செவ்வாய், 31 டிசம்பர், 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 மகரம்,கும்பம்,மீனம்

புத்தாண்டு ராசிபலன் 2014 மகரம்;
அன்பும்,பண்பும்,பாசம் நிறைந்த மகர ராசி அன்பர்களே...கடும் உழைப்பாளி.கடும் அன்பாளி நீங்கதான்..திருப்பதி பெருமாளே..உங்க ராசியில்தான் பிறந்திருக்கார்...போப் ஆண்டவர் நண்பரான ரஜினியே உங்க ராசியில்தான் பிறந்திருக்கார்!!! அப்புறம் என்னங்க கவலை..?அதனால இந்த வருசம் தைப்பொறந்தா உங்களுக்கு வழிபிறக்கும்...உங்க ராசிக்கு 7ல் குரு உச்சம் பெறுகிறார் குருபலம் தொடங்குகிறது...திருமனம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வருடம்...பணக்கஷ்டம் தீரும்..தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அகலும்...கடன்கள் அடைபடும்...ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கு..சனியுடன் இருந்த ராகு விலகுவதால் உச்சம் பெற்ற உங்க ஹீரோ சனி முழு பலம் அடைகிறார் அதனால் இந்த வருடம் அபரிதமான லாபம் வந்து சேரும்!!

 புத்தாண்டு ராசிபலன் 2014 ;கும்பம்;

கும்பத்தோன் சம்பத்தோன் என சொல்வாங்க...தெய்வ காரியங்கள் உங்களால் முடிக்கப்படனும்னு விதி..அதனால் ஒரு ஊரில் கும்பாபிசேகம் நடக்குதுன்னா அதுல முக்கியஸ்தர்கள் சிலருக்கு கும்ப ராசி இருக்கும்...கும்ப ராசிக்காரர்களை தலைமையில் ஒரு நல்ல காரியம் நடந்தா அது நல்லபடியாய் முடியும்..அவ்வளவு சிறப்பு பெற்றவர் நீங்க...ராசிக்கு இப்போ 5ல் குரு பலம் இருக்கு அது ஜூன் மாதம் வரை இருக்கு அதுக்குள்ள திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்திக்கொள்வது நல்லது குருபெயர்ச்சியாகும்போது அது 6ஆம் இடத்துக்கு மாறிடும்...சனி 9ஆம் இடத்துல இருக்கார் தந்தை வழி ஆதாயம் உண்டு...ராகு ராசிக்கு எட்டில் மாறுகிறார் கெட்டவன் மறைந்தால் நல்லதுதான்...6க்கு குரு போவதால் கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம் வீண் சிக்கல் வந்து சேரும் புதிய நபர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம்..

 புத்தாண்டு ராசிபலன் 2014 ; மீனம்;

2013ல் அதிகம் துவண்டு போன ராசிக்காரங்கன்னு பார்த்தா மீனம் ராசிக்காரங்கதான்...அஷ்டம சனியால் அவ்வளவு துன்பம் அடைந்த நீங்கள்,பிறக்கப்போகும் புத்தாண்டில் புத்துணர்ச்சி அடையப்போகிறீர்கள் ஆம்..அஷ்டம சனி உங்களுக்கு முடியப்போகிரது..இதெல்லாம் ஓவர் சார் இன்னும் 11 மாசம் இருக்கு..என அப்பவும் கண்ணை கசக்காதீங்க..புத்தாண்டுல சந்தோசமான விசயம் நான் சொல்லியே ஆகனும்..2014ல் ஜூன் மாத குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு சூப்பரா இருக்கு 5ல் குரு உச்சம் பெற போகிறார் இது புத்தி ஸ்தானம்,வெற்றி ஸ்தானம் அப்புறம் சந்தோசத்துக்கும் வருமானத்துக்கும் வெற்றிக்கும் கேட்கவா வேணும்...சும்மா தகதகன்னு புத்தாண்டுல மின்னப்போறது நீங்கதான்...ஜூன் மாசாமே குரு பலம் பெற்று சனியின் தொல்லைகளை குறைத்திடுவார்..பணம் தாராளமா வரும்போது,முட்டுக்கட்டைகள் எல்லாம் விலகும்போது ,நினைச்சதெல்லாம் மளமளன்னு நடக்கும்போது மனசில் சந்தோசம் தாண்டவமாடாதா..?திருமனம் ஆகாதவர்கலுக்கு திருமனம் நிச்சயம் நடக்கும் வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் தடையாகி நிற்போருக்கு தடைகள் விலகும்..கடன்கள் வேகமாக அடைபடும் நெருக்கடி தீரும்...உறவினர் நண்பர் பகை அகலும் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அன்பு அதிகமாகும்...தெய்வ அருள் பரிபூர்ணமாக உண்டாகும்..!!

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்,தனுசு

புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்;

கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என உங்களை பார்த்துதான் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..பிடிவாதம் என்றாலும் அது அக்கறையின் வெளிப்பாடுதான்...அன்புள்ளம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..உங்களுக்கு இந்த புத்தாண்டு சந்தோசமான செய்தியை கொண்டு வருகிறது...ஆம்...பாக்யஸ்தானத்தில் குரு உச்சம் பெறுகிறார்...இதுவரை அஷ்டமத்தில் குரு இருந்து பணக்கஷ்டம்,மனக்கஷ்டம்,உறவினர் நண்பர் பகை என தொல்லை கொடுத்தார் இனி சந்தோசத்தை வாரி வழங்க காத்திருக்கிறார்...9ல் உச்சம் பெற்ற குரு உங்க ராசியை பார்வை செய்வதால் நீங்க ரொம்ப நாளா ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கப்போகுது..நினைச்சது எல்லாம் நடக்கப்போகுது!!! ஏழரை சனி கவலையை விடுங்க..குரு பர்க்க கோடி நன்மை..என்பது இந்த வருசம் உங்களுக்கு புரியும்..சனியின் பாதிப்பும் இதனால் விலகும்...ஜூன் மதம் முதல் இனிப்பான செய்திகள் காத்திருக்கு..வீடு கட்டுதல்,வாங்குதல்,குழந்தை பாக்யம்,திருமணம் கைகூடுதல் ,உடல் ஆரோக்கியம் சீராகுதல்,நீண்ட நாள் சந்திக்காமல் இருந்த உறவுகளை சந்தித்தல்,அலுவலகத்தில் செல்வாக்கு பதவி உயர்வு,கடன் அடைபடுதல்,அதிக வருமானம் இதெல்லாம் நிச்சயம் நடக்கும்..சந்தோசம்தானே!!!

