வாஸ்து சாஸ்திரம் நம் வீடுகளுக்கும்,கட்டிடங்களுக்கும் ஆயுள் பலத்தையும்,அதை கட்டி குடியிருப்போரின் எதிர்காலத்தை சொல்லும் உன்னத கலையாகும்.இது ஒரு அறிவியல் என்றும் சொல்லலாம்.கண்ணுக்கு புலனாகாத பல சக்திகளில் வாஸ்துவும் ஒன்று.மின்சாரத்தை கண்ணால் பார்க்க முடியாது.அது போல வாஸ்துவும் கண்ணால் பார்க்க முடியாது.சரியான வாஸ்து அமைப்பு இல்லையெனில் புதிய தலைமை செயலகம் கட்டி ஆட்சியை இழந்த கருணாநிதி நிலைதான் நமக்கும்.
ஒரு கட்டிடம் கால்கோள் போடும் நாளை ஜாதகமாகவே கணித்து பலன் பார்க்கலாம்.நாள்,நட்சத்திரம் மட்டும் பார்க்காமல் அது என்ன மாதம்,கிரகங்களின் பலம் என்ன..முக்கியமாக சுக்கிரன் ,குரு அஸ்தமனம் அடையாமல் பலமாக கோட்சாரப்படி அமைந்துள்ளனரா என கவனிக்க வேண்டும்.முக்கியமாக நம் ஜாதகத்தில் கட்டிடம் கட்டி அதை அனுபவிக்கும் பாக்யம் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.அது போல நம் முன்னோர் வகுத்துள்ள கட்டிட அமைப்புகளை மறந்து விட்டு,வட்டமாக கட்டுவதும்,சதுரமாக கட்டுவதும்,டவர் போல கட்டுவதும் செய்தால் விபரீத பலன்களே உண்டாகும்.
வாஸ்து அளவுகோலை மட்டும் காலண்டரில் பார்த்து விட்டு வீடு கட்டுவோர் இருக்கின்றனர்.மனையடி சாஸ்திரம் பார்க்க வேண்டியதுதான்.அதற்காக அதை மட்டும் நம்பி களத்தில் இறங்கினால் மண்ணை கவ்வுவது நிச்சயம்.
சகுன சாஸ்திரம்,ஜோதிடம்,கட்டிடக்கலை,கட்டிடம் கட்டும் கொத்தனார் ,இஞ்சினியர் முதற்க்கொண்டு இதில் பார்க்க வேண்டும்.நல்ல பாக்யவான் கட்டும் கட்டிடத்திற்கு இவையெல்லாம் சரியாக அமையும்.காரணம் இவையெல்லாம் அவர் சரியாக கவனிப்பார்.
ரியல் எஸ்டேட்டுக்காக பிரிக்கப்படும் நிலங்கள் கூட,சரியான இட அமைப்பு இல்லாமல் அதை வாங்கியது முதல்,இடத்தை ஃப்ளாட் போட்டது முதல் அந்த உரிமையாளர்கள் பலர் பல துன்பங்களை அனுபவித்துள்ளனர்.காரணம் அந்த இடத்தில் காலம் காலமாக இருக்கும் கெட்ட சக்திகள்.இவற்றை முறைப்படி பூஜித்து சாந்தி செய்தால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.நல்ல லாபம் கிடைக்கும்.
real estate கொள்ளை லாபம் தரும் தொழில்.அதில் முதலீடு செய்பவர்கள் பல்வேறு சோதனைகளையும் செய்துதான் லாபம் எடுக்க முடியும்.ரியல் எஸ்டேட் தொழிலில் பலர் இறங்கி இருக்கும் பணத்தை போட்டுவிட்டு இடத்தை விற்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பதை பல இடங்களில் காணலாம்.ஜாதகப்படி நான்காமிடமும்,செவ்வாயும் வலுத்தவர்கள் மட்டுமே இடம் வாங்க,விற்க முடியும்.(பணம் இருக்குறவங்க வாங்க முடியாதான்னு கேட்க கூடாது!!)
2 கருத்துகள்:
மின்சாரத்தை கண்ணால் பார்க்க முடியாது.அது போல வாஸ்துவும் கண்ணால் பார்க்க முடியாது.சரியான வாஸ்து அமைப்பு இல்லையெனில் புதிய தலைமை செயலகம் கட்டி ஆட்சியை இழந்த கருணாநிதி நிலைதான் நமக்கும்.
அப்போ கண்டிப்பா வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்தேதான் ஆகவேண்டும் இல்லையா ...
மிக்க நன்றி சார் உங்கள் பயனுள்ள பகிர்வுக்கு ....................
வணக்கம் அண்ணாச்சி,
நலம் தானே?
வாஸ்து சாஸ்திரம் பற்றிய நல்லதோர் விளக்கப் பகிர்வு.
கருத்துரையிடுக