வியாழன், 29 ஆகஸ்ட், 2013

சூரியன் திசை யோகம் தருமா.. வணங்க வேண்டிய தெய்வம் ஜோதிடம்

சூரிய திசை சுக்கிர திசைக்கு பின்னர் வரும்..சுக்கிர திசையில் சுகவாசியாக இருந்துவிட்டு சூரிய திசையில் புழுவாய் துடித்தான் என்பார்கள் சூரியனின் திசை அவ்வளவு கொடுமையானதா என்றால் சில லக்னக்காரங்களுக்கு யோகத்தையும் கொடுத்திருக்கிறது..சுபர் சேர்க்கை சுப நட்சத்திரக்கால்களில் சூரியன் நின்று திசை நடத்தினால் யோகமும் செய்திருக்கிறது.சூரியனின் நட்சத்திரங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்ப திசையே சூரிய திசையாக இருக்கும்...உத்திரம்,உத்திரடம் நட்சத்திரங்களில் குழந்தை பிறக்கும்போது சூரிய திசை முதல் திசை..சூரிய திசையில் பிறக்கும்போது தந்தைக்கு ஆகாது என்பார்கள்..குழந்தைக்கு திசை முடியும் வரை மருத்துவ செலவு அடிக்கடி உண்டாகலாம்.


சிம்ம லக்னத்துக்கு லக்னாதிபதியாக வருகிறார் அவர்களுக்கு நன்மையே செய்திருக்கிறார்..தனுசு  லக்னத்துக்கு பாக்யாதிபதியாக வருகிறார்.. அவர்களுக்கு யோகத்தை கொடுத்திருக்கிறார்...மேசம் லக்னத்தாருக்கு பூர்வபுண்ணியாதிபதியாகவும் ரிசப லக்னத்துக்கு சுகாதிபதியாகவும் வருகிறார் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுத்திருக்கிறார் ..இந்த லக்னத்தாருக்கு எல்லாம் சூரியன் 6,8,1ல் கெடாமலும் ராகு,கேது,சனியுடன் சேராமலும் சூரியன் இருக்க வேண்டும்..குருவுடன் சேர்ந்தால் ரிசப லக்னத்தாரை தவிர்த்து ஏனையோருக்கு போனஸ் யோகம்தான்.

சூரியன் என்றால் ஒளி..அவர்கள் வாழ்வில் அதுவரை இருளாக இருந்தவை அனைத்தும் புதிய ஒளியாக சூரிய திசை விளங்கிடும்.ஒளியே ஓவராக போனால் எரியும்..கண்ணு கூசி தடுமாறி கீழே விழ வைத்துவிடும் அதுதான் மற்ற லக்னத்தாருக்கு உண்டாகிறது மருத்துவ செலவுகள்,அரசாங்க எதிர்ப்பு,வழக்கு போன்றவற்றை சந்திக்க நேரும்..

சூரியனுக்கு சிவனை வணங்கலாம்..குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் நல்லது.தினசரி காலை சூரிய நமஸ்காரம் அவசியம்...துளசி மாட வழிபாடு நல்லது..ஞாயிறு சிவன் கோயில் வழிபாடு உத்தமம்...சூரிய காயத்ரி தினமும் உச்சரியுங்கள் நல்லது நடக்கும்..!!

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கன்னி ,துலாம்,ரிசபம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல நேரம்..? # ஜோதிடம்

கன்னி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல நேரம்..? # ஜோதிடம்

கன்னி ராசியினருக்கு ஏழரை சனியில் பாத சனி நடக்குது...துலாம் ராசிக்கு ஜென்ம சனி நடக்குது...குருபலம் என பார்த்தால் துலாம் ராசிக்கு 9ல் குரு போனவருசத்தை விட நன்மை தரும் ஆன தொழில் இன்னும் வேலைப்பளு சிக்கல் என்றே நீடிக்கிறது...

கன்னி ராசிக்கு அதிபதி புதன்..துலாம் ,ரிசபம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ...புதன் இப்போ சூரியனுடன் இணைந்து ஒரு பாதத்தில் போகிரார் இது சிக்கலான காலமாக இருக்கிரது மனக்குழப்பம் அதிகரித்து இருக்கும்...பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் ..மருத்துவ செலவு கூடும்..துலாம் ராசிக்கு ராசிநாதன் 12ல் சுக்கிரன் நீசமாகி இருக்கிறார் இதுவும் மோசமான காலமாகவே இருக்கு.பணப்பிரச்சினை,மனப்போராட்டம்,அதிக அலைச்சல்,எதை திட்டாலும் தோல்வி,குடும்பத்தில் நிம்மதி இல்லாமை என இருக்கும்.

