ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?


உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?
சூரிய யோகங்கள்

1. வேசி யோகம் : சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு கேதுக்களைத் தவிர ஏதேனும் கிரஹம் இருப்பது, பண வருவாய், சத்ருக்கள் ஜெயம்.
2. வாசி யோகம் : சூரியனுக்கு 12ல் சந்திரன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரஹம் இருப்பது, பேரும் புகழும் உண்டாகும்.
3. சுப உபயசாரி யோகம் : சூரியனுக்கு இரு பக்கங்களிலேயும் (இருராசிகளிலேயும்) கிரகங்கள் இருப்பது. நல்ல பணவருவாய், பேரும் புகழும் உண்டாகும்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்

1. பத்ர யோகம் : புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.
2. ருசக யோகம் : அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திர திரிகோணங்களில் இருப்பது. நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.
3. சசயோகம் : சனி பகவான் ஆட்சி உச்சங்களில் ருது கேந்திரத்தில் நிற்பது. நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத குணம் உள்ளவன்.
4. ஹம்ஸ யோகம் : குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.
5. மாலவ்ய யோகம் : சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான், வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்.

அஷ்டலஷ்மி யோகம்
இராகு 6ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும். எல்லாவித சுகங்களும் சந்தோஷங்களும் உண்டு.

தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்;
2,9 அல்லது 11க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும். தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.

வசுமதி யோகம்
சுபக்கிரகங்கள் உபசய வீடுகளில் (3,6,10,11) இருப்பது. நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.

குரு சண்டாள யோகம்
பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை.
ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.

கால சர்ப்ப யோகம்
லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது. காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.

விபரீத ராஜயோகம்
துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6,8,12 வீடுகளில் இருப்பது. இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென நினைக்க இயலாத ராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.

நீசபங்க ராஜயோகம்
கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்' வருகிறது.
இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.

2 கருத்துகள்:

சுந்தரச் செல்வன் சொன்னது…

ஐயா,

எனக்கு லக்னத்தில் (கும்பம்) கேது, சூரியன், புதன், ஏழாம் வீட்டில் (சிம்மம்) குரு, ராகு, சந்திரன், செவ்வாய் உள்ளன. ஆனால், மூன்றில் சுக்கிரனும் எட்டில் சனியும் உள்ளன.

தயை கூர்ந்து இந்த அமைப்பு கால சர்ப யோகமா என கூறவும்.

இப்படிக்கு,
மோகன்.

Unknown சொன்னது…

அய்யா எனக்கு துலாம் ராசி தனுஷ லக்கனம் (சனி 3ல் ஆட்சி) கேது 5ல் புதன் 10ல் உச்சம் (சுக்ரன் சந்ததிரன் சூரியன் ராகு 11ல்) குரு செவ்வாய் ஆட்சியுடன் 12ல் குடும்பதில் கஷ்டம் எப்போ நீங்கும்