புதன், 21 நவம்பர், 2012

கேரள பெண்ணுக்கு கண்பார்வை கொடுத்த மகா பெரியவர்


கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.


அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும் அவளின் பார்வை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி 'கவலைப்படாதீங்க கண்பார்வை கிடைச்சுடும். ஆனால் நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி கும்பகோணம் திருவிடைமருதூர்னு புண்ணிய தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்'னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி வைத்தீஸ் வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில் குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டிய தும்இ ஆரத்தி எடுத்துக்கொண்டவள்இ தட்டில் நூறு ரூபாய் தட்சணை வைத்தாளாம். குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர் 'அம்மா... இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு' என்று சொல்லி யிருக்கிறார். இவளும்இ 'பரவாயில்லை... எடுத்துக்கோங்க' என்றாளாம். உடனே அந்தக் குருக்கள் 'நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?' என்று கேட்டாராம். அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக் குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறார்கள். 'காஞ்சிபுரத்தில் இருக்காரே சங்கர மடத்தில்... அவரை தரிசனம் செய்யுங்கோ' என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.

இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்றுவிட்டு அப்படியே காஞ்சிபுரத்துக்கு வந்தாளாம். அன்று சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரசாதம் எல்லாம் அனுப்பிவிட்டு மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு தனது நிலைமையை விவரித்தாள். வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத் தையும் கண்கலங்கச் சொன்னாள்.

உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா 'என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டயே கேளுங்க!' என்றார். அத்துடன் அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மகா பெரியவா.

அதே நேரம் அந்தப் பெண் 'குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!' என்றாளாம் சத்தமாக... பரவசம் பொங்க!

ஆமாம்... காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. 'நம்பினார் கெடுவதில்லை... இது நான்கு மறைத் தீர்ப்பு' என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!
காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும்இ வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மகா பெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.

ஆனால் இதுகுறித்து மகா பெரியவாளிடம் கேட்டபோதுஇ அவர் என்ன சொன்னார் தெரியுமா?

'என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன்இ உன்னோட நம்பிக்கைஇ நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாட்சியோட கருணை... எல்லாம்தான் காரணம்!' என்றார்'' எனக் கண்கள் பனிக்க விவரித்த பாலு இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.

''பக்தர் ஒருவர் வெளிநாடு போயிட்டு வந்திருந்தார். அவருக்குப் பெரியவா கிட்ட அசாத்திய பக்தி. பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் வந்திருந்தார். தரிசனம் எல்லாம் ஆச்சு. ஆனால்இ அவருக்குப் பெரியவா தீர்த்தம் கொடுக்கலை (கடல் கடந்து போயிட்டு வந்தா தீர்த்தம் கொடுக்க இயலாது).

பக்தருக்கு மிகுந்த வருத்தம். கிட்டத்தட்ட ஒருவாரமா சாப்பிடவும் பிடிக்காமல் மனம் வாடிக் கிடந்தார். மேலும் ஒரு நல்ல காரியம் சிராத்தம் போன்றவற்றிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த பக்தரின் நிலைஇ அன்பர்கள் சிலரது மூலம் பெரியவாளுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர் ஒரு ஸனாதன மடத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து விலகி எதுவும் செய்ய முடியாதே!

அதே நேரம் அந்த பக்தரை அப்படியே விட்டுவிடவும் முடியாது. மகா பெரியவா ஒரு வழி செய்தார். மணக்கால் நாராயண சாஸ்திரிகளை அழைத்தார். அவரிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து 'இதை உடைத்து எடுத்துக் கொண்டு வா; இளநீர் கீழே சிந்தாமல் கவனமாக உடைக்க வேண்டும்' என்றார். அவரும் அப்படியே தேங்காயை உடைத்து எடுத்து வந்தார். அதைத் தொட்டு ஆசி வழங்கிய பெரியவா அந்த பக்தரைக் கூப்பிட்டுஇ 'இதோ தீர்த்தம். இந்த இளநீரை வாங்கிக்கோ!' என்றார். பக்தருக்கு அளவில்லா மகிழ்ச்சி; பெரியவா தீர்த்தம் கொடுத்துட்டார்னு பரம சந்தோஷம். ஒரு வாரம் காத்திருந்தது வீண்போகவில்லை என்று அவருக்குத் திருப்தி.

