வெள்ளி, 16 நவம்பர், 2012

பழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் அற்புதம்

இன்று மூலம் நட்சத்திரம் என்பதால் குருவை,ஞானியை பத்தி எழுதனும்னு இந்த சிறப்பு பதிவு;


சுமார் 10 வருடங்களுக்கு முன்பு,பழனி இடும்பன் மலை அருகில் இருக்கும் கணக்கன்பட்டி  கிராமத்தில் மூட்டை சாமியார் இருந்தார்..நானும் என் நண்பரும் பைக்கில் சென்றோம்...ஏதோ பஞ்சாயத்து நடப்பது போல சின்ன கூட்டம்...ஒரு ஓரத்தில் அழுக்கு மூட்டை சாமியார் கயித்து கட்டிலில் அமர்ந்து இருந்தார்...கட்டிலா,தரையிலா என நினைவில்லை...அம்பாசிடர் காரில் வந்த நீதிபதி ஒருவர் பழத்தட்டுகளுடன் அவர் அருகில் போக ,சாமியார் கோபமாகி அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தார்...நானும் நண்பரும் அதிர்ச்சியானோம்..இதென்னடா வம்பா போச்சுன்னு.விசாரிச்சா அவர் ஆசிர்வாதமே இதானாம்...!

கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தோம்...எங்களை போலவே அவரை பார்க்க வந்தவர்களும் என்ன செய்றதுன்னு முழிச்சுக்கிட்டு இருந்தாங்க...கால்ல விழுந்து விபூதி வாங்கிட்டு போலாம்னு வந்தவங்கதான்..கிட்ட போனாலே அசிங்க அசிங்கமா வார்த்தை வருதே..அது கலெக்ட்டரா இருந்தாலும் அதான்..

அவர் நடக்க ஆரம்பித்தார்.அவர் பின்னால் போனோம்..நாங்கள் மொத்தம் 10 பேர் இருந்தோம்...இடும்பன் மலைக்கு வந்தவர் மலை ஏற ஆரம்பித்துவிட்டார்..பின்னால் நாங்களும் ஏறினோம்..ஒரு பெரிய உருண்டை கல் 10 டன் எடை இருக்கும்...சும்மாதானே இருக்கீங்க..இந்த கல்லை நகத்துங்க..என சொல்லிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல உட்கார்ந்துவிட்டார்..எனக்கும் நண்பருக்கும் சிரிப்பு வேற..அது குட்டி மலை மாதிரி இருந்துச்சி..அதை தள்ளுன்னா...நாங்க 10 பேர் நடக்குறதா இது...

எல்லோரும் கல்லை தள்ளுவது போல செய்தோம்..பெண்களும் 4 பேர் இருந்தனர்...யாராலும் சிறு அசைவை கூட கொடுக்க முடியாது என தெரியும்...அதுல ஒருத்தர் ஒரு மூங்கில் முட்டு கொடுத்து தூக்கினா தள்ளிடலாம்ங்க..சாமி சொன்னா அதுல அர்த்தம் இருக்கும்..வாங்க தள்ளலாம்னார்..எங்களுக்கு சிரிக்கிறதா...கோபபடுறதான்னு தெரியலா..ஒரு இத்துப்போன மூங்கிலை ஒருத்தர் எடுத்து வந்து முட்டுக்கொடுத்து தள்ளினார்...

இது ஆகறதில்ல..என நானும் என் நண்பரும்...மலையை விட்டு கொஞ்சம் இறங்கி ,அவர் திட்டாத அளவுக்கு பாதுகாப்பா நின்னு,சில சமயம் அடிக்கவும் செய்வாராம்..அவரை பார்த்து தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டு ,விழுந்து கும்பிட்டு பார்த்தோம்..எங்களை பார்த்தார்..லேசாக சிரிப்பது போல இருந்தது..இதுவே போதும் என கிளம்பிவிட்டோம்!!

இவர் அற்புதங்கள் பல செய்தவர் என பழனி மக்கள் நிறைய சொல்கிறார்கள்...பழனி முருகன் தரிசனம் சிலருக்கு இவர் மூலம் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள்...எல்லா அஷ்டமா சித்துகளும் அறிந்தவர் என சொல்கிறார்கள்...எப்படியோ ஒரு சித்தரை தரிசித்தோம் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தோம்...

