சனி விருச்சிகம் ராசியில் இருக்கிறார்..தனுசு ராசிக்கு ஏழரை சனி,மேசம் ராசிக்கு அஷ்டம சனி,ரிசபம் ராசிக்கு கண்டச்சனி ,விருச்சிகத்துக்கு ஜென்ம சனி,துலாம் ராசிக்கு பாத சனி ,சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனி என பலன்கள் கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி, விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பார்....
சனி வக்ரம் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும்..இதனால் விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார் என எடுத்துக்கொள்ளலாம்...அப்படியெனில் மேசம் ராசிக்கு அஷ்டம சனியின் பாதிப்புகள் குறைகிறது..விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி பாதிப்புகள் குறைகிறது..சிம்மம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ,ரிசபத்துக்கு கண்டக சனி பாதிப்புகள் குறைகிறது...
மேற்க்கண்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும்..பணக்கஷ்டம் தீரும்.பகை விலகும்...நிம்மதி உண்டாகும் கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த 3 மாதங்கள் அமையும்...மேச ராசிக்கு அஷ்டம சனி நடக்கும் ராசிக்கு எட்டில் சனி வக்ரம் எனும்போது கொஞ்சம் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும்.. பேச்சால் பெரிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரும் சாதார சண்டை தெருச்சண்டை ஆகி கம்பீரமா இருந்த நான் தலை குனிந்தேனே என வருத்தப்படும் சூழல் உண்டாக்கிவிடலாம்..விருச்சிகம் ராசியினருக்கு இந்த வக்ரம் டாக்டரை நம்பி இருக்கும் சூழலை உண்டாக்குகிறது..ஏதேனும் மாத்திரை,மருந்து சாப்பிட்டே ஆகணும்..நீண்ட காலமாக அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் இப்போது முடிக்கலாம்..சனி வக்ரம் வாகனங்களுக்கு சிறப்பில்லை வாகனத்தால் கண்டம் உண்டாக்குவது அதுவும் சிம்ம ராசிக்கு இன்னும் எச்ச்சரிக்கையா இருக்கனும்..எனக்கு வேலையே வண்டியில சுத்துறதுதான் அப்புறம் எப்படி சார் என கேட்டால்,அந்த வண்டியே காணாம போச்சுன்னா அப்புறம் எப்படி சார் என்பதுதான் சனியின் பதில்.
சிம்மத்துக்கு 4ல் சனி வனவசம்,சிறைவாசம் எல்லாம் 4ல் சனி வரும்போது சனி புத்தியும் நடக்கும்போதுதான் உண்டாகும்...4ல் சனி வக்ரம் அகும்போது அவர் ராசிக்கு 3ல் வருகிறார் அப்போ தைரியம்,துணிச்சலால் சில முக்கியமான பிரச்சினைகள் திடீர்னு உங்களுக்கு சாதகமாகி உங்களை சந்தோசத்துல திக்குமுக்காட வெச்சிடலாம்...அதே சமயம் உடல்நலனில் கவனமாக இருக்கனும் இதுவரை நல்லாருந்த உடல் இப்போ திடீர்னு விதவிதம படுத்தி எடுத்து உங்களை திக்கு முக்காட வெச்சிடலாம்..
மொத்தத்தில் சனி வக்ரம் சனிப்பெயர்ச்சி யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு,மந்தம்,முடக்கத்தையும் உண்டாக்க வாய்ப்புகள் அதிகம்..பறவைகள்,விலங்குகள்,ஆதரவற்ரோர்,ஊனமுற்றோருக்கு உணவுகள் உதவிகள் அளித்து சனிபகவான் நன்மைகளை பெறுவோம்!!
1 கருத்து:
சிம்மத்துக்கு எப்பத்தான் நல்ல காலம் வரும்?
கருத்துரையிடுக