வியாழன், 28 ஜனவரி, 2016

செல்வவளம்,நிம்மதி,முன்னேற்றம் உண்டாக தினசரி வாழ்வில் செய்யக்கூடியவை

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் இறந்தோர் படங்களை தெற்குப் பார்த்து வைக்க வேண்டும்..

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.


33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

புதன், 27 ஜனவரி, 2016

நாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்

நாக தோசம் நீக்கும் கருட வழிபாடு  

பொதுவாக ஜாதகத்தில் ஸர்ப்ப தோஷம் உள்ளது என்பதும் ராகு கேது திசையினால் துன்பம்  வருகிறது என்பதும் வேறு வேறு நிகழ்வுகள் ஆகும். ஒரு ஜாதகத்தில் தோஷம் நீக்குவதற்கு திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி சென்று வழிபாடு செய்வது வழக்கம் ஆகும்.  

\ராகு கேது திசையில் வரும் தோஷங்கள் கஷ;டங்கள் நீங்க அல்லது விலக கருடன் ஜெபம் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும். ஸர்ப்ப திசையானது பாதிப்புகளை செய்யுமானால் விபத்து- மரண பயம்- புத்தி பேதலிப்பு- சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள்;- துர் ஆவிகள் பாதிப்பு. கோர்ட் கேஸ்  வழக்குகள் போன்றவை ஏற்படும்.
  
     கருடன் காயத்ரி மந்திரம்;;:
     ஓம் பகூp ராஜாய வித்மஹே
     ஸுபர்ண பகூhய தீமஹி
     தன்னோ கருடப்ரசோதயாத் - 

11தடவை உச்சரிக்கவும்...

     கருடன் மூலமந்திரம்;:

     ஒம் ஈம் ஓம் நமோ பகவதே மஹா கருடாய
  பகூpராஜாய விஷ;ணு வல்லபாய த்ரைலோக்ய பரிபூஜிதா 
  உக்ர பயங்கர காலாநலரூபாய வஜ்ர நகாய வஜரதுண்டாய 
  வஜ்ர தந்தர்ய வஜரதம்ஷ;ட்ராய வஜ்ரபுச்சாய ஸகல
  நாகதோஷ ரகூயாய ஸர்வ விஷம் நாசய நாசய ஹந
  ஹந தஹ தஹ பச பச பஸ்மீ குரு பஸ்மீ குரு
  ஹீம்பட் சுவாஹா.     
                        - 54 தடவை உச்சரிக்கவும்.

1. காலையில் கிழக்கு முகமாகவும் மாலையில் மேற்கு முகமாகவும் ஜெபம் செய்ய வேண்டும்.
2. வெண்பட்டு தர்ப்பைபாய் பலா பலகையில் அமர்ந்து ஜெபம்  செய்ய வேண்டும்.
3. விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். மந்திரம்    
   ஸித்தி பெறும் காலம் வரையில் தலையில் நல்லெண்ணெய் 
தேய்த்துக் கொள்வது மிகவும் பலன் கொடுக்கும்.

சர்ம வியாதிகள் -ஆறாபுண்கள் ;குணம் அடைய:

     சைவ உணவு மட்டும் சாப்பிட்டு பஞ்ச கவ்விய நெய்யில் கருடன் மூல மந்திரம் ஜெபம் செய்து சாப்பிட்டு வர சர்ம வியாதிகள் படிப்படியாக விலகும்.

புற்றுநோய் குணம் அடைய
1. நவகிரக சமித்துக்கள் கொண்டு யாகம் செய்ய வேண்டும்.
2. யாகத்தில் சீந்தில் கொடி -மிளகு -வெள்ளை பூண்டு- மருதாணி விதை அருகம்புல் ஓமம் வலம்புரிகாய் கோஷ;ட்டம் வசம்பு கருடகொடி ஆகியவற்றால் மந்திர ஆவர்த்திகள் செய்ய வேண்டும்.
3. நல்லெண்ணெய் கொண்டு யாக பூஜையில் நெருப்பு வளர்க்க வேண்டும். 
4. ஹோமத்தில் பூர்ண ஆகுதி சுத்தமான தேனில் கொடுக்க வேண்டும்.
5. யாகத்தில் கிடைக்கும் யாக சாம்பலை தினசரி காலை மாலை பாலில் சிறிது கலந்து பருகி வரவேண்டும். 
6. நக்ஸ்வாமிகா -ஹைபெரிகம் -தூஜா -கல்கேரியாப்ளோர் என்ற ஹோமியோபதி மருந்துகளையும்; சாப்பிட்டு வர கட்டாயம் கேன்சர் கட்டியின் வளர்ச்சி நின்று போகும். கேன்சர் நோயினை குணப்படுத்தலாம்.


     கருடன் மந்திரத்தை குரு உபதேசமாக பெற்று உபாசனை செய்து வந்தால் ஆற்றங்கரை குளக்கரை கடல் கரை திறந்த வெளிகளில் நின்று பகலில் கருட மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அப்பொழுது கருடன் உங்கள் தலைக்கு மேல் வந்து வட்டமடித்து பறந்துசெல்லும்.

 கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.

ஞாயிறு அன்று தரிசித்தால் நோய் அகலும்

திங்கள் அன்று தரிசனம் செய்தால் குடுமப நலம்

செவ்வாய் அன்று தரிசனம் செய்தால் தைரியம் கிடைக்கும்

புதன் அன்று தரிசனம் செய்தால் எதிரிகள் ஒழிவார்கள்.

வியாழன் அன்று தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்

வெள்ளி அன்று தரிசனம் செய்தால் பணவரவு கிடைக்கும்

சனி அன்று தரிசனம் செய்தால் நற்கதி கிடைக்கும்.


நாச்சியார் கோயில் கல் கருடன்;

புற்று நோய் பாதிப்பில் இருப்போர் ,கும்பகோணம் அருகில் இருக்கும் கல் கருடன் கோயிலுக்கு சென்று வியாழக்கிழமையில் வழிபட்டு வரலாம்...

வியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்

ஸ்ரீபைரவர் தரிசனம்! - கழுகுமலை


ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டதையும், ஸ்ரீராமரால் ஜடாயுவுக்கு சகல காரியங்களும் செய்யப்பட்டு, ஜடாயுப் பறவை மோட்சம் பெற்றார்..

இதையெல்லாம் ஸ்ரீஅனுமனின் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, ஸ்ரீராமரை வணங்கி, 'உடன் பிறந்தா னுக்கு ஈமக்கிரியைகளைச் செய்யாத சண்டாளன் நான். இந்தப் பாவத்தில் இருந்து விடுபட, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேண்டினான். 'யானை முகம் கொண்ட மலையில், மயில் மீது அமர்ந்திருக்கும் முருகக் கடவுளை, ஆம்பல் நதியில் நீராடி, பூஜித்து வா! உன் பாவங்கள் நீங்கி, மோட்சம் பெறுவாய்’ என அருளினார் ஸ்ரீராமபிரான்.

அதன்படி, சம்பாதி எனும் கழுகு, ஆம்பல் நதியில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டு மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால் அந்தத் தலம் கழுகுமலை என்றே அழைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது கழுகுமலை. இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீகழுகாசல மூர்த்தி. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அருமையான தலம் இது.
குடைவரைக் கோயில்களில், இந்த ஆலயமும் ஒன்று. சுமார் 330 அடி உயரம் உள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்தமண்டபமும் மலையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. உள்ளே கருவறையில், இடப்பக்கமாக நிற்கும் மயிலின் மேல், ஒரு முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டு, இடது காலை மயிலின் கழுத்தில் வைத்து, வலது காலைத் தொங்கவிட்டபடி வெற்றிவேல் ஏந்திய ஸ்ரீகழுகாசல மூர்த்தியான முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும். அருகில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர். உத்ஸவர் ஸ்ரீஆறுமுகநயினார் கொள்ளை அழகில் காட்சி தருகிறார்.