செப்டம்பர் 20 தேதிக்கு மேல் புதன் கன்னி ராசியில் சென்று உச்சமாகிறார் சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி பெறுகிறார் இது இந்த இரு ராசிக்காரர்களுக்கும் மட்டுமல்ல ரிசபராசியினருக்கும் அதிக நன்மை தரும் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

செவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்

செவ்வாய் தோசம் என்றால் என்னன்னு தெரிஞ்சிக்குங்க #ஜோதிடம்

செவ்வாய் ஒரு யுத்த கிரகம்.  சண்டைக்கு அதிபதி வீரத்துக்கு அதிபதி, நிலத்துக்கு அதிபதி, ரத்தத்துக்கு அதிபதி, பெண்கள் என்றால் கணவனை குறிப்பது என சொல்கிறது ஜோதிடம்...ஒரு ஜாதகத்தில் செவ்வாய் எங்கு நின்றாலும் அந்த இடம் அதிக சக்தியுடன் வீரியத்துடன் இருக்கிறது..அந்த பாவத்தை பல மடங்கு கொந்தளிக்க செய்யும்...உதாரணமாக லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது என்ன..? வாக்கு அதாவது பேச்சு ,பார்வை, ஆரம்ப கல்வி என சொல்வோம் அங்கு செவ்வாய் இருந்தால் இவையெல்லாம் பல மடங்கு சக்தி பெறும் இதனால் பேச்சு அனல் பறக்கும். கோபம் அதிகமாக, பிடிவாதம் அதிகமாக ,நான் சொல்வதே சரி என சொல்ல வைக்கும்..அப்போ செவ்வாய் தோசத்தின் அடிப்படை என்ன..? இதெல்லாம் பிரச்சினையான இடம் அதுக்கு தகுந்த மாதிரி சேர்த்துங்க என நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

4ஆம் இடம் சுக ஸ்தானம் உடல் அடிக்கடி பாதிக்கப்படுவது அல்லது உடல் அதிக பலத்துடன் இருப்பது,சொத்துக்கள் சேர்க்கை அல்லது சொத்துக்களில் வில்லங்கம்,தாயார் பாதிப்பு தாயாரால் பிரச்சினை,ஒழுக்கம் பாதிக்கப்படுதல் அல்லது ஒழுக்கத்தில் அளவுக்கு அதிகமான கண்டிப்பு இவையெல்லாம் லக்னத்தை பொறுத்து மாறும் என்பதால் இதையும் கொடுத்திருக்கிறேன் நெகடிவ் பாசிடிவ்.

7ஆம் இடம் என்பது என்ன..? களத்திர ஸ்தானம் அதாவது செக்ஸ் ,காமம் இவற்றை பற்றி சொல்லும் இடம்.. கணவன் அல்லது மனைவியை பற்றி சொல்லும் இடம், கூட்டாளி பற்றி சொல்லும் இடம் ,அங்கு செவ்வாய் இருந்தால் அதெல்லாம் பல மடங்கு பலம் பெறும்.. அல்லது அவற்றால் பல மடங்கு பிரச்சினைகளும் வரும்..மனமத லீலையில் மன்மதனாக இருப்பார்கள்..பெண்ணாக இருப்பின் கணவனுக்கு சுகம் கொடுப்பதில்,ரதியாக இருப்பாள் ,கணவனுக்கு மட்டும். இவர்களுக்கு ஈடு கொடுக்கும்படி துணை இருக்கனும் ...தொட்டாலே கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருக்கு எனும் குணவதியை கட்டி வெச்சிட்டா டைவர்ஸ் தான்.அப்போ எவ்வளவு எச்சரிக்கையா இருக்கனும்..? ராசிக்கட்டத்தை ஆராயாமல் 9 பொருத்தம் இருக்கு.. ராமனும் சீதையும் மாதிரிஇருப்பாங்க  என புலிக்கு பூனையை கட்டி வெச்சிடாதீங்க மக்களே..!!

