லக்கினத்தில் உயர்ந்தது கடக லக்கினம்.புனிதமானதும் கூட.பெரும்பாலான இந்திய மகான்களும் ,சித்தர்களும் கடக லக்கினத்தில் தோன்றியவர்களே.அரசியலுக்கும் இந்த லக்கினமே காரகத்துவம் பெறுகிறது.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் உலகை ஆளவும் அது ஆன்மீக ஆட்சியாக இருந்தாலும் இந்த லக்னமே உதவிசெய்கிறது.தெளிவான,உறுதியான, அன்பான மனமே மகான் ஆக்கும்.அந்த மனதுக்கு அதிபதி சந்திரன்.நுணுக்கமான ஆராய்ச்சி,நடப்பது நடக்க இருப்பது,நடந்தது என ஆராய்ச்சி செய்ய உதவுவதும்,கடவுள் சித்தாந்தத்தை அறிய உதவுவதும் குரு.இந்த இரண்டு கிரக அமைப்புகளும் மகான்கள் ஜாதகத்தில் எப்படி அமைந்தது என பார்ப்போம்.
கடக லக்கினத்தில் தோன்றிய கெளதம புத்தருக்கு லக்கினாதிபதி சந்திரன் 4 ல் அமர்ந்து பாக்யாதிபதி குரு 10 ல் அமர்ந்து இரண்டு சாத்வீக கிரகங்களும் சுப சப்தம நிலையில் பார்த்துக்கொண்டதன் காரணத்தினால் ஞான பேரரசனாக புத்தர் விளங்கினார்.
ஆதிசங்கரர்;
சிவமே வடிவமாகிய தெய்வ புருசர்.ஸ்ரீ ஆதிசங்கரருக்கு லக்னாதிபதி சந்திரன் 12 ல் இருக்க ,பாக்யாதிபதி குரு 4ல் இருந்து 9 வது பார்வையாக பார்த்த அமைப்பினால் ஞான குரு ஆனார்
சிவானந்த சரஸ்வதி சுவாமிகள்;
இவரும் கடக லக்கினத்தில் தோன்றியவர்.குரு 4 ல் ,சந்திரன் 10 ல் அமர்ந்த நிலையில் இவரை சத்புருசராக்கியது.
ராமானுஜர்;
இவர் கடக லக்கினத்தில் தோன்றிய மகா ஞானி ஆவார்.இவருக்கு லக்கினத்தில் குரு சந்திரன் சேர்க்கை அமைந்துள்ளது.ஸ்ரீ ரெங்கம் ரெங்கநாதரை முகலாயர்களிடம் இருந்து காக்க இவர் நடத்திய போராட்டங்கள் மிக அதிகம்.பல காலம் ரெங்கநாதர் சிலையையும் பொக்கிசங்களையும் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருந்தார்.இப்போதும் அங்குள்ள பெரும் பெரும் சிலைகளில் பொக்கிசங்கள் மறைந்து இருப்பதாகவே சொல்கிறார்கள்.திருப்பதி மலையில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்ததில் இவர் பங்கும் அதிகம்.விஸ்னு பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் அவதாரம் இவர் என்றும் சொல்வர்.சைவரும் வைணவரும் திருப்பதி மலையில் சிவன் இருக்க வேண்டுமா பெருமாள் இருக்க வேண்டுமா என சண்டையிட்டபோது திருப்பதி கோயில் மூலவர் சிலை பாதத்தில் உடுக்கை,சங்கு சக்கரம் வைப்போம் கோயிலை சாத்திவிடுவோம்..காலையில் மூலவர் சிலையில் எந்த ஆய்தம் இருக்கிறதோ அதை வைத்து முடிவு செய்வோம் என முடிவு எடுக்கப்பட்டது.அந்த இரவில் ராமனுஜர் ஆதிசேஷனாக (பாம்பு) உருவெடுத்து கோயில் கருவறை சென்று உடுக்கையை உடைத்து சங்கு சக்கரத்தை பொருத்தி வந்ததாக சொல்வர்.அன்றுமுதல் திருப்பதி பாலாஜியாக வழிபட துவங்கினோம்.அப்போ அதற்கு முன் இருந்த தெய்வம் என்ன..?அதுக்கு தனி பதிவு எழுதறேன்.
பாரதியார்;
இவரும் கடக லக்கினத்தில் பிறந்தார்.சந்திரன் 6 ல் குரு 12ல் என்ற அமைப்பில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர பார்வை பார்த்துக்கொண்டனர்,இருப்பினும் லக்கினாதிபதி சந்திரன் 6 ல் மறைந்து,பாக்யாதிபதி குருவும் 12 ல் மறைந்ததாலோ என்னவோ வறுமையில் வாழ்ந்து இறந்தார்.
விவேகானந்தர்;
தனுர் லக்கினத்தில் பிறந்த ஆன்மீக புரட்சி தலைவர்.5 ஆம் பாவத்தில் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றது.11ல் இருக்கும் லக்கினாதிபதி ஸ்ரீகுரு பகவான் பார்வையை பெற்று இருக்கிறார்.
பகவான் ரமணர்;
ஞான பிறவி ரமணருக்கு துலாம் லக்கினம்.5ல் குரு 9ல் சந்திரன் அமர்ந்து குரு சந்திர பார்வை.9 ஆம் இட சந்திரன் யார் ஜாதகத்தில் இருப்பினும் அவர்கள் பிற்காலத்தில் தெய்வ அருளை பெறுகின்றனர்.தெய்வ துணை எப்போதும் உண்டு.என் குரு தினசரி காலை 6 மணிக்கு ஒருமுறை மாலை 6 மணிக்கு ஒரு முறை வினாயகரை ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தரிசனம் செய்து வருவார்.எவ்வளவு நாளாக தெரியுமா..?கிட்டதட்ட 40 வருடமாக..நேரம் தவறாமல்...எல்லோரும் அவ்வளவு மன உறுதியுடன் அந்த பழக்கத்தை தொடர்ந்து கடை பிடிக்க முடியாது.
2 கருத்துகள்:
நான் தானய்யா முதல்.
பழைய நினைவுகளை நினைவுபடுத்தியதற்க்கு நன்றி
புதிய செய்தி
கருத்துரையிடுக