தனுசு; 

 புத்தாண்டு ராசிபலன் 2014;தனுசு

புத்தாண்டு பிறக்கும் ராசியே உங்க ராசிதான்..ஆமா புத்தாண்டு அன்று மூலம் நட்சத்திரம் தனுசு ராசி...உங்க ராசி அதிபதி மாசி 22 வரை வக்ரம் பெற்று இருக்கிறார் அதனால் உடல்நலனில் கவனம் தேவை..வரவு செலவில் கவனம் தேவை..ராசி அதிபதி குரு உச்சம் பெறுவது நல்லதுதான் என்றாலும் எட்டாமிட்த்தில் மறைந்துவிடுகிறார்...இந்த வருடத்தில் ஏழரை சனியும் துவங்குகிறது...சுப காரியங்கள் செய்வது,வீடு கட்டுவது வாங்குவது என சுப விரயம் ஆகும்..இதனால் கடனும் ஆகலாம்..தொழிலில் நிறைய மாற்றங்கள் உண்டாகும் சிலர் இடம் விட்டு இடம் மாறுவர்...சுப காரியம் செய்வதற்கான வருடமாக இது உங்களுக்கு அமைகிறது!!கடன் கொடுத்தால் திரும்பாது கடன் வாங்கினால் நெருக்கடி...ஜாமீன் கையெழுத்து யாருக்கேனும் போட்டால் நீங்கதான் கட்டனும்..நினைவில் வைத்துக்கொள்ளவும்...செலவுகள் அதிகம் காணப்பட்டாலும் அதற்கேற்ற வருமானமும் குறைவில்லாமல் இந்த வருடம் வந்து சேரும்

திங்கள், 30 டிசம்பர், 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம்

புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம்

கன்னி ராசியினருக்கு புத்தாண்டில் சந்தோசமான செய்தி காத்திருக்கு...இந்த ஆண்டு உங்க ஏழரை சனி முற்றிலும் தீர்கிறது இனி சனி பகவான் தொந்தரவு இருக்காது..நிம்மதியா இருக்கலாம்..அதே போல 12 வருடங்களுக்கு பிறகு லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெறுகிறார்..இதனால் உங்கள் செல்வாக்கு கூடும்...உறவினர் மத்தியில் மதிப்பு ,மரியாதை உண்டாகும் பணம் பல வழிகளிலும் வந்து பேங்க பேலன்சை உயர்த்தும் கடன்பாக்கிகள் வேகமாக அடைபடும்..குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும் கல்யாணமே ஆகாம ஒத்தையா இருந்துடுவமோன்னு ஃபீல் செய்பவர்கள்,இந்த வருடம் கல்யாணம் ஆகி ஜோடியாக தேனிலவு செல்லும் காலம் நெருங்கி விட்டது..வைகாசியில் டும்டும்தான்...தொழில் மந்தமாக இருந்தவர்களுக்கு இனி பிசியோ பிசிதான்.,..நல்ல நேரம் பொறக்குதுங்க...!! பொறுமையா இருங்க!!

 புத்தாண்டு ராசிபலன் 2014;துலாம்;

சுக்கிரனின் ராசியில் பிறந்த சுகவாசி அன்பர்களே...அஎங்க சுகம் அடிதான் என ஜென்ம சனியில் துவண்டிருக்கும் நண்பர்களே....இந்த வருசம் ஜென்ம சனி முடிஞ்சிரும்..அது ஒண்ணுதான் ஆறுதல்..இருப்பினும் உங்க ராசியில் குடியிருந்து தொல்லை தரும் ராகு விலகி ஜூன் மாதம் முதல் விரயத்திற்கு செல்கிறார் அது நல்லது செய்யும்..பல கஷ்டங்கள் நெருக்கடிகள் தீரும்..இதுவரை இருந்து வந்த பகைகள் விலகும்..ஜூன் மாத குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை 10 ஆம் இட குரு பதவிக்கு சிக்கல்...இடம் மாறுதல் போன்ற பிரச்சினைகளை தரலாம் அவரவர் ஜாதகத்தில் இருக்கும் திசாபுத்திகளின் யோக அடிப்படையில் இதில் மாற்றம் இருக்கும் யோகமான திசை நடந்தா பாதிப்பு அதிகம் இருக்காது...2013 ஒப்பிடும்போது 2014 நன்றாகவே இருக்கும்..கவலை வேண்டாம்..!

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கடகம்,சிம்மம்

புத்தாண்டு ராசிபலன் 2014 கடகம் ;

அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவன் நீங்கதான்...ஊருக்காக உழைக்கும் உத்தமரும் நீங்கதான்..அதனால் பல வில்லங்கங்களும் வந்து சேர்ந்து குத்துதே குடையுதேன்னு கதறுவதும் நீங்கதான்!! தன்மானத்துக்கு மட்டும் ஒரு பங்கம் வந்தா தாங்கமாட்டேன் என புறப்படும் நீங்க கடைசியில் அவமானத்தை சந்திச்சிட்டுதான் இருக்கீங்க..அப்படியான நேரம்தான் இது..சரி 2014 எப்படி இருக்கும்னு பார்த்தால் ராசிக்கு யோகாதிபதியான குரு செவ்வாய் வழிவிட்டால்தான் சிறப்பு..சனி ஏற்கனவே அர்த்தாஷ்டம சனியா படுத்திக்கிட்டு இருக்கார்...ஜூன் மாசம் குரு பெயர்ச்சி ஆனால் கடக ராசியில் உச்சம் பெறும் குரு உங்களுக்கு இழந்த செல்வாக்கை மீட்டு தருவார்..வருமனத்துக்கு வழி செய்வார்...பண சிக்கலை தீர செய்வார்..அதுவரை வரவுக்கு செலவு சரியா இருக்கும்..ராகு உங்க ராசிக்கு 3ல் மாறப்போகிறார் அது உங்களுக்கு தைரியத்தையும் துணிச்சலையும் தரும்..சனிப்பெயர்ச்சி 4ல் இருந்து 5க்கு போகிறார் உங்க உடல் ஆரோக்கியத்துக்கு பாதகமா இப்போ இருக்கு இதனால் அது சரியகும் இருந்தாலும் ஒரு வருசம் சமாளிச்சுதான் ஆகணும்..5ல் சனி பிள்ளைகளால் சங்கடம்..இருப்பினும் உங்க தொழில் முன்னேற்றம் உண்டாகும்...உணர்ச்சிவசப்படாம நிதானமாக இருக்க வேண்டிய வருடம் 2014.

 புத்தாண்டு ராசிபலன் 2014 ;சிம்மம்;
 
முன்கோபமும் பிடிவாதமும் எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓயாத சிம்ம ராசி அன்பர்களே...பிறக்கும் 2014 உங்களுக்கு வெற்றியை தரப்போகிறது...புத்தாண்டில் சனியும் குருவும் வக்ரம்..சனி வக்ரம் ஆனா பிரச்சினை இல்லை குரு செல்வாக்கை கொடுப்பவர் அவர் வக்ரம் பெற்றிருப்பது உங்கள் ராசிக்கு யோகாதிபதி என்பதால் பாதிப்பாய் இருக்கிறது பணசிக்கல் அதிகம் இருந்தாலும் 12.3.2014 வரை தான் இந்த சிக்கல் அதன் பின் வருமானம் அதிகரிக்கும் செல்வாக்கு கூடும் நினைத்த காரியம் ஜெயம் ஆகும்.....ஜூன் மாதம் குரு பெயர்ச்சி 12ஆம் இடம் விரய ஸ்தானத்துக்கு செல்கிறது சுப விரயம் உண்டாக்குகிறது...சனி 3 ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடத்துக்கு நவம்பர் மாதம் செல்கிறார் உடல்நலனில் கவனம் தேவை...2014 இறுதியில்தான் சிக்கல்..ஆரம்பம் நன்ராகவெ இருக்கிறது...இறுதியிலும் பண விரயம்தான் அதிகம் தொழில்,உத்யோகம் நன்றாகவெ இருக்கும்...மார்ச் மாதம் முதல் யோகமான காலம்...

சனி, 28 டிசம்பர், 2013

ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன் 2014 மேசம்,ரிசபம்,மிதுனம்

புத்தாண்டு ராசிபலன் 2014 ;மேசம்;

இந்த ஆண்டு உங்களுக்கு அஷ்டலக்‌ஷ்மி யோகம் உண்டாகிறது ஆம்...இதுவரை ராசியில் இருந்து சிரமம் கொடுத்த கேது ஜூன் மாதம் முதல் பெயர்ச்சியாகிறார் ராசிக்கு 12ல் மறைவதால் அது கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜயோகம்தான்..மேலும் 3ல் மறைந்து செல்வாக்கை குறைத்த குருவும் ஜூன் மாதம் முதல் 4ஆம் இடத்துக்கு மாறுகிறார் இதனால் புதிய சொத்துக்களை வாங்க..பழைய சொத்துக்களை விற்க வழிபிறக்கும்..வருமானம் அதிகரிக்கும்...வருட முடிவில் அஷ்டம சனி ஆரம்பிக்குதே என கலங்க வேண்டாம்..வீட்டில் சுப காரியங்கள் நடந்தால் தோசம் அதில் அடிபடும்...ராகு 6க்கு வந்துவிடுவதால் பெரிய பாதிப்பு வராது...வருட தொடக்கத்தில் உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 6ல் இருப்பதால் அதிக பண விரயம் இருக்கும்...இருப்பினும் குரு வக்ரம் இருப்பதால் செலவுக்கு ஏற்ப பணமும் வந்து சேரும்..1.3.2014 முதல் ஜூலை மாதம் வரை சனி வக்ரத்தில் இருப்பதால் சனியாலும் அப்போது பாதிப்பில்லை..தொழில் கெடாது...நல்லதே நடக்கும்!!

செவ்வாய் தோறும் முருகனை வழிபடவும்


 புத்தாண்டு ராசிபலன் 2014 ;ரிசபம்;

ரிசப ராசிக்கு 6ல் சனி..6ல் ராகு ஜம்னு இருக்கு...ராஜயோகமான காலம் அதிக பண வருவாய் கிடைக்கும் நேரமும் இதுதான்..ஆனாலும் சிலர் நொந்து போய் இருந்தா அதுக்கு காரணம் திசா புத்தி மொசம இருக்கலாம்..அவ்வளவுதான் இவங்க ராசியின் சிறப்பே பேச்சு திறமையும் முக ராசியும்தான்...அதில் முக்கால்வாசி அதிர்ஷ்டம் கிடைத்துவிடும்..வ வக்ரம் ஆகியிருக்கிறார் ..எதிர்பாலினரிடம் கவனம் தேவை.குரு சனி பெயர்ச்சி எப்படி இருக்குன்னு பார்த்தா,குரு ராசிக்கு 3ல் மறைகிறார் ஆனா அவர் பார்வை 7,9,11 என அருமையாக இருப்பதால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் நிறைய தனலாபம் உண்டாகும்...சனி இந்த வருட கடைசியில் கண்டக சனியாக மாறுகிறார் ரிசப் ராசிக்கு அஷ்டம சனி ஏழரை சனியே அதிக பாதிப்பை தருவதில்லை..அதனால் கண்டக சனியை ஏண்ணி கவலை வேண்டாம்..துணைவருக்கு கொஞ்சம் உடல் பாதிப்பு உண்டாகலாம்..மருத்துவ செலவு இருக்கும்...மற்றபடி தொழில் இந்த வருடம் டாப் தான்.. வருமானத்துக்கும் தடை இருக்காது!!