இங்கே உள்ள ஸ்ரீபைரவர் வெகு பிரசித்தம். சுமார் 7 அடி உயரத்தில், ஸ்ரீவடுகமூர்த்தியாக, வலது கரத்தில் கபாலம், இடது கரத்தில் கதை எனப்படும் தண்டாயுதத்துடன் சிவப்பரம்பொருளாக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீபைரவர்.

ஆடையின்றி, திகம்பரராகக் காட்சி தருவார் ஸ்ரீபைரவர். எட்டுத் திசைகளில் இருந்தும் அஷ்டதிக் பாலகர்கள் ஆடைகளாகக் காட்சி தருவதால், இவர் ஆடை அணிவதில்லை என்பர். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால வேளையில் ஸ்ரீபைரவ வழிபாடு ரொம்பவே விசேஷம். அதேபோல், பௌர்ணமி முடிந்த எட்டாம் நாள், தேய்பிறை அஷ்டமியை 'பைரவாஷ்டமி’ என்று சொல்வார்கள். அந்த நாளில் வழிபடுவதும் பிரார்த்திப்பதும் கூடுதல் பலனைத் தரும் என்பது ஐதீகம்!


அன்றைய தினம், ஸ்ரீபைரவருக்கு 21 வகை அபிஷேகங்கள் செய்து, புனுகு சார்த்தி, நெய் தீபமேற்றி, செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, அலங்கரித்து, வடைமாலை சார்த்தி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும்.

ஸ்ரீபைரவருக்கு வடைமாலை சார்த்தி, தயிர்சாதம், காய்கறிகளால் செய்யப்பட்ட கலவை சாதம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், குடும்பத்தில் நிம்மதி நிலவும்; வியாபாரத்தில் வெற்றி உறுதி; பில்லி- சூனிய ஏவல் அனைத்தும் நீங்கி, நிம்மதியாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்

திங்கள், 25 ஜனவரி, 2016

திருமண பொருத்தம் ;வீட்டோடு மாப்பிள்ளை யார்?


1. ஆண் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவான்.

2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் குரு தனித்து இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.

3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.

4. பெண் ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் ஜாதகி வீட்டில் தங்கிவிடுவான்.

5. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.

6. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகி திருமணத்திற்கு பின்னும் தன் தாய் வீட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.


 7-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் வீட்டோடு மாப்பிள்ளை ஆவார்கள்.மனைவிக்கு அடிபணிவார் கள். மனைவி வசதியுள்ளவார்.சுபகிரகமாக இருந்தால் மதிப்பு மரியாதையுடன் இருக்கலாம்..பாவ கிரக சம்பந்தம் இருந்தால் மதிப்பில்லாமல்தான் அங்கும் இருக்க முடியும்..

லக்னத்துக்கு மூன்றாம் வீடு மாமனாரை குறிக்கும்.. அங்கு சுபர் இருந்தாலோ 3ஆம் அதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலோ மாமனார் மதிப்பார்...மாமனார் மீது இவருக்கும் பாசம்,அன்பு உண்டாகும்...3க்குடையவன் 7ல் இருந்தால் மாமனாரால் தொல்லைகள் தான் உண்டாகும்..சந்திரன் 7ல் இருந்தால் அம்மாவால் குடும்ப வாழ்வில் தொல்லைகள் உண்டாகும்..




ஞாயிறு, 24 ஜனவரி, 2016

திருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா, தூரமா?


திருமண பொருத்தம் ;ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும் இடப்பட்ட தூரத்தைக் கொண்டு மனைவி அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம்.


1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.
2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும். இதே போல் பெண் ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும், ஜாதகியின் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தைக்கொண்டு கணவன் அமையும் இடம் பக்கமா?தூரமா? என்பதை அறியலாம்.

பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும்.
2. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும்.    

7ஆம் அதிபதி என்ன நட்சத்திரத்தில் இருக்கிறார்..? அந்த நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்...4ஆம் பாவம் இதில் சம்பந்தப்பட்டால் அம்மா ஊரில் அல்லது அம்மா வழி தூரத்து உறவில் அமையும் 9ஆம் பாவத்திலோ சூரியனுடனோ சம்பந்தப்பட்டால் தந்தை வழி தூரத்து உறவு தந்தை ஊரில் அமையலாம்...

5ஆம் அதிபதி பாக்யாதிபதி ஏழாம் அதிபதி மூவரும் சம்பந்தம் ஆனால் காதல் திருமணம் என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை பூர்வீக ஊரிலும் கணவனோ மனைவியோ அமைந்து விடும்...


வியாழன், 21 ஜனவரி, 2016

ஜோதிட சூட்சுமங்கள்-ராசிப்படி பிரச்சினை-எதிரி-நோய்-கடன்


நம் ஜாதகத்தில் எதிரிகள் ஸ்தானம் என்பது ஆறாமிடமாகும்.எதிரிகள் என்றால் யாரை எதனை குறிக்கும்..? ருணம்,ரோகம் என்பதும் எதிரிகள் தான் கடன்,நோய் என்பதை முக்கிய எதிரிகளாக சொல்லலாம்..ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆறாமிடத்தில் இருக்கும் கிரகத்தின் திசாபுத்தி நடக்கும்போது ,அல்லது ஆறாம் அதிபதி திசை நடக்கும்போது மருத்துவ செலவு உண்டாகிறது…சிலருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது.சிலர் கடனாளி ஆகிவிடுகிறார்கள்…

இந்த மாதிரி திசை துவங்கும் முன் வங்கி லோன் மூலம் வீடு கட்டுதல்,வாங்குதல் செய்யலாம் தோசம் குறையும்.இல்லையெனில் தொடர் மருத்துவ செலவுகள் உண்டாக்கும்..


உதாரணமாக

மேசம்-சிம்மம்,துலாம் -சூரியன்,சுக்கிரன்,மகரம்-சனி
ரிசபம்-கன்னி,விருச்சிகம் -புதன்,செவ்வாய்
மிதுனம்-விருச்சிகம் -செவ்வாய்,தனுசு-குரு
கடகம்-கும்பம்-சனி,ரிசபம்-சுக்கிரன்
சிம்மம்-மகரம்-சனி,மேசம் செவ்வாய்
கன்னி-மேசம்-செவ்வாய்,மீனம்-குரு
துலாம்-மீனம்-குரு,சிம்மம் -சூரியன்
விருச்சிகம்-மேசம்,மிதுனம்-செவ்வாய்,புதன்
தனுசு-ரிசபம்-கடகம்-சுக்கிரன்,சந்திரன்,மிதுன புதன்
மகரம்-சிம்மம்-சூரியன்,விருச்சிக செவ்வாய்
கும்பம்-கடகம்-சந்திரன்,துலா சுக்கிரன்
மீனம் -துலாம்-சுக்கிரன்,கன்னி புதன்
மேற்க்கண்ட ராசி, லக்னத்தாருக்கு மேற்க்கண்ட திசைகள் கடும் பிரச்சினைகள்,நோய்,எதிர்ப்பு,எதிரி,நஷ்டம் போன்றவற்றை தந்துவிடுகிறது...6,8 மற்றும் பாதாகாதிபதி திசைகளையும் கொடுத்துள்ளேன்...

