புதன், 25 ஏப்ரல், 2018

உங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட விளக்கம்


 ஒருவர்  ஜாதகத்தில்   9 , 10  , 11  ல் கேது   அமையப்பெற்றால்  மருத்துவக்கராகனாகிய   சந்திரன்  உச்சம்  பெற்று   அமையப்பெற்றால்  மருத்துவக்கல்வி  அமைகிறது  .
சூரியன்   +  செவ்வாய்    இணைந்து   காணப்பட்டாலும்   , பரிவர்த்தனை  பெற்றாலும்  மருத்துவக் கல்வி அமையும் .



9  மிடம்   நன்றாக  இருக்க வேண்டும் .   குருவுக்கு   கேந்திரத்தில்  செவ்வாய்  அமைந்தால்     குரு   மங்கள யோகம்   ஏற்படும்  .

  வழக்கறிஞர்    படிப்புக்கு   வாக்கு ஸ்தானத்தில்   குரு  , புதன் ,  பலம் பெற்று   காணப்பட  வேண்டும் .
அதோடு    2 , 10 க்கு   அதிபதிகள்  பரிவர்த்தனை   பெற்றால்  பெரும்   6  மிடம்   பலம் பெற்று     , 6  க்கு  அதிபதியும்   பலம்  பெற்றால்  தான்  வக்கீல்  தொழில்   உண்டாகும் .
மற்றும்    1_2   , 2  _ 9  , 2  _    11  ஆகியோர்   பரிவர்த்தனை   அடைய வேண்டும் .

 கலெக்டர்  படிப்பு   படிக்கப்    2 . 11  ஆகிய  ஸ்தான்ங்களில்   செவ்வாய்  , சனி  ஆட்சி  பெற்றுக்  காணப்பட்டால்     தேர்வில்   வெற்றி  பெற்று  யோகம்   பெறுவார் .

    செவ்வாய்  பலம்  பெற்றவர்கள்  அறுவை  சிகிச்சை  செய்யும்    டாக்டர்களாக   விளங்குவார்கள்  .   சூரியன்    சாரத்தில்    செவ்வாய்   நின்றாலும்   செவ்வாய்  சாரத்தில்   சூரியன்   நின்றாலும்   டாக்டர்   தொழிலில்   சாதனை   செய்வார்கள் .

    ஒருவருக்கு   கல்வி  தடைப்பட்டாலும்   2 , 4 , 5   க்கு  அதிபதிகள்   திசை   நடைபெறும்   போது   தடைபட்ட   கல்வியை  மீண்டும்   தொடரும்   நிலை  ஏற்படும் .



  கோச்சாரம்  கெடும் போதும்   7  ½   சனி அஷ்டமசனி   நடைபெ றும்  போது   நன்றாக   படிக்கும்   மாணவர்கள்   கல்வியில்   குறைந்த   மதிப்பெண்   பெற்று    தோல்வி   அடையும்   நிலை  ஏற்படும் .

 புதன்  நின்ற   வீட்டிற்கு   அதிபதி   புதனுக்கு  1 . 4 , 7 , 10   போன்ற  கேந்திரங்களில்   இருந்தால்   உயர்ந்த   படிப்பு   , பட்டப் படிப்பு   ஏற்படுகிறது  .
மற்றும்    2  மிடத்தில்    சனி  , ராகு    போன்ற   கிரகங்கள்   அமைந்தால்   கல்விக்கு   தடை  ஏற்படும் .

சனி தோசம் நீங்க வழிபட வேண்டிய கோயில்கள்

 7 ½ சனி  தோஷ  நிவர்த்தி   முடியும்  போது   செல்ல வேண்டிய   திருத்தலம்   திருநள்ளாறு   மயிலாடுதுறையில்  இருந்து   30  கி .மீ  தொலைவில் உள்ளது .

7 1/ 2   சனி  ஆரம்பகாலத்தில்     செல்ல வேண்டிய   ஸ்தலம்  குச்சனூர்   ஆகும் .
வழித்தடம்  :    தேனியில்    இருந்து  28 .கி.மீ  தொலைவில் உள்ளது .
சின்னமலையிலிருந்து   அதிக  பஸ்  வசதி உண்டு .

