புதன், 24 ஆகஸ்ட், 2011

2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology




2011 குரு பெயர்ச்சி பலன்கள்;

குரு பெயர்ச்சி பலன்கள் பொறுத்தவரை ராசிக்கு பார்ப்பது போலவே 
நமது லக்கினத்துக்கும் பார்க்க வேண்டும்..ராசியிலிருந்து ஆறாம் 
இடத்திற்கு குரு வந்தாலும் அதன் பார்வை லக்கினத்திற்கு 
எந்த வீடுகளை படுகிறது என பார்ப்பது நன்று..அதன் அடிப்படையில்
 பலன்கள் மாறுபடும்..
http://2.bp.blogspot.com/-DwLx8G0RShQ/TcqEtMU9AqI/AAAAAAAAB8Q/owvYJXBm_J4/s400/4dabb21307a2d04172011223755.jpg
.


குரு பெயர்ச்சி பலன்கள் நடைமுறை வாழ்வில் எப்படி இருக்கும் என 
பார்த்தால் ,பொதுவாக குரு ராசிக்கு ஆறாம் இடம் வந்தால் என்னாகு
ம் என பார்ப்போம்..என் ராசிக்கு ஒரு முறை குரு ஆறாம் இடம் வரும் 
போது போலீஸில் மாட்டினேன்...எப்படி தெரியுமா.லைசன்ஸ் இல்லாமல்
 பைக் ஓட்டியதால் .அதாவது ஆறு வருடத்துக்கு முன்.அப்புறம் ஆறாமிட
 குருவால் ரத்த காயம் ,மருத்துவ செலவுகள் என ஏற்படுகின்றன..
வீட்டில் நெருங்கிய உறவினர் யாராவது உடம்பு முடியாம இருந்தா
 அவங்க முடிஞ்சிடுறாங்க...ஏகப்பட்ட செலவுகள் இழுத்து வைக்கும்.
வருமானத்துக்கு அதிகமா செலவு ஏற்பட்டு அகலக்கால் வெச்சி,
கடனாளி ஆக்கும்...உறவுகளில் எதிரியை உண்டாக்கும்..நண்பர்கள் 
சிலர் பகைவர் ஆவர்..எடுத்த காரியம் தடை தாமதம் ஏற்படுத்தும்....

நகைக்கடன் உண்டாக்கும்...தங்கத்தை அடகு வைப்பது நல்லது...
.இது ஒரு பரிகாரம்.

அஸ்டம சனி நடக்கும்போது கறுப்பு நிற காராம்பசுவை தானம் 
செஞ்சா விபத்து,வழக்கு,உயிர்பயம் உண்டாகாதுன்னு பரிகாரம் 
சொல்வேன்.அதுபோல உங்கள் ராசிக்கு ஆறு,எட்டு,பன்னிரெண்டில் 
குரு வரும்போது தங்கம் அடகு வைக்கலாம்.அதனால் ஒரு இடமோ,
வீடோ வாங்கலாம்....இதை செய்ய முடியாவிட்டால் வங்கி கடன் 
வாங்குங்கள்....

இவை இல்லாமல் உங்கள் பணத்தை வங்கியில் குவித்து 
வைத்திருந்தால்,உங்கள் குடும்பத்தாருக்கு மருத்துவ செலவு உறுதி.
பணம்,விலை உயர்ந்த பொருட்கள் குரு பெயர்ச்சி சாதகமாக இல்லாத 
போது இட பெயர்ச்சி ஆகவேண்டும்...குரு சாதகமாக உங்கள் ராசிக்கு 
வரும்போது அவை பல மடங்காக உங்களிடத்தில் இடபெயர்ச்சியாகும்...


விருச்சிகம்,கன்னி,ரிசபம் ராசியினர் சுப செலவு செய்தல்...அதாவது
 வீட்டில் உள்ளோர்க்கு சுபம் செய்து வைத்தல் மூலமாக 
கையிருப்பு கரையும்.தொழிலில் மந்தம் காணப்படும்..மனைவியுடன் 
அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும்.கடன் ஏற்படும்..அப்படி 
உண்டானால் செலவுக்கு தகுந்த பணம் வந்து கொண்டிருக்கும்...
சனிப்பெயர்ச்சிக்கு பின் கடன் அடைபடும்.குழந்தைகளால் கவலைகள் 
உண்டாகும்.பெற்றோருடன் வீண் வாக்குவாதம் உண்டாகும்..அடிக்கடி 
உடல்நலன் சரியில்லாமல் போக கூடும்..