8ஆம் இடம் கொஞ்சம் விவகாரமானது எதையும் ஓபனா சொல்லிடனும்னு நினைப்பதால் சொல்கிறேன்...இந்த இடம் ஆண் உறுப்பு பெண் உறுப்பு பற்றிய இடம்,நஷ்டம் பற்றியும் திடீர் அதிர்ஷ்டம் பற்றியும் சொல்லும் இடம்,துக்கத்தை சொல்லும் இடம்..சதா குழப்பமும் துக்கமும் இருக்கும்..டென்சன் அதிகமாகவே இருக்கும் இவருக்கு 2ல் செவ்வாய் இருக்கும் வாயாடியை ( ஸாரி எளிமையா புரியனும்னு இந்த பதத்தை பயன்படுத்துறேன்) கட்டி வெச்சிட்டா என்னாகும்..? போர்க்களம்தான்..எப்படி சந்தோசம் வரும்..? சரி இவருக்கு எந்த செவ்வாய் கல்யாணம் செய்து வைக்கிறது..? துக்கத்தில் இருப்பவரை சந்தோசப்படுத்திட 2ல் செவ்வாய் தவிர வேறு செவ்வாய் எதையும் சேர்க்கலாம்,

12 ஆம் இடம் என்பது தூக்கம்,கட்டில் சுகம்,காம உணர்வு,முக்தி,மோட்சம் பத்தி சொல்லும் இடம் அதை காம உணர்வு உற்பத்தியாகும் இடம்னு வெச்சிக்குவோம்..அங்கு செவ்வாய் இருக்கிறார் அப்போ தூக்கம் இல்லாம தவித்தல்,சதா சுகம் பத்திய நினைவு உண்டாதல் இருக்கலாம்..இவருக்கு 7ல் செவ்வாய் இருப்பவரை கட்டி வெச்சா செம பொருத்தமா இருக்கும் இல்லையா..? 2ல் செவ்வாய் பேசிக்கிட்டே இருப்பார் ....புரியுதுல்ல..7,12 செவ்வாய் நல்ல பொருத்ததை தரும் 2,8 செவ்வாய் மோசமான பொருத்தம்.4-7,4-8,2-7 கூட பிரச்சினை இல்லை...செவ்வாய் தோசத்தின் முக்கிய சாராம்சம் இதுதான்..அதுக்கப்புறம் சுக்கிரன் வெச்சி இது மாதிரி ஆராய்ச்சி பண்ணலாம்...குரு இவருக்கு மேல இருப்பாரு...குரு,சுக்கிரன்,செவ்வாய் ,சூரியன் எல்லாம் முக்கியமான பெரிய கிரகங்கள் இவர்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்காம பொருத்தம் அருமையா இருக்குன்னு சொல்லாதீங்க...

ஜாதகம் பார்க்க விரும்புபவர்கள் பிறந்த தேதி பிறந்த நேரத்துடன் என் மெயிலுக்கு உங்க கேள்விகளையும் எழுதி அனுப்பவும் கட்டணம் ரூ 500 மட்டும்....sathishastro77@gmail.com




.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நரேந்திர மோடியின் சீற்றம் நடுங்கும் காங்கிரஸ்

காங்கிரசை எதிர்க்க பவர் ஃபுல்லான பிரதமர் வேட்பாளர் இல்லாமலும், உள்கட்சி பகையாலும் பா.ஜ போனமுறை தோல்வி அடைந்தது ஆனால் இந்த முறை அப்படி இல்லை...மோடி பலம் வாய்ந்தவராக எல்லா வகையிலும் தகுதியானவராக மக்கள் ஆதரவு பெற்றவராக களம் காண்கிறார் இப்பவே காங்கிரசுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வருகிறது இன்னும் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் இப்போது இருப்பது போல பல மடங்கு மோடி ஆதரவு அலை பெருக ஆரம்பிக்கும்...அதை முறியடிக்க காங்கிரஸ் பக்கம் வசீகரமான ஆட்களோ மக்கள் ஆதரவு பெற்றவர்களோ இல்லை..மாறாக எதிர்ப்பு அலை சூறாவளியாக வீசும்.
ராஜராஜ சோழன் விருச்சிக ராசிக்காரர்களைதான் எப்போதும் எதிரிகளிடம் தூது அனுப்புவாராம்...காரணம் எதிரிக்கு தகுந்தாற்போல வளைந்து கொடுத்து காரியத்தை சாதித்து விடுவார்கள்..எதிரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை படிப்பதில் கில்லாடியாகவும் இருப்பார்கள்..மோடி விருச்சிக ராசி..தேர்தல் பிரச்சார குழு தலைவர் அதாவது கட்சிக்கும் மக்களுக்குமான தூதுவர்...அவர் மக்கள் மனதை ஏற்கனவே படித்தவர்..சொல்லவா வேண்டும்..மோடி மஸ்தான் தன் வேலையை திறம்பட செய்வார் ...2018ல் நம் இந்தியா வல்லரசு ஆக வேண்டும்..ஊழல் ஆட்சி,கோழை கட்சி,அந்நியர்களின் சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும்...அவ்வளவுதான்...!!


