ரிஷப லக்கினம்
ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார்.
சுக்கிரன் லக்கினத்திற்கு 1,5,9 ஆகிய ஸ்தானங்களில்
இருக்கும் போதும், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது,
சுபகிரகங்கள் சேர்க்கை பெறும் போது விதத்திலும் ஏற்றம் பெறுவார்கள்.
சுக்கிரன் சுபகிரகம் என்பதால் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும் போது
அதிக அளவில் நற்பலனை
ஏற்படுத்துவது இல்லை. சுக்கிரன் கலைகுரிய
காரகன் என்பதால் இந்த லக்கினக்காரர்கள் கலைதுறையில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு வாழ்வில் பெண்கள் மூலம் லாபம் அடையும் அமைப்பு ஏற்படுகிறது.
ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி 10, 9, வீட்டிற்கும் அதிபதி ஆகிறார். 9, 10 க்கு அதிபதி என்பதால்
இவர்களுக்கு இயற்கையாகவே தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. இது
அவர்களுக்குத் தொழிலில் பல சாதனைகளைச் செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறது.
ரிஷப லக்கினத்திற்கு தொழில் ஸ்தானாதிபதி சனி என்பதால் இவர்களுக்கு
இரும்பு, இயந்திரத் தொழில், பழைய பொருள்கள்
விற்பனை செய்தல், வேலையாட்களை வைத்து தொழில் செய்வது,
பலரை நிர்வாகம் செய்யும் அமைப்பு போன்றவை பொதுவாக ஏற்படுகிறது.
சனி பகவான் ரிஷப லக்கினத்தில்
பிறந்தவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் அமையும் போது வாழ்வில் எல்லா வகையிலும் ஏற்படுத்துகிறார்.
ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியில் அமையப்
பெற்றால், சுக்கிர வீடு என்பதாலும், திரிகோண
ஸ்தானம் என்பதாலும், எல்லா விதத்திலும் ஏற்றம் தருகிறார்.
சொந்த தொழில், ஆடை, ஆபரணம்
சம்பந்தப்பட்ட தொழில், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில்,
ஜவுளி வியாபாரம் போன்றவை ஏற்படுத்துகிறது.
கலைத்துறையில் , படப்பிடிப்பு துறையில்,
வேலை செய்யும் அமைப்பு ரிஷபத்தில் உள்ள சனியால் ஏற்படுகிறது.
சுக்கிரன் வலுப் பெற்றால், கலைத்துறையில் ஈடுபாடு
அதிகரிக்கும்.
சனி பகவான் 2 ம் இடத்தில் அமையும் போது
புதன் வீடு என்பதால் கல்வித் துறையில் சாதனை செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறார். ஜோதிடர் ஆகும் அமைப்பு. ஆடிட்டர், ஷேர், கமிஷன் போன்றவற்றில்
ஈடுபடுவார்கள். புதன் வலுப் பெற்றால் பேராசிரியர்
ஆகும் அமைப்பு ஏற்படுகிறது. அரசு பள்ளியில் வேலை செய்யும் அமைப்பை சூரியன் ஏற்படுத்துகிறார்.
கணினி துறையில் சாதனை செய்யும் அமைப்பு ஆகியவற்றை சனி 2 ல் இருந்தால் ஏற்படுத்துகிறார். புதன் கல்விக்காரகன்
என்பதாலும், 2 ம் வீடு வாக்கு ஸ்தனாம் என்பதாலும் பேச்சாற்றல்
வாழ்வில் முன்னேற்ற நிலையை 2 ல் உள்ள சனி ஏற்படுத்துகிறார். சிலருக்குத் தீராத பணப்பிரச்சினையும்
இருக்கும்.
கடக ராசியில் சனி சஞ்சாரம்
செய்தால் ஜலத்துடன் தொடர்புள்ள தொழில், வெளிநாடு செல்லும் அமைப்பு,
இரயில்வே, விமானம்,போன்ற
இடத்தில் வேலை செய்யும் நிலை, அடிக்கடி பயணம் செய்யும் அமைப்பு
போன்றவறை 3 ல் உள்ள சனி ஏற்படுத்துவார். சந்திரன் வலுப் பெற்றால் ஜாதகர் வெளிநாட்டில் தொழில் செய்து அதிகம் லாபம் அடையும்
நிலை உண்டாகும்.
சனி, சூரியன் வீடான 4 ல் அமையப் பெற்றால் அடிமைத் தொழில், சிறு வியாபாரம், சிறிய உத்யோகத்தில் இருக்கும் நிலையை ஏற்படுத்துவார். சூரியன் ஜாதகத்தில் வலுப் பெற்றால் உயர்ந்த அரசு உத்யோகம், மின்சாரத் துறையில் பணிபுரியும் நிலை அரசியல் நிலையாவும் ஏற்படும்.
