சனி, 28 பிப்ரவரி, 2015

சனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ராசிபலன்

சனி விருச்சிகம் ராசியில் இருக்கிறார்..தனுசு ராசிக்கு ஏழரை சனி,மேசம் ராசிக்கு அஷ்டம சனி,ரிசபம் ராசிக்கு கண்டச்சனி ,விருச்சிகத்துக்கு ஜென்ம சனி,துலாம் ராசிக்கு பாத சனி ,சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனி என பலன்கள் கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி, விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பார்....

சனி வக்ரம் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும்..இதனால் விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார் என எடுத்துக்கொள்ளலாம்...அப்படியெனில் மேசம் ராசிக்கு அஷ்டம சனியின் பாதிப்புகள் குறைகிறது..விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி பாதிப்புகள் குறைகிறது..சிம்மம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ,ரிசபத்துக்கு கண்டக சனி பாதிப்புகள் குறைகிறது...

மேற்க்கண்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும்..பணக்கஷ்டம் தீரும்.பகை விலகும்...நிம்மதி உண்டாகும் கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த 3 மாதங்கள் அமையும்...மேச ராசிக்கு அஷ்டம சனி நடக்கும் ராசிக்கு எட்டில் சனி வக்ரம் எனும்போது கொஞ்சம் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும்.. பேச்சால் பெரிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரும் சாதார சண்டை தெருச்சண்டை ஆகி கம்பீரமா இருந்த நான் தலை குனிந்தேனே என வருத்தப்படும் சூழல் உண்டாக்கிவிடலாம்..விருச்சிகம் ராசியினருக்கு இந்த வக்ரம் டாக்டரை நம்பி இருக்கும் சூழலை உண்டாக்குகிறது..ஏதேனும் மாத்திரை,மருந்து சாப்பிட்டே ஆகணும்..நீண்ட காலமாக அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் இப்போது முடிக்கலாம்..சனி வக்ரம் வாகனங்களுக்கு சிறப்பில்லை வாகனத்தால் கண்டம் உண்டாக்குவது அதுவும் சிம்ம ராசிக்கு இன்னும் எச்ச்சரிக்கையா இருக்கனும்..எனக்கு வேலையே வண்டியில சுத்துறதுதான் அப்புறம் எப்படி சார் என கேட்டால்,அந்த வண்டியே காணாம போச்சுன்னா அப்புறம் எப்படி சார் என்பதுதான் சனியின்  பதில்.

சிம்மத்துக்கு 4ல் சனி வனவசம்,சிறைவாசம் எல்லாம் 4ல் சனி வரும்போது சனி புத்தியும் நடக்கும்போதுதான் உண்டாகும்...4ல் சனி வக்ரம் அகும்போது அவர் ராசிக்கு 3ல் வருகிறார் அப்போ தைரியம்,துணிச்சலால் சில முக்கியமான பிரச்சினைகள் திடீர்னு உங்களுக்கு சாதகமாகி உங்களை சந்தோசத்துல திக்குமுக்காட வெச்சிடலாம்...அதே சமயம் உடல்நலனில் கவனமாக இருக்கனும் இதுவரை நல்லாருந்த உடல் இப்போ திடீர்னு விதவிதம படுத்தி எடுத்து உங்களை திக்கு முக்காட வெச்சிடலாம்..

மொத்தத்தில் சனி வக்ரம் சனிப்பெயர்ச்சி யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு,மந்தம்,முடக்கத்தையும் உண்டாக்க வாய்ப்புகள் அதிகம்..பறவைகள்,விலங்குகள்,ஆதரவற்ரோர்,ஊனமுற்றோருக்கு உணவுகள் உதவிகள் அளித்து சனிபகவான் நன்மைகளை பெறுவோம்!!

குழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள்

அஸ்வினி:
முதற்பாகத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு இன்னல்களும், பொருள் நஷ்டமும் உண்டாகும். அதற்கு சொர்ண தானமளிக்க வேண்டும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. இதற்கு வஸ்திர தானம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம்.

பரணி:
முதல் பாதம் தோஷமில்லை. இரண்டாவது பாதத்தில் பிறந்தால் தோஷமுண்டு. மூன்றாவது பாதம் மிகுந்த துன்பத்தை தரும். 4வது பாதம் முதல் 8 நாழிகைக்குள் பிறந்தால் தாயாரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதற்கு சாந்தியாகத் துர்க்கை அல்லது காளிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். பொன் அல்லது எருமை தானமளிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபட்டால் வளம் பெருகும்.

கிருத்திகை:
முதலிரண்டு பாதங்கள் தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தால் பெற்றோர்களுக்கு இன்னல்களும் இடையூறுகளும் உண்டாகும். ஆடு தானம் சிறந்தது. சூரிய ஆராதனையும், திருவண்ணாமலையில் உள்ள அக்னி லிங்க வழிபாடுகளும் மன அமைதியையும், பொருள் வளமையையும் நல்கும்.

ரோகிணி:
முதற் பாகம் அக்குழந்தைக்கும், மற்றும் அதன் தாய் மாமனுக்கும், இரண்டாம் பாதம் அதன் தந்தைக்கும், மூன்றாம் பாதம் அதன் தாயாருக்கும் தோஷம் விளைவிக்கும். நான்காம் பாதம் சாதாரணமானது எனினும் நான்கு பாதங்களுக்கும் தோஷமுள்ளது, அத்துடன் தாய் மாமனுக்கும் கண்டம் என நூல்கள் விலக்குகின்றன. எனவே அவரவர்களின் சக்திக்கேற்ப சாந்தி ஹோமங்கள் செய்வதுடன், வெள்ளியைத் தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் திருவருணை கோவிலில் பிரம்ம தீர்த்தம் எதிரில் உள்ள பிரம்ம லிங்கத்தை வழிபட்டு வந்தால் திரண்ட செல்வமும், நிறைந்த ஞானமும் பெறலாம்.

மிருகசீரிடம்:
நான்கு பாதங்களும் தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெளர்ணமி விரதமிருந்து சந்திரனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். திங்களூர் சென்று வழிபட்டால் தீராத குறைகளெல்லாம் தீரும்.

திருவாதிரை:
முதல் மூன்று பாதங்கள் தோஷமற்றது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகை வரையில் தாயாருக்கு கண்டம். இதற்கு பசு நெய் தானமளித்திடல் வேண்டும். செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் விஷ்ணு ஸகஸ்ர நாமம், ருத்ர ஜபம் செய்துவந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

புனர்பூசம்:
நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய ஆராதனை செய்வது சாலச்சிறந்தது. திருவண்ணாமலையில் உள்ள சூரிய லிங்க ஆராதனை மிகவும் புகழையும், பொருளையும் வழங்கும்.

பூசம்:
முதற்பாதம் தாய்மாமனுக்கும், 2து பாதம் மத்திய (நடு) பாகம் மற்றும் மூன்றாம் பாதம் பெற்றோர்களுக்கும் துன்பம் உண்டாக்கும். நான்காம் பாதம் தோஷமற்றது. இரண்டாம் பாதமும், கடக லக்னமும் கூடிய ஆண்குழந்தை தந்தைக்கு கண்டத்தை உண்டாகும். இரவு நேரங்களில் பிறந்த பெண்குழந்தையால் தாயாருக்கு கெடுதி. இதற்கு பரிகாரமாக பசுவை தானம் செய்தல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்ஷினா மூர்த்தியையோ, ஹயக்ரீவரையோ வழிபட்டு வருவது சிறந்ததாகும்.

ஆயில்யம்:
முதற்பாகம் சாதாரணமானது. இரண்டாவது பாதம் அக்குழந்தைக்கும், அதன் தந்தைக்கும் தோஷம். மூன்றாவது பாதம் அதன் தாயாருக்குக் கெடுதி. நான்காம் பாதம் அக்குழந்தைக்கும் அதன் தந்தைக்கும் துன்பத்தை தரும். இதற்கு கிரக சாந்திகள், ஜபம், தானங்கள் அவசியம் செய்திடல் வேண்டும். நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்வதும், ஏழை எளயவர்களுக்கு வஸ்திரம் அன்னதானம் செய்வது மிகவும் அவசியம். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் சர்பேஸ்வரனை வணங்குவது நல்ல பலன்களை தரும். ஸ்ரீகாளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது சிறந்தது.

மகம்:
முதல்பாகம், குழந்தையின் தந்தைக்கு தன நஷ்டத்தை அக்குழந்தை பிறந்தது முதல் ஐந்து மாதம் வரை உண்டாக்கும். ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனைகள், கிரக சாந்திகள், தானங்கள் செய்திடலாம். இரண்டு மற்றும் நான்காவது பாதம் சிறிதளவு தோஷம் உள்ளது. மூன்றாவது பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் ஆனால் தந்தைக்கும், பெண் என்றால் தாயாருக்கும் தோஷத்தை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் பித்ரு தேவதைகளை வழுவாது ஆராதனை செய்வது, திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம், திருமீச்சூர், திருப்பைஞ்சீலி ஆகிய திருத்தல வழிபாடுகளும் பெரும் நன்மையளிக்கும்.

பூரம்:
நான்கு பாதங்களும் சிறிதளவு தோஷமுள்ளது. இதற்கு பரிகாரமாக ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் அருணம் அல்லது மஹாஸரைம் பாராயணம் செய்வது மற்றும் ஆதித்ய ஹருத்யம் நாள்தோறும் படிப்பது, சூரியனை வழிபடுவது நன்மையாகும்.

