மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...திருமண பொருத்தத்தில் மனைவி என்பது வரமா சாபமா என பார்ப்பது மிக அவசியம்.
மூக்கும் முழியுமா பொண்ணு மகாலட்சுமியாட்டம் இருக்குறா என பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்..அது சாமுத்ரிகா லட்சணம் மட்டுமில்லாமல் ,கிரகங்கள் அமைப்பு ஜாதகத்தில் நன்றாக இருந்தால் முக அமைப்பும்,குண அமைப்பும் நன்றாக அமையும்.அதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என பெரியவர்கள் சொல்லி வைத்தனர்..ஒருத்தர் முகத்தை பார்த்தாலே ஆள் எப்படின்னு சொல்லிடுவேன்னு சொல்றாங்களே..அதுவும் இந்த கணக்குதான்..
ஒரு ஜாதகத்தில் கிரக அமைப்பு எப்படி இருந்தால் எப்படிப்பட்ட மனைவி அமையும்..?
குரு 7ல் இருப்பது-மனைவி பூஜை,புனஸ்காரம் ,கோயில் கோயிலாக சுற்றுவது,அல்லது யோகா,தியானம்,சித்தர் தத்துவம்னு ஞானியா இருப்பாங்க..நல்லதுதானே..?நல்லதுதான்..ஆனா கல்யாணம் ஆகாம இருந்தா.கல்யாணம் ஆனா கணவனுக்கு சந்தோசம் கொடுக்குற மாதிரி நடந்துக்கணும்..மெதுவா கைய தொட்டா,யோவ்..கைய எடு..சஷ்டி விரதம்...48 நாளைக்கு நான் விரதம் அப்ப்டீங்கும்..
அடிப்பாவி..இன்னிக்குத்தாண்டி நமக்கு முதலிரவு...இன்னிக்கேவே என கணவன் அலறுவான்...
சனி 7 ஆம் இடத்தில் இருப்பது..பொண்ணு தேடி காடு மலையெல்லாம் சுத்திகீடிருப்பான்...ஊருக்குல்ள தேடமாட்டாரா..?ஊருக்குள்ள இவர் ஜாதகம் இல்லாத வீடே இல்ல..அந்தளவு தேடு தேடுன்னு தேடணும்..
சுக்கிரன் 7ல் இருந்தா....அதை ஓபனா பேச முடியாது...கொஞ்சம் சிக்கல்..என்ன சிக்கல்..?களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி...மனைவியை சந்தோசப்படுத்துவது கஷ்டம்...சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் இனிக்க இனிக்க தாம்பத்ய சுகம் கிடைக்கும்..கொஞ்சம் சரியில்லைன்னா இவ்வளவுதானா உன் வீரம்னு 10 நிமிசத்துலியே கண்ணீர் விடும்...கணவனுக்கு அதிக செலவு வைக்கும்..கருத்து வேறுபாடு நிறைய சிக்கல் இருக்கு.
சனி,சூரியன் 7ல் இருந்தாலோ..சனி செவ்வாய் 7ல் இருந்தாலோ அவங்கவங்க காரகத்துவத்துக்கு தகுந்தாப்புல சிக்கல் உண்டாகும்.சனி முடக்கம்..செவ்வாய்-நெருப்பு....அதிகாரம்..அடக்கியாளும்...சூரியன் சுட்டெரிக்கும்...இவங்க ஒண்ணு சேர்ந்தா அதுவும் தாம்பத்திய ஸ்தானத்துல..? தாம்பத்திய உறவு எனப்படும் செக்ஸ் ரொம்ப சிக்கல்தான்..அதே மாதிரி வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு பலவித சோதனை உண்டாகும்...புகுந்த வீடு நரகமாக அந்த பொண்ணுக்கு தெரியும்...ஜாதகத்தில் நவாம்சத்தை பார்த்தால் தாம்பத்ய வாழ்வு தெளிவாக தெரிந்து விடும்...
நமீதா மாதிரி பொண்ணை ஜொள்ளு விட்டு பார்க்குற ஆளுங்க அதே பொண்ணை கல்யாணம் செஞ்சுக்குறியான்னு கேட்டா அதெப்படி எனக்கு ஸ்னேகா மாதிரி..அமலா பால் மாதிரி குடும்ப பொண்ணு தான் வேணும்னு சொல்வான்..இதுதான் லாஜிக்.
வீட்டையும்,குடும்பத்தையும் பார்த்துகிட்டா போதும்..பொறுப்புள்ள குடும்ப பொண்ணுதான் வேணும்..இதை சொல்லாத ஆண்மகன் உண்டா இந்த நாட்டில்..?
அப்ப அந்த மாதிரி பொண்ணை தேடிக்கண்டு பிடிக்கிறவக,தன்னோட ஜாதகமும் சரியா இருக்கான்னு பார்த்துக்கிடணும்..அப்பதான் தனக்கு அந்த தகுதி இருக்கான்னு தெரியும்.
தாம்பத்யம் எனும் செக்ஸ் மட்டுமில்லாமல் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண் இனிமையாக பேசுவாளா...இனிமையாக நடந்து கொள்வாளா என்பதை தெரிந்து கொள்ள நவாம்ச லக்னத்தை பார்க்கணும்..
நவாம்ச லக்னாதிபதியை சுப கிரகங்கள் பார்த்தால்க் இனிமையான மனைவி...மேலும் 7 ஆம் அதிபதியாக வரும் கிரகம் அம்சத்தில் லக்னாதிபதிக்கு மறைவு பெறாமல் இருந்தாலே வாழ்க்கையில் வசந்தம் வீசும்...அடுத்து 1,2,7 ஆம் இடங்களில் பாவக்கிரகங்கள் கூட்டம் போட்டு கும்மாளம் அடிக்காமலும்,அதற்கு உரிய கிரகங்கள் நல்லபடியாக வலுத்து நின்றாலும் வாழ்க்கை சொர்க்கமே...
1ஆம் இடம் 7 ஆம் இடத்துக்கு சம்பந்தம் ஆனாலே திருமண வாழ்க்கை திதிக்கும்...என்ன,’’அந்த’’மேட்டர்ல ஆளு படு தூக்கல்.நாலு சுவத்தை தாண்டாம சித்திரம் வரைஞ்சா சரிதான்.நான் சொல்றது அதுதான்...
காந்தம் போல பிண்ணி பிணைந்து வாழும் அன்புள்ளங்கள் ஜாதகம் எப்படி இருக்கும்னு அடுத்த பதிவுல சொல்றேன்............!!!!!!
2 கருத்துகள்:
அன்புடன் வணக்கம்
சந்திரன் ராஹு கேது ..7..ல் விட்டுடீங்க?? அதையும் போட்டுருங்க
நன்றி,
வணக்கம்
கருத்துரையிடுக