வெள்ளி, 27 மே, 2011

ஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்? blood pressure


ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்?
உயர் ரத்த அழுத்த நோய், குறைந்த ரத்த அழுத்த நோய் (பிளட் பிரஷர்) உள்ளவர்கள் அதற்கான வைத்தியங்களைச் செய்து கொள்ள வேண்டும்.  மேலும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு மஞ்சள் துணி அணிவித்து, கொண்டக்கடலையை நிவேதனம் செய்து, மஞ்சள் பூ கொண்டு அவரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.  'ஓம் குருவே நமஹ' என 108 தடவை கூறி குரு பகவானை 9 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.  இந்தப் பரிகார வழிபாட்டை மூன்று வியாழக்கிழமை செய்ய வேண்டும். பின் நிவேதனம் செய்து கொண்டக்கடலையை அர்ச்சகருக்கு தானமாய் கொடுத்துவிட வேண்டும்.  இவ்வாறு செய்தால் பிளட்பிரஷர் குணமாவதைக் காணலாம

செவ்வாய், 24 மே, 2011

எம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope


எம்.ஜி.ஆர் ஜாதகம் -ஒரு விளக்கம்

எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும், கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக விளக்கம் எதற்கு என்றால் புகழ்பெற்றவர்களின் ஜாதகத்தில் இருக்கும் சில நல்ல அம்சங்களை வைத்துதான் சில ஆய்வுகளை மேற்கொண்டால்தான் பல ஜோதிட புதிர்களை அறிய முடியும்...இது ஜோதிடம் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன்!




மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ;பிறந்த தேதி;28.1.1917
பிறந்த நேரம்;6.30 a.m
பிறந்த ஊர்;இலங்கை கண்டி
ராசி;மீனம்
நட்சத்திரம்;ரேவதி





எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17 என்பதுதான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது..ஆனால் இந்த பிறந்த தேதி குறிப்புகள்தான் சரி என பல வருடங்களுக்கு முன்,ஒரு ஜோதிடர் பத்திரிக்கையில் எழுதியிருந்தார்...இது சரியாக பொருந்தி வருகிறது...

அரசியலில் புகழ்பெற்றவர்கள் ஜாதகம் என்றாலே நாம் செவ்வாய் அவர்களுக்கு எப்படி என்பதைத்தான் பார்ப்போம்.அந்த வகையில் எம்.ஜி.ஆர் தமிழ்கத்தின் அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அல்லவா..? 1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள் தமிழக அரசியலில் இருந்தார்.அவர் ஜாதகத்திலும் ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றும், நவாம்சத்தில் பத்துக்குடைய சுக்கிரனை செவ்வாய் பார்வை செய்தும் பலம் நிறைந்து இருப்பதை அரசியல் பலத்தை குறிக்கிறது..அம்சத்தில் செவ்வாய்,சந்திரன் பார்வை....சசிமங்கள யோகத்தை ஏற்படுத்தி சந்திர திசையில் சரித்திர புகழை கொடுத்தது.

புத்திர ஸ்தானம்,5 ஆம் அதிபதி சுக்கிரன்,பாக்யாதிபதி புதன் 12 ல் மறைந்து,அவர்களுடன் பாம்பு கிரகம் ராகு கூடியதால் புத்திர தோசம்.அம்சத்திலும் 5 க்குடைய புதன் எட்டில் மறைந்திருப்பதை காணலாம்...


புதன்,சுக்கிரன் இணைவு ஸ்ரீ வித்யா யோகம் ஏற்பட்டு,9,10 க்குடையவன் சேர்க்கையும் ஏற்பட்டு ராஜயோகம் அமையப்பெற்றுள்ளது...கலைத்துறையில் அவர் சாதிக்க இந்த கிரக சேர்க்கைகள் முக்கிய காரணி எனலாம்.

சனி 7ல் அமர்ந்து அவர் குடும்ப வாழ்வில் பல சோதனைகளை தந்தது...

