செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

சனி வக்ரம் என்ன செய்யும்..? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு..?

சனி வக்ரம் என்ன செய்யும்..? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு..?

சனிப்பெயர்ச்சிக்கு பின் அதாவது சனி கன்னி வீட்டில் இருந்து துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிவிட்டது.இப்போது வரும் 8.2.2012 முதல் 25.6.2012 வரை சனி துலாம் ராசியில் வக்ரம் ஆகிறார்.அதாவது பலம் இழந்துவிடுகிறார்.இதனால் சனியால் ஆதாயம் அடைந்தவர்களுக்கு இது சற்று கலக்கம் தரும் செய்திதான்...

சனி பற்றி ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்பு என்னவெனில் சனிதான் ஆயுள் காரகன்.சனிதான் தொழில் காரகன்.சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி.ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும்.

சனி வக்ரம் என்பது பின்னோக்கி நகர்தல் என பார்த்து பலன் அறியலாம்.அதாவது சனி மீண்டும் கன்னிக்கே வருகிறார் என குறித்து பலன் எடுக்கவும்.அதாவது மேசம் ராசிக்கு 7 ஆமிட பலனை சனிப்பெயர்ச்சி முதல் கொடுத்து வருகிறார் ..இப்போது சனி வக்ரம் ஆனதால் 6 மிட பலன்களை வரும் 138 நாட்களும் தருவார்.அதாவது 8.2.2012 முதல்.சரியா..?

அதன்படி பார்த்தால் மேசம் ராசியினருக்கு 6 மிடத்து சனி நன்மை தரும்.சனிப்பெயர்ச்சி ஆனது முதல் ஒண்ணும் சரியில்லை.பிரச்சினையாவே இருக்கு.கணவன் மனைவிக்குள் பிரச்சினை மேல் பிரச்சினை வருது.என சலித்துக்கொள்கிறீர்களா..இந்த நாட்களில் அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் கடன் பிரச்சினை அடையும்.தொழில் பிரச்சினை,மந்தம் விலகும்.

ரிசபம் ராசிக்காரர்களுக்கான சனி வக்ர பலன்கள்

விஜயகாந்த் நல்ல நேரம் எப்போது..? ஜாதகம் ஆராய்ச்சி பலன்கள்

விஜயகாந்த் ஜாதகம் ஆய்வு பலன்கள்;


விஜயகாந்த் பிறந்த தேதி;25.8.1952
பிறந்த நேரம்;7.00 காலை
ஊர்;மதுரை

இதன் முதல் பாகம் ஏற்கனவே விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது? என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.அதில் விஜயகாந்த் வாயால் கெடுவார் என பல மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன்.அதுதான் இப்போதும் நடந்து இருக்கிறது.நெருப்பின் மேல் அமர்ந்தது போல எதிர்கட்சிதலைவர் பதவியில் இருப்பார் என சொல்லியிருந்தேன்.அதன்படி எதிர்கட்சி தலைவருக்குண்டான எதையும் அனுபவிக்க முடியாமல் சங்கடத்தில் இருக்கிறார்.அந்த பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இவரது ஜாதகப்படி இப்போது நடக்கும் கேது திசை அறிவுக்கிரகம் புதனுடன் இணைந்து திசை நடத்துகிறது.அதனால் அறிவு ஸ்தானம் கெட்டுப்போச்சோ என்று சொல்ல முடியாது.ஐந்தில் மாந்தி இருப்பதும் அவரது தொடர் வெற்றிக்கு தடைகல்லாக இருக்கிறது.இரண்டில் இருக்கும் சந்திரன்,சனி சேர்க்கை மதியை கெடுத்ய்துவிடுகிறது.சனி இரண்டில் இருப்பது நல்ல பேச்சாற்றலை தரும்.சந்திரன் இரண்டில் இருப்பது மக்களை கவரும் பேச்சு திறனை தரும்.ஆனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகையாச்சே.அதனால் நாக்கை கடித்து கெட்டார்.ஆபாசமாக பேசி இதுவரை சட்டமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நாக்கை கடித்து ஆபாசமாக திட்டி சஸ்பெண்ட் ஆன ,தலைவர் என பெயரெடுத்தார்.

6ல் இருக்கும் ராகுவும்,இவரது லக்னம் சிம்மம் என்பதால் யாருக்கும் அடங்காத குணத்தை காட்டுகிறது.லக்னத்தில் சூரியன் ஆட்சி கடும் கோபம்,பிடிவாதத்தை தந்திருக்கிறது.

