வியாழன், 24 டிசம்பர், 2015

புற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.

இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. 

பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மருந்து

சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு

* சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.


* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

* மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள்,
உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
 
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

புதன், 23 டிசம்பர், 2015

திருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர். கல்யாண வெங்கடேசருக்கு மட்டைதேங்காய் வைத்து வழிபட்டால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது நம்பிக்கை. 

தல வரலாறு: ஒருமுறை வெள்ளம் காரணமாக ஏழு உலகங்களும் அழிந்தன. திருமால் குழந்தை வடிவில் ஆலிலை கண்ணனாக வெள்ளத்தில் மிதந்தார். மீண்டும் உலகத்தை படைக்க விரும்பி, தன் நாபிக் கமலத்தில் (தொப்புள்) பிரம்மாவை உருவாக்கினார். அவருக்கு படைக்கும் சக்தியை வழங்கினார். படைப்புத் தொழிலை ஏற்ற பிரம்மா, திருமாலுக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகத்தில் ஒரு கோவில் அமைத்தார். அவரே "திருவுந்தி பெருமான்' என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். 

"உந்தி' என்றால் "வயிறு'. வயிற்றிலுள்ள தொப்புளில் இருந்து பிறந்ததால், பிரம்மா பிறக்க காரணமான உறுப்பின் பெயரையே பெருமாளுக்கு சூட்டினர். புராண காலத்தில் பிரம்மாவின் பெயரால் இவ்வூர் "சதுர்முகன்புரி' (நான்கு முகம் கொண்ட பிரம்மாவின் ஊர்) என அழைக்கப்பட்டது. தற்போது நார்த்தாம்பூண்டி எனப்படுகிறது. 

நாரதர் பூண்டி: ஒரு சமயம் சாபம் காரணமாக நாரதர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அவர் தன் சாபம் தீர திருவுந்தி பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார். 12 ஆண்டுகள் வழிபட்ட பிறகு, திருமால் நாரதருக்கு காட்சியளித்து சாப விமோசனம் அளித்தார். நாரதர் தங்கி வழிபட்டதால் சதுர்முகன்புரிக்கு "நாரதர் பூண்டி' என பெயர் ஏற்பட்டது. அதுவே "நார்த்தாம்பூண்டி' என மருவி விட்டது. 

12ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர் சம்புவரையர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் அந்நிய படையெடுப்பின் போது கோவில் கோபுரம், மண்டபம், குளம் அழிந்தது. பிறகு பெருமாளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவர் "கல்யாண வெங்கடேசப் பெருமாள்' எனப்படுகிறார். பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு இங்கு சன்னிதிகள் உள்ளன. திருமணம் விரைவில் கைகூட பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக வழிபடுகின்றனர்.

இருப்பிடம்: திருவண்ணாமலை-வேலூர் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் நாயுடு மங்கலம் அங்கிருந்து கூட்டுரோட்டில் 5 கி.மீ.
அலைபேசி: 94421 56422.

ராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்:



ஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது.
கன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நவக்ரக தோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

மூலமந்திரம்
 
ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா


மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே
மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே

திருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..?

(ஒரு பாடலுக்கே இதனை விளக்கமா
திருமந்திரத்தில் ... தலையே சுத்துது ......}
திருமந்திரம் பாடல் 1514:
---------------------------------------------
இருட்டறை மூலையில் இருந்தகுமரி
குருட்டுக் கிழவனைக் கூடல்குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.

மேற்கண்ட திருமந்திரம் மட்டுமல்ல,அனேக திருமந்திர பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவிளக்கம் இருக்கிறது. படிப்பவரின் நிலை மற்றும் ஆன்மீகதன்மைக்கு ஏற்ப விளக்கம்கொடுக்கும் பாடல். எளிமையாக
சொல்லுவது என்றால் இது ஆன்மீகக் கண்ணாடி.
உங்களை சரியாக பிரதிபலிக்கும்.
 
சூழல் மற்றும் ஸ்திதியை பொருத்து இதற்கு பன்முக
விளக்கம் கொடுக்க முடியும்.
அவற்றில் சில...

ஞான யோக விளக்கம் :
-------------------------------------
ஜகத் எனும் உலகம்
இரு மஹாபொருளால்
உருவாக்கப்பட்டது.
அது பிரகிருதி மற்றும்
புருஷார்த்தம்.
பிரகிருதி என்பது பெண்
தன்மை கொண்ட இறை நிலை.
புருஷார்த்தம்
என்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம
நிலை.
பிரகிருதி புருஷனுடன்
இணைவதால்
நமக்கு கர்மேந்திரியங்கள் மற்றும்
ஞானேந்திரியங்கள் உருவாகி, சாத்வ
ரஜோ மற்றும் தமோ குண
சேர்க்கைகள் ஏற்படுகிறது. இதனால்
குணங்களை கடந்து பிரகிருதி
நிலையில் புருஷார்த்த
தன்மை இருந்தால் அதன் பெயர்
ஜீவன் முக்தி.


பக்தி யோக விளக்கம் :
----------------------------------
-
சக்தி என்பவள்
மாற்றத்திற்கு உட்பட்டவள். சிவ
நிலை என்பது மாறாதது. என்றும்
இருக்கும் சிவ
நிலையானது முதுமையானது.
சக்தியானவள் தன்னை எப்பொழுதும்
புதுப்பித்து கொள்வாள். அதனால்
தான்
சக்தியை கன்னிப்பெண்ணாகவும்,
குமரிப்பெண்ணாகவும் வணங்கும்
வழக்கம் நம்மில் உண்டு.
நம்மில் இருக்கும் சிவதன்மையில்
சக்தி நிலை ஒன்றிணந்து பரவச
நிலைக்கு கொண்டு சேர்ப்பது
பக்தியோகத்தின் திருமணம் எனலாம்.
கோவில்களில் நடக்கும்
மீனாட்சி கல்யாணம்,
சீதா கல்யாணம்
இவை இதற்கு சான்று.

குண்டலினி யோக விளக்கம் :
---------------------------------------------
--
குண்டலி எனும்
மஹாசக்தி மூலாதரத்தில்
உறங்குகிறாள். அவள்
இருப்பது தெரியாமல் அனைவரும்
குருட்டுநிலையில் இருக்கிறார்கள்.
உடலை காட்டிலும் அவள்
எப்பொழுதும் இளமையானவள்.
என்றாவது ஒருநாள் அவள் பல
சித்துக்களை நமக்கு காட்டி தன்பால்
வசமாக்கி அறியாமையை நீக்கி
சகாஸ்ராரத்தை அடைவாள்.
 