   அஷ்டமச்சனி   பாதிப்பு  நீங்க  புதுக்கோட்டை  மாவட்டம்  அறந்தாங்கியால்   இருந்து  5 கி .மீ  தூரம்  உள்ள  எட்டித்தளி   ஸ்ரீ அகத்தீசுவரர்   ஸ்வாமியை  வழிபட    அஷ்டமச்சனி  , ராகு  , கேது   தோஷம்  ,களத்திர தோஷம்  அனைத்தும்  நீங்கும் .

 சனி  தோஷம்  அனைத்தும்   நீங்க   திருநறையூர்   சென்று  சனீஸ்வர பகவானை  சனிக்கிழமையில்  8  முறை  வலம்  வந்து  சனீஸ்வர   வழிபாடு   செய்தால்   சிறப்பு  தரும் .
இங்கு   சனீஸ்வரருக்கு    இரும்புக்கொடி  கம்பம்  , பலிபீடம் , தனி காக  வாகனம்  உள்ள  ஆலயம் .

வழித்தடம்   ;   கும்பகோணம்  _  திருவாரூர்   சாலையில்   10 கி. மீ  தொலைவில்  உள்ள  நாச்சியார்  கோயில்   ஸ்ரீ  சீனிவாசப்  பெருமாள்  கோயில்  
    , சித்த நாத   சுவாமி  கோயிலுக்கு  இடையில்  அமைந்துள்ள   ஸ்ரீ    பர்வதவர்த்தினி  உடனுறை  ஸ்ரீ   இராமநாத சுவாமி    ஆலயத்தில்   மங்கள சனீஸ்வரர்  உள்ளார் 

இரண்டு மனைவி அமையும் ஜாதகம் விளக்கம்



·         லக்னாதிபதி அஸ்தங்கம்  அடைத்து  7  ல் அமர்ந்து  7  ம் வீட்டோன்  லக்கினத்துக்கு  8 , 6  ( )  12  ல் அமர்ந்து   ( மறைவு பெற்று  )  சுபர்களின்  பார்வை  இல்லையெனில் 



·         ஜாதகர்  லக்னாதிபதி   திசையில்  7  க்குடையவன்  புத்தியில் இரண்டு  தாரம் அமைத்து  விடுகிறது  .

·          7  ம்  அதிபதி  லக்னத்தில்  அமர்ந்து   லக்னாதிபதி   பலவீனமாகி  6 , 8 , 12  ல் அமர்ந்து   அவரை  சுபகிரகம்   பார்க்கவில்லையெனில்  7  ம் அதிபதி திசையில் இலக்கனாதிபதி  புத்தியில்  ஜாதகனுக்கு  இரண்டு  தாரம்  அமைந்து  விடுகிறது .

·         லக்கினாதிபதி  லக்னத்திலும் 7  ம் அதிபதி  7   ல் ஆட்சி பெற்று இருவரில் ஒருவர்   வக்கிரமாகி  இருவரில்  ஒருவர் திசை  ஒருவர் புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு   2தாரம்  அமைந்து  விடுகிறது  .

·         மேலும்   பலவீனமடைந்த லக்கினாதிபதி  அமர்ந்த  வீட்டோன் 2 ம் வீட்டிலோ  , ( ) 7  ம் வீட்டிலோ  அமர்ந்து  அந்த  வீட்டாதிபதி  அஸ்தங்கமாகவோ  , நீசமாகவோ ,  வக்கிரமாகவோ ,   அமைந்து  விட்டால்   ஜாதகனுக்கு  இரண்டு  தாரம்   அமைந்து  விடுகிறது  .

·         லக்கினாதிபதி  பலவீனம்  அடைந்த  மறைந்த  ஜாதகத்தில்   களத்திர ஸ்தானாமாகிய 7  ம் வீட்டில்  பாவர்கள்   நின்று 7  திசையில்   லக்கினாதிபதி  புத்தியில்  ஜாதகனுக்கு  இரண்டு  தாரம்  அமைந்து   விடுகிறது  .