உத்திரம்:
முதற்பாதம், முதலிரண்டு நாழிகைக்குள் பிறந்த குழந்தை ஆண் ஆயின் தந்தைக்கும், பெண் ஆயின் தாயாருக்கும் தோஷமுண்டாகும். இது இரண்டு மாதத்திற்குண்டு. இரண்டு மற்றும் மூன்றாம் பாதம் சாதாரணமானது. நான்காம் பாதம் தந்தையின் சகோதரர்களுக்கு தோஷமுண்டு பண்ணும், இதற்குப் பரிகாரமாக தைல (எண்ணெய்) தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கும் பன்னிரண்டு ஆதித்யர்தனைச் சேர்ந்த 'ஆர்ய மன்' என்னும் சூரியனை வழிபடல் வேண்டும்.

அஸ்தம்:
ஒன்று இரண்டு மற்றும் நான்காம் பாதம் தோஷமற்றது. மூன்றாம் பாதத்தில் முதல் நான்கு நாழிகைக்குள், ஆண் ஆனால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமுண்டு இது ஒன்பது மாதங்கள் நீடிக்கும். இத்தோஷத்தை ஸுவர்ணம் என்று கூறப்படும். பொன் தானத்தால் நீக்கிக்கொள்ள முடியும். ஆதித்ய ஹருதயம் பாராயணமும், சூரிய வழிபாடும் மேற்கொள்ள எல்லா நன்மைகளும் விளையும்.

சித்திரை:
முதல் மூன்று பாதங்கள் தாயாருக்கு, தந்தைக்கு மற்றும் சகோதரர்களுக்கு தோஷமுண்டாகும். இரண்டாவது பாதத்தில் முதல் ஆறு நாழிகைக்குள் எனின் குழந்தையின் தாய்க்கு மிகவும் தோஷம். முதலிரண்டு பாதங்களுக்குரிய கன்னி ராசியில் பகலில் பிறக்கும் ஆண் குழந்தை தந்தைக்கும், பெண் குழந்தை தாயாருக்கும் தோஷமுண்டாகும். இத பிறந்த ஆறுமாத காலத்திற்கு நீடிக்கும். நான்காம் பாதம் பிறந்த குழந்தை தந்தைக்கு துயரமும் உண்டாகும். வஸ்திர தானம் ஏற்ற பரிகாரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்திரனை வழிபடல் வேண்டும. திருவண்ணாமலையில் கிழக்கு திசையில் உள்ள அஷ்டலிங்கங்களில் முதல் லிங்கமான இந்திர லிங்க வழிபாடு, செல்வம், செல்வாக்கு, பதவி உயர்வு தரும்.

சுவாதி:
நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு தேவனை வணங்குதல் நன்று. அருணையிலுள்ள வாயுலிங்க வழிபாடு சாலச்சிறந்தது. திருமகளையும் வணங்குவது ஏற்றது.

விசாகம்: நான்காம் பாதம் தோஷம். மற்ற பாதங்கள் தோஷமில்லை. நான்காம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் முதற் குழந்தையாக இருப்பின் தாயாருக்கு கண்டமென்றும் கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற சுப்பிரமணி சாமிக்குரிய நாட்களில் செந்நிற ஆடைச் சாற்றி சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தான்ய தானங்கள் செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.

அனுஷம்:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ர என்னும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சூரியனை வழிபடல் வேண்டும். வருணனையும் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருணலிங்கத்தை வழிபடுவதும் மிகவும் சிறந்தது.

கேட்டை:
நான்கு பாதங்களும் தோஷத்தை தருவன. முதல் பாதத்தில் பிறந்தது. ஆண் குழந்தையாயின் மூத்த சகோதரனுக்கும், பெண் என்றால் மூத்த சகோதரிக்கும், 2ஆம் பாதம் மற்றமுள்ள சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும், 3ஆம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும். பசு அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 'தேவேந்திரனை' வழிபடல் வேண்டும். இந்த நட்சத்திர பெண்கள் திருமணத் தடை நீங்க தூய வெண்மையான மலர் கொண்டு தேவேந்திரனை மனதில் தியானித்து வழிபாடு செய்தால் நல்ல கணவர் அமைவார். அருணையிலுள்ள இந்திரலிங்கப் பூஜையும் மிகவும் சிறந்த பலன்களை தரும்.

மூலம்:
முதல் பாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம், பெண் குழந்தையாயின் கால்நடைகள் (பசுக்கள்) நஷ்டமாகும். 2ஆம் பாதம் ஆண் குழந்தையால் அதன் தாய்க்கு துன்பம். பெண்ணாயின் சுபம். 3ஆம் பாத ஆண் குழந்தையால் பெருள் நஷ்டம், சகோதரர்களுக்குத் துன்பம். 3ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கே நஷ்டம். 3ஆம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும், மாலைப்பொழுது எனின் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவு எனின் அதன் தாய்க்கும் உதயவேளை அல்லது காலை எனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தீங்கு. இந்த நட்சத்திரத்தில் எப்பாதத்தில் பிறந்திருப்பினும், மஹன்யாஸத்துடன் கூடிய ருத்ராபிஷேகம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரஜாபதியை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.

பூராடம்:
1, 2 மற்றும் 4ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டு. மூன்றாம் பாதத்தில் புத்திரன் தந்தைக்கும், புத்ரியானால் தாய்க்கும் தோஷமாகும். இத்தோஷம் எட்டாம் மாதம் வரையில் இருக்கும். தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும், நடு இரவிலும் புத்ர ஜனனமானது அதன் தந்தைக்கும், மற்றும் அச்சிசுவிற்கும் பெரும் தோஷமாகும். நவக்கிரகம் மற்றும் நட்சத்திர ஹோமம் செய்வதும், புனித கங்கை நீரினால் சிவபெருமானுக்கு அபிஷேகமும் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தில் உதித்தோர். திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருணலிங்கத்தையும் வழிபட்டால் நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பெளர்ணமி விரதம் ஏற்றது. தேங்காய், நெய் தீப வழிபாடு சாலச்சிறந்தது.

உத்திராடம்: நான்கு பாதங்களும் தோஷமில்லையாயினும், செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் 'விஷ கன்னியா' யோக மேற்படும். அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையூறுகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வதேவதைகளையும், விநாயகரையும் உள்ளன்புடன் வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பலம் பெறலாம். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை கணபதி ஆகியோரின் வழிபாடு மிக மிக உயர்ந்தது.

திருவோணம்:
தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து திருமாலை வழிபட்டாலும், சிரவண விரதமேற்கொண்டு திருவேங்கடமுடையானை ஆராதித்தாலும், லஷ்மி குபேர திருவுருவப் படத்தை - குபேர யந்திரம் - மந்திரம் கொண்டு பூஜித்தாலும், திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தாலும் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள். வாகனப் பிராப்தியுண்டாகும்.

அவிட்டம்:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஷ்டஸுக்களை ஆராதிக்க வேண்டும். பித்துரு முக்தி ஸ்தலங்களில் இராமேஸ்வரம், காசி, கயை, லால்குடி அருகிலுள்ள பூவளூர் ஆகிய ஊர்களில் உள்ள இறைமூர்த்திகளை ஆராதனை செய்வதும் மிகுந்த நன்மை பயக்கும்.

சதயம்: தோஷமில்லாதது. இந்த நட்சத்திரத்தில் உதித்தோர் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவருணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிபட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பமுறுவர்.

பூரட்டாதி:
முதல் மூன்று பாதங்கள் சிறிதளவே தோஷமுள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்தால் சிசுவின் தாய்க்கு கண்டம். அதுவும் முதல் குழந்தை எனின் தோஷம் அதிகம். பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறந்தோங்க, லஷ்மி குபேர பூஜையை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள குபேரலிங்கத்தையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலஷ்மி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது.

உத்திரட்டாதி:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர், காமதேனுவை பூஜித்தாலும், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரரை வழிப்பட்டாலும் நல்லவையெல்லாம் இடையூர் இன்றி வெற்றியுடன் நடைபெறும்.

ரேவதி:
முதல் மூன்று பாதத்தில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டாகும். நான்காம் பாதத்தில் பிறந்தால் குழந்தையின் தந்தைக்கும் தோஷமுண்டு. மூன்று மாதம் இருக்கும். இத்தோஷம் விலக பொன்னாலான பசு உருவம் மற்றும் பசும் நெய் தானமளித்திடல் வேண்டும். பன்னிரண்டு ஆதியர்களின் ஒருவரான 'பூஷா' என்பவரையோ, சூரியனார் கோவிலில் எழுந்தருளியுள்ள சூரிய நாராயணமூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தையோ வழிபட்டாலும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்




27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்



உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்


பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்

27  நட்சத்திர  அதி தேவதை  வழிபாடு  தோஷங்களும்,  பரிகாரங்களும்;

அசுவினி;

ஸ்ரீ சரஸ்வதி தேவி அசுபதி  நட்சத்திரத்தின்  அதி தேவதை;
ஓம் அம் அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவாய நமஹ
அசுபதி  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
     திருத்துறைப்பூண்டி

அருள் மிகு பிறவி மருந்தீஸ்வரர்  திருக்கோவில்
திருவாரூரிலிருந்து  30 கி.மீ.  தூரத்தில்  திருத்துறைப்பூண்டி  உள்ளது. பஸ் ஸ்டேண்டிலிருந்து 1 கி.மீ.  தூரத்தில் கோவில் உள்ளது.


