வெள்ளி, 30 டிசம்பர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்


மீனம் பெண் ராசி.உபயராசி.இதன் அதிபதியான குரு சுபகிரக வரிசையிலும் ஆண் கிரக வரிசையிலும் இடம் பெறுகிறார்.மனித உடலில் பாதத்தை குறிக்கும் ராசி.இங்கு சுக்கிரன் உச்சமும்,புதன் நீசமும் பெறுகிறார்கள்.இது ஒரு குட்டை ராசி.திசைகளில் வடக்கை குறிக்கிறது.இது ஒரு நீர் ராசி.இந்த ராசிக்காரர்கள் பேசுவதை விட செய்து முடிப்பதில் வல்லவர்கள்.சொல்ல மாட்டேம் செய்வோம் என்ற கொள்கை உடையவர்கள்.முன்னோர்களின் நம்பிக்கை,ஆச்சாரங்களில் பற்றுள்ளவர்கள்.அதை கடைபிடிப்பவர்கள்.மரியாதை கொடுப்பார்கள்.மரியாதை எதிர்பார்ப்பவர்கள்.தன் மான சிங்கம்.குழந்தைகள் மீது அன்பு அதிகம்.நுணுக்கமான பார்வை உடையவர்கள்.இவர்கள் அனுமானம் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.பணம் வந்து கொண்டே இருக்கும்.தன் காரியத்தில் குறியாக இருப்பார்கள்.

அதிக செலவாளிகள்.நண்பர்களால் நிறைய விரயம் உண்டு.பேச்சுத்திறமையில் இவர்களை வெல்ல ஆள் இல்லை.வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியாது.எல்லா விசயமும் அத்துபடி.மற்றவர்களை எளிதில் தன் பக்கம் திருப்பி விடுவார்கள்.அதே சமயம் மற்றவர்களிடம் அதிகம் ஏமாந்துவிடுவார்கள்.குறிப்பா அண்ணே நீதான் என்னை காப்பாத்தணும்.என இவரிடம் சரண் அடைந்தால் போதும் கசிந்து உருகிவிடுவார்.அண்டா,குண்டா அடகு வெச்சாவது பணம் கொடுதுருவார்.பலர் இவரை ஏமாற்றுவது இப்படித்தான்.கடக ராசிக்காரர் மாதிரி இவரும் பெரிய மனசுக்காரர்.

இவர் ரேஞ்சே வேற.இவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்.யாரிடமும் அடிமையாகவும் இருக்க மாட்டார்.நான் சொல்லுவேன் ஆயிரம் பேருக்கு புத்திமதி..எனக்கு என்ன நீ அட்வைஸ் பண்றதுன்னு எகிறிடுவார்.கொஞ்சம் அதிகாரமா தான் பேசுவார்.இதை பொறுத்துக்கிட்டா குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கஷ்டம் இல்ல.

அஷ்டம சனி வந்துருச்சே.சனிப் பெயர்ச்சி இப்படி சதி பண்ணிருச்சேன்னு மனசுக்குள்ள வேதனை படாதீங்க..குருவின் ராசிக்காரருக்கு சனி அதிகம் கஷ்டம் கொடுப்பதில்லை.இருப்பினும் பனம் தண்ணீர் மாதிரி விரயம் ஆகும்.கடன்படும் நேரம் இது.தொழிலில் பல மாற்றங்களை உண்டக்கும்.அது விரும்பதகாததா இருக்கும்.குரு உங்க ராசிக்கு சாதகமா இருப்பதால் பிரச்சினை இல்லை.பேச்சில் மட்டும் நிதானம் அவசியம்.ஏன்னா சனி வாக்கு ஸ்தானத்தை பார்ப்பது,உங்க பேச்சால் பகையை சம்பாதிச்சு கொடுத்துரும்..கடன் கொடுக்கவோ வாங்கவோ வேணாம்...முதலீடுகள் கவனமா செய்யுங்க..சுப செலவு ஏதாவது செய்யுங்க..இல்லைன்னா கெட்ட செலவா வந்துடும்.மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள நினைப்பவர்கள் தள்ளிப்போடாம உடனே செய்யலாம்..வீடு கட்ட,வாங்க செய்யலாம்..கல்யாணம் போன்ற சுப செலவுகள் செய்து பணத்தை விரயம் ஆக்கும் காலம்..இது.

திருச்செந்தூர் முருகனை தரிசனம் பண்ணிட்டு வாங்க..எல்லாம் முருகன் பார்த்துப்பார்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2012 happy new year!!



புதன், 28 டிசம்பர், 2011

முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?

முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?


ஜோசியம் ஜாதகத்தை பார்த்து சொல்லலாம்..முகத்தை பார்த்து சொல்ல முடியுமா.சொல்ல முடியும்.இது சைக்காலஜி அல்ல.அஸ்ட்ராலஜி.ஜாதகத்தை பார்க்கும் போது லக்னம் என்ன சாரத்தில் இருக்கோ,அதை கவனிச்சும் லக்னத்தில் என்ன கிரகம் இருக்கோ அதை வெச்சும்,லக்னத்தை பார்க்கும் கிரகத்தை வெச்சும் அவரோட குணம் ,மணம்,முக ராசி எல்லாத்தையும் சொல்லிடலாம்..இது நல்ல அனுபவ பாடமா இருந்தா ஒருத்தர் முகத்தை பார்த்ததும் எள்ளும் கொள்ளும் வெடிக்கிற முகமா எப்பவும் சோகமா துக்கமா வாட்டமா இருந்தா செவ்வாய் சாரம்,சனி சாரம் கண்டுபிடிக்கலாம்..

லக்னம் தான் உயிர்.ஒரு ஜாதகனின் தாய் தந்தைக்கு சமமானவர்.அந்த ஜாதகனுக்கு நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் இந்த இடத்துக்கு உடையவனே காரண கர்த்தா.லக்னத்தில் அமரும் கிரகத்தை பொறுத்து ஜாதகனின் குணாதிசயங்கள் அமையும் .உதாரணமாக ஆட்சி வீடில்லாத ராகுவோ,கேதுவோ லக்னத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ஜாதகன் ஒரு முரண்பட்ட மனிதனாக காட்சி யளிப்பான்.செய்யக்கூடிய செயலில் இருந்து எடுக்ககூடிய முடிவுகள் வரை புரிந்து கொள்ள முடியாத புதிர்.சுருக்கமா சொன்னா இவரை நம்பக்கூடாது!படிக்கிறது ராமாயணம்,இடிக்கிறது பெருமாள் கோயில் ரகம்.எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்வார்.யாருக்கும் தெரியாது.சிறுசா ஒரு தப்பு பண்ணுவார்.அது தினமலர் ல வரும் அளவு பிரபலம் ஆகிடும்.

அதுவே சுபகிரகம் லக்னத்தில் நின்றால் ஆயுள் கூடும்.மலர்ந்த முகம்.முக ராசிக்காரர்.பண்பு,பழகும் விதம் எல்லாமே மென்மை தான்.இவரு ரொம்ப நல்ல மனுசன் என்ற பெயரை பெற்று தரும்,...ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டாருங்கிறது வேற விசயம்.முன்ன பின்ன தெரியாதவர் இவரை பார்த்தாலும் அட..இவர பார்த்தா நல்ல மனுசனா தெரியறாரு என்பார்கள்..அந்த டயலாக் புறப்படும் இடம் முகத்தை பார்த்து மனதில் எழும் எண்ணம் தான்.அதற்கு காரணம் லக்னத்தில் இருக்கும்,பார்க்கும் கிரகம் தான்.

முகத்துல வெட்டுக்காயம் இருந்தா கிராமபகுதிகளில் திருடன் சொல்லுவாங்க..அது எப்படி../ தழும்பு,மச்சத்தோட பழைய சினிமாக்களில் ரவுடிகளை காண்பிப்பாங்க அது ஏன்..? ஏன்னா திருட்டு,சண்டை சம்பந்தமான கிரகம் செவ்வாய்.அது லக்னத்தில் இருந்தாலோ,லக்னத்தை பார்த்தாலோ,நட்சத்திர சாரம் வாங்கியிருந்தாலோ..முகத்தில் அடிபடுவான்.கீறல்,தழும்பு உண்டாகும்.திருடிட்டு ஓடுறப்ப அடிபடுறது சகஜம் அதனால கிராமத்துல அப்படி சொல்வாங்க...எப்பவும் யார்கிட்டியாவது சண்டை போட்டுகிட்டே இருக்குறவனுக்கும் லக்னத்தில் செவ்வாய் இருக்கலாம்..

ஆக,முகத்தை பார்த்ததும் அவர் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்பதை யூகம் செய்யமுடியும்.ராசிபலன் மாதிரி அதன் மூலம் அவர் குணாதிசயத்தையும் கண்டறிய முடியும்!

சனிப் பெயர்ச்சி பலன்களில் தனுசு ராசிக்கு எழுதிய பதிவு மட்டும் 55,000 ஹிட்ஸ் தாண்டியிருக்கிறது!! அனைவருக்கும் மிக்க நன்றி!

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்

2012 புத்தாண்டு பலன்கள் -கும்பம்


கும்பம்..ராசியின் அதிபதி சனி .ஆண் ராசி.ஸ்திர ராசி.மனித உடலில் கணுக்காலை குறிக்கும்.இது குட்டை ராசி.இதன் நிறம் பழுப்பு.பகலில் அதிக வலிமை உள்ள ராசி.இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ நீசமோ அடைவதில்லை.கோவில் கோபுரம் போலவும் ,கும்ப கலசம் போன்றும் தோற்றம் உடையது.

 இவர்கள் கடுமையான உழைப்பாளிகள்.நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.ஜாதகம் வலு இல்லாமல் இருந்தால் தாழ்வு மனப்பான்மை அதிகம் உண்டு.சனிக்குண்டான தடங்கல்களும் அதிகம் உண்டு.குமப்த்துக்கு பூரண கும்பம் படம் போடப்பட்டிருக்கும்.இவர்கள் மங்களகரமானவர்கள் என்பதாலோ என்னவோ பல கோவில் விசேஷங்களிலும் இவர்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும்.உற்சாகம் வந்தால் எதையும் மின்னல் வேகத்தில் செய்து முடிப்பார்கள்.பயன்கருதா தொண்டுள்ளம் கொண்டவர்கள்.

சனி இதுவரை அஷ்டம சனியாக இரண்டரை வருடம் பல கஷ்டங்களை கொடுத்து வந்தது.இனி துன்பமில்லை.தோல்வி இல்லை.தடங்கலும் இல்லை.மர்த்துவ செலவுகள் நீங்கும்.புதிய உற்சாகத்தை தொழிலில் அடைவீர்கள்.வருமானம் கூடும்.தொழில் சுறுசுறுப்படையும்.

இன்று முதல் குரு வக்ரமும் நிவர்த்தியாவதால் இனி பணப்பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.உறவினர் பகை அகலும்.குழந்தைகளால் உண்டான கவலைகள் தீரும்.பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும்.புதிய சொத்து சேர்க்கைகள்,தொழிலில் புதிய நல்ல மாற்றம் உண்டாகும்.

குரு வக்ர நிவர்த்தியானால் ராசிக்கு மூன்றில் தான் பலனை கொடுப்பார் என்றாலும் உங்கள் ராசிக்கு தனக்காரகன் வக்ர நிவர்த்தியாவது நல்லதுதான்.

2012 சனி பகவான் அருளால் சிறப்பான பலன்களை அடைவீர்கள்.

 உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை,தற்போது நடக்கும் திசை இவை பொறுத்தும் பலன்கள் மாறுபடும்


வியாழன், 22 டிசம்பர், 2011

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி



’’எங்கிட்ட இல்லாதது அப்படியென்ன அவகிட்ட இருக்கு..?’’

‘’கிளி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி வெச்சிருப்பான்’’

இதெல்லாம் அடிக்கடி நம் சமூகத்தில் புழங்கும் டயலாக்.

இதை பேசுபவர்களுக்கு இன்னும் ரெண்டு டயலாக் நினைவு படுத்துகிறேன்.

வீட்டு சாப்பாடு ருசியா இருந்தா அவன் எதுக்கு ஓட்டல் சாப்பாடு சாப்பிடுறான்..?

தலையணை மந்திரம்,முந்தானையில புருசனை முடிஞ்சி வெச்சிக்க..இப்படி கிராமபகுதிகளில் சொல்வார்கள்.

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்குங்க ஒரு பொண்ணு செக்க செவேல்னு அழகா இருந்தா மட்டும் கணவனுக்கு பிடிச்சிடாது.திகட்ட திகட்ட தாம்பத்ய சந்தோசமும் கொடுக்க தெரியணும்.நல்லா ருசியா சமைக்க தெரிஞ்ச பொண்ணுக்கு அந்த விசயமும் அத்துபடியா தெரியும்.

