வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..?

ப.சிதம்பரம் ,உள்துறை அமைச்சர் ஜாதகம் என்ன சொல்கிறது..?






பிறந்த தேதி;16.9.1945

நட்சத்திரம்;பூராடம்

ராசி;தனுசு


இவரது ஜாதகத்தில் சூரியன்,குரு,செவ்வாய் போன்ற அரசு கிரகங்கள் பலமாக இருக்கின்றன..இந்த அமைப்புதான் இவரை இந்திய அரசியலில் நிர்வாகத்தில்,அதிகாரத்தில்,உச்சத்திற்கு கொண்டு சென்றது....

சூரியன் குரு இணைவு சிவராஜ யோகம் ;அதாவது அரச யோகம்

செவ்வாய் -சந்திரன் பார்வை-சசி மங்கள் யோகம்

மேலும் 7 கிரகம் ராசியில் 2 ஆம் பாவத்தில் இருந்து 5 ஆம் பாவம் வரை வரிசையாக இருப்பது கேதார யோகம்..இதனால் செல்வ சீமான்...பரம்பரை பணக்காரர்.

நல்ல சிறப்பான பேச்சு திறமைக்கு சொந்தக்காரர்.அதற்கு காரணம் செவ்வாய்,சந்திரன்,ராகு வாக்கு ஸ்தானத்தில் இருப்பது...தேர்தல் பிரச்சாரத்தில் இவர் பேச்சை கேட்டு இருக்கிறீர்களா..மிக தெளிவான அலசலாக இருக்கும்..

தற்சமயம் இவருக்கு சனி திசையில் புதன் புத்தி நடக்கிறது..சனி திசை நடப்பதால் தற்போதுள்ள பதவியில் பல சோதனைகளை சந்தித்து வருகிறார்..
காரணம் சனி நீசன் அல்லவா..அதனால் கீழ்த்தரமன குற்றசாட்டுகள் இவர் மீது வீசப்படும்...அதை எதிர்கொள்ளும் தைரியம்,சமாளிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு..காரணம் இவரிடம் நல்ல தெய்வ பலம் உண்டு..காரணம் பாக்யாதிபதி திசை நடப்பு..சனி கெடுத்தாலும் கொடுப்பார்..

சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருப்பதால் இது கஜகேஸரி யோகம் ஆகும்....இதன் பலன் தெய்வ பலம்,,,முன்னோர் ஆசி...இவற்றால் யானை பலம்...நீடித்த வெற்றி..குன்றாத செல்வம்..பரந்து விரிந்த மக்கள் செல்வாக்கு..சொல்வாக்கு...போன்றவை உண்டாகும்...

சந்திரனில் இருந்து 10 ல் சுபக்கிரகம் இருந்தால் அது அமலா யோகம் இதுவும் பூரண உடல் நலம்,நீடித்த வெற்றி,நினைத்த காரியம் ஜெயமாகுதல் என சிறப்பான யோகம் ஆகும்..


தாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...திருமண பொருத்தத்தில் மனைவி என்பது வரமா சாபமா என பார்ப்பது மிக அவசியம்.
மூக்கும் முழியுமா பொண்ணு மகாலட்சுமியாட்டம் இருக்குறா என பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்..அது சாமுத்ரிகா லட்சணம் மட்டுமில்லாமல் ,கிரகங்கள் அமைப்பு ஜாதகத்தில் நன்றாக இருந்தால் முக அமைப்பும்,குண அமைப்பும் நன்றாக அமையும்.அதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என பெரியவர்கள் சொல்லி வைத்தனர்..ஒருத்தர் முகத்தை பார்த்தாலே ஆள் எப்படின்னு சொல்லிடுவேன்னு சொல்றாங்களே..அதுவும் இந்த கணக்குதான்..


ஒரு ஜாதகத்தில் கிரக அமைப்பு எப்படி இருந்தால் எப்படிப்பட்ட மனைவி அமையும்..?

புலிப்பாணி ஜோதிடம்-குழந்தை பாக்யம்

குழந்தை பாக்யம் இல்லாதவர் ஜாதகம் பற்றி புலிப்பாணி சித்தர் தன் ஜோதிட பாடலில் என்ன சொல்லியிருக்கிறார் என பர்ப்போம்....

பாடல்;

ஆரப்பா அயன்விதியை அரைய கேளு 
அப்பனே அஞ்சுள்ளோன் ஆரோன் கூடில்
சீரப்பா சென்மனுக்கு புத்திர தோசம்
சிவசிவாயிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூரப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும் 
கொற்றவனே கொள்ளிக்கு பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
பலதுண்டு பலதீர்த்த மாடச்சொல்லே.


விளக்கம்;பிரம்மன் விதித்த விதியை எவராலும் மாற்ற முடியாது .ஆதலின் இந்த ஜாதகத்தின் அமைப்பை கவனத்துடன் கேட்பாயாக.பூர்வ புண்ணிய அதிபதியான ஐந்துக்கு உரியவன் ஆறுக்குறியவருடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் புத்திர தோசம் உடையவர்.சிவனருளால் இவர்கள் மூன்றாம் இடத்தில் சேர்ந்திருந்தாலும் இவர்களை கொடிய கிரகங்கள் பார்த்தாலும் இந்த ஜாதகர் இறந்த பின்னர் கொள்ளி போடக்கூட பிள்ளைகள் இருக்காது..
ஆனால் குரு பகவானின் பார்வை இருந்தால் பலன் உண்டு.எனலாம்.இந்த ஜாதகர் பல ஸ்தலங்களுக்கு சென்ரூ தீர்த்த மாடி வரச்சொல்லலாம்..

12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும் ராசிக்காரர்களும்

மேச ராசிக்காரர்களுக்கு கடகம்,மகரம் ராசியினரால் முழுமையான உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்,கும்பம் ராசியினர் பகை ராசிக்காரர்கள்
-----------------------------
ரிசபம் ராசிக்கரர்களுக்கு;சிம்மம்,விருச்சிகம்,கும்பம்,மீனம் மனமுவந்து உத்வி செய்வர்.
தனுசு,மீனம் தீமைகளே அதிகம் ஏற்படுத்தும் ராசிக்காரர்கள்.
-------------------------------------
மிதுனம் ; நன்மை தரும் ராசிக்கரர்கள்-துலாம்,கும்பம்,மேசம்