ஆறாம் வீட்டில் சூரியன் ,சனி,செவ்வாய் ராகு கேது ஆகிய பாவ கிரகங்கள் அமர்ந்தால் அவர்களுடைய திசாபுத்திகளில் நல்ல பலன்களை கொடுப்பார்கள் என சொல்லப்படுகிறது.ஆனால் ராகு ,கேதுக்களை தவிர சூரியன்,சனி,செவ்வாய் அமரும்போது இவரை தேடி வம்புச்சண்டை வாசலில் நிற்கும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகள் உண்டாகிறது.

செவ்வாய் சகோதர காரகன் என்ப்தால் சகோதரனுக்கு கூட இந்த பிரச்சினை உண்டாகலாம்..சூரியன் அமரும்போது சூரியன் தந்தையை குறிப்பதால் தந்தைக்கு அறுவை சிகிச்சையோ ,பணவிரயமோ நடக்கலாம் அல்லது தந்தை வழியில் யாருக்கேனும் பாதிப்பை உண்டாக்கலாம்…

ஆறாம் வீட்டில் சுப கிரகங்கள் அமர்ந்தால் தீமையான பலன்களே நடக்கும்.பொதுவாகவே 6,8,12 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் மறைய கூடாது.அதான் காரகத்துவங்களும் ,அதன் மூலம் கிடைக்கும் சுகங்களும் மறைந்துவிடும்.சுக்கிரன் சுகாதிபதி,களத்திரகாரகன்,ஆடம்பரம்,வசதி வாய்ப்புகளை கொடுப்பவர் அவர் மாறைந்துவிட்டால், இவை எல்லாம் கெட்டுவிடும்.சுகவாசியாக வாழ இயலாது.குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்காது.பணம் சேர்ப்பது இயலாத ஒன்று.சந்திரன் மறைந்தால் தாய் நோயாளியாகிறார்.மனம் எப்போதும் குழப்பத்தில் இருக்கும்.சந்திரன் லக்னத்துக்கு எத்தனையாவது அதிபதியாக வருகிறாரோ அவர் ஸ்தானமும் கெடுகிறது.நீரால் கண்டம் உண்டாகிறது.

குரு மறைந்தால் செல்வாக்கும்,சொல்வாக்கும் மறைகிறது.யாரும் நம்மை மதிப்பதில்லை என்ற புலம்பல் எப்போதும் இருக்கும் குழந்தைகளால் பல மன உளைச்சல்கள் உண்டாகும்.லக்னத்துக்கு குரு எந்த காரகத்துவம் வகிக்கிறாரோ அதுவும் கெட்டு விடுகிறது.சமூகத்திலும்,உறவிலும் மதிப்பும் மரியாதையும் கெடுகிறது.
சுகர்,பிரசர் என நோயால் துன்பங்களும் உண்டாகும்.சந்திரன் ஆறில் மறையும்போது ஆஸ்துமா போன்ற மூச்சு ,நுரையீரல் சார்ந்த வியாதிகளும் குரு மறையும்போது சர்க்கரை,தோல் வியாதிகளும் உண்டாகின்றன..சுக்கிரன் மறையும்போது அழகு கெடுகிறது.
காரக கிரகங்கள் 6ல் மறையும்போது அவர்கள் தான் நம் எதிரிகளாக வருகிறார்கள்..1ஆம் அதிபதி 6ல் மறையும்போது ,நாமே நம் தலையில் மண்ணள்ளிப்போட்டுகிறோம்.நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது நாமே என்ற நிலை உண்டாகிறது எல்லோரையும் எதிரியாக்கிகொள்கிறோம்.

2ஆம் ஆதிபதி 6ல் அமரும்போது வரவு செலவு எதிரியாகிவிடுகிறது குடும்பமே எதிரியாகி விடுகிறது.நம் பணம் நம் பங்காளிக்கு போய்விடும்..அல்லது வட்டிக்காரகனுக்கு போய்விடும்.3ஆம் அதிபதி 6ல் அமரும்போது நம் இளைய சகோதரன் நமக்கு எதிரியாகிறான்.மாமனாரும் முறைச்சிக்கிட்டேதான் இருப்பார்.நம் வீரியம் கெட்டுபோகிறது.இதனால் தாம்பத்தியத்தில் சிக்கல் உண்டு.எந்த முயற்சியும் செய்யாமல் ஒரே மாதிரியான வாழ்க்கை.
4ஆம் அதிபதி 6ல் அமரும்போது அம்மாவே எதிரியாகிவிடுகிறார் சிலருக்கு மட்டும்.எப்போதும் அம்மாவை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்..அம்மாவும் நோயாளியாக இருப்பார்..5ஆம் அதிபதி 6ல் இருக்கும்போது ,எதிரி  நம்மை வெற்றி கொள்வார்.நம் சொத்து நம் பங்காளிகளுக்கு போய்விடும்.6ஆம் அதிபதி 5ல் இருக்கும்போது பங்காளி நம் மீது வழக்கு போட்டால் நாம்தான் வெற்றி பெறுவோம்.பங்காளி சொத்து நமக்கு கிடைக்கும்.

7ஆம் அதிபதி 6ல் இருந்தால் திருமணம் தாமதமாக செய்வது நல்லது.மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகும் நமக்கு பிடிக்காததை மனைவி செய்வார்.
8ஆம் ஆதிபதி 6ல் இருப்பது நல்லது. நஷ்டமில்லாத ஜாதகம்.துயரமில்லாத ஜாதகம்.9ஆம் அதிபதி 6ல் இருந்தால் தந்தையே எதிரியாகிவிடுகிறார். நம் முன்னேற்றத்துக்கு அவரே முட்டுக்கட்டையாக இருக்கிறார்.அல்லது அவர் நோயாளியாக இருந்து நமக்கு மன உளைச்சலை தருகிறார்.10 ஆம் அதிபதி 6ல் மறைந்தால் தொழில் மறைகிறது.எதிரியின் தொல்லையால் சொந்த தொழில் பாதிக்கிறது.கண் திருஷ்டி அதிகம்.தொழிலால் கடன் உண்டாகிறது.11ஆம் அதிபதி 6ல் அமர்ந்து விட்டால் மூத்த சகோதரன்12 எதிரியாகிறார்.12ஆம் அதிபதி 6ல் அமர்வது நல்லது விரய செலவுகள் இருக்காது.அதே சமயம் தூக்கமும் கெடும்.தூக்கத்துல நடக்குற வியாதி,தூக்கமே வர மாட்டேங்குது என புலம்புபவர்கள் இவர்கள்தான்.

பொதுவாக 6ஆம் அதிபதி வலிமையாக ஆட்சி உச்சம் பெற கூடாது.6ஆம் இடம் சகோதரர்கள்,பெரியப்பா,சித்தப்பா மகன்கள் போன்ற பங்காளிகளை குறிக்கும்.சொத்து பிரச்சினை,வில்லங்கம் எல்லாம் இவர்கள் மூலம் வந்தால் இவர்கள் நம்மிடம் தோற்க வேண்டுமானால் 6ஆம் அதிபதி வலிமையாக இருக்க கூடாது.6ஆம் இடத்தை குரு பார்த்தால் நல்லது. எதிரி தொல்லை இருக்காது எதிரியை வெல்லலாம்..6ல் செவ்வாய் அல்லது ராகு கேது இருந்தால் எதிரிகள் நம்மைக்கண்டு அஞ்சுவார்கள்…அதே சமயம் எதிர்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.6ல் செவ்வாய் இருப்பவர் மீது எத்தனை வழக்கு போட்டாலும் உடைத்துக்கொண்டு வெளியே வருவார்.

