வியாழன், 22 அக்டோபர், 2015

ஜோதிட சூட்சுமம் ;குருவும்,சுக்கிரனும் செய்யும் மாயங்கள்

அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்...!!

ஜாதகத்தில் 5ஆம் இடத்திலோ 9ஆம் இடத்திலோ குரு இருக்க வேண்டும் அல்லது குரு பார்க்க வேண்டும்..அவர்தான் உண்மையான ஆன்மீகவாதி.சனி ,குரு சேர்ந்திருந்தாலும் குரு, கேது சேர்ந்திருந்தாலும் சனி, கேது சேர்ந்திருந்தாலும்அவர்கள்நிறையபுண்ணியஸ்தலங்களையும்,மகான்களையும் தரிசிக்கும் புண்ணியம் பெற்றவர்கள்..

இவர்களுக்கு முன்ஜென்ம கர்ம வினைகள் பாவ வினைகள் அதிகம் பாக்கி இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்..இவர்கள் தான் இப்பிறவியில் சமூக சேவகர்களாகவும்,மக்களுக்கு தொண்டு செய்பவர்களாகவும்,சம்பாதிக்கும் பணத்தை தான தர்மம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.வாழ்வில் அதிகம் போராடுபவர்களாகவும்,மகான்களின் ஆசி பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..


வாழ்க்கையில எதை பத்தியும் கவலைப்படாம ஆட்டம்,பாட்டு,கொண்டாட்டம்,என வாழனும்னா..அதுக்கு சுக்கிரன் தான் அதிபதி...ரிசபம்,துலாம் ராசி,லக்ன காரங்க.லக்னத்துல சுக்கிரன் இருக்குறவங்க..பொதுவா ஜாலியானவங்க...தானும் சந்தோசமா இருந்து மத்தவங்களையும் சந்தோசப்படுத்துவாங்க!!
தனுசு,மீனம் ராசியினர் குரு ஆதிக்கம் கொண்டவங்க..நீதி..நேர்மை..எதிலும் ஒழுக்கம் வேணும்...டைமிங் கீப் பண்ண தரலைன்னா எதுக்கு வாழனும் என்பார்..குரு என்பதே தனக்காக வாழாமல் சமூகத்துக்காக வாழ்வது சுக்கிரன் என்றால் தனக்காக மட்டுமே வாழ்வது தன் சந்தோசமே முக்கியம் என வாழ்வது..பிறரை சந்தோசப்படுத்துவது...சுகத்தை கொடுப்பது..அனுபவிப்பது..

குருவும்,சுக்கிரனும் எவ்வளவு வித்தியாசப்படுகிறார்கள்..

உச்சமன்ற நீதிபதி என்றால் குரு கெடாமல் இருக்கனும்...தனுஷ் போல ஷாருக்கான் போல வாழனும்னா சுக்கிரன் கெடாமல் இருக்கனும்.சுக்கிரன் பணத்தை தருவார்..ஆனா அந்த பணத்தை எப்படியெல்லாம் செலவு செஞ்சு ,சந்தோசமா இருக்கலாம் என்ற அறிவை புதன் தான் தருவார்..

வித்தியாசமா யோசிச்சு ,அந்த ஐடியாவை பிக்கப் செஞ்சு பணக்காரன் ஆனவங்கதான் இந்த உலகத்துல அதிகம்.அதுக்கு காரணகர்த்தா புதன்.புதன் கெட்டுப்போனா ஒரே மாதிரி செக்கு மாடு வாழ்க்கைதான்.குரு கெட்டுப்போனா கூறுகெட்டவன்.எதை எப்போ யார்கிட்ட எப்படி பேசனும்..எதை எப்போ எப்படி செய்யனும் என்ற அறிவு இருக்கனும் குரு கெட்டவனை ஊரில் ஒருத்தரும் மதிக்க மாட்டார்..