பகை ராசிக்காரர்கள்-தனுசு,மகரம்,மீனம்
---------------------------------
கடக ராசிக்காரர்களுக்கு-நன்மை செய்வோர்-துலாம்,மகரம்,மேசம்
தீமை;கும்பம்,ரிசபம்
-----------------------------
சிம்மம் ராசியினருக்கு;நன்மை ராசிகள்;விருச்சிகம்,கும்பம்,மிதுனம்,ரிசபம்
தீமை;மீனம்,மேசம் ராசியினர்
---------------------------
கன்னி ராசிக்காரர்களுக்கு;நன்மை;மகரம்,ரிசபம்,கடகம்
தீமை;தனுசு,மீனம்,மேசம்
----------------------------
துலாம் ராசிக்காரர்களுக்கு;நன்மை;மேசம்,கடகம்,மகரம்
தீமை;ரிசபம்,சிம்மம்
-----------------------
விருச்சிகம் ராசிக்கு நன்மை;கும்பம்,ரிசபம்,சிம்மம்,கன்னி
பகை;சிம்மம்,விருச்சிகம்
----------------------------
தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை;மேசம்,கன்னி,துலாம்
தீமை;மிதுனம்,கடகம்,கன்னி
------------------------------
மகரம்;நன்மை;மேசம்,கடகம்,துலாம்
தீமை;சிம்மம்,விருச்சிகம்
-------------------------
கும்பம் ராசியினருக்கு நன்மை;ரிசபம்,சிம்மம்,.தனுசு
தீமை ராசியினர்;கன்னி,துலாம்
---------------------
மீனம் ராசியினர்;கடகம்,மகரம் ராசியினர் நன்மை செய்வர்
தீமை;விருச்சிகம்,கும்பம்



வியாழன், 29 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்த்தல்

நாடிபார்த்து சித்த வைத்தியம் செய்தது ஒரு காலம்.இன்று அப்படிப்பட்ட வைத்தியர்கள் இருக்கிறார்களா என்பதேகேள்விக்குறிதான்...இப்போதெல்லாம் சித்த வைத்தியர்களே மாத்திரையை போட்டுக்கொண்டு உடல் உபாதையை தீர்த்துக்கொள்கின்றனர்.


புலிப்பாணி ஜோதிடம்;நாடி பார்ப்பது எப்படி என சொல்கிறது.

பாடல்;
பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர் புதனும் குரு சனியும் வாத நாடி
சீரப்பா துர்கிரகம் சூரி சேயும்
சிரப்பான பாம்புகளும் பித்த நாடி 
நேரப்பா பால்மதியும் சுங்கன் தானும் 
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருடை கடாட்சத்தாலே 
விவரமெல்லாம் புலிப்பாணி விளம்ப கேளு.

விளக்கம்;மனிதனுக்கு உயிர் நாடியாக விளங்கும் மூன்று நாடிகளுக்கான கிரகங்களை கூறுகிறேன்.புதனுக்கும்,சனிக்கும் உரியது வாத நாடியாகும்.துர்கிரகம் எனப்படும் சூரியனும்,செவ்வாயும் சிறப்பு மிக்க பாம்புகள் எனப்படும் ராகுவும்,கேதுவும் ஆகிய இடங்களுக்கு உரியது பித்த நாடியாகும்.சந்திரன்,சுக்கிரன் போன்றவர்களுக்கு உரியது சிலேத்தும நாடியாகும்.இதனை என் குருவாகிய போகர் அருளினால் கூறினேன்.

பெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..?

சுகாதார விதிப்படி பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பது நல்லது என்று முன்னோர் நடைமுறைப்படுத்தினர்.அந்த நாளில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்.வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது.

சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்

சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள் first night;

திருமண பொருத்தம் நல்ல விதமாக இருந்தும்,திருமண நாளும் நல்லபடியாக இருந்தும்,சாந்தி முகூர்த்தம் எனும் முதலிரவு சரியாக நடைபெறும் தினம் காலற்ற ,உடலற்ற,தலையற்ற நட்சத்திரம் வரும் நாளில் இருக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்-இந்த மூன்றும் காலற்ற நட்சத்திரங்கள்
மிருகசிரீடம்,சித்திரை,அவிட்டம் -இந்த மூன்றும் உடலற்ற நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி -இந்த மூன்றும் தலையற்ற நட்சத்திரங்கள்

இந்த நட்சத்திரங்களில் முதலிரவும்,வீடு கட்ட மனை முகூர்த்தமும்,யாத்திரையும் ஆகாது.

இது பற்றிய ஒரு ஜோதிட பாடல்;
காலற்ற உடலற்ற நாளிற்
கோலக் குய மடவார் தமைக் கூடின் மலடாவார்
மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத் தயர் வழி போகினும் நலமெய்திடாரே.


சனி பெயர்ச்சி பலன்கள் 2012

சனி பெயர்ச்சி 2012

சனி பெயர்ச்சி வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு கன்னியில் இருந்து துலாம் வீட்டுக்கு செல்கிறது...இதனால் இந்திய அரசியலில் என்ன மாற்றம் நடக்கும் என யோசித்தால் துலாம் காற்று ராசி..காற்றுன்னா அலைக்கற்றையையும் குறிக்கும்..(2ஜிதான்)எரிவாயுவையும் குறிக்கும்...இவையெல்லாம் இன்னும் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்படும்..சோனியாகாந்தியோ அல்லது பிரதமரோ....கடுமையான பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்..இதுவரை இல்லாத அளவு ஸ்பெக்ட்ரம் ஊழல் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதே என் கணிப்பு.

புதன், 28 செப்டம்பர், 2011

கருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்

அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் ஜாதகம்;

ஜோதிடம் மூலம் ராசிபலன் அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பை கணித்து விட முடியாது.என் ராசிக்கு அரசு வேலை கிடைக்குமா என பார்க்க கூடது.ஜாதகப்படி அரசு துறையில் அமர ஒருவருடைய ஜாதகத்தில் அரசு கிரகங்களாகிய சூரியனும்,உத்தியோககாரகனாகிய செவ்வாயும்,பெரிய பதவியில் அமர குருவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

சனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

15.11.2011 அன்று காலை..திருக்கணிதம் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார்.அதாவது ராசி மாறுகிறார்.சனி ஒரு நீதி தேவன்.அவர் ராசி மாறுவதால் உலகில் பல மாற்றங்கள் நல்லதோ ,கெட்டதோ ஏற்படும்.ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவரவர் ராசிப்படி எத்தனையாவது இடத்துக்கு அவர் வருகிறாரோ...அந்த இடத்தை பொறுத்து நன்மையோ,தீமையோ பலன்களை அள்ளி தருவார்.ஏழரை சனி,அஷ்டம சனி பற்றிய பயம் மக்களிடம் மிக அதிகம் இருக்கிறது.காரணம் ஜோசியர்களும்,மீடியாவும் அவற்றை விளம்பரப்படுத்திக்கொண்டு இருப்பதால் மட்டும் அல்ல...சனி அந்தளவு விளாசி எடுப்பார்.இப்போது ஜெயலலிதாவிடம் சிக்கி கொண்டு முழி பிதுங்கும் தி.மு.க வினர் போல,தப்பு செஞ்சவன் சனி பகவானிடம் தண்டனை பெற்றே தீர வேண்டும்...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..?

விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..?