6ஆம் இடத்தில் என்ன காரகத்துவ கிரகம் இருந்தால் என்ன பலன் என எழுதி இருக்கிறேன் இதுவே 6ஆம் அதிபதி எங்கெங்கு இருந்தால் என்ன கெடுலை செய்யும் என எழுதினால் இன்னும் பதிவு நீளமாகும்.அடுத்த பதிவில் எழுதலாம்

செவ்வாய், 19 ஜனவரி, 2016

2016 கடன் தீர்க்க உகந்த நாட்கள் -மைத்ர முகூர்த்தம்

கடன் தீர,கடன் தீர்க்க வேண்டிய நாட்கள்-மைத்ர முகூர்த்தம்;

கீழ்க்கண்ட நாட்களில் வட்டி கட்டுதல்,கடனில் சிறு தொகையை திருப்பி கொடுத்தால் பெரிய கடன்களும் விரைவில் தீரும்...!!

6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை
7.1.16 வியாழன் அதிகாலை 4.40 முதல் 6.40 வரை
17.1.16 ஞாயிறு மதியம் 12 முதல் 2 வரை
2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40
6.2.16 சனி காலை 6 முதல் 6.30 வரை
6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
6.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
13.2.16 சனி காலை 10.43 முதல் 12 வரை
20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 1.22 வரை
12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
 8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை
24.4.16 ஞாயிறு இரவு 8.40 முதல் 10.40 வரை
6.5.16 வெள்ளி காலை 4.36 முதல் 6.36 வரை
22.5.16 ஞாயிறு மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை

வியாழன், 14 ஜனவரி, 2016

சகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம்

நல்ல நேரம் வாசகர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!

15 ஆம் தேதி சூரிய உதயம் காலை 6.45 க்கு உதயமாகும் அதன்பின் காலை 9 .35 முதல்1 1மணி வரை சூரிய பொங்கல் வைத்து வழிபடலாம்....ராகுகாலம் 11 .13 க்குதான் துவங்கும்..உத்திராயண புண்ணியகாலத்தில் சூரியன் வடக்கு நோக்கி செல்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்..நம் தர்ம செயல்களுக்கு பல ம்டங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதால் அன்று சூரியனை வழிபட்டு இயற்கையை வனங்குகிறோம்..சூரியன் தான் இவ்வுலகை ரட்சிக்கும் மூலகர்த்தா.. நம் உடலில் உள்ள நுணுக்கமான செய்ல்பாடுகளின் ஆதார சக்தி அவர்தான்...அவரை வணங்குவதால் ஆயுள் பெருகும்..ஆரோக்கியம் உண்டாகும்...!!!

பொங்கலன்று குலதெய்வம் கோயில், இஷ்ட தெய்வ கோயில் செல்லலாம் ..சுப காரியங்கள் தொடங்க ஆகாது..தை 6 சுபகாரியங்கள் செய்யலாம்!! அன்று ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய சுபநாள் ஆகும்..கணவன் மனைவி ஒற்றுமைக்கு ரோகிணியில் வரும் சுபமுகூர்த்தமே சிறப்பானது..அதாவது சந்திரனின் நட்சத்திரமாக இருப்பின் மிக விசேசம்..ரோகிணி,அஸ்தம்,திருவோணம் எல்லாம் மிக உயர்ந்த நாட்கள்..

சகல தோசங்களும் பாவங்களும் விலக;

சாஸ்திர ரீதியாக உத்திராயண காலம் என்பது ரதசப்தமி அன்று தான் துவங்குகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.
தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள்.இதனால் கடுமையான பாவங்களும் தோசங்களும் தீரும்..

ரதசப்தமி ஸ்நான‌ம்
7 எருக்கு இலைகள்,7 இலந்தை இலைகள், அட்சதை, மஞ்சள் தூள், சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவும். ம்ஞ்சள்தூள் பெண்கள் மட்டுமே பயன் படுத்த வேண்டும். பெற்றோர் இல்லாதவர்கள், எள், பச்சரிசி, சேர்க்க வேண்டும். இது ஆயிரம் சூரியகிரகத்துக்கு சமம்.

வரும் 14.2.2016 அன்று ரத சப்தமி வருகிறது அன்று காலை பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் தேர் கோலம் போடுவது மிகவும் சிறப்பு. 

தை அமாவாசை அன்னதானம்;

கடந்த சில ஆண்டுகளாக ஆதரவற்ற காது கேளாத வாய் பேச முடியாத குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் செய்து வருகிறோம்...சுமார் 200 க்கும் மேற்பட்ட ஊனமுற்ற குழந்தைகள்,ஆதரவற்ற முதியோர்களுக்கு வரும் தை அமாவாசை அன்றும் அன்னதானம் செய்ய இருக்கிறோம்...தான தர்மம் தை அமாவாசையில் செய்வது பெரும் புண்ணியம்..புண்ணிய பலன் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்...உங்களுக்கு விருப்பமான முடிந்த தொகையை அன்னதானத்துக்கு அனுப்பலாம்...புகைப்படங்கள்,தகவல்கள் அமாவாசை முடிந்ததும் பதிவேற்றப்படும்...

நன்கொடை அனுப்புவோர் மெயில் செய்யலாம்...sathishastro77@gmail.com இதேபக்கத்தில் வங்கி கணக்கு விபரங்கள் உள்ளன..அதில் அனுப்பலாம்..

 k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971

நன்கொடை அனுப்புவோர் உங்கள் குடும்பத்தார் விபரம் பெயர் நட்சத்திரம் அனுப்பினால் ,உங்கள் பெயரில் அர்ச்சனை வழிபாடு அன்று மாலை முக்கிய கோயில்களில் செய்யப்படும். நன்றி, வாழ்க வளமுடன்!!


செவ்வாய், 12 ஜனவரி, 2016

2016 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( துலாம் முதல் மீனம் வரை)

ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலை 6 மணிக்கு சூரிய ய்தயத்தின்போதுதான் பிறக்கும் தமிழர்கள் சூரிய உத்யத்தை கொண்டே நாட்களை கணக்கிட்டனர்.இதுதான் சரியான முறை என உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளலாம்...இப்போதெல்லாம் தமிழர்களும் தமிழர் மரபை மீறி ஆங்கிலப்புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர் ஆகம விதிக்கு முரண்பாடாக இருப்பினும் மக்கள் விருப்பத்தை தடுக்க இயலாதே..புத்தாண்டு பிறக்கும் வேளை காலநிலையை கொண்டு பலன்கள் கணிக்கப்பட்டு எழுதியிருக்கிறேன்.

மேசம் முதல் கன்னி வரையிலான ராசிபலன் படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

துலாம் ;

உங்கள் ராசிக்கு லாபத்தில் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறக்கிறது உங்களுக்கு நிறைய லாபத்தையும் சந்தோசத்தையும் அள்ளித்தரும் ஆண்டாக இந்த வருடம் பிறந்திருக்கிறது.பல வழிகளிலும் பணம் வந்து சேரும் உர்சாகம் அதிகரிக்கும் நினைத்தவை தடங்கலின்றி நடைபெறும்.ராசிக்கு 11ல் குருச்சந்திர யோகமும் சேர்ந்திருப்பதால் இறையருள் துணை நிற்கும், செல்வாக்கு அதிகரிக்கும்.மூத்த சகோதரனால் கடந்த வருடம் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோசம் ,சுபகாரியம் நடைபெறும்.கடன்கள் அடைபடும்...குருபலம் இருப்பதால் சுபகாரியம் நடந்தாக வேண்டி இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தை,மாசியில் நல்லது நடக்கும்...