மேசம் ராசியினருக்கு ஜென்மத்தில் குரு வருவதால்,பெரிய நன்மையும்
 இல்லை.பெரிய கெடுதலும் இல்லை..வீடு அல்லது தொழில் 
செய்யுமிடத்தில் ஒரு மாற்றம் வரும்....வீடு வாடகையாக இருந்தால்
 உடனே மாற்றுவது நல்லது..இல்லையேல் தொழில் பாதிக்கலாம்.



ரிசப ராசிக்கு குரு கெட்டவர் தான் என்பதால்,கெட்டவன் கெட்டிடில் 
கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள்.அந்த வகையில் இது நன்மைதான்
 தரும் என எண்ணுகிறேன்..ஆனால் நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர் 
என்றால் ஸாரி...கவலைகளும்,நோய்களும் உங்களை மன நிம்மதியற்று 
அலைய செய்யும்..பெண்களால் கெட்ட பெயர் உண்டாகும்.

கடக ராசிக்கு பத்தாம் இடம் வருகிறார் குருபகவான்....அன்பிற்கும் ,
பாசத்திற்கும் உரிய உங்களுக்கு ராசிக்கு மூன்றில் சனி இருப்பதால் 
கெடுதல் எதுவும் நேர்ந்து விடாது..சனி திசை,கேது திசை,ராகு திசை 
நடந்து கொண்டிருந்தால் மட்டுமெ அதிக பாதிப்பு உண்டாகும்...
திருப்பதி சென்று வந்தால் மிக நல்லது.


மகரம்,கும்பம் ராசியினருக்கு குரு சுமாரான பலன்களையே கொடுப்பார்...
பொதுவாக இந்த இரண்டு ராசியும் சனியின் வீட்டில் இருக்கும் 
சந்திரனை குறிக்கிறது..சந்திரன் சனி வீட்டில் இருப்பதால் இந்த 
ராசியினருக்கு எப்போதும் மனக்குழப்பம் அதிகமகவே இருக்கும்...
வீண் அலைச்சல் திரிச்சல் அதிகம் இருக்கும்..கடுமையான உழைப்பு 
இருந்தும் உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது....இவர்கள் வருடம் 
ஒரு முறை திருப்பதி அல்லது திருநள்ளாரு சென்று வருவது நல்லது....

டிஸ்கி;நான் குறிப்பிடாத மற்ற ராசிக்காரர்களுக்குத்தான் 
குரு பெயர்ச்சி முதல் பகுதி பதிவை படிக்கவும்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம்


சனி பெயர்ச்சி பலன்கள் 2011;ஜோதிடம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011 /sanipeyarchi palankal 2011/ஜோதிடம்/
எண்கணிதம்/வாஸ்து
/tamil astrology


திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,கர வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி,
(15.11.2011) காலை 10.12 மணிக்கு சனிபகவான் கன்னி 
ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.

             மங்கள சனீஸ்வரர்-திருநாரையூர்-நாச்சியார் கோயில்

பொதுவாக கோள்களில் மிகப்பெரியதும்,வான மண்டலத்தில் மிக தொலைவில் 

உள்ளதுமாகிய கிரகங்கள் சனியும்,குருவும்தான்.பூமியில் உள்ள உயிர்கள் 
மீதான 
இதன் தாக்கங்கள் அதிகம்.எனவே குருபெயர்ச்சியும்,சனிபெயர்ச்சியும் 
முக்கியமாக 
கவனிக்கப்படுகின்றன...குரு சுபர் என்றால் சனி அசுபர்.குரு நீ செய்றது 
சரியில்லைப்பா..பார்த்து நடந்துக்கப்பா என் அறிவுரை சொல்வதோடு 
சரி.சனி அப்படியில்லை.நீதிமான்.ஒருவன் தவறு செய்திருந்தால் அவனுக்கு 
நிச்சயம்தண்டனைதான்.ஒரு மனிதனின் வாழ்நாளில் 3 முறை சனி வந்து செல்கிறார்.
குழந்தையாக இருக்கும்போது ஒருமுறை..நடுவயதில் ஒருமுறை...வாழ்வின்
 இறுதிபகுதியில் ஒருமுறை.இதற்கிடையில் க்ராஸ் செக் போல அஸ்டம சனியும் 
உண்டு.ஏழரை சனியில் வரும் அத்தனை துன்பங்களும் இந்த இரண்டரை வருட 
அஸ்டம சனி சிலருக்கு கொடுத்துவிடும்.உங்கள் வாழ்வில் நேர்மை,ஒழுக்கம்,
பிறருக்கு உதவுதல்,தான தர்மம் இவையே சனியின் தண்டனையில் இருந்து காப்பாற்ற
 உதவும் ஒரே கருணை மனு ஆகும்.