விஜயகாந்த் பிறந்த தேதி;25.8.1952
வருடம்;நந்தன வருடம் ஆவணி 10,திங்கள்
பிறந்த ஊர்;மதுரை
நட்சத்திரம் 2 ஆம் பாதம்
ராசி;கன்னி
லக்கினம்;சிம்மம்
திதி;பஞ்சமி
யோகம்;சுப்ரம நாம யோகம்
கரணம்;பவ கரணம்

http://www.astrosuper.com
அரசியல் தலைவர்களின் ஜாதகங்களை பார்க்கும் போது முதலில் அரசு கிரகங்களான குரு,செவ்வாய்,சூரியன் அமைப்பு எப்படி இருக்கிறது என பார்ப்பது அவசியம்.லக்கினமே இவருக்கு சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்திருக்கிறது.இது அடக்கி ஆளும் லக்கினம்..நேர்மை,நியாயம் விரும்பும் லக்கினம்...அதற்கேற்றார்போல் பிறர் நடக்கவில்லையெனில் கடும் கோபத்தை ஏற்படுத்தும்..நம் வீடுகளில் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களை பார்த்தால் அவர்களும் இப்படித்தான் இருப்பர்.கோபத்தில் கண் சிவப்பர்..காரணம் நெருப்பு கிரகம் சூரியனின் லக்கினம் அல்லவா.

சனி, 24 செப்டம்பர், 2011

திருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்


திருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்


  • திருமூலர்,
  •  
  • பிராணாயாமம்
  •  ,
  • அட்டாங்க யோகம்
  •  ,
  • மூச்சுப்பயிற்சி பற்றி மிக அருமையாக விளக்கும் வீடியோ புத்தகம் இது..பொறுமையாக பாருங்கள்..ஸாரி படியுங்கள்.

செவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012

செவ்வாய் தோசம்-திருமண பொருத்தம் 2012;

செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12 ல் இருந்தால் செவ்வாய் தோசம் என பொத்தாம் பொதுவாக சொல்வார்கள்.ஆனால் இதில் நிறைய விதி விலக்குகள் இருக்கின்றன..

                               வள்ளி,தெய்வானையுடன் முருகன் ,லண்டன்

செவ்வாய் ஆட்சியிலோ ,உச்சமாகவோ ,நீசமாகவோ இருந்தால் தோசமில்லை.குருவோ,சனியோ,ராகுவோ,கேதுவோ பார்த்தாலோ,சேர்ந்து இருந்தாலோ தோஷமில்லை.கடக லக்கினம் அல்லது சிம்ம லக்கினத்தில் இருந்தாலும் தோஷமில்லை.இதையெல்லாம் பார்த்தால் செவ்வாய் தோசங்களில் பாதி அடிபட்டுவிடும்.

குண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்

குண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்;

குண்டலினி சுரப்பியில்தான் அமானுஷ்ய சக்தி இருக்கிறது.இதை தூண்டும் உணவை குண்டலினி சக்தி பயிற்சி பெறுபவர்கள் மேற்க்கொள்வது நல்லது.அப்படிப்பட்ட உணவுகளுக்கு பெயர்தான் காயகல்ப மூலிகைகள் ஆகும்.

காயகல்ப மூலிகைகள் நிறைய இருக்கின்றன்..ஒவ்வொரு காயகல்ப மூலிகையிலும் ஒவ்வொருவிதமான இயக்க ஆற்றல் (எலக்ட்ரான்கள்) இருக்கின்றன...

ஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்

ஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்;


சுக்கிரன் 2 ஆம் பாவகத்தில் இருப்பது -கவிஞன்,எழுத்தாளர்..(அவங்க பேச்சு ரொம்ப இனிமையா இருக்கும்..சனி,செவ்வாய் பார்க்காம இருந்தா)


சுக்கிரன்,4 ஆம் பாவகத்தில் இருந்தால் அதாவது லக்கினத்திற்கு 4 ல் -இசைத்துறையில் ஈடுபடுவர்.
சனி,11 ஆம் பாவகத்தில் இருப்பது- சிற்பம்,சித்திரம் போன்ற தொழில் (ஆர்ட்ஸ் நு எடுத்துக்கலாம்..சினிமாவில் ஆர்ட் டைரக்டராக கூட இருப்பார்..எண்கணிதப்படி கூட்டு எண் 7 வந்தாலும் ஆர்ட்ஸ் தான்)


சனி,சுக்கிரன் 10 ஆம் பாவகத்தில் இருப்பது ம் கலத்துறைதான்..புதன்,சுக்கிரன் 10 ல் இருந்தாலும் இதே..சினிமா..மற்றும் அழகு சாதனம்,ஆடம்பர பொருள் விறபனை,வியாபாரம்...


சந்திரன்,குரு 7ஆம் பாவகத்தில் இருப்பது ஆன்மீகவாதி,பாட்டு எழுதுவது,கவிஞன்,மனைவி அழகாக இருப்பார்.
சந்திரனுக்கு 10 புதன் இருப்பது-தன் திறமையால் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பார்.


2 ஆம் அதிபதி பலம் பெற்று கேந்திர,கோணம் பெற்று குருவின் சம்பந்தம் பெற்றால் நல்ல பேச்சாற்றல்..அப்படியே மக்கள் மயங்கிடுவாங்க..
புதன் இருந்தா வக்கீல் மாதிரி பேசுவார்....குரு இருந்தா அருமையா புத்திமதி சொல்வார்...சனி இருந்தா கண்டபடி பேசுவார்..செவ்வாய் இருந்தா மத்தவங்களை அடக்கி ஆளும் பேச்சு...


சந்திரன் 10 ல் இருந்தா நல்ல மருத்துவர்....விவசாயம்...


சுக்கிரன்,குரு,செவ்வாய் இவர்களில் ஒருவர் 2 ஆம் பாவகத்தில் இருந்தாலும் சுக்கிரன் குருவின் ராசியான தனுசு,மீனம்,ரிசபம்,துலாத்தில் 2,11,10 ஆம் பாவகத்தில் இருந்தாலும் ஃபைனான்ஸ் செய்யலாம்...


ரியல் எஸ்டேட் செய்ய நிலக்காரகன் செவ்வாய் பலம் பெற வேண்டும்...2,11 ல் செவ்வாய் பலம் பெற்று,
நில ராசியில் இருக்க வேண்டும்..


வழக்கறிஞர்;குரு,புதன் இணைந்து 2,10,11 ஆம் பாவகத்தில் இருக்கணும்..


எழுத்தாளர் ஆக புதன் அல்லது குருவிற்கு 1,5,9 அதிபதிகள் சம்பந்தம் பெறுவது...


இஞ்சினியர் ஆக..செவ்வாய் 10 பாவ தொடர்பு உண்டாகணும்...`


சிறந்த மேனேஜர்;8,10 ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவது...

கல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்கவும்!

கல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்கவும்!