நல்லா கைநிறைய சம்பாதிக்க தெரிஞ்சா மட்டும் நல்ல கணவன் ஆகிட முடியாது.மனைவியை காதலிக்கவும் தெரியணும்.அப்பதான் அது நல்லதொரு குடும்பம்.அங்குதான் லட்சுமியும் தாண்டவமாடுவாள்.அய்ய இதுக்கு ஏன் லட்சுமி சாமியெல்லாம் இழுக்குறீங்க..அட..ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு காதலிக்கும் கணவன் மனைவிக்கிட்ட லட்சுமி தங்காம வேற எங்க தங்கப் போறா..? டெய்லி...லட்சுமி ஸ்தோத்திரம் லட்சம் தடவை சொல்ற அய்யர் கிட்டியா.அட போங்க சார்.

நல்ல அன்பும்,தாம்பத்யமும் பின்னி பிணையும்போது அழகான அறிவான குழந்தைகளும் அந்த பெண் பெறுவாள்.வீடு இன்னும் பல மடங்கு சுபிக்சம் அடையும்.

கணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனோ போரடிக்க கூடாது.ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு முடியக்கூடாது.அதுக்கு மேலயும் இருவரும் ஒரு வீட்டில்,குடும்பம் நடத்தணும்னா சாதரணமா..? சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா..? அதுவும் எத்தனை நாளைக்கு..?

ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடித்தால் ஜாதக கட்டத்தில் இருவருக்கும் கிரக பலம் இல்லாமல் இருந்தால் 9 பொருத்தம் இருந்தாலும் அந்த தம்பதிகள் பிரிவார்கள்.

என்ன சார் சொல்றிங்க..? 9 பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணினாலும் பிரிவாங்களா..?

ஆமாய்யா.நீ பாட்டுக்கு திருமண பொருத்தம் புத்தகம் பார்த்து 9 பொருத்தம் இருக்கு தாராளமா பண்ணலாம்னு சொல்ற ஜோசியர் கிட்ட ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவ.பொண்ணு ஜாதகத்துல ஏடாகூடமா கிரகங்கள் இருந்தாலும் பையன் ஜாதகத்துல விவகாரமா கிரகங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் முறைச்சிகிட்டு பிரிஞ்சிடுவாங்க.அப்புறம் ஜோசியக்காரன் பார்த்துதான் பண்ணினோம் இப்படி ஆயிடுச்சி.எல்லாம் ஏமாத்து வேலைன்னு உலகத்துல இருக்குற எல்லா ஜோசியக்காரனையும் கடைசி வரை பழிச்சிக்கிட்டு திரிவீங்களா..?

நான் ஒவ்வொரு ஜாதகத்துலியும் கிரகங்கள் அமைப்பு என்னென்ன செய்யும்னு வரிசையா பல பதிவுகளில் எழுதி வருகிறேன்.அந்த அமைப்புகள் பற்றி யோசிச்சு பாருங்க.கிரக அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் எப்படி இருந்தா என்னென்ன பலன் தருமோ அதை அப்படியே செய்யும்.நட்சத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் ஒரு பகுதியாகும்.

ஆண் பெண் இருவரது லக்னத்தில் இருந்து பொருத்தம் பார்க்கணும்

ஆண் பெண் இருவரது ராசியில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது சுக்ரனில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது செவ்வாயிலிருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது 7ஆம் பாவத்திலிருந்து பொருத்தம் பார்க்கணும்.

அதன் பின் தான் ஆண் பெண் இருவரது நட்சத்திரத்தில் இருந்து பார்க்கணும்.

இவ்வாறு பொருத்தத்தில் பல கணக்குகள் உள்ளன...அடுத்த பகுதியில் இன்னும் எழுதுகிறேன்..

புதன், 21 டிசம்பர், 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

(கிருத்திகை 2,3,4 ரோகிணி,மிருகசிரீடம்1,2)



12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்

அழகான, அமைதியான தோற்றம்,குறும்பான கண்கள்,சிரித்து சிரித்து பேசி காரியம் சாதிக்கும் திறமையானவர் நீங்கள்.அன்பு,பாசம்,நட்பு என மற்றவர்களுக்காக மனம் உருகுவீர்கள்...இரக்க சுபாவம் அதிகம்.பணம் சம்பாதிப்பதில் கில்லாடி.மத்தவங்க 10 ரூபாயில முடிக்கிற விசயத்தை நீங்க 100 ரூபாய் வாங்கிட்டு முடிச்சி தருவீங்க.எதை செய்தாலும் பெருசா செய்யணும் நு நினைக்கிறவர்.அதாவது ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு எனும் கொள்கை உடையவர்.அதில் வெற்றியும் அடைவீர்கள்.பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்கள்.அதிக ஆர்வம் உடையவர்கள்.

அழகான மனைவி,நல்ல வீடு அமையும்.அறிவான குழந்தைகள்,எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும் ...எதிரிகள் உங்களுக்கு கிடையாது.அப்படியிருந்தாலும் அவர்களை கண்டுகொள்ள மாட்டீர்கள்.குடும்பத்தார் மீது முக்கியமாக உங்கள் மகள் மீதும்,உங்கள் தாய் மீதும் உயிரையே வைத்து இருப்பீர்கள்.அதுதான் ரிசபம் ராசியின் முக்கிய குணம்.உடனே கருணாநிதியும் கனிமொழியும் நினைவுக்கு வராங்களா.நான் அதை நினைச்சு சொல்லலை.நிறைய பேர் இந்த ராசிக்காரங்க..என் மக தான் என் உசுரு என சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை பெரும்பாலும் இருக்காது.பெரும்பாலும் கிண்டல்,கேலி,ஜாலி என இருப்பவர்.அதனால் ரொம்ப சீரியசா எடுத்துக்க மாட்டீங்க.ஆனா கடவுள் பக்தி உண்டு.33 வயதுக்கு மேல் வேகமான முன்னேற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.பெண் வசியம் அதிகம் உண்டு.சிரித்த முகமும்,குழந்தைத்தனமா பழகும் குணமும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தொழிலை பொறுத்தவரைக்கும் கடுமையா உழைப்பீங்க..சீக்கிரமே சம்பாதிக்கணும்னு துடிப்பீங்க..எதையும் சீக்கிரம் முடிக்கிற வேகம் இருக்கும்.

சனிப்பெயர்ச்சியை பொறுத்தவரை உங்க ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருகிறார்.பொதுவாகவே சுக்கிரன் ராசிகளுக்கு சனி துன்பம் கொடுப்பதில்லை.உங்க ராசிக்கு சனி நல்லவர்தான் எப்போதும்.இப்போ உங்க ராசிக்கு ஆறாமிடம் வேறு வருகிரார்.இந்த ஸ்தானத்தில்தான் சனி பெரிய நன்மைகளை செய்யப்போகிறார்..? அப்படியென்ன செய்வார்.? சொந்த தொழில் செய்து வந்தால் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.வராத பணம் எல்லாம் வசூல் ஆகும்.முன்பு இருந்ததை விட தொழில் மேலும்பல மடங்கு சுறுசுறுப்படையும்.

குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்துவந்த பகையெல்லாம் தீரும்.அம்மா,அப்பா,சகோதர,சகோதரிகள் உங்க அன்பை,பாசத்தை புரிந்து கொள்வார்கள்.

கடன் பிரச்சினை இப்போதே ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.கடன் தொல்லைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.கொடுத்த கடனும் திரும்பி வரும்.நெடுநாள் நினைத்திருந்த பல பெரிய காரியங்களையும் இக்காலங்களில் முடிப்பீர்கள்.

சனி ராசியில் இருந்து 3,7,10 ம் பார்வையாக 8,12,3 ஆம் இடங்களை பார்ப்பதால் சுப விரயங்களும் வருமான வகையினங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இனி ஜெட் வேகத்தில் முடியும்.மந்தமாக இருந்தவர்கள் கூட இனி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.ஜாதகத்தில் லக்னத்துக்கு யோகாதிபதி,சுபர் திசை நடப்பவர்களுக்கு இன்னும் பலன் கூடும்.லக்னத்துக்கு பாவி,அசுபர் திசை நடப்பவர்களுக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் நன்றாக இருக்கும்.மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.

அரசியலை பொறுத்தவரை கருணாநிதி ஜாதகத்தில் ராசி ரிசபம்.அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற சனி துலாம் வீட்டில் இருக்கும்போது பிறந்த அவருக்கு 30 வருடம் கழித்து அதே இடத்தில் சனி வருகிறார்.சனி வக்ர காலத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.

21.12.2012 வரை வீடு கட்டும்,மனை வாங்கும் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் செய்யும் சுப விரயம் உண்டாகும்.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

சனி வக்ர காலத்தில் உங்கள் யோக நிலை குறையும்.எனவே ப்ரீதி செய்வதன் மூலம் குறைவில்லா யோகத்தையும் வெற்றியையும் அடையலாம்.உங்கள் பூஜை அறையில் கண்ணன் குழந்தையாக உள்ள உல்ள படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் .கிருஷ்ணர் உங்கள் ராசிப்படி அதிர்ஷ்ட தெய்வம்.குருவாயூர் ஒருமுறை சென்று வாருங்கள்.வருடம் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள்.கேட்ட வரம் கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சி 2011-2014 ஒரு பார்வை பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

மற்ற ராசிகளின் பலன்கள் அறிய கீழே இருக்கும் related widjet ஐ ஸ்க்ரோல் செய்யவும்.வலது புறம் மேல் பக்கத்தில் கூகுள் சர்ச் கேட்ஜெட் பார்க்கவும்!அதில் தேடினாலும் கிடைக்கும்.sani peyarchi 2011 எனக்கொடுத்தால் கிடைக்கும்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்
(மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை)


சனிப்பெயர்ச்சி இன்று 21.12.2011 காலை திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்திலும்,அனைத்து சிவாலயங்களிலும், சிறப்புற கொண்டாடப்பட்டது.சனிபகவான் தரிசனம் செய்ய,லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குளத்தில் நீராடினர்.இன்னும் ஒரு வாரம் வரை அக்குளத்திலும் கருவறையிலும் சனி கிரகத்தின் கதிர் அலைகள் நிரம்ப காணப்படும் .ஒரு வாரம் வரை வழிபடலாம்..நம் முன்னோர்கள் சனியின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்க .மிக நுணுக்கமுடன் அமைக்கப்பட்ட கோயில்தான் திருநள்ளாரு.ஒருவர் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரவேண்டும்.சனிபகவான் நீதி தவறாதவர்.சனி பகவான் அருளால் தாங்களும் தங்கள் குடும்பமும் பூரண ஆயுள்,பூரண உடல்நலம்,மனநலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன்..

சனி கன்னி வீட்டில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இதன் மூலம் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் நடக்கும் என்பதை பார்ப்போம்;

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழரை சனியாக கடந்த ஏழரை வருடங்களாக ஆட்டுவித்த சனி பகவான் இப்போது முற்றிலும் விலகிவிட்டார்.இதுவரை தொழில் தடை,விபத்து,குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு,கடன் தொல்லை,இடமாற்றம் என அனுபவித்து மன உளைச்சலில் இருந்து வந்தீர்கள்..குடும்பத்தினருடன் வாகுவாதம்,நிம்மதியின்மை என இருந்துவந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நிம்மதியை தரும்....

பொதுவாக சிம்மம் ராசிக்கு சனி அதிக பாதிப்புகளை தரக்கூடியவர்.ஆனால் சனி விலகும் போது அதிக நன்மைகளையும் அந்தந்த ஜாதகத்தின் யோக திசாபுத்தி அடிப்படையில் கொடுத்துவிடுகிறார்.ஜெயலலிதாவுக்கு ஜாதகத்தில் பல யோகங்கள் இருக்கின்றன..திசையும் வலிமையாக இருப்பதால் தமிழ்க முதல்வர் ஆனார்.உங்களுக்கு திசா புத்தி பலவீனமாக இருந்தால்..பாதிப்பு முழுமையாக விலகாது.அதே சமயம் பாதிப்புகள்,தடைகள்,தோல்விகள் போன வருடம் போல் இருக்காது...

தொழில் இனி நல்ல வளர்ச்சியை அடையும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.இதுவரை பல டாக்டர்களையும் பார்த்தும் குணமாகாத நோயும் இனி குணமாகும்..அலைச்சல்கள் குறையும்.தொட்ட காரியங்கள் இனி துலங்கும்.உறவினர்களால் ஏற்பட்ட கசப்பனுபவங்கள் மாறும்.அவர்களே உங்களை நாடி வருவர்.மனைவி,கணவன் உறவு சீராகும்..உங்கள் எதிரிகள் அகலுவர்.இதுவரை உங்கள் கண்ணை மறைத்து வந்த ,உங்கள் முன்னேற்றத்துக்குஉங்கள் பலவீனங்களை நீங்கள் அறீவீர்கள்.களைவீர்கள்.

சனிபார்வை 5,9,12 ஆம் இடங்களில் விழுவதால் பிள்ளைகளாலும்,பெற்றோர்களாலும் ஆதாயம் கூடி வரும்..குடும்பத்திற்கு தேவையான பொருட்களோ,மனை,வீடு கட்டும்,வாங்கும் யோகமோ கூடிவரும்..திருமண முயற்சிகள் கைகூடும்.