வர இருக்கும் சனி பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் நன்மை 
தீமை பற்றி எழுதி வருகிறேன்.அதன் வரிசையில் இன்று கன்னி,துலாம்,விருச்சிகம் 
ராசியினருக்கு சனி பகவான் என்ன செய்வார் என பார்ப்போம்.

கன்னி;

கன்னி ராசிக்கு ராசிக்கு இரண்டில் சனி பெயர்ச்சியாகிறார்.இதுவரை 
ஜென்மராசியில் இருந்த சனி பாத சனிக்கு மாற இருப்பதால்,ஜென்மசனி விலகுகிறது.
சனியும்,சந்திரனும் ஒன்று கூடினாலே முடக்கம்,ஆரோக்கிய பாதிப்பு,காரிய தடை 
என ஏற்படும்.கடந்த இரண்டரை வருடங்களாக ஜென்மசனியால் சிரமப்பட்ட நீங்கள்,
இனி அப்பிரச்சினைகளில் இருந்து விடுதலை ஆகலாம்

.ஜென்மசனி விலகினாலும் ஏழரை சனி விலகவில்லை..எனினும் பாத சனி 
பாதிப்பில்லை.சுபகாரியங்கள் நடக்கும்.கடன்கள் அடைபடும்.அலைச்சல் குறையும்.
தாமதமான காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.கன்னி ராசிக்கு சனி எதுவும் 
செய்யாது என்பார்கள்.காரணம் கன்னிக்கு சனிபூர்வபுண்ணியாதிபதியாகிறார்.
வெற்றியை தரக்கூடியவர் என்பதால் பலருக்கு ஏழரை சனியில்தான் நல்லவை 
நடந்திருக்கின்றன...
கன்னி ராசிக்காரர்களிடம் ரகசியம் தங்காது என்பார்கள்.எனவே மற்றவர்களிடம் 
பேச்சை குறைப்பது நல்லது.இதனால் பல பிரச்சனைகளில் இருந்து தப்ப முடியும்.

ஜென்மராசிக்கு இரண்டில் சனி வரும்போது ஐந்து வருடங்கள் அனுபவித்த 
சோதனைகள் குறைகிறது என்றாலும்,குடும்பத்தில் நிம்மதி குறைவு,எதிர்பாராத 
புதிய செலவுகள்,குடும்பத்தில் பாக பிரிவினை போன்றவை உண்டாகியபடிதான் 
இருக்கும்.எனவே பொறுமையுடன் கவனமாக செயல்படுங்கள்.பேச்சில் நிதானம் 
தேவை.குருவும் அஸ்டமத்தில் இருப்பதால் வரவு செலவுகளில் சிக்கல் காணப்படும்.
மிதமிஞ்சிய செலவுகள் காணப்படும்.செலவுகளை முடிந்தளவு கட்டுப்படுத்தினால் 
எதிர்காலத்துக்கு நல்லது.

மதுரை மீனாட்சியையும்,கள்ளழகரையும் தரிசனம் செய்துவிட்டு 
வாருங்கள்.
நல்லது நடக்கும்.

துலாம்;