 புத்தாண்டு ராசிபலன் மிதுனம் 2014;

ஜென்ம குருவால் சங்கடப்பட்டு தவிக்கும் மிதுன ராசியினரே..இந்த வருசம் குரு உங்க ராசிக்கு இரண்டில் 12 வருடங்களுக்கு பின் உச்சம் பெற்று உங்களை குதூகலப்படுத்தப்போகிறார்..2014 அம் வருடம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத வருடமாக மாறப்போகிறது!!குடும்பம் அமையாதவர்களுக்கு குடும்பம் அமையும்...ஆம் திருமணம் அமையும்...தனலாபம் அதிகரிக்கும் வருடம் 2014 தான்...ராசிக்கு இரண்டில் தன ஸ்தானத்தில் உச்சம் பெறும் குரு யோகம் உங்களுக்குதான் அமைகிறது செல்வாக்கு கூடும் வருடமாக இருக்கும்..அலுவலகத்தில் பதவி உய்ர்வு கிடைக்கும்..பணம் பல வழிகளிலும் வந்து குவியும்.சனியும் அள்ளித்தரும் விதத்தில் 5ஆம் இடத்தில் இருந்து 6ஆம் இடத்துக்கு மாறுகிறார் பகையெல்லாம் ஓடிப்போகும்..சோதனையெல்லாம் சாதனையாய் மாறும்...இதுவரை 5ல் சனி நின்று என்ன செய்வது என குழப்பத்தை கொடுத்தது..இனி தெளிவான திட்டமிடலுடன் காரியம் சாதிக்க வைப்பார்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

குரு பூஜையும் அன்னதானமும்,சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி 2014

பவானி கூடுதுறையில் தட்சிணாமூர்த்திக்கு. மஞ்சள் துண்டு வேஷ்டி .....மாலைகள் முல்லை அலங்காரம் செய்து அர்ச்சனை, பூஜை நண்பர்கள் அனைவருக்குமாக செய்து வைக்கப்பட்டது.....சில நண்பர்கள் வேண்டுகோள் படி அவர்களது குடும்பத்தார் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது லிஸ்ட் பெருசு .......பொறுமையாக பூஜை செய்துவைத்த ஹரிஹரன் குருக்களுக்கு நன்றி !!!அடுத்த குரு பூஜை புத்தாண்டு அன்று கொடுமுடி பிரம்மாவுக்கு .......6ஆம் தேதி அன்னதானம்!!

பவானி கூடுதுறை தட்சிணாமூர்த்தி அழகிய முக அமைப்பு கருணை ததும்பும் புன்னகை நிறைந்தவர்... வியாழக்கிழமையில் அவருக்கு பிடித்த மஞ்சள் வஸ்திரமும் முல்லை மலர்களாலும் மஞ்சள் பூக்களாலும் அலங்காரித்து தீபம் ஏற்றி குரு ஓரையில் வணங்குவது அவர் கருணையை பெற உதவும்...இதனால் குருவால் ஏற்பட இருக்கும் தீங்கு குறையும் என்பதால் அன்னதானம் குரு பூஜைக்கு நன்கொடை அனுப்பிய சில நண்பர்களின் குடும்பத்தாருக்கு சிறப்பு வழிபாடு செய்தேன்...புத்தாண்டு இதே நண்பர்களுக்காக கொடுமுடியில் இருக்கும் பிரம்மாவுக்கு அவருக்கு பிரியமான வெண்பட்டு வஸ்திரம்,வெள்ளை தாமரை யுடன் பிரம்மசங்கல்ப பூஜை செய்யவிருக்கிறேன்....


குருர் பிரஹ்மா! குருர் விஷ்ணு! குருர் - தேவோ மஹேச்வர:

காது கேளாத வாய் பேச முடியாத குழந்திகள் பள்ளி ஈரோடு மாவட்டத்தில் ஒரே பள்ளியாக ஆர்.என்.புதூரில் மட்டும் இயங்கி வருகிறது 150 குழந்தைகள் வரை படிக்கின்றனர்..இவர்களுக்கு அன்னதானம் செய்வது குரு தோசம் போக்கும்..காரணம் குரு ஜாதகத்தில் பாதிப்பதால்தான் இவர்களுக்கு இக்குறை உண்டாகிறது எனவே குருவால் தோசம் ஏற்படாமல் இருக்க சனியின் அனுக்கிரகம் உண்டாக இவர்களை சந்தொசப்படுத்தவோ அல்லது மன நிறைவு உண்டாக்கும்படியோ சுவையான உணவை தருவது நல்லது..மேலும் அக்குழந்தைகள் அரசு தரும் உணவைதான் அன்றாடம் உண்கின்றனர்...நாம் வீட்டு சாப்பாடை மாதம் ஒருமுறையேனும் வழங்கலாம்..என்பதும் ஒரு காரணம்..இங்கு பிறந்த்நாள் ,நினைவுநாள் உறவுகளில் யாருக்கேனும் வந்தால் உடன் இங்கு வந்து தேதி பதிவு செய்து அந்நாளில் உனவு அன்னதானம் செய்வது வழக்கம்..நானும் நன் நண்பர்கலுக்காக அன்று அன்னதானத்தை  ஜோதிட பரிகாரமாக செய்து விடலம் என்றுதான் முடிவு செய்தேன் இப்போ குழந்தைகள் விடுமுறையில் இருப்பதாலும் வாக்கிய பஞ்சாங்கப்படி 2 ஆம் தேதிதான் குரு வக்கிரம் ஆவதாலும் 6.1.2014 அன்று அன்னதானம் செய்யலாம் என முடிவு செய்தேன் இதற்காக நாங்களும் பங்களிக்கிறேன் என சிறு  தொகைகளை அன்புடன் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி...தானத்தில் சிறந்தது அன்னதானம்..என்பார்கள்..பசியை போக்குவதே பெரும் பரிகாரம்...

