திருமண பொருத்தம் பற்றி எழுத நிறைய இருக்கிறது.கற்பை இழக்கும் பெண்கள் ஜாதகம் என்ற பதிவில் ஐடியா மணி கற்புன்னா என்ன சார்னு கேட்டார்.கற்புன்னா கற்புக்கரசி குஷ்பூ சொன்ன மாதிரி காண்டம் யூஸ் பண்ணினா கற்பு.காண்டம் யூஸ் பண்ணாட்டா கற்பு போயிடும் அப்படீன்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா கற்புன்னா ஒரு பெண் ஒரு ஆடவனை மனதால் ஆசைப்பட்டு களங்கப்பட்டாலே கற்பு போச்சுன்னு நம் இந்து மத சாஸ்திரம் சொல்கிறது.ஆற்றில் நீர் எடுக்கும்போது சூரியனை பார்த்து மனம் பறிகொடுத்த மனைவியை விலக்கி வைத்த முனிவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.அந்தளவு அந்தாளு சைக்கோவான்னு கேட்க கூடாது.கற்பு ஸ்தானம் நு லக்கினத்தில் இருந்து நான்காம் இடத்தை ஜோதிடம் சொல்கிறது.இதை பற்றி இன்னொரு பதிவு எழுதுகிறேன்.
திருமணபொருத்தம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்;
*சுக்கிரனுக்கு 4 ல் பாவக்கிரகம் இருக்க கூடாது.இருந்தா? காம உணர்வு மிக அதிகமானவர்கள்.சமாளிக்க முடியாது.
*சந்திரன்,9 ல் இருந்தால் 9 ஆம் அதிபதியுடன் சந்திரன் இருந்தாலும் சுக்கிரன் சந்திரனுடன் இருந்தாலும் மூத்த பெண்களுடன் தொடர்பு உண்டாகும்.பெண்ணுக்கு இருந்தால் மூத்த ஆண்கள் அல்லது திருமணம் ஆன ஆண்களுடன் தொடர்பு உண்டாகும்.
*7க்குடையவன் 10க்குள் இருந்தால் திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் கர்மகாரியம் நெருங்கிய உறவில் நடக்கும்.
*6,8 ராசியினர் திருமணம் செய்தால் வாழவும் முடியாது.சேரவும் முடியாது.
*7ல் சனி இருந்தால் வேறு சாதியினரை திருமணம் செய்வர்.நட்சத்திர சாரத்தை பொறுத்து இது மாறலாம்.
*3க்குடையவன் செவ்வாய் ராசியாய் இருந்தால் சகோதரன் காதல் திருமணம்
*7 ஆம் இடத்தை சுக்கிரன் பார்த்தால் காதல் திருமணம்
*லக்கினத்தில் சனி இருந்தால் அழகு கரைந்துவிடும்.
(தொடரும்)
6 கருத்துகள்:
இன்னா பாஸ் இவ்வளவு விஷயம் இருக்கா இதிலே.
வாங்க பாஸ்..இன்னும் இருக்கு...எழுதுறேன்.
அப்படியா
நிறைய புது விஷயம் ஆனா ஒரு குழப்பம் இதெல்லாம் நெஜமா நடக்குமா அண்ணே இல்ல சாஸ்திரம் சொல்லுதுன்னு சொல்லுறீங்களா!!??
7ல் சனி இருந்தால் தாரம் அல்லது கணவர் நாசம் என்பது உண்மையா? அந்த சனி தன் சொந்தவீட்டில் இருந்தாலோ அல்லது உச்சத்தில் இருந்தாலோ விதிவிலக்காக கொள்ளலாமா?
ராஜேந்திரன் டாக்டர்,சனி 7ல் இருந்தால் அது லக்கினத்துக்கு எந்த ஸ்தானாதிபதி என்பதை பொறுத்து சிறிது மாறுதல் உண்டாகும்.லக்கினத்துக்கு நல்லவனாக இருந்தால் துணை கறுப்பு என்பதோடும் நீச தொழில் செய்பவராகவும் அமைவார் என்பதோடு முடியும்.கெட்டவராக இருப்பின் எல்லா கெடுபலனும் உண்டு.கணவனுக்கு அதிர்ஷ்டமும் இல்லை.
கருத்துரையிடுக