துலாம் ராசிக்கு ஏழரை சனி நடந்துவருகிறது.வரும் நவம்பர் முதல் சனி உங்கள்
 ராசிக்கு ஜென்மத்திற்கு வருகிறது.இது அனுகூலமற்ற நிலை ஆகும்.ஏழரை சனி 
ஒருவரை புடம் போட்ட தங்கம் போல மாற்றுகிறது.ஒருவன் ஏழரை சனி 
காலத்தில் எவ்வளவு சோதனைகளை சந்திக்க முடியுமோ அவ்வளவு 
சோதனைகளை சந்திக்கிறான்.சாதரணமாக உறையாடும்போது,
சந்தையில் 
நெருப்பு வீசினாலும் அது சனி பிடித்தவன் தலையில் விழும்’’என்று 
கூறுவார்கள்.
ஒருவருக்கு ஏழரை சனி தொடங்குகின்றபோதே எல்லையில்லாத 
துன்பங்கள் 
உண்டாகின்றன..தொழிலில் வீழ்ச்சி,எடுக்கும் காரியங்களில் தடை,இல்வாழ்வில் 
நிம்மதி குறைவு,பிரயாணத்தில் விபத்து,வருவாய்க்கு மிஞ்சிய செலவு அதனல் 
கடன்கள் போன்ற பலன்கள் உண்டாகும்.கலங்க வேண்டாம்.துலாம் ராசியினர்
 புத்திசாலிக்காரர்கள்.எப்படியும் சமாளிப்பீர்கள்.வரும் முன் காப்போம்
 என்பதுபொல எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் நீங்கள் பிரச்சனைகளை 
சமாளிப்பீர்கள்.இன்னும் இரண்டரை வருடம் ஜென்மசனியை சமாளித்தாக வேண்டும்
.ஜாதகத்தில் சனி 3,6,12 ல் மறைந்திருந்தாலும் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் கெடு பலன்கள் குறையும்.



திருப்பதி சென்று வாருங்கள்.

விருச்சிகம்;

விருச்சிகம் ராசியினருக்கு நவம்பர் முதல் ஏழரை சனி தொடங்குகிறது.
இருக்கிற சோதனை போதாதா..
இது வேறயா என அலறாதீர்கள்.ஊசி குத்தினாலே தாங்காத நீங்கள் 
கடப்பாரை குத்தையா தாங்கப்போகிறீர்கள்..?இறைவன் காலடியே 
சரண் என நினைப்பவர் நீங்கள்.உங்கள் ராசியில் சந்திரன் நீசம் ஆவதால்
 எப்போதும் டென்சன்,பயம்,குழப்பம் அதிகமிருக்கும்.பிறரிடம் பேசும்போது 
ஆணியடித்தாற்போல தெளிவாக பேசும் நீங்கள் சொந்த விசயங்களில்
 முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.உங்களை காப்பாற்றிக்கொள்ள 
எதையும் செய்வீர்கள்.அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும் உங்களுக்கு,
இந்த ஏழரை சனி காலம் உடல் ஆரோக்கியம்,கணவன்,மனைவி சம்பந்தமான
 பிரச்சனைகளை அதிகப்படுத்தும்படி வருகிறது.வருமானத்தில் தடை,
கொடுத்த பணம் திரும்பாமை என முடக்கம் காணப்படுவதால் கடும் முயற்சியும்,
கடும் உழைப்புமே உங்களை காப்பாற்றும்.

முருகனை வணங்குங்கள்.திருநள்ளாறு சென்று வழிபட்டு வாருங்கள்.
சனிக்கிழமை தோறும் மட்டுமில்லாமல் தினசரி காகத்திற்கு அன்னம் வையுங்கள்.
அனுமன் சலீஸா போன்ற,ஆஞ்சநேயர் ஸ்லோகங்களை படித்து வாருங்கள்.




சனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்

திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,கர வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி,(1.11.2011)செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணிக்கு சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.


இந்த பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் நன்மை தீமை பற்றி எழுதி வருகிறேன்.அதன் வரிசையில் இன்று மிதுனம் ராசியினருக்கு சனி பகவான் என்ன செய்வார் என பார்ப்போம்.



மிதுனம் ராசி (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான்.புதன் கணக்கன்.வித்யாகரகனாகிய புதனை ஆட்சி வீடாக கொண்ட நீங்கள் அறிவாளிகள்.பின்னே...அறிவுகிரகம் புதன் ராசியை கொண்டவராச்சே.உங்கள் பகுத்தறியும் கேள்விகள் பிறரை வியக்க வைக்கும்.எதையும் கணக்கிட்டு செயல்படுத்துவதில்,சூழ்நிலையை யூகம் செய்து அதற்கேற்றார்போல் நடந்துகொள்வதில் நீங்கள் கில்லாடி.

சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமாகிய புத்திர,பித்ரு ஸ்தானத்திற்கு வருகிறார்.இந்த இடம் நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதை பற்றி சொல்லும் இடமாகும்.