மகா பெரியவாளுக்கோஇ தானும் சம்பிரதாயத்தை மீறி (நேரடியாக) தீர்த்தம் கொடுக்காமல் தேங்காயை உடைத்து அதன் இளநீரைத் தந்து பக்தரை மகிழ்வித்த நிம்மதி.

ஆமாம்... மகா பெரியவா எதைச் செய்தாலும் அதில் மற்றவர்கள் நலனே உள்ளடங்கி இருக்கும்.

குடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..? ஜோசியரா..?

ஜோசியம் பார்த்து திருமண பொருத்தம் பார்த்துதான் கல்யாணம் பண்ணி வெச்சோம்...இப்படி கல்யாணம் முடிஞ்சு அடுத்த மாசமே டைவர்ஸ் கேட்டு இரண்டு பேரும் கோர்ட்ல நிற்கிறாங்களே என பொண்ணு வீட்டுக்காரங்க புலம்புவது வழக்கம்...


கிரகங்கள் செய்யும் சதியில் ஜோசியரும் மாட்டிக்கொள்வார்..அவர்தானே பொருத்தம் பார்த்தார்..ஆமாம் ஆனா ஜோசியர்கிட்ட ஜாதகம் கொடுத்ததும்,எங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சுங்க..பொண்ணுக்கும்,மாப்பிள்ளைக்கும் அதை விட புடிச்சு போச்சி..உங்கக்கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்ட்ட்டு போலாம்னுதான் வந்தோம் என நெருக்கடி கொடுத்தா அந்த அப்பாவி ஜோசியரும் என்ன செய்வார்..? ஓரளவுக்கு பொருத்தம் வந்தா சரி.அதான் நட்சத்திர பொருத்தம் இருக்கே..செவ்வாய் தோசமும் பொருந்துது..நாகதோசமும் பொருந்துது என்றுதான் சப்பைக்கட்டு கட்டுவார்...

பொண்ணும் பையனும் பெரிய வேலையில இருக்காங்க..இரண்டு பக்கமும் கோடிக்கணக்குல சொத்து இருக்கு...நட்சத்திர பொருத்தமும் 7 பொருத்தம் இருக்கு..அதைவிட என்ன வேணும்..? இன்னும் இருக்குங்க...பையன் ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கிரகம் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கு..பொண்ணு ஜாதகத்துலியும் 7 ஆம் அதிபதி என்ன ஆனார்ன்னு பார்க்கணும்..பொண்ணு ஜாதகத்துல 7 ஆம் அதிபதி கேதுவுடன் சேர்ந்தாலோ,6,8,12 ல் மறைந்தாலோ,6,8,12க்குடையவன் 7ல் இருந்தாலோ பிரிவு நிச்சயம்...இவனுக்கும் எனக்கும் ஒத்தே வராதுன்னு பொண்ணு சொல்லிடும்..இவ மூஞ்சியில இனி முழிக்கவே மாட்டேன்னு பையன் சொல்லிடுவான்..அதையும் மீறி சேர்ந்து இருந்தா சிவாஜி படத்துல ரஜினி ஜாதகத்தை பார்த்துட்டு ஜோசியர் சொல்வாரே அதான் பலன்...பொருள் அழிவு..உயிருக்கு கண்டம்,தீரா வியாதி...

அதான் 7 பொருத்தம் இருக்கே அதையும் மீறியா வரும்..? வரும்..அது நட்சத்திர பொருத்தம் மட்டும் தான் அதையும் மீறி உங்கள் ஜாதக பலன் இருக்கு..நட்சத்திரத்தை விட ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் வலிமை பெரிது.

தொடரும்------------------

செவ்வாய், 20 நவம்பர், 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி

ராகு கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி 23.12.2012 மாலை 6 மணி முதல் நிகழ இருக்கிறது இதுவரை விருச்சிகத்தில் உலா வந்த ராகு துலாத்திலும்,ரிசபத்தில் இருந்து வந்த கேது மேசத்திலும் மாற இருக்கிறார்கள்...அதன் பலன்களை எழுதி வருகிறேன்..அந்த வரிசையில் சிம்மம்,கன்னி ராசி பலன்கள்;

சிம்மம் ராசி பலன்;

மூன்றதனில் கருநாகம் கூடி நிற்க
மூண்டெழுவான் முன்னேறிப் பகை தீர்ப்பான்
சான்றிதனை அறிவாய்நீ செகத்தில் என்றும்
ஜெயம் போகம் கீர்த்திதனைப் பெற்று வாழ்வான்’’