அறிவியல் விளக்கம் :
-------------------------------------
அனுக்கரு என்பது நிலையான
ஒன்று. அனு உருவாக்கத்தில்
முதலில் தோன்றுவது அனுக்கரு.
அனுவை சுற்றிவரும்
எலக்ட்ரான்கள் /புரோட்டான்கள்
ஆற்றல் நிலையில் இருப்பதால்
தன்னை புதுப்பித்துக்கொள்ளும்.
சில அறிவியல் வினையால் (குணம்
பல காட்டி) அனுக்கருவான
கிழவனை பிளந்து இவற்றுடன்
மோதசெய்வதால் வெளிப்படும்
ஆற்றல் அளவில்லாதது. திருமணம்
எப்படி தனி ஒருவனாக செய்ய
முடியாதோ, அனைவருக்கும்
தெரிந்து விடுமோ அது போல இந்த
செயலும் மறைத்து தனிமனிதனாக
செய்ய முடியாது.
 
எளிய விளக்கம் :
------------------------------
ஆன்மீகம் என்றவுடன்
ஏதோ வயதானவருக்கான விஷயம்
நமக்கு ஏன் என கேட்பவர்கள்
உண்டு. அறுபது வயசுக்கு மேல
கிருஷ்ணா ராமானு இருக்கிறது
தானே இருபது வயசுல
இது தேவையா என சிலர்
இளைஞர்களை பார்த்து கேட்பதை
பார்த்திருக்கிறேன்.

ஆன்மீகம் என்பது இளம்
பெண்ணை போன்றது. ஒரு இளம்
பெண்ணை முதிய வயதில் திருமணம்
செய்தால் எவ்வளவு சிக்கல்
வருமோ அதுபோன்றது அறுபது
வயது வரை ஆன்மீக நாட்டம்
இல்லாமல் அதன்
பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடுவது.
தக்கவயதில் ஆன்மீகத்தில்
ஈடுபடுவது சரியான
முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இதயம் எனும் இருட்டு அறையில்
பரமாத்மா எப்பொழுதும் ஒளியுடன்
திகள்கிறது. இருள் எனும்
அறியாமையில் இருக்கும்
மனதை ஒளிபெறச்செய்கிறது.
அவ்வாறு செய்யும் பொழுது பல
குண தோஷங்களை நீக்கியும்,
எதிர்பாராத நிகழ்வுகள் (மருட்டி)
மூலமும் 'தான்' எனும்
அகந்தையை நீக்கி இருப்பது தெய்வீக
திருமணம் அல்லவா? தான் எனும்
அகந்தை அற்று அதனுள் ஒன்றாக
இணையும் தெய்வீக
திருமணத்திற்கு முயலுங்கள்.

அதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகளும்

கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி.
கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன.
மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.
நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றானா ?
 
அங்கோர்வாட்_கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான்.
இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.
40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.
இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும்.
இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .
இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.
 
திருநள்ளாறு

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது.
அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர்.
முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. 

அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது.
தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.
 
கடல்_நடுவே_ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது.ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது .
1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். 

பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.
கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. 

சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.
பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். 

கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.
ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை.
இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?
 
தொல்காப்பியமும் ‪#‎திருக்குறளும்‬ :-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது.
ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.
பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.
இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?
எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா?
தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
 
அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்.
ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள்.
பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.
அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.
அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.
அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.
சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள்.
நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.
அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். 

தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.
இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.
 
வானியல்_அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே!
சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள்.
அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும்.
தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.
பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும்.
கிறிஸ்த்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும்.
அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின.
பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும்.
பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார்.
அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:-

கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது.

இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே
உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள்
நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்

தமிழர்களின் வர்மக்கலை

வர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !!

இன்றைய இளம் தமிழ் தலைமுறையினர் தமிழ் மொழியை மட்டும் இழக்கவில்லை. நமது முன்னோர்களின் விளையாட்டு, நமது போர்முறை சாதனங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை, தற்காப்பு, கட்டிடக்கலை, மருத்துவம் மற்றும் உடல், உளவளக் கலைகளை மறந்து நிற்கின்றோம்.

இப்பொழுது ஒருபடி மேலே சென்று சாதாரணமான உடற்பயிற்சி முறைகளையும் செய்வதையே தவிர்த்து வருகிறார்கள் தமிழ் இளைய பிள்ளைகள். இன்று உடற்பயிற்சி, தற்காப்பு இரண்டையும் கற்கும் தமிழ்ப் பிள்ளைகள் சொற்பமே.

வர்மக்கலையில் சிறந்த விளங்கிய தமிழகம் :
வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்
"அகத்தியர் வர்ம திறவுகோல்"
"அகத்தியர் வர்ம கண்டி"
"அகத்தியர் ஊசி முறை வர்மம்"
"அகத்தியர் வசி வர்மம்"
"அகத்தியர் வர்ம கண்ணாடி"
"அகத்தியர் வர்ம வரிசை"
"அகத்தியர் மெய் தீண்டா கலை"
ஆகியவை குறிப்பிடத்தக்கவை

" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.
காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன.
உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது.

சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.
“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்.

2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்.

3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்.

4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.
உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

வர்மத்தின் அதிசயங்கள் !

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்கள்
இத்தகைய சிறப்பு மிக்க கலையை நாம் எப்போது மீட்டு எடுக்கப் போகிறோம்..?! இதற்கெல்லாம் காரணம் தமிழன் தமிழனாக இல்லாமல் மாறிப்போனதே..!!

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மை


நல்ல சந்தன ஊதுபத்தி இரண்டை கொளுத்தி ஒரு நல்ல காற்றோட்டமான அறையில் வைத்துவிட்டு 20 நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்தால் எவ்வளவு கடுமையான மன உளைச்சலும் தீரும்.மனம் லேசாகும்..
 
இயற்கை நறுமணப் பொருட்களில் இயற்கை சக்தி மிக அதிகமாக இருக்கிறது. சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் நறுமணம் ஆன்மாவுக்குள் இருக்கும் தேவ குணங்களுக்கு வலிமை அளிக்கிறது. அந்த ஆன்மா, தேவ குணங்களை பெற்று தேவ சக்திகளுடன் நாம் இணைந்து மகிழும் ஆற்றலை சந்தனத்தின் நறுமணம் தருகிறது. அதனால்தான் சந்தனத்தை பூஜைக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.


சாம்பிராணியின் நறுமணம் மனிதர்களுக் குள் இருக்கும் துர் குணங்களை போக்கும் ஆற்றல்கொண்டது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல்கொண்ட துர்க்கைக்கு பூஜையில் மிக முக்கிய பொருளாக சாம்பிராணி வாசனை பயன்படுத்தப்படுகிறது.


இயற்கையான நறுமண பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும். சில நறுமணங்கள் அறிவை தூண்டும். சில உடல் இறுக்கத்தை குறைக்கும். மேலும் சில நம்மை கலகலப்பாக்கி, உற்சாகப்படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள்.



பொதுவாகவே நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் இருக்கிறது. நினைவுகளை இழந்த பலருக்கு இந்த நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்திருக்கிறது.
நறுமணத்தை நுகரும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலியை மறக்கவைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமணங்களுக்கு இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் நறுமணம் பயன்படுகிறது.


பெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணம் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் தாத்பார்யமே அதுதான். வாசனை ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி நம்மை லயிக்கச் செய்து மகிழ வைக்கிறது.
அகில் கட்டையின் நறுமணமும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. அதனால்தான் பெரிய யாகங்கள் செய்யும்போது அதில் எரிக்க அகில் கட்டையை பயன்படுத்துவார்கள். இதன் நறுமணம் மனதிற் கும், உடலுக்கும், ஆன்மாவிற்கும் ஏற்புடையது.

அரசர்களின் பட்டாபிஷேகம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் பயன்படுத்தப்படுகிறது.
பழைய காலத்தில் முனிவர்களும், மாகான்களும் காடுகளை தேடி சென்று தவம் புரிவதற்கு மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த மணம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும்.

புதன், 16 டிசம்பர், 2015

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

ராகு கேது பெயர்ச்சிப்பலன்கள் 2016-2017

வருகிற ஜனவரி 8ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.இப்போது கன்னி ராசியில் இருக்கும் ராகு சிம்மம் ராசிக்கு வருகிறார் .கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..ராகு கேது பின்னோக்கிதான் பெயர்ச்சியாவார்கள்...8.1.2016 முதல் 27.7.2017 வரை யான பலன்கள் அனைத்து ராசியினருக்கும் கொடுத்துள்ளேன்.

ராகுவை போல கொடுப்பார் இல்லை.கேதுவை போல கெடுப்பார் இல்லை என்பார்கள் ...ராகு கேதுக்கள் நிழல் கிரகம்..சொந்த வீடுகள் இல்லையென்றாலும்...சூரியன்,சந்திரனையே முடக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ..சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வருகிறது அல்லவா...அது ராகு கேதுக்களின் ஆதிக்கம் தான் ஜோதிடம் சொல்கிறது.அது பூமியின் நிழல் என அறிவியல் சொல்கிறது ஜோதிடமும் ராகு கேதுக்களை நிழல் கிரகங்களாகவே பார்க்கிறது.

ஜாதகத்தில் லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்தால் நாகதோசம் என்கிறோம்...இவர்களுக்கு நடுவில் கிரகங்கள் மாட்டிக்கொண்டால் காளசர்ப்ப தோசம் என்கிறோம்.இவை இரண்டும் மிக கடுமையான தோசங்கள் ஆகும்.கணவன்/மனைவி ஸ்தனத்தையே கெடுத்து மோசமான குணமுள்ள கணவன்/மனைவி அமைய செய்துவிடும் வல்லமை கொண்டவை.இதற்காக என் வாடிக்கையாளர்களுக்கு திருமணம் எப்போது ஆகும் எனக்கேட்டு வருவோருக்கு சூட்சுமமான பரிகாரம் சொல்லி விரைவில் திருமணம் நடக்க நல்ல குணமுள்ள வாழ்க்கை துணை அமையவும் உதவியிருக்கிறேன்.புத்தகங்களில் வரும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை..

ராகு கேதுக்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு எத்தனாம் இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் கெட்டுவிடும் என்பது ஜோதிட விதி.உதாரணமாக ராகு எட்டாம் இடத்தில் இருந்து ராகு திசை நடந்தால் பாம்பு பலமுறை கண்ணில் படும்.கடிக்கவும் செய்யும்.மாதவிலக்கு கோளாறுகள் ,கர்ப்பபை பிரச்சினை, ஆண்கள் எனில் கிட்னி சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும்.

விச உணவுகள் சாப்பிட்டு உயிர் விடவும் நேரலாம்..எட்டு ஆயுள் ஸ்தானம் என்பதால் நஷ்டம் உயிருக்கா,பொருளுக்காக என கேள்வி வந்துவிடும்.சொத்துக்கள் இருப்பின் உயிருக்கு பங்கம் வந்து விடும்.சுபர்களுடன் கூடி இருந்தால் அவ்வளவு பாதிக்காது.ராகு ஏழில் இருந்து திசை நடத்தினால் சுபர் பார்க்காவிடில் திருட்டு குணம் உடைய ,குடும்ப பெயரை முழுவதும் கெடுத்து விடக்கூடிய வாழ்க்கை துணை அமைந்து விடும்...

பேய் பிடிப்பது, மனநிலை பாதிப்பது எல்லாம் ராகுவின் பாதிப்புதான்.. கேது வறுமையையும், தரித்திரத்தையும் உண்டாக்கும்..என கேந்திர திரிகோனங்களில் கேது இல்லாமல் இருப்பது நல்லது....

குடும்பத்தில் எவ்வளவு பிரச்ச்சினைகள் இருப்பினும் கடன் ,மனக்குழப்பம்,வீட்டில் நிம்மதியின்மை,நோய் பாதிப்பு,வாஸ்து குறைபாடு இருப்பினும் நாங்கள் தயாரித்த தெய்வீக மூலிகை சாம்பிராணியை உபயோகப்படுத்துங்கள் ..நல்ல மாற்றங்களை கண்கூட உணர்வீர்கள் .ஒரிஜினல் சாம்பிராணியில் 27 வகையான தெய்வீக,வசிய மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.இன்னும் அதிக சக்தியுடன்,நறுமணத்துடன் புதிய தயாரிப்பில் கிடைக்கிறது.அரை கிலோ பாக்கெட் ரூ 500 மட்டும்.தொடர்புக்கு 9443499003

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என பார்ப்போம்...


மேசம்;

மேசம் ராசியினருக்கு  ராசிக்கு 11 ல் லாபஸ்தானத்தில் கேது மாறுகிறார்..ராகு 5ஆம் இடத்துக்கு செல்கிறார்..பாவகிரகங்கள் லாபஸ்தானத்துக்கு வருவது நல்லது.அதனால் லாபம் பெருகும்.சேமிப்பு உயரும்...கும்பத்துக்கு கேது செல்வதால் மேசம் ராசியினர் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.5அம் இடத்துக்கு ராகு வருவதால் சிம்மத்தில் இருக்கும் குருவால் ராகு குரு சேர்க்கையால் பூர்வீகத்துக்கும் குழந்தைகளுக்கும் வந்த சோதனைகள் விலகும்...2016 ஜூன் மாதம் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பூர்வீகத்தில் சில பிரச்சினைகள் வரலாம் குழந்தைகளுக்கு சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வரலாம்..இதுவரை தொழிலில் இருந்த மந்தம் விலகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும் வருமானம் உயரும்.அஷ்டம சனி நம்மை கடுமையாக படுத்தி வந்தாலும் கேது தொழில் ஸ்தானத்தை விட்டு விலகி லாபத்துக்கு வருவது நிச்சயம் நன்மையை தரும்.அருகில் இருக்கும் ராகு கேது கோயில் சென்று வரவும்..