எல்லையில் சீனா 30 கி.மீ வரை உள்ளெ புகுந்து ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..பாகிஸ்தான் காரன் அடிக்கடி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துகிறான்... டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவு பாதாளத்துக்கு போய்விட்டது எதையும் இந்த காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை..பிரதமர் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்..அரசு செயல்படுகிறதா என்பதே சந்தேகம்...பயப்படாதீங்க ஒண்ணும் ஆகாது என்றே நிதி மந்திரி சொல்லிக்கொண்டிருக்கிறார் கழுத்தளவு நீரில் மூழ்கிகொண்டிருக்கிறோம் இன்னும் இதையே சொன்னால் எப்படி..? 

இப்போ தங்கம் விலை 24,000 ரூபாய் நோக்கி போகிறது..பெட்ரோல் டீசல் விலை வாரவாரம் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் இஷ்டத்துக்கு இனி ஏறும்..விலைவாசியும் அதனுடன் சேரும்...இதை எப்படி தடுக்கப்போறாங்க...தடுப்பாங்களா என்பதே சந்தேகம்..நேற்று கூட நிலக்கரி ஊழல் சம்பந்தமான ஃபைகள் எல்லாம் காணாம போச்சு என்கிறார்கள் அதுவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்றால் நம் நாட்டு பாதுகாப்பின் லட்சணம் புரிகிறதா..?ஊழல் இல்லா துறையே இல்லை என்று ஆகிவிட்டது..யாரையும் இவங்க கட்டுப்படுத்துறது இல்ல..அடக்குவது இல்லை..இவங்க கவலை எல்லாம் மீடியாவுக்கு தெரியக்கூடாது எதிர்கட்சிகளுக்கு தெரிய கூடாது என்பதுதான்.

எதிலும் உறுதியான நிலையான முடிவு எடுக்காத கோழை கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். ஆட்சிக்கு வந்து,ஒன்பது வருசம் ஆச்சு ...என்னதான்யா கிழிச்சீங்க என மோடி கேட்கும் கேள்விக்கு அங்கு பதில் சொல்லத்தான் யாரும் இல்லை..!!

சனி, 17 ஆகஸ்ட், 2013

மீனம்,கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினர் கவனிக்கவும்;சனி தோசம் நீங்க ஒரு எளிய பரிகாரம் ;ஜோதிடம்

சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் உஷ்ணம் தீரும்..உடல் உஸ்ணத்தால்தான் பல வியாதிகள் உண்டாகிறது என்பதால் நம் முன்னோர் இதை கட்டாயமாக கடைபிடிக்க சொன்னார்கள்..இதற்கு பின்னால் இன்னொரு உண்மையும் இருக்கிறது ஏழரை சனி,அஷ்டம சனியால் துன்ப்படுபவர்களுக்கு நல்லெண்ணெய் குளியல் ஒரு பரிகாரமாகவும் இருக்கிறது...சனியால் ஏற்படும் துன்பம் தீர நல்லெண்ணெய் குளியல் சிறந்த பரிகாரம்..!! இமாச்சல் பிரதேசத்தில் சோம்பல் காரர்களுக்கும், அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுபவர்களுக்கும் வேலை அல்லது தொழில் இல்லாமல் துன்பபடுபவர்கள் அடிக்கடி நஷ்டப்படுபவர்களுக்கு இதைத்தான் பரிகாரமாக சொல்கிறார்கள்...
 