என புலிப்பாணி சித்தர் சொல்கிறார்...முயற்சி செய்து தோற்று போனவர்களுக்கு முயற்சி செய்யாமலே வெற்றிகள் தேடி வரும் காலம் இது.இதுவரை இருந்து வந்த எதிர்ப்பு,பகை,வழக்கு,கடன்,பணி செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் தொல்லை,கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினை அனைத்தும் விலகும் காலம் இது..ராகுவை போல கொடுப்பார் இல்லை என்பார்கள்..ராகு பலம் மிக்கவர்...துணிச்சல் என்றால் முரட்டு துணிச்சல் ராகுவால் மட்டுமே முடியும்..அதுவும் வீரிய ஸ்தானத்தில் இருந்தால் கேட்கவா வேணும்...ஆதாயம் நிறைய உண்டு...சனியும் விலகி விட்டதால் தைரியமாக செயல்படுங்கள்..நல்லதே நடக்கும்...

கன்னி;

கரும்பாம்பு ரெண்டில் நிற்க
கடும்பேச்சு குடும்ப பேதம்
வரும் செல்வம் தடங்கும் அன்றும்
வழிமாறி செல்வன் தானே....’’

பாடலை படித்தவுடன் பயம் கொள்ள வேண்டாம்...ராகு இரண்டில் இருந்தால் பணம் வரவில் தடங்கல் ஆகும் அல்லது ஏதேனும் வழியில் பணம் பெரிய அளவில் விரயம் ஆகும் என்பதுதான் பொருள்...கெட்ட செலவு வரும் முன் நாமாகவே நல்ல செலவை செய்து விட்டால் நல்லதுதானே..குரு பலமும் இருப்பதால் வீட்டில் சுப காரியத்தை நடத்துங்கள்..நிலம் வாங்குங்கள்..வீடு கட்ட துவங்குங்கள்.தொழிலில் முதலீடு செய்ய துவங்குங்கள்..

ஏற்கனவே கடன் பிரச்சினையில் இருக்கேன்..இதுல இது வேறயா என்றால்...வேறு வழியே இல்லை..பட்ட காலில் தான் படும்...ஏழரை சனி முடியும் வரை சமாளிக்கத்தான் வேண்டும்...கவனமாக செயல்படுங்கள்..துர்க்கையை செவ்வாய் தோறும் வணங்கி வாருங்கள்!!!


திருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்

திருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்


திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவரது ஜாதகத்தையும் ஜோசியரிடம் காண்பித்து சிலர் பொருத்தம் பார்ப்பார்கள்...ராசிக்கட்டமும் பொருந்தனும்..இருவருக்கும் நல்ல திசையும் நடக்கணும் என நினைப்பவர்கள் இவர்கள்..

சிலர் பெண் நட்சத்திரமும்,பையன் நட்சத்திரமும் மட்டும் சொல்லி பொருந்துமா சார் என்பார்கள்...இவர்கள் நட்சத்திர பொருத்தம் இருந்தால் போதும் ராசிக்கட்டத்தையெல்லாம் பார்த்தா அதுல கோளாறு...இதுல கோளாறு என சொல்லிடுவார்..அப்புறம் நல்ல இடம் தட்டி போயிடும் என அவசரத்தில் இருப்பார்கள்...ஓகேன்னு சொன்னா போதும்..ஜோசியத்தை சும்மா ஃபார்மலிட்டிக்கு ஊறுகாய் போல தொட்டுக்கொள்பவர்கள் இவர்கள்..இது மட்டும் எதுக்கு..? அதையும் இவர்கள் விட்டுடலாம்..படிப்புக்கு படிப்பு,வேலைக்கு வேலை ,சொத்து சொத்து என பொருத்தம் பார்த்தாலே போதுமே..இவர்களை போன்ற ஆட்களுக்கு..?

கோடிக்கணக்குல பணம் இருக்கு பையனுக்கு...என கிளி போல பொண்ணை அவனுக்கு கட்டி கொடுத்தார்கள்..பணம் இருக்கு..ஆனா ஆம்பளைக்கு முக்கியமானது அவன்கிட்ட இல்ல..அந்த பொண்ணுக்கு மகாராணி மாதிரி எல்லா சுகமும் கிடைச்சது..ஆனா பருவ பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய சுகம் கிடைக்கல..விளைவு...அவங்க வீட்டு கார் டிரைவர் தான் அதை கொடுத்தான்....என்ன செய்றது..நிறைய வீடுகளில் இன்று அதுதான் நிலைமை..