ரிசபம்;

ரிசப ராசினருக்கு ராகு ராசிக்கு நான்கில் வருகிறார்..கேது 10 ஆம் இடமாகிய தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார்...இது சுமாரான பலன்களையே தரும் .சுக ஸ்தானத்துக்கு ராகு வரும்போது சொத்துக்கள் சார்ந்த சிக்கல்கள் உண்டாக்கும் தாய்க்கு உடல்நிலை பாதிக்கும்.மருத்துவ செலவுகள் ,இட மாற்றம்,அலைச்சல் ,உண்டாகும் தொழிலுக்கு கேது வருவதால் பிறக்கும்போது கும்ப ராசியில் செவ்வாய் இருப்பவர்கள் தொழில் கடுமையாக பாதிக்கும்.தொழில் கூட்டாக இருந்தால் கவனமாக இருக்கவும் பார்ட்னரால் ஏமாற்றம் உண்டாகலாம்... சொத்துக்கள் சம்பந்தமான டாக்குமெண்டுகள் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க..உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க...திருப்பதி சென்று வந்தால் நல்லது

மிதுனம் ;

மிதுனம் ராசிக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருகிறார் ராகுவை போல கொடுப்பார் இல்லை என்று சொல்கிறோம் அது இவர்களுக்கு இப்போது பொருந்தும்.ராகு மூன்றில் வந்தால் இரட்டிப்பு லாபம் உண்டு.வருமானம் ,சேமிப்பு பெருகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..நல்ல பேச்சு திறமை கூடும்.பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்..கேது 9ஆம் இடத்தில் மாறுவதால் தந்தைக்கும் தந்தை வழி உறவுக்கும் பாதிப்பான காலம்.வெளியூர்,வெளிநாடுகளில் வசிப்போருக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும்.ஸ்ரீரங்கம் ஒருமுறை சென்று வரலாம்

கடகம் ;

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது எட்டாம் இடத்துக்கு வருகிறார் .இரண்டில் ராகு தன லாபத்தை தரும்.திடீர் வருமானம் அதிர்ஷ்டத்தை தரும் அடுத்த குருப்பெயர்ச்சி வரை நல்ல யொகமுண்டு.பெரிய கடன் பிரச்சினைகள் சட்டென முடிக்கும் ஆற்றல் கொண்டது இந்த தன ராகு.கேது எட்டாம் இடத்துக்கு வருவதால் விஷக்கடி ஆபத்து உண்டு.விவசாயம் செய்வோர் கவனமுடன் செயல்படவும்.ராகு இரண்டுக்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பு,மரியதை அதிகரிக்கும்..தொழிலில் புதிய ஏற்றங்களும்,மாற்றங்களும் உண்டாக்கும்.. திருப்பதி சென்று வரலாம்

சிம்மம் ;
சிம்மம் ராசியினருக்கு ராசியிலியே ராகு வருகிறார்...கேது ஏழாம் இடத்துக்கு வருகிறார் .போனமுறை தன ஸ்தானம்,குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து கடன் தொல்லை ,குடும்பத்தில் நிம்மதி யின்மை உண்டாக்கினார் இப்போது ராகு தன ஸ்தானத்தை விட்டு நகர்ந்ததே பெரிய யோகம்தான்.அந்த அடிப்படையில் இந்த ராகு கேது பெயர்ச்சி நல்லதே செய்யும்.
இருந்தாலும்,இது நாகதோசம் அடிப்படையில் ராசிப்படி அமைகிறது .இது சுமாரான பலன்களையே தரும் உங்கள் ராசியில் சந்திரனுடன் ராகு சேர்வதல் சந்திர கிரகணம் போலத்தான்.மனதில் குழப்பம்,சோர்வு,கவலை அதிகரிக்க செய்யும் என்பதால் வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் அமைதியாக அம்ர்ந்து விட்டு வாருங்கள்..கடன் தொல்லை தீரும்,.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.இரவு பயணங்களை தவிர்க்கவும். 

 கன்னி;

உங்கள் ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து வந்த ராகு இனி 12ஆம் இடமாகிய விரய ஸ்தானத்துக்கு செல்கிறார் இனி எல்லாம் ஜெயமே.ஏழரை சனி முற்றிலும் விலகி விட்டது ஒரே எதிரி ராகுவும் விலகிவிட்டார் ..அதுவும் மறைந்து கெட்டு விட்டதால் இனி மகிழ்ச்சியும் சந்தோசமும் பெருகும்.நினைத்த ஆசைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.உறவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். விலகி இருந்த நட்பு,உறவுகள் ,இனி பகை மறந்து ஒன்று சேர்வர். 6ல் கேது வருவதால் எதிரிகள் அழிவர்.எதிர்ப்புகள் மறையும்.கடன் தொல்லைகள் தீரும்.நோய் தீரும்.சந்தோசமான காலம்.


துலாம் ;

உங்கள் ராசிக்கு ராகு லாபத்துக்கு வருகிறார் இதுவரை ராசிக்கு 12ல் இருந்து ராகு உங்களை அலைக்கழித்தார் இப்போது ராகு லாபத்துக்கு வருவதால் இனி சேமிப்பு உண்டாகும் வருமானம் இரட்டிப்பாகும்..உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிக யோகமாக அதிர்ஷ்டமாக அமைகிறது...5ல் கேது குழந்தைகளின் உடல்நலனில் கவனம் தேவை பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சினைகள் வரும்.சகோதரனால் சங்கடம் உண்டாகும்.. 3ல் ராகு இளைய சகோதரனுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்.


விருச்சிகம் ;

ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திலும், கேது நான்காம் இடத்துக்கும் வருகிறார்கள் .ராசிக்கு தொழில் ஸ்தானத்து வரும் ராகு தொழிலில் பெரிய முன்னேற்றம் தருவார் ...தொழில் ஆதாயம் பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும்...தாத்தா,பாட்டிக்கு ஆகாத காலம் .பிரிவினை இழப்பு உண்டாக்கும்.கேது நான்கில் வருவதால் உடல்நலன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ஏற்கனவே ஜென்ம சனி உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு மன உளைச்சலை உண்டாக்கி கொண்டிருக்கும் வேளையில் நாலில் கேது ,மருத்துவ செலவுகளை தரும்.இடுப்பு,கைகால் வலியை தரும் அலைச்சலை உண்டாக்கும்..இது சுமாரான பலன்களையே தரும்.திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வரவும்..