·         லக்கனாதிபதி   பலவீனம்  அடைந்த  ஜாதகத்தில்   2  ம் அதிபதியும்  , 7 ம்  அதிபதியும்   பாதிக்கப்பட்ட  ஜாதகனுக்கு  தார தோஷம்  ஏற்படுவதை  தவிர்க்க  இயலாது


   


     ·         ம் அதிபதி   பாவருடன்  கூடி  2 ம் வீட்டு  அதிபதி  6 , 8 , 12  , ல்  மறைந்து   சுபகிரகங்களின்  பார்வை  அவர்களுக்கு இல்லாமல் இருந்து   லக்கினாதிபதி  பலவீனம்  அடைந்து   லக்கினத்துக்கு  மறைந்து  விட்டால்  ஜாதகனுக்கு  இரண்டு  தாரம்  அமையும் .




பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ;


பெண்களுக்கு  மாங்கல்ய  தோஷம்  விளக்கம் 


·         8  க்குடையவன்  சூனியம்  அடைந்தாலோ  . சூன்ய  ராசியில்  நின்றாலோ  , சூனிய  கிரகத்தின்   சாரம்  பெற்றாலோ  மாங்கல்ய தோஷம் ஏற்படும் .

·         8  குடையவன்   நீசம்   பெற்றாலோ  ,  அஸ்தங்க தோஷம்  பெற்றாலோ , 6  க்குடையவன்  சேர்ந்தாலோ  , 6  க்குடையவன்  சாரம்  பெற்றாலோ  மாங்கல்ய தோஷம் ஏற்படும் .


·          8  ல் ராகு  ,  கேது  , மாந்தி  , சூரியன் ,  செவ்வாய்  , சனி அமர்ந்தால்   மாங்கல்ய தோஷமாகும் .
          


 ·          8க்குடையவனுடன்   இராகு  ,கேது  , மாந்தி  . சூரியன்  , செவ்வாய்  , சனி  ஆகிய  கிரகங்கள்  பார்த்தால்   , இணைந்தால்  மாங்கல்ய  தோஷமாகும் .

·         8  குடையவனையோ  , 8  மிடத்தையோ   இராகு  , கேது  , மாந்தி  . சூரியன் , செவ்வாய் , சனி   ஆகிய  கிரகங்கள்   பார்த்தால் தோஷமாகும்

·           8க்கு  குடையவன்  பாதாகாதிபதி   சம்பந்தப்பட்டால்  8  ம் மிடத்தில்   பாதகாதிபதி  சம்பந்தம்  ஏற்பட்டால்   மாங்கல்ய தோஷமாகும் .

·           ரிசப  லக்னத்துக்கும் , சிம்ம லக்னத்திற்கும்  , குரு  சூன்யம் அடைந்தலோ  , மாந்தி  , ராகு  , கேது  ஆகியன சம்பந்தப்பட்டாலோ  , அஸ்தங்கம்  அடைந்தாலோ  மாங்கல்ய தோஷமாகும் ,

·         பலமான மங்கல்ய தோஷத்தை  ஏற்படுத்தும்  கிரகங்கள்  இராகு , கேது  மாந்தி  ஆகியன ஆகும் .


·           பாம்பும்   சனியும்  உடன்  கூடில்  சேயரிடடம்
        தேள்  , தனுசு  , சிங்கம்   இவையினில்  அமர்ந்திட
      நேய ஆள்பவர்   தனக்கும்   நாட்டிற்கும்  துன்பமே “ .
  

திங்கள், 16 ஏப்ரல், 2018

அட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..!!