சற்குருவே போற்றி!!!

வியாழன், 15 நவம்பர், 2012

நாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..?-மகா பெரியவர் காட்டும் ஆதாரம்


மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாக லோகம்தான்

இதயம் பேசுகிறது" மணியன் ஒருமுறை மெக்ஸிகோ செல்ல ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கும்போது, பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். எப்போதுமே வெளிநாட்டுப் பயணம் போகும்முன் பெரியவாளை தர்சனம் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

"மெக்ஸிகோ போறதுக்கான வேலை இருக்கு... பெரியவா அனுக்ரகம் பண்ணனும்" வினயமாக மணியன் நமஸ்கரித்தார்.

"க்ஷேமமா போயிட்டு வா! இந்த.....பூகோள உருண்டையை எடுத்து பாத்திருக்கியோ? இல்லேன்னா எடுத்துப் பாரு! இந்தியாவுக்கு நேர் கீழ நீ போகப்போற நாடு இருக்கும்!" மணியனுக்கோ ஒரே வியப்பு! இதுவரை அவர் அப்படி ஒரு கண்ணோட்டத்தில் க்ளோபைப் பார்த்ததில்லை.

"நம்ம புராண இதிஹாசங்கள், ராஜா கதைகள்ள எல்லாம் பாதாளலோகம்...ன்னு சொல்றோமே! அப்டி வெச்சுக்கோ! பாதாள லோகத்லதான் நாகலோகம் இருக்கு. நாகர் வழிபாடு உண்டு, நரபலி உண்டு...நம்மளையெல்லĬ 6;ம் விட ரொம்ப பழமையான நாகரீக ஆட்சி முறை, இதுமாதிரி எல்லாமே உண்டு..." மணியன் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டார்!

"...நமக்கு உலோகங்களைப் பத்தின நாகரீகம் தெரியறதுக்கு முன்னாலேயே அவாளுக்கு தெரிஞ்சிருக்கு! சுமார் ரெண்டாயிரம் வர்ஷத்துக்கு முன்னாலேயே ரொம்ப நாகரீகத்தோட இருந்திருக்கா...."

ஆசிர்வதித்து அனுப்பினார். மெக்ஸிகோ நாட்டின் தேசீயச் சின்னமே பாம்பை அடக்கும் கருடன்தான்! அங்கே இன்றும் நாகங்களை வழிபடுவார்கள். பிரமிட் கோபுரங்களில் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவங்களும், கண் உள்ள இடத்தில் கிளிஞ்சல்களை வைத்து தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். மழையை உண்டாக்கும் தேவனுக்கும் இங்கே உருவங்கள் உண்டு. ஹிந்துக்களைப் போல், இவர்களும் இயற்கையை வழிபடுகிறார்கள். 9000 வர்ஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் வில் அம்பு, மண், உலோக பாத்திரங்களை உபயோகித்து இருக்கிறார்கள். 3000 வர்ஷங்களுக்கு முன்பே "காலண்டரி" என்ற அட்டவணையை உபயோகித்து இருக்கிறார்கள். மெக்ஸிகோவின் ஆதிகுடிமக்கள் [ரெட் இண்டியன்ஸ்] சூரியனை அடிப்படையாக வைத்து 20 நாளுக்கு ஒன்றாக 18 மாசங்களை உருவாக்கினார்கள். ஹிந்துக்களைப் போலவே சூரியன், பூமி, ஜலம், வாயு,அக்னியை வழிபடுகிறார்கள். இதற்கான பண்டிகைகளும் மாசாமாசம் உண்டு. கலைகளுக்காக ஒரு பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். 20 லக்ஷம் மக்கள் 1000 வர்ஷங்களுக்கு முன்னால் நிர்மாணித்த "மாயன் " புதைவுகளில் எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள்தான்!