பாத சனி நடந்துகொண்டிருந்தாலும் அதன் மூலம் அலைச்சல் உண்டானாலும் இன்னும் 13 மாதங்களில் சனி விலகி விடும் அதன் பின் எந்த பாதிப்பும் சனியால் இருக்காது.தொழிலில் இடமாறுதல்,தொல்லைகள் மேல் அதிகாரிகளால் சங்கடம்,சொந்த தொழிலில் மந்தம் என போன வருடம் தடுமாற்றம் இருந்தது இந்த வருடம் மகிழ்ச்சியாக எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும்.ராகு கேது பெயர்ச்சியும் உங்க ராசிக்கு யோகமாகவே இருக்கு.அதனால் வெற்றிகள் உங்களை வந்து சேரும்..ஜூலை மாதத்துக்கு மேல் குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமில்லை எனவே வரவு செலவில் எச்சரிக்கை தேவை...கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பனமுடக்கம் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால் செலவுகளில் இப்போதே சிக்கனம் தேவை.ஏழரை சனி இன்னும் முடியாததால் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயில் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..

விருச்சிகம்;
அன்புக்கும் ,பாசத்துக்கும் அடையாளமாக திகழும் விருச்சிக ராசி நண்பர்களே..ஏழரை சனியை கண்டு தினம் பயந்து துரும்பா இளைச்சிருப்பீங்க...சனி ஜென்மத்தில் இருக்கும் காலத்தில் சவாலான நேரத்தில்தான் புத்தாண்டு பிறந்திருக்கு இந்த வருடம் நிறைய சவால்கள் சோதனைகள் இருப்பினும் இந்த வருடம் தாண்டிட்டா கடலை தாண்டின மாதிரிதான்..10ல் சந்திரன் இருக்கும்போது கர்மத்தில் புத்தாண்டு பிறந்ததால் நெருங்கிய உறவினர், வயதானவர்களை இழக்க நேரலாம்... தொழிலில் பல சிக்கல்கள் ஏற்கனவே தோன்றி விட்டன..அது சம்பந்தமான குழப்பம்,கவலை இருக்கும்.வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ,வாக்குவாதங்களை குறைத்துக்கொள்ளுங்கள் அதிகப்படியான வீண் கற்பனைகள் மன உளைச்சலைதான் கொடுக்கும் குழந்தைகள் நலனை கவனத்தில் கொள்ளவும்..எப்போதும் குழந்தை,வாழ்க்கை துணை,பனம் சம்பந்தமான சிந்தனையிலியே இருப்பீர்கள்..

சந்திரன் பத்தில் இருந்து வரும் ஜூலை மாதம் லாபத்துக்கு வருவார் அதுமுதல் உங்கள் துன்பங்கள் எல்லாம் விலகும். நன்மைகள் பிறக்கும் கஷ்டங்கள் விலகும். கடன் சுமை குறையும் .தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும் .அதிர்ஷ்டங்கள் உண்டாகும். திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் நடக்க குருபலம் வருகிறது. அதன்மூலம் பனபலம் வருகிறது..கவலை வேண்டாம்..சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து நவகிரகங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு நலம் காணுங்கள்


 தனுசு;

பிறருக்கு உதவுவதில் அதிக விருப்பம் உடையவர்.அன்பு,அமைதி,மனிதாபிமானம், இரக்க சுபாவம் கடவுள் பக்தி கொண்ட நீங்கள் நண்பர்களுக்கு உதவுவதிலும் ஆன்மீகம்,கோயில் திருப்பணிகள் செய்வதிலும் ஆர்வம் உடையவர்..அதே சமயம் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என உல்லாசமாக இருப்பதிலும் உங்களை மிஞ்ச ஆள் இல்லை..குருவின் ராசிக்காரர்கள் என்பதால் வாக்குசுத்தம்,மன சுத்தம்,உடையவர் தன்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

உங்க ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் ராசிக்கு லாபத்தில் இருக்கும்போது புத்தாண்டு பிறந்துள்ளதால் ஜனவரியில் புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவீர்கள் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள் ...இடம்,நிலம்,சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக முடியும் கடன்கள் அடைபடும் வருமானம் பெருகும்

எவ்வ்ளவு வருமானம் வந்தாலும் கூடவே மருத்துவ செலவும் வந்துவிடுகிறதே என நீங்கள் புலம்ப காரணம் 10 ல் இருக்கும் குருதான்.தொழில் ஸ்தானத்தில் இவர் அமர்ந்து தொழில் செய்யும் இடத்தில் அலைச்சல்களையும் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகளையும் உண்டாக்குகிறார்...சனி ராசிக்கு 12ல் இருப்பதால் பனம் வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை..சேமிப்புக்கு வழியே இல்லை எனும் நிலைதான் ..இருக்கட்டும் ஜூலை மாதம் குரு உங்கள் சோதனைகளை விலக்குவார் ..குருபெயர்ச்சிக்கு பின் நிம்மதியும் சந்தோசமும் உண்டாகும்.

திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..

மகரம்;

கடுமையான உழைப்பும் தளராத மனமும் கொண்டிருக்கும் மகரம் ராசியினருக்கு சனியின் பாதிப்பு இல்லாத புத்தாண்டு பிறந்திருக்கிறது...ராசிக்கு எட்டில் சந்திரன் நின்று பிறந்திருப்பதால் சுப செலவுகள் அதிகமாகும்...குருபலம் இல்லாத காலம் என்பதால் பணவருமானம் பற்றக்குறை மருத்துவ செலவுகள் அதிகமாக காணப்படுகிறது அதிக அலைச்சல் காரிய த்டை சோர்வு காணப்படும்..குடும்பத்தில் வீண் வாக்குவதம் செய்ய வேண்டாம்..

கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை உடன் பிறந்தோரால் தொல்லைகள் சங்கடங்கள் உண்டாகும் அனுசரித்து ,வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் நல்லது மூத்த சகோதர வழியில் கவலைகள் உண்டாகும்.தொழில்மந்த நிலை ,கடன் பிரச்சினைகள் ஜூலை மாதத்துக்கு பின் சீரடையும்.குருபலம் இல்லாவிட்டாலும் அதிசார குரு கைகொடுப்பதால் சுபகாரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்...வருமானம் அதிகரிக்கும் மார்ச் மாதம் வரை சிக்கல் இன்றி வருமானம் உண்டாக்கும்.அதிக பயணம்,அதிக அலைச்சல் காணப்படுவதால் இரவு நேர பயணம் தவிர்க்கவும்..பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை சனி செவ்வாய் சேர்க்கை இருப்பதால் தாயாருக்கு மருத்துவ செலவு,சொத்து சம்பந்தமான குழப்பம் உண்டாகி விலகும்...சிறுகாயங்கள்,அடுத்தவர் பிரச்சினையால் தலையிட்டதால் வரும் பிரச்சினைகளை தவிர்க்க முருகனை செவ்வாய் தோறும் வழிபட்டு வரவும்.