சாய் பாபா,கல்கி,பங்காரு அடிகளார்,மாதா அமிர்தானந்தமயி என ஒரு குருவை நம்பி அவர்கள் மீது பித்து பிடித்தது போல பக்தி வைத்து வழிபட்டு வரும் கோடான கோடி பக்த மக்களே...

நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்..ஆனால் உண்மை.உங்கள் வீடுகளில் இருக்கும் ஈசானிய பகுதி படு மோசமாக பாதிக்கப்பட்டதால் ஏற்படும் மன அழுத்தத்தால்தான் இப்படி ஒரு குருவை அண்டி வாழ்கிறீர்கள் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஆம்.வாஸ்து சாஸ்திரப்படி ஈசானிய மூலை,வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மனதில் பயம் அதிகம் உண்டாகும்.குழப்பமான மனநிலை உண்டாகி,தனக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என அஞ்சுகின்றனர்.அல்லது யேதாவது ஒரு பிடிமானத்தை நோக்கி செல்கின்றனர்.இவ்வறு குறையுள்ளவர்கள் குழுவாக இணைந்து செயல்படுகின்றனர்.தங்களின் இழப்புகளை,ஏக்கங்களை,எதிர்பார்ப்புகளை நாசூக்காக பெசிக்கொள்கிறார்கள்.கல்கி பகவான் வெறும் சாக்கு.அதனால் கிடைப்பது நிம்மதியான பொழுது போக்கு.குழுவாக ஒரு வீட்டில் யாரேனும் ஒரு சாமியார் படத்தை வைத்து வழிபடும் வீடுகளில் எல்லாம் சரி செய்ய முடியாத வாஸ்து கோளாறுகள் இருப்பதை கண்டிருக்கிறேன்.

கிழக்கு எல்லையை இடம் இல்லாமல் சுத்தமாக அடைத்திருப்பதும் ,அந்த வீட்டு ஆண்களுக்கு அதிக பாதிப்பை தரும்.ஈசானிய குளியல் அறையும்,கிழக்கு சுவற்றில் ஜன்னல் இல்லாத நிலையும்,ஈசானியம் குறைக்கப்பட்டு காணப்படும் வீடுகளில் வசிக்கும் ஆண்களை செயலிழக்க செய்து,பெண்களின் மனதை பாதிக்கும்....

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்

வீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்;

வீடு கட்டும்போது அன்று நிலவும் ராசிபலன்களை உணர்ந்து வீடு கட்டுவது நல்லது.


வீடு கட்டுவதற்க்கான மிகவும் சிறப்பான ராசி மேஷமாகும்.
இந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் குடும்பத்தினர் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள்.குடும்பத்தில் எப்போதும் மக்ழ்ச்சி நிலவும்.

ரிஷப ராசியில் வீடு கட்டினாலும் நல்ல சுபிட்ஷமான நிலை நிலவும்;கடன் தொல்லைகள் கட்டுக்குள் வரும்.

மிதுன ராசியில் வீடு கட்டினால் வீட்டில் ஆடு,மாடு,கோழி போன்ற வளர்ப்பு விலங்குகள் பெருகி அதன் மூலம் நல்ல வருமானம் கிட்டும்.
கடக ராசி வீடு கட்டுவதற்கான சிறந்த ராசியல்ல;

சிம்ம ராசியில் வீடு கட்டினால் உற்றார் உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல.இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு அடிக்கடி கேடு ஏற்படும்.

துலாம் ராசியில் வீடு கட்டத்தோடங்கினால் சுகபோக வாழ்வு அமையும் என கூறுவார்கள்.

விருச்சிக ராசியில் வீடு கட்டுவது மிகவும் நல்லது.படிப்படியாக வாழ்க்கையில் வீட்டின் உரிமையாளருக்கு முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாரத பண வருவாயும் இருக்கும்.

தனுசு ராசி வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல்.
மகர ராசி வீடு கட்டத்தொடங்க நல்ல ராசியாகும்.அந்த ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் வீட்டில் தானியங்கள் சேரும்.வளமன சூழல் உருவாகும்.

கும்ப ராசியில் வீடு கட்டத்தொடங்கினால் அந்த வீட்டில் சுப காரியங்கள் குறையின்றி நடக்கும்...மதிப்பும்,செல்வாக்கும் சமூகத்தில் உயரும்.அணிகலன்கள் நிறைய சேரும்.

புலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4

புலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4;


பாடல்;

பாரப்பா பதிக்கேழு நாலேழெட்டில் 
பாங்கான கோள்கள் சேர்ந்து நிற்க
சீரப்பா சென்மனுந்த் தனித்து நில்லான்
செம்பொன்னும் கோடியுண்டு சிறப்பாய் வாழ்வான்
வீரப்பா வெகு பூமிக் கரசனாகி 
வீரர் படை கரிமாவும் ரதங்க ளுள்ளோன்
கூரப்பா குவலயத்தில் யென்னூல் பாரு
குணமாக புலிப்பாணி குறித்திட்டேனே.



ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்டையும்

திருமண பொருத்தம் பார்க்கும் போதும்,காம உணர்வை பற்றி அறிந்து கொள்ளவும் ஜாதகத்தில் பார்க்க வேண்டிய கிரகம் சுக்கிரன்..வசதியாக வாழ்வாரா...வறுமையில் உழல்வாரா...என பார்க்க சுக்கிரனை காண வேண்டும்.ஒரு மனிதனின் வாழ்வில் இல்லறம் நல்லறமாக அமைவது அவரது ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள இடத்தை பொறுத்தே ஆகும்.

சுக்கிரனுக்கு ரிசபம்,துலாம் சொந்த வீடு.மீனம் உச்ச வீடு.கன்னி நீச வீடு.ஒருவரது ராசியில் பிறக்கும்போதே சுக்கிரன் தனது சொந்த வீடுகளான ரிசபம்,துலாமில் இருந்தால் அவர் தனது முயற்சியால் பெரும் செல்வம்,பெயர்,புகழ் அரசாங்க வேலை எல்லாவற்றையும் அடைவார்.இசையில் நாட்டம் காட்டுவார்.பெருமையோடு மதிக்கப்படுவார்.நோயற்ற பயமற்ற வாழ்க்கை அமையும்,மனதுக்கு உகந்த இல்லற துணை கிடைக்கும்..

