குழந்தை பாக்யம் இல்லாதவர் ஜாதகம் பற்றி புலிப்பாணி சித்தர் தன் ஜோதிட பாடலில் என்ன சொல்லியிருக்கிறார் என பர்ப்போம்....
பாடல்;
ஆரப்பா அயன்விதியை அரைய கேளு
அப்பனே அஞ்சுள்ளோன் ஆரோன் கூடில்
சீரப்பா சென்மனுக்கு புத்திர தோசம்
சிவசிவாயிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூரப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
கொற்றவனே கொள்ளிக்கு பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
பலதுண்டு பலதீர்த்த மாடச்சொல்லே.
விளக்கம்;பிரம்மன் விதித்த விதியை எவராலும் மாற்ற முடியாது .ஆதலின் இந்த ஜாதகத்தின் அமைப்பை கவனத்துடன் கேட்பாயாக.பூர்வ புண்ணிய அதிபதியான ஐந்துக்கு உரியவன் ஆறுக்குறியவருடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் புத்திர தோசம் உடையவர்.சிவனருளால் இவர்கள் மூன்றாம் இடத்தில் சேர்ந்திருந்தாலும் இவர்களை கொடிய கிரகங்கள் பார்த்தாலும் இந்த ஜாதகர் இறந்த பின்னர் கொள்ளி போடக்கூட பிள்ளைகள் இருக்காது..
ஆனால் குரு பகவானின் பார்வை இருந்தால் பலன் உண்டு.எனலாம்.இந்த ஜாதகர் பல ஸ்தலங்களுக்கு சென்ரூ தீர்த்த மாடி வரச்சொல்லலாம்..
.
குறிப்பு;ஜாதகத்தில் கணவனுக்கு லக்கினத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் சனி,செவ்வாய்,ராகு,கேது,சூரியன் இருந்தாலும்,குரு கெட்டு இருந்தாலும்,பலருக்கு நீண்ட நாள் கழித்து பெண் குழந்தை பிறந்து இருக்கிறது..குருவாயூர்,திருச்செந்தூர்,ராகவேந்திரர் ஸ்தலமாகிய மந்த்ராலயம் போன்ற இடங்களில் 3 தினங்கள் தங்கி வழி பட வேண்டும்..கர்ப்பப்பை பலவீனம் இருப்பின் மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.ஆணின் உயிர அணு வளர்ச்சிக்கு செவ்வாழை பழம் சாப்பிட வேண்டும்..உஸ்ணமான இடத்தில் ஆண் பணி புரிந்தாலும் இருவருக்கும் உடல் உஸ்னமாக காணப்பட்டாலும் குழந்தை பாக்யம் தாமதம் உண்டு...இதற்குதான் பெண் செவ்வாய்,வெள்ளி நல்லெண்ணை தேய்து குளிக்கவும்.ஆண் புதன்,சனிக்கிழமையில் நல்லெண்ணை தேய்த்து குளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது..இதனால் உடல் உவெப்பம் ஒரே அளவில் சீராக இருக்கும்.பித்தமும் தலைக்கு ஏறாமல்,காம வெறியும் ஏற்படாமல் தடுக்கப்படும்...
1 கருத்து:
Dear Sir:
Thanks for sharing this invaluable information, songs and the description.
Is this book for buying available anywhere?
Thanks, Siva
கருத்துரையிடுக