மீனம்,துலாம்,கன்னி,விருச்சிகம்  ராசியினர் இதனை தவறாமல் கடைபிடிய்ங்கள் வெறுமனே கோயிலுக்கு மட்டும் போகாமல் சனிக்கிழமை ஆனால் காலை 7 மணிக்கே நல்லெண்ணெய் உடல் முழுவதும் தலை உட்பட நன்கு தேய்த்துக்கொண்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டு அதன் பின் சீகைக்காய் கொண்டு குளிக்கவும்...அன்று காலை எதுவும் சாப்பிட வேண்டாம் மதியம் காக்கைக்கு சாதம் வைத்துவிட்டு உண்ணவும்...இரவு இட்லி ,தோசை சாப்பிடலாம்..அசைவம் நிச்சயம் கூடாது...
உங்கள் தெருவில் வரும் துப்புறவு பணியாளர்களுக்கு டீ கொடுக்கலாம் அல்லது டீத்தூள் கொடுக்கலாம்..அல்லது டீ கொடுக்க வெச்சிக்குங்கன்னு ஒரு பத்து ரூபாயாவது கொடுக்கலாம் மாசம் ஒரு தடையாவது..
நீலம் கல் பதித்த ஐம்பொன் மோதிரம் அணியலாம்..இதை என் வாடிக்கையாளர்கள் பலருக்கு கொடுத்திருக்கேன் அது நல்ல பலன் கொடுத்திருக்கு..வெறுமனே ஏழரை சனிக்கு மட்டும் இதை அணிய வேண்டாம்..ஜாதகத்தில் சனி கெட்டிருந்தாலோ செவ்வாயுடன் சேர்ந்திருந்தாலோ அதிக பாதிப்பை தரும் இதை எழுதும்போதே ஒரு கன்னி ராசிக்காரர் தலையில் அடிபட்டுடுச்சி சார் எப்போ ஏழரை முடியும்னு புலம்புறார்..சனி திசை உங்க ஜாதகத்துல நடந்தா கண்டிப்பா நீலக்கல் போட்டுக்குங்க..சனி தொழிலை கெடுப்பது மட்டுமல்ல வாகன விபத்து,அறுவை சிகிச்சை ,கோர்ட் வழக்கு என நோக செய்து விடுவார்  அது போன்ற கடும் துன்பங்கள் திடீர்னு தாக்காம இருக்க ஐம்பொன் அவசியம் ஐம்பொன்னில் 5 உலோகங்கள் இருக்கு..வெள்ளி,தங்கத்தை விட இது வேகமான பலன் கொடுக்கும்..உங்க ஜாதகத்தை எனக்கு மெயில் பண்ணுங்க..இல்லைன்னா உங்க பிறந்த தேதி பிறந்த நேரம் இவற்றை எழுதி அனுப்புங்க..உடன் பார்த்து சொல்கிறேன் நானே மோதிரம் செய்து பூஜித்து கொரியரில் அனுப்பி வைக்கிறேன் அளவு எண் சொன்னால் போதுமானது...ஒரிஜினல் சாதிக்கல் மோதிரம் தான் என் வாடிக்கையாளருக்கு தருகிறேன் அதில் சந்தேகம் வேண்டாம்...நகைக்கடைகளில் விற்பதை விட குறைந்த விலையில் தருகிறேன்..என் மெயில் முகவரி;sathishastro77@gmail.com

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வரலட்சுமி விரதம் பூஜை முறை

வரலட்சுமி விரதம் பூஜை முறை;

பூஜைக்குத் தேவையானவை :

 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

நிவேதனப் பொருள்கள்:

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

 பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை...

 பூஜைக்கான முன்னேற்பாடுகள்:

வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். மஞ்சள் பில்ளையார் பிடித்து வைத்து அதில் அருகம்புல் சொருகி வினாயகர் மந்திரத்தை உச்சரித்து விட்டு,மகாலட்சுமி துதியை சொல்லவும்..

அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.சிறு பெண் குழந்தைகளை அழைத்து வந்து பூஜையில் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும் அவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் பூஜையின் இறுதியில் கொடுத்து கையில் மஞ்சள் கயிறு கட்டி அனுப்பவும்...ஓம் நமோ நாராயணா..!!