2.ஸ்ரீ துர்க்கை தேவி  பரணி நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பம்  பரணி மாஹாளி ஸ்ரீ துர்க்கா  தேவாய நமஹ

பரணி இந்த  நட்ச்த்திரம் அவதரித்த ஸ்தலம்
    நல்லாடை

அருள் மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ.  நெடுங்காடு  வழியாக காரைக்கால்  செல்லும்  வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
ஸ்ரீ அக்னி தேவி கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை
ஓம் கம் கிருத்திகை ஆதிசேசன் ஸ்ரீ அக்னி தேவாய நமஹ

3.கார்த்திகை இந்த நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
    கஞ்ச நகரம்

அருள் மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
 மயிலாடுத்துறை  பூம்புகார் செல்லும் வழியில் 8.கி.மீ. தூரத்தில் கஞ்சா நகரம் அமைந்துள்ளது.  மெயின்  ரோட்டிலிருந்து   பிரியும்  ரோட்டில் அரை கி.மீ.  சென்றால்  கோயிலை  அடையலாம்.

4.ஸ்ரீ பிரம்மா  ரோகிணி  நட்சத்திரத்தின் அதி தேவதை
ஓம் ரோம்  ரோகிணி ஸ்ரீ நாகர் ஸ்ரீ  பிரம்மா தேவாய  நமஹ ரோகிணி  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
     காஞ்சிபுரம்
அருள் மிகு பாண்டவ  தூதப் பெருமாள்  திருக்கோவில்
  காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர்  கோயில்  எதிரில்  உள்ள  சாலையில்  கோயில்  அமைந்துள்ளது.

5.ஸ்ரீ சந்திரன்  மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்  அதி தேவதை
ஓம் ம்ரும் மிருக சீர்ஷம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
    முகூந்தனூர்
அருள் மிகு ஆதி நாராயணபெருமாள் திருக்கோவில்
தஞ்சாவூரிலிருந்து   திருவாரூர் செல்லும்  வழியில் 50 கி.மீ. தூரத்தில் முகந்தனூர் உள்ளது.  இந்த  பஸ்  ஸ்டாப்பிலிருந்து  1 கி.மீ.  தூரம்  சென்றால்  கோயிலை  அடையலாம்

6.ஸ்ரீ ருத்திரன் திருவாதிரை நட்சத்திரத்தின்  அதிதேவதை
 ஓம் ஆம்  திருவாதிரை  ஸ்ரீ  சனீஸ்வரா ஸ்ரீ ருத்திரர் தேவாய நஹ
.திருவாதிரை  இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
   அதிராம் பட்டினம்
அருள் மிகு அபயவரதீஸ்வரர்  திருக்கோவில்
தஞ்சாவூரிலிருந்து 70 கி.மீ.  தூரத்தி உள்ள பட்டுக்கோட்டை சென்று  அங்கிருந்து  12 கி.மீ.  சென்றால்  அதிராம் பட்டினத்தில் உள்ள அந்த ஆலயத்தை அடையலாம்.

7.ஸ்ரீ அதிதி  தேவி  புனர் பூசம் நட்சத்திரன் அதிதேவதை
ஓம் பும் புனர் பூசம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ அதிதி  பகவான் தேவாய நமஹ

புனர் பூசம்  இந்த  நட்சத்திரம்   அவதரித்த ஸ்தலம்
     வாணியம் பாடி
அருள் மிகு  ஆதிதீஸ்வரர்   திருக்கோவில்
வேலூரிலிருந்து  கிருஷ்ணகிரி  செல்லும்  வழியில்   67 கி.மீ.  தூரத்தில் உள்ளது.   பஸ் ஸ்டாண்டிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளா   பழைய  வாணியம் பாடியில் உள்ளது.

8.ஸ்ரீ குரு  பூசம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பூம்  பூசம்  ஸ்ரீ மஹா விஷ்ணு ஸ்ரீ  குரு  பகவான்  தேவாய நமஹ

 பூசம்  இந்த நட்சத்திரம்  அவதரித்த திருக்கோவில்
  விளாங்குளம்
அருள் மிகு  அட்சயபுரீஸ்வரர்   திருக்கோவில்
பட்டுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும்  வழியில்   கிழக்கு  கடற்கரை  சாலையில் 30 கி.மீ. சென்றால்  கோயிலை  அடையலாம்.  புதுக்கோட்டையிலிருந்து   பேராவூரணி  வழியாகவும்   விளாங்குளத்தை  அடைய   வழியிருக்கிறது.

9.ஸ்ரீ ஆதிசேசன்   ஆயில்யம்   நட்சத்திரத்தின்  அதி தேவதை
ஓம் ஆம்   ஆயில்யம்  ஸ்ரீ  ராகு பகவான் ஸ்ரீ ஆதிசேசன்  தேவாய நமஹ

.ஆயில்யம்  இந்த   நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
       திருவிசை நல்லூர்
அருள் மிகு  கற்கடடேஸ்வரர்  திருக்கோவில்
 கும்பகோணத்திலிருந்து   சூரியனார்  கோவில் செல்லும்  ரோட்டில்  11 கி.மீ.  தூரத்தில் உள்ள  திருவிசை நல்லூர்  சென்று  அங்கிருந்து    பிரியும்   ரோட்டில்  2  கி.மீ.  சென்றால்  கோயிலை  அடையலாம்.

10.ஸ்ரீ சுக்கிரன் மகம் நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் மம்  ஸ்ரீ தில்லைக்காளி  ஸ்ரீ  சுக்கிரர்  தேவாய  நமஹ
மகம் இந்த நட்சத்திரம்  அவதரித்தன் ஸ்தலம்
விராலிப் பட்டி விலக்கு
அருள் மிகு  மகாலிங்கேஸ்வரர்  திருக்கோவில்
  திண்டுக்கல்லிருந்து  நத்தம் செல்லும்  ரோட்டில்  10 கி.மீ.  தூரத்தில்  விராலிப்பட்டி உள்ளது.  இங்கிருந்து  2 கி.மீ. மினி பஸ்ஸில் சென்றால்  கோயிலை  அடையலாம்.  ஆட்டோ  வசதியும் உண்டு.

11.ஸ்ரீ  பார்வதி   தேவி  பூரம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பூம் பூரம்  ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ  பார்வதி  தேவாய நமஹ
பூரம்  இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
   திருவரங்குளம்
அருள் மிகு  ஹரிதீர்த்தேஸ்வரர்  திருக்கோவில்
புதுக்கோட்டையிலிருந்து  பட்டுக்கோட்டை  செல்லும்  வழியில்  7 கி.மீ.  சென்றால் வரும்  திருவரங்குளம் என்னும்  ஊரில்  ஆலயம் உள்ளது.

12.ஸ்ரீ சூரியன் உத்திரம் நட்சத்திரத்தின் அதிதேவதை
ஓம் உம் உத்திரம் ஸ்ரீ வாஞ்சியம்மன்  ஸ்ரீ  சூரிய பகவான் தேவாய நமஹ

உத்திரம் இந்த நட்சத்திரம்  அவதரித்த  ஸ்தலம்
  இடையாற்றுமங்கலம்
திருச்சி சத்திரம்   பஸ் ஸ்டேண்டிலிருந்து  22 கி.மீ.   தூரத்தில் உள்ள   லால்குடி  சென்று  அங்கிருந்து   5 கி.மீ. தூரத்திலுள்ள   இடையாற்று  மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

13.ஸ்ரீ சவிதா  தேவி  ஹஸ்தம்  நடசத்திரத்தின்  அதிதேவதை
ஓம்  ஹம் அஸ்தம்  ஸ்ரீ  ராஜ துர்க்கை  ஸ்ரீ  சவிதா  தேவி  தேவாய  நமஹ
ஹஸ்தம்  இஎத  நட்சத்திரம்  அவதரித்த  ஸ்தலம்
    கோமல்

அருள் மிகு  கிருபா கூபாரேஸ்வரர்  திருக்கோவில்
கும்பகோணத்திலிருந்து  மயிலாடுதுறை  செல்லும்  வழியில்  உள்ள குத்தாலத்திலிருந்து   பிரியும்  ரோட்டில்  8 கி.மீ.  தூரத்தில்  கோமல் ஊரில்  உள்ளது.  குத்தாலத்திலிருந்து   பஸ் ஆட்டோ  வசதி உள்ளது.

14.ஸ்ரீ துவஷடா  புவனேஸ்வரி  சித்திரை நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் சிம் சித்திரை ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ புவனேஸ்வரி தேவாய நமஹ
   குருவித்துறை
அருள் மிகு  சித்திரை ரத வல்லப பெருமாள் திருக்கோவில்
மதுரையிலிருந்து  23 கி.மீ.  தூரத்திலுள்ள   குருவித்துறைக்கு  மதுரை  பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து  பஸ் உள்ளது.  குருவித்துறையிலிருந்து   3.கி.மீ.  தூரத்தில் உள்ளது.   வியாழன், பெளர்ணமி   தினங்களில்   கோயில் வரை பஸ்கள் செல்லும்   மற்ற  தின்ங்களில்  ஆட்டோவில்  செல்ல வேண்டும்.

