வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்டையும்

திருமண பொருத்தம் பார்க்கும் போதும்,காம உணர்வை பற்றி அறிந்து கொள்ளவும் ஜாதகத்தில் பார்க்க வேண்டிய கிரகம் சுக்கிரன்..வசதியாக வாழ்வாரா...வறுமையில் உழல்வாரா...என பார்க்க சுக்கிரனை காண வேண்டும்.ஒரு மனிதனின் வாழ்வில் இல்லறம் நல்லறமாக அமைவது அவரது ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள இடத்தை பொறுத்தே ஆகும்.

சுக்கிரனுக்கு ரிசபம்,துலாம் சொந்த வீடு.மீனம் உச்ச வீடு.கன்னி நீச வீடு.ஒருவரது ராசியில் பிறக்கும்போதே சுக்கிரன் தனது சொந்த வீடுகளான ரிசபம்,துலாமில் இருந்தால் அவர் தனது முயற்சியால் பெரும் செல்வம்,பெயர்,புகழ் அரசாங்க வேலை எல்லாவற்றையும் அடைவார்.இசையில் நாட்டம் காட்டுவார்.பெருமையோடு மதிக்கப்படுவார்.நோயற்ற பயமற்ற வாழ்க்கை அமையும்,மனதுக்கு உகந்த இல்லற துணை கிடைக்கும்..

கடகத்தில் இருந்தால்,அவர்களுக்கு அகங்காரம் இருக்கும்.இதனால் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.சிலருக்கு இரு தாரங்கள் அமைந்து துன்பப்படும் சூழ்நிலையும் உண்டாகும்.
மிதுனத்தில் இருந்தால்,அவர் நிர்வாக திறமை கொண்டவராகவும் நல்ல புத்திசாலியாகவும் இருப்பார்.அரசு வேலை கிடைத்து நிறைய பொருள் சேர்க்க வாய்ப்புண்டு.

சிம்மத்தில் இருந்தால் மனைவி மூலம் நிறைய வருமானம் வரும்.இவரை விட இவர் மனைவி புகழ்பெற்றவராக இருப்பார்.பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம்.

குருவின் சொந்த வீடாக கருதப்படும் தனுசுவில் சுக்கிரன் இருந்தால் பலரும் மதிக்கதக்க பெயரோடும் புகழோடும் இருப்பார்.
மகரம்,கும்பத்தில் சுக்கிரன் இருந்தால் அவர் தப்பான ஆசை கொண்டவராக இருப்பார்.இல்லற வாழ்வு இதமாக இருக்காது...சனி வீட்டில் சுக்கிரன் இருப்பதால் நீச பெண்கள் பழக்கம் ஏற்பட வாய்ப்புண்டு...

தனது உச்ச வீடான மீனத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ராசிக்கார ஏதாவது ஒரு கலையில் வல்லவராக இருப்பார்.அதன் மூலம் புகழும்,செல்வாக்கும் பெறுவார்.நல்ல ருசியான உணவுகளையே விரும்புவார்.ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவார்.

நீச வீடான கன்னியில் சுக்கிரன் அமைந்தால் ,அந்த ராசிக்காரர் ஏழ்மையில் உழன்று பணத்துக்கு சிரமப்பட வேண்டியிருக்கும்.தவறான வழியில் போய் துன்ப்படுவார்.
மேஷம் மற்றும் விருச்சிகத்தில் சுக்கிரன் அமைந்தால் ,அவரது பெயர் பெண்களால் கெடும்.ஏகப்பட்ட சச்சரவுகளை வாழ்வில் சந்திக்க நேரும்.சுக்கிர திசையில் இது பல மடங்காகும்...ஜாதகத்தில்,சுக்கிரன் +செவ்வாய் இணைவு எந்த நேரமும் காம எண்ணமே இருக்கும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது நான் புறக்கணித்த துறை...மெல்ல கத்துகிறேன்..

பெயரில்லா சொன்னது…

simma veedu, kanni veedu endru epdi nam jathakathil paarthu therinthu kolvathu ? Laknathil irunthu enna venduma ? ovvaru katamum oru rasiyai kurikuma ?