மாயன் நாகரீகத்தில் உள்ள கலை, கலாச்சாரம் எல்லாமே மத அடிப்படையில் உண்டானதுதான். பிறப்புக்கு முன்னும் பின்னும் ஆத்மாவின் நிலை என்று ஒன்று உண்டு என்று அவர்களும் நம்பினார்கள். உலகில் வாழும்போது உண்டாகும் வெற்றி, தோல்வி, வாழ்கை முறை எல்லாமே க்ரஹங்களின் நிலையைப் பொருத்தது என்று நம்பினார்கள்.

மணியனின் மெக்ஸிகோ பயணக் கட்டுரையைப் படித்த ஒரு அன்பர் "மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாகலோகம்தான்..ன்னு பெரியவா சொன்னாளே! அது அப்டியே இருக்கு போல இருக்கே!" என்றார்.

"ஆமா...அது ரொம்ப நெஜம். அதோட,நம்மளோட சனாதன தர்மம் உலக அளவில் எல்லா இடத்திலும் இருந்தது.ன்னு கூட பெரியவாள்ளாம் சொல்லுவா. அது நெஜம்தான்னு புரிஞ்சுண்டேன்" என்றார் மணியன்.
 

சனி, 10 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மேசம்

வரும் 23.12.2012 முதல் ஒன்றரை வருசத்துக்கு,ராகு உங்க ராசிக்கு 7ல் பெயர்ச்சியாகி வருகிறார்..இதுவரை 6ல் இருந்தார்..அமைதியா போய்க்கிட்டு இருந்துச்சு..இப்போ 7ஆம் இடம் அதுவும் அங்க ஏற்கனவே சனி வேறு இருக்கார்..இரண்டு பேரும் சேர்ந்து 7ல் இருக்காங்க.7ஆம் இடம் கூட்டுறவு,நல்லிணக்கம்,காதல்,மணவாழ்க்கை,தொழில் பார்ட்னர்,நட்பு,என்பதை குறிப்பது..இவற்றில் எல்லாம் குளறுபடி,குழப்பம்,பிரச்சினை வரலாம்

பாரப்பா பன்னிரண்டு எட்டு ஏழில்
பலமுள்ள படவரவு அதிலே தோன்ற
வீரப்பா வேல்விழியால் கலகம் மெத்த
விளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்லு

என புலிப்பாணி முனிவர் பாடியிருக்கிறார்

பெண்ணால் கலகம்,மனைவியால் குதர்க்கம்,மணவாழ்க்கையில் குழப்பம்,கணவனுக்கு நோய்,உடல் பாதிப்பு என்பதே இதன் கருத்தாகும்..


-----------------------------------





ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;ரிசபம்



திருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 அன்று மாலை விருச்சிகம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார்..

ரிசபம் ராசிக்கு இது 6 வது ருண ரோக ஸ்தானம் ஆகும்..ராகு இங்கு மறைந்துவிடுவது உங்களுக்கு

யோகமான காலம் எனலாம்..அதாவது 6ல் ராகு 12ல் கேது...இருக்கிறார்கள் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அல்லவா.அதன் படி இது நல்ல பலன்களையே கொடுக்கும்..கடன் தொல்லைகள்,உடல் பாதிப்புகள்,மனக்குழப்பங்கள் நீங்கும்..குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்..பணம் தாராளமாக வந்து சேரும் எதிரிகள் பிரச்சினை இருக்காது...

கருராகு ஆறில் நிற்க
கடுகியே பகைநோய் ஏகும்
வருவிடர் நில்லாதோடும்
வன்மையாய் வெற்றி சேரும்

பகை ருணரோக ஸ்தானமான 6ல் 12ல் ராகு கேது வருவதால் விரோதம்,விவகரம்,வழக்கு,போட்டி,எதிர்ப்பு ஆகியவற்றை முடக்கியும் முறியடித்தும் வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு முடியும் என புலிப்பாணி முனிவர் ஜோதிடம் சொல்கிறது!!