15.ஸ்ரீ வாயு  சுவாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் ஸ்வாம் ஸ்வாதி  ஸ்ரீ  சனிபகவான்  ஸ்ரீ  வாயு  பகவான்  தேவாய  நமஹ
சுவாதி இந்த நட்சத்திரம் அவதரித்த  ஸ்தலம்
  சித்துக்காடு
 அருள் மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோவில்
பூந்தமல்லியிலிருந்து  தண்டூரை  என்னும்  ஊருக்குச் செல்லும்  வழியில்  8 கி.மீ. தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம்  உள்ளது.  குறித்த  நேரத்தில்  மட்டுமே  பஸ் உண்டு  என்பதால்   பூந்தமல்லியிலிருந்து  வாகனங்களில்  சென்றும் திரும்பலாம்.

16.ஸ்ரீ முருகன்  விசாகம் நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் விம் விசாகம் ஸ்ரீ வன துர்க்கை  ஸ்ரீ முருகபகவான் தேவாய நமஹ
. விசாகம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
    திருமலைக்கோவிலை
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோவில்
மதுரையிலிருந்து  155 கி.மீ. தொலைவிலுள்ள செங்கோட்டை  சென்று  அங்கிருந்து 7 கி.மீ. தூரத்திலுள்ள்  திருமலைக்கோவிலை  பஸ் மற்றும்  வேன்களில்  அடையலாம்.  இவ்வூரைச் சுற்றி  பிரபல்  ஐயப்ப  ஸ்தலங்களான  ஆரியங்காவு,  அச்சன் கோவில், குளத்துப்புழை,  ஆகியவை உள்ளன.

17. ஸ்ரீ லட்சுமி தேவி  அனுசம் நட்சத்திரத்தின்  அதிதேவதை 
ஒம் அம் அனுசம்  ஸ்ரீ  முகாம்பிகை  ஸ்ரீ  அஷ்டலட்சுமி தேவாய நமஹ
அனுஷம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
   திருநின்றியூர்
அருள் மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில்
மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி  செல்லும்  வழியில்  7 கி.மீ. தூரத்தில் திருநின்றியூர்  என்னும் ஊரில்  இத்தலம்  அமைந்துள்ளது.

18. ஸ்ரீ இந்திரன் கேட்டை  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் ஜேம் கேட்டை ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ இந்திரன் தேவாய நமஹ
 கேட்டை  இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
  பசுபதி கோயில்
அருள் மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம்  செல்லும்  வழியில்   13 கி.மீ.  தூரத்தில் உள்ளது.

19.ஸ்ரீ அனுமன் மூலம் நட்சத்திரத்தின் அதிதேவதை
ஓம் மும் மூலம் ஸ்ரீ சொக்கநாதர் ஸ்ரீஅனுமன் பகவான் தேவாய நமஹ

 மூலம்  இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
மப்பேடு
அருள் மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில்
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும்  வழியில் 45 கி.மீ. தூரத்தில்  மப்பேடு  என்ற ஊரில்  இத்தலம் உள்ளது.  [பூந்தமல்லியிலிருந்து  22 கி.மீ.  பேரம்பாக்கம் செல்லும்  வழியில்]

20. ஸ்ரீ வருணன்  பூராடம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பூம் பூராடம் ஸ்ரீபிரகஸ்பதி ஸ்ரீ  வருண பகவான்  தேவாய நமஹ
 பூராடம் இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
  கடுவெளி
அருள் மிகு  ஆகாச புரீஸ்வரர் திருக்கோவில்
 தஞ்சாவூரிலிருந்து  [13. கி.மீ திருவையாறு சென்று அங்கிருந்து கல்லணை  செல்லும்  வழியில் 4. கி.மீ. தூரம் சென்றால்  கடுவெளியை  அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

21.உத்திராடம் நட்சத்திரத்தின் அதி தேவதை வினாயகர்

ஓம் உம் ஸ்ரீ துர்க்காதேவி ஸ்ரீமகாகணபதி தேவாய நமஹ

 அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 
 இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு

22.ஸ்ரீ  விஷ்ணு  திருவோணம்  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் திம் திரு ஓணம்  ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ மகா விஷ்ணு   தேவாய நமஹ
திருவோணம் இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
  திருப்பாற்கடலை
அருள் மிகு  பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில்
வேலூரிலிருந்து  சென்னை செல்லும்   வழியில்  20 கி.மீ.  தூரத்திலுள்ள  காவேரிப்பாக்கத்தில்  இறங்கி   அங்கிருந்து   பிரியும்  ரோட்டில்  2 கி.மீ.  சென்றால்  திருப்பாற்கடலை  அடையலாம்.  ஆற்காடு  வாலாஜாவிலிருந்தும்  பேருந்துகள்   உள்ளன.  இவ்வூரில்  இரண்டு   பெருமாள்   கோயில்கள்  இருப்பதால்  பிரசன்ன   வெங்கடேச பெருமாள்  எனக்  கேட்டுச்  செல்லவும்.

23.ஸ்ரீ  வசுக்கள் அவிட்டம் நட்சத்திரத்தின்  அதிதேவதை
1.தரன்
2.சோமன்
3.அனிலன்
4.ப்ரத்யூஷன்
5.த்ருவன்
6.அஹன்
7.அனலன்
8. ப்ரபஷன்
 ஓம் அம் அவிட்டம்  ஸ்ரீ அஷ்ட்திக்பாலகர்கள் ஸ்ரீ அஷ்டவசுக்கள் தேவாய நமஹ
 அவிட்டம்  இந்த  நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
   கொடுக்கை
அருள் மிகு ஞானபுரீஸ்வரர்  திருக்கோவில்
கும்பகோணம் மகாமகக்குளம்  மேற்குக்  கரையிலிருந்து 4 கி.மீ.  தூரத்தில்  கோயில் உள்ளது.   கும்பகோணத்திலிருந்து   தாராசுரம்முழையூர்  வழியாக   மருதாநல்லூர்  செல்லும்  பஸ்களில் கொருக்கை   என்னும்  இடத்தில் உள்ளது.

24.ஸ்ரீ   யமன் சதயம்  நட்சத்திரத்த்ன் அதிதேவதை
 ஓம் சம் சதயம் ஸ்ரீ சர்பசயனப்பெருமாள்   ஸ்ரீ  எமன் பகவான்  தேவாய நமஹ
 சதயம்   இந்த  நட்சத்திரம்  அவதரித்த ஸ்தலம்
  திருப்புகலூர்
அருள் மிகு  அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவாரூர்  மாவட்டம்  நன்னிலத்திலிருந்து  நாகப்பட்டினம்  செல்லும்  வழியில்  10 கி.மீ. தொலைவில்  திருப்புகலூர்  என்னும்  ஊரில்  இத்தலம் உள்ளது.

25. ஸ்ரீ குபேரன் பூரட்டாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் பூம்  பூரட்டாதி  ஸ்ரீ சித்தர குபதர் ஸ்ரீ குபேரபகவான் தேவாய நமஹ

 பூரட்டாதி  இந்த  நட்சத்திரம் அவதரித்த  ஸ்தலம்
  ரங்கநாதபுரம்
அருள் மிகு திருவானேஸ்வரர் திருக்கோவில்
திருவையாரிலிருந்து  17 கி.மீ. தூரத்திலுள்ள  திருக்காட்டுப்பள்ளி சென்று  அங்கிருந்து   அகரப்பேட்டை  செல்லும் ரோட்டில்  2 கி.மீ. தூரம் சென்றால்  ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
 
26. ஸ்ரீ  காமதேனு  உத்திரட்டாதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஓம் உம் உத்திரட்டாதி  ஸ்ரீ சனி பகவான்  ஸ்ரீ காமதேனு தேவாய நமஹ
 உத்திரட்டாதி  இந்த  நட்சத்திரம்ன்   அவதரித்த ஸ்தலம்
 தீயத்தூர்
அருள் மிகு  சகஸ்ரலட்சுமீஸ்வரர்  திருக்கோவில்
புதுக்கோட்டயிலிருந்து  40 கி.மீ.  தூரத்திலுள்ள   ஆவுடையார்   கோவில் சென்று,  அங்கிருந்து   திருப்புவனவாசல்  செல்லும்  வழியில்  21 கி.மீ.   தூரத்தில் தீயத்தூர்  உள்ளது.  மதுரையிலிருந்து   செல்பவர்கள்  அறந்தாங்கி  சென்று  அங்கிருந்து  திருப்புவனவாசல்  செல்லும்  பஸ்களில்  சென்றால்  தீயத்தூர்  என்னும்  இடத்தில்  உள்ளது.  தூரம்  120 கி.மீ.