கன்னியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் பத்திரிக்கைகளுக்கு கதை,
கட்டுரை எழுதும் நிலை, அரசுப் பள்ளியில் வேலை செய்யும்
நிலை. பலருக்கு நல்வாக்கு கூறும் நிலை. புதன் வலுப்பெற்றால் பேராசிரியர்
ஆகும் நிலை ஏற்படும்.
6 ல் சனி உச்சம் பெற்று இருந்தால் பலரை வைத்து வேலை வாங்கும்
நிலை, கலை துறை மூலம் லாபம் அடையும் நிலை, கூட்டுத் தொழில் செய்யும் நிலை, போன்றவை உண்டாகும்,
இவர்களுக்கு பல எதிரிகள் இருக்கும் நிலை ஏற்படும். வண்டி வாகனம் மூலம் லாபம் அடையும் நிலை,
இவர்கள் பலரை வழி நடத்துபவராக இருப்பார்கள், பல வழக்குகளை சந்திக்கும் நிலையும் உண்டாகும்.
விருச்சிக ராசியில்
சனி சஞ்சாரம் செய்து செவ்வாயும் வீடு என்றால் ராணுவம், போலீஸ்,
ரயில்வே துறையில் வேலை செய்யும் நிலை, வீடு கட்டி
விற்கும் நிலை, காண்ட்ராக்ட், பூமி தொடர்புள்ள தொழில் செய்யும் நிலை,
ரியல் எஸ்டேட், மின்சாரத் துறை, என்ஜினியர் ஆகும் நிலை, சூரியன் வலுப்பெற்றால் மின்சாரத்
துறையில் உயர் அதிகாரியாக பணி புரியும் நிலை ஆகியவை ஏற்படும்.
தனுசு ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் அஷ்டம ஸ்தானம் என்பதால்
சொந்த தொழிலில் அமைவது கடினம், அமைந்தாலும், நிம்மதி இல்லாத நிலை நீடிக்கும். குரு வீடு என்பதாலும்
குரு வலுப்பெற்றால் நீதி மன்றத்தில் பணிபுரியும் நிலை, வழக்கறிஞர்
ஆகும் நிலை, ஏஜென்ஜி, கமிஷன் துறையில் வேலை
செய்யும் நிலை. இரும்பு
சமபந்தப்பட்ட பொருட்களை வாங்கி விற்கும் நிலை ஏற்படும்.
சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பாதக ஸ்தானமான
9 ல் பாதாகாதிபதியாக ஆட்சி பெற்று அமையப் பெற்ற ஜாதகருக்கு ஒன்பது திரிகோண
ஸ்தானம் என்பதால் நீதி மன்றங்களில் பணிபுரியும் நிலை, சூரியன்
குரு வலுப்பெற்றால் நீதிபதி ஆகும் நிலை. பெரிய அதிகாரியாக வேலை
செய்யும் அமைப்பு ஆகியவை உண்டாகும்.
கும்ப ராசி ஆட்சி பெற்று சனி சஞ்சாரம் செய்தால் நிலக்கரி,
எலக்ட்ரிக்கல், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும்
நிலை ஏற்படுகிறது. பலரை
வேலையில் அமர்த்தும் அமைப்பு இவர்களுக்கு இருக்கும்.
மீனராசியில் சனி சஞ்சாரம் செய்தால் நீதித்துறையில் பணி புரியும்
நிலை, ஜோதிடம் , துறைமுகம், பைனான்ஸ், இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் ஆகியவை செய்யும்
வாய்ப்புண்டு.
சூரியன் வலுப்பெற்றால் அரசியல் ஈடுபாடு, புகழ், பெருமை ஏற்படும் நிலை உண்டாகும்.
சனி பகவான்
மேஷ ராசியில் நீசம் பெற்று அமையப்பெற்ற ஜாதகருக்கு அடிமைத் தொழில் செய்யும் நிலை ஏற்படும். மேஷத்தில் உடன் சூரியன் உச்சம் பெற்று நீசபங்க ராஜ யோகம்
ஏற்பட்டால் அரசுத் துறையில் வேலை செய்யும் நிலை, அரசியலில் புகழ்
பெறும் நிலை ஏற்படும். மேஷ ராசியில் சனி அமையப் பெற்று
செவ்வாய் ஆட்சி பெற்றால் , இராணுவம்,
போலீஸ், போன்ற துறையில் வேலை செய்யும் நிலை ஏற்படும்.
சனி ரிஷப லக்னத்திற்கு 9 ம் அதிபதி என்பதால்
12 ல் அமையப் பெற்று செவ்வாய் ஆட்சி அல்லது லக்ன கேந்திரம் பெற்று சந்திரன்
சனி உடனிருந்தாலும் சந்திரன் வலுப்பெற்றாலும் வெளி நாட்டில் அதிகம் லாபம் அடையும் நிலை,
கடல் கடந்து செல்லும் நிலை உண்டாகும்.