தனுசு ;

ராசிக்கு 9ஆம் இடத்தில் ராகு வருகிறார் கேது ராசிக்கு 3ல் மறைகிறார்.வெளிநாடு வெளிமாநில நண்பர்களின் தொடர்பு உண்டாகும் பெரிய மனிதர்கள் ஆதரவால் பெரும் சாதனைகள் செய்வீர்கள்..நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்,தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.. இளைய சகோதரனுக்கு சில மருத்துவ செலவுகள் ,மாமனாருக்கு பாதிப்பு உண்டு.9ல் ராகு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ஏழரை சனி நடந்தாலும் குரு பலன் இருப்பதால் பெரிதாக பாதிக்காது குலதெய்வம் கோயில் சென்று வரவும்

மகரம் ;

ராசிக்கு இரண்டில் கேது வருகிறார் ..எட்டில் ராகு வருகிறார் ராகு எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானத்துக்கு வருகிறார் என பீதிய்டைய வேண்டாம்..எட்டு மறைவு ஸ்தானம் என்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்..ராகு திசை நடப்போருக்கு மட்டும் எட்டில் ராகுசோதனைகளை தரும் காளஹஸ்தி சென்று வழிபட்டு வருவது அவசியம்.இரண்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் உண்டாக்கலாம் ...எட்டில் ராகு அதிக அலைச்சலை தரும்.மனக்குழப்பம்,பயம் தந்தாலும் திடீர் அதிர்ஷ்டமும் உண்டு எதிரிகள் தொல்லை நீங்கும் கடன் பாதிப்புகள் விலகும்.

கும்பம் ;

ராசிக்கு ஏழில் ராகு வருகிறார் ஏழாம் இடம் வாழ்க்கை துணையை குறிக்கும் கணவன் /அல்லது மனைவி ஸ்தானத்துக்கு ராகு வருவதால் அவர்கள் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம் ஆனால் நண்பர்களால் நிறைய ஆதாயம் உண்டு.திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் கூடி வரும்.கடன் தொல்லைகள் தீரும் வருமானம் அதிகரிக்கும்.சேமிப்பு உயரும்..கேது ஜென்மத்துக்கு வருவதால் விண் பயம் ,மன சோர்வு காணப்படும் விண் புலம்பல்கள் பலன் தராது.தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும்.உற்சாகமாக இருங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்;

ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து சோதனை மேல் சோதனை கொடுத்து வந்த கேது இனி ராசிக்கு 12ல் மறைகிறார் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் உங்கள் துன்பங்கள் தீரும் பனக்கஷ்டம் இனி மெல்ல மெல்ல தீர்ந்து இயல்புக்கு வரும்.தொழிலில் இருந்த மந்தம் விலகி சுறுசுறுப்பு உண்டாகும்..ராகு ராசிக்கு 6ல் வருவதால் வம்பு,வழக்குகள் இனி தீரும்.கடன் முழுதும் அடைபடும்.சொத்துக்கள் ,வாங்கும் யோகமும் வீடு கட்டும் யோகமும் வந்து சேரும் திருமண முயற்சிகள் தடங்கலின்றி நடைபெறும்..எதிரிகள் தொல்லை இனி இருக்காது பகையாகி விலகியவர் மீண்டும் ஒன்று சேர்வர்.

திங்கள், 30 நவம்பர், 2015

ஓரையை பயன்படுத்தி வெற்றி பெறும் சூட்சுமம்

தமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர்.


ஒரு நாளின் பொழுதுகளை ஆறு சிறு பொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறும்பொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது. உதாரணமாக சனி ஓரை முதலில் தொடங்கினால் அன்று சனிக்கிழமை.இவ்வாறுதான் கிழமை முறை வந்திருக்க வேண்டும்.

அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன்(வெள்ளி) ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு(வியாழன்) ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை. பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன..

ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என கணிதம் செய்திட இந்த ஓரைகள் பயன்படுகின்றன..ஒரு நல்ல காரியம் செய்ய அசுப கிரக ஆதிக்கம் பெற்ற ஓரைகளை தவிர்த்து ,சுப கிரக ஓரைகளில் அக்காரியத்தை நம் முன்னோர் செய்து வந்தனர்..பொண்ணு பார்க்க போனால்கூட சுக்கிர ஓரையில் போனால் நல்லது நடக்கும்...

ஒரு காரியத்தை செய்ய நினைக்கும்போது,அந்த நேரம் ராகு காலமா ,எமகண்டமா,குளிகை நேரமா..அன்று என்ன கிழமை ,திதி என்ன,நட்சத்திரம் என்ன ,என ஜோதிடரிடம் ஆலோசிக்க வேண்டும்..ஆனால் அவசரத்துக்கு , நல்ல ஓரையா இருந்தால் போதும் என முடிவு செய்து விடுவர்.

எந்த காரியத்துக்கு என்ன ஓரை என கணக்கு இருக்கிறது....சனி,செவ்வாய்,சூரியன் ஓரைகள் அசுப ஓரையாக இருந்தாலும் முற்றிலும் தவிர்ப்பதில்லை...அரசாங்க காரியம் நடக்க வேண்டும் எனில் சூரிய ஓரையில் முயற்சிக்கலாம்...நெருப்பு,கோர்ட் ,வழக்கு சார்ந்த பிரச்சினைகள் ,எதிரி சார்ந்த பிரச்சினைகள் என்றால் செவ்வாய் ஓரையில் செய்யலாம்..

சுபகாரியம் செய்யும்போது முக்கியமான விசயம் ஒருவரிடம் பேச முயற்சிக்கும்போதும் ,இப்போது ராகு காலமா,எமகண்ட நேரமா,சுப கிரகத்தின் ஓரையா எனா ஒருமுறை காலண்டரில் கவனிப்பது நல்லது.சுக்கிரன்,புதன்,குரு இவற்றின் ஓரைகள் எல்லா சுப காரியங்களுக்கும் சிறப்பு.
சிலர் மிதுன லக்னத்துக்கு யோகாதிபதி ,லக்னாதிபதி புதன் எனில் புதன் ஓரையையே பயன்படுத்தி வெற்றி பெறுவர்.இவ்வாறு நுணுக்கமாக எல்லோராலும் பார்க்க முடியாது.அவர்கள் சுக்கிரன்,புதன்,குரு ஓரையை கவனித்தாலே போதுமானது.

செவ்வாய், 24 நவம்பர், 2015

பாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம்,தமிழகத்தை அச்சுறுத்தும் மழை


பாவத்தை போக்கும்,திருவண்ணாமலை தீபம் ;tiruvannamalai deepam

நாளை  திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது..தீப தரிசனம் பாவம் போக்கும்...!! வாய்ப்பு இருப்பவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
உலகில் உள்ள மனிதர்களில் நாம் மட்டுமே கடவுளுக்கு நெருங்கியவர்களாக இருக்கிறோம்...

திருவண்ணாமலை எனும் புனித தெய்வீக ஸ்தலத்தின் அருகில் இருக்கிறோம்..அமெரிக்கா,இங்கிலாந்து பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டவர் வரும்போது சில நூறு ரூபாய் செலவில் நாம் தரிசிப்பது தவறில்லை..

