குழந்தை ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா..? 11.11.11
குழந்தையின் ஜாதக அமைப்பு மோசமாக இருந்தால் அது பெற்றோரையும் பாதிக்கும்.சூரியனோடு ராகு கேதுக்கள் ,லக்னாதிபதி சம்பந்தப்பட்டு இருந்தால் தந்தைக்கும்,சந்திரனோடு ராகு,கேதுக்கள் லக்னாதிபதி சம்பந்தப்பட்டு இருந்தால் தாய்க்கும் கண்டம் வரும்.குழந்தை பிறக்கும்போது கொடி சுற்றி பிறக்கும்.குழந்தை கரு பிடிக்க ஆரம்பித்த 90 நாட்கள் முதலே அதன் பலன்களை காட்ட ஆரம்பித்துவிடும்.
சூரியனுக்கு முன்னும் பின்னும் பாவ கிரகங்கள் இருந்தாலோ,சூரியன் செவ்வாயோடு கூடி 8ல் இருந்தாலோ தாய்க்கும் கண்டம்,கண்டம் என்றல் உயிர் ஆபத்து முதல் வறுமை,அவமானம்,பிரிவு வரை உண்டாக்கலாம்.6,8 க்குடையவர்கள் செவ்வாய் கூடி லக்கினத்தில் இருந்தால் கண்டம் உண்டாகும்.சந்திரன் லக்கினத்திற்கு 6ல் இருந்து சுபர் பாராமல் பாபர் பார்த்தால் ஆயுள் சொற்பமாகும்.இப்படி பல கணக்குகள் உண்டு.
குழந்தையின் ஜாதகத்தில் லக்கினாதிபதி உச்சம் அல்லது கேந்திரம் பெற்று இருந்தால் அல்லது லக்கினத்தை சுபர் பார்த்தால் நல்லது.குழந்தைக்கு ஆயுள் பலம் உண்டாகும்.குழந்தை வளர வளர குடும்பமும் சிறப்படையும்.
‘’அறிந்த லக்கினத்தாதிபன் உச்சமே
செறிந்து கேந்திரம் சேர்ந்து நல்லோருடன்
உறைந்து தூயர் உறைமனை உற்றிட
நிறைந்த சீவன் பெறுவது நிச்சயம்’’
சில சமயம் குழந்தை தாயின் கர்ப்பவாசத்திலேயே இறந்திருக்கும்.5ஆமிடம் அல்லது 5க்கு 5ஆமிடமாகிய 9ல் செவ்வாய் இருந்து அதை சனி பார்த்து சனி திசை நடந்திருந்தால் கர்மாதிபதியுடன் சம்பந்தப்பட்டு 10க்குரிய கர்மாதிபதி திசை நடந்தாலோ இவ்வாறு கர்ப்பத்தில் உயிர் நீங்கி குழந்தை பிறக்கும்.
----தொடரும்-----
4 கருத்துகள்:
காலை வணக்கம்!பதினொன்று,பதினொன்று,பதினொன்று வாழ்த்துக்கள்! நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள்.ஜாதகம் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் சில நம்பிக்கைகள் எனக்கு உண்டு!
ஆம் என் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் என் தந்தை ஜாதகத்தை பார்ப்பது தேவை அற்றது என்று கூறி விட்டார்.
பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..
அறிந்து கொண்டேன்
கருத்துரையிடுக