27.ஸ்ரீ சனீஸ்வரன்  ரேவதி  நட்சத்திரத்தின்  அதிதேவதை
ஒம் ரேம் ரேவதி ஸ்ரீ சோமஸ்கந்தர் ஸ்ரீ சனீஸ்வரர் தேவாய நமஹ
ரேவதி இந்த நட்சத்திரம் அவதரித்த ஸ்தலம்
     காருகுடி

அருள் மிகு   கைலாசநாதர் திருகோவில்
திருச்சியிலிருந்து  முசிறி  40 கி.மீ.  சென்று   முசிறியிலிருந்து  வேறு  பஸ்களில்   தாத்தாயங்கர்பேட்டை [21 கி.மீ.]  செல்ல வேண்டும்.  இங்கிருந்து   5 கி.மீ.  தூரத்தில் உள்ள  காருகுடி  என்னும் இடத்தில் உள்ளது.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,பஞ்சாங்கம் 2015

எந்த  ஆண்டிலும்,  எந்தக்கிழமைக்கும்  பொதுவான  நல்ல  நேரம்;

1.ஞாயிறு  -காலை 6-12, மதியம் 1,30 -4.30 மாலை 6-காலை6

2. திங்கள்  -காலை 6-7.30, காலை 9.10.30,பகல் 12- அதிகாலை6

3. செவ்வாய்  -காலை6-9, காலை 10.30-பகல்3  மாலை 4.30- அதிகாலை 6

4.புதன்       -காலை6—7.30,காலை9-பகல்12   பகல்1.30-அதிகாலை 6

5. வியாழன்   -காலை 7.30, பகல்    1.30  மாலை 3- அதிகாலை 6

6.வெள்ளி  -காலை 6-10.30,பகல் 12-மாலை3  மாலை 4.30- அதிகாலை  6

7.சனி   -காலை 6-9,  காலை10.30-பகல்  1.30  மாலை 3-அதிகாலை 6



ராசியான  நாளில்  மாங்கல்யம்   வாங்கவோ, செய்யக் கொடுக்கவோ  உகந்ததாக்க்  கருதப்படும்  நட்சத்திரங்ளில்  ஒன்றுதான்  ‘சுவாதி’  வீடு  கட்ட  தொடங்கவும்  கிரகப்  பிர வேசம்  செய்யவும்,  மங்கல  நிகழச்சிகள்   நட்த்தவும்  ‘சுவாதி’  நட்சத்திரம்  இடம்  பெற்ற  நாளாகத்  தேர்ந்தெடுக்கலாம்.

என்றும்  எப்பொழுதும்  சுப  வேளைதான்

இன்று ஒரு  காரியத்தினை  சாதித்தே  ஆக வேண்டும் எனில் எல்லா  நாலும்  சுப தினம்தான்  அல்லது  சுபதினமாக்கி எண்ணியதை   முடிக்க   நமது  முன்னோர்கள்   சில  விதிமுறைகளை   வகுத்துச் சென்றுள்ளனர்.  அதனடிப்படையில்  மோசமான   நாளைக்கூட    சுபத்தினமாக்கி   எண்ணியதை   திண்ணமாக  முடிக்க முடியும்.

1.     தற்காலம்   நாட்காட்டிகளில்  காலையிலும்   -மாலையிலும்   நல்ல  நேரம்  எனக்  குறித்திருப்பதைப்  பார்க்கிறீகள்,  அவை  சுப ஹோரை- கெளரி பஞ்சாங்கத்தின்  அடிப்படையில்   குறிக்கப்படுவது  ஆகும்.  அந்த  நேரங்களை  நல்ல  நேரமாக்க்  கருதி  [மோசமான  நாட்களிலும்]  செயல் படலாம்.

2.    எவ்வளவு  மோசமான  நாளாக  இருந்தாலும்  செய்தே  ஆக  வேண்டிய   கட்டாயமான    வேலைகளை   சுபஹோரை  பார்த்துச் செய்யலாம்.

3.    கெளரி  பஞ்சாங்கத்தில்  உத்தியோகம்,  அமிர்தம், சுகம், தனம், லாபம் எனக் குறிப்பிட்டுள்ள  காலங்களில்  [ராகு, எமகண்டம்   தவிர்த்து]  நல்லது  செய்யலாம்.


4.    பகல்  11  மணிக்கு   12 மணிக்குள்   சூரியன்  உச்சியில்   பிரகாசிக்கும் காலம்  முகூர்த்த காலம்  எனப்படுகிறது. இக்காலம்  தோஷமில்லாத  சுப  நேரமாக்க்   கருதப்படுகிறது.

5.    சூரியன்  உதயமாவதற்கு  முன் காலை 4 ம்ணி முதல்  6. மணிக்குள்  சூரியன்  மறந்த  பின்  6  மணிக்குப்  பிறகு  எல்லா  சுபகாரியங்களையும்  செய்யலாம்.  எந்த  தோஷமும் கிடையாது என சொல்லப்பட்டுள்ளது.

சனி, 21 பிப்ரவரி, 2015

பிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்கள்

நட்சத்திர  அதிபதிகளும்,   பரிகார ஸ்தலங்களும்;

நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்களோ அந்த நட்சத்திரம் வரும் நாளில் விடி்யற்காலையில்  பால் அபிசேகம் செய்ய பால் கொடுத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.அப்படி செய்ய முடியாத கோயிலில் உதாரணமாக திருப்பதி போன்ற இடங்களில் தரிசனம் செய்தாலே போதும்.முடிந்தவரை அங்குள்ள திருக்குளத்தில் குளியுங்கள்..அங்குள்ள தல மரத்தை வலம் வாருங்கள்..


1.அசுவினி- சனிஸ்வரர்; திருநள்ளாறு   தர்ப்பன்யேசுவரர்

2.பரணி- காளி;திருவாலங்காடு[அரக்கோணம் அருகில்]

3. கார்த்திகை- ஆதிசேஷன்; நாகப்பட்டினம் [நாகநாதர்]
4.ரோகிணி- நாக நாதர்;   திருநாகேஸ்வரம் [கும்பகோணம் அருகில்]

5. மிருகசீரிடம்- வனதுர்க்கை;  கதிரமங்கலம் [கும்பகோணம்  குத்தாலம் சாலை
6. திருவாதிரை- சனீஸ்வரர்;   திருக்கொள்ளிக்காடு[திருவாரூர் 
  அருகில்]
7.புனர்பூசம்- தட்சணாமூர்த்தி;  ஆலங்குடி[கும்பகோணம் அருகில்]

8.பூசம்-   தட்சணாமூர்த்தி ;  குச்சனூர்  [தேனி அருகில்]

9.ஆயில்யம்-   சனீஸ்வரர்;  திருப்பரகுன்றம்  சனிபகவான்

10.மகம்- தில்லைக்காளி ; சிதம்பரம்

11.  பூரம்-  ராகு  ;திருமணஞ்சேரி  ராகு [மயிலாடுதுறை]

12.உத்திரம்- வஞ்சியம்மன்;  மூலனூர்[  [தாராபுரம்  அருகில்]

13. ஹஸ்தம்- ராஜ துர்க்கை; திருவாரூர்   ராகு

14. சித்திரை- ராஜ துர்க்கை;  திருவாரூர்  சனி[வன்மீக  நாதர்   நீலோற்பாலம்பாள்]

15.சுவாதி-  சனீஸ்வரர்;   திருவானைக்காவல் ராகு,  சனி [திருச்சி அருகில்]

16.  விசாகம்-  சனீஸ்வரர்   திருவேடகம்  ராகு,  சனி  [சோழவந்தான்  அருகில்]

17.அனுசம்- மூகாம்பிகை;  திருவிடைமருதூர்[கும்பகோணம்அருகில்]

18.கேட்டை  அங்காள பரமேஸ்வரி ;  பல்லடம்[காங்கேயம் அருகில்]

19.  மூலம்-  தட்சிணாமூர்த்தி; மதுரை

20.   பூராடம்- தட்சிணாமூர்த்தி;  திருநாவலூர்  [பண்ருட்டி  அருகில்

21.உத்திராடம்-  துர்க்கை;  தட்சிணாமூர்த்தி தருமபுரம் [திருநள்ளாறு]

22.திருவோணம்-  ராஜ காளியம்மன்; தெத்துப்பட்டி [திண்டுக்கல் அருகில்]

23. அவிட்டம்- சனி; ராகு;   கொடுமுடி சனி,  ராகு  [கரூர் அருகில்]

24. சதயம்  - சனி, ராகு;  திருச்செங்கோடு  சனி,  ராகு  [நாமக்கல் அருகில்]

25.பூரட்டாதி – ஆதிசேஷன் ; காஞ்சீபுரம்  சித்ரகுப்தர் , ராகு. கேது

26. உத்திரட்டாதி – சனி,  தட்சிணமூர்த்தி;  ஓமாம்புலியூர்  சனி, ராகு [சிதம்பர அருகில்]

27.ரேவதி- சனி, தட்சிணாமூர்த்தி;  ஒமாம் புலியூர்  சனி,  ராகு  சிதம்பரம் அருகில்]


வியாழன், 19 பிப்ரவரி, 2015

நீங்க மிதுனம் ராசியா..?gemini

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்..அவர் பெரும்பாலும் மிதுன ராசியில் பிறப்பதுண்டு...ஆயுதம் இல்லாத நிராயத பானியாக இருந்தால் தன் சாமர்த்தியத்தால் ஜெயிப்பவர் மிதுன ராசிக்காரர்...ராசியின் சின்னம்..இரட்டைக்குழந்தைகள் படம் இருக்கும்...பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது இந்த ராசியினருக்குத்தான்...இவர்கள் ஏதேனும் ஒரு கலைத்துறையில் இருப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு ஒரு திறமை இவர்களிடம் இருக்கும்.கண் பார்வையில் அடுத்தவர் மனதில் இருப்பதை படிப்பதில் மன்னன்..காரணம் ராசி அதிபதி புதன்..நல்ல நினைவாற்றலையும் நல்ல கிண்டல்,கேலி செய்வதிலும் வல்லவர்..பணம் சம்பாதிப்பதில்,பணத்தை கறப்பதில் குறியாக இருப்பார் இதனால் வெற்றிகரமான தொழில் அதிபர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்!!

