திங்கள், 9 மார்ச், 2015

சனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்

சனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்

சனி விருச்சிகம் ராசியில் இருக்கிறார்..தனுசு ராசிக்கு ஏழரை சனி,மேசம் ராசிக்கு அஷ்டம சனி,ரிசபம் ராசிக்கு கண்டச்சனி ,விருச்சிகத்துக்கு ஜென்ம சனி,துலாம் ராசிக்கு பாத சனி ,சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனி என பலன்கள் கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி, துலாம் ராசியில் அமர்ந்திருப்பார்...

சனி வக்ரம் என்பது பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும்..இப்போ விருச்சிகம் ராசியில் இருக்கும் சனி ,வக்கிரம் ஆகும்போது துலாம் ராசிக்கு மாறி பலன் கொடுப்பார்..இது என்னடா வம்பா போச்சு என்கிறீர்களா..? என்ன செய்வது கிரகநிலை பெயர்ச்சி என்பது அப்படித்தான் இருக்கும்.

 சனியின் மாற்றம் 3 மாதங்கள்தான்...சனி வக்கிரமாக இருக்கும்போது பிறந்தவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்..அவர்களை இது பாதிப்பதில்லை...

ரிசபம் ராசிக்கு இப்போது கண்டக சனி தீய பலன் நடக்கும் எனும் நிலையில் சனி வக்ரம் ஆகும்போது 6ஆம் இடத்து பலன் செய்வதால் மூன்று மாதங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம்..6 மிடத்து பலன் எதிரிகள் ஒழிவர் கடன் தொல்லை கட்டுப்பாட்டில் இருக்கும்...வருமானம் அதிகமகும்.

மிதுனம் ராசிக்கு 6ஆம் இடத்து அதிர்ஷ்ட சனியாக இப்போது இருக்கிறது..இது கொஞ்சம் இக்காலத்தில் மந்தமாகி பழைய குருடி நிலை உண்டாக்கும் திடீரென மனைவிக்கு உடல்நிலை பாதிக்கலாம் குழந்தைகளால் மருத்துவ செலவு உண்டாக்கலாம்..கவனம் தேவை..விரய செலவு ஏதேனும் வகையில் வந்து காசை கரைக்கும்

கடகம் ராசிக்கு இப்போது பூர்வபுண்ணியத்தில் சனி இருக்கிறார்..இதுவும் சுமார்தான்...போனமுறை அர்த்தாஷ்டம சனி நடந்தது அது மீண்டும் இன்னும் 3 மாசத்துக்கு அப்படியே எட்டி பார்க்கப்போகிரது என்ன ஜி செளக்யமா என கேட்கும்...சனி 4ல் இருப்பது உடல் சுகவீனம்,சொத்து வில்லங்கம் இடமாறுதல்தான்...கடந்த 2 வருடமாக இடமாறுதல் செய்யாமல் இருப்பின் இக்காலத்தில் இடமாறுதல் உண்டாக்கலாம்..தாய்க்கு பாதிப்பு


மீனம் ராசிக்கு சொல்லவே வெண்டாம் புரிந்திருப்பார்கள் மறுபடி அஷ்டம சனியா என அலற வேண்டாம்..அஷ்டம சனிராசியில் இருந்தாலும்..குரு 5ல் இருப்பதால் கடுமையான கஷ்டத்தை கொடுக்காது எனினும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிக்கல் இந்த 3 மாதம் கொடுக்கும் ..உடன் வேலை பார்ப்பவர்களுடன் பிரச்சினை,வேலை ஆட்களால் நஷ்டம்,தொழில் மந்தம் காணப்படும்..வருமானத்தை குறைக்கும்..அஷ்டம சனி காலம் போல கெளரவம் குறைக்காது


1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

விவரம் அறியத் தந்தீர்கள்.