நோய்களை நீக்கும்...சூரிய,செவ்வாய் சக்திகளை பலப்படுத்தி ,உங்கள் துன்பங்களை தீர்க்கும்...கடன் தீர்க்கும் ,நோய் தீர்க்கும்..பாவம் தீர்க்கும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவோம்..!!
  ----------------------------------

 டிசம்பர் 1 வரை சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் அதுவரை மழையால் பாதிப்பு இருக்கும் என போன வாரம் பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்.
காலப்புருஷ லக்னத்துக்கு 6,8 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.6,8 என்றாலே போர்,வன்முறை,வன்கொடுமைகள்,தீவிபத்து இவற்றை குறிக்கும்.காலப்புருஷ லக்னம் எனில் பொதுவாக உலகை குறிப்பதாகும். இதனால் வரும் 26 ஆம் தேதியில் உலகில் சில தீவிரவாத செயல்கள் மீண்டும் அதிர்ச்சியை உண்டாக்கலாம் ..தீவிரவாதத்துக்கு எதிரான போரும் உச்சக்கட்டத்தை எட்டும் .
அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையும் கனமாக இருக்கும் என்றே கருதுகிறேன்..
 ----------------------------------------

 இன்று மதியத்துக்கு மேல் பரணி வருகிறது.சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் மழை நீரால் இன்னும் அச்சுறுத்தல் உண்டாகும்.பரணி மழை தரணி எங்கும் உண்டு என பழமொழி உண்டு.

.நாளை மதியம் கிருத்திகை வருகிறது.இது சூரியன் நட்சத்திரம்.அணையாத ஜோதியை  குறிக்கும். முதல் ராசியான மேசம் ராசிக்கு விருச்சிகம் ராசி எட்டு.அதில் சூரியன் மறைந்துவிடுவதால்,நீர் ராசியான விருச்சிகத்தில் சூரியன் மூழ்கிவிடுவதால்,சூரியனை அடையாளப்படுத்தும் விதமாக பெரும் தீபம் ஏற்றப்படுகிறது.விடு தோறும் தீபம் ஏற்றி ஜோதி மறையாது என உனர்த்துகிறோம்.பெரும் தீவிபத்துக்கள்,பெரும் தொற்று நோய்களை தவிர்க்கவும் அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.

சூரியன் நட்சத்திரம் வரும் அந்த நேரத்தில்,சூரியனுடன்,சனி இருப்பதால் பல நாடுகளின் அரசாங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் தீவிரவாதிகளால் நாசவேலைகள் நடக்கும்.பெரும் அச்சுருத்தல் தரும் சம்பவங்கள் நடக்கலாம்.அடுத்து இன்னும் 2 நாள் கழித்து செவ்வாய் நட்சத்திரம் வரும் மிருகசிரீடம் நாளிலும் பிரச்சினைதான்.
-------------------------------------
சூரியன்,சனி,ராகு மூவரும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் உலகில் தீவிரவாத அச்சுருத்தல்கள் அதிகம் உண்டாகும்....தீவிரவாதிகளுக்கு வெறி உணர்வும் அதிகம் உண்டாகும்.வன்முறை உண்டாக்குபவர்கள்,அதிக வெறி உணர்வு அதிகம் கொண்டவர்கள் ஜாதகத்தில் செவ்வாய்,ராகு இணைந்து இருக்கும்.
கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சனி ,சூரியன் இணைந்துவிட்டது.எந்த நாடாக இருப்பினும் ,மாநிலமாக இருப்பினும் தலைநகரங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடன்,பாதுகாப்புடன் இருங்கள்.கூட்டம் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.நீண்ட தூர பயணம் தவிர்த்துவிடவும்,பஸ்,ரயில் பயணங்கள் தவிர்க்கவும்.


வெள்ளி, 6 நவம்பர், 2015

குறைந்த செலவில் கணபதி ஹோமம் செய்த பலன்கள் பெறும் வழி? பரிகாரம்

தெய்வீக மூலிகை சாம்பிராணி மகிமை;
ஏற்கனவே வாங்கியவர்களுக்கு குறைந்த விலையில்;

புகை பட்டால் பகை விலகும்....வீட்டில் ,தொழில் செய்யுமிடத்தில் செவ்வாய்,வெள்ளிதோறும் நமது தயாரிப்பான தெய்வீக நவகிரக சாம்பிராணி புகை போடுங்கள் ..பிரச்சினைகள் தீர,கடன் தீர,கண் திருஷ்டி தீர,செல்வவளம் உண்டாக இதை உபயோகிக்கலாம்...முக்கியமான தெய்வீக மூலிகைகளை அரைத்து,அதனுடன்வெண்கடுகு,சாம்பிராணி,குங்கில்யம்,சேர்த்திருக்கிறோம்.
வீட்டில் கணபதி ஹோமம் வளர்த்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ அதன் பலன்கள் இதில் நிச்சயம் கிடைக்கும்...

முதன்முறையாக இதை தயாரித்தபோது மூலிகை பொருட்கள் அதிக தாக்கத்தால் ,புகை குறைவாக வருகிறது என சொன்னவர்களுக்காக,சதுரகிரி மலை சென்று வாங்கி வந்த ஒரிஜினல் முதல் தர சாம்பிராணி இதனுடன் முக்கால் பாகம் கலந்திருப்பதால் நறுமணம்,புகை அதிகளவில் வரும்படி தயாரித்திருக்கிறோம்....

கல்வி,தொழில் தடங்கல் நிவர்த்தியாக மன உளைச்சல் தீர குடும்பத்தில் கஷ்டம் தீர முன்னோர்கள் காலம் முதல் நாம் விட்டில் கணபதி ஹோமம் வளர்ப்பது வழக்கம்..அதில் சேர்க்கப்படும் மூலிகைகள் அனைத்தும் ,இதில் சாம்பிராணியுடன் கலந்திருப்பதால் அந்த பலன்கள் ,இந்த நமது லட்சுமி குபேரர் தெய்வீக மூலிகை சாம்பிராணி புகை போடுவதால் கிடைக்கும்...செவ்வாய்,வெள்ளி தோறும் இதை வீடு மற்றும் தொழில் செய்யுமிடத்தில் ,நெருப்பில் போட்டு புகை உண்டாக்கினால் போதும்.

நெருப்பு சுலபமாக உண்டாக்க கரிக்கட்டை தேட வேண்டாம்,தேங்காய் மூடியை கேஸ் ஸ்டவ்வில் காட்டி எரிய விடவும்.அந்த தணலை சாம்பிராணி கரண்டியில் போட்டு,அதில் இந்த மூலிகை சாம்பிராணி இரண்டு ஸ்பூன் போட்டால் போதுமானது..


சாம்பிராணி புகை படும் இடத்தில் நோய் கிருமிகள் அண்டாது.

