சனி திசை நல்லதா கெட்ட்தா..?
சனி பகவானின் நிறம் கறுப்பு.அவர் ஆட்சி செய்யும் திசை மேற்கு.சனியின் சொரூபம் விஸ்ணு சொரூபம்.அவருக்கு ஏற்ற தானியம் எள்.அவருக்கு ஹோம்ம் செய்ய உபயோகப்படும் சமித்து வன்னி.அவருக்கு சாத்த வேண்டிய வஸ்திரத்தின் நிறம் நீலம்.பொருந்தும் ரத்தினம் இந்திர நீலம்.அவருக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் எள்ளு சாதம்.பூஜிக்க உகந்த மலர் கருங்குவளை.அவருக்கு பொருந்தும் உலோகம் இரும்பு.
சனிக்கு வாகனம் காக்கை.(ஆனால் வட நாட்டு பழக்கத்தில் இருக்கும் தியான சுலோகங்கள் கழுகை சனிக்கு வாகனமாக சொல்கின்றன..)நமது உடலில் தொடையில் அவர் உறைவதாக ஐதீகம்.
ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள்.இந்த சனி திசை நடக்கும்போதுசனி இருக்கும் இட்த்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும்.
சனி திசை நடக்கும்போது ஒரூவரது ஜாதகத்தில் ராசியில்,லக்கினத்தில் சனி இருந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படுவர்.வேலையில் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் உண்டாகும் வாய்ப்புண்டு.சொந்தக்கார்ர்களால் கஷ்டம் உண்டாகும்.அடுத்தடுத்து சோக சம்பவங்கள் நடக்கும்.இரண்டாவது இட்த்தில் சனி இருந்தால் பொருள் நஷ்டம் உண்டாகும் கண் தொடர்பான நோய்கள் வரக்கூடும்.
சனி திசை நடகும்போது மூன்றாவது இட்த்தில் சனி இருந்தால் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.எதிர்பாராத இட்த்தில் இருந்து பொருள் வரவு உண்டாகும்.எப்போதும் மனம் உற்சாகத்துடன் இருக்கும்.உடன் பிறந்தவர்களால் நன்மை விளையும்.
நான்காம் இட்த்தில் சனி இருந்தால் வீட்டில் எப்போதும் கலகம் ஏற்படும்.உறவினர்களுடன் எப்போதும் சண்டை வரும்.ஐந்தாவது இட்த்தில் சனி இருந்தால் வேலை செய்யும் இட்த்தில் பிரச்சனை வரும் ஒரு சிலருக்கு புத்தி பேதலிக்கும் அளவுக்கு சோதனைகள் வரும்.பெற்ற பிள்ளைகளால்தான் அதிக தொந்தரவுகள் வரும்.
ஆறாவது இட்த்தில் சனி இருந்தால் அடிக்கடி உடம்புக்கு முடியாமல் போகும்.வீட்டில் திருட்டு நேருமோ என்று எப்போதும் பயத்துடன் இருப்பார்கள்.அதே போல எதிரிகளை நினைத்தும் பயப்பட வேண்டிட்யிருக்கும்.அறுவை சிகிச்சை நடக்கலாம்,ஆனால் எதிரிகள் இவர்களை கண்டுதான் பயந்து கொண்டு இருப்பார்கள்.
எட்டாவது இடத்தில் சனி இருந்தால் உறவினர்களுக்கு கஷ்டம் வரும்.எப்போதும் நோய்வாய்ப்பட்டு உபத்திரவத்தை அனுபவிக்க வேண்டி வரும்., ஒன்பதாவது இட்த்தில் சனி இருந்தால் வெளிநாட்டில் வாழ்க்கை நட்த்தும் அமைப்பு உண்டாகும்.இந்த ராசிக்காரரின் பெற்றோர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும்.
சனி திசை நடக்கும்போது சனி பத்தாம் இட்த்தில் இருந்தால் மிக நல்லது.நல்ல வேலை,திடீர் அதிர்ஷ்டம்,உயர் பதவி,பல பேரை மேற்பார்வை செய்யும் யோகம்.
11 ல் சனி இருந்து திசை நட்த்தினால் சொத்து பெருகும்.நோய் நொடியில்லாத சுகமான வாழ்க்கை அமையும்.
12 ல் சனி இருந்தால் வீண் அலைச்சல் வீண் செலவும் மிஞ்சும்.
சனி திசையில் ராகு புத்தி,கேது புத்தி,சூரிய புத்தி,சந்திர புத்தி,செவ்வாய் புத்தி காலங்கள் மிக கொடுமையான காலங்கள்...கண்டங்கள் ,நோய்,ஏற்படும்.நெருங்கிய உறவினர் இழப்பு உண்டாகும்.
இது மாதிரியான பாதிப்பு வரும் காலங்களில் நவகிரக ஹோமம் வீட்டில் வளர்த்து சனி பகவனுக்கு சாந்தி செய்வது அவசிய
5 கருத்துகள்:
நல்ல தகவல்கள் அண்ணே!
பல தெரியாத விஷயங்கள்...
பகிர்வுக்கு நன்றி...
7ம் இடத்தில் இருந்தால்
7ம் இடத்தில் இருந்தால்
வழிக்காட்டுநலுக்கு நன்றிகள்
கருத்துரையிடுக