வியாழன், 26 ஜூலை, 2018

ஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்?

ஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனாலும் சரி.உன் கருத்தை நீ சொல்ல உரிமை இருக்கு...ஆனா என் கருத்தில் மாற்றம் இல்லை என நிலையாக இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகியவை ஸ்திரம் எனப்படும்.

குடும்பத்துல மிலிட்ரி கண்டிசன் தான் எல்லாம்...இதை எப்படி தெளிவாக செய்வது என ஒரு வாரம் ப்ளான் செய்வது...யார்கிட்ட பேசினாலும் தெளிவா பிசிறு இல்லாம பேசுவது ..கொஞ்சம் பேச்சு சுத்தம் இல்லாத ஆள் எனில் அந்த ஆள் பக்கமே அண்டாம இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..இவன் ஆகாது என முடிவு செஞ்சிட்டா கதம்..கதம்..

.தான் உண்டு தன் வேலை உண்டு வருமானம் ,குடும்பம் உண்டு என ஒரு பாதையில் ஒரே மாதிரி போய்க்கொண்டிருக்கும் ராசிகள்....ராசிநாதன் நல்லா இருந்தா நான் சொன்னதில் துளியில் மாற்றம் இருக்காது.ராசிநாதன் என்றால் ரிசப ராசியினருக்கு சுக்கிரன் கெடாமல் இருக்கனும்...சுருக்கமா சொல்லனுமா ..இவங்க பிடிவாதக்காரங்க..தான் நினைத்த மாதிரிதான் எல்லாம் நடக்கனும் என நினைக்கிற க்ரூப்....

உபய ராசிகள் ,சர ராசிகள் எல்லாம் இவங்க பார்வையில் பிழைக்க தெரியாத க்ரூப்....எல்லாம் தெரிந்த ஆசாமிகள் சர ராசிகள் என்றால் எல்லாம் தெரிந்து அதை காசாக்கும் வித்தை தெரிந்தவர்கள் ஸ்திர ராசியினர்..இவங்க கிட்ட பேசும்போது நிதானமா பேசனும்..இவங்க உங்க பேச்சை மட்டும் கவனிப்பதில்லை...உங்களை ஸ்கேன் செய்து கொண்டிருக்கிறார்கள்...வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்...காசுனு வந்துட்டா கொள்ளைக்காரன்...பாசம்னு வந்துட்டா .....தோளில் சாய்ந்து கண்ணீர் விடுவாங்கன்னு நினைச்சீகளா....இரண்டு வார்த்தை பதமா பேசிட்டு கிளம்பிட்டே இருப்பாக...

சுயநலம் என சொல்லிட்டா கொஞ்சம் ஓவரா இருக்கும்...தன் பணியில் கவனமா இருப்பாங்கன்னு சொன்னா நல்லாருக்கும்..மைனஸ் ப்ளஸ் எல்லாம் கலந்து சொல்லிருக்கேன்...ராசிக்கு சொந்தக்காரக கோவிச்சுக்காதீக..வாட்சப்பில் பகிர்ந்தா ஈரோடு சதீஷ்குமார் ஜோசியர் சொன்னதுனு சேர்த்துக்குங்க..!!

புதன், 18 ஜூலை, 2018

வியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்


.  

வியாபார
  தொழில்

சூரியன்  சனியுஞ்சேர  சுகமொடு  வுதித்த பாலன்
பாரினில் வியாபாரத்தில்  பண்டிதன் சமர்த்து ளோனாய் 
தேரிய தாதுவர்க்கம்  செம்பு  பொன் வெள்ளிலோகம்
கூரது  பரிஷை செய்து  குறைவிலா   தனத்தைச் சேர்ப்பன்

விளக்கம்
சூரியனும்  சனியும்  கூடி  ஒரு  வீட்டில்   நிற்கபிறந்த  ஜாதகர் வியாபாரம்
செய்வதிலும்  பொன் , வெள்ளி , செம்பு , பித்தளை போன்ற  தாது  வர்க
உலோகங்களை   பரிசோதித்து   அதனாலேயே   அதிக  தனத்தை
சேர்ப்பவனாவான்   .கணக்கு  முதலானவைகளில்   மிகவும்   சமர்த்தனம்