வெள்ளி, 9 நவம்பர், 2012

ஆவி ஜோசியர் சொன்னது பலித்தது

ஆவி ஜோசியர் சொன்னது பலித்தது

இந்த வாரம் குமுதத்தில் எங்கள் (சித்தோடு)ஊரில் 15 வருடங்களுக்கு முன்பு இருந்த ஆவி ஜோசியர் சாமிநாதன் பற்றி செய்தி வந்திருக்கிறது...1984ல் ஒருவருக்கு ஆவி மூலம் ஜோதிடம் கேட்டு பலன் சொல்லி இருக்கிறார்..இன்னும் 12 வருடம் கழித்து நீ சினிமா துறைக்கு செல்வாய்...அதன் பின் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் நீ கொல்லப்படுவாய் என சொல்லி இருக்கிறார்..ஜோதிடம் கேட்டவருக்கு ஆல்ப்ஸ் மலை எங்கிருக்கிறது என்பது கூட அப்போது தெரியாதாம்..சரியாக 15 வருடம் கழித்து அவர் சினிமாவில் கனவே கலையாதே என்னும் சினிமா மூலம் நுழைந்திருக்கிறார்..அவர் பெயர் தேவி பாரதி எழுத்தாளர்...அதே போல போனமாதம் சுவிட்சர்லாந்தும் சென்றிருக்கிறார்...அங்குள்ள ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் தான் தங்கி இருந்திருக்கிறார்..நல்லவேளை கொல்லப்படவில்லை..பேட்டி கொடுத்திருக்கிறார்;-)

------------------

சில பேர் பூர்வீக சொத்து,தந்தை,முப்பாட்டன் சொத்து வெச்சி பொழச்சுக்கிறாங்க...இதுதான் பாக்கிய ஸ்தானம் நல்லாருக்கணும் என்பது..(உதாரணம் கலைஞர் குடும்பம் ;-))சில பேர் சுயமா சம்பாதிச்சு பொழச்சுக்குவாங்க...உதாரணம் கலைஞர் தான் ;) இதுக்கு லக்னாதிபதி,தனாதிபதி நல்லாருக்கணும்..தன்னம்பிக்கையால் ஜெயிப்பவர்கள் இவர்கள்..இவர்கள் தான் தன்னம்பிக்கை ஓவராகி போய் சாமியாவது பூதமாவது என்பார்கள்...சில பேர் மனைவி வந்த யோகத்
தால் முன்னேறுவார்கள் 7ஆம் இடம்,சுக்கிரன் நல்லாருக்கணும்..எல்லாம் என் பொண்டாட்டி ராசி என்பார்கள்...சில பேர் குழந்தையால் முன்னேறுவார்கள் என் பொண்ணு பொறந்தா என் கஷ்டமெல்லாம் தீர்ந்துடுச்சி என்பார்கள்...சில பேர்க்கு இரண்டவது குழந்தை பிறந்த பின் முன்னேற்றம் உண்டாகும்...இரண்டாவது பொண்ணுக்கு பின்னாடி தான் இவ்வளவு சொத்து சம்பாதிச்சேன் என்பார்கள்...சிலருக்கு இது எதுவுமே கிடைக்காது...அவர்கள்தான் கடைசி வரை துன்பத்தில் வாடுகிறார்கள்..விதி,மதி,பதி கெட்டவர்கள்!!



---------------------------

ஒவ்வொரு கிரகத்தின் கதிர் வீச்சும் ,ஈர்ப்பு சக்தியும்,பூமியில் கூடுதல் குறைதல் பொறுத்து அச்சமயத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல்,மூளை,செல்களில் பதிவாகி குணாதிசயமாக மாறுகின்றன...சுக்கிரன் ,குரு,செவ்வாய் கிரகங்கள் நாம் பிறக்கும்போது பூமியில் எவ்வளவு கதிர்வீச்சின் அளவு இருந்ததோ அதை பொறுத்து நம் ஜாதக கட்டத்தில் கிரக பலம் குறிக்கப்படுகிறது...அதை பொறுத்து நம் வாழ்வில் அந்த கிரகங்களின் காரகத்துவம் கூடும் குறையும்..சந்திரன் தாயின் நிலை குறிக்கும்...சூரியன் தந்தை நிலை குறிக்கும் செவ்வாய் சகோதரன் நிலை புதன் தாய்மாமன் குறிக்கும்..இவர்களுடன் உங்கள் பாசம்,ஒற்றுமை எப்படி இருக்கும்..நாம் பிறந்த பின் இவர்கள் நிலை எப்படி இருக்கும் என அறிய முடியும்..

