சுகாதார விதிப்படி பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பது நல்லது என்று முன்னோர் நடைமுறைப்படுத்தினர்.அந்த நாளில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்.வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது.
சூரிய ஒளி உடலில் படாமல் நிழலில் எப்போதும் இருக்கும் பெண்களுக்கு மேக சம்பந்தமான நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.மஞ்சள் நல்ல பாம்பு விஷத்தையும் இறக்கும் சக்தி கொண்டது.நல்ல பாம்பு கடித்தவர்களுக்கு சிறிது பச்சை மஞ்சளை அறைத்து மஞ்சள் சாற்றை கொடுத்தால் உடனே விஷம் இறங்கும்.இவ்வாறு மஞ்சள் அபாயமான விஷத்தையும் முறிப்பதாலேயே அதை சமையலிலும் உபயோகிக்கின்றனர்.மேலும் மங்களகரமான காரியங்களுக்கு பொருட்கள் வாங்கும்போது முதலில் மஞ்சள் என ஆரம்பித்த பின்பே மற்ற பொருட்களையும் எழுதுவார்கள்.மஞ்சளின் மகிமை அதிகம் என்பதாலேயே அது மங்கள பொருளாக உள்ளது.
பெண்கள் உடலில் உள்ள விஷ நீரை போக்கும் என கருதியே பெண்கள் குளிக்கும்போது மஞ்சள் பூசும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
இதை போலவே மருதோன்றி இலையும் (மருதாணி)விஷ நீரை போக்கும் சக்தி உடையது.அதை கைகால்களிலும் பூசிக்கொள்வதால் ரண சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கிறது.காலில் வரும் பித்த வெடிப்பு வராமல் காக்கிறது.
1 கருத்து:
வணக்கம் பாஸ்,
அழகிற்கு பூசும் மஞ்சளிலும், மருதாணியிலும் ஆரோக்கிய குணங்களும் உண்டென்பது இன்று தான் அறிந்து கொண்டேன்.
கருத்துரையிடுக