புதன் கெட்டவன் வசியம் இல்லாதவன்..அவர் வாழ்வில் சுவாரஸ்யம் இருப்பதில்லை...சுக்கிரனும்,புதனும் நன்றாக இருந்தால் நிறைய சம்பாதித்து சந்தோசமாக இருக்கலாம்...!!

திங்கள், 12 அக்டோபர், 2015

அன்னதானம் /annadanam




அன்னதானம் ;annadanam;

வருடம் தோறும் ஆடி,புரட்டாசி,தை அமாவாசைகளில் ஆதரவற்ற குழந்தைகள்,முதியவர்கள்,உடல் ஊனமுற்றோர்க்கு அன்னதானம் செய்து வருகிறோம்.இந்த வருடமும் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு ,ஆதரவற்றோர்க்கும் ,கண்பார்வையற்றோர்க்கும் அன்னதானம் செய்தோம்.ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி!








வெள்ளி, 9 அக்டோபர், 2015

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்னதானம் மகிமை

திங்கள் கிழமை 12.10.2015 புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை;

சிறப்பு வாய்ந்த அமாவாசைகள் ஆடி,தை,புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையாகும்.சில குடும்பங்களில் ,வழிவழியாக யார் இறந்தாலும் அவர்களுக்கு திதியோ ,தர்ப்பணமோ அவர்களை நினைத்து வருடாந்தர பூஜையோ செய்ய மாட்டார்கள்.இப்போது இருக்கும் தலைமுறை நல்ல வேலை நல்ல சம்பளம் இருக்கு..கடவுளை எதுக்கு கும்பிடனும் என நினைப்பது போல சில குடும்பத்தினர் நல்ல வசதி இருக்கு.அவங்களை கும்பிட்டு என்னாக பொகுது என விட்டுவிடுவர்.முன்னோர்களை நினைத்து வருடத்தில் ஒருநாள் திதி கொடுத்து வழிபட்டால் ,அவர்கள் ஆசி உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் கிடைக்கும்.ஞாயிறு ,திங்கள் இரண்டு நாளும் கொடுக்கலாம் .புனிதமான புரட்டாசி அமாவாசையில் அன்னதானம்,ஏழைகளுக்கு உதவி செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.பலன் பலமடங்காகநமக்கு கிடைக்கும்.

வருடம் தோறும் செய்வது போல இந்த வருடமும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்ய இருக்கிறேன்..இணையும் நண்பர்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.வெளிநாட்டில் இருப்போர் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதோர் என்னை தொடர்பு கொள்ளவும்.sathishastro77@gmail.com

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வித்தியாசமான ஆலயங்கள்;சக்திவாய்ந்த வழிபாடு

நமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சில வித்தியாச மான ஆலயங்கள் பற்றி இங்கு காண்போம்.

●  கோவில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர் லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.


●  ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.


●  புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோவில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதி யார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோவிலுக்கு வந்து செல்வாராம். இக்கோவில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார்


.●  மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன்- வாசுகி சிலைகள் உள்ளன.

●  ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து,
அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார் கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோவில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

●  மயிலம் முருகன் கோவிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள்.


●  அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோவில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரகமாக இருக்கிறது. இக்கோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முற்பட்ட கோவிலாகும்.

●  நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப் பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சந்நிதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர்.


●  ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோவில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோவிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த் தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து  வருகிறது. கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.


●  சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத் தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.


●  மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு- தெற்கு கோபுரங்களுக்கிடையே  கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சந்நிதியை இரண் டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.


●  திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.


●  108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

●  கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

●  விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனா பிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.


●  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான், மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.


●  அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகை யால் ஆனவர்.
●  உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

●  திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சந்நிதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன.  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும்போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும்போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.


●  புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோவில் திங்கட் கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோவில் மூடியிருக்கும்.
●  தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப் பட்டுள்ளது. இக்கல் சந்திரனி டமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.