நவாம்சத்தில் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்த சந்திர திசை அவருக்கு பெரும்புகழை கொடுத்தது ..சந்திர திசை கேது புக்தியில் முதல்வர் ஆனார் (30.6.1977)அடுத்து வந்த செவ்வாய் திசை அவரை அரசியலில் அழியா புகழை கொடுத்தது.....

அரசில் உயர் பதவி வகிக்கவும்,அரசியலில் புகழ் பெறவும்,சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் பலம் அவசியம்...1,4,7,10 ஆம் இடங்களுடன் இந்த கிரகங்கள் சம்பந்தம் பெற வேண்டும்...

எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் 1ல் சூரியன் ,செவ்வாய் அமர்ந்தனர்..4 ல் குரு அமர்ந்தார்.7மிடத்தை சூரியன்,செவ்வாய் பார்த்தனர்.10 ஆம் இடத்தை குரு 7 ஆம் பார்வையாக பார்த்தார்.

எதிரிகளையும் பணிய வைத்த எம்.ஜி.ஆர்


ஆறாமிடத்தில் தீயக்கோள்கள் இருந்தால் ஜாதகர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவர்.தீமை செய்வோருக்கு தீமையும் நன்மை செய்வோருக்கு நன்மையும் ,தனக்கு பகைவராக இருப்பவரை எல்லாம் தனக்கு பயந்து யாவரும் தன்னை வந்து வணங்கதக்கதாய் மேன்மை அடைவார்கள் என ஒரு ஜோதிட பாடல் சொல்கிறது..எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் ஆறாமிடத்தில் கேது அமர்ந்து அநிலையை அவ்ருக்கு தருகிறது. காள சர்ப்ப யோகமும் 30 வயதுக்கு மேல் அவருக்கு பெரும்புகழ்,செல்வம்,அழிவில்லாத மக்கள் செல்வாக்கை தர முக்கிய காரணம்.


ஞாயிறு, 15 மே, 2011

Astrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்



நட்சத்திரங்கள் மொத்தம் 27.இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்..

உதாரணமாக 27 நட்சத்திரங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன்.


இவற்றில் உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,21,25 வது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வந்தால் பிரிவு,மனவருத்தம்,விவாகரத்து ,குறை ஆயுள்,குழந்தை இன்மை,அசுபம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.

இவை தவிர்த்த நட்சத்திரங்களில் முக்கியமான பொருத்தங்களான...,
தினபொருத்தம்,கணபொருத்தம்,யோனிபொருத்தம்,ராசி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்வர வேண்டும்..இவை இல்லாதவை பொருத்தம் இல்லை..பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் மிக அவசியம்.
தினப்பொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு..இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.
கணப்பொருத்தம்;
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம்,இருவர் நட்சத்திரமும் ராட்ஷ கணமாக இருத்தல் கூடாது..தேவகணம்,மனுஷ கணம்,ராட்ஷகணம் என பிரிக்கப்பட்டிருக்கும்..தேவ கணம்-தேவ கணம்,மனுஷ கணம்-மனுஷ கணம் பொருத்தம் உண்டு.

மகேந்திரபொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி,எண்ணும்போது ஆன் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது..இதன் பலன் குழந்தை பாக்யம்.ஆயுள் விருத்தி.இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன்,குரு நிலையை ஆராய வேண்டும்..லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும்.அதில் ராகு ,கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிரதா என கவனிக்கவும்.ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும்,பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்..இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.
யோனி பொருத்தம்;
எட்டலை,பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம் அவசியம்.தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்...
.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு,குதிரை,சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்...அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்..பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது......
பாம்பு என ரொகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..பாம்பு, எலியை கண்டால் விடுமா விழுங்கிவிடும்..ரோகிணிக்கு பூரம் .அடங்கித்தான் போக முடியும்...நாய் ,பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்குமா.இதெல்லாம் கவனிக்க வெண்டும் அதுதான் யோனி பொருத்தம்.
ராசிபொருத்தம்;
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2 வது ராசியானால் மரணம்,3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம்.6 வது ராசி புத்திர நாசம்,7 வது உத்தமம்.மாங்கல்யம்,ஆயுள் விருத்தி,8 வது அதிக புத்திர லாபம்,9 வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11 வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி,இருவருக்கும் ஒருவருக்கொருவர் ராசியோ லக்னமோ மறையக்கூடாது அதாவது 6,8,12ல் இருக்க கூடாது..அப்படி இருந்தால் ஒத்துப்போகாது.

