வெள்ளி, 9 செப்டம்பர், 2011

சனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக்கமான பலன்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் 2011 12 ராசியினருக்கும் பலன்கள்;


21.12.2011 ல் சனி துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார்.
15.2.2012 முதல் 2.8.2012 வரை சனி வக்ரம் ஆகிறார்.
27.3.2012 முதல் 11.9.2012 வரை மீண்டும் கன்னியில் சஞ்சாரம் செய்கிறார்.
26.3.2013 ல் மீண்டும் வக்ரம்
15.8.2013 ல் வக்ர நிவர்த்தி
10.4.2014 முதல் 28.8.2014 வரை மீண்டும் வக்ரம்

இம்முறை மூன்று முறை சனிபகவான் வக்ரம் பெறுகிறார்.

சனி சஞ்சரிக்கும் நட்சத்திர சாரம்;

21.12.2011-17.11.2012 சித்திரை நட்சத்திரம்-செவ்வாய் சாரம்
17.11.2012-11.12-2013 சுவாதி நட்சத்திரம்-ராகு சாரம்
11.12.2013-2.11.2014 விசாக நட்சத்திரம்-குரு சாரம்

துலாத்தில் இருக்கும் சனியை கோட்சார ரீதியாக 2.1.2013 முதல் 21.8.2014 வரை ராகு பகவான் சேர்ந்து ராகு+ சனி சேர்க்கையாக பலனைத் தருவார்கள்.இந்த ராகு சனி சேர்க்கை கெடுதலானதாகும்.இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே சவால் விடும் வகையில் தீவிரவாதம் தலைதூக்கும் காலமாக இருக்கும்.இயற்கையால் பெரும் பாதிப்பும் உண்டாகலாம்.மூன்று முறை வக்ரம் பெறுவதும் ஒரு கெடுதலுக்கு அறிகுறியாகவே தென்படுகிறது.

மேசம்;
சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு கண்டச்சனியாக உள்ளது.கண்டம் என்றால் கழுத்து.கழுத்தில் தொங்குவது மாங்கல்யம்.எனவே இதை மாங்கல்ய சனி என சொல்வர்.எனவே கணவன் மனைவி உறவில் பிரச்சினைகள் உண்டாகலாம்.கவனம் தேவை.3 ஆம் பார்வையாக 9 ஆம் இடத்தையும்,7 ஆம் பார்வையாக சனி ராசியை பார்க்கிறார்.10 ஆம் பார்வையாக 4 ஆமிடத்தை பார்க்கிறார்.இதனால் தாய்,தந்தையர்,வீடு,வாகனம் சம்பந்தமானவை எல்லாம் கண்டமாக பாதிப்பாக உள்ளன.கவனம் தேவை.சுய ஜாதகம் வலுத்திருப்பின் பிரச்சினை இல்லை.

ரிசபம்;
சுக்கிரன் ராசிக்காரர்,கவலையே இல்லை.6 ஆமிடத்து சனி ஆனந்த வாழ்வை தரும்.எதிரிகள் ஒழிவர்.இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.3,7,10 ஆம் பார்வையாக 8,12,3 ஆம் இடத்தை பார்ப்பதால் சுப விரயம் ஏற்படும்.வீடு,மனை,வண்டி,வாகனம் வாங்குதல் போன்ற பலன்கள் உண்டாகும்.

மிதுனம்;
சனி உங்க ராசிக்கு 5 ஆமிடத்தில் வருகிறார்.அறிவுஸ்தானம் அல்லவா.அதனால் மன தடுமாற்றம் அடிக்கடி உண்டாகும்.மனம் சொல்றபடி நடப்பீர்கள்.இதனால் சில சில சங்கடங்கள் உண்டாகும்.கவனம் தேவை.பிள்ளைகளால் கவலை,விரயம் உண்டாகும்,பூர்வீகம் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகும்.2,7,11 ஆம் இடங்களை சனி பார்ப்பதால் சனி வழிபாடு செய்து கொள்ளவும்.

கடகம்;
உங்க ராசிக்கு 4 ஆமிடத்துக்கு சனி வருகிறார்.இது அர்த்தாஷ்டம சனி.இது வீட்டை கட்டுறியா வைத்தியம் பார்க்குறியா எனற அமைப்பில் இருப்பதால் வீடு,மனை சம்பந்தமான முடிவுகள் எடுத்து செயல்படலாம்.அல்லது வீட்டையோ ஊரையோ மாற்றலாம்.இடப்பெயர்ச்சி நல்லது.

சிம்மம்;
அடேயப்பா.இத்தனை நாள் நீங்க எதிர்பார்த்த ஏழரை சனி முடிஞ்சிருச்சுங்க.சந்தோசம்தானே.இனி சனியால் தொல்லை இல்லை.தொழில் சிறப்பாக இருக்கும்.கடன் அடைபடும்.மருத்துவ செலவு,கோர்ட் பிரச்சினை தீரும்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

கன்னி;
சனி உங்க ராசியில் இதுவரை ஜென்ம சனியாக இருந்தார்.இப்ப ஜென்ம சனி விலகிவிட்டது.இன்னும் இரண்டரை வருடம் ஏழரி சனி பாக்கி இருக்கு.இருப்பினும் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போன மாதிரி ஜென்ம சனி முடிஞ்சிருச்சே கவலை விடுங்க.