உண்மையான காதல் 90 சதவீதம் தோற்று விடுகிறது..ஆனால் கள்ளக்காதல் 90 சதவீதம் ஜெயித்து விடுகிறது என பேஸ்புக்கில் டிமிட்ரி எனும் நண்பர் எழுதியிருந்தார்....பெரும்பாலான கள்ளக்காதல்களுக்கு முக்கிய காரணம் உடல்,மன பொருத்தம் இல்லாத தம்பதிகளை சேர்த்து வைப்பதுதான்...!!

யோனி பொருத்தம் என்பது இருவரது தாம்பத்ய சுகம் பற்றி உடலுறவு நிலை பற்றி சொல்லக்கூடிய ஜோதிடத்தில் முக்கிய பொருத்தம் ஆகும்...ராசி பொருத்தம்,கண பொருத்தம் எல்லாம் இருவருக்கும் மன ரீதியாக உணர்வு ரீதியாக ஒத்து போவார்களா என நம் முன்னோர் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும் ஆய்வு செய்து எழுதியது ஆகும்..

இருப்பினும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று ஒவ்வொரு ஊரிலும் ஓராயிரம் பேர் இருக்கிறார்கள்...எனவே பிறந்த ஜாதகத்தில் லக்னத்தையும்,சுக்கிரனையும்,செவ்வாயையும்,7ஆம் இடத்தையும் ஆய்வு செய்து இருவர் ஜாதகத்தில் நாலாம் இடம் எனும் சுக ஸ்தானம்,ஒழுக்க ஸ்தானம் எப்படி...? இருவரின் தாய்,தந்தையர் நிலை அறிந்து திருமணம் செய்வது நல்லது..

ஆணுக்கு 3 ஆம் இடம்..வீரியம்..அவன் உடலுறவு கொள்ள தகுதியானவன் தானா கண்டு பிடிக்கும் இடமாக இந்த ஸ்தானத்தை ஜோதிடம் சொல்கிறது.எட்டாமிடம் ஆண் உறுப்பு பற்றி சொல்வது எட்டு கெட்டால் கொட்டை போச்சு..என கிராமத்தில் சொல்வார்கள்....இந்த ஸ்தானங்கள் ஆண் ஜாதகத்தில் நன்றாக இருக்கா என பார்த்துதான் பெண்ணை கட்டிக்கொடுக்கணும்..

பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் இடத்தை கொண்டு ஒழுக்க நிலையை கண்டறியலாம்...தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்கள்...தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள்..அது போல பெண் ஜாதகத்தில் நான்காம் இடம் அப்பெண்ணின் ஒழுக்கத்தையும் சொல்கிறது அவளது அம்மாவை பற்றியும் சொல்கிறது...அது போல செவ்வாய் நீசம்,வக்ரம் இல்லாமல் ராகு,கேதுவுடன் சேராமல் இருக்கணும்..சேர்ந்திருந்தா..? கணவன் டம்மிதான்..

திருமண பொருத்தம் பார்க்கும்போது எத்தனையோ உண்மைகள் வெளிப்படும்..அதையெல்லாம் தெரிவிக்காமல் சில ஜோதிடர்கள் ,இது ஒரு ஓட்டை வாய்..இது ஒரு உளறுவாய் இரண்டும் சேரட்டும்..என்றோ...இது ஒரு ஊர் சுத்தி ,இது ஒரு ஊரை முழுங்கி இரண்டும் சேரட்டும் நமக்கு என்ன..என மனதுக்குள் நினைத்தபடி சேர்த்து வைப்பார்கள்...அருமையான பொருத்தம் என்றும் சொல்லி விடுவர்..

ஒரு ஜோசியரிடம் பேசியபோது..அவர் சொல்றார்..அந்த பொண்ணுக்கு கல்யாணத்து முன்னாடியே கசமுசா ஆகிடுச்சி ஜாதகத்தை பார்த்தா தெரியுது...அவன் ஜாதகத்தை பார்த்தா தெருவுல இரண்டு சின்ன வீடு இருக்கும் போலிருக்கு..இந்த இரண்டும் சேர்ந்தா இதுக்கு தெரியாம அது போகும் அதுக்கு தெரியாம இது போகும்..உன்னை நான் கண்டுக்க மாட்டேன்...என்னை நீ கண்டுக்காதே னு தான் பொழப்பு ஓடும் நல்லா தெரியுது ...அதனால அருமையான பொருத்தம்னு சொல்லி அனுப்பிட்டேன் என்றார்..