புதன், 7 ஆகஸ்ட், 2013

ஸ்ரீரங்கம் கோபுரமும் இலங்கையும்,தஞ்சாவூர் கோயில் மர்மங்களும்



ஸ்ரீரெங்கம் கோபுரம் 223 அடிகள் கொண்டது..இது எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் ஜீயர் சுவாமிகளின் வற்புறுத்தலால் கட்டப்பட்டது அதுவரை மொட்டை கோபுரமாக இருந்தது...ஸ்ரீரெங்கம் சுற்றிலும் காவிரியால் சூழப்பட்ட ஒரு தீவு நகரம்..அவ்வளவு பெரிய கோபுரம் கட்டணும் என்றால் அஸ்திவாரம் எவ்வ்ளவு பலமாக இருக்க வெண்டும்..? அதை கணித்துதான் அக்காலத்திலேயே 150 அடி ஆழத்தில் தோண்ட தோண்ட சேறாக வரும் அந்த நிலப்பகுதியில் கனமான அஸ்திவாரம் அமைத்து இருக்கிறார்கள்...சரி எதற்கு அவ்வளவு பிரம்மாண்டமான கோபுரம் அஸ்திவாரம் அமைத்து அதனை விட்டு விட்டார்கள்..? ஸ்ரீரெங்கப்பெருமாள் இலங்கையை பார்த்த வண்ணம் படுத்திருக்கிறார்...அக்கோபுரத்தை கட்டினால் வாஸ்துபடி இலங்கையை பாதிக்கும் அங்கு அழிவு உண்டாகும் என ஒரு பாடலே இருக்கிறது இலங்கை மன்னன் வீழ்வான் என்று முடியும் அந்த பாடலை அப்போது தினமலரும் வெளியிட்டது...கோபுரம் கட்டியதும் எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்கு உதவி செய்ததும் எம்.ஜி.ஆர்...



இது போல்; தஞ்சாவூர் கோயிலிலும் அரசியல்வாதிகள் நுழைந்தால் சாபம் பெறுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது அது இன்றுவரை தொடர்கிறது...கோயில் கட்டி 1000 மாவது ஆண்டு நிறையும் முன்னரே எம்.ஜி.ஆர் சத்ய விழாவை அப்போது இந்திரா காந்தியை அழைத்து கொண்டாடினார் அதன் பின் நோய் வாய்ப்பட்டு எம்.ஜி.ஆர் அமெரிக்கா போனார் இந்திராவோ சுட்டுக்கொல்லப்பட்டார்..அக்கோயிலை கட்டிய ராஜராஜனின் கடைசி காலமே மர்மமாகத்தான் இருக்கிறது!!

இது சம்பந்தமாக,ஜூனியர் விகடனில் அன்று (23.01.1985ல்) வந்திருந்த செய்தி:

    திருவையாறு திருவையாறு தியாகப் பிரம்ம ஆராதனை உற்சவத்தைத் துவக்கி வைத்த மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர்.வி.என்.காட்கில் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வருவதாக ஏற்பாடாகியிருந்தது.

    பூரண கும்பம், பரிவட்டம் போன்ற மரியாதைகளுடன் பெரிய கோவில் நிர்வாகிகள் ஆவலுடனும், பரபரப்புடனும் காத்திருந்தனர்.

    காத்திருந்ததுதான் மிச்சம். மத்திய அமைச்சரின் கார் ஆலயத்தின் பக்கமே வராமல் பறந்து விட்டது.

    “சரிதான்...! அரசியல்வாதிகளுக்கும் இந்த ஆலயத்திற்கும் சரிப்பட்டு வரவில்லை என்ற ரகசியத்தை யாரோ மத்திய அமைச்சரிடம் சொல்லியிருக்க வேண்டும். அதனால் பயந்துபோய் அமைச்சர் ஆலயத்திற்குள் நுழையவில்லை போலிருக்கிறது!” என்று இந்தச் சம்பவத்தைப் பற்றித் தஞ்சை மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

    தங்கள் ஊரில் உள்ள பெரிய கோவிலைப் பற்றி எவ்வளவு பெருமைப் படுகிறார்களோ, அந்த அளவிற்கு அந்தக் கோயிலுக்கு ஏதோ மர்ம சக்தி இருப்பதையும் தஞ்சை நகர மக்களிடையே சமீபத்தில் ஒரு நம்பிக்கை வேகமாகப் பரவியிருக்கிறது. தஞ்சை நகர புகழ் மிக்க சந்து முனைகளிலும், கடைத் தெருக்களிலும் இந்த மர்ம சக்தி பற்றி பேச்சு அடிபடாத நாளே கிடையாது.