சனி வக்ரம்;27.3.2012 முதல் 11.9.2012 வரை சனி வக்ரம் பெற்று மீண்டும் கன்னிக்கு பின்னோக்கி வருகிறார் சனி.இக்காலத்தில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

யாருக்கும் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினம்.தொழிலில் கவனம் தேவை.பேச்சால் பல பிரச்சினைகள் உருவாகும் காலம்.கவனம்..பண நஷ்டம் உண்டாகும் காலம் இது.எச்சரிக்கை.இந்த 6 மாதமும் கவனமுடன் செயல்படுங்கள்.

சனி உங்கள் ராசியை விட்டு அகன்று விட்டாலும் இனி வரும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலங்கள்;அதாவது மாறிய சனி உங்கள் ராசியை பார்த்து மீண்டும் முறைக்கும் காலங்கள்;

15.2.2012 முதல் 2.8.2012 வரை
26.3.2013 முதல் 15.8.2013 வரை
10.4.2014 முதல் 28.8.2014 வரை..

இக்காலம் உங்கள் ராசிப்படி சிறப்பான காலம் அல்ல.எனவே கவனம் தேவை.

சனியின் கிரக சஞ்சாரம்; (பொதுவானது) நந்தன வருடம் ஆரம்பம் முதல் வைகாசி 5 வரை துலாத்திலும்,பின்னர் ஆடி 17 வரை வக்ர சஞ்சாரமாக கன்னியிலும் பின்னர் வருடம் முடிய துலாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்...இக்காலகட்டத்தில் கலைகள் அபிவிருத்தியாகும்.தொழில் வியாபாரங்கள் மேன்மை அடையும்.அரசு வழி ஆதரவுகள் அதிகம் மக்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்;உங்க ராசிக்கு முருகன் வழிபாடும்,ஆஞ்சநேயர் வழிபாடும் மிக உன்னத பலன்களை தரும்.ஏழரை சனி முடிஞ்சிட்டதால சனி பகவானை கண்டுக்க கூடாதுன்னு இல்ல.போய் ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம்..திருநள்ளாறு செம கூட்டமா இருக்கும்.பெயர்ச்சியாகும் அன்னிக்கே போகணும்னு இல்ல.இன்னொரு நாள் கூட போகலாம்..திருக்கொள்ளிக்காடு திருவாரூர் பக்கத்துல இருக்கு.அங்க போயிட்டு வருவது ரொம்ப பெஸ்ட்.இது பொங்கு சனி ஆலயம்.அதாவது சனி இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு வழிபாடு செய்ய அருமையான ஆலயம்.பொங்கு சனி உங்க திறமைகளை வெளிக்கொணரும்.இதை பத்தி எழுதறேன்.

ஜெயலலிதா சிம்மம் ராசிக்கு அவருக்கு கடந்த 5 வருசமா ஆட்சியை இழந்து சனியால் பல சோதனைகளை அனுபவித்தார்.உடல்நலக்குறைவும் அடிக்கடி உண்டானது.வழக்குகளை சந்தித்தார்.இருப்பினும் சனி முடியும்போது அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கை கொடுத்தது.அவருடைய கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றது.இருப்பினும் சனி இன்னும் முடியலை என்பதுக்கு ஏற்ப..சனியின் முக்கிய வேலையான கோர்ட் படியேற செய்வதையும் செய்து விட்டது.காவல்நிலையமோ,கோர்ட்டோ ஏதேனும் ஒரு சூழ்நிலையில் சிம்ம ராசிக்காரர்கள் பலர் அனுபவித்து இருக்கிறார்கள்.அதுபோல ஜெயலலிதாவும் பெங்களூர் கோர்ட் அதுவும் சிறை வளாகம்...பார்த்தீங்களா.சனி தன் பணியை செவ்வனே முடிக்காம போக மாட்டார்.தன்னை சுர்றி இருந்த துரோகிகளை இனம் கண்டு இப்போதுதான் ஜெயலலிதா வெளியேற்றியிருக்கிறார்.ஏன் இத்தனை நாளா தெரியவில்லையா என்று கேட்டால்,சனி போகும்போதுதான் எதிரிகளை அழிக்க ஆயுதம் கொடுப்பார்.எதிரி நம்மிடம் வசமாக சிக்குவதும் அப்போதுதான்.

ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டோம் பாவம்னு பரிதாபப்பட்டு நன்மைகளையும் செய்துவிடுகிறார்.நன்மையே செய்ய வேணாம்.என்னை விட்டா போதும்னு சொல்றீங்களா.அதுவும் சரிதான்.

புதன், 14 டிசம்பர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்

                                                   குச்சனூர் சனிபகவான்

சனி பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் 15.11.2011 அன்று முடிந்துவிட்டாலும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வரும் 21.12.2011 அன்று காலை சனீஸ்வரர் ஆலயமான திருநள்ளாறில் விசேசமாக கொண்டாடப்படுகிறது.சனிப்பெயர்ச்சிக்கு முன்பே சொல்லியிருந்தேன்...சனி துலாம் வீட்டில் உச்சம் ஆகிறார்.பல புதுபுது திருப்பங்களை அரசியலிலும் ,பொருளாதாரத்திலும்,தொழில் துறையிலும் ஏற்படுத்துவார்.சனி நீதிக்காரகன்.அவன் வலுப்பெற்றால் உச்சநீதிமன்றத்தின் கை ஓங்கி இருக்கும்.மத்திய மாநில அரசுகளை நம்பாமல்,..மக்களும் அரசியல் தலைவர்களும் முன்பைவிட அதிகமாகவே நீதிமன்றங்களை நம்பியிருப்பர் என்றேன்.அதன்படி இன்று முல்லைப்பெரியார் விவகாரத்தில் மத்திய அரசு மிக மிக அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறது...

இரு மாநிலத்துக்கும் பிரச்சினை என்றால் நடுநிலையோடு நடந்துகொள்ளாமல் ஆபத்தில் இருக்கும் அணைக்கு பாதுகாப்பு செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மிக விவேகத்துடன், அரசியல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார்.ஆரம்பம் முதல் முல்லப்பெரியார் அணைக்காக போராடி வரும் வைகோவே தமிழக அரசை பாராட்டி இருக்கிறார்.

ம்..சனி வலுப்பெறும்போது சனி ஆதிக்கத்தில் கறுப்புத் துண்டை அணிந்திருக்கும் வைகோவுக்கு முக்கியத்துவம் கூடுமோ..நடந்தாலும் ஆச்சர்யமில்லை.சனி சார்ந்த இரும்பு சம்பந்தமான ,வாகனம்,இயந்திரம்,ஆயில் சார்ந்த பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.

அஷ்டம சனி என்ன செய்யும்..? என்ற கேள்விக்கு ஏழரை சனியில் எவ்வளவு கஷ்டம் தருமோ அந்த கஷ்டத்தை இரண்டரை வருடத்திலே சனி கொடுத்துவிடுவார் என்பதுதான் பொதுவான பதிலாக இருக்கிறது.கும்ப ராசிக்காரர்களுக்கு இப்போது அஷ்டம சனி முடிந்து மீனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியிருக்கிறது.குமப ராசிக்காரர்கள் அளவுக்கு மீனம் ராசிக்காரர்கள் கஷ்டப்படுவர் என சொல்ல முடியாது.கும்பம் ராசியினர் பொதுவாகவே தாழ்வு மனப்பான்மையினர்.வாழ்வில் அதிக போராட்டம் அனுபவித்து வரக்கூடியவர்கள். ,மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழக்கூடியவர்கள்..அடிக்கடி தடங்கல்களை அனுபவிக்ககூடியவர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு அஷ்டம சனி வந்தால் கஷ்டம் அதிகமாகவே இருக்கும்.அதை அனுபவித்து,ஒருவழியாகி,முடிந்துவிட்டது.இனி கவலைப்படாதீர்கள்.

மீனம் ராசியினர் இதற்கு நேர் மாறானவர்கள்.குருவின் ராசிக்கு சொந்தக்காரர்.குருவை போல பலருக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்..இவர்களால் பலன் அடைந்தவர்கள் ஏராளம்.ஆனா இவர்களுக்கு அவர்கள் உதவி செய்வார்களா என்றால் சந்தேகம்தான்...குருவின் ராசி என்பதால் பண வருவாய்க்கு குறைவிருக்காது.பணம் நஷ்டம் வந்தாலும் சமாளித்துவிடுவர்.தொழில் பாதிப்போ மந்தமோ வந்தாலும்...தன் சாதூர்யத்தால் சமாளிப்பர்.புலம்புவார்கள்.ஆனால் இவங்க புலம்பலை யாரும் மதிக்க மாட்டார்கள்..உங்களுக்கு என்ன சார்...எங்கியாவது ஷேர் மார்க்கெட்ல லம்பா போட்டு வெச்சிருப்பீங்க,.ன்னு சொல்லிடுவாங்க...

சிக்கன்,மட்டன் சாப்பிடுறவங்க இந்த ராசியில கம்மி.காரணம் இவங்க..பல பேருக்கு சிவபக்தி அதிகம்..கந்த சஷ்டி கவசம் உச்சரிச்சு முருகன் மேல ரொம்ப ஈடுபாட்டோட இருப்பவர்களும் அதிகம்.தெய்வபலம் இருப்பதால் அஷ்டம சனி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனமாதிரிதான்..

மீனம் ராசிக்காரங்க தொழில் விசயத்துல பணம் விசயத்துல கெட்டி.ஆனாலும் அஷ்டம சனியில ஏமாற போறாங்க..யாரால நண்பர்களால.உறவினர்களால...குழந்தைகளால்...மருத்துவ செலவும் கொஞ்சம் ஏற்படும்.அடுத்தவனுக்கு செலவு பண்ணாம தன் பணத்தை கெட்டியா வெச்சிருக்குறவங்க..டாகடருக்கு கொடுத்தே ஆகணும்.உங்க ராசி இயல்பே குரு வின் குணாதிசயம்தான்..குரு எப்படியிருக்கணும்..?அன்னதானம் செய்தல்,கோயில் கட்ட உதவி செய்தல்,.ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்தல்,ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி இதுதான்.இதையெல்லாம் இதுவரை நீங்க செய்யலைன்னா இப்போ செய்யுங்க...

அஷ்டம சனி என்பது ராசிக்கு எட்டில் சனி வருவது.கிராமத்தில் சொல்வாங்க...எட்டுல சனி புட்டுல அடி..(மர்ம உறுப்பு பாதிக்கும்).எனவே வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம்.இரவில் வாகனத்தில் செல்லும்போது இன்னும் கவனம்.அதுவும் மது அருந்திட்டு போனா .....மறுபடி இந்த பேராவின் முதல்வரியை படிக்கவும்.

எட்டில் சனி வரும்போது ஏழாம் பார்வையாக சனி பார்ப்பது..வாக்கு ஸ்தானத்தை.அதாவது எப்போதும் மத்தவங்களுக்கு புத்திமதி சொல்வதுன்னா உங்களுக்கு சர்க்கரை கட்டி.இன்னும் இரண்டு வருசத்துக்கு இந்த சேவையை நீங்க குறைச்சுக்கணும்.நீங்க ஒண்ணு சொல்ல அது ராங்கா எதிராளிக்கு போய் சேர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வெச்சிக்கிட்டா மாதிரியாகிடும்...பேச்சில் நிதானம் இழத்தல் அஷ்டம சனியின் முக்கிய பாதிப்பு..பேச்சை குறைச்சிக்குங்க சார்..வீண் விவாதத்தில் வாயை கொடுத்து மாட்டிக்க வேணாம்..மனைவியிடம்..வம்பிழுப்பது பெரிய துன்பத்தில் முடியும்..அனுசரிச்சு போய்விடவும்...

குச்சனூர் சனிபகவானை வழிபட்டுட்டு வாங்க..திருச்செந்தூர் வருசம் ஒரு தடவை போயிட்டு வாங்க...

இவ்ளோதான்...அஷ்டம சனி...மலைப்பா இருக்கா..எப்பவும் போல இருங்க..நான் சொன்னது மட்டும் நினைவு வெச்சுக்குங்க..அஷ்டம சனி வந்திருச்சி இனி அவோதான்னு நீங்க..வேலை செய்யாம படுத்துக்கிட்டா அதுக்கு சனிபகவான் பொறுப்பல்ல...!!

வெள்ளி, 9 டிசம்பர், 2011

சந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..?


சந்திரகிரகணம் நாளை 10.12.2011 அன்று மாலை 6.15 அளவில் தொடங்கி இரவு 9;48க்கு முடிகிறது.

அன்று இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வருவதோ...சந்திரனை பார்ப்பதோ கூடாது.தண்ணீர் முதல் அனைத்து உணவு பொருட்களிலும் அருகம்புல் போட்டு வைத்து பயன்படுத்தவும்.கர்ப்பிணிகள் கிரகனம் தொடங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ சாப்பிடுவதுதான் நல்லது.

கிரகணம் நேரத்தில் பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்திருக்கும்.அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் உடல்பலமின்றியோ அல்லது மனபலம் இன்றியோ இருக்கும்.தாயாருக்கும் இப்படி இருக்கும் என்பதை அனுபவ புர்வமாக அறிந்திருக்கிரேன்.எனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளவர்கள் முடிந்தவரை இந்த நேரத்தை தவிர்க்கவும்..!