அட்சய திருதியை 18.4.2018

வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதியை..சிவனும்,சக்தியும் பரிபூரணமாக ஆசியை வழங்கும் நாள்
பரசுராமர் அவதரித்த நாள்...(நான் பிறந்ததும் அட்சய திருதியை 🙂 )


அட்சய திருதியை நாளில் நமது வேண்டுதல்கள் பலிக்கும்.செய்யும் காரியங்கள் புனிதமடையும்.தானம் செய்யும் பொருட்கள் உங்களுக்கு பல்கி பெருகும்.நீங்க தங்கம் தானம் செய்தா தங்கம் பெருகும் வெள்ளி தானம் செய்தா வெள்ளி பெருகும். அதை மட்டும் செய்ய மாட்டீங்களே..🙂
.தங்கம் வெள்ளி வாங்குவதோடு சரி..

ஆனா அக்காலத்தில் மன்னர்கள் செய்திருக்கிறார்கள் திறமையானவர்களையும் கலைஞர்கள்,புலவர்களையும் அழைத்து இந்நாளில் தங்கம்,வெள்ளி பரிசு கொடுத்திருக்கிறார்கள்..வசதி இருப்போர் செய்து பாருங்க...போன அட்சய திருதியைக்கு ஒரு நண்பர் அரை கிராம் தங்கம் எனக்கு வழங்கினார்...அடுத்த முறை ஒரு ஏழைப்பெண்ணுக்கு கொடுங்க என சொல்லிவிட்டேன்.

திருமணம் ஆகாத ஏழைபெண்களுக்கு வசதி இருப்போர் இந்நாளில் உதவுங்கள் உங்கள் வம்சத்தில் எல்லோருக்கும் குடும்ப ஒற்றுமை உண்டாகும்

உடல் ஊனமுற்றோர்களுக்கு துணிகள் ,வாக்கிங் ஸ்டிக் போன்றவற்றை கொடுங்கள் உங்கள் வம்சத்தில் யாருக்கும் அங்க ஊனம் உண்டாகாது
ஆதரவற்றோர்க்கு அன்னதானம் செய்யுங்கள் ..வம்சத்தில் யாவருக்கும் பசி பஞ்சம் வராது

ரத்த தானம் செய்யுங்கள் வம்சத்தில் யாருக்கும் விபத்து உண்டாகாது

ஏழைக்குழந்தைகள் கல்விக்கு உதவுங்கள் ..சரஸ்வதி அருள் கடாட்சம் உங்க குடும்பத்துக்கு உண்டாகும்

வசதி குறைந்தவர்கள் அன்று நல்ல நேரத்தில் கல் உப்பு ஒரு கிலோ,பசும்பால்,மஞ்சள்,அரிசி இவற்றை வாங்கி வீட்டில் சேமிக்கலாம்.பெருகும்.

இவற்றில் எதை முடியுமோ அதை மறக்காமல் செய்து விடுங்கள் ..சிவசக்தி அருள் பெறுங்கள் !!

அட்சய திருதியை 18.4.2018 நல்ல நேரம்
தங்கம் ,வெள்ளி வாங்க இந்நாளில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கும்...ஏனெனில் இது ஒரு பெருகும் நாள் ..

தங்கம் வாங்குவது மட்டுமல்லாமல் இந்நாளில் நீங்க யார்கிட்ட எல்லாம் அதிகமா கோவிச்சுக்கிட்டு இருக்கீங்களோ அவங்களுக்கு பிடிச்சதை வாங்கி கொடுத்து சந்தோசப்படுத்துங்க..அதிக அன்பை காட்டுங்க..அன்பு பெருகும்.

அதுக்காகத்தான் மனைவிக்கு தங்கம் வாங்கி தரோம்னு சொல்றீங்களா...அதுவும் சரிதான்.கணவருக்கு மனைவி பதிலா எதுவும் செய்யனுமே..? கணவருக்கு வெள்ளை ,மஞ்சள் நிற ஆடைகளை வாங்கி கொடுங்க..

தங்கம் வாங்கி அணிய நல்ல நேரம் காலை 9 மணிமுதல் 10 மணி வரை
பகல் 1.30 முதல் 3 மணி வரை
மாலை 4 மணிமுதல் 5 மணி வரை

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறோம்..?