குடும்ப ஜோதிடம் astrology book

குடும்ப ஜோதிடம்/சனி பெயர்ச்சி பலன்கள்/வாஸ்து/ராசிபலன்/கைரேகை/ஜோதிடம்/ஜாதகம்;

குடும்ப ஜோதிடம்;

பத்து வருடங்களுக்கு முன்பு ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் வந்தபோது கொடுமுடியில் ஜோதிடம் பார்ப்பதில் பிரபலமாக இருந்தவரிடம் சென்று எனக்கு தினசரி ஒரு மணி நெரம் ஜோசியம் சொல்லிக்கொடுங்க..நான் கத்துக்கிறேன்..அதுக்குண்டான கட்டம் கொடுத்துவிடுகிறேன்..என கேட்டபோது அவர்..தம்பி..லிஃப்கோ பதிப்பகம் வெளியிட்ட குடும்ப ஜோதிடம் புக் வாங்கி நல்லா மனப்பாடம் பண்ணு...நிறைய ஜாதகம் வாங்கி நீ படிச்சதையும் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்த்து,அவங்க நடைமுறை வாழ்வையும் பார்த்து,இதில் சொல்லப்பட்ட விசயம் நடைமுறையில் ஒத்து வருதான்னு ஆராய்ச்சி பண்ணு.ஜோசியத்துல உனக்கு நிறைய ஆரவம் இருந்தா ,நிறைய ஆராய்ச்சி பண்ணு.அதே நினைப்பா இருந்தா,ஆராய்ச்சி செஞ்சிகிட்டே இருந்தாதான் இந்த கலை உனக்கு வரும்னார்...

வியாழன், 22 செப்டம்பர், 2011

கண்ணதாசன் எழுதிய வனவாசம்

கவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூல் கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.இந்த புத்தகம் 424 பக்கங்கள் கொண்டது.இதை படிக்க ஆரம்பித்ததும்..என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை.அவ்வளவு அதிர்ச்சியான அக்கால அரசியல் நிலவரம் பச்சையாக எழுதப்பட்டிருந்தது.

ஆபாசமான விசயங்களும் யதார்த்தமாக மோசமான வார்த்தைகள் இன்றி எழுதப்பட்டிருந்தது.கண்ணதாசன்,தானும்,கருணாநிதி இருவரும் ஒரே கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் என சொல்லியிருக்கிறார்.ஜெயலலிதா பல முறை இந்த புத்தகத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்

.

புதன், 21 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)

புலிப்பாணி ஜோதிடம் 300

சித்தர் புலிப்பாணி எழுதிய ஜோதிட பாடல்கள் மிக பழமையானவை...பல ஜோதிடர்களுக்கு இதுதான் பால பாடம்..இந்த புத்தகத்தைதான் ஜோதிடர்கள் மனனம் செய்து ஜோதிடம் சொல்லி வருகின்றனர்...எல்லா சிக்கலான கிரக நிலைக்கும் இதில் தீர்வு உண்டு.திருமண பொருத்தம்,குழந்தை பிறப்பு யோக பலன்,விதவையை திருமணம் செய்பவரின் ஜாதக மைப்பு,திருமணமே ஆகாதவரின் ஜாதக அமைப்பு,களத்திர தோசம்,புதையல் போல பணம் சம்பாதிக்கும் யோகம்,சோரம் போகும் மனைவி,கீழ்த்தரமான பெண்களை நாடும் ஆண் ஜாதகம்,கிழவனுக்கு மனைவியாகும் பெண்ணின் ஜாதகம்,பணம் இருந்தும் கஞ்சன்,மந்திரவாதி,வேடிக்கை காட்டுபவன்,கொலைக்கும் அஞ்சாதவன்  ஜாதகம் என வரிசை படுத்தி பாடியிருக்கிறார் சித்தர் புலிப்பாணி.

இவர் எழுதிய நூல்கள்;
புலிப்பாணி வைத்தியம் – 500 
புலிப்பாணி சோதிடம் – 300 
புலிப்பாணி ஜாலம் – 325 
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200 
புலிப்பாணி பூஜாவிதி – 50 
புலிப்பாணி சண்முக பூசை – 30 
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25 
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12 
புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை. 



குரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..?

குரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..?

நவகிரகங்களில் தலை சிறந்தவர் குரு பகவான்.அதிக நன்மை தரும் சுப கிரகம் குரு.புகழ்,செல்வம்,ஞானம்,மன மகிழ்ச்சி,திருமண பாக்கியம்,பிள்ளை பேறு,ஆகியவற்றை அருளும் பகவான்.கோபம் இல்லாதவர்.கற்பக விருட்சம் போல் நன்மைகளை அளிப்பவர்.எளியவர்களின் உறவினர்.உலகையும் நீதியையும் காப்பவர்.



ஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..?


ஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்..?

சனி ராசிக்கு 12 வது இட்த்திலும்,அதை தொடர்ந்து ஜென்ம ராசிய்லும் ,பிறகு இரண்டாவது இட்த்திலும் வலம் வரும் நேரத்தை ஏழரை சனி என்பார்கள்.ஒவ்வொரு இட்த்திலும் சனி சஞ்சாரம் இரண்டரை ஆண்டுகள் .இந்த மூன்றையும் கூட்டினால் ஏழரை ஆண்டுகள்.வாழ்க்கையில் மிகவும் சிரம்மான காலமாக இது கருதப்படுகிறது.

பனிரெண்டாம் இட்த்தில் சனி இருக்கும்போது அதை ஆத்ய சனி என்பார்கள்.இந்த இரண்டரை ஆண்டுகள் பிரச்சனை எப்படி வரும் என்றே தெரியாது.தவுசண்ட்வாலா பட்டாசை கொளுத்தி போட்ட்து போல பின்னி பெடலெடுக்கும் படி பிரச்சனைகள் அடுத்தடுத்து வரும் என இன்னும் திகில் கலையாமல் அதை அனுபவித்த சிம்ம ராசிக்காரர்கள் சொல்கிறார்கள்.

ஜென்ம ராசியில் சனி இருக்கும் போது அதை மத்திய சனி அல்லது ஜென்ம சனி என்பார்கள்.ஊரையே உலுக்கி எடுத்த்து போல பெரிய சத்தம் போடும் நாட்டு வெடி வெடிப்பார்களே...அது போல பெரிய பிரச்சனையாக வந்து நிலை குலைய செய்து விடும்.கனிமொழி,ராசாவுக்கு வந்தது போல..அவர்கள் போல நீங்களும் சிறைக்கு செல்வீர்கள் என சொல்லவில்லை..சண்டைக்கு வராதீங்கப்பு.

இரண்டாவது இட்த்தில் சனி இருப்பதை அந்திய சனி என்பார்கள்.இந்த காலம் நமுத்து போன பட்டாசை கொளுத்தி போடுவது போல.திரி எரியும்.பெருசா வெடிக்கும்னு நினைச்சா புஸ்க்குனு போயிடும்.அது போல பெரிய பிரச்சனைகள் எல்லாம் திடீரென மறைந்துவிடும்.சில நெரம் வெடிக்கவும் செய்யும்.ஏழரை சனிதான் இன்னும் முடியவில்லையே.ஜெயல்லிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு மாதிரி.

பிறந்த ராசியில் இருந்து எட்டாவது வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதை அஷ்டமத்து சனி என்பார்கள்.இதுவும் சர்வ நாசம் தரக்கூடியது.சனியும் சந்திரனும் இணைந்தால்..மனக்காரகனும்,முடவனும் இணைந்தால்..மனம் முடங்கித்தானே போகும்...?