புதன், 7 டிசம்பர், 2011

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014

சனிப் பெயர்ச்சி திருக்கணிதம் அடிப்படையில் 15.11.2011 அன்று நடைபெற்றாலும் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது.அதாவது வரும் 21.12.2011 அன்று தமிழ்கத்தின் அனைத்து சனி பகவான் ஆலயத்திலும் வழிபாடுகள்,ஹோம பூஜைகள் நடத்த இருக்கிறார்கள்;

சனிப்ரீதி ஹோம பூஜையில் கலந்துகொள்ளலாமா என கேட்டால் தாராளமாக கலந்து கொள்ளலாம்.சனீஸ்வரர் அம்சமான பொருட்களால் செய்யப்படும் ஹோமங்களால் நம் தோசங்கள் சிறிதளவாவது குறையும் என்றால் கலந்து கொள்வது தவறில்லை.

சனீஸ்வரர் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை.சனி யால் கெட்டவர்களை விட வாழ்ந்தவர்கள் அதிகம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.சுக்கிர திசையால் பல யோகங்களையும்,அதிர்ஷ்டத்தையும் பெற்று மிக சிறிய வயதில் சேலத்தில் பிரபல தொழில் அதிபர் ஆகிவிட்ட எனது நெடுநாள் வாடிக்கையாளர் அவர்.அவருக்கு நிறைய அதிர்ஷ்டத்தை கொடுத்தது அவர் ஜாதகப்படி நடக்கும் சுக்கிர திசைதான்.அது இன்னும் பல வருடங்களுக்கு அவருக்கு அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது.செல்வம்,புகழ் தர இருக்கிறது.ஆனால் அவர் ராசி விருச்சிகம் என்பதால் அவரை சுற்றி இருப்பவர்கள் இனி அவ்வளவுதான் என்ற ரீதியில் பயமுறுத்த குழம்பி போய்விட்டார்.என்னிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.அவருக்கு நான் சொல்வது இதுதான்.அவர் ஜாதகத்தில் லக்கினத்துக்கு யோகமான சுக்கிர திசை மிக வலிமையுடன் சிறப்பாக திசை நடத்தி வருகிறது.எனவே எந்த பாதிப்பும் தொழில் ரீதியாக இல்லை.உங்கள் அத்தனை உழைப்பும் வீணாகிவிடாது.தொழில் ரீதியாக இன்னும் கடுமையாக உழைத்தும் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்வீர்கள்.உடல் ஆரோக்யம் கொஞ்சம் பாதிக்கலாம்..குடும்ப ரீதியாக சில சிக்கல்கள்,பண விரயம் ஆகலாம்..அதற்காக முற்றிலும் நீங்கள் அனைத்திலும் நஷ்டம் ஆகி விடுவீர்கள் என அர்த்தம் இல்லை என சொன்னேன்.

எனவே ஏழரை சனியாக இருந்தாலும்,அஷ்டம சனியாக இருந்தாலும் சனிப் பெயர்ச்சி ஆகிவிட்டது.வழக்கம் போல நீங்கள் செயல்படுங்கள்.வீணாக நீங்களும் பயந்து பிறரையும் பயமுறுத்த வேண்டாம்...எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை.

பலவீனமான திசை அதாவது 6,8,12 க்குடைய்வன் திசை சனி திசை,சந்திர,சூரிய,செவ்வாய் திசை,ராகு,கேது திசை நடப்பவர்கள் மாத்திரம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தமிழ்க முதல்வர் ஜெயலலிதா பல கோயில்கள் புனரமைக்க பல கோடி ஒதுக்கியிருப்பதும்,ஊனமுற்றோருக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பும்,அணையில் நீர் திறப்பும் என சனிப்பெயர்ச்சிக்குண்டான பரிகாரங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறார்.அவர் ராசிக்கு அவர் செய்து கொள்கிறார்.

கொட நாட்டில் சிறப்பு சனிப்பெயர்ச்சி யாகம் மிக சிறப்பாக 21.12.2011 அன்று நடக்கப்போகிறதாம்....இதெற்கெல்லாம் காரணம் அவரது தெளிவான ஜோதிட நம்பிக்கை.

அன்னதானம்,உடை தானம்,பெரியோர்களை மதித்தல் ,என சம்பாதிப்பதில் ஓரளவு தான தர்மம் செய்து வாருங்கள் அது மட்டுமே உங்களை காக்கும்.!!

வெள்ளி, 2 டிசம்பர், 2011

குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா?

ஆபரேசன் மூலம் குழந்தை பிறந்தால் அது முறையான பிறப்பு தானா..ஜாதகம் கணித்து பார்த்தால் அது சரியான பலன் தருமா என பலர் சந்தேகம் கேட்கின்றனர்.

மழைப் பேறும் பிள்ளைப் பேறும் அந்த மகேசனுக்கு கூடத் தெரியாது’’என்பது பழமொழி.மழை எப்போது பெய்யும்..? குழந்தை எப்போது பிறக்கும்..? என்பதை முன்கூட்டி அந்த மகேசனால் கூட சொல்ல முடியாதாம்.

இப்போதோ ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே அது பிறக்க வேண்டிய நேரத்தை ஜோதிடர்கள் மூலம் முன்கூட்டியே கணித்து ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து விடுகின்றனர்.இப்படி பிறக்கின்ற குழந்தைகளுக்கான ஜாதக பலன்கள் சரியாக வராது என்றும் தாயின் யோனி வழியாக முறைப்படி பிறக்கும் குழந்தைக்குத் தான் ஜாதக பலன்கள் சரியாக இருக்கும் என்பது சிலர் கருத்து.

பழைய புராணங்களையும் அரச கதைகளையும் படிக்கின்ற போது வெவ்வேறு வகைகளில் குழந்தைகள் பிறந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை பிறக்க வைப்பதற்காக அக்காலத்தில் கூட வெவ்வேறு வழிவகைகள் பின்பற்றி இருக்கிறார்கள்.

சோழ மன்னனாகிய சும தேவனின் மனைவி கமலவதிக்கு பிரசவ வேதனை எடுத்த போது ஜோதிடர்கள்,இப்பிள்ளை இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து பிறக்குமானால் மூவுலகங்களையும் அரசு புரியும். என்றனர்.அதைக் கேட்டவுடன் கமலவதி,அதுவரை என் கால்களை கட்டி தலைகீழாகத் தூக்கி நிறுவுங்கள்’’ என்றாள்.மன்னன் ஆணைக்கினங்க காவலர்களும் அவ்வாறே மேலே தூக்கினர்.ஜோதிடர்கள் குறித்த கால எல்லை நெருங்கியதும்,உடனே கட்டவிழ்த்து விட்டனர்.உடனே அழகிய ஆண் குழந்தை சதய நட்சத்திரத்தில் பிறந்தது.அக்குழந்தை காலம் தாழ்த்தி பிறந்தமையால் கண்களில் ரத்தம் கட்டி அதன் கண்கள் சிவப்பாக இருந்தன.

அதைக் கண்ட கமலவதி,என் ’கோ’ செங்கண்ணனா..? என்று கூவியவாறு உடனே இறந்துவிட்டாள்.இந்த செங்கண் சோழனே பிறகாலத்தில் சோழ நாட்டில் கோவில்கள் பலவற்றைக் கட்டினான்.திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள புகழ் பெர்ற திருவானைக்காவில் சிவபெருமானுக்கு மெய்ஞானத்தின் சார்புள்ள வெண்ணாவல் மரத்தினுடனே அரிய திருக்கோவிலை அமைத்தான்.எத்திசைகளிலும் தமது புகழ் விளங்கச் செங்கோல் ஆணை செலுத்திய செங்கன் சோழன் திருத் தில்லை கூத்தரது திருவடி நிழலை அடைந்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.’’கோச் செங்கட் சோழ் நாயனார்’’என்றழைக்கப்படும் இவரது திரு நட்சத்திரமானது மாசி மாதம் சத்ய நட்சத்திரத்தில் வரக் காணலாம்.

இவரைப் போலவே கரிகால் சோழனும் பிறந்தான்.கரிகால் சோழன் பிறக்க வேண்டிய நேரமானது ஜோதிடர்களால் முன்னரே குறிக்கப்பட்டு,அவன் தாயனவள் அதுவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டாள்.ஜோதிடர்கள் குறித்த நேரப்படி பிறந்த கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.கல்லணையை கட்டி அழியாப் புகழ் பெற்றான்.குழந்தையை சுப நேரத்தில் பிறக்க வைப்பதற்காக முற்காலத்தில் மூர்க்கத்தனமான முறை பின்பற்றப்பட்டது.இப்போது மருத்துவத் துறை வளர்ச்சி பெற்று விட்ட காரணத்தால் ஆபரேசன் மூலம் குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் வெளியே எடுத்து தாயையும்,குழந்தையையும் காப்பாற்றிவிடுகின்றனர்.

ஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பது உறுதி என்றால் ஜோதிடரையும் ஆலோசனை செய்து,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல லக்னம் வரும் நாளில் ,(மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குள்)குழந்தை பிறப்பை அமைத்துக் கொள்வது தவறில்லை.

புதன், 30 நவம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்


பாரப்பா யின்னமொரு புதுமை கேளு
பால்மதிக்கு நாலோனும் சுங்கன் கூடில் 
கூரப்பா யெத்தடத்தில் கூடிட்டாலும்
கொற்றவனே ஜென்மனுமோ மந்திரவாதி
வீரப்பா வராகி துர்க்கை தேவி அம்மன்
விதமான பூசை தனை மண்ணோர் போற்ற
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
செப்பினேன் புலிப்பாணி செயலைதானே.

விளக்கம்;

புதுமையான ஜாதகரின் பலனை கூறுகிறேன்.கேட்பாயாக.சந்திரன் இருக்கும் வீட்டிற்கு நாலாவது வீட்டானுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் அல்லது எட்டாம் இடத்தில் கூடியிருந்தாலும் இந்த ஜாதகர் மந்திரவதியாவார்.இவர் வராகி,துர்க்கா தேவி,காளிகா தேவி போன்றோர்களுக்கு பூசைகள் செய்வார்.இதனால் ஊரில் உள்ளோர்கள் போற்றுவார்கள்.இதனை போகருடைய அருளினாலே புலிப்பாணி கூறியுள்ளேன்!!


குறிப்பு;மந்திரவாதிகள்,மாயம்,மந்திரம் எல்லாம் ஏமாற்று வேலை என படித்த இளைஞர்களும்,கைநிறைய சம்பாதித்து செட்டில் ஆனவர்களும் சொல்கின்றனர்.என்னை போல நீயும் அறிவாளியா ! இரு என்பதுதான் அவர்கள் வாதம்.நான் என்ன சொல்றேன்னா இதை முழுசா ஆய்வு செய்யாம எதையும் நாம முடிவு பண்ண முடியாது.உளறி கொட்டவும் கூடாது.என் சின்ன வயதில் எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு மந்திரவாதி குடியிருந்ததாகவும்,அவர் ஒரு நாள் நான் மந்திரத்தால் எதுவும் செய்ய முடியும் என சொல்லி,எனது சைக்கிளை சில வினாடிகள் மறைய வைத்து பின்பு தோன்ற செய்தாராம்.இதன் பின் அவரைக் கண்டு பயந்து போய் அருகில் உள்ள குடியிருப்போர்கள் ஒன்று சேர்ந்து அவரை வீடு காலி செய்து போக சொல்லிவிட்டதாக சொல்வார்கள்.

இன்று ப்ளாக் மேஜி செய்பவர்கள் விமானம்,தாஜ்மஹாலை மறைய செய்பவர்கள் எல்லாம் கேள்விபடுகிறோம்.அவர்களை பிரமிப்பாக மீடியாக்கள் புகழவும் செய்கின்றன.ஆனால் காளி துணையால் பல சித்துக்களை செய்யும் மந்திரவாதிகள் தமிழ்கத்தில் பல கிராமங்களிலும்,காண முடியும்.மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என பயந்து தன் சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கும் மந்திரவாதிகள் நிறைய உண்டு.அவர்கள் சக்தி வாய்ந்த கோயில்களில் இன்றும் நடு சாம பூஜை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

மந்திரவாதி என்றால் இன்று பணத்துக்காக குழந்தைகளை நரபலி கொடுக்கும் போலிகளும்,பெண்களை நிர்வாணமாக்கி பூசை செய்யும் காமுகர்களும்தான் இதன் மகத்துவத்தை அழிக்கின்றனர்.இந்த கொடூரம் உண்மையான மாந்திரீகத்தில் இல்லை.துன்பத்தில் வாடும் மக்களை காப்பதே மாந்த்ரீகம்

செவ்வாய், 29 நவம்பர், 2011

ஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்

ஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம்,ஆன்மீகம்,எண் கணிதம் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.அரசியல் ரீதியாக கட்சி ரீதியாக ஒவ்வொரு செயல்பாட்டையும்,  ஜோதிட கணித அடிப்படையில் கணக்கிட்டுத் தான் அமைத்துக் கொள்வார்.இது அனைவரும் அறிந்த உண்மைதான்.அவர் நியூமராலஜி நம்பிக்கையும் எப்போதும் கொண்டிருக்கிறார் என்பதையும் தினமலர் அவ்வப்போது சுட்டிக் காட்டும்.

