வியாழன், 8 செப்டம்பர், 2011

கன்னியாகுமரி-சித்தர்-மாயம்மா


கன்னியாகுமரி-சித்தர்-சேலம்-மாயம்மா

பராசக்தியின் அவதாரமாய் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் அன்னை மாயம்மா ஏறத்தாழ ,அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி கடல்கரை யில் அருளாட்சி புரிந்து வந்திருக்கிறார்கள்.


அவர் எங்கிருந்து வந்தார் அவரது இயற்பெயர் என்ன.. பேசும் மொழி, என்ன வயது என்று எந்த விவரமும் இல்லை. எதனை ஆண்டுகளாக இங்கு தென்படுகிறார் என்பதும் மறைபொருளே. வடநாட்டிலிருந்து இங்கு சுற்றுலா வந்து வழிதவறி பொய் இங்கு தங்கி இருக்கலாம் என்ற யூகமும் உள்ளது. ஆதியாய்,அனாதியாய், விளங்கும் பரம்பொருளை போல எந்த ஒரு தகவலும் தெரிய முடியாமல் வாழ்ந்த அன்னைக்கு மாயம்மா என்ற பெயரும் ஏற்புடையதே.


கண்ணியகுமரியில் அன்னை 1920ஆண்டுகளில்முதன்முதலாக தென்பட்டதாக கூறுகின்றனர்அன்று கண்டது போலவே அவரது தோற்றம் மாறது இருப்பதாக கூறுகின்றனர்.மூப்புக்கு அடையாளமாக உடல் முழுதும் சுருக்கங்கள் ,கண்களை இடுக்கிய பார்வை கால்களை எப்போதும் நீட்டிய வண்ணமே உட்க்காருதல் இவயே மாயம்மா.கடலில் குளிபதேன்றால் பெரும் விருப்பம்.இந்த குளியலுக்கு காலநேரமும் கிடையாது.விதிமுறைகளும் இல்லை.கடல் நீரால் தனக்கு தானே அபிசேகம் செய்து கொள்வார். சிலநேரம் சிறு துணி உடலில் இருக்கும் .சில நேரம் அதுவும் இருக்காது.சுழல் மிகுந்த கடல் பகுதியில் எவ்வித தயக்கமும் இன்றி நீராடுவார்.நள்ளிரவில் கூட கழுத்தளவு நீரில் நின்று நீராடுவர்.௦வ்வொரு நாலும் கடலில் குளிக்கும் போது சிப்பிகள், பாசிகள் இவற்றை பொருக்கி எடுத்து வருவார்.காரிலே பச்சை வாளைபட்டை கிளிஞ்சல்கள் இவற்றை சேர்த்து மலைபோல குவித்து இவற்றை தீ மூட்டுவர் .ஈரபசயுடன் இருக்கும் அத்தனையும் கொழுந்து விட்டு எறியும்.அதைப்பார்த்தால் எதோ யாகம் நடப்பது போல தெரியும். அப்படி எறியும்போது வெறும் கையால் அவற்றை தள்ளுவார். வாய் எதோ முனுமுனுக்கும். முழுகவனமும் யாக தீயில் லயித்து இருக்கும்.சுற்றுப்புற சூழலை மறந்திருப்பார்.அது என்ன யாகமோ..!யோக நிலையோ யார் அறிவார்?


பல ஆண்டுகள் கண்ணியாகுமரில் வாழ்ந்திருந்தாலும் மாயம்மா ஒருமுறை கூட குமரி அம்மன் ஆலயத்துள் சென்றது இல்லை.நடமாடும் கன்னியாகுமரி அம்மனாகவே மக்கள் அவரை கருதினர்.மாயம்மா யாரிடமும் அதிகம் பேசியதில்லை. சித்து வேலைகளோ, அற்புதங்களோ செய்தது இல்லை. அனால் மயம்மாவை தரிசித்து ஆசி பெற்றால் தங்கள் கவலைகளும் ,குறைகளும் நீங்கி வாழ்வில் நலமும், வளமும் வந்து சேரும் என நம்பிய அன்பர்கள் ஏராளம். சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள் கூட மாயம்மாவை தெய்வீக அவதாரமாகவே கருதினர்,


மாயம்மாசமாதி கோயில் அமைந்த இடம் ;சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மாடர்ன் தியேட்டர் சினிமா ஸ்டுடயோ விற்கு எதிர்புறம் உள்ள பகுதில் கோயில் அமைந்துள்ளது.கன்னியாகுமரியிலும் ஜீவ சமாதி உண்டு.

1 கருத்து:

Unknown சொன்னது…

அவருக்கு தெய்வீக அருள் உண்டா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவரை சுற்றி எப்போழுதும் ஒரு 20 நாய்கள் இருக்கும். காரணம் யார் என்ன அவருக்கு உண்ண கொடுத்தாலும் அவர் அந்த நாய்களுக்குத்தான் பெருமளவு கொடுப்பார். அவர் கையால் போணியானால் மிகவும் ராசி என்ற நம்பிக்கையும் நிலவியது. நான் வார இறுதியில் குமரி செல்வது வழக்கம். அப்போழுதெல்லாம் அவரை பார்த்திருக்கிறேன். திடீரென்று அவர் காணாமல் போனார். அவருக்கு ஒரு மதிப்பு அந்த பகுதியில் இருந்தது உண்மை. நாய்கள் சூழ செல்வதால் ஒரு தனித்தன்மையுடன் காணப்பட்டார்.