இவரது ராசிக்கு ஏழரை சனி நடந்தாலும்,பிறக்கும்போதே இவர் ஜென்ம சனியில்தான் பிறந்தார் என்பதாலும் 25.10.2012 க்குபின் கேது புத்தியில்,கடும் மருத்துவ செலவையோ அல்லது சிறைவாசத்தையோ சந்திப்பார் என சொல்லலாம்.வழக்குகள் இவர் மீது பாய வழியுண்டு.காரணம் இன்னும் 8 மாதத்தில் தொடங்கும்,கேது புத்திதான்..தான்...ஏழரை சனிதான்.

லக்னத்துக்கு 4ல் இருக்கும் செவ்வாயை சனி 3 ஆம் பார்வையாக பார்ப்பதும் மருத்துவ செலவு,விபத்து,நோய் ஏற்படுத்தும் ஒரு காரணி..இதுவே சிறைவாசத்துக்கும் வழி உண்டாக்குகிறது!

6க்குடைய சனி இரண்டில் இருப்பதும்,விரயாதிபதி சந்திரன் இரண்டில் இருப்பதும்,இவருக்கு கெட்டபெயரையே சம்பாதித்து கொடுக்கும்.

சரி இவ்வளவு காலம் எப்படி பிரபலமாக இருந்தார்..?

காரணம் 19 ஆண்டுகளாக நடைபெற்ற சனி திசை கலைத்துறையில் நல்ல புகழை வருமானத்தை கொடுத்தது.6க்குடையவன் இரண்டில் இருந்து திசை நடத்தினால் அடுத்தவன் பணம் எல்லாம் தமக்கு வரும்.

நடப்பு புதன் திசை புதிதாக எதையாவது செய்ய வைத்து ஏமாற்றம் தருவார்...அல்லது மற்றவர்களை ஏமாற்ற வைப்பார்.விஜயகாந்த் ஏமாறுவாரா...ஏமாற்றுவாரா காலம் பதில் சொல்லும்.



திருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை

திருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை

ஜோதிடம் திருமண பொருத்தம் பார்க்கும் விதிகளில் முக்கியமானதாக ராசி பொருத்தம் பற்றி சொல்லியிருக்கிறது.பெண் ராசிக்கும் ஆண் ராசிக்கும் 2,3,4,6,,12 ஆக வராமல் இருக்க வேண்டும்...

பெண் ராசிக்கு ஆண் ராசி;2 வது ராசியாக வந்தால் மரணம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 3 வது ராசியாக வந்தால் துக்கம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 4 வது ராசியாக வந்தால் ஏழ்மை
பெண் ராசிக்கு ஆண் ராசி 5 வது ராசியாக வந்தால் வைதவ்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 6 வது ராசியாக வந்தால் புத்திர நாசம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 7 வது ராசியாக வந்தால் உத்தமம்,மாங்கல்ய விருத்தி
பெண் ராசிக்கு ஆண் ராசி 8 வது ராசியாக வந்தால் அதிக குழந்தைகள்
பெண் ராசிக்கு ஆண் ராசி 9 வது ராசியாக வந்தால்செளமாங்கல்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 10 வது ராசியாக வந்தால் ஐஸ்வர்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி  11 வது ராசியாக வந்தால் சுகம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 12 வது ராசியாக வந்தால் ஆயுள் விருத்தி

பெண்ணின் ராசிக்கு 6,8 ராசியாக வருவதில் ஒரு விலக்கு இருக்கிறது.அதே போல 7 வது ராசியாக வருவதிலும் ஒரு விலக்கு இருக்கிறது.

மேசம் 6 வது ராசியான கன்னியை இணைக்கலாம்
தனுசு 6 வது ராசியான ரிசபம் சேர்க்கலாம்
துலாம் 6 வது ராசி மீனம் சேர்க்கலாம்.
கும்பம் கடகமும்,சிம்மம்,மகரமும் சேர்க்கலாம்..மிதுனம்,விருச்சிகமும் ஒத்துவரும்.இவை சுப சஷ்டாஷ்டமம் எனப்படும்.( பஞ்சாங்கம் இப்படி சொன்னாலும்,அனுபவத்தில், இதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆணின் ராசியில் இருந்து பெண் ராசியாக 6 வந்தால் எதிரி ஆகிவிடுகிறது.எனவே எப்படியிருப்பினும் இந்த ராசிகள் அடிக்கடி மருத்துவ செலவுகளை சந்திக்கின்றனர்..அல்லது.எலியும் பூனையுமாக ஈகோ பிரச்சினையில் வெறித்தனமாக சண்டை போட்டுக்கொள்கின்றனர்.)