ஏழரை சனி,அஷ்டமத்து சனி,ஜென்ம சனி இவை மூன்றுக்கும் சனி ப்ரீதி,சனி நவகிரக வழிபாடு,திருநள்ளாறு,அல்லது குச்சனூர் சனி பகவான் ஆலயம் சென்று வழிபட்டு வர வேண்டும்.


தினசரி காக்கைக்கு எள் கலந்த தயிர் சாதம் வைதுவிட்டு உண்ணவும்.
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு மிக சிறப்பு.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

குபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்


குபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்

சாஸ்திர சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவுகின்ற கடவுள்தான் வினாயகர்.மஞ்சள் தூலை எடுத்து கொஞ்சம் தண்ணீரை சேர்த்து கையால் பிடித்து பிள்ளையாரே உன்னை இங்கு அழைக்கிறேன் என்றால் போதும்...அடுத்த கணம் அங்கு பிரதியட்சணம் ஆகி விடுவார்.’’ஹாரித்ரா பிம்பம்என்பார்கள்.(பிடிச்சு வெச்ச பிள்ளையார் என்கிறோமே அது போல..)இதனால்தான் வைதீக பொருட்களை பட்டியல் போடும்போது முதலில் மஞ்சள் தூள் எழுதுகிறோம்.


ஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;


ஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;
ஜோதிட ரீதியாக கீழ்க்கண்டவை பொது பலன் மட்டுமே.உங்கள் லக்கினத்தை பொறுத்தவை கீழ்க்கண்ட கெடுபலன் கூடலாம் ..அல்லது அதிகரிக்கலாம்..



சனிக்கு மகரம்,கும்பம் சொந்த வீடு.துலாம் உச்ச வீடு.மேஷம் நீச வீடு.சனி நீச வீடான மேசத்தில் இருந்தால் அந்த ராசிதார்ருக்கு மோசமான பலன் கிடைக்கும்.ஊர் ஊராக திரிய வேண்டிய நிலை ஏற்படும்.தொழிலில் பலவித பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.சோம்பல்,சலிப்பு ,அதிகம் உண்டாகி ஆரோக்கியமும் பாதிக்கலாம்..எந்த காரியம் தொட்டாலும் தடங்கல் உண்டாகலாம்.கபட சுபாவம் வந்து ஒட்டி க்கொள்ளும்.சனி நீசமான மேச வீட்டுக்கதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் ஆனால் நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டு நல்ல பலன்கள் உண்டாகும்.

சீனத்தில் இருந்து வந்ததா..வாஸ்து?


சீனத்தில் இருந்து வந்த்தா..வாஸ்து?
ஜோதிட சாஸ்திரம்,ஆகம சாஸ்திரம்,தர்ம சாஸ்திரம் ஆகியவற்றை போல் முக்கியமான ஒன்றுதான் வாஸ்து சாஸ்திரம்.இதன் பூர்வீகம் சீனா என்று பலரும் தவறாக கூறி வருகிறார்கள்.இந்த சாஸ்திரம் நமக்கு சொந்தமானது.இதை நமக்கு உருவாக்கியவர்கள் பாரத தேசத்தின் பெருமைக்குறிய முனிவர்களும்,ரிஷிகளும் ஆவர்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்களை நம் சாஸ்திர வல்லுனர்கள் எழுதி சென்றிருக்கின்றனர்.

சனி திசை நல்லதா கெட்டதா..?


சனி திசை நல்லதா கெட்ட்தா..?

சனி பகவானின் நிறம் கறுப்பு.அவர் ஆட்சி செய்யும் திசை மேற்கு.சனியின் சொரூபம் விஸ்ணு சொரூபம்.அவருக்கு ஏற்ற தானியம் எள்.அவருக்கு ஹோம்ம் செய்ய உபயோகப்படும் சமித்து வன்னி.அவருக்கு சாத்த வேண்டிய வஸ்திரத்தின் நிறம் நீலம்.பொருந்தும் ரத்தினம் இந்திர நீலம்.அவருக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் எள்ளு சாதம்.பூஜிக்க உகந்த மலர் கருங்குவளை.அவருக்கு பொருந்தும் உலோகம் இரும்பு.
சனிக்கு வாகனம் காக்கை.(ஆனால் வட நாட்டு பழக்கத்தில் இருக்கும் தியான சுலோகங்கள் கழுகை சனிக்கு வாகனமாக சொல்கின்றன..)நமது உடலில் தொடையில் அவர் உறைவதாக ஐதீகம்.

திருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ஒரிஜினல்?


ஜோதிடக்கலைக்கு அடிப்படையானது பஞ்சாங்கம்.பஞ்சாங்கம் என்றால் பஞ்ச + அங்கம்.அதாவது பஞ்ச என்றால் ஐந்து ;அங்கம் என்றால் உறுப்பு.பஞ்சாங்கம் என்றால் ஐந்து பகுதிகளை கொண்டது என பொருளாகும்.வாரம்,திதி,நட்சத்திரம்,கரணம்,யோக, அன்ற ஐந்து பகுதிகளை கொண்டதே இந்த பஞ்சாங்கம் ஆகும்.

இந்த பஞ்சாங்கங்கள் வாக்கிய பஞ்சாங்கம்,திருக்கணித பஞ்சாங்கம் என இரண்டு வகைப்படும்.ஈரோடு,கோவை,சேலம்,திருப்பூர்,காங்கேயம்,கரூர் பகுதிகளில் திருக்கணித பஞ்சாங்கம் கணிதம்தான்.கம்ப்யூட்டர் ஜாதக சாஃப்ட்வேர் கூட திருக்கணிதமே பயன்படுத்துகிறோம்.

வாக்கிய பஞ்சாங்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதபொபடும் பஞ்சாங்கமாகும்.திருநள்ளாறு உட்பட பல முக்கிய கோயில்கள்,சென்னை,காஞ்சிபுரம் ,கும்பகோணம்,ஆற்காடு,வேலூர் பகுதி ஜோதிடர்கள் வாக்கிய பஞ்சாங்க கணிப்பையே பயன்படுத்துகின்றனர்..திருச்சி பகுதிகளிலும் இதுதான் என நினைக்கிறேன்..பாம்பு பஞ்சாங்கம்,ஆற்காடு பஞ்சாங்கம் போன்றநிறுவனங்கள்வாக்கியபஞ்சாங்கத்தில்பிரபலம்..திருக்கணிதத்தில்வாசன்,சபரி,ஸ்ரீனிவாசன்,பிரபலம்.