வைகாசி 23 ஆம் தேதி நடந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு அனுகூலமாக இல்லை.அதற்காக உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.குழந்தைகள் படிப்பு மற்றும் உத்யோக விசயங்களுக்காக உங்களை விட்டு பிரிவார்கள்.இவ்வருடம் தொழில் ரீதியாக பணமுடக்கம் ஏற்படும்.அதற்கான பலன்கள்ஐப்பசி 15 க்கு பிறகுதான் கிடைக்கும்.

ஆவணி புரட்டாசி மாதங்களில் சகோதரர்களுக்குள் வாக்குவாதம் உண்டாகலாம்.கவனம் தேவை.

ஐந்தாமிடத்து சனி சில முடக்கங்களை ஏற்படுத்தினாலும் சென்ற இரண்டரை ஆண்டுகளில் உடல் ஆரோக்கியம்,சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கி தவித்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நன்மை தரும்படியே அமைகிறது.

பூர்வீக சொத்து சம்பந்தமாகஒரு முடிவு கிடைக்கும் என்றாலும் பிரச்சனை தீராது.இன்னும் இரண்டரை வருடம் காத்திருக்க வேண்டும்.அல்லது நட்டத்தில் விட்டு கொடுக்க வேண்டும்.

தொழிலில் முன்பு இருந்த மந்த நிலை மாறி விறு விறுப்பு கூடும்.குழந்தைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும்.

இவ்வருடம் தீபாவளி அன்று முதல் ஆறு நாட்களுக்குள்ளாக வீட்டில் கணபதி ஹோமம்,சுதர்ஸன ஹோமம் செய்தால் நன்கு சுபிக்‌ஷமான பலன்கள் உண்டாகும்.

உங்கள் ராசி அதிபதி பெருமாளையோ,உடனடி பலன் தரும் மதுரை மீனாட்சியையோ தரிசனம் செய்து வந்தால் மனச்சங்கடங்கள் அனைத்தும் தீரும்!

வாழ்க வளமுடன்!


Read more: http://www.astrosuper.com/2011/07/2011_04.html#ixzz1Vupa4LeH

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

முக்கிய அறிவிப்பு 24.8.2011

நண்பர்களே...நமது நல்லநேரம் இணையதளம் சில விஷமிகளால் முடக்கப்பட்டுள்ளது..இதனால் பழைய ஜோதிட பதிவுகள் அனைத்தும், அழிந்து விட்டன..என்றாலும் டொமைன் பெயர் மட்டும் கிடைத்துவிட்டது..மிக விரைவில் எனது பதிவுகளில் முக்கியமானவற்றை நான் திரும்ப எழுத இருக்கிறேன்...சனிபெயர்ச்சி பலன்கள்,ஜோதிட பதிவுகள் விரைவில் வெளியிடுகிறேன்...இனி நம்  நல்ல நேரம் தளம் www.astrosuper.com  என்ற அதே முகவரியில் வழக்கம் போல செயல்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்...

பழைய பதிவுகளில் முக்கியமானவற்றை மீட்டுக்கொண்டுள்ளேன்..ஆனாலும் நான் நான்கு வருடமாக இயங்கிய sathish777.blogspot.com என்ற முகவரியை மீட்க முடியவில்லை என்பது வருத்தம்தான்...முக்கிய பதிவுகள் அனைத்தையும்,இந்த புதிய ப்ளாக்கில் பதிவேற்றிவிடுவேன்...கொஞ்சம் கஷ்டப்படணும்.
.
தமிழ் புத்தாண்டு-முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என நான் பதிவிட்டு சிறிது நேரத்தில் இந்த கொடுமை நடந்திருக்கிறது...உடன்பிறப்புகளின் வேலைதான் இது என்பதில் சந்தேகம் இல்லை...என் ப்ளாக் ஐடியில் நுழைந்து,மெயிலை மாற்றி அவர்கள் மெயிலை கொடுத்து,நல்லநெரம் ப்ளாக்கை மட்டும் எடுத்து சென்று,அழித்திருப்பார்கள் என்பது என் சந்தேகம்..ப்ளாக்கர் டாஸ்போர்டில் ,4 ப்ளாக்குகள் வைத்திருந்தேன் அதில் நல்ல நேரம் ப்லாக் மட்டும் காணவில்லை...உங்கள் யோசனைகளை என் மெயிலுக்கு தெரிவியுங்கள்;sathishastro@gmail.com