7 வது ராசி யாக பெண் ராசியாக வந்தால் அருமையான பொருத்தம் தான்.ஆனால் கடகம்-மகரம்,சிம்மம்-கும்பம் ஆகவே ஆகாது.பொருள் நஷ்டம்,உயிரிழப்பு உடனே உண்டாகும்.ரிசபம் ராசிக்காரர் விருச்சிகம் ராசிப்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா ரிசபராசிக்காரருக்கு வாழ்வே நரகமாயிடும்...கொஞ்சம் லேட் ஆனாலும் எவ கூட ஊர் சுத்திட்டு வர்ற..? என நெத்தியடியாய் கேள்வி வரும்.

மகரம் ராசி பொன்ணை கடகம் ராசிக்காரர் கல்யாணம் கட்டிக்கிட்டா வாழ்க்கை வெறுத்து போறதுன்னா என்னன்னு இவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்.அந்தளவு வெறுத்து போய் குடிகாரரா மாறிடுவார்...


வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்


ஜோதிடம் சொல்லும் விதிகளில் முக்கியமானது திருமண பொருத்தம்.மனப்பொருத்தம் நன்றாக இருந்தால் மணப்பொருத்தமே பார்க்க வேண்டாம் என சொல்வார்கள்.ஆனால் இப்போதெல்லாம் என்ன படிப்பு,சம்பளம் எவ்வளவு..வீடு சொந்தமா இருக்கா என்பதே முக்கியமாக போய்விட்டதால் பையனும்,பொண்ணும் பழகவும்,புரிந்துகொள்ளவும் வாய்ப்பே இல்லை.நல்ல வசதியான பையன் கிடைக்கும் என்றால் சில பெண்கள் நீ யாரு என 10 வருசம் காதலிச்சு ஊர் சுத்தின காதலனையே கேட்கும் காலம் இது.

காதல்,கவிதை,சினிமா,சென்னை மெரீனா பீச் லவ் னு சுத்துறவங்க..எல்லாம் பக்குவமில்லாதவர்கள்..புத்திசாலி பொண்ணுங்க..நல்ல தகுதியான ,நல்லா சம்பாதிக்குற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கும் என நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.ரெண்டு பேரும் நல்லா சம்பாதிச்சா அப்ப அவங்க லவ் பண்ணா வெரி குட்.பையன் சும்மா சுத்திகிட்டு இருப்பான் ..பொண்ணு வேலைக்கு போகும்..ஈவினிங் ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னா அது மோசம்..

ஜாதகப்படி பொருத்தம் பார்ப்படி..?

இருவரது ஜாதகத்திலும் செவ்வாய் தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம் இருக்கான்னு பார்ப்பது முதல் படி.

இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன்,குரு,செவ்வாய்,7க்குடையவன் கெடாமல் இருக்கா என பார்ப்பது அடுத்தபடி...

கூட்டு கிரக சேர்க்கைகள் மோசமாக இருக்கான்னு பார்ப்பது அடுத்த படி.உதாரணம்..செவ்வாய்,+சூரியன்,சனி+சூரியன்,செவ்வாய்+சனி,சுக்கிரன்+ராகு,குரு+ராகு,சந்திரன்+சனி,இவைகள் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

அடுத்தபடீருவருக்கும் ஒரே திசை நடக்குதான்னு பார்க்கணும்.இருவருக்கும் ஒரே திசை நடந்தால் யோகமில்லை.கண்டம்தான்..போராட்டம்தான்..கொஞ்சநாள் கழிச்சும் திசை இருவருக்கும் சந்திக்ககூடாது...

அடுத்தபடியாக இருவர் லக்னமும் ஒண்ணுக்கொன்னு 6,8,12 ல் மறையாமல் இருக்கணும்.அப்பதான் ஒற்றுமை உண்டாகும்..அதே போல ராசியும் இருவர் ராசிக்கும் மறையக்கூடாது..!

அடுத்த படிதான் நட்சத்திரபொருத்தம் பார்க்கணும்..யோனி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்,ராசிபொருத்தம்,ஸ்ரீதீர்க்கம்,இவை மிக அவசியம்.இவை இருந்தால் கூட போதும்...திருமணம் செய்யலாம்...

யோனி பொருத்தம் என்பது இருவரது உடல் அந்தரங்க உறுப்புகள் பற்றிய ரகசியம்...ஒவ்வொரு பெண் நட்சத்திரத்துக்கும் நேர் குதிரை,யானை,குரங்கு,ஆடு என போட்டிருப்பார்கள்.அதில் ஏகப்பட்ட ரகசியம் இருக்கிறது...இதெல்லாம் அப்பெண்ணின் காம எண்ணங்கள்,உடல் உறவு கொள்ளும் முறையை யெல்லாம் விவரிக்கும் குறியீடு.