    ”நடந்த சம்பவங்களை வரிசையாகச் சேர்த்து வைத்துப் பார்த்தால் நகர மக்கள் சொல்வதில் உண்மை இருப்பது தெரிகிறது. இந்தச் செய்தியை இதுவரை நாங்கள் வெளியிடாததற்குக் காரணம் ஏதோ ஒருவகை தயக்கம்தான்” என்ற ஒரு உள்ளூர் நிருபர், பிறகு மெதுவாக, “பயம்கூட” என்றார். பெரிய கோயில் மர்ம சக்தியைப் பற்றி தஞ்சை நகரெங்கும் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் இவைதான்



தஞ்சை பெரிய கோவிலில் ராஜ ராஜ சோழன் சிலை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் மோதினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதையொட்டி பெரிய பிரச்சினை எழும்பியது. சிலையை உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தபோது, “நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் கோயில் அது. புதிய சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் வழி இல்லை” என்று காரணம் கூறியது.

    அதே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்குப் புதிய மண்டபம் கட்டப் பட்டிருந்தது. இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே வராஹி அம்மன் அங்கே இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. வராஹி அம்மனுக்கும் புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்குக் குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள்.

    “புதிதாக ராஜ ராஜன் சிலை கோயில் உள்ளே வைக்கக் கூடாது என்றால் வராஹி அம்மனுக்கு மட்டும் புதிதாக மண்டபம் கட்டலாமா? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?” என்று கலைஞர் தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் வராஹி அம்மனின் புதிய மண்டபத்தை இடிக்கும்படி மத்திய அரசு சொல்லிவிட்டது.

    இந்தப் பிரச்சினை கிளம்பிய சிறிது காலத்திற்குள் கலைஞர் அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. “அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது” என்றார் பிரபல உள்ளூர் நிருபர் ஒருவர்..

கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர். அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசிச் சென்றார்.

கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.

தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது 



திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கள்ளக்காதலால் கெட்டுப்போனவர் ஜாதகம்



ஜாதகத்துல 12ல் ராகு இருந்தால் ஆண் என்றால் கெட்டப்பழக்கங்கள் எல்லாமே இருக்கும்..பெண் என்றால் அழகு படுத்திக்கொள்ளவும், வீட்டை அலங்காரம் செய்யவும் ஆடம்பர செலவுகள் செய்வார்..ஆண் கடன் வாங்கியாவது குடிப்பான்..பெண்ணும் அப்படித்தான்...6ல் சுக்கிரன் இருந்தால்,ஆணாய் இருந்தால் பெண்ணுக்கும் பெண்ணாய் இருந்தால் பாய் ஃப்ரெண்டுக்கும் அதிக செலவு செய்வார்கள்...



சுக்கிர திசை ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் ஆடம்பரத்துக்கும் மோகத்துக்கும் அடிமையாக போகிறார் என்று அர்த்தம் குரு திசையும் இப்படித்தான்...குருவோ,சுக்கிரனோ ராகுவுடன் சேர்ந்து இருந்து திசை வந்து விட்டால் கள்ளக்காதல் கன்ஃபார்ம்.சனி 7ல் இருந்தால் திருமணம் லேட்டாகிறது அப்படி ஆனாலும் வயதில் மூத்தவர்களைத்தான் கல்யாணம் செய்கிறார்கள்..20 வயது பெண்ணுக்கு 40 வயதுக்காரருடன் திருமணம் ஆகிறது


லக்னத்துக்கு 3,5 ஆம் இடங்கள் ராகு,சனி போன்றவை இருந்தாலோ சுக்கிரன் ராகு குரு ராகு இருந்தாலோ கள்ளக்காதல் பிரச்சினைகள் உண்டாகின்றன...இப்போதெல்லாம் பேப்பரில் பார்த்தால் தினம் தினம் கள்ளக்காதலில் மனைவி கொலை..கணவன் கள்ளக்காதலன் துணையோடு கொலை என்றெல்லாம் செய்திகள் பயமுறுத்துகின்றன..7ஆம் அதிபதி கெட்டுப்போனவருக்கு தான் இந்த நிலை உண்டாகிறது...அதாவது 6,8,12ல் அமர்ந்து 6ஆம் அதிபதி பார்த்தாலோ சேர்ந்தாலோ மனைவியே எதிரி ஆகிறாள்....