ரஜ்ஜு பொருத்தம்;
ரோகிணி சந்திரன் நட்சத்திரம்..அஸ்தம் சந்திரன் நட்சத்திரம்.இப்படி ஒரே கிரகத்தின் நட்சத்திரங்களை இனைக்க வேண்டாம்..மாங்கல்ய பொருத்தம் என்னும் இருவரது ஆயுளை பற்றி சொல்லும் முக்கியமானபொருத்தம்.27 நட்சத்திரங்களையும் சிரசு ரஜ்ஜு,பாத ரஜ்ஜு,தொடை ரஜ்ஜு,உதர ரஜ்ஜு,என பிரித்திருப்பார்கள்..கணவன்,மனைவி நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் கண்டம்,நஷ்டம்,விபத்து என சொல்கிறது..இரண்டு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜுவில் இருந்தால் பொருத்தம் உண்டு.

பொருத்தம் சுலபமாக பார்க்க உதவும் அட்டவணை..

பெண்களுக்கு பார்க்க ,பொருத்தம்;



 ஆண்களுக்கு திருமண பொருத்தம் நட்சத்திர அட்டவணை;



நட்சத்திர பொருத்தம் பார்த்தாலும் அவசியம் ஜாதகத்தை ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது....இருவருக்கும் லக்னத்துக்கு 7ஆம் இடம் சந்திரனுக்கு 7ஆம் இடம் ,பார்க்கனும்..4ஆம் இடமாகிய ஒழுக்க ஸ்தானத்தை பார்க்கனும்.10 ஆம் இடமாகிய்ட தொழில் ஸ்தானம்,2 ஆம் இடமாகிய குடும்ப ஸ்தானம்...மாமனார் ,மாமியார் ஸ்தானம்,குடும்ப ஒற்றுமை,குணநலன் எப்படி என்ற விபரமெல்லாம் ஜாதகத்தில் தெளிவாக தெரியும்.இருவருக்கும் என்ன திசை நடக்கிறது..? அந்த திசை யோகமான திசையா நஷ்டம் தரும் திசையா என்பதை ஆராய்ந்து செய்தால்தான் திருமணம் இனிக்கும்..!!

 

சனி, 14 மே, 2011

சகுனம் சூட்சுமம்


ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,ராசிக்கல் மோதிரம் என எத்தனை வகைகளில் பிரித்து ஜோதிடம் சொன்னாலும் நம் பெரியோர்களின் சகுன சாஸ்திரம் பார்த்து கணிக்கும் கணிப்பு இவைகளுக்கு ஈடாகுமா...? ஆனால் இன்று பெரியோர்கள் ஃபேஸ்புக்,டிவிட்டர் என பிஸியாகிவிட்டார்கள்...கிராமங்களில் இன்று சகுனத்தையே அதிகம் நம்புகிறார்கள்.நல்ல காரியத்தை பத்தி பேசும்போது தும்முனான் ஒருத்தன் அப்பவே நினைச்சேன் இப்படி நடக்கும்னு என பேசிக்கொள்வார்கள்.காலையில வெளியே போகும்போதே சகுனம் சரியில்லை..அதே மாதிரியே இன்னிக்கு நஷ்டகணக்குதான் ஆச்சு..என்றும்பேசிக்கொள்வார்கள்,


பொண்ணு பார்க்க போனோம்..போற வழியில பாம்பு பார்த்தோம்...அதனால் வழித்த்டம் சரியில்லை என பல கல்யாணங்கள் கிராமப்புறங்களில் நின்றும் போயிருக்கின்றன...இந்த தகவலை பெண் வீட்டாருக்கு சொல்ல,வழித்தடம் சரியில்லை..அதனால் இந்த சம்பந்தம் வேண்டாம் என நினைக்கிறோம்...என ஒரு கடிதம் எழுதிவிட்டு கேன்சல் செய்துவிடுவார்கள்..பெண் வீட்டாரும் இதை புரிந்து கொண்டு விடுவார்கள்.பல வேறு காரணங்களுக்கும் பொய்யாக இந்த காரணத்தை சொல்வதும் உண்டு...வழித்தடம் சரியில்லை என சொல்லிவிட்டால் ஒன்றும் கேள்வி கேட்க முடியாது இப்படியொரு எழுதப்படாத ஒப்பந்தம் இன்றும் கிராமங்களில் உண்டு.