ரஜ்ஜு பொருத்தம் என்பது இருவரது ஆயுள் பற்றியது.அப்பெண்ணின் மாங்கல்யபலம் பற்றியது..எனவே இரண்டும் முக்கியம்.

ஸ்த்ரீதீர்க்கம் பெண்ணின் ஆயுள் பற்றியது...இதுவும் முக்கியம்.

இவையை பரீலித்துதான் திருமணம் செய்ய வேண்டும்.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்தால் அதற்கு ஜோதிடரோ,ஜோதிடமோ பொறுப்பாகாது!

வசதி,படிப்பு இதெல்லாம் பார்த்து இந்த சம்பந்தம் போனா வராது..என ஜோதிடரை நெருக்கி,பொருத்தம் எழுதி வாங்குபவர்கள்தான் இங்கு அதிகம்...அவர்களுக்கு அப்போதைக்கு வேலை முடியும்.ஆனால் எதிர்காலத்தின் அந்த கணவன்,மனைவி வாழ்க்கை கேள்விக்குறிதான்!!




புதன், 1 பிப்ரவரி, 2012

சனி.... நல்லவரா..கெட்டவரா..?

சனி ...நல்லவரா..கெட்டவரா..?


சனி ஜாதகத்தில் கேந்திரத்திலோ,திரிகோணத்திலோ நல்ல ஆதிக்கம் பெற்றால் சுப கிரகங்களை விட மிகவும் உயர்வான பலன்களை கொடுக்கிறது.குடிசையில் இருப்பவர்களையும் கோபுர உச்சிக்கு கொண்டு செல்கிறது.ஆனால் சனி பகை வீட்டில் நற்பலன் கொடுப்பதில்லை.

சனி ஆட்சி உச்சம் பெற்று அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் அமைகிறது.வெற்றி மேல் வெற்றி,சொகுசு வாழ்வு,இன்ப வாழ்வு மிக எளிதாக நாடி வருகிறது.உல்லாச வாழ்வு தொடங்குகிறது.ஆனால் சனி நீசம் பெற்றுக் காணப்பட்டால்,நேர்மாறான கெடுபலன்கள் கிட்டுகிறது.உடல் ஊனம்,,சோம்பலான வாழ்வு,தாழ்ந்தோர் சினேகம்,ஏற்படுகிரது.சனி பகை வீட்டில் அமையப் பெற்றால் அரசு வழியில் பகை ,தண்டனை பெறும் நிலை பிரயாணத்தால் கெடுதி சித்த பிரமை போன்ற கெடுபலன்கள் தருகிறது.

ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்புகளில் சனிக்கு முன்னும் பின்னும் சூரியன் இருந்தால் தந்தைக்கு நற்பலன் உண்டாகாது.அது போல சனி நின்ற ஸ்தானத்திற்கு முன்னும் பின்னும் சந்திரன் நின்றாலும் சனியுடன் சந்திரன் காணப்பட்டாலும் தாய்க்கு நற்பலன் உண்டாகாது.

சந்திரன் உடல்காரகன்.மனக்காரகன்..சனி முடவன்...எனவே இந்த காரகத்துவத்தையும் சனி முடக்குவான்....
சூரியன் தந்தை வழி,பூர்வீகத்துக்கும் அதிபதி..சனி அதையும் முடக்குவான்..

குரு பார்த்த இடம் கோடி புண்ணியம் சனி பார்த்த இடம் பாழ்...என்பர்.

ஆயுள் காரகனாகிய சனி ஆயுள் ஸ்தானமாகிய எட்டில் நின்றால் நீண்ட ஆயுள் உண்டாகிறது.மூன்றாமிடமும் நீண்ட ஆயுள் தரும்.

சனியும்,செவ்வாயும் இணைந்து நின்ற ஜாதகர் நீதிமன்றம் ஏறிக்கொண்டே இருக்கணும்.அடிக்கடி வாகன விபத்தை சந்திக்கணும்.எங்கியோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்பது போல வம்பு சண்டை தேடி வரும்.

பெண்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பின் இன்னும் துன்பம் தான்..ஏதாவது சுபகிரகம் பார்த்தாலோ..6,8,12 ல் மறைஞ்சிருந்தாலோ..அல்லது இவங்க ரெண்டு பேர் திசா புத்தியும் வராம இருந்தாலோ தப்பிச்சுக்கலாம்..!!

இன்னும் நிறைய இருக்கு.அப்பப்போ எழுதுறேன்..பாகம் 2 விரைவில்...