  பெரிய  பூமிக்கு  அதிபதி

அறிஞனும்  புகரும் கூட  வவனியிலுதித்த  பாலன்
பெரிய பூமிகள்  சபைக்கும்  பிரபல  வதபனாகி
மருவிய  வார்த்தை  கூறி   மாற்றலர்  தாமொடுங்க
சரிவர  வெல்லு மிக   சமர்த்துளானென்னலாமே

விளக்கம்
புதனும்  சுக்கிரனும் கூடி இருக்க பிறந்தவன்  பூமிக்கும் பெரிய
சபைக்கும்  அதிபதியாயிருந்து   வார்த்தைகளால் மெய்பித்து எதிரிகளை
ஜெயிக்கும்  வல்லமையுடைய  சமர்த்துடையவன்  ஆவான் .

    யந்திர  கருவி   தொழில்

கதிரொடு  மதியுங்கூடி   கலந்தொரு  ராசி நிற்க
துதி பெறு   பலவாயெந்திரம்   சூட்சுமக்  கருவியாலும்
அதவித பாஷான்ங்க   ளமைத்திடும்  வல்லோனாகி
விதியுடனிருபனின்னோன்  மேன்மையாமறிவுள்ளோனே



விளக்கம்
சூரியனும்  சந்திரனும் எந்த  ராசியிலாவது  கூடியிருக்க  பிறந்தவன்
பலவிதமான  யந்திரக்  கருவிகள்  செய்பவன்  ஆகவும்  பாஷாணம்
வைப்பு சரக்கு முதலியவைகளை உற்பத்தி செய்பவனாகவும்  மிகவும்
புத்தி கூர்மை உள்ளவனாகவும்  இருப்பான் என்பதாம் .

 பல பேரை   மோசம்  செய்வான்
என்னுமால்  சனியைக்கூடி  யிருந்திடமகமாய்  வந்தோன்
மன்னுலகதிற்   பல பேரை   மயக்கியே   மோசம்  செய்து
துன்னுமா   பொருள்கைக் கொண்டே  சுகமடைந்திடுவானாகும்
உன்னித   குருவின்   வார்த்தை   யுட்கொள்ளான்   கர்வியமே

விளக்கம்
புதன் சனி  கூடியிருக்க   பிறந்தவன் உலகத்திலுள்ள  பல பேரை  மயக்கி
மோசம் செய்து  அவர்கள்  கையில் உள்ள     பொருட்களை   எடுத்துக்  கொள்வதில்   கை  தேர்ந்தவனம் . குரு  வார்த்தையை   தள்ளி  விட்டு   தன்மனம் போல  நடப்பவன்  என்பதாம் .






அரசன் யோகம் பற்றிய ஜோதிட பாடல் விளக்கம்



   அரச யோகம்

கதிரவன் சிங்கதங்க  கரியவன் குடத்திலாஷி
மதியவன் மீனம்   நிற்க மங்கலனுச்சம் சென்மப்
பதியதும்   கயலதாகப் பாரதிலுத்தித்த  செல்வன்
நிதியுடன்   செங்கோற்றாங்கும்   நிருபனுமாவான்றானே

விளக்கம்
சூரியன்   சிங்கத்திலும்  , சனி கும்பத்திலும்   ஆட்சியாயிருக்க
சந்திரன் மீன  ராசியில்   கேந்திரமாயிருக்க  செவ்வாய்  மகர  ராசியில்
உச்சமாயிருக்க  மீனத்தில்   ஜெனனமானால்   சம்பத்துடைய  செங்கோல்
அரசனாவான்   என்பதாம் .



  அரசனுக்கு  அரசனாவான்

சொல்லிட   ஜென்ம   நாதன் சோரிய  பஞ்சமத்தில்
வல்லவன்   றனக்கேசேயர்  வரசனுக்கர சேயாவர்
பல்லவர்   புகழத்தானே   பாரினில்   பிறக்க   வாழ்வான்
துல்லிய   தவத்தின் மிக்க   தூய  மாமுனியேகூறாய்

விளக்கம்
லக்கனாதிபதி   ஐந்தாமிடத்தில்  இருக்க  அரசனுக்கு  அரசனாவான்
மற்றவர்கள்  புகழத்தானேயுலகத்தில் பிறந்து  வாழ்வான் .