அன்னதானம் பொறுத்தவரை நான் ஹோட்டலில் வாங்கி தருவதில்லை என முடிவு செய்துவிட்டேன்..தரமான அரிசி மற்றும் காய்கறிகளை வாங்கி சமையல் ஆள் வைத்து வீட்டில் தரமாக தயாரித்து பள்ளிக்குழந்தைகளுக்கு தர முடிவு செய்துள்ளேன்...சனி கிரகத்தை பொறுத்தவரை மந்தன்,உடல் அங்ககீனன் என சொல்லப்பட்டுள்ளது உடல் ஊனமூற்றோர் என்றலெ சனியின் ஆதிக்கம் கொண்டவர்களாக எடுத்துக்கொள்ளலாம்..எனவே உடல் குறை என்பதும் சனியின் பாதிப்பு பெற்றவர்கள்தான்..எனவே சனியின் தோசம் குறையவும்..இது பரிகாரமாக எடுத்துக்கொள்ளப்படும்...

புத்தாண்டு அன்று தலை எழுத்தை மாற்றும் பிரம்மாவை வணங்குவதும் பூஜிப்பதும் மிக நல்லது 2014ல் தான் சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி என முக்கியமன மூன்று பெயர்ச்சிகளுமே வருகின்றன...எனவெ 2014 பலவித மாறுதல்களை நாட்டிலும் வீட்டிலும் ஏற்படுத்த போகிறது...எனவெ 2014 முதல் நாளை ஆலயத்தில் வழிபட்டு துவங்குவது உத்தமம்..அதற்கென்று ஜாமத்தில் 12 மணிக்கு ஆலயம் சென்று வழிபடுவது தவறு...கோயில் என்றாலே பிரம்ம முகூர்த்தத்தில் விடியற்காலையில் வழிபடுவதுதான் அதுவும் சூரிய ஒளி புறப்படும்போது வழிபடுவதும் உச்சிக்காலத்தில் மாலை பொழுதில் வழிபடுவதுதான் சரியானது..இப்போ எல்லாம் ஆங்கிலப்புத்தாண்டை இரவு 12 மணிக்கு கோயிலில் சென்று வரவேற்கிறார்கள்..கோயில் ஊழியர்களும் கோயிலை திறந்து வைத்து காத்திருக்கிரார்கள் அவர்களுக்கு தட்ச்சிணை முக்கியம்...ஆனா நாம வழிபடுவது கடவுளைதான்..அவரை வழிபடும் நேரம் என ஒன்று இருக்கிறது..அதில் வணங்குவதுதான் நல்லது...

செவ்வாய், 24 டிசம்பர், 2013

தலையெழுத்தை மாற்றும் கொடுமுடி பிரம்மாவும் குருபூஜையும்

குரு வக்ரத்திற்காக சிறப்பு அர்ச்சனை வழிபாடு பவானி கூடுதுறை தட்சிணாமூர்த்திக்கு வியாழன் அன்று செய்ய உத்தேசம்..வெள்ளிக்கிழமை கடவுள் அனுக்கிரகம் இருப்பின் என் ஜோதிட வாடிக்கையாளர்கள் நண்பர்களுக்காக கொடுமுடி பிரம்மாவுக்கும் பூஜை, அர்ச்சனை செய்ய இருக்கிறேன்..எல்லாம் அஷ்டம சனி,ஏழரை ,குரு வக்ரத்தால் பாதிக்கப்பட்ட நண்பர்களின் குடும்பத்துக்காகத்தான்..இது ஒரு முதல் முயற்சி..இதையெல்லாம் செய்ய முடியாத நண்பர்களுக்காக நான் முயன்று உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும் கடமை அவ்வளவுதான்...

சில நண்பர்களுக்காக..மற்றும் அன்னதானம் 6.1.2014 அன்று மாற்றி அமைத்துள்ளேன்..குழந்தைகள் விடுமுறையில் சென்று 2 ஆம் தேதிதான் வருவதால் 6ஆம் தேதி வைத்துக்கொண்டால் புத்தாண்டுக்கும் சேர்த்து அன்னதானம் செய்தது போல இருக்கும்..இப்போ குறைவான குழந்தைகள் ஆஸ்டலில் இருப்பதால் முழுமையாக எல்லா குழந்தையும் வந்தபின் சிறப்பாக செய்ய திட்டம்...நானும் இன்னும் த்யார் படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது...தனியாக சமையல் ஆள் போட்டு வீட்டில் பார்த்து சமையல் செய்து தரணும்....அன்னதானத்துக்கு யாரும் பணம் அனுப்பட்டுமா என கேட்க வேண்டாம் ..இதுவே நிறைவு..என் பங்கும் இருப்பதால் ,தேவைப்படாது..மேலும் செய்ய விரும்புபவர்களுக்கு இன்னொரு நாளில் ஸ்கூலில் தேதி பதிவு செய்து உங்கள் பெயரில் செய்து தருகிறேன்..எனக்கொன்றும் சிரமமில்லை...இதுவே பெரிய புண்ணியம்..~~!!!

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

அஷ்டம சனி ஏழரை சனி கஷ்டம் தீர பணக்கஷ்டம் தீர ஜோதிடம் -பரிகாரம்

துலாம்,கன்னி,விருச்சிகம் ராசியினருக்கு இப்போ ஏழரை சனி நடக்குது மீனம் ராசியினருக்கு இப்போ அஷ்டம சனி நடக்குது....இவங்களுக்கு எல்லாம் பண முடக்கம் பெஇய பிரச்சினையா இப்போ இருக்கு..நிறைய பேருக்கு திருமண தடை தாமதமும் பிரச்சினையா இருக்கு ஏழரை சனியில் திருமணம் செய்யலாம் நிறைய பேருக்கு நடந்து நல்லாவும் இருக்காங்க...சுப செலவு செய்தால் கெட்ட செலவு வராமல் தடுக்க முடியும்..அந்த வகையில் ஏழ்ரை சனி நடந்தால் திருமணம் செய்வது,வீடு கட்டுவது நிலம் வாங்குவது நல்லது...

