வியாழன், 22 செப்டம்பர், 2011

கண்ணதாசன் எழுதிய வனவாசம்

கவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூல் கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.இந்த புத்தகம் 424 பக்கங்கள் கொண்டது.இதை படிக்க ஆரம்பித்ததும்..என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை.அவ்வளவு அதிர்ச்சியான அக்கால அரசியல் நிலவரம் பச்சையாக எழுதப்பட்டிருந்தது.

ஆபாசமான விசயங்களும் யதார்த்தமாக மோசமான வார்த்தைகள் இன்றி எழுதப்பட்டிருந்தது.கண்ணதாசன்,தானும்,கருணாநிதி இருவரும் ஒரே கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் என சொல்லியிருக்கிறார்.ஜெயலலிதா பல முறை இந்த புத்தகத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்

.
அண்ணாவுடன் இணைந்து,பெரியாருடன் வாழ்ந்து அரசியல் செய்த கண்ணதாசன் என்னும் எதார்த்தமான மனிதர் அரசியலில் எப்படி தாக்கு பிடிக்க முடியாமல் திணறினார் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.அதில் இருந்து கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்.இதில் என் இடை சேர்க்கை எதுவும் இல்லை.எல்லாமே வனவாசம் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியது மட்டுமே;

அரசியல் பிரமுகர்;
அவனுடைய நண்பர் சரியான அரசியல்வாதி..!

தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி அற்புதமான வசனங்கள் எழுதுவார்.
ஆனால் ஒரு பிச்சைக்காரனுக்கு கூட கையை விட்டு காலணா கொடுத்தது இல்லை..
தொழிலாளர்களையும்,அவர்கள் ரத்தம் ,நரம்புகளையும் பற்றி துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார்.
அவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிக குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.

தான் முன்னேறுவது போல இன்னொருவனும் முன்னேறிவிடாமல் இருக்க சகல விதமான வழிகளையும் கையாளுவார்.

அரசியல் உலகம் அத்தையக பிரகிருதிகளுக்குதான் வழி திறந்து வைத்திருக்கிறது.
ஏன்..? வயிற்றுப்பாட்டுக்காக விபச்சார தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தை கொடுத்து காரியம் முடிந்தபின்,சத்தம் போட்டு அந்த பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர்.

தலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ,அந்த பெண்ணின் தகப்பனாரோடு சண்டைக்கு போய்,அவர் செய்த ஆர்ப்பாட்டங்கள் சுவையானவை.

சென்னை ராயப்பேட்டையின் ஒரு குறுகலான சந்து.அந்த சந்திலேதான் அந்த பெண்ணின் தகப்பனார் நாட்டு வைத்தியர் ,தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார்.

மூத்த பெண்ணுக்கு இரண்டு இரண்டு குழந்தைகள் உண்டு.
மற்றும் இருவர் கன்னியர்.

அவனும் அந்த ‘துள்ளுத்தமிழ்’’ தோழனும் இன்னும் ஒரு தற்க்கால எம்.எல்.ஏ வும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

மூவருக்குமாய் ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது

இளைய பெண்ணொருத்தியை அந்த பிரமுகர் செர்த்துக்கொண்டார்.

அந்த சிறிய வீடு ,மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.
இரவு 11 மணி இருக்கும்.ஒரு பகுதியில் இருந்து பரபரப்பான பேச்சுக்குரல் கேட்டது.

நேரம் ஆக ஆக அது வாக்குவாதமக எழுந்தது.

‘’கலாரசிகர்’’ வெளியே வந்தார்.

கையிலிருந்த துண்டை தலையிலே கட்டிக்கொண்டார்.

நாட்டு வைத்தியரை தட்டி எழுப்பினார்.

‘’உன் பெண் சரியாக நடந்து கொள்ளவில்லை.மரியாதையாக பணத்தை திருப்பி கொடு.என்றார்.

‘’போலிஸை குபிடுவேன்.’’என மிரட்டினார்.

போலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்த கலாரசிகர் மறந்தே போனர்.
இறுதியில் ரூபாய் நூற்றியம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளை விட்டார்.

பின் ஒரு வாரம் வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே கொண்டாடினார்.
அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர,அடுத்து அதே மாதிரிக் காரியத்துக்குத்தான் பயன்பட்டது.

விடுதலை இயக்கத்தின் பிரமுகர்களை கவனியுங்கள்.

எப்படியோ அப்பாவி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையை கவனியுங்கள்.
சமுதாயத்தின் இருண்ட பகுதியை ஒளிமயமாக்க புறப்பட்ட அவர்கள்,பொழுது இருண்ட பிறகுதான் தங்கள் வாழ்க்கையை தொடங்குவார்கள்.
எந்தெந்த துயரங்களிலே இந்த சமுதாயம் ஆழ்ந்து கிடக்குறதென்று அவர்கள் புலம்புவார்களோ,அந்த துயரங்கள் பலவற்றிற்கு அவர்களேதான் காரணம் ஆனார்கள்.



12 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வெளங்காதவன்™ சொன்னது…

இப்போத்தான் படிச்சீங்களா?

#அரசியல் பொக்கிஷம்...

Unknown சொன்னது…

பச்சையை பகிர்ந்ததுக்கு நன்றி மாப்ள!

rajamelaiyur சொன்னது…

நல்ல பதிவு ..

rajamelaiyur சொன்னது…

பழயபடி உங்களை follow பண்றேன்

Astrologer sathishkumar Erode சொன்னது…

வாங்க ராஜா,வாங்க விக்கி அண்ணே

தமிழ் உதயம் சொன்னது…

வாசிக்க வேண்டிய புத்தகம். பலரின் வண்டவாளங்களை தெரிந்து கொள்ளலாம்.

naren சொன்னது…

அந்த கால அரசியல் மற்றும் மனித நட்ப்ப்புகளை சித்தரிக்கும் ஒரு புத்தகம். பொது வாழ்கையை பற்றி அறியவேண்டியவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

கண்ணதாசன் பகிர்வுக்கு நன்றி அண்ணே...

செங்கோவி சொன்னது…

அது ஒரு ரகளையான புத்தகம் ஆச்சே!

பெயரில்லா சொன்னது…

அவரது மற்ற படைப்புகளைக்காட்டிலும் இது கொஞ்சம் சராசரி தான்...

பெயரில்லா சொன்னது…

அறியாத புதியவற்றை அறிய முடிகிறது.
வேதா. இலங்காதிலகம்.