வெள்ளி, 25 நவம்பர், 2011

ரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்

ரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்


இன்று வெள்ளிக்கிழமை சுக்கிரன் நாள் என்பதால்,சுக்கிரன் மேட்டர்.குரு,சுக்கிரன் மட்டும் வைத்து இதை பார்ப்போம்.சில விசயங்கள் மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன்.. குரு,சுக்கிரன் சேட்டைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது..அவ்வப்போது எழுதுகிறேன்..!

சுக்கிரனை தொட்டாலே பெண் மோகம் தான்...எந்த ஜாதகமானாலும் கற்பொழுக்கத்தில் கறை என்று சொல்லும்போது குரு கிரகத்தை பார்க்க வேண்டும்.குரு ஆட்சி உச்சம் பெற்று நின்றுவிட்டால் அது கேந்திர கோணமாக இருந்துவிட்டால் அடக்கி வாசிப்பது அவசியம்..

ஏன்..?

பரம்பரை எண்ணத்தை வரும்படி செய்பவர் குரு.இருக்கும் கவுரவத்தை இழந்துவிடக்கூடாது என்று சிந்திக்க வைப்பவர் குரு.அதனால் வலிய வரும் வாய்ப்புகளை கூட தவறவிட்டு,தன் நிலை தாழாமல் பார்த்துக்கொள்வார்.

ஆனால்..?

ஆறு,எட்டு க்குடைய கிரகத்தின் நட்சத்திர சாரம் பெற்ற குருவாக இருந்தால் அவிழ்க்கிற துணி அடுத்தவருக்கு தெரியாது. ரகசியமாய்....ஒரு உறவு அரங்கேறும்..!

லக்கினத்தில் சுக்கிரன் இருக்குறவன் வீட்டுக்கு போனா வாசல்ல நின்னு கூப்பிடுவதே நல்லது.வீட்டுக்குள்ள போனா நீலப்படம்தான்...இவங்க கண்ல சொக்குப்பொடி வெச்ச மாதிரி எல்லோரும் இவங்க பின்னாடி சுத்துவாங்க.

லக்கினத்துக்கு 3ல் சுக்கிரன் இருக்குறவர் பக்கத்துல கொக்கேக முனிவர் கூட கிட்ட போக முடியாது..காமலோகம் இவர் பக்கம்தான்.

லக்கினத்துக்கு எட்டில் சுக்கிரன் இருந்தால் டிப்ளமோ இன் காமசூத்திரா.

குரு திசை ஒருவருக்கு நடக்கும்போது கடவுள்,பக்தி,ஆன்மீகம்னு பல பேர் நினைக்கிறாங்க...அது தப்பு.குரு என்றால் நாகரீகம்.அதனால இவங்க தப்பு மறைமுகமா நடக்கும்,அவ்ளோதான்.டாஸ்மாக் ல இவங்களை பார்க்க முடியாது.5000 செலவழிக்குற பஃப் பார்ல இவங்களை பார்க்கலாம்..அல்லது 50 கிலோ மீட்டர் தொலைவுல ஒரு சின்ன வீடு இருக்கும்...இதோ இப்போ வந்துடுறேன் என சொல்லிவிட்டு,3 மணி நேரம் கழித்து வருவார்...ஒருத்தரும் கண்டுபிடிக்க முடியாது.


எட்டில் குரு இருந்தா ஊருக்குள்ள இவர்தான் மைனர்.விதம் விதமாய் ரகம் ரகமாய்.எப்படி உசார் பண்றார்னு பக்கத்துல இருந்து கவனிச்சாலும் புரியாது.


பத்தில் குரு..பெண்கள் பால் பலவீனன்.ஆனா இது வேற மாதிரி..அது என்னா...பலவீனம்னு நினைச்சிக்குங்க அவ்ளோதான்.


3 கருத்துகள்:

ConverZ stupidity சொன்னது…

பத்தே பத்து வரிக்கு ஒரு பதிவா ? இன்னம் கொஞ்சம் எழுதலாமே. abrupt-டா முடிஞ்ச மாதிரி ஒரு எண்ணம்.

அது சரி பன்னிரண்டுல(ரிஷபத்தில்) ஐந்து, பன்னிரண்டு வீட்டுக்கு உரியவனான சுக்ரன் இருந்தா என்ன ஆகும்?

perumal shivan சொன்னது…

12-l sukkiran nallathuthaan sthaana balam petru athuvum aatchi petru eruppathaal ayanasayana bhogam nallaa kidaikkum meththai sugam thookkam nallaa varum . nallaa selavum pannuvinga .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புதிய பதிவரான நான் தங்களின் பதிவுகளை விரும்பி படிப்பேன். தங்களின் சேவைக்கு எனது வாழ்த்துக்கள். மிக்க நன்றி!