அஷ்டம சனி நடக்கும்போது,எப்போதும் தொழில் ஆரம்பிக்கும்போது பார்ட்னர் சேர்க்கும் போது எச்சரிக்கை தேவை ஏமற்றம் உண்டாகலாம்...என் வாடிக்கையாளர் ஒருவர் பார்ட்னர் சேர்த்து தொழில் செய்து வந்தார் அஷ்டம சனி வருது பார்ட்னர் விசயத்தில் எச்சரிக்கையா இருங்கன்னு சொன்னேன் அவர் தங்கமனவருங்க...பங்கு பணத்தை தேடி வந்து வருசா வருசம் கொடுத்துடுவாரு கணக்கு துல்லியமா இருக்கும் என்றார் இந்த வருசம் கொஞ்சம் கண்காணிங்க என்றேன் அவர் அலட்சியமாக இருந்தர் இதுவரை சரியாக இருந்த பார்ட்னர் ஒரு பென்ணுடன் பழக்கம் உண்டாகி பணத்தை அந்த பெண்ணுக்காக வாரி இறைக்க இவர் பங்கு பணத்தையும் கள்ளக்காதலுக்காக வாரி இறைத்துவிட்டார் ...எப்போதும் இல்லாமல் பெரிய அளவில் நஷ்டக்கணக்கு காண்பிக்க் நொந்து விட்டார் என் வடிக்கையாளர் நீங்க சொன்னது சரியா போச்சுங்க.என்றார் என்ன செய்வது..? எதிர்பாராமல் ஏமார்ரம் தருவதே அஷ்டம சனி.மருத்துவ செலவுகள் ,அறுவை சிகிச்சைகள் எதிர்பாராமல் வருவது எல்லாம் இப்போதுதான்..நெஞ்சுவலின்னு போனேன் டாக்டர் பைபாஸ் சர்ஜரி பண்ணனும்னு சொல்லிட்டார் டாக்டர் என்பவர்கள் அநேகம்..எனவெ அஷ்டம சனி இன்னும் ஒருவருடம் இருப்பதால் எச்சரிக்கை,நிதானமுடன் செயல்படுங்கள்...

குரு வக்ர பூஜைக்காக சிலர் பணம் அனுப்பி வைத்தனர் ...அவ்ர்களது குடும்பத்தார் பெயரில் சிறப்பு அர்ச்சனை,பூஜை,அன்னதானம் செய்ய இருக்கிறோம்..குரு பூஜை,பைரவர் பூஜை....செய்து காதுகேளத உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு அன்னதானம் செய்ய இருக்கிறேன்..குரு வக்ரத்தால் பாதிக்கப்பட்ட ராசியினரும் ஏழரை சனி அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டோருக்கும் இது பரிகாரமாக அமையும்...இதில் கலந்துகொள்ள இருப்பவர்கள்...முடிந்தளவு நன்கொடை கொடுக்கலாம்..குறைந்த தொகையக இருந்தாலும் பரவாயில்லை...உங்கள் குடும்பத்தார் பெயர் ராசி நட்சத்திரம் அனுப்பி வைத்தால் அதன் பெயரில் பூஜைகள் செய்துவிடுகிறொம்..இதனால் உங்கள் குடும்பத்துக்கு வர இருக்கும் பெரிய பிரச்சினைகள் தீரும்....என் மெயில் sathishastro77@gmail.com போன்;9443499003

நாளை மறுநாள் குருபூஜையும் அன்னதானமும் செய்ய இருப்பதால் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் உடனே தொட்ர்பு கொள்ளவும்..!!

குரு வக்கிரம் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும் 

வியாழன், 19 டிசம்பர், 2013

குரு வக்கிர பூஜைக்கான பரிகார விபரம்..விருச்சிகம்,மீனம்,துலாம்

குரு வக்ரத்திற்காக பாதிக்கப்பட்ட ராசியினருக்காக பரிகாரம் செய்வதாக  சொன்னீர்கள் அது பற்றி விவரம் தேவை என போனில் கேட்ட சில நண்பர்களுக்காக;அது சம்பந்தமான முழு விவரம் அறிய எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பு என அறிய இந்த பதிவை படிக்கவும்

வரும் 25.12.2013 அன்று புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியாகவும் வருகிறது அன்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை பவானி கூடுதுறையில் செய்யலாம்..என நினைக்கிறேன்..தட்சிணாமூர்த்திக்கு குரு ஓரையில் ஒரு பூஜை....பிறகு 150 ஊனமுற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு....இதுதான் எனது வக்ர பூஜைக்கான திட்டம்..இதில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் பூஜை செலவு மற்ரும் அன்னதான நன்கொடையை அனுப்பலாம்..அப்படி அனுப்புபவர்கள் .நீங்கள் உங்கள் குடும்பத்தார் பெயர் ராசி நட்சத்திரம் குறிப்பிட்டு என் மெயிலுக்கு அனுப்பவும்...வங்கி கணக்கு விபரம் அதில் குறிப்பிட்டு அனுப்புகிறேன்...தொகை எவ்வளவு குறைவாக இருப்பினும் பரவாயில்லை...உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்..அவ்வளவுதான்...நன்றி
மெயில்;sathishastro77@gmail.com இது பற்றி விவரம் அறிய என்னிடம் பேச 9443499003

குரு வக்கிரம் என்ன செய்யும்..? மேசம்,ரிசபம்,துலாம்,விருச்சிகம்,சிம்மம்,தனுசு,மீனம்

மாசி மாசம் 21 தேதி வரை குரு வக்கிரமாக இருக்கிறது .. துலாம்,விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கும் மேசம், ,ரிசபம் ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்மறையான பலன் நடக்கும்.. அதிக பண நெருக்கடி ,தொழில் நெருக்கடி உண்டாகும் என்றால் இதற்கான பரிகாரம் என்ன என பலர் கேட்டிருக்கின்றனர்..மீனம் ராசியினருக்கும் தனுசு ராசியினருக்கும் பாதிப்புதான் ...காரணம் ராசிநாதன் குரு வக்கிரம் ஆகி இருக்கிறாரே..பிரச்சினை கடுமையாகதான் இருக்கும்..காரணம் குருதான் செல்வாக்கு..குருதான் வருமானம்...இந்த இரண்டும் பாதிக்கும் செல்வாக்கு இழப்பு என்றால் கெட்டபெயர் அவமானம் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமை...அது மட்டுமில்லாமல் குரு வக்கிரம் ஆகும் போது எதிர்பாராத மருத்துவ செலவும் குடும்பத்தில் துக்க காரியமும் உண்டாகும் குருபலம் இருந்தால் நல்ல செலவு குருபலம் இல்லாவிட்டால் கெட்ட செலவுதானே..?