சித்திரை மாதம் ஏன் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது..? 14.4.2018
====================

மேஷத்தில் பரணி என்ற நட்சத்திரத்தில் கிரகங்களின் அரசன் சூரியன் உச்சம் பெறுகிறார், அதை கருத்தில் கொண்டே சித்திரை மாதம் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சூரியன் தனது பார்வையை பூமத்திய ரேகையில் செலுத்தும் இந்த காலத்தில், சம அளவு வெப்பத்தை மகர ரேகை மற்றும் கடக ரேகை பகுதிகளிலும் செலுத்தும் என்பதும் இன்னொரு அறிவியல் சூட்சுமம் ஆகும். இதில் இன்னொரு ஜோதிட சூட்சுமம் என்னவென்றால், கிரகங்களில் அதிக பலம் கொண்ட கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் தனது பயணத்தை தொடங்கி, குறைவான பலம் கொண்ட புதனின் நட்சத்திரத்தில் தனது பயணத்தை முடிகிறது.



இத்தகைய சிறப்பு கொண்ட சூரியன், பூமியில் இருந்து பார்க்கும் போது, தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை மாத ஆரம்பத்தில் மேஷ ராசி மண்டலத்தில் இருக்கிறார். ஆதாவது பூமியின் நடுப்பகுதில் தனது ஒளிக்கதிர்களை செறிவாக செலுத்தும் காலம் இதுவே. இதை வேறு விதத்தில் கூற, பூமி சூரியனை சுற்றிவரும் நீள்வட்ட பாதையில் சூரியனை நெருக்கி செல்லும் காலம் என்றும் கூறலாம்.

மேஷ ராசியில் இருக்கும் அஸ்வினி என்ற நட்சத்திரத்தில் இருக்கும் போதே தமிழ் புத்தாண்டு ஏற்படுகிறது. அஸ்வினி என்ற நட்சத்திரம் குதிரை வடிவம் கொண்டது. சூரியன் எனும் அரசன் குதிரை (அஸ்வினி) மேல் பயணம் செய்கிறார் என்ற உவமையும் இங்கே செய்து பார்க்கலாம்.

எனவே அனைவரும் சூரிய வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து, தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

--------------------------------------------------------------------------
சித்திரை 1 தமிழ் புத்தாண்டு 14.4.2018 சனிக்கிழமை அன்று காலை 8.10 க்கு விளம்பி ஆண்டாக பிறக்கிறது...!!

சித்திரை கனி வழிபடும் முறை

முக்கனிகள் மா,பலா,வாழை உட்பட கனிவகைகள் வாழை இலையில் வைத்து பச்சரிசி பரப்பி செம்பு குடத்தில் நீர் வைத்து மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை கலசம் போல் வைக்கவும்...குத்து விளக்கு அருகில் வைக்கவும் முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கவும். உப்பு,பருப்பு தானியங்கள் வைக்கவும்..பணம் ,காசுகள்,தங்கம்,வெள்ளி இவற்றை வெற்றிலை பாக்கில் வைக்கவும்.பஞ்சாங்கம் அல்லது கணக்கு நோட்டு புத்தகங்கள் வைக்கலாம் மஞ்சள் பில்ளையார் பிடித்து அருகம்புல் வைக்கவும்.மகாலட்சுமி படம் ஒன்றையோ திருப்பதி பெருமாள் படத்தையோ வைக்கலாம்..நாளை பிரம்ம மூகூர்த்தம் எனப்படும் 5 முதல் 6 மணிக்குள் சித்திரை கனியில் கண் விழித்து குத்து விளக்கேற்றி வழிபடவும்..!! சாப்பிடும்முன் அருகில் இருக்கும் அம்பாள் கோயில் சென்று வழிபடவும்!!

திருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்"?

திருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்"?


திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதரத்துடன் பதிவு யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்  வாருங்கள்...



இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம்  நிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துபடி  வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.


