ராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்
திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் நந்தன வருடம் மார்கழி 8 ஆம் நாள் 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதி பரணி நட்சத்திரம் கூடிய நாளில் மாலை மணி 6.21 க்கு ராகு கேது பெயர்ச்சி மாற்றம் உண்டாகும்...சில பஞ்சாங்கங்கள் 5.47 என குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்த ராகு கேது பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சியை விட பலம் அல்ல என்றாலும் சூரியன்,சந்திரனை விட வீரியம் உள்ளதாக அவர்களையே பல சமயம் முடக்கி விடுவதால் கிரகணம் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டி இருக்கிறது...
பூமி சூரியனை சுற்றும் வட்டப்பாதையும் ,பூமியை சந்திரன் சுற்றும் வட்டப்பாதையும் விண்வெளியில் மேலும் கீழுமாக குறுக்கிட்டு வெட்டுகின்ற சந்திப்பு மையங்கள்தான் (மின்காந்த அலைகளின் உராய்வு மோதல்கள்தான்)ராகு -கேது என நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்...சந்திரன் மேல் நோக்கி போகும் பாதை பூமியின் பாதையை சந்திப்பது ராகு வாகும்..கீழ்நோக்கி வரும் சந்திரனின் பாதையானது பூமியின் பாதையை சந்திப்பது கேதுவாகும்..
ராகு கேது இரண்டும் நிழல் கோள்கள் ஆகும்...அதாவது கிரகங்கள் இல்லை..வெறும் நிழல்களே...மின்சாரம் எப்படி கண்ணால் பார்க்க முடியாது ஆனா தொட்டா தூக்கி அடிக்குமே.அது மாதிரிதான்...இரண்டும் குரூரமான கிரகங்கள்...இரண்டுக்கும் வடிவம் பாம்பு உருவம் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்..
திருவாதிரை,சதயம்,சுவாதி,அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் அதாவது ராகு கேது நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பாம்பு மாதிரி சீறுவதற்கும்,முன்கோபம்,பிடிவாதம் அதிகம் கொண்டு செயல்பட இதுதான் காரணம்...
கேது நட்சத்திரங்காரங்க எப்பவும் ஆன்மீக ஆராய்ச்சிதான்..இல்லைன்னா யாராவது ஒரு குருவுக்கு பயங்கர விசுவாசமா இருப்பாங்க..குரு புகழை பரப்புவதில் இவங்களை மிஞ்ச ஆள் இல்லை ...இதன் அடிப்படை காரணம் அதிக குழப்பம்,பயம்...எதையாவது கெட்டியா பிடிச்சி நம்பிக்கை முழுக்க அதன் மீது வைத்து வாழ்தல்தான் காரணம்..
ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது..இவை ராசிமண்டத்தில் பின்னோக்கி நகரும்..
விருச்சிகம் ராசியில் இப்போது இருக்கும் ராகு துலாம் வீட்டிற்கும்,ரிசபம் ராசியில் இருக்கும் கேது மேசம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகப்போகிறார்கள்....
சனிக்கு எப்படி பலன்களோ அதன்படி இதை பார்க்கலாம்...அதாவது நல்லதோ கெட்டதோ சனி தரும் பலன்கள் ராகு கேது தருவர்...
ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்களை விரைவில் எழுதுகிறேன்...
2 கருத்துகள்:
அருமையான விளக்கம் ராகு கேது விற்கு .
அடுத்த பதிவை எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் .
நன்றி !
சொல்லுங்க.... படிக்க காத்திருக்கிறோம்.
கருத்துரையிடுக