கும்பம்; 

கும்பம் ராசிக்காரர்கள் துணையிருந்தால் கும்பாபிசேகமே முடித்துவிடலாம்...நாட்டுப்பற்று,ஊர்ப்பற்று,குலதெய்வ பற்று அதிகம் உடையவர்கள்,மக்களுக்கு தொண்டு செய்து புகழ் பெற்றவர்கள் ,பெரும் கோயில்களுக்கு உழவாரப்பணி செய்து ஈசன் அருள் பெற்ற பலர் இந்த ராசியில் பிறந்தவர்களே...கடுமையான உழைப்புக்கு சொந்தக்காரர்கள் ..பிறருக்கு உதவுவதில் அலாதி இன்பம் காணுபவர்கள்....தாய்ப்பாசம் அதிகம் கொண்டவர்கள்...

ராசிக்கு 10ல் இந்த வருடம் முழுக்க சனி இருக்கிறார்..தொழில்காரகன் ,லக்னாதிபதி சனி 10ல் இருப்பது தந்தையால் அனுகூலம்,தொழிலில் அபிவிருத்தி,உண்டாக்கும்..நெருங்கிய உறவுகள் சிலரை இழக்கும் நிலையும் உண்டாக்கலாம்...முதியவர்களாக இருப்பதால் எதிர்பார்த்த கர்ம செலவாகத்தான் இருக்கும்...குரு ராசிக்கு மறைவதால் அலைச்சல் அதிக செலவு ,காணப்படும் மருத்துவ செலவுகள் துரத்தினாலும் சுப செலவுகளை இழுத்துப்போட்டு செய்தால் கெட்ட செலவுகள் அண்டாது..உறவுகளின் உண்மை முகம் தெரிந்து கொள்ளுதல் இந்த காலத்தில் வாழ்க்கை பாடமாக அமையும்...பண நெருக்கடி இருக்க காரணம் அஷ்டமத்தில் குரு மறைவதால்தான்...வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.

தொட்ட காரியம் தடங்கலாக இருக்கிறதே என கவலை வேண்டாம் குரு வருட மத்தியில் உங்களுக்கு சாதகமாக வரப்போவதால் இக்காலத்தில் பொறுமையாக செயல்படவும் நல்லதே நடக்கும்...7ல் ராகு வந்திருப்பதால் வாழ்க்கை துணையுடன் சின்ன வாக்குவாதம் செய்தாலும் அது பெரிதாகிவிடக்கூடும் எனவே அனுசரித்து பொறுமையுடன் நடந்துகொள்ளுதல் நல்லது...

திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..

மீனம்;

கழுவுற மீன்ல நழுவுற மீனா பல மோசமான சூழல்களில் இருந்து இயற்கையாகவே தப்பிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு...குருவின் ராசி என்பதால் பலருக்கு வழிகாட்டியாக ,ஏணியாக இருந்து அவர்கள் முன்னேற்றத்தில் பங்கு பெறுவீர்கள்..பலர் நம்மால பிழைச்சாங்க நாம இன்னும் இப்படியே இருக்கோமே என்ற கவலையும் அவ்வப்போது வந்து போகும்...உபய லக்னம் என்பதால் ,இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் பன நெருக்கடி அடிக்கடி வந்து போகும்...சேமிப்பு கொஞ்சம் உண்டானால் உடனே பெரிய செலவு வந்து பயமுறுத்தும்...பேச்சில் நிதனம் எப்போதும் தேவை ராசிக்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் என்பதால் அதிகாரமான பேச்சு,சில சமயம் பிறரை வெறுக்க வைக்கும் பகையை உண்டாக்கும்....சகோதரர்களால் ஆதாயம் உண்டு...அறிவாற்றலில் சிறந்தவர்கள் நீங்கள் உங்களுக்கு பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் என்பதால் உங்கள் பேச்சு பிறரை மயக்கும்...அரசியலில் ஈடுபாடு உடையவர் அதன்மூலம் விரயமும் அதிகம்..பங்கு சந்தை ,பைனான்ஸ் துறையில் இருப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் அதிகம்..கவனமுடன் செயல்பட்டால் நல்லது ...ராசிக்கு 6ல் குரு மறைந்திருப்பதால் கடன் நெருக்கடி ,அலைச்சல் உண்டாக்கும் காலமாக இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன...கொடுத்த பனம் திரும்பி வருதல் கடினம்..யாருக்கேனும் ஜாமீன் சிபாரிசு செய்தல் சிக்கிக்கொள்ள நேரும்...

ராசிக்கு 9ல் குரு இருப்பது தந்தை வழியில் சங்கடம்,விரயங்களை உண்டாக்கினாலும் குலதெய்வ ஆசி இருக்கிறது...தைப்பூசம் தை அமாவாசையில் குலதெய்வ வழிபாடு சிறப்பு பங்காளி வகையில் பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதால் நெருக்கம் வேண்டாம் வாக்குவாதம் தவிர்க்கவும் தொழில் மந்தமாக இருப்பினும் வருட மத்தியில் குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையும்..ராகு ராசிக்கு 6ல் இருப்பதால் எதிரிகளையும்,கடன் பிரச்சினைகளையும்,தொழில் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம்...நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ராகுவின் தயவால் வெற்றி அடையும்..

 திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வரலாம்...தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று வருதல்,தைப்பூசம் அன்று முருகன் கோயில் சென்று வருதல் நல்ல பலன் தரும்..




வியாழன், 7 ஜனவரி, 2016

திருநள்ளாறு ,நவகிரக கோயில்கள் தரிசன அனுபவம்

திருநள்ளாறு கோயில் சின்ன வயசுல போயிருந்தேன். அதன் பின் 20 வருடம் கழித்து இப்பதான் சென்றேன்.குளம் மிகவும் மிகவும் அசுத்தமா இருக்கு.அதனால் சுத்தம் செய்றாங்க..என்றார்கள் வேதனையாக இருந்தது.

அங்கு போய் குளிக்கும் ஆசை போய்விட்டது.திருநள்ளாறு குளத்தில் குளிப்பதோ ,துணியை அவிழ்த்து தலையை சுற்றி போடுவதோ செய்யாதீர்கள்...அந்த குளத்துக்கு செய்யும் மோசமான பாவகாரியம் அது.நளன் குளித்த குளம்.அதை வணங்கி தலையில் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். அதுவே சிறப்பு.திருநள்ளாறில் சிவனும்,அம்பாளும்தான் முக்கியம் அவர்களை வணங்கிவிட்டு சனியை வணங்குங்கள்..நளன் முதலில் சிவனைதான் தரிசித்தார் ...

திருநள்ளாறு தர்ப்பணேஸ்வரரை பார்க்க ஆவலாக நீண்ட நேரம் வரிசையில் சென்றேன்.வரிசை எறும்பு போல நகர்ந்தது.கோயிலுக்குள் சென்றதும் சனீஸ்வரர் சன்னதி வழியாக சென்றது...அப்புறம் வரிசை கோயிலுக்கு வெளியே முடிந்தது.சனிபவானை நான் பார்க்கவில்லை.தர்ப்பணேஸ்வரரையும்,பிரணாம்பிகை அம்பாளையும் பார்த்துட்டு தான் பார்ப்பேன் என சொன்ன என்னை உடன் வந்த நண்பர் ..வியப்பாக பார்த்துட்டு நான் சனியை பார்த்துட்டேனே இதுக்கு என்ன பரிகாரம் என்றார்..பரிகாரம் பன்ற இடத்துலியுமா..? என்றேன்.