நோய்கள் பரவும் இந்த மழைக்காலத்தில் மூலிகை சாம்பிராணி அவசியம் தேவை.செல்வவளம் உண்டாக,நோய் தீர இதை உபயோகித்து பாருங்கள்.ஏற்கனவே வாங்கியோருக்கு சலுகை விலையில் தருகிறோம்.
இந்த வாரம் தயாரிக்கப்பட்ட புதிய தெய்வீக மூலிகை சாம்பிராணி தேவைப்படுவோர்
செல்லில் தொடர்பு கொள்ளவும் 9443499003 
மெயில்;sathishastro77@gmail.com

திங்கள், 2 நவம்பர், 2015

தொழிலதிபர் ஆகும் யோகம் யாருக்கு..?#ஜோதிட சூட்சுமம்

சொந்த தொழில் செய்ய வேண்டுமெனில் லக்னத்துக்கு தொழில் ஸ்தானமாகிய 10 ஆம் இடத்து அதிபதி,லக்னத்துக்கு வரவு செலவு ஸ்தானமாகிய 2ஆம் இடம்,லக்னத்திற்கு சேமிப்பு ஸ்தானமாகிய 11 ஆம் இட அதிபதி இவர்கள் லக்னத்திற்கு 3,6,8,12ல் மறையாமல் பாம்பு கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.அப்படி மறைந்திருந்தால் முதலீடு போட்ட பணம் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம்தான்..கூட்டு தொழில் செய்ய வேண்டும் எனில் லக்னத்துக்கு 7ஆம் அதிபதி 6,8 ,12ல் மறையாமலிருக்க வேண்டும் இல்லையெனில் நம் பார்ட்னர் நமக்கு பட்டை நாமம் சார்த்திவிடுவார்....

மிதுன லக்னமாக இருப்பின் அவருக்கு குரு பத்தாம் அதிபதியாக வருவார்...குரு செவ்வாய்,சனியுடன் சேராமல் இருப்பது நல்லது.செவ்வாய் 6ஆம் அதிபதி...தொழில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கும்.தொழில் மூலம் கடன் உண்டாகும்.குரு சனியுடன் சேர்ந்தால் அவர் எட்டுக்கும் ஒன்பதுக்கும் அதிபதி.அவர் பாக்யாதிபதி ஆச்சே என்று நினைக்கலாம்..9,10 ஆம் அதிபதி சேர்ந்தால் தரமகர்மாதிபதி யோகம் ஆச்சே என நினைக்கலாம்..ஆனால் சனி எட்டுக்கும் அதிபதி ஆச்சே அதனால் முதலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து நல்ல உயரத்துக்கு கொண்டு போய் அப்புறம் குப்புற தள்ளுவார்.குரு சுக்கிரனுடன் சேராமல் இருக்க வேண்டும்.சுக்கிரன் 5ஆம் அதிபதி பூர்வபுண்ணியாதிபதி ஆச்சே அவருமா அப்படி பண்ணுவார்..ஆம் .அவர் விரயதிபதியும் ஆச்சே தொழில் மூலம் பல வேற்றிகளை கொடுத்து அகலக்கால் வைக்க வைத்து ,பெரும் கடனாளி ஆக்குவார்.

குரு கேதுவுடன் சேர்ந்தால் ,தொழில் அமையாமல் சிரமப்படுவார்கள்..ராகுவுடன் சேர்ந்தால் மோசமான ஆட்களால் நஷ்டத்தை சந்திப்பர்.குரு 1,4,7,10,11ல் இருந்தால் நன்மையை செய்யும்.கேந்திராதிபத்திய தோசத்தை குரு கொடுப்பார் என்றால் தொழிலில் பிரச்சினை இல்லை.அடுத்தது வரவு செலவுக்கு அதிபதி மிதுன லக்னத்துக்கு யார் என பார்த்தால் சந்திரன்.அவர்3, 6,8,12ல் மறையாமல் இருக்க வேண்டும். 6ல் இருந்தால் தொழில் மூலம் வந்த பணம் வட்டி கட்டவே சரியாக இருக்கும்.12ல் இருந்தால் ஓட்டைப்பானைக்குள் தண்ணீர் ஊற்றியது போல ஆகிவிடும்.8ல் இருந்தால் தொடர்ச்சியாக வீண் செலவுகளாலும் தண்டச்செலவுகளாலும் நஷ்டத்தை சந்திக்க நேரும்.

11 ஆம் திபதியாக செவ்வாய்தான் வருகிறார் அவரே கடனை நோயை உண்டாக்கும் 6ஆம் அதிபதியாக இருக்கிறார் என்பதால் மிதுன லக்னத்தாருக்கு சேமிப்பு என்பது குதிரைக்கொம்புதான்..மனைவியே எல்லா வரவு செலவையும் பார்த்துக்கொண்டால் நல்லது.11ஆம் அதிபதி செவ்வாய் கெட்டவர் என்பதால் மூத்தவராக இவரே வீட்டில் இருப்பார்.இவருக்கு மூத்தவர் இருந்தால் பகை ஆவார்.பணம் கொஞ்சம் இருந்தால் அதை எப்படி செலவழிப்பது என்பதில்தான் கவனம் இருக்கும்.11 ஆம் அதிபதிதான் சேமிப்பை குறிக்கும்.2க்கு எட்டாம் அதிபதி வலுத்தால் வரவு செலவு நிரந்தரமாக பலன் தரும்.

10க்கு எட்டாம் அதிபதியாக பாக்யஸ்தானம் வலுத்தால்தன் தொழில் நிரந்தரமாக இருக்கும்...பாக்யாதிபதி மிதுன லக்னத்துக்கு சனியாக வருவதால் அவர் 6,8ல் மறையாமல் இருந்தால் தொழில் நிரந்தரமாக இருக்கும் இல்லையெனில் தொழில் மாறிக்கொண்டே இருக்கும்.

10 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் 10ஆம் இடத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லையெனில் சம்பளத்துக்கு வேலைக்கு போவதே நல்லது.சனி வக்ரமாக இருந்தால் சனி கெட்டிருந்தால் வெளிநாடு சென்று விடுவதே சிறப்பு.

தொழிலில் முன்னேற்றம் அடைய நடப்பு திசையும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறதோ,அந்ததிசை அதிபதி லக்னத்தில் எத்தனாம் இடத்தில் இருக்கிறாரோ அதை பொறுத்து வாழ்வில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.லக்னத்திற்கு அவர் நல்லவராகவும் இருக்க வேண்டும்.3,6,8,12ல் மறையாதவராகவும் இருக்க வேண்டும்...அப்போதுதன் அவர் ஊரும்,உறவும் வியக்கும்படி முன்னேறுகிறார்

வியாழன், 22 அக்டோபர், 2015

ஜோதிட சூட்சுமம் ;குருவும்,சுக்கிரனும் செய்யும் மாயங்கள்

அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்...!!

ஜாதகத்தில் 5ஆம் இடத்திலோ 9ஆம் இடத்திலோ குரு இருக்க வேண்டும் அல்லது குரு பார்க்க வேண்டும்..அவர்தான் உண்மையான ஆன்மீகவாதி.சனி ,குரு சேர்ந்திருந்தாலும் குரு, கேது சேர்ந்திருந்தாலும் சனி, கேது சேர்ந்திருந்தாலும்அவர்கள்நிறையபுண்ணியஸ்தலங்களையும்,மகான்களையும் தரிசிக்கும் புண்ணியம் பெற்றவர்கள்..

