செவ்வாய், 22 நவம்பர், 2011

ஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்

ஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம் பாகம் இரண்டு.

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு க்ளிக் செய்யவும்.

சனி பெயர்ச்சி பலன்கள் படிக்க விரும்புபவர்கள் இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் ராகு அமர்ந்த பலன் படிக்க இங்கு செல்லவும்

ஜாதகத்தில் சனி அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் சந்திரன் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

உங்கள் ஜதகத்தில் லக்கினத்தில் இருந்து எத்தனையாவது கட்டத்தில் செவ்வாய் இருக்கிறது என எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.அதன்படி 

லக்கினத்துக்கு ஐந்தில் செவ்வாய் இருந்தால்;

அரசு உத்யோகம் வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது.பத்துக்குடையவன் படுத்து தூங்கினா பார்த்து சொல்லணும்.அறிவாளி.அனைத்து துறை பத்தியும் அளந்து விடுவார்.புராண இதிகாசமும் சொல்வார்.நீதி என்பார் நேர்மை என்பார்.என்னா அரசியல் என விமர்சனம் செய்வார்.உள்ளூர் கவுன்சிலர் முதல் ஒபாமா வரை காய்ச்சி எடுப்பார்.விமர்சனம் அடுத்தவங்களுக்குதான்.இவரை ஊரே விமர்சனம் செய்யும்.அன்னியோன்ய நண்பர்கள் அறவே கிடையாது.வாழ்வில் வறுமை அதிகம்.மாமன் வகை பாதிக்கும்.குழந்தை பாக்யத்தில் பிரச்சினை.

லக்கினத்துக்கு ஆறில் செவ்வாய்;

ஆறில் செவ்வாய் அடிப்படையில் நல்லது.6 மிடம் எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் பத்தி சொல்லுமிடம்.அங்கு போர் வீரன் நின்னா நல்லதுதானே.எதிரிகள் இவர்களை கண்டா அலற மாட்டார்களா.கெட்டவன் செவ்வாய் கெட்டு போறது நல்லதுதான்.அவர் லக்கினத்துக்கு சுபரா இருந்து கெட்டு போனா தொந்தரவுதான்.உள்ளூரில் நல்ல பெயர் கிடைக்கும்.ஊருக்கு உழைக்கும் நல்ல மனுசன்.சகோதரன் கெடுதல் செய்வார்.அரசியல் ஈடுபாடு அநேகமா கிட்டும்.ரோசக்காரனுக்கு கடனை கொடு.ரோசம் கெட்டவனுக்கு பொண்ணை கொடு என்பார்கள்.நாணயஸ்தன்.அதனால கடனை கொடுக்கலாம்..பொண்ணை கொடுக்கலாமா..?கொஞ்சம் கொழுந்தனாருடன் சிரிச்சு பேசுனாலும்,போச்சு....தலையில் கட்டுதான்,பொண்டாட்டிக்கு.உறவுக்குள்ள உரசல் வரும்.அதே சமயம் அன்ணார் க்கு இரண்டு தாரம்.இவர் மட்டும் எப்படி.அப்படித்தான்.கட்டிக்கிறது இல்ல வெச்சுக்குறது..

ஏழில் செவ்வாய்;

செவ்வாய் தோச ஜாதகம்.அம்மா ஆடினால் அய்யா அடங்குவார்.அய்யா ஆடுனால் அம்மா அடங்குவார்.நான் அரசியல் பேசலை.7ல் செவ்வாய் இருக்குற,புருசன் பொஞ்சாதி பத்தி சொல்ரேன்.கல்யாணம் செய்வதற்குள் நாக்கு தள்ளிவிடும்.அந்தளவு அலசி ஆராய்ஞ்சுடுவார்.நரை விழுந்த பின் அவசர அவசரமா கட்டிக்குவார்.ஒரு வழியா அம்மணி வந்து சேர்ந்தாலும் அய்யா பார்வை அடுத்தாத்து அம்புஜம் மேலதான்.சொத்துக்கள்,நிலம் சம்பந்தமான வில்லங்கங்கள் எப்போதும் தொடரும்.பஞ்சாயத்துக்கு ஒவ்வொரு ஆலமரமா ஓடுவார்.காம கதைகள் நிறைய இவரை சுத்தும்.எல்லாம் உண்மைதான்.