சிவன் எங்கே என கேட்டால் சனிக்கிழமைன்னா அப்படித்தான்னு சொல்லிட்டாங்க..இன்னிக்கு இந்த கூட்டத்துல சிவனை பார்க்காமல் விடுறதில்லைன்னு பார்த்தா 250 ரூபா டிக்கெட் எடுத்தா சிவனை பார்க்கலாமாம்.இது என்னடா அநியாயம் என பார்த்தால் ஒரு கூட்டம் சனியை மட்டும் பார்த்துட்டு பரம திருபதியுடன் போயிட்டே இருக்காங்க..யாருமே சிவனையோ அம்பாளையோ பார்க்கல..சனிக்கிழமை இப்படித்தானாம் எல்லோருமே சனியை பார்க்கதான் வராங்கலாம்

தர்ப்பணேஸ்வரா..இது என்ன கொடுமை...என நொந்துகொண்டு நண்பரின் சிபாரிசில் தர்ப்பணேஸ்வரரையும் ,பிராணம்பிகையும் கண்குளிர தரிசித்துவிட்டு சனி பகவானையும் சைடில் நின்று வணங்கிவிட்டு வந்தேன்.


கும்பகோணம்,நாகை,திருவாரூர் மாவட்ட முக்கியமான கோயில்கள் சென்று வந்தேன்.அங்கு எல்லா இடத்திலும் எனக்கும் வெறுப்பும்,அதிர்ச்சியும் தந்தது அசுத்தம்தான்...

அதுவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் கோயில்கள் சுத்தமில்லாமல் கோயிலுக்கு வெளியே குப்பைகளும்,துர்நாற்றமும் வீசுவது மனம் கனக்க செய்தது.கோயிலுக்குள் 20 வருடங்களாக கிடக்கும் பழைய உடைந்த சாமான்கள் பல லாரிகள் ஏற்றும் அளவு கிடக்கின்றன..குறிப்பாக நாச்சியார் கோயில் கல்கருடன் ஆலயம்.

வெளிநட்டினர் வந்து போகும் இடமல்லவா..அவர்கள் என்ன நினைப்பர்..? கும்பகோனம் நவகிரக கோயில்கள் போய் வந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.கழிவறை,குளியல் அறை,வசதிகள் ரொம்ப குறைவு..1000 பேருக்கு ஒரு பாத்ரூம் ஒத்து வருமா..? இத்தனைக்கும் பல முக்கிய அரசு அதிகாரிகள்,அமைச்சர் குடும்பங்களும் 60 ஆம் கல்யாணம் போன்ற நிகழ்வுக்கெல்லாம் ,நவகிரக பரிகாரத்துக்கெல்லாம் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்..

சரியான சாலை வசதியும் இல்லை.திங்களூர் செல்வதே பெரும்பாடாய் இருந்தது.இத்தனைக்கும் நான் போனது காரில்.
அரசை மட்டும் குறை சொல்லவில்லை..அங்குள்ள மக்கள் ,கடைக்காரர்கள் ,மாவட்ட நிர்வாகம்,தொண்டு நிறுவனங்கள் எல்லோருமே சிந்திக்க வேண்டும்


செவ்வாய், 5 ஜனவரி, 2016

2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்

மேசம் முதல் கன்னி வரை இந்த பதிவில் கொடுத்திருக்கிறேன்.. மீதி பலன்கள் அடுத்த பதிவில் விரைவில் வெளியாகும்.

1.1.2016 ஆங்கில புத்தாண்டு விடிந்தால் வெள்ளிக்கிழமை அன்று பிறந்திருக்கிறது...மகாலட்சுமிக்கு உண்டான வெள்ளிக்கிழமை என்பதால்  திருப்பதி லட்சுமி நாராயணன் அருள் அனைவருக்கும் உண்டாகட்டும்..அன்றைய யோகமும், சொபாக்யம் யோகம்தான்..உத்திரம் நட்சத்திரம் உடையாத முகூர்த்த நட்சத்திர நாளில் சிறப்புடன் பிறந்தது ஆங்கில புத்தாண்டு...

2016 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு 12 ராசியினருக்கும் பொதுவான பலன்களை சுருக்கமாக பார்ப்போம்...

மேசம் ;புத்தாண்டு அன்று உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்துக்கு வந்து ராசியை பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்...குரு பார்வையும் உங்க ராசிக்கு இருப்பதால் அஷ்டம சனி பாதிப்பு குறையும்..பூர்வபுண்ணியாபதி சூரியன் பாக்யஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும் நீங்கள் நினைதது நிறைவேறும் 

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.பயணங்கள் தடையின்றி நடைபெறும் குலதெய்வ ஆசி கிடைக்கும்..வரவேண்டிய பணம் வந்து சேரும் கடன் பிரச்சினை நெருக்கடி குறையும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்...தொழில் முன்னேற்றம் உண்டாகும்..

தொழிலை விரிவுபடுத்துதல்,அதிக கடன் வாங்கி முதலீடு செய்தல் வேண்டாம். அஷ்டம சனி இருப்பதை மறந்துவிட வேண்டாம்..கடன் இருப்பது குறித்து அதிக கவலை வேண்டாம்.. கடன் இருப்பது அஷ்டம சனிக்கு பரிகாரமாக இருக்கட்டும்.. யாருக்கும் சிபாரிசு செய்வதோ ஜாமீன் கையெழுத்து போடுவதோ பிறருக்காக அதிக சிரம்படுவதோ உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்...ஜூன் மாதத்துக்கு பின் குரு உங்க ராசிக்கு சாதகமற்ற நிலைக்கு செல்வதால் அதிக அலைச்சல் ஏற்படும்படி வருவதால் முன்கூட்டியே எதையும் திட்டமிட்டு செயல்படுத்திக்கொல்ள வேண்டும் சுபகாரியங்களை தடங்கலின்றி செய்து விடும்.நீண்ட நாளாக யோசித்து வைத்திருக்கும் மருத்துவ செலவினங்களை ஜூன் மாதத்துக்கு பின் வைத்துக்கொள்ளலாம்...இந்த ஆண்டு சிறப்புடன் அமையும் ...

 வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை ஒருமுறை திருச்செந்தூர் சென்று வரவும்..

ரிசபம்; உங்க ராசிக்கு அதிபதி சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் பாக்யதிபதியுடன் இருப்பது ராஜயோகமாகும்...பெரும்பணம் ஒன்று உங்களுக்கு ஜனவரி மாதத்தில் கிடைக்கும்.பாக்யஸ்தானத்தில் பவர்ஃபுல்லாக புதன் ,பூர்வபுண்ணியாதிபதி அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சந்தோசம் மிகுந்திருக்கும். 

இரட்டிப்பு வருமானம் நல்ல லாபம் கிடைக்கும் பல வழிகளிலும் பனம் வந்து சேரும் பழைய பாக்கிகள் வசூலாகும்..கடன் தீரும் தொழிலில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகி பரபரப்பாக செயல்படும். கல்யாண விசயத்தில் தடங்கலாக காணப்பட்டவர்களுக்கு சந்தோசமான செய்திகள் வந்து சேரும்...

அர்த்தாஷ்டம சனி குறித்து கவலை கொள்ள தேவையில்லை ..ரிசப ராசிக்கு சனி அவ்வளவு தொந்தரவு செய்வதில்லை ...குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கிறார் சிலர் இடம்,வீடு வாங்கியிருப்பீர்கள் ..அதற்கு முய்ற்சிப்பவர்கள் விரைவில் வாங்கிவிடுவீர்கள் இந்த ஆண்டு உங்க ராசிக்கு குருபலமும் வரப்போகிரது இரட்டிப்பு பலன்களையும் அள்ளித்தரப்போகிறது.இந்த புத்தாண்டு உங்களுக்கு முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும்.

