ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்


ரஜினியின் ராசியான மகர ராசி நேயர்களே..நீங்கள் கடும் உழைப்பாளிகள் மட்டுமல்ல..அன்புக்காக ஏங்கும் மென்மையான மனம் கொண்டவர்கள்.யாரையும் அவ்வளவு எளிதில் பகைத்து கொள்ள மாட்டீர்கள்...பகைத்தாலும் மனதிற்குள் உங்கள் ஆதங்கத்தை பூட்டிக்கொண்டு வெளியில் சிரித்து பேசி சமாளிப்பீர்கள்.அடிச்சா அதிரடி..இல்லைன்னா எங்க இருக்கோம்னே தெரியாத ஒரு அமைதி..காரணம் மகரம் ஒரு ஆழ்ந்த ராசி.சனிக்குண்டான ராசி என்பதால் சனியின் காரகத்துவமான கடும் முயற்சி,கடும் உழைப்பு,அதிக அலைச்சல் எப்போதும் உங்களுடன் இருக்கும்.மோசமான ஆட்களால் அடிக்கடி தொந்தரவு,சங்கடம் நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.



சனி பெயர்ச்சி வரும் நவம்பர் 15 ஆம் தேதி வருகிறது.(இது திருக்கணிதம் பஞ்சாங்கம் சபரி மற்றும் ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கப்படி)அது சமயம் உங்கள் ராசிக்கு என்ன பலன் உண்டாகும்?

சனி உங்கள் ராசிக்கு பத்தாவது இடத்துக்கு செல்கிறார்.பத்தாமிடம் கர்ம ஸ்தானம்.தொழில் ஸ்தானம்.சனி தொழிலுக்கு அதிபதி.அவர் தொழில் ஸ்தானத்தை பார்ப்பது நல்லதுதானே...அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு உங்களுக்கு தொழில்,வேலை வாய்ப்பு வகையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்..தொழிலில் நல்ல லாபமும்,சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் உண்டாகும்..தொழில் விரிவு படுத்தும் வாய்ப்பும் அமையலாம்..பணம் பல வழிகளிலும் வந்து சேரும்..

10 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் நெருங்கிய உறவில் சிலருக்கு பாதிப்பு உண்டாக்கலாம்...மகர ராசியினர் வயதானவர் எனில் அவர்களுக்கும் பாதிப்பு உண்டாகலாம்..நடுத்தர வயதினருக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டு.

குருவும் 4 ஆம் இடமாகிய மேசத்தில் இருப்பதும் (இப்போது வக்ரம் 25.12.2011 வரை பாதிப்பில்லை) வக்ரம் முடிந்ததும் ராசிக்கு நான்காமிட குரு மீண்டும் உடல்நல குறைவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை...சொத்துக்கள் வில்லங்கமும் இருக்கும்..தாயாருக்கும் உடல் நல குறைவு காணப்படும்...

இருப்பினும் சனி சாதகமாக இருப்பதால் பிரச்சனை இல்லை.ஜாதகத்தில்,சனி புத்தி,ராகு புத்தி,கேது புத்தி,செவ்வாய் புத்தி சற்று கடுமையான பாதிப்புகள் உண்டாகும்..

பரிகாரம்;
திருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வரவும்...உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள்,அன்ன தானம் செய்தல்,கணவனை இழந்த பெண்களுக்கு ஆடைகள் தானம் செய்தல் போன்றவை நல்ல பலன் தரும்...

ஒரு நாள் உறவினர்களை அழைத்து விருந்து செய்தல் மிக நல்லது...


7 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் இல்லை. அதன் பெயர் வாக்கியப் பஞ்சாங்கம்

Astrologer sathishkumar Erode சொன்னது…

ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் இல்லை. அதன் பெயர் வாக்கியப் பஞ்சாங்கம்//
அது பெயர் ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம்தான்...சேலம்...திருக்கணித பஞ்சாங்கம்...வாக்கிய பஞ்சாங்கம் நான் எடுத்துக்கொள்வதில்லை

naren சொன்னது…

என்னைப் பற்றி ஏதோ சொல்றீங்க, பொறுத்து இருந்துதான் பார்போம்.

Advocate P.R.Jayarajan சொன்னது…

Naan makara rasi. Oor Matram (Change of city) seiya virumbukiren. Nanmai tharuma?

Astrologer sathishkumar Erode சொன்னது…

ஜெயராமன் சார்..தாரளமாக இடம் மாறலாம் நன்மையே தரும்...

ANANDAN சொன்னது…

En manaivi magara raasi naan kumba raasi,singapore sellalama? planning to settle in singapore

srigurusankar சொன்னது…

naan maga rasi, puthu velai kidaithal maralama?