எண்கணிதம் பற்றி விஜய் டிவியில் நீயா நானா வில் கிண்டல் அடித்து ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதில் பலர் மன பலவீனர்களாக நியூமராலஜி நம்பிக்கையாளர்களை கிண்டல் செய்தனர்.அப்படி பார்த்தால் தமிழ்க முதல்வர் ஜெயலலிதாவின் நியூமராலஜி நம்பிக்கையை என்னவென்று சொல்வது..?அவர் எந்த நம்பிக்கையில் அதை செய்கிறார்..? கருணாநிதி குடும்பத்தார் திருப்பதி செல்வதும்,சாமியார்களை சந்திப்பதும்,பரிகாரம் செய்வதும்,கனிமொழி விடுதலை ஆக வசந்தி ஸ்டான்லி எனும் தி.மு.க எம்.பி மொட்டை அடித்து கொண்டதும் எதற்காக..? விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நியூமராலஜி நிகழ்ச்சி மூலம் எண்கணித ஜோதிடம் இன்னும் பிரபலமடைகிறது.இதை பற்றி அறியாதவர்களும் அறிந்து கொண்டனர்.என்னை போன்ற நியூமரலஜிஸ்ட் களுக்கு இதில் சந்தோசமே.அதில் நியூமராலஜிக்கு ஆதரவாக வாதிட்டவர்களுக்கு எனது நன்றி.

நியூமராலஜி,ஜோதிடம்,கடவுள் எல்லாம் உண்மையே.நம்பிக்கை உள்ளோருக்கு நன்மை நடந்து கொண்டே இருக்கிறது.கடவுள் மறுப்பாளர்களில் பெரியாரை பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வூட்டிய தலைவர் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அவர் கடவுள் மறுப்பு கொள்கையால் தமிழ்கத்திலும் இந்தியாவிலும் கடவுள் வழிபாட்டை நிறுத்திவிட்டார்களா..? மாறாக பல ஆயிரம் மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பெரியாருக்கு பின் கடவுள் மறுப்பாளர்கள் யாரும் பிரபல முடியவில்லை என்பது வேறு விசயம்.

 15.11.2011 சனி பெயர்ச்சிக்கு பின் பெங்களூர் சென்று முழுமையாக வழக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.காரணம் அவரது ராசியான சிம்மத்திற்கு ஏழரை சனி முழுவதுமாக விலகி இருந்தது.சனி பெயர்ச்சிக்கு பின் தான் பஸ் கட்டணத்தை பால் விலை உயர்வை அறிவித்தார்.காரணம் ஏழரை சனி முடிந்தால் தனக்கு .எதிர்ப்புகள் கடுமையாக இருக்காது என்பதற்காக.

ஜெயலலிதா நினைத்தால் கருணாநிதி போல கட்டணத்தை உயர்த்தாமல் காலம் தள்ள முடியும்.ஆனால் பல முறை டீசல் விலை உயர்வுக்கு பின் எல்லா விலை வாசியும் பொருளாதாரத்துக்கு தகுந்தாற்போல உயர்ந்திருக்கும்போது பஸ் கட்டணம் உயரவில்லை எனில் அது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல.வரும் 1 ஆம் தேதி முதல் பீர் விலை பிராந்தி விலை எல்லாம் 100 ரூபாயாம்.இதுக்கு எதிர்ப்பே இருக்காதே.தமிழக அரசின் நிதி நிலை உயர்ந்தால்தான் இந்த அரசு மக்கள் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும்.

ஜெயலலிதா ராசி எண் 7;

கடந்த 91-96 ஆம் ஆண்டுகளில் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின் 9 ஆம் எண் அவரது ராசி எண்ணாக இருந்தது.தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 160 பேர் இடம்பெற்றனர்.ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற தேதி 16.முதல்வரான பின்,7 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அமைச்சர்வையில் இடம் பெற்றவ்ர்கள் 34 பேர்.இவ்வளவு ஏன் நேற்று அ.தி.மு.க வில் பா.ம.க,தி.மு.க,தே.மு.தி.க வினர் பலர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.மொத்தம் எத்தனை பேர் தெரியுமா.12,130 கூட்டு எண் 7.எம்.ஜி.ஆர் வாழ்வில் பல திருப்பங்களை தந்தது இந்த 7 ஆம் எண் தான்.அதனால் ஜெயலலிதா வும் அதை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கிறேன்.ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் மகம்.அதன் அதிபதி கேது.7 ஆம் எண்ணின் அதிபதி கேது.அதனாலும் இவர் 7 ஆம் எண்ணை பயன்படுத்தலாம்...ராசியான நிறம் பச்சை பயன்படுத்தி வந்தவர் இப்போது மெரூன் கலரும் பயன்படுத்துகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கென சென்னையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இப்பஸ்களின் துவக்க விழா இன்று நடந்தது. விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பஸ்களை துவக்கி வைத்தார். இப்பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென 7 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும், ஹைட்ராலிக் முறையில் அவர்கள் பஸ்சினுள் செல்ல சிறப்பு வழியும் அமைக்கப்பட்டுள்ளது.


ஊனமுற்றோருக்கு சிறப்பு பஸ் அறிவிப்பை பார்த்தால் இது சனி பகவானுக்கான பரிகாரம் தான்.என்பது புரியும்.மாற்று திறனாளிகளுக்கு நல்லது செய்யும் முதல்வருக்கு நன்றி.


எம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த 7ஆம் எண் பற்றி படிக்க;


திங்கள், 28 நவம்பர், 2011

தமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்

தமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்

இன்று பூராடம் நட்சத்திரம்.சுக்கிர நட்சத்திரத்துல் வேறு என்ன எழுதுவது.பெண்கள் பத்தி, காதல் பத்தி அதுல ஜோதிடத்தை கலந்து எழுதறேன்.



பருவ வயசுல இருக்குற தமிழ் பொண்ணுங்க மட்டுமில்ல உலகத்துல இருக்குற எந்த டீன் ஏஜ் பொண்ணும் தனக்கு புடிச்ச அழகான வாலிபன் தனக்கு கிடைப்பானா என ஏங்கும்போது, அவனுக்கு பல விதத்துலியும் தூது விட்டு பார்ப்பா.அப்புறம் சாமி கிட்ட வேண்டுதல் வைப்பா.அதுக்கப்புறம் தன் தோழி கிட்ட சொல்லி புலம்புவா.அப்புறம் தன் ராசியையும்,காதலன் ராசியையும் சொல்லி ஜொசியம் பார்க்குறது.ராசி தெரியலைன்னா இரண்டு பெயரையும் சொல்லி பேர் பொருத்தம் இருக்கா னு கேட்குறது.

அப்புறம் கைரேகை,குறி சொல்லும் கிழவி என தன் காதல் நோய்க்கு மருந்து தேடி கொண்டிருப்பாள்.தமிழ் பொண்ணுங்க ரொம்ப விவரம்.தன் தோழியோடு போய் தன் ஜாதகத்தை காட்டி எனக்கு காதல் திருமணம் வாய்ப்பு இருக்கா..ன்னு கேட்பாங்க..பல பெண்கள் தன் தோழி முகவரி அல்லது ஹாஸ்டல் முகவரியில் இருந்து ஜோசியருக்கு கடிதம் எழுதுவாங்க.தபால் மூலமா ஜாதக பலன் கேட்பாங்க.எனக்கு இது போல தபால்,ஈமெயில் நிறைய வந்துகிட்டிருக்கு.


காதல் பருவ வயசுல வருவதுதான்.இது எதிர்பாலினரின் அழகான தோற்றமோ அல்லது கவர்ச்சியான பேச்சிலோ மனதை பறிகொடுத்து பின்பு கண்ணும் கண்ணும் காதல் விளையாட்டு விளையாண்டபின்,தன் உடலில் இருக்கும் பருவ வயசு ஆசை சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்ததும் அடந்த போதைக்கு அடிமையாகி விடுவர்.காதல் என்பது வளர்ச்சியடையாத காமத்தின் பெயர்.காதல் முற்றினா காமம்.

அவளை பார்க்காம இருக்க முடியலை..பார்த்தா பேசாம இருக்க முடியல...பேசினா தொடாம இருக்க முடியலை.தொட்டு பேசினா சில்மிசம் பண்ணாம இருக்க முடியலை..இப்படியே மேலே மேலே போகும்.ஆசை அடங்காது.கண்ல ஆரம்பிச்சு எங்கெங்கோ முடியும்.அதுதான் இயற்கையின் படைப்பு.இயற்கை அது நோக்கி போகத்தான் ஒவ்வொரு உயிரையும் படைச்சது.ஒவ்வொரு உயிரும் இப்படித்தான் ஆரம்பிக்குது.ஆனா மனிதர்களின் காதலும் விலங்குகளின் காதலும் ஒன்றல்ல.நமது காதல் புனிதமானது.

எப்படி..?

இறக்கும் வரை அது தொடரும்.ஆசை பட்டவங்களை நினைச்சுகிட்டே எத்தனை பேர் கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க.அப்ப ஆசைபட்டவங்களை மறந்துட்டு கல்யாணம் பண்ணவங்க விலங்குகளா..? அப்படி இல்லை.ஆனா அவங்க துணையை நேசிக்குறாங்க.துணை தான் விரும்புனவங்க அளவு இல்லைன்னாமறுபடி அந்த பழைய காதல் பாடா படுத்திடும்.இப்படி மனசை ஒண்ணை படைச்சி தான் விரும்புனவங்களை நினைச்சு நினைச்சு ஏங்குறோமே அதுதான் மனிதனுக்குள்ள சிறப்பு.


ஜோசியத்துல காதல் கிரகங்களில் முக்கியமானவை சந்திரனும்,சுக்கிரனும்தான்.இவங்க தான் அழகுக்கும் அறிவுக்கும் கவர்ச்சிக்கும் அதிபதி.சந்திரன் கெட்டா காதல் தோல்வி.சுக்கிரன் கெட்டா பெண் சுகமே இல்லாத வாழ்க்கை.கன்னமும் ஒடுக்கு விழுந்து கவர்ச்சி இல்லாம இருப்பாங்க.சுக்கிரன் கெட்டு போனவங்களை எங்கு போனாலும் நாய் துரத்தும்.சுக்கிரன் நல்லா ஜாதகத்துல இருந்தா அவங்களை எப்பவும் நாய் நிறைய நாய் சுத்தும்.நடிகைகள் வீட்ல நிறைய நாய் வளர்ப்பாங்க..நடிகைன்னாலே சுக்கிரன் வலு பெற்றவங்கதானே.அதான் கவர்ச்சி கிரகம்.சினிமா,நாடகம்,கலைத்துறை கிரகம்.மனைவி ந்னு சொன்னதும் நான் எழுதுன..உங்களுக்கு எத்தனை மனைவி என்ற பதிவு நினைவுக்கு வருது.அதையும் படிங்க.

செவ்வாய் கலக காரகன்.சுக்கிரனுன் சேர்ந்தா காம சேட்டைகள் நிறைய செய்வான்.பஸ் ல காமலீலை செய்யறது ....ஈவ் டீசிங் எல்லாம் வரும்.

சனியும் சுக்கிரனும் செக்ஸ் வக்ரம்.

ராகுவும் சுக்கிரனும் பல பெண்கள் உடலுறவு,பக்கத்து வீட்டை நோட்டம் விடுறது.ஆம்பளைக இல்லைன்னா வீடு புகுந்துருவான்.

சுக்கிரனும்,சந்திரனும் சேர்ந்தா அடிக்கடி ’காதல்’ வரும்.எப்போதும் இன்பம் தான்.சுற்றி கோபியர் கொஞ்சும் ரமணா தான்.!!

ரிசபம்,கடகம்,துலாம் ராசிக்காரர்கள் தன் மனைவி /கணவன் மீது அதிக பிரியம் பாசம் உள்ளவர்கள்.சனியின் ராசிகளான மகரம்,கும்பம் கொஞ்சம் சுகம் குறைவு.

புதன் அறிவு கிரகம்.இவர் நல்லாருந்தா கலகலப்பா அறிவார்ந்த முறையில பேசி எதிராளியை கவுத்துருவாங்க...ஆண் பெண் வசியத்துக்கு மெயின் இவரும் ..இல்லையா.நம்ம விஜய் டிவியில சிவ கார்த்திகேயன் மாதிரி.உடனுக்குடன் சாதூர்யமா பேசறது,போரடிக்காத பேச்சு,ஜோக்கடிப்பது பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.உடனே மனசை பறி கொடுத்துருவாங்க.

கற்றோரை கற்றோரே காமுறுவர் என வள்ளுவர் சொன்ன மாதிரி உங்க அறிவுக்கும் டேஸ்டுக்கும் தகுந்த மாதிரிதான் உங்களுக்கு துணை கிடைக்கும்.நீங்க உங்க துணை அளவுக்கு இல்லைன்னா வாழ்க்கை கசந்துரும்.

மனைவியை காதலிக்க தெரியணும்.கட்டிலில் அசத்த தெரியணும்.ரொம்ப எதிர்பார்ப்பான மனைவியா இருந்து நீங்க..பெருசா எதையும் எடுத்துக்காத ஆளா இருந்தாலும் ஃபெயில் தான்.நீங்க மன்மத ராசா வா இருந்து உங்க மனைவி ஏய்யா சும்மா எரும கணக்கா உரசுற ...என எகிரும் டைப்பா இருந்தாலும் நீங்க ஃபெயில் தான்.