எட்டில் செவ்வாய்;

செவ்வாய் தோசம்.பெண்ணாய் இருந்தால் மாங்கல்ய தோசம் + செவ்வாய் தோசம்.சொத்து சுகங்கள் நிறைய உண்டு.ஆனா பார்வை பதியும் இடம் தப்பாகிறது.இதனால் பற்றாக்குறை தொடர் கதை.வட்டிக்கு வாங்கி நெட்டி நிமிரும்.கடனுக்கு சொத்து சுகங்கள் இழக்கவும் நேரலாம்.சீக்கிரம் திருமனம் ஆவதில் சிக்கல்.யாரை பார்த்தாலும் பிடிக்கலை.மூக்கு கோணலா இருக்கு என காலம் போகும்.வயசு போச்சேடா வரதராஜா என பின்னால் புலம்புவார்கள்.எட்டாமிடம் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சு அடக்குற மாதிரி ஆணவமா இருக்கும்.நான் அடங்கி போறவன் இல்லை.அடக்கிட்டு போறவன் என்பார்கள்.இதனால் உறவினர்கள் பகையாகலாம்.மூலம் வியாதி தாக்கும் வாய்ப்புண்டு.

ஒன்பதில் செவ்வாய்;

மதிப்புமிக்க மனிதர்.பட்டம் பெறும் வாய்ப்பு உண்டு.எதை செய்தாலும் லாபம் இருக்கா என பார்ப்பவர்கள்.உத்யோகம் பார்த்தால் நல்ல தொழிலாளி.சொந்த தொழில் செய்தால் நல்ல முதலாளி.தெய்வ பக்தி என்பது தேய்பிறை.அப்பா கூட அடிக்கடி சொல்வார் இந்த பயலை பெத்தது தப்பு.அந்தளவு அப்பாவுக்கும் மகனுக்கும் பாசம்.பிள்ளைகளால் நன்மை இல்லை.நாடு கடந்து செல்லும் வாய்ப்பு வரும்.

பத்தில் செவ்வாய்;

வருமானம் வருவதற்கும்,சொத்து சேர்க்கைக்கும் மிக சிறப்பு.துதி பாடினால் ரொம்ப பிடிக்கும்.குற்றம் சொன்னால் அந்த உறவே வேணாம் என தலை முழுகி விடுவார்.ஆதாயம் கிடைக்குதுன்னா கடல்ல இறங்கி கப்பல் தள்ளனும்னு சொன்னாலும் வந்துருவார்.பதவி வகித்தாலும் பண்ணை வீடு தோப்பு துறவுன்னு வாங்கிப்பார்.மாமனார் வீட்டில் முடிந்தளவு ஆதாயம் பார்த்துவிடுவார்.ராணுவம்,காவல்துறை போன்ற பெரும் துறைகளில் பதவி வகிக்க தகுந்தவர்.

பதினொன்றில் செவ்வாய்;

உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களும் இவரிடம் ஐடியா கேட்பார்கள்.உள்ளூரில் இருந்தாலும் சொல்லுக்கு மதிப்பிருக்கும்.நாட்டாமை அல்லது பண்ணையார்.நிலம் சேர்க்கை என்பது நிச்சயம் உண்டு.திரண்ட சொத்துக்கு அதிபதி.கூட பொறந்தவங்க எண்ணிக்கை கூடுதல்.கஞ்சத்தனம் இல்லாம அஞ்சாறு இருக்கும்.குறைந்த கல்வின்னாலும் நிறைந்த ஞானம்.விவசாயம் செய்தால் லாபம் உண்டு.

பனிரெண்டில் செவ்வாய்;

செவ்வாய் தோசம்.படுக்கை சுகம் பாதிக்கும்.சொத்து,சுகம் பாதிக்கும்.பெண்களாய் இருந்தால் ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை.கல்யாணத்துக்கு பிறகு.மனைவி சுகம் அற்பம்.12 ஆம் இடம் கொஞ்சம் நீக்கு போக்கான இடம்.காமம் சம்பந்தம் அதிகம் உலவும் இடம்.படுக்கை ஸ்தானம் ஆச்சே.அதுல செவ்வாய் இருந்தா விரிவா சொல்ல விரும்பலை.

2 கருத்துகள்:

arul சொன்னது…

good information

Unknown சொன்னது…

I read your entire blogpost it was really good information ....am daily reading this...

Best Astrologer in Chennai