எங்கள் கிராமத்தில் என் அத்தையை பெண் பார்க்க வந்த கதை பற்றி எங்கள் பாட்டி சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது...கரூர் அருகில் காவிரி,அமராவதி என இரு ஆறுகளும் கூடும் இடத்தில்,ஆற்றின் ஓரம் இருக்கும் சிறு கிராமம் அது..அத்தையை பெண் பார்க்க வந்தார்கள்.மாப்பிள்ளை வீட்டார் வந்து போனதும்,வீட்டில் இருந்த வளர்ப்பு பூனை உத்திரத்தில் தூங்கியது,அப்படியே தூக்க கலக்கத்தில் தரையில் விழுந்து இறந்து போனது..அதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.அதே மாதத்தில் அது 1970 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..அமராவதி ஆற்றில் பெரு வெள்ளம் வந்து,இவர்களது வயல்வெளிகள் நாசமானது..அந்த நஷ்டத்திலிருந்து மீள ஒரு வருசம் ஆனது.அப்போதும் திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப்போட்டார்களே ஒழிய நிறுத்தவில்லை..நல்ல சம்பந்தம்.அரசாங்க வேலை.விட வேண்டாம் என திருமணத்தை முடித்தார்கள்.திருமணத்திற்கு பின் என் அத்தை பட்ட கஷ்டங்கள் ரொம்ப கொடுமை.அவருக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன.நகையை சூதாடி அழித்தார்.மாமியார் வீட்டில் திருடினார்.வீட்டுக்கு வராமல் 6 மாதம் தலைமறைவாக இருந்தார்.இதனால் என் அத்தை பிறந்த வீட்டிற்கே வர வேண்டியதாயிற்று.

பெண் பார்த்து விட்டு போனதும் வீட்டுப்பூனை இறந்தது,வெள்ளத்தால் பயிர் நாசம் இவையெல்லாம் சகுனங்களே..இயற்கை இவர்களுக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் என உணர்த்தியது.

நமக்கு வரும் துன்பங்களை இயற்கையே முன்கூட்டி உணர்த்தும்.அதை தெய்வமாகவும் நினைக்கலாம்..முன்னோர்கள் வழிகாட்டுவதாகவும் எண்ணலாம்...சகுனம் என்றும் சொல்லலாம்...

வியாழன், 12 மே, 2011

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..?# rajini horoscope

ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..?# rajini horoscope

ரஜினி ஜாதகம்;


பிறந்த தேதி;12.12.1950
பிறந்த நேரம்;11.45 இரவு.
இடம்;பெங்களூர்

ராசி;மகரம்
நட்சத்திரம்;திருவோணம்

ரஜினி ஜாதகம்;


ரஜினி ஜாதகம் மிக சக்தி வாய்ந்தது..தெய்வ அருள் நிரம்பியது...ஐந்தாம் இடத்தில் சுக்கிரன்,புதன் இணைந்து ஸ்ரீவித்யா யோகம் அமைந்துள்ளது..இது லட்சுமி,சரஸ்வதி யோகம்...அருள் ஒருங்கே அமைவதாகும்..இதன் மூலம் செல்வம்,ஞானம் இரண்டுமே கிட்டும்....

4க்குடையவன் செவ்வாய் வலுத்ததால் நிறைய சொத்துக்கள் சேர்க்கையும் உண்டானது....7ல் குரு நின்றதால் புலிப்பாணி பாடலின் படி,சகல தோசங்களும் நிவர்த்தி.....

