குபேரன் ஆக்கும் மகா
கணபதி ஹோமம்
சாஸ்திர
சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவுகின்ற கடவுள்தான்
வினாயகர்.மஞ்சள் தூலை எடுத்து கொஞ்சம் தண்ணீரை சேர்த்து கையால் பிடித்து
பிள்ளையாரே உன்னை இங்கு அழைக்கிறேன் என்றால் போதும்...அடுத்த கணம் அங்கு
பிரதியட்சணம் ஆகி விடுவார்.’’ஹாரித்ரா பிம்பம்’என்பார்கள்.(பிடிச்சு வெச்ச
பிள்ளையார் என்கிறோமே அது போல..)இதனால்தான் வைதீக பொருட்களை பட்டியல் போடும்போது
முதலில் மஞ்சள் தூள் எழுதுகிறோம்.
ஹோமங்கள் செய்வதால் வீட்டில் அனைத்து கெட்ட சக்திகளும் விலகி..நல்ல சக்திகள்
குடியேறும்..இதனால் கந்திருஷ்டி,கெட்ட ஆவி நடமாட்டம் அழியும்.
எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் கணபதி ஹோம்ம் செய்வர்.புது வீட்டில்
குடிபுக,புது தொழில் தொடங்க,இதை செய்வர்.கணபதி ஹோம்ம் செய்வதால் காரியங்கள்
தடையின்றி,இடைஞ்சல் இன்றி நடைபெறும்.
வீடுகளில் வெள்ளிகிழமைகளில்,ஆடி மாதங்களில் செய்வதால் செல்வ்வளம்
உண்டாக்கும்..சுப தினத்தில்,சுப நட்சத்திரத்தில் அதிகாலையில் சுரிய உதயத்துக்கு
முன்பு இதை செய்தால்,வளர்பிறை சதுர்த்தசி திதியில் இதனை செய்வதால், உங்களை
குபேரனாக்கும் மகா கணபதி ஹோமம்.
2 கருத்துகள்:
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ ...........
மங்களகரமாக நிகழ்வுகளைத் தொடங்குவதற்குச் செய்யப்ப்படும் கணபதி ஹோமம் பற்றிய விளக்கப் பகிர்விற்கு நன்றி.
கருத்துரையிடுக