துலாம்;
ஜென்ம சனி ஆரம்பிக்குதுங்க.இது பொங்கு சனி என்பதால் உங்க திறமைகள் அனைத்தும் வெளிப்படும்.கடுமையான அலைச்சல்,கடும் வேலைப்பளு உண்டாகலாம்.நீங்களும் கடுமையா உழைங்க.நீங்க முன்னேற்றம் காணப்போவது இந்த ஏழரை சனியில் தான்.இதுவரை விளையாட்டுத்தனமா ஜாலியா இருந்த நீங்க..உங்க திறமையை உணரப்போவது இப்போதுதான்.குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்க.மனைவியிடம் அன்பா பேசுங்க.பண விரயம் இருக்கும்

விருச்சிகம்;
உங்க ராசிக்கு எழரை சனி ஆரம்பிக்குதுங்க.பகீர்ன்னு ஆயிடுச்சா.கவலைப்படாதீங்க.எப்பவும் சுர்ர்னு உங்களுக்கு கோபம் இந்த டைம்ல இது இன்னும் அதிகரிக்கும்.உங்க வாழ்க்கை துணையோடு எப்போதும் சச்சர்வௌ இருக்கும்.அது இப்போ இன்னும் அதிகரிக்குது.எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசறதை எப்போ நிறுத்துவீங்களோ அப்பவே பாதி பிரச்சினை முடிந்துவிடும்.பன விரயம் அதிகம் இருப்பதால் வீடு கட்டுதல் வாங்குதல்,கல்யாணம்னு சுப விரயம் செய்வீங்க.அப்படி செஞ்சா நல்லது.இல்லைனா கெட்ட செலவா வரும்.தொழில் சற்று மந்தமாகும்.கடுமையா உழைச்சா ஜெயிக்கலாம்.நண்பர்களால் ஏமாற்றம் உண்டு.கவனம்.

தனுசு;

தனுசு என்றால் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் எதிலும் வேகமானவர்கள்னு அர்த்தம்.தன ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தன லாபங்களுக்கு குறைவிருக்காது.11 ஆம் இடத்தில் சனி இருக்கும் வரை நீங்க யோககாரர்தான்.

மகரம்;
உங்க ராசிக்கு சனி 10 ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தொழில் வழியில் நல்ல மாற்றங்களும் உயர்வுகளும் உண்டாகும்.சனி உங்க ராசியில் இருந்து 4,7,12 ஆம் இடங்களை பார்ப்பதால் வீடு,வாசல்,வாகனம் சுகம் சம்பந்தமான செலவுகள் இருக்கத்தான்செய்யும்.இக்காலகட்டத்தில் வீடு கட்டுவது சிறப்பு.

கும்பம்;
உங்க ராசிக்கு அஷ்டம சனி முடிஞ்சிருச்சு.சந்தோசம்தானே.இனி எல்லாம் ஜெயம்தான்.எவ்லோ கஷ்டம் அனுபவிக்க முடியுமோ அவ்ளவும் அனுபவிச்சாச்சு.சனி விலகியாச்சு.இனி தொழில்,வருமானம்,உறவுகள் சிறப்பாக இருக்கும்.இப்னி எந்த தடங்கலும் இல்லாம உங்க முயற்சிகள் கைகூடும்.

மீனம்;

உங்க ராசிக்கு அஷ்டம சனி ஆரம்பிக்குதுங்க.விரய செலவு அதாவது தேவையில்லாத கெட்ட செலவுகள் நிறைய வரும்.வீட்ல வீண் சச்சர்வுகள் அடிக்கடி தோன்றும்.அலைச்சல் அதிகரிக்கும்.நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டாகும்.குடியிருக்கும் வீட்டையோ தொழில் ஸ்தானத்தையோ மாற்றும் சுழல் உண்டாகும்.பண நஷ்டம் இருப்பதால் ஒவ்வொரு அடியும் கவனமாக வைக்கவும்.திசாபுத்தி நல்லாருந்தா பூர்வ புண்ணியம் வலுத்திருந்தா பிரச்சினை இல்லை.அட்டம சனி பாதிக்காது!



7 கருத்துகள்:

K சொன்னது…

வணக்கம் சார், கும்புடுறேனுங்க!நல்லா சொல்லியிருக்கீங்க!

பாலாஜி சொன்னது…

நான் கன்னி ராசி!
இனிமேல் நல்லா இருக்குமா?

செங்கோவி சொன்னது…

நன்றி சதீஷ்.

K சொன்னது…

சதீஷ் சார், ப்ளீஸ் விசிட் மை ஏரியா!

Murari சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
naren சொன்னது…

நண்பரே.

//கடும் உழைப்பும் இருந்தால் சனி பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்//

இதுதான் உண்மை, பரிகாரம் மட்டும்தான் என்று வியாபாரப் மொட்டை போடாமல் உண்மையை சொன்னதற்கு நன்றி.

T.K.Theeransamy,Kongutamilarkatchi சொன்னது…

என்ன தலைவா! எனக்கு பேர்வச்சு

ஊர்வச்ச உங்களுக்கு ஒரு பிரச்சனையா?உங்க பிளாக்க முடக்கி அடக்க நினைக்கிற!உங்க வளர்சியை பிடிக்காத கும்பல! நம்ம கொங்கு நாட்டு பாணியில கட்டுக்குள் கொண்டு வந்தா!சொல்லுங்கா ....டி.கே.தீரன்சாமி,theeranchinnamalai.blogspot.com