திருக்கணித பஞ்சாங்கம் என்பது சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும்.சூரியன்,சந்திரன்,பூமி இம்மூன்றும் தங்களுக்குள்ள ஈர்ப்பு விசையல் ஒன்றை மற்றொன்று இழுக்கிறது.சந்திரனுக்கு உள்ள இழுப்பு விசை சக்தி மிகவும் குறைவாகும்.ஆனால் சூரியனுக்கும்,பூமிக்கும் இந்த சக்தி அதிகமாக உள்ளது.இதனால் சந்திரன் மற்ற இருவரின் இழுப்பு விசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவ்வப்போது அவர்களை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு உட்பட்டவராகிறார்.மற்ற கிரகங்களும் கூட தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன...

இதனால் சந்திரனின் போக்கில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு அது இங்கும் அங்கும் ஆடி வளைந்து நெளிந்து கோணலாக செல்கிறது.இதனால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வித்தியாசம் தெரிகிறது.வாக்கிய பஞ்சாங்கத்தில் இந்த நுணுக்கம் சேர்க்கப்படவில்லை.

திருக்கணித பஞ்சாங்கத்தில் இந்த வித்தியாசங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.

வாக்கிய பஞ்சாங்கத்திற்கும்,திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வித்தியாசம் ஏற்படுவதுண்டு.அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வித்தியாசம் ஏற்படும்.அமாவாசை ,பெளர்ணமி தினங்களில் இந்த வித்தியாசம் மிகக்குறைவாக இருக்கும்.அஷ்டமை,நவமி,தினங்களில் இந்த வித்தியாசம் அதிகமாக இருக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை வாக்கிய பஞ்சாங்கமே அனுஷ்டிக்கப்படுகிறது.திருநெல்வேலி,ராமநாதபுரம்,மதுரை,ஸ்ரீரெங்கம்,சேலம்,கும்பகோணம் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து வெளிவரும் பிரபல பஞ்சாங்கங்கள் வாக்கிய பஞ்சாங்கள்தான்.

சென்னை,காஞ்சிபுரம் ,ஈரோடு ,சேலம் ஆகிய ஊர்களில் இருந்து திருக்கணித பஞ்சாங்கள் வெளிவருகின்றன..
இதன் அடிப்படையில் வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யால் பழமையை அப்படியே பிரதிபலிக்கிறது.திருநள்ளாறு சனி பெயர்ச்சியும் இதன் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.ஆலங்குடி குரு பெயர்ச்சியும் வாக்கிய அடிப்படையில்தான் கணிக்கப்படுகிறது.

தமிழ்க அரசு திருக்கோயில்களில் திருக்கணித அடிப்படையில் தான் கணிக்கப்பட வேண்டும் என போராடி வருகின்றனர்.வாக்கிய பஞ்சாங்க ஆர்வலர்களோ கூடாது என போர்க்கொடி உயர்த்துகின்றனர்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)

புலிப்பாணி ஜோதிடம் 300 பாகம் -2

நவகிரங்களின் தன்மைகள் வரிசையில் சந்திரன் பற்றி புலிப்பாணி பாடுகிறார்;

பாரப்பா சந்திரனுக் காட்சி நண்டு
பாங்கான விடையதுவே உச்சமாகும்
வீரப்பா விரிச்சகமும் தீநீசமாகும்
விருதுபெற்ற தனுமீனம் கன்னி நட்பு
ஆரப்பா அறிவிலார்கள் மற்றாறு ராசி
அருளில்லாப் பகையதுவே யாகும் பாரு
கூரப்பா கிரகம் நின்ற நிலையை பார்த்து 
குறிப்பறிந்து புலிப்பாணி கூறினேன்.

நவகிரகங்களான சந்திரனுக்கு ஆட்சி வீடு கடகமாகும்.பெருமை மிக்க ரிசப ராசி உச்ச வீடாகும்.வீரியமிக்க விருச்சிகம் நீச வீடாகும்.தனுசு ,மீனம்,கன்னி,ஆகிய மூன்றும் நட்பு வீடாகும்.மற்ற ஆறு ராசிகளும் அதாவது மேஷம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,மகரம்,கும்பம் ஆகியவைகள் பகை வீடாகும்.இதனை கிரகம் அமைந்துள்ள நிலையை பார்த்து கணக்கிட்டு புலிப்பாணியாகிய நான் கூறுகிறேன்.

புலிப்பாணி ஜோதிடம் 300

ஜோதிட நூல்கள் பெரும்பாலும் வட மொழியில் அதிகம் இருப்பினும் அத்ற்கு இணையாக நம் நாட்டு சித்தர்களும் ஜோதிட நுல்கள் இயற்றியுள்ளனர்.அதில் பழமையானதும்,உன்னதமானதுமான நூல் புலிப்பாணி 300 ஜோதிட நூல் ஆகும்.இன்றும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்கும்போது,இந்த நூலில் உள்ள பாடல்களை உதாரணத்துக்கு சொல்லி விளக்கிதான் ஜாதகம் பார்ப்பர்.அண்ணாமலை பல்கலைகழகம் நடத்தும் ஜோதிட பாட பேராசிரியர்களும் இந்த பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்..காரணம் ஜோதிடத்தில் எளிமைமையான பல கணக்குகளை புரிய வைப்பது புலிப்பாணி 300 ஆகும்.

நாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி?

நாடி சோதிட ம் பல வகை உண்டு.இதில் பிருஹத் நாடி சோதிடம் மூலம் பலன்கள் எப்படி காண்கிறார்கள் என்பதை காண்போம்.

ராசி கட்டம் பார்த்து சாதாரண ஜோதிட முறை பலன் காண்பத்ற்கும்,நாடி சோதிடம் மூலம் பலன் காண்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனினும் சில பலன்கள் அதில் நச்ச் என இருக்கும்..கோட்சாரம்,திசா புத்தி,சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சி என பிரித்து பலன் சொல்வதில்லை..(அதுல தான் நம்மாளுக குழப்பிடுறாங்கன்னோ என்னவோ)

*ஆண்கள் ஜாதகத்தில் குரு எங்கு உள்ளாரோ அதுவே லக்னமாக வைத்து பலன் காண வேண்டும்.சனி கர்மாவை பத்தி சொல்லும் கிரகமாக பார்க்க வேண்டும்..


ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

நிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச்சி

சிக்கிம் மாநிலத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவை நடுங்க வைத்துள்ளது..இதனால் கூடங்குளம் மக்களின் போராட்டம் அதிர்ச்சியுடன் தொடர்கிறது..இன்னும் மக்களின் கோபம் அதிகமாகி உள்ளது..இன்று விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்,மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றார்....


ஜெயலலிதா கூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக இருப்பதாக ஆதாரத்துடன் சொல்லி,உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் கூடங்குளம் மக்களை இன்னும் அச்சத்தில் தள்ளியிருக்கிறது...இந்த மக்கள் போராட்டம் இப்போதைக்கு முடிவதாக இல்லை..மக்கள் மனநிலைக்கு மதிப்பளித்து முதல்வரும் அவர்களுக்கு ஆதராவாக செயல்பட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சி..