மிதுனம் ;உங்க ராசிக்கு குரு 3ல் அமர்ந்து சில சங்கடங்களை 2015 ல் உண்டாக்கி இருந்தாலும் பிறக்கும் புத்தாண்டு சிறப்பாகவே அமையும் காரணம் உங்க ராசிக்கு கெட்டவங்க எல்லாம் கெட்டு போயிட்டாங்க கெட்டவன் கெட்டால் கிட்டிடும் ராஜ யோகம் என்ற அமைப்புபடி 3,8 க்குடைய சனி ஆறாம் ராசியில் மறைந்து இருக்கார்.உங்கள் லாபாதிபதி செவ்வாய் பூர்வபுண்ணியத்தில் இருப்பதால் இதுவரை தடங்கலாவே இருந்த தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...தொழில் சம்பந்தமான டென்சன் குறையும்.வேலை பார்க்கும் இடத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும்..

உயரதிகாரிகள் தொல்லைகள் நீங்கும்...கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரவேண்டிய பணம் வசூலாகும்..தொட்ட காரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்..குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்து வரும் பூசல்களுக்கு முடிவு கட்ட நீங்கள் அனுசரித்து போவதுதான் நல்லது நாந்தான் பாதாளம் வரைக்கும் அனுசரிச்சு போறானே என்கிறீர்களா.என்ன செய்றது உங்க ராசிக்கு ஏழாம் அதிபதி குரு மூன்றாவது ராசியில் இருப்பதால் ,வாழ்க்கை துணை கை இப்ப ஓங்கிதான் இருக்கும்..சிறிய தவறுகளும் பெரிதாக பார்க்கப்படும்...வாழ்க்கை துணை உடல்நிலை பாதிப்பு மருத்துவ செலவினம் கவலை தந்தாலும் ஜூன் மாதத்துக்கு பின் எல்லா பிரச்சினைகளும் தீரும்...குலதெய்வ கோயிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு எனில் போய் நல்லா அபிசேகம் செய்து பொங்கல் வைத்து வழிபட்டு வாருங்கள்

கடகம் ; உங்க ராசிதான் இப்போ டாப்பு உங்க ராசிக்கு இரண்டில் குருச்சந்திர யோகத்தோட புத்தாண்டு பிறக்குதுங்க.. இந்த வருசம் நீங்கதான் ராஜா.ராணி எல்லாம்.ராசிக்கு இரண்டில் குருச்சந்திர யோகம் வருவதால் இந்த வருடம் உங்க பேச்சுக்கு பெரு மதிப்பு உண்டாகும்...சேமிப்பு பல மடங்கு உயரும் பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் அடைபடும்...தொட்டதெல்லாம் பொன்னாகும்..குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும்..

கடக ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதியும்,பாக்யாதிபதியும் மறையாம சுகஸ்தானத்திலும் தனஸ்தானத்திலும் இருப்பது மிக சிறப்பான வருடம் என்பதற்கு அத்தாட்சியா அமைஞ்சிருக்கு...5,9 ஆம் அதிபதிபதிகள் மறையாமல் இருந்தால் அதிர்ஷ்டத்துக்கு குறைவில்லை வெற்றி,புகழ்,செல்வம் உண்டாகும் வருடமாக அமையப்போகிறது.திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் ஆகும் ..முக்கிய கல்வி படிச்சிட்டிருக்குறவங்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்..வீடு,இடம் வாங்க நினைப்போருக்கு இந்த வருடம் கண்டிப்பா அமைஞ்சிடும்..

சிம்மம்; உங்க ராசியில்தான் புத்தாண்டே பிறக்குதுங்க...உங்க ஆண்டுன்னே சொல்லலாம் நீங்க சாதிக்கப்போற ஆண்டு இது.ராசியில் சந்திரன் அமர்ந்து விரயங்கள் எல்லாம் லாபங்களா மாறும்...கோபம்,பிடிவாதம்,டென்சன் என கடந்த ஆண்டு இருந்தாலும் இந்த ஆண்டு அன்பு,அமைதி ,சந்தோசம் என தொடங்கியிருக்கு..ராசிக்கு நான்கில் சனி அமர்ந்து அதிக அலைச்சல் உடல் ஆரொக்கியம் பாதிப்பு ,பன முடக்கம் என பல மன சங்கடங்களை கடந்த 2015 ஆம் வருடம் கொடுத்தது ஆனா பிறந்த புது ஆண்டில் குருப்பெயர்ச்சி 2016 உங்களுக்கு புது தெம்பையே கொடுக்கப்போகுதே..அதனால் இந்த வருடம் உங்களுக்கு எண்ணிய காரியங்களை ஈடேற்றி தரும் வருடமாக அமையும்.

ராசி அதிபதி சூரியன் மறையாமல் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து தன்னம்பிக்கையை பலப்படுத்தி ,தன வரவு ஸ்தானத்தை வலுப்படுத்துகிறார் பணவரவு,சேமிப்பு மேம்படும் கடன்கள் அடைபடும் பழைய பாக்கிகள் வசூலாகும்..ஜனவரி 8ஆம் தேதி ராகு உங்க தன ஸ்தானத்தை விட்டு அகல்வதால் இனி பண நெருக்கடிகள் இருக்காது.குடும்பத்தில் குழப்பமும் இருக்காது..மகிழ்ச்சி உண்டாகும் சுபகாரியங்கள் தடங்கலின்றி நடைபெறும்..

கன்னி;
கன்னி ராசியினருக்கு ஏழரை சனி இல்லாத புத்தாண்டு...இதுவரை ராகு ஜென்ம ராசியில் இருந்தது இதனால் அதிக மனக்குழப்பத்தில் இருந்தீங்க...தொட்ட காரியம் எல்லாம் தடங்கலாகவே இருந்தது ஏழரை சனி முடிஞ்சப்பிறகும் இன்னும் சோதனையா..? சனி நம்மை விட்டு போகலையோ என  பயத்தில் இருந்தீங்க...ராகு தான் சனிக்கு நிகரான பலன்களை கொடுப்பவராச்சே அதனால் வந்த பாதிப்புதான் இது.ராகு உங்க ராசிக்கு 12ல் மறைந்துவிடுவதால் இந்த புத்தாண்டு உங்களுக்கு சனி பாதிப்பு இல்லாத ராகு பாதிப்பு இல்லாத சிறப்பான ஆண்டாக இருக்கும்.குரு 12ல் இருப்பதால் வருமானம் சீராக இல்லையே என கவலை வேண்டாம் ஆண்டின் மத்தியில் வரும் குருப்பெயர்ச்சி உங்கள் கவலைகளை போக்கும்...ராசிக்கு 3ல் மறைந்த சனி உங்களுக்கு இந்தாண்டு தொழிலில் பெரும் திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார்...

இந்த ஆண்டு முழுவதுமே உங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும் பணவரவு சரளமாக இருக்கும் நீண்ட நாள் கனவுகள் ஆசைகள் நிறைவேறும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்...திருமண முயற்சிகளில் இருப்பவருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்...தங்கநகைகள் வாங்குவீர்கள்..சிலர் மனைவாங்குவர்.புதிய தொழிலை தொடங்கலாம்..விருப்பமான இடத்திற்கு இடமாறுதல் உண்டாகும்..மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர்...

துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்