ஜோதிடர்கள் காட்டும் அலட்சியம் சில அழகான,தெய்வாம்சம் பொருந்திய வர்களையும், சாக்கடை போன்றவர்களுடன் கலக்க செய்து விடுகிறது!!



ராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்

ஜோதிடம்;ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மிதுனம்,கடகம்


மிதுனம் ராசி பலன்;

பாரப்பா இன்னொன்று பகரக் கேளு
பஞ்சமத்தில் கருநாகம் அமைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம் 
தீர்ப்பதற்கு வகைவிவரம் சொல்வேன் மைந்தா
கூரப்பா கோதையுமே அரசு சுத்தி 
குற்றமில்லான கன்னியர்க்கு நன்னீராட்டி
வீரப்பா விலகுமடா நாகதோசம் 
விதியுள்ள ஜென்மனவன் பிறப்பான் பாரே’’

என புலிப்பாணி சித்தர் பாடுகிறார்....

ராகு 5ஆம் இடத்தில் அமரும்போது புத்திர தோசம்,நாகதோசம் என்கிறார்..இது பிறந்த ஜாதகத்தில் ராகு லக்னத்தில் அமர்ந்த பலனாக எடுத்துக்கொள்ளலாம்...பொதுவாக ராசியாகிலும்,லக்னமாக இருந்தாலும் 5ல் ராகு வருகிறார் என்றால் பூர்வபுண்ணிய தோசம்,நாகதோசம் எனலாம்..இதன் பலன் என்ன..? 5ஆம் இடம் அறிவு ஸ்தானம்,முன்னோர் ஸ்தானம்,வெற்றி ஸ்தானம்,லட்சுமி ஸ்தானம் ,தாய்க்கு தன ஸ்தானம்,தகப்பனுக்கு அஷ்டம ஸ்தானம் எனப்படும்...இந்த இடத்தில் ராகு நிழல் கிரகம் அமரும்போது இவை எல்லாம் பாதிக்கப்படும்...குழந்தைகளால் மன நிம்மதி கெடலாம்..சீக்கிரம் நடக்க வேண்டிய காரியம் வீண் அலைச்சல் ஏற்படுத்தி முடியலாம்..பூர்வீக சொத்து இருப்பின் அதன் மூலம் புது பிரச்சினைகள் வரலாம்...வழக்குகள் ஏற்படலாம்...

நாகதோசமாக உண்டாவதால் நாகர் வழிபாடு, காளி வழிபாடு, துர்க்கா பரமேஸ்வரியை ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம்.


கடகம் ராசிபலன்;


பேசுமந்த கேந்திரத்தில் ராகு நிற்க 
பிரபலனாம் ராஜாக்கள் சேவையுள்ளோன்
வீசுகின்ற தனம் படைத்து சீமானாகி 
விதரனையாய் வாழ்ந்திடுவான் இன்னம் கேளு.


என்று 4ஆம் இடத்து ராகு பற்றி புலிப்பாணி சித்தர் புகழ்ந்து தள்ளுகிறார்..ஆனால் இதற்கு திசா புத்தி பலமும் ஏதாவது சுபகிரகத்தின் பார்வையும் அவசியம்...இல்லையேல் வெறும் 4 ஆமிட ராகு உடல்நலன்குறைவையும்,சொத்து சம்பந்தமான வில்லங்கங்களையும் உண்டாக்குவார்..நிம்மதி குறைவும் ,பண விரயமும்,தாயால் மன நிம்மதி கெடுவதும்,வண்டி வாகனங்கள் முதல் குடியிருக்கும் வீடு வரை எதையாவது கழட்டி மாற்றுதல்,பழுது பார்த்தல் என செலவு ஆகிக்கொண்டே இருக்கும்....4ல் ஏற்கனவே சனி இருக்கார்...ராகுவும் சேர்ந்து இருக்கார்..நடந்து போனா க்கூட தடுக்கி விழும் நேரம்..கவனமா இருங்க..வெளியூர் பயணம்,இரவில் பயணம் கவனம் அதிகம் தேவை...திருப்பதி போக முடியாட்டி முருகனை செவ்வாய் தோறும் தரிசனம் செஞ்சிட்டு வாங்க..