வெள்ளி, 23 நவம்பர், 2012

அழகான மனைவி அன்பான துணைவி -திருமண பொருத்தம்

அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே....அமைஞ்சா பேரின்பம்தாம்..அப்படி அமைய மாட்டேங்குதே...என புலம்புபவர்கள் பலர்....ஒரு பெண் ஜாதகத்தை பார்த்தால் அதில் அமைந்திருக்கும் கிரக நிலைகளை வைத்து அவள் அழகான பெண்ணா ,அன்பான பெண்ணா என்பதை கண்டறியும் முறைகள் பற்றி கீரனூர் நடராசர் எழுதிய சாதகலங்காரம் சொல்கிறது! 

இதே போல பெண்ணின் ஜாதகத்தை பார்க்கும்போது அவளுக்கு வரப்போகும் கணவனை பற்றியும் சொல்ல முடியும்..அவன் நடத்தை,குணம் ,தொழில் பற்றியும் அறியலாம்...

கன்னிகேள் சன்மத்திற் பிறைசுங்கனிருக்கில்
கழற்பெருமையுடன் சுகியாய்க் காசினியில்வாழ்வாள்

என 861 வது சாதகலங்காரம் பாடல் சொல்கிறது

அதாவது லக்னத்தில் சந்திரனும்,சுக்கிரனும் இருந்தால் பெருமையாக பலர் போற்றும்படி சுகமான வாழ்க்கை இவளுக்கும் இவளை கல்யாணம் செய்து கொள்பவனுக்கும் அமையுமாம்..சந்திரனும்,புதனும் லக்னத்தில் இருந்தால் பல கலைகள் தெரிந்தவளாக நன்கு படித்தவளாக இருப்பாள்...புதனும்,சுக்கிரனும் இருந்தால் பட்ட மேற்படிப்பு முடித்தவளாக இருப்பாள்..மிக இனிமையாக பேச்சு இருக்கும்...லக்னத்துக்கு 3ஆம் இடத்தில் சுப கிரகம் ஏதேனும் இருந்தால் செல்வாக்கும்,செல்வமும் உடையவளாக இருப்பாள்...

இரட்டை ராசியில் குரு,செவ்வாய்,புதன் இவர்கள் இருந்தால் நல்ல குடும்பத்தில்,நல்ல குலத்தில் பிறந்தவளாக இருப்பாள்..நல்ல குணமும் இருக்கும்...


 வளர்பிறை சந்திரனை குரு பார்க்க, பிறந்த பெண் அழகும்,குணமும் உடையவர்...

1,7,5,9 ஆம் இடங்கள் கெடாமல் இருந்தால் அழகும்,குணமும்,அன்பும் நிறைந்தவள்..அதே போல கணவனும் இருப்பான்...செக்கிரன்,சூரியன் சேராமல் இருக்கணும்..சேர்ந்தா ..? கணவனுக்கு அடி உதைதான்...செவ்வாய்,சூரியன் 8ஆம் இடத்தில் சேரக்கூடாது...சேர்ந்தா..? அன்புன்னா என்ன..? இனிமைன்னா என்ன..? என்பது கணவனுக்கு மறந்துடும்...!!

பொதுவாகவே பெண் ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரன் பலமாக அமைந்து,லக்னாதிபதியும்,7ஆம் அதிபதியும்,4,5,7,9,11 போன்ற ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்துவிட்டாலே போதும்.. அவள் கணவனுக்கு மிக யோகமாக அமைந்துவிடும்..நல்ல ருசியாக சமையல் செய்து கணவனை மயக்குவாள்..இனிமையாக அழகாக,அறிவாக பேசி வியக்க வைப்பாள்..தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கணவனுக்கு துணையாக இருப்பாள்..தாம்பத்ய சுகத்திலும் குறைவிருக்காது..மிக அழகான தோற்றமும் இருக்கும்..கணவனும் அழகானவனாக இருப்பான்..திருமணத்துக்கு பின் நல்ல வசதியும்,முன்னேற்றமும் உண்டாகும்..











2 கருத்துகள்:

Thozhirkalam Channel சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி..

கத்துக்குட்டி சொன்னது…

சார், வணக்கம். பிரசன்னம் பார்க்கும் சோழிகள் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்துங்களேன்