இந்தராசி கால புருஷனுக்கு மூன்றாவது ராசி. இந்தராசி உபயராசி,காற்றுராசி,ஆண்ராசி,சாத்வீகமானராசி,விவேகமானராசி,ஆதிக்கமானராசி,வெறுமையான ராசி,சத்தியமானராசி, வறண்டராசி,சீற்றமுள்ளராசி,சினம்கொண்டராசி,மனித தன்மைராசி,மனமாற்றமுள்ள ராசி,குரலோசை ராசி,குருட்டுத்தனமானராசி, இரட்டைராசி,குறுகியராசி,பறப்பனராசி.
இராசியின் சின்னம் ஆணும் பெண்ணும் ஆணின் கையில்வீணை வைத்துக் கொண்டும்பெண் நடனமாடுவது போலும் இருப்பதாக்க் குறிப்பிடுவர்


இந்தராசிக்காரார் உயரமாகவும்,நீண்டமூக்கும்,நீண்ட புஜங்களையும் கைவிரல்கள்அமைந்திருக்கும்.சுருட்டைமுடி,உருண்டமுகம்,உதடுகள்ஒரளவுக்குகறுத்திருக்கும்,மெல்லியசரீரம்,கறுப்புநிறகண்களும்,பார்வையில் சுறுசுறுப்புத் தெரியும்.மற்றவர்களையும் சுறுசுறுப்பாக இருக்கத் தூண்டுவார்.நிமிர்ந்த நோக்கு இயல்பாக  உடையவர்.பித்தசரீரமுடையவர்.

வீட்டை அழகாக வைத்திருப்பார்,சுத்தமாகஇருப்பார்,கைவேலைப்பாடு திறமை, நுண்கலைத்திறமை உள்ளவர்.இசையில் ஈடுபாடு இருக்கும்.மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்,அவர்களின் எண்ணம் என்ன என்பதை அறிவதில் வல்லவர்கள்,ஒருவரை எடைப்போடுவதில் வல்லவர்.அடுத்தவரை பற்றி அறிந்ததை விமர்சனம் செய்வதிலும் வல்லவர்களாகத் திகழ்வார்.

பிறரை அடக்கி ஆளுவதில் வல்லமை பெற்றவர்கள்.தீர்க்கமான சிந்தனை உடையவர். வைராக்கிய நோன்புடையவர்.மெளனமாக இருந்து காரியத்தைச் சாதித்துக்கொள்ளக்கூடியவர்.கோபம் வரும் போது தன் உள்ளத்தில் தோன்றியதை உடனே வெளிப்படுத்துவார்கள்.

படிப்பில் ஆர்வம், படித்ததை கிரகித்துக்கொள்ளும் சக்தி உண்டு,கல்வியாளர் கணிதம்,விஞ்ஞானம்,சட்டம்போன்ற கல்வித்துறைகளில் எல்லாவற்றிலும் ஈடுபட்டு பிரகாசிக்கக்கூடியவர்.

நல்ல பேச்சாளி,திறமையாக வாதாடக்கூடியவர். நகைச்சுவை ரசனை உடையவர்.மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார். நகை சுவையாகவும்,நயமாகவும்,யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவார்,வாக்குத்திறமை உடையவர்.

இருப்பொருள்படப்பேசுவார்.பிறர் ரசிக்கும் விதத்தில்பேசுவதால் இவர்களை சுற்றி ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்.அரை குறையாக கேட்ட செய்திகளைக் கூட கண்,காது, மூக்கு வைத்து பெரிது படுத்தி பேசுவதில் சாமர்த்தியசாலி,உச்சரிப்பு சுத்தமாக இருக்கும்.கல்வி மான் மதியூகி கூர்மதியாளார். 

அயலர் இடத்தில் இருக்க விரும்பமாட்டார்.சூதாட்டங்களில் திறமையுள்ளவர். இதன் மூலம் சம்பாதிப்பார்.ஓட்டாண்டியாகவும் செய்வார்.நட்பு விரும்பி . தைரியமில்லாதவர்.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிறரை ஏமாற்றுவர்களாகவும்,வஞ்சகராகவும்,மாறிவிடவும் கூடும். ஆனால் அவரை திருத்துவது என்பது சுலபமான காரியமே.இப்படிதான் வாழவேண்டும் என்ற நியதியில்லாமல் எப்படியும்வாழலாம் எதையும் செய்யலாம் எந்த வழியையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதை குறிக்கோளாக கொண்டிருப்பார்.

இவர் நடிப்பு,நடனம்போன்ற கலைத்துறைகளில்மிகவும் கெட்டிக்காராகளாக விளங்குவார். மற்றவர்களைப் போல பேசி நடித்துக்காட்டுவதிலே அபார திறமைசாலி.குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் இவர்கலுக்கு நிம்மதி இல்லாமல் போய்விடுகிறது..காரணம் ஆரம்பத்தில் ஜோராக மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் இவர் காலப்போக்கில் மனம் மாறிவிடுவதுதான்...இவர் அடிக்கடி மனம் மாறுபவர் என்பதால்,மனைவிக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு அடிக்கடி உண்டாகும்.எனக்கும் உனக்கும் ஒத்தே வராது என புலம்புவார்..

ஆடம்பரமாக வாழவேண்டும் எல்லாசுகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்றஎண்ணம் இயற்கைலேயே மேலோங்கிருக்கும்.வாகன யோகம் முதல் வசதியான கட்டிடத்தில் வாழ்க்கை நடத்துவது வரையில் இவர்களது கனவு விரிந்திருக்கும்.இந்த கனவுகள் வெகு சீக்கரத்தில் நனவாகி இன்பத்தை அனுபவிக்கலாம்.

இயற்கையிலேயே எதையும் ஆராய்ந்து அறியும் நோக்கம் உண்டு.புத்திக்கூர்மை மிக்கவர்களாக் இருப்பார்கள். தோற்றத்திற்கு ஏமாளியைப் போல இருந்தாலும் இவர்களை யாரும் ஏமாற்றமுடியாது. இவர்கள் விஷ்ணு வழிபாட்டையும்,அனுமன் வழிப்பாட்டையும்,மேற் கொண்டால் துயரங்கள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்;5,6
அதிர்ஷ்ட நிறம்;பச்சை
பகை ராசிகள்;விருச்சிகம்,மகரம்

புதன், 18 பிப்ரவரி, 2015

நீங்க ரிசபம் ராசியா..? taurus

ரிசபம் ராசியினரின் இயல்புகளும் ,குணங்களும் ;ஜோதிடம்;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்

ரிசபம்,ஸ்திரராசி.பூமிராசி,பெண்ராசி,பாதிபலனளிக்கும்ராசி,சாந்தமானராசி,
இயல்பானராசி,பண்பானராசி,நாற்கால்ராசி,மிருகத்தன்மையானராசி,நீண்டராசி,
நட்பானராசி,வீட்டில் வாழ்வனராசி, குள்ளமானராசி.

 ராசியின் சின்னம் காளைமாடு.சிவபெருமானின் வாகனம்.பகவான் விஷ்ணுவும் கிருஷ்ண அவதாரத்தின் போது ரோகிணி நட்சத்திரம் ரிசபம் ராசியில் பிறந்தார்.. சிறு வயதில் மாடு மேய்த்தார்.நல்ல மதிநுட்பத்துக்கும்,அறிவுக்கும் ,தந்திரத்துக்கும் உதாரணமாக திகழ்ந்தார்...மாடு தெய்வமாக நம் இந்து மதத்தில் வழிபடப்படுகிறது...பசு தெய்வமாக போற்றக்காரணம் அது விவசாயிகளின் நண்பன் மட்டுமல்ல...அது தாயை போன்று அன்பும்,பாசமும் கொண்ட அமைதியான விலங்கு.நந்தியாக பாவித்து பிரதோசம் தோறும் வழிபடப்படுவது நம் இந்து மதத்தில் மட்டுமே.வெண்ணிறத்தை உடையராசி.இந்தராசியின் இருப்பிடம் விளை நிலங்கள்.ஆடுமாடுகள் மேய்கின்ற மேய்ச்சல் நிலங்கள். நீட்டிக்கொண்டிருக்கும் பாறைகள். பரந்த வெள்ளிமலைகள். யானைகள் வசிக்கும்  காடுகள். ஆடுமாடுகள் அடிக்கடி நடமாடும் இடங்கள். அதிபதி சுக்ரன்.தாது மூல ஜீவனின் மூலமாக செயல்பாடுகிறார்.

 இந்த ராசிகாரர் அதிக உயரம் இருக்க மாட்டார்கள்.சற்று பருமான தேகத்தோடு அழகாக இருப்பார்கள். நன்றாக அமைந்த தடித்த உதடுகளூம்,கோரையான கரியதலை முடியும்,சற்றுஅகன்ற நெற்றி,உறுதியானபல்கள்,தடித்த படிந்த மூக்கு,அகன்ற முகமும் உடையவர்களாக இருப்பார்கள்,அகன்றமார்பு,தொடை பருத்திருக்கும்.இரவு நேரம்பலம்பெற்றவர்கள்.கம்பீரமான தோற்றம் உடையவர் இனிப்பு, நீர்சம்பந்தமன நோய்களும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு,சுக்ரபலம் குறைவாக இருந்தால் மறைமுக வியாதிகள்வரலாம்.

 இந்தராசிக்காரர் தனக்கு தேவையான வசதிகளைசெய்து கொள்வதில் அதிகம் கவனமாக இருப்பார்.உதாரணமாக தன் தேவைக்குரிய வீடு,வாகனம்,உணவு, உடை,பொழுது போக்கு,கேளிக்கை இவைகளில் தனது முழுக் கவனத்தையும் செலுத்துவார்.தன் சுய நலத்திற்காக சுக போகத்திற்க்கும் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வார்.எவ்வளவு துன்பம்,தொந்தரவு,கஷ்டங்கள் வந்தாலும் அலட்டிக்கொள்ளமாட்டார்.