சுக்கிரன் ,குரு எல்லாம் காமத்தை அதிகம் தூண்டுவார்கள்..சந்திரன் இன்னும் விசிறி விடுவார்..இவர்களுடன் ராகு இருந்தால் வெறியேற்றுவார்..தப்பு செய்ய வைப்பார்!
ராகு குரு சம்பந்தம் ஆனால் எல்லா கெட்டப்பழக்கமும் உண்டு..சுக்கிரன் ராகு இருந்தால் காம வெறி உண்டாகும் காமலோகம் இவர்களை சுற்றி இயங்கும்...!!!

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ஜோதிடம்

ஜோதிடம் 

 ஆடி 18 சிறப்பான நாள்.அம்மனுக்கு இந்த மாதம் முழுக்க விசேஷமான வழிபாடுகள் நடக்கும்.மகாபாரத போர் இந்தநாள் தான் முடிந்ததாக சொல்வார்கள் .ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்வதில்லை.கொடுமுடி.பவானி.ஸ்ரீரங்கம் போன்ற காவிரிகரை கோயில்களில் மக்கள்  கூட்டம் அலைமோதும்.சூரியன்,சந்திரன் வீட்டில் இருப்பதால் இம்மாதத்தில் குழந்தை பிறப்பு தோசம் தாய் தந்தைக்கு ஆகாது என்பர்.தந்தைக்கு ம்,தந்தை வம்சத்துக்கும் அதிபதி சூரியன் அவர் தாயை குறி க்கும் இடத்தில் இருக்க க்கூடாது.அது வம்சத்துக்கு எனவும்,குழந்தை அடிக்கடி உடல்நலம் பாதிக்கும் எனவும் முன்னோர் நம்பினர்.இது நோய்கள் பெருகும் மாதம்.ஆற்றில்  புதுவெள்ளம் வருவதாலும்.ஆடிக்காத்து பிறந்த குழந்தை வளரும் குழந்தைக்கு ஆகாது என்று கருதினர்

.

பஞ்சலோகம் ரகசியங்கள்

பஞ்சலோகம்
------------------
பொதுவாக அனைவரும் தங்கம் ,வெள்ளியில் நகைகள் அணிவது வழக்கம் . இதிலுள்ள உட்கருத்துக்கள் என்னவெனில் அந்த உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்...இது மட்டும் போதுமா.. பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது பெரும் பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை .தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது .இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரிலும் பிரதிபலிக்கும் .இதை புரிந்து கொண்டதனால் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர் என்பதில் சந்தேகமில்லை இதனால்தான் நம் கோயில்கள் அனைத்திலும் பஞ்சலோக சுவாமி சிலைகள் இருக்கின்றன..இதனை பார்ப்பதால் கண்கள் வழியாக அதன் ஒளி ஊடுருவி நன்மை தரும்..அதனை அபிசேகம் செய்த பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் கிடைக்கும் என பெரியோர்கள் கருதினர்..

பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி உடலில் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும் .இதற்காகவே பஞ்சலோக நகைகள் அணிவது சிறப்பு..இதில் நான் ராசிக்கல் மோதிரம் செய்து என் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறேன்.பெரும்பாலும் என்ன ராசியோ அதற்கு ஏற்ற கல்லை கொடுப்பதில்லை..காரணம் நம் ஜாதகப்படி கிரக பலவீனம் அறிந்து கொடுக்க வேண்டும்..என்ன திசை நடக்கிறதோ அதையும் கவனிக்க வேண்டும்...அதன் படி ராசிக்கல் அணிந்தால் நன்மை நிச்சயம் உண்டு..உங்கள் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பெயர் இவற்றுடன் மெயில் செய்யுங்கள்...மோதிர விபரங்களை அனுப்புகிறேன்..sathishastro77@gmail.com