   மன்னனாவான்

கூட்டமாயைந்துபேரும் கூடி  யோரிடத்தினிற்கத்
தேற்றமாய்  மற்றோரெல்லாம்   தனித்தனி வரிசையாகில்
மூட்டிய உலகமெல்லா மொருவர்  யாளத்தக்க
நீட்டியல்   மன்னனாவான் என்பதாம் .


 விளக்கம்
கூட்டமாய்  ஐந்து  கிரகங்கள்  கூடியே   ஓரிடத்தில்   நிற்க
மற்றவர்க்க ளெல்லாம் தனித்தனியே வரிசையாய் இருப்பார்களானால்
உலகத்தையே  ஆளக்கூடிய  ஒரு  மன்னனாவான்  என்பதாம் .

புதன், 9 மே, 2018

ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்

10  ம் பாவகத்தில்  நிற்கும் கிரகங்கள் விபரம்
     
ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில் இந்த கிரகங்கள் இருந்தாலும் சொல்லப்பட்டுள்ள காரகத்துவ தொழில் அமையும் யார் வலிமையாக இருக்கிறார்களோ அது சம்பந்தமான தொழில் என யூகிக்கலாம் ..பத்தாம் அதிபதி 6,8,12ல் மறைந்திருந்தாலும் பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் தொழில் அடிக்கடி சரிவையும் சிக்கலையும் சந்திக்கும்...பத்தில் இருக்கும் கிரகம் பலமாக அமைந்து பத்தாம் அதிபதி வலிமை குறைந்திருந்தால் வலிமையாக இருக்கும் கிரகத்தின் தொழில் அமையும்.


சூரியன்  - அரசியல்வாதிகள்  , மந்திரிகள் , நீதிபதிகள் , அரசு ஊழியர் .

சந்திரன்  - நர்ஸ் ,  பணிப் பெண் , உணவு சார்ந்த துறை , மதியுகம்

செவ்வாய் – படை வீரர்கள் , மருத்துவர் , நிலக்கிழார்  , வியாபாரி , இன்ஜினியர் , ஆயில்  காப்பிட்டூத் துறை

புதன் – ஆசிரியர்  , கணக்காளார்கள் , தணிக்கைத் துறை , ஏஜெண்டுகள் , முதல்வர்கள் , ஜோதிட நிபுணர்   ,

குரு – பணம் புழங்கும் , நீதிபதி , ஜீவல்லரி , அறநிலையம் , மதம் , அறிவு  சார்ந்த  தொழில் , காப்பகம் ,

சுக்கிரன் – இசை , கலைஞர்கள் , நறுமணப் பொருள்கள்  , துணி , ரத்தினம் , பெண்கள் சம்பந்தம் , ஒட்டல் ,  பத்திரிக்கை , மீடியா , வீட்டு உபயோக பொருள்

சனீஸ்வரர்  - ஆலைகள் , லேபர் காற்றை  வைத்து  செய்தல்  , கமிஷன் , தரகர் , ஏற்றுமதி , இறக்குமதி ,   எந்திரம் , பூமி ,தொடர்பு .




  10  ம் வீட்டு  அதிபதி       12  பாவங்களில் நிற்கும்  பலன் ;

1 . லக்னாதிபதி  10  ல் இருந்தால் தொழிலை இவர் தேடி செல்வார் . 10  ம் அதிபதி லக்னத்தில் இருந்தால்  தேடி வரும்  .

2 . 2 ம் அதிபதி 10  ல் அமைந்தால்  வாக்கால்  ஜீவனம் அமையும் .
10  ம் அதிபதி  2  ல் அமைந்தால் குடும்பத் தொழில் அமையும் .

3 . 3  ம் அதிபதி  10  ல் இருந்தால்  கஷ்டபட்டு தொழில்  அமையும் .
10  ம் அதிபதி 3  ல் இருந்தால் தன் சொந்த முயற்சியால்  தொழில் அமையும் .