--------------------



செவ்வாய் கிரகத்தின் நிலை பொறுத்து ஒரு பெண்ணின் கணவன் நிலை அறிய முடியும்..சுக்கிரன் அமைப்பை பொறுத்து மனைவி நிலை அறிய முடியும்...நம்மால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்...பணம் தங்குமா அழியுமா...சொத்துக்கள் சேர்க்கை உண்டா இல்லையா என்பதை லக்னத்துக்கு இரண்டாம் அதிபதியையும்,சுக்கிரனையும் பார்த்து பலன் சொல்லலாம்...




ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்

ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்

திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் நந்தன வருடம் மார்கழி 8 ஆம் நாள் 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதி பரணி நட்சத்திரம் கூடிய நாளில் மாலை மணி 6.21 க்கு ராகு கேது பெயர்ச்சி  மாற்றம் உண்டாகும்...சில பஞ்சாங்கங்கள் 5.47 என குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்த ராகு கேது பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சியை விட பலம் அல்ல என்றாலும் சூரியன்,சந்திரனை விட வீரியம் உள்ளதாக அவர்களையே பல சமயம் முடக்கி விடுவதால் கிரகணம் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டி இருக்கிறது...

பூமி சூரியனை சுற்றும் வட்டப்பாதையும் ,பூமியை சந்திரன் சுற்றும் வட்டப்பாதையும் விண்வெளியில் மேலும் கீழுமாக குறுக்கிட்டு வெட்டுகின்ற சந்திப்பு மையங்கள்தான் (மின்காந்த அலைகளின் உராய்வு மோதல்கள்தான்)ராகு -கேது என நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்...சந்திரன் மேல் நோக்கி போகும் பாதை பூமியின் பாதையை சந்திப்பது ராகு வாகும்..கீழ்நோக்கி வரும் சந்திரனின் பாதையானது பூமியின் பாதையை சந்திப்பது கேதுவாகும்..

ராகு கேது இரண்டும் நிழல் கோள்கள் ஆகும்...அதாவது கிரகங்கள் இல்லை..வெறும் நிழல்களே...மின்சாரம் எப்படி கண்ணால் பார்க்க முடியாது ஆனா தொட்டா தூக்கி அடிக்குமே.அது மாதிரிதான்...இரண்டும் குரூரமான கிரகங்கள்...இரண்டுக்கும் வடிவம் பாம்பு உருவம் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்..

திருவாதிரை,சதயம்,சுவாதி,அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் அதாவது ராகு கேது நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பாம்பு மாதிரி சீறுவதற்கும்,முன்கோபம்,பிடிவாதம் அதிகம் கொண்டு செயல்பட இதுதான் காரணம்...

கேது நட்சத்திரங்காரங்க எப்பவும் ஆன்மீக ஆராய்ச்சிதான்..இல்லைன்னா யாராவது ஒரு குருவுக்கு பயங்கர விசுவாசமா இருப்பாங்க..குரு புகழை பரப்புவதில் இவங்களை மிஞ்ச ஆள் இல்லை ...இதன் அடிப்படை காரணம் அதிக குழப்பம்,பயம்...எதையாவது கெட்டியா பிடிச்சி நம்பிக்கை முழுக்க அதன் மீது வைத்து வாழ்தல்தான் காரணம்..

ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது..இவை ராசிமண்டத்தில் பின்னோக்கி நகரும்..

விருச்சிகம் ராசியில் இப்போது இருக்கும் ராகு துலாம் வீட்டிற்கும்,ரிசபம் ராசியில் இருக்கும் கேது மேசம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகப்போகிறார்கள்....

சனிக்கு எப்படி பலன்களோ அதன்படி இதை பார்க்கலாம்...அதாவது நல்லதோ கெட்டதோ சனி தரும் பலன்கள் ராகு கேது தருவர்...

ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்களை விரைவில் எழுதுகிறேன்...