புலிப்பாணி ஜோதிடம் 300 பாகம் -2
நவகிரங்களின் தன்மைகள் வரிசையில் சந்திரன் பற்றி புலிப்பாணி பாடுகிறார்;
பாங்கான விடையதுவே உச்சமாகும்
வீரப்பா விரிச்சகமும் தீநீசமாகும்
விருதுபெற்ற தனுமீனம் கன்னி நட்பு
ஆரப்பா அறிவிலார்கள் மற்றாறு ராசி
அருளில்லாப் பகையதுவே யாகும் பாரு
கூரப்பா கிரகம் நின்ற நிலையை பார்த்து
குறிப்பறிந்து புலிப்பாணி கூறினேன்.
நவகிரகங்களான சந்திரனுக்கு ஆட்சி வீடு கடகமாகும்.பெருமை மிக்க ரிசப ராசி உச்ச வீடாகும்.வீரியமிக்க விருச்சிகம் நீச வீடாகும்.தனுசு ,மீனம்,கன்னி,ஆகிய மூன்றும் நட்பு வீடாகும்.மற்ற ஆறு ராசிகளும் அதாவது மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,மகரம்,கும்பம் ஆகியவைகள் பகை வீடாகும்.இதனை கிரகம் அமைந்துள்ள நிலையை பார்த்து கணக்கிட்டு புலிப்பாணியாகிய நான் கூறுகிறேன்.
செவ்வாய்;
கேளப்பா செவ்வாய் மேஷம்,தேளும்
கெணிதமுட நாட்சியது வாழும் பாரு
நாளப்பா மகரமது உச்சமாகும்
நலமில்லா நீசமது கடகமாகும்
தாளப்பா தனு மீனம் ரிஷபம் கும்பம்
தயங்குகின்ற கோதையுடன் மிதுனம் நட்பாம்
பாளப்பா கால்சிங்கம் பகையா மென்று
பண்புடனே போகரெனக் குரைத்தார் தானே.
விளக்கம்;
செவ்வாய் கிரகத்திற்கு மேசமும்,விருச்சிகமும் ஆட்சி வீடாகும்.சனி வீடான மகரம் உச்ச வீடாகும்.கடக ராசி நீச வீடாகும் தனுசு,மீனம்,ரிசபம்,ஆகிய ராசியோடு கன்னியும்,மிதுனமும் நட்பு வீடுகளாகும்.மற்ற ராசியான துலாமும்,சிம்மமும் பகை வீடாகும்.இதை பக்குவமாக போகர் எனக்கு உரைத்தார்.
-தொடரும்
2 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி சார்..
நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
இன்று என்னுடைய பதிவு
வெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9
கருத்துரையிடுக