இவர்களுக்கு முன்ஜென்ம கர்ம வினைகள் பாவ வினைகள் அதிகம் பாக்கி இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்..இவர்கள் தான் இப்பிறவியில் சமூக சேவகர்களாகவும்,மக்களுக்கு தொண்டு செய்பவர்களாகவும்,சம்பாதிக்கும் பணத்தை தான தர்மம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.வாழ்வில் அதிகம் போராடுபவர்களாகவும்,மகான்களின் ஆசி பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..


வாழ்க்கையில எதை பத்தியும் கவலைப்படாம ஆட்டம்,பாட்டு,கொண்டாட்டம்,என வாழனும்னா..அதுக்கு சுக்கிரன் தான் அதிபதி...ரிசபம்,துலாம் ராசி,லக்ன காரங்க.லக்னத்துல சுக்கிரன் இருக்குறவங்க..பொதுவா ஜாலியானவங்க...தானும் சந்தோசமா இருந்து மத்தவங்களையும் சந்தோசப்படுத்துவாங்க!!
தனுசு,மீனம் ராசியினர் குரு ஆதிக்கம் கொண்டவங்க..நீதி..நேர்மை..எதிலும் ஒழுக்கம் வேணும்...டைமிங் கீப் பண்ண தரலைன்னா எதுக்கு வாழனும் என்பார்..குரு என்பதே தனக்காக வாழாமல் சமூகத்துக்காக வாழ்வது சுக்கிரன் என்றால் தனக்காக மட்டுமே வாழ்வது தன் சந்தோசமே முக்கியம் என வாழ்வது..பிறரை சந்தோசப்படுத்துவது...சுகத்தை கொடுப்பது..அனுபவிப்பது..

குருவும்,சுக்கிரனும் எவ்வளவு வித்தியாசப்படுகிறார்கள்..

உச்சமன்ற நீதிபதி என்றால் குரு கெடாமல் இருக்கனும்...தனுஷ் போல ஷாருக்கான் போல வாழனும்னா சுக்கிரன் கெடாமல் இருக்கனும்.சுக்கிரன் பணத்தை தருவார்..ஆனா அந்த பணத்தை எப்படியெல்லாம் செலவு செஞ்சு ,சந்தோசமா இருக்கலாம் என்ற அறிவை புதன் தான் தருவார்..

வித்தியாசமா யோசிச்சு ,அந்த ஐடியாவை பிக்கப் செஞ்சு பணக்காரன் ஆனவங்கதான் இந்த உலகத்துல அதிகம்.அதுக்கு காரணகர்த்தா புதன்.புதன் கெட்டுப்போனா ஒரே மாதிரி செக்கு மாடு வாழ்க்கைதான்.குரு கெட்டுப்போனா கூறுகெட்டவன்.எதை எப்போ யார்கிட்ட எப்படி பேசனும்..எதை எப்போ எப்படி செய்யனும் என்ற அறிவு இருக்கனும் குரு கெட்டவனை ஊரில் ஒருத்தரும் மதிக்க மாட்டார்..

புதன் கெட்டவன் வசியம் இல்லாதவன்..அவர் வாழ்வில் சுவாரஸ்யம் இருப்பதில்லை...சுக்கிரனும்,புதனும் நன்றாக இருந்தால் நிறைய சம்பாதித்து சந்தோசமாக இருக்கலாம்...!!

திங்கள், 12 அக்டோபர், 2015

அன்னதானம் /annadanam




அன்னதானம் ;annadanam;

வருடம் தோறும் ஆடி,புரட்டாசி,தை அமாவாசைகளில் ஆதரவற்ற குழந்தைகள்,முதியவர்கள்,உடல் ஊனமுற்றோர்க்கு அன்னதானம் செய்து வருகிறோம்.இந்த வருடமும் புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு ,ஆதரவற்றோர்க்கும் ,கண்பார்வையற்றோர்க்கும் அன்னதானம் செய்தோம்.ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி!








வெள்ளி, 9 அக்டோபர், 2015

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்னதானம் மகிமை

திங்கள் கிழமை 12.10.2015 புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை;

சிறப்பு வாய்ந்த அமாவாசைகள் ஆடி,தை,புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையாகும்.சில குடும்பங்களில் ,வழிவழியாக யார் இறந்தாலும் அவர்களுக்கு திதியோ ,தர்ப்பணமோ அவர்களை நினைத்து வருடாந்தர பூஜையோ செய்ய மாட்டார்கள்.இப்போது இருக்கும் தலைமுறை நல்ல வேலை நல்ல சம்பளம் இருக்கு..கடவுளை எதுக்கு கும்பிடனும் என நினைப்பது போல சில குடும்பத்தினர் நல்ல வசதி இருக்கு.அவங்களை கும்பிட்டு என்னாக பொகுது என விட்டுவிடுவர்.முன்னோர்களை நினைத்து வருடத்தில் ஒருநாள் திதி கொடுத்து வழிபட்டால் ,அவர்கள் ஆசி உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் கிடைக்கும்.ஞாயிறு ,திங்கள் இரண்டு நாளும் கொடுக்கலாம் .புனிதமான புரட்டாசி அமாவாசையில் அன்னதானம்,ஏழைகளுக்கு உதவி செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.பலன் பலமடங்காகநமக்கு கிடைக்கும்.

வருடம் தோறும் செய்வது போல இந்த வருடமும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்ய இருக்கிறேன்..இணையும் நண்பர்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.வெளிநாட்டில் இருப்போர் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதோர் என்னை தொடர்பு கொள்ளவும்.sathishastro77@gmail.com

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

வித்தியாசமான ஆலயங்கள்;சக்திவாய்ந்த வழிபாடு

மது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சில வித்தியாச மான ஆலயங்கள் பற்றி இங்கு காண்போம்.

●  கோவில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர் லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.


●  ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.


●  புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோவில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதி யார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோவிலுக்கு வந்து செல்வாராம். இக்கோவில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார்


.●  மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன்- வாசுகி சிலைகள் உள்ளன.

●  ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து,
அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார் கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோவில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

●  மயிலம் முருகன் கோவிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள்.


●  அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோவில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரகமாக இருக்கிறது. இக்கோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முற்பட்ட கோவிலாகும்.

●  நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோவிலின் கூரை தங்கத்தால் வேயப் பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சந்நிதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர்.


●  ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோவில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோவிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த் தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து  வருகிறது. கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.


●  சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத் தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.


●  மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு- தெற்கு கோபுரங்களுக்கிடையே  கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சந்நிதியை இரண் டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.


●  திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத் தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.


●  108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

●  கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

●  விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனா பிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.


●  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான், மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.


●  அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகை யால் ஆனவர்.
●  உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

●  திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சந்நிதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன.  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும்போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும்போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.


●  புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோவில் திங்கட் கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோவில் மூடியிருக்கும்.
●  தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப் பட்டுள்ளது. இக்கல் சந்திரனி டமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.

●  நாம் சாதாரணமாக கோவில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால் இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.