4 .  10  ம் அதிபதி 4  ல் இருந்தால்  பல தொழில்கள் அமையும் . 10  ம் அதிபதி  4  லிருந்தாலும்   வாகனத் தொழில் அமையும் .

5 . 5 ம் அதிபதி 10  ல் இருந்தால் ஆன்மீகத் தொழில் மற்றும் பெரிய  பதவிகளைப் பெறலாம் .
10   ம் அதிபதி 5 ல் அமைந்தால் அரசு உத்தியோகம் அமையும் .

6 . 6 ம் அதிபதி 10 ல் இருந்தால் அடிமை  உத்தியோகம் , செய்ய முடியும் .10  ம் அதிபதி  6 ல் இருந்தால்  அடிமை தொழில் அமையும் .



7  . 10  ம்  அதிபதி   8  ல் இருந்தால்  எந்த தொழிலும்  நிலையாக அமையாது .  10  ம் அதிபதி  9  ல் இருந்தால் தந்தை தொழில் அமையும் .
8 . 10  ம் அதிபதி 10  ல் இருந்தால் உன்னதமான தொழில்   அமையும் .


9 . 10  ம் அதிபதி  12  ல் இருந்தால்  பெரும்பாலும் இந்த  அமைப்பு  உள்ளவர்கள்  . வெளி நாட்டில்  வேலை  பார்ப்பவர்  ( அ ) வீட்டை விட்டு  வெகு தொலைவு  சென்று  வேலை  பார்ப்பவரகள்  .

பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்

பெண்களுக்கு  மாங்கல்ய  தோஷம்  விளக்கம் ; 
        
லக்னத்துக்கு 8  க்குடையவன்  சூனியம்  அடைந்தாலோ  . சூன்ய  ராசியில்  நின்றாலோ  , சூனிய  கிரகத்தின்   சாரம்  பெற்றாலோ  மாங்கல்ய தோஷம் ஏற்படும் .
       
  8  குடையவன்   நீசம்   பெற்றாலோ  ,  அஸ்தங்க தோஷம்  பெற்றாலோ , 6  க்குடையவன்  சேர்ந்தாலோ  , 6  க்குடையவன்  சாரம்  பெற்றாலோ  மாங்கல்ய தோஷம் ஏற்படும் .
         
8ல் ராகு  ,  கேது  , மாந்தி  , சூரியன் ,  செவ்வாய்  , சனி அமர்ந்தால்   மாங்கல்ய தோஷமாகும் .
          
         8க்குடையவனுடன்   இராகு  ,கேது  , மாந்தி  . சூரியன்  , செவ்வாய்  , சனி  ஆகிய  கிரகங்கள்  பார்த்தால்   , இணைந்தால்  மாங்கல்ய  தோஷமாகும் .

       8  குடையவனையோ  , 8  மிடத்தையோ   இராகு  , கேது  , மாந்தி  . சூரியன் , செவ்வாய் , சனி   ஆகிய  கிரகங்கள்   பார்த்தால் தோஷமாகும்

         8க்கு  குடையவன்  பாதாகாதிபதி   சம்பந்தப்பட்டால்  8  ம் மிடத்தில்   பாதகாதிபதி  சம்பந்தம்  ஏற்பட்டால்   மாங்கல்ய தோஷமாகும் .

          ரிசப  லக்னத்துக்கும் , சிம்ம லக்னத்திற்கும்  , குரு  சூன்யம் அடைந்தலோ  , மாந்தி  , ராகு  , கேது  ஆகியன சம்பந்தப்பட்டாலோ  , அஸ்தங்கம்  அடைந்தாலோ  மாங்கல்ய தோஷமாகும் ,

        
 பலமான மங்கல்ய தோஷத்தை  ஏற்படுத்தும்  கிரகங்கள்  இராகு , கேது  மாந்தி  ஆகியன ஆகும் .


        “  பாம்பும்   சனியும்  உடன்  கூடில்  சேயரிடடம்
        தேள்  , தனுசு  , சிங்கம்   இவையினில்  அமர்ந்திட
      நேய ஆள்பவர்   தனக்கும்   நாட்டிற்கும்  துன்பமே “ .