வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்

வீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்;

வீடு கட்டும்போது அன்று நிலவும் ராசிபலன்களை உணர்ந்து வீடு கட்டுவது நல்லது.


வீடு கட்டுவதற்க்கான மிகவும் சிறப்பான ராசி மேஷமாகும்.
இந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் குடும்பத்தினர் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள்.குடும்பத்தில் எப்போதும் மக்ழ்ச்சி நிலவும்.

ரிஷப ராசியில் வீடு கட்டினாலும் நல்ல சுபிட்ஷமான நிலை நிலவும்;கடன் தொல்லைகள் கட்டுக்குள் வரும்.

மிதுன ராசியில் வீடு கட்டினால் வீட்டில் ஆடு,மாடு,கோழி போன்ற வளர்ப்பு விலங்குகள் பெருகி அதன் மூலம் நல்ல வருமானம் கிட்டும்.
கடக ராசி வீடு கட்டுவதற்கான சிறந்த ராசியல்ல;

சிம்ம ராசியில் வீடு கட்டினால் உற்றார் உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல.இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி கேடு ஏற்படும்.

துலாம் ராசியில் வீடு கட்டத்தோடங்கினால் சுகபோக வாழ்வு அமையும் என கூறுவார்கள்.

விருச்சிக ராசியில் வீடு கட்டுவது மிகவும் நல்லது.படிப்படியாக வாழ்க்கையில் வீட்டின் உரிமையாளருக்கு முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாரத பண வருவாயும் இருக்கும்.

தனுசு ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல்.
மகர ராசி வீடு கட்டத்தொடங்க நல்ல ராசியாகும்.அந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் வீட்டில் தானியங்கள் சேரும்.வளமன சூழல் உருவாகும்.

கும்ப ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் அந்த வீட்டில் சுப காரியங்கள் குறையின்றி நடக்கும்...மதிப்பும்,செல்வாக்கும் சமூகத்தில் உயரும்.அணிகலன்கள் நிறைய சேரும்.

3 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நண்பா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் இணைகிறேன். நல்ல பகிர்வு.
நானும் ஜனவரி'2012ல் வீடு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்... எனது ராசி சிம்மம் ஆரம்பித்தால் விரைவாக முடித்து விடலாமா?

Astrologer sathishkumar Erode சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே...வீடு கட்டத்துவங்கும் நாளின் ராசியை கவனித்துக்கொள்ளுங்கள்...உங்களுக்குத்தான் ஏழரை சனி முடிந்து குரு பலமும் இருக்கே..கலக்குங்க..

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி..

நல்லதோர் பதிவு..
தொடருங்கள்.