நாடிகளை பயன்படுத்தும் அக்குபஞ்சர்;
சீனர்கள் இந்த நாடிகளை பற்றி பழங்காலம் திட்டே அறிந்துவைத்திருந்தனர்.நாடிகளுக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.இதற்கு காரணம் போகர் சித்தர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ததாக அவரது குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறதே அதனாலா என்றால் இருக்கலாம்..உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் இந்த நாடிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அறிந்து வைத்து இருந்தனர்.
அவர்கள் நாடியை பற்றி சொல்லும் கருத்துக்கள் இதுதான்.
நாம் உணவின் மூலம் சுவாசத்தின் மூலம் பெறும் சக்தியானது,இந்த நாடிகளின் மூலம் பிறவி உடலையும் பிராண உடலையும் புத்தியையும் மனதையும் நல்ல நிலையில் வைத்து இருக்கிறது.
இந்த நாடிகளில் எங்காவது மிக சிறிய அடைப்பு ஏற்படுமேயானால் சக்தி இயக்கம் தடைபடும். அல்லது சக்தி இயக்கம் மெதுவாக நடைபெறும்..அதனால் ஸ்தூல உடல் ,புத்தி,பிராணன்,மனம் அனைத்தும் பாதிக்கப்படும்.
சீன நாட்டார் அறிந்து வைத்திருந்த இந்த கலையை நம் நாட்டு சித்தர்களும் அறிந்து வைத்திருந்தனர்.நம் சித்தர்கள் அவர்களுக்கும் பழமையானவர்கள்.ஆனால் நம் சித்தர்கள் இதே முறையை ஊசி இல்லாமல் கை விரல்கள் மூலம் சரி செய்தனர்.அதற்கு பெயர்தான் வர்ம கலை.
1 கருத்து:
ஆமாம் நண்பரே .
தடைகளை தூண்டியும் ,வலிகளுக்கு
எதிர் ஆக்கங்களை தூண்டியும் ,சில சமயங்களில் சில வலிகளை தூண்டி சமன் செய்தும் நிவாரணம் அளிப்பார்கள்.
ஊசி இல்லாமல் அக்கு பிரசர் முறையில் கை விரல்களால் குறிப்பிட்ட புள்ளிகளை தூண்டியும் வைத்தியம் செய்வார்கள்
பகிர்வுக்கு நன்றி நண்பரே
கருத்துரையிடுக