குறிப்பு

சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால்
நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதிணோர் மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டூள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது மாறாக அங்கு கூச்சலும் குலப்பமாக தான் இருக்கும் இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னம் காரர்கள் தெரியுமா. மேஷம்  , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் அவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ

" சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " --

“ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

பொதுப்  பொருள்:

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம் "

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

திருநள்ளார் சனீஸ்வரனை வழிபடும் முறை

திருநள்ளார் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு ..சனிக்கிழமை மட்டும்தான் அங்கு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.அன்று மட்டும்தான் சனி பகவான் உங்களை பார்த்து சரி இவருக்கு இனி கஷ்டம் கொடுக்க கூடாது என முடிவு செய்வார்னு நினைக்காதீங்க...உங்க பிறந்த கிழமை பிறந்த நட்சத்திரம் பிறந்த மாதத்திலும் செல்லலாம் ..ஜென்ம நட்சத்திரத்தில் உங்க இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் கேட்ட வரம் கிடைக்க அதிக வாய்ப்புண்டு.
திருநள்ளார் குளத்தில் குளித்தவுடன் துணியை அவிழ்த்து குளத்தில் விட்டு விடுவதால் சனி அந்த துணியோடு போய்விடுவார் என்று நம்ப வேண்டாம் .
நளமகாராஜா வழிபட்டதால்தான் நாமும் திருநள்ளார் போகிறொம் அவர் எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டு சனி முடியும் போதுதான் அங்கு போனார் அதுவும் சனியை வழிபட அல்ல.தர்ப்பணேஸ்வரரை வழிபடத்தான்.முதலில் சிவன் அதன் பின் அம்பாள் அதன் பின் சனியை வழிபடுவதே முறையாகும்.


கோயிலுக்குள் செல்லும் முன் வாசலில் உள்ள வினாயகருக்கு இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபட்டபின் ...சிவபெருமானை வில்வம் வைத்து வழிபட வெண்டும் உங்கள் பெயர் ராசிக்கு அர்ச்சனை செய்து கொள்ளவும்..அதன் பின் அம்பாளுக்கு மலர்மாலை அணிவித்து வழிபடவும் அதன் பின் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும்..

அங்கு மதியம் 12 மணியளவில் மரகதபச்சை லிங்க வழிபாடு பூஜை நடக்கும் விசாரித்துக்கொள்ளவும் அதனை பார்த்து வந்தால் இன்னும் சிறப்பு....

ரிசபம்,மிதுனம்,கன்னி ராசியினர்   சனிக்கிழமை  மாலை 6 மணிக்கு பெருமாள் கோயில் சென்று துளசி மாலை சார்த்தி இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் சனியால் ஏற்படும் துன்பம் விலகும்

விருச்சிகம் தனுசு மகரம் ராசியினர்  சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து மாலையாக கட்டி அனுமனுக்கு சார்த்தி இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் ஏழரை சனி துன்பம் விலகும்

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

முனிவர் விட்ட சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி..?

முனிவர் விட்ட சாபம்

உங்க முன்னோர்களோ அல்லது தாய் தந்தையோ முனிவர்கள் அல்லது மகான்களிடம் சாபம் வாங்கியிருந்தால் அதை கண்டுபிடிப்பது எப்படி..முனிவர் சாபம் பொல்லாதது..அது நம்மையோ நம் குழந்தைகளையோ வாழ்வில் அதிக போராட்டத்தையோ அல்லது உடல் ரீதியாக ஊனத்தையோ கொடுத்து வாழ்நாள் முழுக்க கண்ணீர் சிந்த வைத்துவிடும்.உடல் அங்க குறைபாடாக இருந்தாலும் கை கால்கள் செயலற்று போக கூடிய பக்கவாத நோய் உட்பட புற்று நோய் போன்ற கடுமையான நோயாக இருந்தாலும் அதன் பிண்ணனியில் முனிவர் சாபம் இருக்கும்..

