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம் விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த கணக்கிற்கு அனுப்பலாம்..

k.sathishkumar,20010801181,state bank of india,bhavani

cell;9443499003



1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்னதானங்கள் செய்கிறீர்கள்... தங்கள் வாழ்க்கை வளமாகட்டும்...