 குரு வக்கிரம் ஆகி இருப்பதால் சிம்மம் ராசிக்கும் அதிக பாதிப்புகள் உண்டு..அதனால்தான் முதல்வர் ஜெயலலிதா கோயில் யானைகளை புத்துணர்வு முகாம்க்கு அனுப்பி இருக்கிறார் ..யானை குருவின் அம்சம் அல்லவா..சிம்மம் ராசியினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்..

இதற்கு என்ன பரிகாரம்..? உங்க ஊரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்யுங்கள்..குரு என்றால் மரியாதைக்குரியவர்கள்,மூத்தவர்கள்,வயோதிகர்களை குறிக்கும்...

அவர்களில் குறிப்பாக முதியோர் இல்லத்தில் இருப்போருக்கு மன வருத்தம் இருக்கும் தன்மேல் அன்பு செலுத்த யாரும் இல்லைன்னு....அவங்களுக்கு சுவையான உணவு கொடுத்து ஆசி பெறலாம்..காதுகேளாத வாய் பேச முடியாத குழந்தைகள் குரு கெடுவதால் ஏற்பட்ட பாதிப்பில் பிறந்தவர்கள் அவர்களுக்கு அன்னதானம் செய்து சந்தோசப்படுத்தலாம்...அங்கு செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்...நான் இங்கு சில வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்காக வரும் வியாழன் அன்று முதியோர் இல்லம் மற்றும் காதுகேளாத வாய்பேச முடியா குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யவிருக்கிறேன் ..மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகளும் செய்ய இருக்கிறோம்..தனியாக சிறப்பு ஹோம பூஜை செய்யலாம் என நினைக்கிறேன்...நண்பர்கள் விருப்பத்தை பொறுத்து சிறப்பாக செய்யலாம்...பூஜையில் ஒவ்வொருவர் குடும்ப அங்கத்தினர் விவரம் சொல்லி பூஜிக்க இருக்கிறோம்... அதிலும் கலந்துகொள்ளலாம்..உங்கள் அர்ப்பணிப்பை செய்யலாம்...மற்ற விவரங்களுக்கு இன்பாக்ஸ் வரவும்...அல்லது மெயில் sathishastro77@gmail.com செல்லிலும் 9443499003 தொடர்பு கொள்ளலாம்..

பரிகாரம் பற்றியும் அன்னதானம் பற்றியும் முழு விபரம் அறிய புதிய பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

கொழுப்பு சம்பந்தமான நோய்களை தீர்ப்பது எப்படி? health

இப்போ எல்லாம் டாக்டர்கள் ,தேங்காய் சட்னி சாப்பிடாதீங்க..தேங்காயை உணவில் சேர்த்துக்காதீங்க..கொழுப்பு என்கிறார்கள்...இது ஒரு செம காமெடி..தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு..கோயில்களில் பிரசாதமாக தேங்காயும் பழமும் கொடுக்கிறார்கள்...கெட்ட கொழுப்பு பொருளை கடவுள் பிரசாதமாக தரும் அளவுக்கு நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல...

தேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து தாது பொருட்களும் இருக்கின்றன....பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் பனங்கருப்பட்டியையும் ,தேங்காய்ப்பாலையும் தான் வைத்தியர்கள் கொடுப்பார்கள்..சுக்கு ,கருப்பட்டி சேர்ந்த அந்த கலவை மற்றும் தேங்காயை பிழிந்து எடுக்கப்பட்ட பாலுக்கு எந்த நோயையும் முறித்து குணமாக்கும் சக்தி உண்டு....அஜீரணம்தான் அனைத்து நோய்களுக்கும்
அடிப்படை...தேங்காய் அதை இல்லாமல் செய்வதால்தான் சமையலில் அது இல்லாமல் எந்த உணவும் தமிழர் உணவில் இல்லை.....

தேங்காய் கெட்ட கொழுப்பு அல்ல..நல்ல கொழுப்பு..மிருகங்களில் இருக்கும் கொழுப்பும் தேங்காயில் இருக்கும் கொழுப்பும் ஒன்றல்ல...உலகில் சுத்தமான நீர் தேங்காயில் இருக்கும் நீர்தான்..முன்பெல்லாம் சாககிடக்கும் தாத்தா,பாட்டிகளுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து பிழைக்க வைப்பார்கள்..இப்போது எல்லாம் மாட்டுப்பால் கொடுத்து சாகடிக்கிறார்கள்....தேங்காய் அதிகம் சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும் என்பதே உண்மை..!!

புதன், 18 டிசம்பர், 2013

கல்யாணம் சீக்கிரம் நடக்க எந்த கோயில் போகலாம்..? ஜோதிட பரிகாரம்

கல்யாணம் ஆகலையா...உடனே திருமனஞ்சேரி போயிட்டு வராங்க..நாக தோசம் இருக்குன்னா காளஹஸ்தி போறாங்க..அதெல்லாம் சரி....ஆனா இன்னும் நுணுக்கமான திருமண தடை நீக்கும் பரிகாரம் இருக்கு...முருகன் மனைவியுடன் இருக்கும் பழைய கோயிலில் வழிபடுங்க...அப்புறம் அகத்தியர் சிவபெருமானை கல்யாண கோலத்தில் தரிசனம் செய்த பழமையான கோயில்கள் மாவட்டம் தோறும் இருக்கு அங்க போயிட்டு வாங்க...குறிப்பா ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர்..ரொம்ப விசேஷம்..காவிரி கரையில் தீர்த்த கிணருகள் சூழ மும்மூர்த்திகளும் அருளும் ஸ்தலம்..அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தர் பாடிய ஸ்தலம்..பல மன்னர்கள் கோயிலை புதுப்பிச்சிருக்காங்க..காசிக்கு நிகரானது...