7க்குடையவன் ஞானக்காரகன் கேதுவுடன் கூடியதால்...ஞானக்குருவாக மனைவி அமைந்தார்.

சுக்கிரன்,புதன் இணைவு கலைத்துறையின் உச்சம் தொட்டார்...அதுவும் வெற்றி ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தில் இணைவு.இருவரும் இணைந்து 11 ஆம் இடத்தில் பார்வை செய்ததால் உலகப்புகழ் .இரண்டுக்கு அதிபதிக்கு இரண்டில் செவ்வாய் உச்சம்..பணத்துக்கு மேல்..பணம்..புகழுக்கு மேல்..புகழ்....

7ல் குரு நின்றதால் மனைவி வந்தப்பிறகுதான் மனிதன் ஆனார்....அவ்வளவு கெட்டப்பழக்கங்களுக்கு காரணம் நாலில் சூரியன்..இரண்டில் சனி,கேது...ஆறில் செவ்வாய்....சந்திரன்.....


ஜாதகத்தின் இன்றைய நிலை;

எண்ணிய ஒண்ணின் கோள்
ஆறாமிடத்து கோளுடன் 
உன்னிய ராகு கேது
ஒரு தளத்தில் நிற்க,கண்டம்
தன்னுடல் சுகமில்லாமல்
சஞ்சல மனதனாகி
மின்னலாய் வியாதியஸ்தன்
என விளம்பலாமே..!

-துய்ய கேரள ஜோதிடம் என்னும் பழைய ஜோதிட நூலில் இருந்து....

இந்த பாடல் சொல்லும் விளக்கம் ரஜினி ஜாதகத்திற்கு பொருந்தி போகிறது.

ரஜினிக்கு இப்போது சனி திசையில் சந்திர புத்தி வரும் 2.7.2011 வரை நடக்கிறது.

இந்த பாடலின் படி ஆறாம் அதிபதியுடன் ராகுவோ,கேதுவோ சேர்ந்திருந்தால் ,6,8,12 க்குடையவன் திசையில் மின்னலாய் நோய் தாக்கி முடங்குவான் என்கிறது....

ரஜினி ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் கேது இணைந்து இரண்டாம் இடத்தில் உள்ளது....
நடப்பது ஆறுக்குடையவன் திசை..நடப்பது 12க்குடைய விரயாதிபதி சந்திரன்..புத்தி.

சனி-முடக்கும் கிரகம்
ஆறாம் இடம்-வயிறை குறிக்கிறது...நோயை குறிக்கிறது...

இவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாய் உள்ளது...இது ரத்தம் மற்றும் மர்ம உறுப்பை குறிக்கிறது...ஆறில் உள்ள செவ்வாய் மற்றும் சந்திரன் தனது புத்தியில் இந்த உறுப்புகளை முடக்குகிறது..சிறுநீரகம் பாதிப்பு கிட்னி பாதிப்பையும் குறிக்கும்....

சந்திரன் விரயாதிபதி மட்டுமல்ல..உடல்,மனக்காரகன்...ஆக உடலும் மனமும் முடங்கி இருக்கிறது.

பாதிப்பு;சிறுநீரகத்தில்....காரணம்..செவ்வாய் ஆறில்.



கோட்சாரப்படி சனி கன்னி வீட்டில் இருக்கிறது...ரஜினி பிறக்கும் போது சனி கன்னியில்தான் இருந்தது!...சனி ஒரு முறை சுற்றி தன் ஸ்தானத்திற்கு வர முப்பது வருடம் ஆகும்...இது இரண்டாம் சுற்று...

ஒரு தீய கிரகம் ஒரு ஜாதகன் பிறந்த ஸ்தானத்தில் எங்கு இருக்கிறதோ..அங்கு மீண்டும் வரும்போதெல்லாம் ஒரு கெடுதல் நடந்தே தீரும் என என் குரு சொல்லியிருக்கிறார்..அதன்படி இந்த ஜாதகத்திற்கு பிறந்தபோது இருந்த இடத்திற்கு வந்திருக்கிறார்...இது கெடுதலே தந்தது.