இதை கண்டுபிடிக்க காதல் செய்து புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கனும்.இல்லைன்னா  ஜோசியர் கிட்ட ஜாதகம் காண்பிச்சு திருமண பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணனும்.நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துட்டு 9 பொருத்தம் சூப்பர் பொருத்தம்.என கல்யாணம் செய்தா அப்புறம் ஒரேடியா கூவிவிடும்.

ஒரு ஜாதகத்துல சுக்கிரன்,சந்திரன் என இரு கிரகங்களையும் பார்த்தாலெ பல விசயங்களை அதாவது அந்தரங்க விசயங்கள்ல இவங்க எப்படினு சொல்லிடலாம்...!

அதுதான் பொருத்தம் பார்க்கும் முறை.ஆசை அதிகம் இருப்பவருக்கும் ஆசை ரொம்ப லிமிட்டா இருக்குறவங்களையும் கல்யாணம் பண்ணி வெச்சா விவகாரம் கோர்ட் வாசல்ல தான் முடியும்..!!

சனி, 26 நவம்பர், 2011

தொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..

கொழுப்பை கரைக்கும் மீன் எண்ணேய்

உடலில் தேவையற்ற பாகங்களில் உள்ள கொழுப்பை கரையச் செய்யும் ஆற்றல் மீன் எண்ணையில் உள்ளது.இதனால் மீன் எண்ணையில் உள்ளது.இதனால் தினமும் மீன் எண்ணைய் சாப்பிட்டால் வயிற்று பகுதியில் உள்ள வேண்டாத சதைப் பகுதி (தொந்தி) கரைகிறது.

வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மீன் எண்ணெய் சாப்பிடுங்கள்.அல்லது அசைவ உணவில் குழம்பு மீனை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.கர்ப்பிணிகள் இதை உண்பதால் கர்ப்பிணிகளின் உயர் ரத்த அழுத்தம் குறையும்.குழந்தை கொழு கொழுவென பிறக்கும்.

கலிபோர்னியா பலகலை கழகத்தின் ஜான்சன் புற்று நோய் மருத்துவ மையம் மார்பக புற்று நோய் திசுக்களை மீன் எண்ணெய் மாற்றி விடுகிறது என கண்டறிந்துள்ளனர்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

ரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்

ரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்


இன்று வெள்ளிக்கிழமை சுக்கிரன் நாள் என்பதால்,சுக்கிரன் மேட்டர்.குரு,சுக்கிரன் மட்டும் வைத்து இதை பார்ப்போம்.சில விசயங்கள் மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன்.. குரு,சுக்கிரன் சேட்டைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது..அவ்வப்போது எழுதுகிறேன்..!

சுக்கிரனை தொட்டாலே பெண் மோகம் தான்...எந்த ஜாதகமானாலும் கற்பொழுக்கத்தில் கறை என்று சொல்லும்போது குரு கிரகத்தை பார்க்க வேண்டும்.குரு ஆட்சி உச்சம் பெற்று நின்றுவிட்டால் அது கேந்திர கோணமாக இருந்துவிட்டால் அடக்கி வாசிப்பது அவசியம்..

ஏன்..?

பரம்பரை எண்ணத்தை வரும்படி செய்பவர் குரு.இருக்கும் கவுரவத்தை இழந்துவிடக்கூடாது என்று சிந்திக்க வைப்பவர் குரு.அதனால் வலிய வரும் வாய்ப்புகளை கூட தவறவிட்டு,தன் நிலை தாழாமல் பார்த்துக்கொள்வார்.

ஆனால்..?

ஆறு,எட்டு க்குடைய கிரகத்தின் நட்சத்திர சாரம் பெற்ற குருவாக இருந்தால் அவிழ்க்கிற துணி அடுத்தவருக்கு தெரியாது. ரகசியமாய்....ஒரு உறவு அரங்கேறும்..!

லக்கினத்தில் சுக்கிரன் இருக்குறவன் வீட்டுக்கு போனா வாசல்ல நின்னு கூப்பிடுவதே நல்லது.வீட்டுக்குள்ள போனா நீலப்படம்தான்...இவங்க கண்ல சொக்குப்பொடி வெச்ச மாதிரி எல்லோரும் இவங்க பின்னாடி சுத்துவாங்க.

லக்கினத்துக்கு 3ல் சுக்கிரன் இருக்குறவர் பக்கத்துல கொக்கேக முனிவர் கூட கிட்ட போக முடியாது..காமலோகம் இவர் பக்கம்தான்.

லக்கினத்துக்கு எட்டில் சுக்கிரன் இருந்தால் டிப்ளமோ இன் காமசூத்திரா.

குரு திசை ஒருவருக்கு நடக்கும்போது கடவுள்,பக்தி,ஆன்மீகம்னு பல பேர் நினைக்கிறாங்க...அது தப்பு.குரு என்றால் நாகரீகம்.அதனால இவங்க தப்பு மறைமுகமா நடக்கும்,அவ்ளோதான்.டாஸ்மாக் ல இவங்களை பார்க்க முடியாது.5000 செலவழிக்குற பஃப் பார்ல இவங்களை பார்க்கலாம்..அல்லது 50 கிலோ மீட்டர் தொலைவுல ஒரு சின்ன வீடு இருக்கும்...இதோ இப்போ வந்துடுறேன் என சொல்லிவிட்டு,3 மணி நேரம் கழித்து வருவார்...ஒருத்தரும் கண்டுபிடிக்க முடியாது.


எட்டில் குரு இருந்தா ஊருக்குள்ள இவர்தான் மைனர்.விதம் விதமாய் ரகம் ரகமாய்.எப்படி உசார் பண்றார்னு பக்கத்துல இருந்து கவனிச்சாலும் புரியாது.


பத்தில் குரு..பெண்கள் பால் பலவீனன்.ஆனா இது வேற மாதிரி..அது என்னா...பலவீனம்னு நினைச்சிக்குங்க அவ்ளோதான்.


வியாழன், 24 நவம்பர், 2011

சனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா


சனி பெயர்ச்சி சீசனில் பலருக்கும் ஈமெயில் மூலமாக வந்த,புகழ் பெற்ற அதிகம் பேரை கவர்ந்த பரபரப்பு கட்டுரைஇது.இதை நம் நல்ல நேரம் தளத்திலும் வெளியிடுகிறேன்...



நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!


Satellite.jpg

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,

உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.



இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. 

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


thirunallaru.JPG


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."



இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.



இதை விஞ்சும் வகையில் ஒரு உண்மையை பாருங்கள்;.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!

உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!



எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விடகில்லாடிகள் !!!!

எப்படியோ ,அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவன்..

புதன், 23 நவம்பர், 2011

ஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்

மனைவி அமையும் யோகம்;ஜோதிடம்;ஜோதிடம் கற்க இது முழுமையான பாடம் அல்ல.ஆனால் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று.


ஜோதிட சாஸ்திரத்தில் இன்பத்தை பற்றி சொல்வதற்கு 7 இடங்கள்.துன்பத்தை பற்றி சொல்வதற்கு 5 இடங்கள்.ஐந்து இடங்கள் பற்றி தெரிந்து கொண்டாலே 7 இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

லக்கினம் முதல் எண்ண வரும் 3,6,8,12 இந்த நான்கு இடங்களும் மறைவு ஸ்தானங்களும் என்கிற விதியின் கீழ் ஜாதக்ஜனை அல்லல்படுத்தி அலைக்கழித்து பார்க்கிற இடங்கள்.எஞ்சியது ஒன்று.அது பாதக ஸ்தானம்.அது எப்படி அறிவது..?

12 ராசிகள்.இதி சர ராசி.ஸ்திர ராசி,உபய ராசி என்கிற மூன்று பிரிவுகள் உண்டு.மேசம்,கடகம்,துலாம்,மகரம்,இந்த நான்கு ராசிகளும் சர ராசி.இந்த ராசியை லக்கினமாக கொண்டு ஜனிக்கிற ஜாதகருக்கு அது முதல் எண்ண வரும் 11 ஆம் இடம் பாதக ஸ்தானம்.அங்கு அமரும் கிரகம் சுபராய் இருந்தாலும், கெட்டவன் .ஆகிறார்

இதனால் என்ன நடக்கும்..?

.அந்த கிரகம் கெடு பலனே தரும்.இதனால்தான் பெரும்பாலான சர லக்னகாரர்கள் சேமிக்க முடிவதில்லை..இவர்கள் கணக்கில் பணம் இருந்தாலும் கரைந்துவிடும்..குடும்பத்தார் பெயரிலோ ,பினாமி பெயரிலோ இருந்தால் தப்பிக்கும்.கடக லக்கினத்துக்கு பாதகாதிபதி சுக்கிரன்.

கடக லக்கினத்தார் சுக்கிரன் திசையில வாங்குனதெல்லாம் அதன் திசையிலேயே கெடுத்தும் வெச்சிரும்.பெண்களால் இவர்களுக்கு தொல்லை நேர்வதும்,மனைவியால் அல்லல்படுவத்ற்கும் சுக்கிரன் பாதகாதிபதியாவதுதான் காரணம்.அதனால்தான் மகான்கள் கடக லக்கினத்தில் பிறக்கிறார்களோ...காம எண்ணம் தூக்கல்தான்.கேந்திர சுக்கிரன் கெடுதல் செய்வார்னு புலிப்பாணி ஜோதிடத்துல விளக்கமா சொல்லியிருக்கார் சித்தர்.

துலாம் லக்கினத்துக்கு சூரியன்.ஆட்சி பெர்றால் அவ்வளவுதான்.திசா புத்தி வந்தா படுத்தி எடுத்துருவார்.இவங்களுக்கு 7ல் சூரியன் உச்சம் பெற்றால்..?பணக்கார மனைவி அமையும்.ஆனா 10 பைசாவுக்கு இவரை மதிக்காது.லாரியில சீர் கொண்டு வந்திருக்கே..? எப்படி மதிக்கும்?
துலாம் லக்கினத்துக்கு மூத்த சகோதரனாலோ அல்லது கள்ள உறவால்தான் சிக்கலே காத்திருக்கு.... 11 பாதகம் என்பதால் பிற பெண்களிடமோ,ஆண்களிடமோ இவர்கள் தகாத முறையில் பழகினாலே சிக்கல்தான்...நிரைய இழந்துவிடுவார்கள்...ரத்த கண்ணீர் ராதா கதையாகிவிடும்.

11 ஆம் இடமும் 11 ஆம் அதிபதியும் ஏழாம் அதிபதியோடு சம்பந்தம் பெறும்போது இரண்டாவது கல்யாணம் செய்றதுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பது உண்மை.ஆனா இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தா வெச்சிருக்குறதோடு சரி.கெட்டிமேளம் வரை போகாது.

மகரம்  லக்கினத்துக்கு செவ்வாய் தான் எதிரி..செவ்வாய் கெட்டுட்டா நிலைமை மாறுமா.சரியா போச்சு.கெட்டு போற இடம் பாருங்க..7..காலாகாலத்துல கல்யாணம் ஆகுமா.கல்யாணம் பொருத்தம் பார்க்க கூட ஜாதகம் கிடைக்காம கல்யாண மாலை இணையத்துல பழியா கிடக்கணும்.தமிழ் மேட்ரிமொனி எவ்வளவு கேட்டாலும் கொடுத்துட்டு காத்திருக்கணும்.

சரி லக்கினத்தில் செவ்வாய் உச்சம் அடைந்தால்?

நாலு ஊர்ல நிலம்,தோப்பு இருக்கும்.ஆனா அதன் பலனை அனுபவிக்க முடியுமான்னா ம்ஹீம்.சொத்தை விற்கவும் முடியாம.,அதை பராமரிக்கவும் முடியாம திணறனும்.இவர் பெயரில் சொத்து உண்டுகைக்கெட்டினது வாய்க்கு எட்டாது...அவ்வளவுதான்.

புலிப்பாணி ஜோதிடம் 300 ;

சூடப்பா சரராசி செனித்த பேர்க்கு
சுகமில்லை லாபாதி பதியினாலே
ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்
அப்பனே அரசரிட தோசமுண்டாம்
தேடப்பா திரவியமு மளித்தரானால்
திடமான அரிட்டமடா தேடமாட்டான்
வீடப்பா கோணத்திலிருக்க நன்று
விளம்பினேன் புலிப்பாணி வினையை ப்பாரே


 ஸ்திர ராசிகளான...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் பத்தி தெரிஞ்சுக்கலாம்...

 ஸ்திர ராசிகளுக்கு 9ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகிவிடுகிறது 9ஆம் இடம் பாக்யம் ஆச்சே அது கெட்டா பாக்யம் எல்லாம் கெட்டுடுமே...சமூகத்தில் நல்ல புகழ் கிடைக்காதே ..நல்ல குழந்தைகள்,மனைவி,கணவன் எல்லாம் அப்போ ..அவுட்டா என்றால்,ஆமாம்....பாதகம் என்றாலே அதன்மூலம் வரும் பிரச்சினைகள் தான் சந்தோசம்,நிம்மதி யை குறிக்காது..

தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் எதிரிகள் ஆவார்கள்..சமூகத்தோடு ஒத்து போக முடியாது..பணம் சம்பாதிப்பதில்தான் நாட்டம்..ஊர் எப்படி போனா எனக்கென்னா டைப் தான்..உதாரணமா கும்ப லக்னத்தான் ஊருக்கு உழைச்சே திருவோடு ஏந்திடுவான்னு சொல்லுவாங்க...எவ்வளவு நல்லது செஞ்சாலும் எவ்வ்ளவு பணம் அடிச்சானோன்னு ஊர் பேசும்..அதுல என்ன பலன் இருக்கு..வட்டிக்கு கடன் வாங்கி இவர் ஊருக்கு ஒரு பொது கிணறு தோண்ட உதவினா, பெயர் என்ன கிடைச்சது பார்த்தீங்களா..அதுதான் பாதக ஸ்தானம்...

ஏட்டிக்கு போட்டியாய்தான் கணவன்/மனைவி அமையும்...ஆசைப்பட்டு கட்டிகிட்டாலும் பத்ரகாளிதான்...7ஆம் அதிபதி உச்சம் ஆச்சு..கொஞ்ச,நஞ்ச நிம்மதியும் போச்சு.அவங்க மேலதான் நீங்க கீழேதான்..குடும்ப வாழ்க்கை நிம்மதியாக போவதில்லை..அனுசரித்துதான் போயாக வேண்டும்..இந்த லக்னத்தாருக்கு இரண்டு பையன் அல்லது இரண்டு பொண்ணு பிறந்தால் யோகம்..பையன் ஒண்ணு... பொண்ணு ஒண்ணு என பிறந்தால் துன்பம்தான்..ஒருவருக்கு சிக்கலாகிவிடும்..நிம்மதி இருக்காது.கூட்டாளிகள் இவர்களை ஏமாற்றுவார்கள்..அதனால் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள்.நண்பர்களை நம்ப மாட்டார்கள் இதனால் நண்பர்கள் இவர்களுக்கு இல்லை..


செவ்வாய், 22 நவம்பர், 2011

எம்.ஜி.ஆர் பாலிடிக்ஸ்

ரிப்போர்ட்டர் வார இதழ் 27.11.2011

தமிழக அரசு பெரிய நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் மத்திய அரசு எந்த உதவியும் செய்யாதது முதலவரை ரொம்பவே கோபப்படுத்தியதாக சொல்கிறார்கள்.எனவே எம்.ஜி.ஆர் பாணியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறதாம்..

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அரிசி விலையை மத்திய அரசு உயர்த்தியது.இதனை குறைக்க கோரி எம்.ஜி.ஆர் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்.அன்றைய தினம் தமிழ்கம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு இருந்தது.பஸ்,ஆட்டோக்கள் ஓடாத நிலையிலும் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.இதே போல ஒரு போராட்டத்தை நடத்தினால் தமிழ்க அரசை தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருவதை மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறுகிறார்களாம்’’

அதோடு இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் அல்லாத முதல்வர்களை அணி திரட்டவும் முதல்வர் திட்டம் வைத்திருக்கிறாராம்.அவர்களை அழைத்து சென்னையில் மாநாடு நடத்தவும் திட்டம் இருக்கிறதாம்.


ஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்

ஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம் பாகம் இரண்டு.

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு க்ளிக் செய்யவும்.

சனி பெயர்ச்சி பலன்கள் படிக்க விரும்புபவர்கள் இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் ராகு அமர்ந்த பலன் படிக்க இங்கு செல்லவும்

ஜாதகத்தில் சனி அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் சந்திரன் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

உங்கள் ஜதகத்தில் லக்கினத்தில் இருந்து எத்தனையாவது கட்டத்தில் செவ்வாய் இருக்கிறது என எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.அதன்படி 

லக்கினத்துக்கு ஐந்தில் செவ்வாய் இருந்தால்;

அரசு உத்யோகம் வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது.பத்துக்குடையவன் படுத்து தூங்கினா பார்த்து சொல்லணும்.அறிவாளி.அனைத்து துறை பத்தியும் அளந்து விடுவார்.புராண இதிகாசமும் சொல்வார்.நீதி என்பார் நேர்மை என்பார்.என்னா அரசியல் என விமர்சனம் செய்வார்.உள்ளூர் கவுன்சிலர் முதல் ஒபாமா வரை காய்ச்சி எடுப்பார்.விமர்சனம் அடுத்தவங்களுக்குதான்.இவரை ஊரே விமர்சனம் செய்யும்.அன்னியோன்ய நண்பர்கள் அறவே கிடையாது.வாழ்வில் வறுமை அதிகம்.மாமன் வகை பாதிக்கும்.குழந்தை பாக்யத்தில் பிரச்சினை.

லக்கினத்துக்கு ஆறில் செவ்வாய்;

ஆறில் செவ்வாய் அடிப்படையில் நல்லது.6 மிடம் எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் பத்தி சொல்லுமிடம்.அங்கு போர் வீரன் நின்னா நல்லதுதானே.எதிரிகள் இவர்களை கண்டா அலற மாட்டார்களா.கெட்டவன் செவ்வாய் கெட்டு போறது நல்லதுதான்.அவர் லக்கினத்துக்கு சுபரா இருந்து கெட்டு போனா தொந்தரவுதான்.உள்ளூரில் நல்ல பெயர் கிடைக்கும்.ஊருக்கு உழைக்கும் நல்ல மனுசன்.சகோதரன் கெடுதல் செய்வார்.அரசியல் ஈடுபாடு அநேகமா கிட்டும்.ரோசக்காரனுக்கு கடனை கொடு.ரோசம் கெட்டவனுக்கு பொண்ணை கொடு என்பார்கள்.நாணயஸ்தன்.அதனால கடனை கொடுக்கலாம்..பொண்ணை கொடுக்கலாமா..?கொஞ்சம் கொழுந்தனாருடன் சிரிச்சு பேசுனாலும்,போச்சு....தலையில் கட்டுதான்,பொண்டாட்டிக்கு.உறவுக்குள்ள உரசல் வரும்.அதே சமயம் அன்ணார் க்கு இரண்டு தாரம்.இவர் மட்டும் எப்படி.அப்படித்தான்.கட்டிக்கிறது இல்ல வெச்சுக்குறது..

ஏழில் செவ்வாய்;

செவ்வாய் தோச ஜாதகம்.அம்மா ஆடினால் அய்யா அடங்குவார்.அய்யா ஆடுனால் அம்மா அடங்குவார்.நான் அரசியல் பேசலை.7ல் செவ்வாய் இருக்குற,புருசன் பொஞ்சாதி பத்தி சொல்ரேன்.கல்யாணம் செய்வதற்குள் நாக்கு தள்ளிவிடும்.அந்தளவு அலசி ஆராய்ஞ்சுடுவார்.நரை விழுந்த பின் அவசர அவசரமா கட்டிக்குவார்.ஒரு வழியா அம்மணி வந்து சேர்ந்தாலும் அய்யா பார்வை அடுத்தாத்து அம்புஜம் மேலதான்.சொத்துக்கள்,நிலம் சம்பந்தமான வில்லங்கங்கள் எப்போதும் தொடரும்.பஞ்சாயத்துக்கு ஒவ்வொரு ஆலமரமா ஓடுவார்.காம கதைகள் நிறைய இவரை சுத்தும்.எல்லாம் உண்மைதான்.

எட்டில் செவ்வாய்;

செவ்வாய் தோசம்.பெண்ணாய் இருந்தால் மாங்கல்ய தோசம் + செவ்வாய் தோசம்.சொத்து சுகங்கள் நிறைய உண்டு.ஆனா பார்வை பதியும் இடம் தப்பாகிறது.இதனால் பற்றாக்குறை தொடர் கதை.வட்டிக்கு வாங்கி நெட்டி நிமிரும்.கடனுக்கு சொத்து சுகங்கள் இழக்கவும் நேரலாம்.சீக்கிரம் திருமனம் ஆவதில் சிக்கல்.யாரை பார்த்தாலும் பிடிக்கலை.மூக்கு கோணலா இருக்கு என காலம் போகும்.வயசு போச்சேடா வரதராஜா என பின்னால் புலம்புவார்கள்.எட்டாமிடம் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சு அடக்குற மாதிரி ஆணவமா இருக்கும்.நான் அடங்கி போறவன் இல்லை.அடக்கிட்டு போறவன் என்பார்கள்.இதனால் உறவினர்கள் பகையாகலாம்.மூலம் வியாதி தாக்கும் வாய்ப்புண்டு.

ஒன்பதில் செவ்வாய்;

மதிப்புமிக்க மனிதர்.பட்டம் பெறும் வாய்ப்பு உண்டு.எதை செய்தாலும் லாபம் இருக்கா என பார்ப்பவர்கள்.உத்யோகம் பார்த்தால் நல்ல தொழிலாளி.சொந்த தொழில் செய்தால் நல்ல முதலாளி.தெய்வ பக்தி என்பது தேய்பிறை.அப்பா கூட அடிக்கடி சொல்வார் இந்த பயலை பெத்தது தப்பு.அந்தளவு அப்பாவுக்கும் மகனுக்கும் பாசம்.பிள்ளைகளால் நன்மை இல்லை.நாடு கடந்து செல்லும் வாய்ப்பு வரும்.

பத்தில் செவ்வாய்;

வருமானம் வருவதற்கும்,சொத்து சேர்க்கைக்கும் மிக சிறப்பு.துதி பாடினால் ரொம்ப பிடிக்கும்.குற்றம் சொன்னால் அந்த உறவே வேணாம் என தலை முழுகி விடுவார்.ஆதாயம் கிடைக்குதுன்னா கடல்ல இறங்கி கப்பல் தள்ளனும்னு சொன்னாலும் வந்துருவார்.பதவி வகித்தாலும் பண்ணை வீடு தோப்பு துறவுன்னு வாங்கிப்பார்.மாமனார் வீட்டில் முடிந்தளவு ஆதாயம் பார்த்துவிடுவார்.ராணுவம்,காவல்துறை போன்ற பெரும் துறைகளில் பதவி வகிக்க தகுந்தவர்.

பதினொன்றில் செவ்வாய்;

உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களும் இவரிடம் ஐடியா கேட்பார்கள்.உள்ளூரில் இருந்தாலும் சொல்லுக்கு மதிப்பிருக்கும்.நாட்டாமை அல்லது பண்ணையார்.நிலம் சேர்க்கை என்பது நிச்சயம் உண்டு.திரண்ட சொத்துக்கு அதிபதி.கூட பொறந்தவங்க எண்ணிக்கை கூடுதல்.கஞ்சத்தனம் இல்லாம அஞ்சாறு இருக்கும்.குறைந்த கல்வின்னாலும் நிறைந்த ஞானம்.விவசாயம் செய்தால் லாபம் உண்டு.

பனிரெண்டில் செவ்வாய்;

செவ்வாய் தோசம்.படுக்கை சுகம் பாதிக்கும்.சொத்து,சுகம் பாதிக்கும்.பெண்களாய் இருந்தால் ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை.கல்யாணத்துக்கு பிறகு.மனைவி சுகம் அற்பம்.12 ஆம் இடம் கொஞ்சம் நீக்கு போக்கான இடம்.காமம் சம்பந்தம் அதிகம் உலவும் இடம்.படுக்கை ஸ்தானம் ஆச்சே.அதுல செவ்வாய் இருந்தா விரிவா சொல்ல விரும்பலை.