சனீஸ்வரர் காகம் மேல் உட்கார்ந்திருப்பது இந்தியாவில் இங்கு மட்டும்தான்..!! மகுடேஸ்வரர் என்பதால் இந்த சிவனிடம் நிறைய சூட்சுமங்கல் இருக்கின்றன..வேலை பறிபோனவர்கலும் இங்கு வழிபட்டால் மகுடம் மீண்டும் சூடப்படுவார்கள்...3000 வருடம் பழமையன வன்னி மரத்தின் கீழ் பிரம்மா இருக்கிறார் ரோகிணி நட்சத்திரம் ரிசப ராசியினர் வழிபட எல்லா பிரச்சினையும் தீரும் வெள்ளைத்தாமரை வைத்து 27 நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்...ஸ்ரீரெங்கம் பெருமாள் போல சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட சம்சார வாழ்வின் சோதனைகள் விலகும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..

ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் சனி அல்லது சூரியன் என கடுமையான தோசம் இருப்பவர்கள் பவானி கூடுதுறையில் சிறப்பு பரிகாரம் செய்த பின் கொடுமுடி செல்வதே நல்லது...பரிகாரம் செய்தாலும் செய்பவர் ராசியான அய்யராக இருக்கனும் உங்க நட்சத்திரத்துக்கு தாரபலன் இருக்கும் நாளாக இருக்கனும்...பரிகாரம் செய்தவர் பல கல்யாணங்களை நடத்தி வைத்தவராக இருக்கனும்..உங்க ஜாதகப்படி இப்போ திசாபுத்தி தடையில்லாம இருக்கனும்...அதுக்கு விளக்கமாக தெரிஞ்சிக்க என் மெயிலுக்கு எழுதுங்க..விரிவா சொல்றேன்...பரிகாரம் செய்வதாக இருந்தா மட்டும் எழுதவும் sathishastro77@gmail.com


சனி, 7 டிசம்பர், 2013

ஃபேஸ்புக் ஜோதிடம் facebook astrology

ஃபேஸ்புக்கில் நான் எழுதிய ஜோதிட குறிப்புகள்;

எனது ஃபேஸ்புக் ஐடி...சதீஷ்குமார்ஜோதிடர்

நடப்பு டிசம்பர் கடைசியில் வால் நட்சத்திரம் தோன்ற போகிறது இது 60,70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அதிசயம்...வால் நட்சத்திரம் தோன்றினால் நாட்டின் அரசியல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்ற நம்பிக்கை பல முறை நிஜமாகி இருக்கிறது...லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் வால் நட்சத்திரம் தோன்றிய காலம்தாம்..மூத்த அரசியல் வாதிகளில் தென்னகத்தை சேர்ந்தவர்கள்,மற்றும் தேசிய அரசியல் தலைவர்களில் ஒரு சிலருக்கு இது கண்டமான காலம் என சொல்லலாம்...இன்னும் சில குறிப்புகள் நாளை மற்றும்,திங்கள்கிழமை விரிவாக பார்ப்போம்

 உங்கள் ஜென்ம நட்சத்திரத்துக்கு யோகமான நட்சத்திர காலில் நின்று திசை ஜாதகத்தில் நடப்பவர்கள்தான் வேகமான முன்னேற்றத்தை அடைகிறார்கள்..மிதுன லக்னம்..குரு பாவி ஆச்சே...குரு திசை நடக்குது..உனக்கு மரண கண்டம் வாசல்ல நிற்குது..ன்னு ஒரு ஜோசியர் சொன்னார்..ன்னு ஒருவர் கலக்கமுடன் வந்தார்...பூசத்தில் நின்று குரு திசை நடக்குது..நீங்க வீடு கட்டுவீங்கன்னு சொன்னேன்...கண்டம் இல்லைன்னு சொன்னேன்...ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்னது..இன்னிக்கு பழத்தட்டுகளுடன் வந்து சந்தோசமாக நீங்க சொன்ன மாதிரியே நடந்துச்சி..வீடு கட்டிட்டேன் என்றார்...ஜாதகத்தில் கிரகம் எப்படி இருப்பினும் திசை யோகமாக இருந்தால் சிறப்பு...எம்.ஜி.ஆர்..ரஜினிக்கெல்லாம் யோகமான ஜாதகம்தான்..ஆனா 30 வயது வரை கஷ்டம்தான்..யோகமான திசை வந்தபின் தான் வேகமான முன்னேற்றம் அடைந்தார்கள்...

 கோயிலுக்கு போனால் நட்சத்திரம் பெயர் சொல்லிதான் அர்ச்சனை செய்து கொள்கிறோம் ஒரு ராசிக்கு மூன்று நட்சத்திரங்கள் வருவதால் ஜென்ம நட்சத்திரம் முக்கியம்..மிருகசிரீடமும் ரிசபம் ராசிதான்..ரோகிணியும் ரிசப ராசிதான் ஆனால் இருவருக்கும் வித்தியாசம் உண்டு..ஜென்ம நட்சத்திரம் அடிப்படையில் யோகமான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம்..இதைதான் நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்..ராமாயணத்தில் ராமரே தனது புனர்பூசம் நட்சத்திரத்துக்கு நல்ல நாள் தேர்ந்தெடுத்துதான் போரும் புரிந்திருக்கிறார்....இப்போது எல்லாம் முகூர்த்தம் வளர்பிறையில் அமைந்தால் போதும் என முடிவு செய்கிறார்கள்..ஜென்ம நட்சத்திரத்துக்கு அது உகந்ததாக இல்லாவிட்டால்தான் கஷ்டமும் நஷ்டமும் தான் வந்து சேரும்...!!