ஜாதகத்தில் 1,4,7,10 ல் சனி இருந்து அவரை குரு உட்பட சுபர் யாரும் பார்க்காவிடில் இந்த முனிவர் சாபம் இருப்பது உறுதியாகும்

இதனால் ஜாதகருக்கோ அல்லது தாய் தந்தைக்கோ அல்லது மகன் மகளுக்கோ கடுமையான நோய்கலின் தாக்கம் உண்டாகும் குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாதம் போன்ற வாதம் சம்பந்தமான நோய்கள் இருக்கலாம்

இது போன்ற கடுமையான தோசங்கள் நீங்க திலக் ஹோமம் செய்வது நல்லது ராமேஸ்வரம் குடும்பத்துடன் சென்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வது நலம் தரும்...








மேசம்,சிம்மம்,விருச்சிகம் ராசிக்காரங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா..?

அவன் ஒரு சூடுபிடிச்சவன் என கிராமங்களில் சொல்வார்கள் கோபக்காரர்கள் ,கலககாரர்களை பார்த்து இப்படி சொல்வதுண்டு..
மேசம்,விருச்சிகம்,சிம்மம் ராசிக்காரர்களை சூடுபிடிச்சவங்க என சொல்லிடலாம் ஆனா ராசியிலோ லக்னத்திலோ குரு இருந்தால் சூடு குறையும்..சித்திரை மாசம் பிறந்தவங்களும் சூடு பார்ட்டிதான்.
இவங்களை போல நல்லவர்கள் ,அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணம் கடுமையான உழைப்பு யாரிடமும் இருக்காது.அதே சமயம் இவர்கள் நேர்மையானவர்கள் ..தன்மானம் அதிகம் உடையவர்கள் மத்தவங்க நேர்மையா இல்லை என்றால் தன்மானத்துக்கு பங்கம் வந்தால் மட்டும் இவர்களுக்கு சூடு பிடிக்கும்..அடுத்தவருக்கு சூடும் போடுவார்கள் ...பலாப்பழம் மாதிரிதான் முகத்தில் அடுப்பு எரிந்தாலும் உள்ளே பனிக்கட்டிதான்.இவங்களை மனசார பாராட்டினா கூல் பார்ட்டி ஆகிடுவாங்க.

ரிசபம்,கடகம்,துலாம் ராசியினர் வசியமானவங்களா

ரிசபம்,துலாம்,கடகம் ராசியினர் பணத்தை தண்ணீராக செலவழித்தாலும் பணம் அருவி போல கொட்டுவதும் இவர்களுக்குதான்..ஒரு சிலருக்கு பண நெருக்கடி இப்போ இருந்தாலும் வசியம் அதிகம் கொண்டவர்கள் இவர்கள்தான்.இவர்களை தேடி பணம் வரும்.உறவுகள் ,நட்புகள் இவர்கள் அன்பை அதிகம் விரும்புவர் காரணம் குழந்தை போன்ற மனசு.தனக்கு எதுவும் வெச்சிக்கிறாரோ இல்லையோ குடும்பத்துக்கும் உறவுக்கும் அதிகம் செலவு செய்வர்.
எல்லோரும் சந்தோசமா இருக்கனும் நல்லா சாப்பிடனும்..ஒரு சின்ன நிகழ்வை கொண்டாட்டமாக மாற்றும் மேஜிக் இவங்க கிட்டதான் இருக்கு.லட்சுமியின் அருள் நிறைந்தவர்கள் அம்மா ,அத்தை,தங்கை,அக்கா பாசம் அதிகம் இவங்களுக்கு கிடைக்கும்..அவர்களிடம் நைசா பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்..இவங்க பேசினாலே போதும் அந்தளவு பேச்சில் சுவாரஸ்யம் இருக்கும்.நாளைக்கு என எதுவும் வெச்சிக்கிறாங்களா தெரியாது இன்று சந்தோசமா இருந்தோம் என்ற திருப்தி இவங்ககிட்ட எப்பவும் இருக்கும்

வியாழன், 5 ஏப்ரல், 2018

வங்கிப்பணி,மருத்துவகல்வி யாருக்கு கிடைக்கும்..? ஜாதக பலன்கள்


ஒரு மாணவன் மருத்துவம் படிக்க சூரியன்,சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம்.செவ்வாய் ,குரு மறையாமல் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக உதவும்.சனி கேந்திரம் திரிகோனத்தில் இருப்பது மக்கள் செல்வாக்கு புகழ் உண்டாக வழி செய்யும்..