 ஆழ்ந்த சங்கீதகுரல்,அடிக்கடி பாடுவதும்,  குடிப்பதில் ஆர்வம் இருக்கும்.அசாத்தியமான பெருமையுடையவர்.தன் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவர்களுடன் இணக்கமாக உறவு வைத்துக் கொள்வார்.பிறரை தனது சொல்லுக்குகட்டுபடவைக்கவேண்டும் என்ற ஆசை உடையவர்.புகழ்ச்சிக்கு மயங்குவார்.இவர்கள் தலையிட்ட காரியங்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக முடித்து விடுவர்.பிறருக்கு அடிபணிந்து நடப்பது இவர்களுக்கு பிடிக்காது.சகிப்புத்தன்மை ஒருபுறம் இருந்ததாலும்,பிடிவாத குணம் சற்று மேலோங்கியே இருக்கும்.எதிரிக்கு எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்.

  எந்த தகவலையும் மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால் விவகாரங்கள் வந்து கொண்டே இருக்கும்.ஆணாக இருந்தால் அழகான பெண்களிடமும்,பெண்ணாக இருந்தால் அழகான ஆண்களிடம் வலிய போய் பழகுவார்.கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் எண்ணம் இருக்காது.உடலை பாதுகாப்பதிலும்,அலங்காரம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார்.காந்தப்பார்வையும் வசிகரமான கண்கள்,கவர்ச்சியானதோற்றம்,வனப்பையும்,வசீகரத்தையும்,பொலிவையும்,
ஆகர்ஸ்ண சக்தியும் உடையவர்.மனைவியால் செலவினங்கள் அதிகம் ஏற்படலாம்.

சயன சுகம் உண்டு,ஆடல்,பாடல் கலைகளில் ஆர்வம் உண்டு.வாசனைப்பொருட்கள்மீதுமோகம்,உல்லாசப்பயணத்தில்நாட்டம். ஆனந்தம் எதில்கிடைக்குமோ,இன்பம் எதில் கிடைக்குமோ,எந்தக் காரியங்களில்மகிழ்ச்சிஅளிக்குமோ அதில் ஆர்வம் ஏற்படும்.ஆடம்பரத்தின் ஆசை இருக்கும்.னம்பிக்கை மற்றும் பணிவு கொண்டு இருப்பார்.தான்உண்டுஎன்றுஇருப்பவர்,மற்றவர்களைப்பற்றி கவலை படாதவர்,சுயகட்டுப்பாடு உள்ளவர்.போட்டிபொறாமை இல்லாதவர்.

 இந்த ராசி ஸ்திர ராசியாக இருப்பதால் நிலையான காரியங்களைச் செய்யப் பிரியப்படுவார்கள்.அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள் பொறுமையும் நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யும் இயல்பும் உடையவர்கள். ஆனால் எதிர்ப்பு என்று வந்து விட்டால் துணிந்து போராடி  வெற்றி பெறத் தயங்கமாட்டார்கள்.நல்ல புத்திசாலிகளாகவும் உண்மையை அறிந்து சந்தர்ப்பத்திற்க்குத் தகுந்தபடி நடந்து கொள்ளக்கூடியவர்களாகவும், நல்ல ஞாபகசக்தி உடையவர்களாகவுமிருப்பார்கள். சில சமயங்களில் ஏதோ ஒரு உள்ளூணர்வு இவர்களுக்கு வழிகாட்டியாக அமையலாம்.மற்றவர்களை விடத்தங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் இவர்கள் மனதில் இருக்கலாம்.

 இந்த ராசிக்காரர்கள் வங்கிகள் அரசாங்க உத்தியோகங்கள் போன்றவற்றில் சிறந்த நிர்வாகியாகவும்,பொருளாளர் போன்ற பதவி வகிப்பவராகவும் விளங்குவார்கள்.சிலர் சுயத்தொழிலில் விருப்பம் இருக்கும்.சுய தொழிலும் கெளரவமாகசெய்வார்.இரும்பு இயந்திரம்,பத்திரிக்கைதுறை,கலைத்துறை, கான்ட்ராக்ட்,ஏஜென்சீஸ்ஆகியவற்றில் ஈடுபட்டால் வெற்றி காணலாம்.

இவர்கள் பிரதோஷ நேரத்தில் ந்ந்தி வழிபாட்டை மேற்கொள்வதோடு, அம்பிகை வழிபாட்டிலும் ஆர்வம் காட்டவேண்டும்,லட்சுமி சமேத விஷ்ணு பகவனை சனிக்கிழமை வழிபடலாம். 

 அதிர்ஷ்ட எண்கள் ;5,6

 வழிபட வேண்டிய தெய்வம்;திருப்பதி பெருமாள்

 எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் ;தனுசு,துலாம்

 குடும்பத்தினருக்கு அந்த ராசி இருப்பின் பாதிக்காது கவலை வேண்டாம்

நீங்க மேசம் ராசியா..?Aries

 அசுவினி,பரணி,கிருத்திகை

கிறிஸ்வர்களின் கடவுளான யேசுநாதர் கையில் ஆட்டுக்குட்டி இருக்கும்..இந்து மத கடவுளான முருகனின் வாகனங்களில் ஒன்றாக ஆடு இருக்கிறது...அக்னி புராணத்தில் குபேரனை கோயிலில் பிரதிஷ்டை செய்தால் ஆடு வாகனத்துடன் தான் செய்யவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதாம்..இப்படி ஆடு ஒரு அதிர்ஷ்ட சின்னமாகவும்,இருக்கிறது...அந்த ஆட்டை சின்னமாக வைத்திருக்கும் இவர்கள் மேசம் ராசிக்காரர்கள்..மேசம்,ரிசபம்,சிம்மம்,மகரம் எல்லாம் நான்கு கால் ராசிகள் என்பதால் நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் படங்களை சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
அக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE
அக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE

அக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். - See more at: http://www.mazhalaigal.com/2011/october/20111038ng_kuber-diwali.php#.VOLhio6QsjE


லட்சியமான ராசி,உறுதியான ராசி,நடப்பன ராசி,வீட்டில் வாழ்வன ராசி,ஆண்ராசி,தாதுராசி.இந்த ராசியின் சின்னம் ஆடு.இடம் காடு போன்ற சிறுவனப்பகுதி,இராசியின் நிறம் சிவப்பு,அதிபதி செவ்வாய்.

இந்த ராசிக்    குறியவர்  சராசரி உயரம் உடையவர்,அதிக பருமனாகவோ மிகவும் ஒல்லியாகவோ இருக்கமாட்டார் சமமாக இருப்பார்.உடம்பில் காய தழும்பி இருக்கும்.மூக்குதட்டையாக கண்கள் வட்டமாகவும் செவ்வரி படர்திருக்கும்.  சற்று நீண்ட கழுத்தும்,அகன்ற மார்பும்,கம்பீரமான தோற்றம். உடம்பில் மச்சம் இருக்கும்.அடிப்பட்டக் காயங்கள் ஏறப்பட்ட வடுவும் இருக்கும். வயதாகியும் இளமையின் ஜாடைஇருந்துகொண்டிருக்கும்.

வேகமாக சாப்பிடுவார்.சூடான உணவுபிடிக்கும்.வெய்யில் காலத்திலும் சூடாகவோ சாப்பிட பிரியப்படுவார்.காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார். சுவையான உணவில் விருப்பம் உடையவர்.இவருக்கு தண்ணீர் அலர்ஜி.மூல நோய் மற்றும் உஷ்ணாதிக்க நோய்கள் வரலாம்.

பரபரப்பாக செயல்படுதல்,தீடீர் என உணர்ச்சி அடைதல்,ஓய்வு இன்றிசெயல்படுதல், விரைவில் கோபப்படுதல், ஆனால் அந்தக்கோபம் சில விநாடியில் சமாதானம்  ஆகிவிடும்.இரும்பு இதயத்தைப்பெற்றவர்கள் போலவும் எல்லோரிடமும்  கடுமையாக  நடந்து கொள்வர் போலவும்  காணப்படுவர்.  ஆனால் உண்மையில்  இவர்கள்  இரக்கம் மிக்கவர்கள் .சண்டைப்பிரியன், கலகபிரியன் ,யாருடையப் பேச்சுக்கும்  கட்டுப்பாடதவர், அடங்காதவர், தைரியசாலி, அதிகாரம், புகழ்விரும்பி.

பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாதவர்,.வயதானலும் இளமையின் ஜாடை இருக்கும் வயதை கணிக்க முடியாத அளவுக்கு இளமையின் தோற்றமிருக்கும். எவ்வளவு வயதானலும் குழந்தைதனம்கூடவே இருக்கும்.

நடை உடை பேச்சில் ஒருவித மிடுக்கு காணப்படும்.சிக்கனமனவர்,கஞ்சத்தன மானவர்,என்றுபெயரும் எடுப்பார்.ஆனால் அவசியம் என்று வரும்போது தாராளமாகச் செலவு செய்வார்.எதிலும் நிதானமாகவே நடந்து கொள்ளமாட்டார். அவசரப்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யப் போனால் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளும் நிலைமை அடிக்கடி உருவாகும்.எதையும் கவனிக்காதவர்கள் போல தோற்றத்திருந்தலும் சுற்றுப்புறத்தில்.நடப்பது முழுவதையும் கவனித்துக்கொண்டிருப்பார்.