திங்கள், 21 நவம்பர், 2011

ஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்

ஜோதிடம்;ஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்;

ஜோசியம்,ராசிபலன்,கைரேகை சொல்வதும், படிப்பதும் முட்டாள்தனம் அல்ல..அதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு அதன் மகத்துவம் புரியும்.ஆர்வம் இல்லாதவர்களுக்கு அதன் மகத்துவத்தை புரிய வைப்பது அல்ல என் வேலை.நம்பிக்கை உள்ளவர்களுடன் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவே.நியூமராலஜி நம்பும் மக்கள், நம்பாத மக்கள் எப்படியென்றால் கடவுளை நம்பாதவர்கள் ,நம்புபவர்கள் என்ற பிரிவை போலத்தான்.எல்லா விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன..? கடவுளை மறுப்பவனும்,ஜோதிடத்தை எதிர்ப்பவனும் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளவே இதை செய்கிறார்கள்.பாவம் இந்த முட்டாள்கள்.சூரியனை பார்த்து நாய் ஊளையிடுவது போலத்தான்.உண்மையில் இதை பற்றி ஆராய்ந்து சொன்னால் பரவாயில்லை.இது பத்தி கொஞ்சம் கூட ஆராயாமல் முட்டாள்தனம் என சிரிப்பர்.பவானியில் ஒரு தி.க கட்சிக்காரர் ஜோசியத்தை பொய் என நிரூபிப்பதற்காக அதை கற்க ஆரம்பித்தார்.அதில் இருக்கும் உண்மை அறிந்து ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்பதை ஒப்புக்கொண்டார்.அது போல ஜோசியத்தை முட்டாள்தனம் என்பவர்கள் அதில் மிக அனுபவம் வாய்ந்தவர்கள் பலரை சந்தித்து விவாதம் செய்து முடிவெடுக்க வேண்டும்.ஜோதிடம்,கடவுள் நம்பிக்கை இந்த அறிவாளிகளால் குறைவதும் இல்லை.மாறாக வளரவே செய்கிறது.(செவ்வாய் பத்தி எழுத ஆரம்பிச்சதுமே கோபம் பொத்துகிட்டு வருதே)

நான் ஜோதிட பதிவு எழுதுவதாலோ,அரசியலில் ஜெயலலிதா அவர்களை ஆதரித்தும் எழுதுவதாலோ நாத்திக மற்றும் கருணாநிதி ஆதரவாளர்கள் என் வலைப்பக்க விளம்பரங்களை தொடர்ச்சியாக க்ளிக் செய்து அதாவது சுமார் தினசரி நான்கு மணி நேரம் இதற்காக நேரம் ஒதுக்கி விளம்பரம் க்ளிக் செய்து அதன் மூலம் கூகுளுக்கு சந்தேகம் எழுப்ப செய்கிறார்கள்.இதனால் என் விளம்பர வருவாய் குறையும் என்பது அவர்கள் எண்ணம்.எனக்கு இவ்வளவு எதிரிகளா...ஆச்சர்யமாக இருக்கிறது.16,17,18 ஆம் தேதிகளில் மட்டும் என் நல்ல நேரம் பக்க விளம்பரத்தை 2000 முறை க்ளிக் செய்திருக்கிறார்கள்.இதனால் கூகிள் எனக்கு விளம்பரம் தராமல் தடை செய்யும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.எனக்காக ஒருத்தன் அவன் பொழப்பை கெடுத்துகிட்டு உட்கார்ந்திருக்கானே என்பதற்காக அந்த விளம்பரத்தை நீக்கி வைக்கிறேன்.



ஜாதகத்தில் செவ்வாய்;

லக்கினத்தில் இருந்து ஒன்றில் அதாவது லக்கினத்திலேயே செவ்வாய் இருப்பின்,சுயமாக முடிவெடுத்து தன்னிஷ்டப்படி செயல்படுவார்கள்.எதுவும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான்.கோபம் மலை மலையா வரும்.முகம் சுள்ளுன்னு வெடிக்கிற மாதிரி டென்சனா இருக்கும்.நாலாம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால் அம்மா வுக்கு பாதிப்புதான்.மொய்க்கு மொய்தான்.நான் இந்த உதவி செய்தேன்.அவன் மறுபடி ஏனக்கும் ஏன் செய்யலை...? எதிர்பார்த்துகிட்டிருப்பார்.

இரண்டில் செவ்வாய்;

வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தா வேற என்ன.வாயில் இருந்து வரும் சொற்கள் நெருப்பாய் கொதிக்கும்.கண்கள் விஜயகாந்த் போல ரத்த சிவப்பா கொதிக்கும்.அது சூரியன் வீடா இருந்தா.சிலருக்கு கல்வி பாதிக்கும்.விரய செலவுகள் நிறைய உண்டாகும்.சகோதரனால் பாதிப்பும் உண்டு.வாயால் கெட்டான் என்பார்களே அது இவங்களுக்கும் பொருந்தும்.செவ்வாய் தோசம் உண்டு.

மூன்றில் செவ்வாய்;

எடுத்தெறிஞ்சு பேசுவதில் இவருக்கு நிகர் இல்லை.எவனா இருந்தா எனக்கென்னடா...என்றுதான் பேச ஆரம்பிப்பார்கள்.திட்டம் போட்டு கட்டம் கட்டுவதில் சூரப்புலி.மனமதன் லீலை வென்றார் உண்டோ..ஆணுக்கு வீரிய ஸ்தானம் ஆச்சே.காம கதைகள் இவர் வாழ்வில் நிறைய உண்டு.கரும்பில்லாத மன்மதன்.குழல் இல்லாத கிருஷ்ணன்.முழு ஆண்மை சக்தி இவரிடம் வெளிப்படும்.சளைக்காத செக்ஸ் உறவு இவர் பலம்.பெண்கள் வலிய வருவார்கள்.துணிச்சல்,தைரியம் இவர் முக்கிய பலம்.

நான்கில் செவ்வாய்;

நிலம்,சொத்துக்கள் நிறைய சேரும்.புதையல் யோகம் உண்டு.அம்மா இவருக்கு பாதிப்பு.இவரால் அம்மாவுக்கும் பாதிப்பு.இவர் பிறந்ததும் அவர் மார்பில் சுரக்கும் பாலும் சுரக்காது..ஆனா எப்போதும் தகராறுதான்.புருசன் பொண்டாட்டிக்குள்ள வருசத்துல பாதி நாள் யுத்தம்தான்.பணம் சேர்க்கும் வெறி எப்போதும் இருக்கும்.இருக்குமிடம் பாவரால் பார்க்கப்பட்டு அல்லது பலவீனமாய் இருப்பின் ஆரோக்கியம் கெடும்.குடியிருக்கும் வீடு எதிரிகளால் மாந்திரீகம் செய்யப்பட்டு சூன்யம் ஆக்கப்படும்.வீடு சூன்யமான இடத்தில் அமர்ந்திருக்கும்.உக்கிர தெய்வ பாதிப்பு இருக்கும்.செவ்வாய் தோசம் உண்டு.

தொடரும்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..?

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..?

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் தான் இதுவரை கடைபிடிக்க படுகிறது.திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமான கணிப்பை கொண்டது.அதன்படி 15.11.2011 காலை 10.12 க்கு சனி பெயர்ச்சி ஆனாலும்,பலர் வாக்கிய பஞ்சாங்கபடி தான் சனி பெயர்ச்சியை  எதிர்பார்த்திருக்கின்றனர்.திருநள்ளாறு சனி பகவானின் முக்கியமான தலம்.சனி பகவானுடைய ப்ரீதி ஸ்தலங்களில் திருநள்ளாறுதான் அதிக பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.

ஏழரை சனி என்றாலும்,சனி திசை என்றாலும் திருநள்ளாறு போயிட்டு வாங்க என்பதுதான் ஜோதிடர்களின் முக்கிய பரிகாரமாக இருக்கும்.இது காலம் காலமாக பலரின் நம்பிக்கை.

ஆகவே திருநள்ளாறு தலத்தில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்ட சிறப்பு வழிபாடுகள் என்று நடைபெறுவதாக அறிவிக்கப்படுகிறதோ அதை திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி என்று குறிப்பிடுவதும் வழக்கமாகியிருக்கிறது.

பொதுவாக எல்லா ஆலயங்களிலுமே நடைபெறக்கூடிய விசேஷ வைபவங்கள்,சிறப்பு வழிபாடுகள் ஆகியவை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி கடைபிடிக்கப்படுவதே நீண்டகால மரபாகும்.

வாக்கிய பஞ்சாங்கபடி -நிகழும் கர வருடம்,மார்கழி மாதம்,5 ஆம் நாள் 21.12.2011 புதன்கிழமையன்று நாழிகை3 வினாடி 29க்கு சென்னை நேரப்படி காலை 7.54க்கு சனி கிரகப் பெயர்ச்சி நடைபெறுகிறது.

திருநள்ளாறு,திருக்கொள்ளிக்காடு,குச்சனூர் ,கொடுமுடி போன்ற சனி ப்ரீதி தலங்களிலும்,சனீஸ்வரனின் தனி சன்னிதி உள்ள மற்ற ஆலயங்களிலும் 21.12.2011 அன்று காலையிலிருந்து இரவு வரையிலுமாக சனிப் பெயர்ச்சியை முன்னிட்ட விசேஷ வைபவங்கள்,சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும்.


திருக்கணிதம் பஞ்சாங்கம் துல்லியமானது.வாக்கியம் மிக பழைமையானது.என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2

ஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2

இதன் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7 வது கட்டத்தில் சந்திரன் இருந்தால்;

அழகு மனைவி பாக்யமாக அமையும்.(சந்திரன் லக்கினத்துக்கு 6க்குடையவ்,எட்டுக்குடையவனாக இருப்பின் மற்றவர்கள் பழிக்கும் அழகில்லா மனைவி)வசதியான இடத்தில் சம்பந்தம் உண்டாகும்.மாமியார் ஒத்துழைப்புடன் பல வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.மனைவிக்கு மரியாதை கொடுப்பவர்.உரல் போறது தெரியாது.ஊசிக்குத்தான் ஊரைக் கூட்டுவார்.உயர்ந்தவர்களோடு உறவை ஏற்படுத்திக்கொள்வார்.ஆனால் போக எண்ணம் அதாங்க காம எண்ணம் 80 வயது வரை போகாது.மன்மத ராசா தான்.பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய கதைதான்.

எட்டில் சந்திரன்;

சந்திரன் மறைஞ்சிட்டா என்னாகும்..? உடல்காரகன் ஆச்சே.மெலிந்த தேகம்..என்ன சாப்பிட்டாலும் தேறாது...பீர் குடிச்சும் பார்த்துட்டேன்.புரட்டீன் பவுடர் சாப்பிட்டு பார்த்துட்டேன்...ம்ஹீம்..உடம்பு தேறவே இல்லை என சிலர் அலுத்துக்கொள்வர்.சதா சர்வ காலமும் ஏதாவது வியாதியால் துன்பபடுவர்.முக்கியமாக ஆஸ்துமா,சளி..காய்ச்சல்...

உப்பு பெறாத விசயத்திலும் தப்பு கண்டுபிடித்து சண்டை போடுவார்.பொறாமை குணம் ஜாஸ்தி..நம்மால முடியலையேன்னுதான்.அம்மா காரகன் கெட்டா அம்மாவுக்கும் கெடுதலே.சின்ன வயசுலியே அவங்களை இழந்துடலாம்.அல்லது அவர்களை பிரிந்தே வாழலாம்.

ஒன்பதில் சந்திரன்;

பக்திமான்.கோயில் குளத்தை சுத்தம் செய்தல்,கோயில் குளத்துக்கு அள்ளி கொடுத்தல்,கோயில் குளத்தின் மீது அக்கறை இவர்களுக்கு அதிகம்.எதிரியும் கஷ்டமா இருக்குன்னு கண் கலங்கினா இவரும் கண் கலங்கிடுவார்.பாக்கெட்ல எவ்ளோ இருந்தாலும் அள்ளி கொடுத்துட்டு தான் மறு வேலை.மாதா,பிதா,குரு,தெய்வம் ஒன்றாக பாவிக்க கூடியர்,சித்தர்களும் இவர்களுக்கு காட்சியளிப்பர்.திருப்பதி பெருமாள் வரத்தால் பிறந்தவர்கள்.வருடம் இருமுறையாவது அங்கு சென்று வந்தால்தான் நிம்மதி.அம்பாள் என்றால் உருகுவர்.எல்லா ஆன்மீக பயணமும் மேற்க்கொள்வர்.தந்தைக்கு பாதிப்பு.தாய் வழி,தந்தை வழி சொந்தங்கள் உதவாது.சுக போக வாழ்க்கை உண்டு.

பத்தில் சந்திரன்;

கைராசி டாக்டர் பலரை பார்த்திருக்கிறேன்.மருத்துவம்,சித்தா,முறையாக பயின்றால் 3ல் குரு இருப்பின் பிரபல மருத்துவர்.இவர்கள் கடும் உழைப்பாளிகள்.முழு கவனம் செலுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வர்.வசதி வாய்ப்பும் செல்வ வளமும் ஏராளமாக அமையும்.ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு.பெண்கள் மூலம் அதிக ஆதாயம் உண்டு.டாக்டராக இருந்தாலும் பெண் கஷ்டமர் உண்டு.லேடீஸ் டெய்லரா இருந்தாலும் பெண் வருமானம் உண்டு.பெண் வழி சொத்து உண்டு.கையெழுத்து போடுறது வீட்டுக்கார அம்மணிதான்.அட..மனைவிக்கு தான் அந்த யோகம்னு சொல்ரேன்.

பதினொன்றில் சந்திரன்;

சர லக்னத்தை சேர்ந்தவங்களுக்கு பாதக ஸ்தானம் ஆனாலும் சங்கடம் இல்லை.வியாபாரமே சிறப்பு.பெரும்பாலானவர்கள் முதலாளி அந்தஸ்தை பெற்றிருப்பார்கள்.தீர்க்க தரிசன செயல்பாடு.கடல் கடந்து செல்லவும்,அயலூருக்கு போய் ஆதாயம் தேடவும் வாய்ப்புண்டு.கால்நடை விருத்தி உண்டு.

பனிரெண்டில் சந்திரன்;

அன்பு,கருணை,இரக்கம்,தயாள குணம் என்பதையெல்லாம் மறந்து கடின மனம் கொண்டவர்களாக மாறுவர்.இந்த சந்திரனை பாவ கிரகங்கள் பார்த்தால் அங்க குறைபாடும் உண்டாகும்.பணக்க ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.பணம் தங்குவதில்லை.மந்திரம்,தந்திரம்,எந்திரம் என மனம் அலைபாயும்.செய்வினை செய்ய போகிறேன்,எனக்கு செய்வினை வெச்சிட்டாங்க என்பார்.எப்போதும் டென்சன் பார்ட்டி.