வங்கி பணிக்கு குரு ,புதன் ஜாதகத்தில் கெடாமல் இருப்பதும் பலமாக இருப்பதும் அவசியமாகும்..




9 , 10 , 11 , ல்  கேது  அமையப் பெற்றாலும்  , மருத்துவக்கராகன் சந்திரன் உச்சம்  பெற்றாலும் , சூரியன்  , செவ்வாய் , இணைந்து    காணப்பட்டாலும் () பரிவத்தனை  அடைந்தாலும்   மருத்துவக் கல்வி அமையும்.


லக்கனத்திற்கு  2 , 10 ,  ல் செவ்வாய் ,  சனி , போன்றவர்கள்  ஆட்சி  பெர  வேண்டும்.  மற்றும்   செவ்வாய்   9 ல் அமர்ந்து   குரு  பார்வை   பெற்றால் I a s    ஆகலாம் .


 3 , 6 , 10 ,11 , ல்   செவ்வாய்  அமர்ந்து குரு  பார்வை  செய்தால்   அரசு   வேலை  கிடைக்கும்.    10 ல்  குரு  அமைய  பெற்றவர்கள்  வங்கியில்  வேலை   பார்ப்பர்.


 10 ல் சுக்கிரன்  பலம்  பெற்று   சுக்கிரனை  குரு  பகவான்  பார்வை  செய்தால்   கலைத்துறையில்  தொழில்  அமையும். 


 லக்கனாதிபதி  2, 12 ம் வீடுகளின் அதிபர்களுடன்  சம்பந்தம்  பெற்றால் சிறை  செல்லும்  அமைப்பு  உண்டாகும்.

அசுபர்கள்   2 ,12 , ம்  வீடுகளில் அமர்ந்து திசா புத்தி காலங்களில்  சிறை செல்லும்  வாய்ப்பு  ஏற்படும்.

. ஜாதகத்தில்  யோகத்தை  தரக்கூடிய  கிரகங்கள்  வக்கிரம்   அடையக்கூடாது.

. சனி பகவான்  வக்கிரம் அடைந்தால்   காரியத்தடை ,   வியாபார  நட்டம் , காரியம்  தோல்வி  ஏற்படும் 
.
 குரு  பகவான்   வக்ரம்   அடைந்தால் சுபகாரியம்,   எடுக்கும்  காரியம் , வெற்றி , உயர்வு , பெருமை  ஏற்படும் 
.
. செவ்வாய்  வக்ரம்  அடைந்தால் விபத்து , உடல் நலக்குறைவு  சகோதரனுடன்  கருத்து  வேறுபாடு தோன்றும்.

 7 ல் சூரியன்  - சனி  சம்பந்தம்  பெறுவது  நல்லத  அல்ல  ஆயுள்காரகன்  சனி   சூரியனுடன்  சேர்ந்து   அஸ்தங்கம்  அடைந்தால் ஆயுள்  தோஷம்  ஏற்படும்.

 . சகோதர காரகன்  செவ்வாய்  3 ம்  இடத்தில்  இருப்பது   சகோதர  தோஷம்  காட்டும்.  காரகோ  பாவ  நாசன்  விளக்கம்  ஆகும்.

. லக்கனத்திற்கு  ()  சந்திரனுக்கு    8 ல்  ராகுவும்   () 12 ல்  சனி  பகவான் அமரக்  கூடாது .

. சந்திரன்   6 ,8 ,ல்  இருப்பதும்  நன்றல்ல .

. பிறப்பின்  கால திசை  கிரகம்   லக்கினத்திற்கு   6 ,8 , 12 , க்கு  உடையவராகி  திசையை  தொடங்காமல்  இருப்பது  நல்லது. , 

 லக்கனாதிபதி 5 , 9 ,  க்குடையவர் சம்பந்தம்  பெற்று எங்கு இருப்பினும்  யோகவான்  ஆவார்