●  நாம் சாதாரணமாக கோவில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால் இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

சனி, 26 செப்டம்பர், 2015

ஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்?

சனி கொடுத்தால் எவர் தடுப்பார்..? சனி கொடுப்பாரா ..கெடுப்பாரா..?

சனி பலமானால் கெடுதலா நல்லதா..? இவை எல்லாருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.சனி லக்னத்துக்கு யோகராக இருந்தால் மட்டுமே நல்லது செய்வார்.சனி,ராகு இருவருமே வறுமையை குறிப்பவர்கள்..அதனால்தான் இவர்கள் மறைந்தால்தான் யோகம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.சுக்கிரன் மட்டுமே ஆடம்பரமாக சுகமாக வாழ உதவுவார்.

ஏழரை சனியின் போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார்..அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்று க்கொடுத்து விடுகிறார்..சனி வறுமை தரும் கிரகம் என்பதாலும்,இருள் கிரகம் என்பதாலும் மனதில் மகிழ்ச்சி தராத நிலையை ஏழரை சனியில் உண்டாக்கிவிடுகிறார்..சந்திரன் ஒளி கிரகம் .சந்திரனால் உண்டாவதுதான் மன தெளிவு எதை எப்போது,எப்படி செய்வது எனும் தெளிவை தருவதால்தான் நம் அன்றாட பணிகள் தினசரி நடைபெறுகிறது.சனி அவரை நெருங்கும்போது அன்றாடப்பணிகளில் மாற்றம் உண்டாகும்.சனி மந்தன் அல்லவா..அதனால் அக்காலத்தில் மந்தத்தை உண்டாக்கிவிடுகிறது...

தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் மீது சலிப்பு உண்டாவதும்,நினைத்த காரியம் நடக்காமல் தடங்கல் உண்டாவதுமாக இருக்கும்.வாயுபகவான் சனி என்பதால் வாத நோய்களையும் சிலருக்கு உண்டாக்கிவிடுவார்..வாகனங்களில் செல்கையில் ஆபத்தும் உண்டாகும்.அதனால் பலருக்கு மருத்துவ செலவும் உண்டாகிவிடுகிறது.

ஏழரை சனி ஒருவருக்கு நடக்காமல் அவருக்கு சனி திசை மட்டும் நடந்தாலும் சிக்கல் உண்டு.19 வருடம் சனி திசை .அவர் ரிசப ,மிதுன,துலாம்,கன்னி லக்னத்தாராக இருந்தால் ஓரளவு நற்பலன் உண்டு.6,8ல் சனி இருப்பின் சனி நீசம்,பகை பெற்று இருப்பின் வாத நோய்,பாரிசவாயு,எலும்பு வியாதிகள்,புற்று நோய்,ஆஸ்துமா,ஹிஸ்டீரியா போன்ற நோய்கள் தக்கக்கூடும்.8ல் சனி இருப்போருக்கு தீர்க்காயுள் உண்டு.

ஜென்ம ராசிக்கு 12,1,2 ல் சனி சஞ்சாரம் செய்யும்போது எழரை சனி என்கிறோம் ..இப்போது துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு ஏழரை சனி நடக்கிறது.இந்த ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் அஷ்டம சனி நடக்கும் மெசம் ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும்,குறிப்பாக விருச்சிகம் ராசிக்குழந்தைகளுக்கு கல்வி சற்று மந்தமாகவே இருக்கும்.கல்வி சிறப்பாக இருந்தால் உடல்நலன் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.

குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலன் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை,தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம்..வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம்.இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல்நலக்குரைவு உண்டாவதும்,பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிகபிடிவாதம்,கல்வியில் கவனம் செலுத்தாமை,ஹோம் ஒர்க் செய்யாமல் அலட்சியம்,பள்ளியில் குறும்பு செய்து,புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.

சனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்...சைக்கிழமை காகத்து சதம் வைப்பது ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
astrologer in erode,jothidam,numerology,aimpon,luckystone