வினோதமான குணங்கள் பலவற்றை பெற்றவராக இருப்பார்.பிறர் கூறும் அபிப்ராயத்தை அப்படியே ஏற்றுகொண்டு அங்கீகரிக்கமாட்டார். சொந்த அபிப்பிராயம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதன் படியே செயல்பட்டு  வெற்றி காண்பார்.  இரகசியமாக பேச வேண்டிய விஷயத்தை மனம் திறந்து பேசிவிடுவார். காதல் விவகாரங்களில் கொஞ்சம்கூடஒளிவு மறைவின்றி      வெளிப்படையாக      இருப்பார்கள். கலப்பு மணம் செய்து கொள்ளகூடும்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களைக் கடைசிவரை ஆதரிப்பர். அவர்களுக்காக எதுவும் செய்ய தயங்கமாட்டார்.  இவர் நன்மை செய்தவர்களை கூட வெறுக்கும் படி நடந்து கொள்வார்.  காரணம்  தன்னுடைய கருத்துக்களை               அவர்கள்          ஏற்றுக்கொள்ளாமைதான்.

சிரித்துப்பேசுவது குணமாக இருந்தாலும் சமயம் பார்த்து சொல் அம்புகளை பிறர் மீதுவீசுவார்.பிறரது புகழ்ச்சிக்குசெவி சாய்க்கமாட்டார்.ஆசைகள் அதிகம் இருக்கும்.சம்பாத்தியாத்தைச் சேமிக்க இயலாது.சமயோஜித புத்தியும் சாதுர்யமும்மிக்கவர்களாக விளங்குவர்.ஒரளவு கல்வி விருத்தி இருக்கும் .ஆனால் அனுபவ அறிவு அதிகமிருக்கும்,சிறந்த அறிவாளி,தைரியசாலி,விவேகம்துணிவு,நம்பிக்கை அதிகம் உடையவர்.மற்ற வர்களை அதிகாரம் செய்யக் கூடியவர்.எப்போது எதையும் விரைவாகசெய்ய நினைப்பவர்.கர்வம் சுயகவுரத்திற்கு முதலிடம் அளிப்பவர்.

பெரும்பாலும்இவர்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்தாக இராது. மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.சில சமயங்களில் மனைவியைப் பிரிந்திருக்கவும் செய்வார்.

இளமையில் பெற்றோரிடமிருந்து பிரிந்துவாழ்வார்.பொதுவாக இவர் பெரிய குடும்பத்தில் பிறந்து இருப்பார்.குடும்பத்தினரிடம் பாசமாக நடந்து கொள்வார். ஆனால் சில சமயங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் ஆசையில்
பெற்றோரைப் பிரிந்து வாழ்வார்.சகோதரர்களால் பலன் கிடைப்பது அரிது. ஆனால் சகோதரர்களுக்கு இவரால் பலன் உண்டு.நண்பர்களிடம் அன்பாகவும் கலகலபாகவும் பழகுவார்.ஆனால் யாராவது துரோகம்செய்துவிட்டால் மன்னிக்கவே மாட்டார்,தொடர்பைத் துண்டித்துக்கொள்வார்,ஆன்மிகத் தொண்டுகளில் அதிக ஆர்வம் இருக்கும்.

மேற்சொன்ன அமைப்புகள் சுபாவங்களும் கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோ அமையக்கூடும்.

இந்த ராசிக்குரிய கிரகம் செவ்வாய் எங்கே எப்படியிருந்து யாரால் பார்க்கப்படுகிறார் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.
 பிறந்த நட்சத்திரம் வரும்  நாளில் முருகன் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.திருச்செந்தூர்,பழனி,பச்சைமலை,பழமுதிர்சோலை,திருத்தணி,
திருப்பரங்குன்றம்,சிவன் மலை,சென்னிமலை,வடபழனி,குன்றத்தூர் என அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தில் வழிபடலாம்....

மேசம் ராசிக்கு 6,8 ராசிகளான கன்னி,விருசிகம் ராசியினரோடு கவனமாக பழகவும்..உறவுகளில் இருந்தால் பாதிக்காது...தொழில் பங்குதாரர் என இருந்தால் கவனம் அவசியம்.

வசியமான ராசிகள் எனில் சிம்மம்...கும்பம்,மிதுனம்,கடகம் எல்லாம் லாபம் தரும் ராசிகள்..

அதிர்ஷ்ட எண்கள்;1,3,9

பகை எண்கள் ;8,2

அதிர்ஷ்ட நிறம்;மஞ்சள்,ஆரஞ்ச்,ரோஸ்,

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மகாசிவராத்திரி மகிமை mahashivratri

தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாள் சிவராத்திரி. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.ஆயுள் தோசம் ஜாதகத்தில் இருப்போரும்,நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவோர் இன்று இரவு கண் விழித்து, 4 கால பூஜைகளையும் தரிசித்து, பட்டினி இருந்து சிவபெருமானை வழிபடுங்கள்.


மகா சிவராத்திரி என்பது ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கி கொண்டு ,கூட்டத்தில் இடிபடாமல், சுகமாக போய் சிவன் கோயிலில் தரிசனம் செய்வது இல்லை.வியர்த்து விறுவிறுக்க ,முட்டி மோதி எப்படியாவது அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்வதும் அல்ல.

சிவன் எனும் எழாபிறவியின் அடையாள சின்னத்தை மனதில் நிறுத்தி ,மாயைகளில் இருந்து விடுபட ஒருநாளாவது எல்லாவற்றையும் மறந்து,இனி எனக்கு பிறவி துன்பமே வேண்டாம்..என சிவபூஜை செய்து தனிமையில் தியானிப்பது ஆகும்..அதுவும் மாலை 6 மணி முதல் மறுநாள் சூரிய உதயம் வரை என்பது ஒரு கணக்கு.அத்ற்கு ஏன் இந்த நாள்...? குறிப்பிட்ட இந்த நாளில் உங்கள் மனம் வேகமாக ஒடுங்கும்..அதாவது ஒருநிலைப்படும்.பல லட்சம் பேர் கூட்டுப்பிரார்த்தனை செய்யும்போது அதன் சக்தி மிக மிக அதிகம்.அதன் மூலம் பல சூட்சும நன்மைகள் கிடைக்கும்.நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டு கண் விழித்து பாராயணம் செய்வதால் மனபலம்,ஆத்ம பலம் பெருகும்.


மகா சிவராத்திரி நாளில்தான் புனிதமான கங்கை நதி பூமிக்கு வந்த நாள் ஆகும்.மகசிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பாக வழிபடப்பட்டாலும்..தமிழகத்தில் புராண காலம் தொட்டு மிக முக்கியமாக போற்றி வணங்கப்படும் சிவ ஆலயங்கள் இவைகள்தான்..அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்கள்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்கள்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகைப்பட்டினம், கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி மிக விசேஷமாக போற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் சிவபக்தர்கள் சிவராத்திரியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில் களுக்குச் செல்வார்கள். திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமு மாகச் செல்வார்கள். இவர்கள் அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும் போது "கோவிந்தா கோவிந்தா' என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவர். இது சைவ- வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் என்பர்

 பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் மகா சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.


ஸ்ரீ மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர். சிவன் அபிஷேகப் பிரியர் என்பது முன்னோர் வாக்கு. பால் பாவம் நீக்கும், தயிர் நோய் நீக்கும். தேன் இல்லத்திற்கு இனிமை சேர்க்கும்,
இளநீர் பகைமை நீக்கும், மஞ்சள் மங்கலம் சேர்க்கும், சந்தனம் குடும்ப ஒற்றுமை ஏற்படுத்தும். பழரசம் தொழில் மேன்மை தரும். கரும்புச் சாறு பித்ருக்கள் சாபம் நீக்கும், எலுமிச்சம் பழச்சாறு சத்ரு சம்ஹாரம், பஞ்சாமிர்தம் கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படுத்தும். நெய் சிவனருள் கிட்டும். அரிசி மாவு கடன் நீக்கும், நல்லெண்ணெய் புத்திரபேறு அளிக்கும்.
புனிதநதி தீர்த்தம் நாம், நம் முன்னோர்கள் அனைவரின் பாவம் நீங்கி இப்பிறவியிலேயே எல்லா நலனையும் அளிக்கும். தாழம்பூ இன்று ஒரு நாள் மட்டும் சிவகதி அளிக்கும்.

மேற்கண்ட 16 வகை பொருட்களை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய அல்லது சிவ ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய அளிக்க 16 வகை சம்பத்துகளையும் பெறலாம். இவையே 16 பேறு என்கிறது லிங்க புராணம். 

 மனிதர்களாக பிறந்த நாம் வாழ்வில் ஒரு முறையேனும் நமக்காக மட்டுமின்றி, நம்முடைய முன்னோர்களுக்கும், நம்முடைய சந்ததிகளுக்கும் எல்லாம் நலமும், புண்ணியமும் பெற வேண்டி ஒரு முறை மகா சிவராத்திரி விரதம் இருந்து நான்கு கால பூஜையில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி சிவால யத்திற்கு அளித்து தொண்டு செய்தால், நூறு ஏகாதசி விரத மிருந்த பலன் கிட்டு வதுடன், சிவன் அருளுடன் நாராயணின் பேரருளும் பெற்று குபேர சம்பத்துடன் வாழ லாம் என்று சிவகாமம் கூறுகிறது.