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்


ரஜினியின் ராசியான மகர ராசி நேயர்களே..நீங்கள் கடும் உழைப்பாளிகள் மட்டுமல்ல..அன்புக்காக ஏங்கும் மென்மையான மனம் கொண்டவர்கள்.யாரையும் அவ்வளவு எளிதில் பகைத்து கொள்ள மாட்டீர்கள்...பகைத்தாலும் மனதிற்குள் உங்கள் ஆதங்கத்தை பூட்டிக்கொண்டு வெளியில் சிரித்து பேசி சமாளிப்பீர்கள்.அடிச்சா அதிரடி..இல்லைன்னா எங்க இருக்கோம்னே தெரியாத ஒரு அமைதி..காரணம் மகரம் ஒரு ஆழ்ந்த ராசி.சனிக்குண்டான ராசி என்பதால் சனியின் காரகத்துவமான கடும் முயற்சி,கடும் உழைப்பு,அதிக அலைச்சல் எப்போதும் உங்களுடன் இருக்கும்.மோசமான ஆட்களால் அடிக்கடி தொந்தரவு,சங்கடம் நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!


ஜோதிடம்;உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!




ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

சிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்

சிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்;

சந்திர மேடு வலது கை சுண்டு விரலுக்கு கீழ் மணிக்கட்டு மேலிடதுபுறம் இருக்கும் சிறிய மேடான பகுதி.இதுதான் ஒருவர் மன நிலை,மன தெளிவு,கடல்கடந்து வெளிநாடு செல்லும் யோகம் பற்றி சொல்லும் இடமாகும்.உடல் ஆரோக்கியத்தையும் இந்த இடம் மூலம் கைரேகை மூலம் கணக்கிடலாம்.

மரணத்தை வெல்லும் மருந்து

மரணத்தை வெல்வது சுலபமல்ல.அதே நேரத்தில் மரணம் ஏற்படுவதை தள்ளிபோட முடியுமா?என்பது குறித்து இங்கிலாந்தில் ஆராய்ச்சிகள் நடந்து வந்தன.இங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கழகத்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி டாக்டர் கேய்.பீ.ககாவ் என்பவர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட டாக்டர் குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.இவர்கள் கடந்த 4 ஆண்டுகாலம் இது தொடர்பாக பல்வேறு பரிசோனைகளை நடத்தி பார்த்தனர்.

அப்போது வைட்டமின் ’ சி’சத்து நிறைந்த காய்கறிகளை ,பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதன்மூலம்மரணத்தை த்ள்ளி போட முடியும் என்ற உண்மை தெரிய வந்தது.வைட்டமின் சி யில் உள்ள ஆண்டி- ஆக்சிடண்ட் சத்து மற்றும் பிற சத்துகள் ரத்தத்தில் கலந்து பல வியத்தகு மாற்றங்களை செய்கின்றன..அதாவது இவை நோய் வர காரணமான டி.என்.ஏ அமைப்பையே மாற்ருகின்றன..ஒரு மனிதனின் உடலில் என்ன நோய் தாக்கும் எந்த காலகட்டத்தில் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது போன்ற விவரங்களை டி.என்.ஏ வரைபடம் மூலம் கண்டுபிடிக்கலம்.இந்த கோளாறுகளை வைட்டமின் சி மூலம் சரி செய்யலாம் என்கிறார்கள்.

சனி, 17 செப்டம்பர், 2011

ரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம்

ஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம்;

சினிமாவில் ரொம்ப வருசமா இருக்கேன்.இன்னும் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கலை..என் ஜாதகப்படி அந்த அமைப்பு இருக்கான்னு பாருங்க சார் என பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு ஜாதகம் பார்த்து இருக்கிறார்கள்.துணை இயக்குனர்கள்,பலர் பல வருடம் சினிமாவில் இருந்தும் இயக்குனர் ஆக முடியவில்லையே என வருந்துவர்.ஒரு படம் இயக்கிவிட்டு படம் சுமாராக ஓடியது அப்புறம் பட வாய்ப்பே வரலை..இனி என் எதிர்காலம் என்னாகும் என வருந்துபவர்கள் இருக்கிறார்கள்.


சினிமாவில் நடிக்கணும் கோடம்பாக்கத்தை,இயக்குனர்,தயாரிப்பாளர் வீட்டு வாசலில் பழியாய் கிடப்பவர்கள்,பாட வாய்ப்பு,கதை எழுத,பாடல் எழுத வாய்ப்பு கேட்டு எத்தனையோ பேர் தவம் இருக்கிரார்கள்.

விக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை !


விக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை !
விக்ரம், தீக்ஷா சேத் நடித்து வரும் படம் 'ராஜபாட்டை'. சுசீந்திரன் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
'
கனகரத்னா மூவிஸ்' ரமேஷ் மகன்களான சந்தோஷ் மற்றும் பிரதீஷ் ஆகியோரது தயாரிப்பில் எஸ்.பி.கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரித்து வந்தனர்.

பண நெருக்கடி காரணமாக எடுத்தவரை அப்படத்தை தயாரிப்பாளர்கள் விற்றுவிட்டனர்.  தற்போது தொழிலதிபர் பிரசாத் பொட்லூரி என்பவரது நிறுவனமான பி.வி.பி சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிப்பை  ஏற்றுள்ளதால் படுவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுவரை 85% படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்.

விஜயகாந்த்-ஜெயலலிதா

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு புஸ்வாணம் ஆகப்போகிறது..கனிமொழி,ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற அனுமானம் சில நாட்களாகவே உலா வந்து கொண்டிருக்கிறது.உள்துறை அமைச்சர் சிதம்பரம்,பிரதமர் இருவருக்கும் தெரியாமல் நாங்கள் எதையுமே செய்யவில்லை என இருவரும் கோர்ட்டில் சொன்னதுதான் இதற்கு காரணம்.இதனால் பயந்துபோன காங்கிரஸ் அரசு வழக்கின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.


பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)

பிரசன்ன ஜோதிடம் என்பது ஒருவர் வரும் நேரம்,கேள்வி கேட்கும் நெரம் பொறுத்து கணிதம் போட்டு பலன் சொல்வதாகும்.சில ஜோதிடர்கள் ஃபோன் மூலம் கேட்கும் நேரத்தை கணித்தும் சொல்ல்லி வருகின்றனர்.இப்போது நான் சொல்வது வெற்றிலை மூலம் பார்க்கப்படும் ஆரூடம். சோழி பிரசன்னம்,அகத்தியர் ஆரூடம் போன்ற வரிசையில் இந்த வெற்றிலை ஜோதிடமும் வருகிறது.இதை எப்படி கணிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

சாதகம் பார்க்க வந்தவரை 24 வெற்றிலைக்கு மேல் வாங்கி வர சொல்லவும்.வாங்கி வந்த வெற்றிலையை 2 ஆல் பெருக்க வேண்டும்.வெற்றிலையை மீண்டும் 5 ஆல் பெருக்க வேண்டும்.
5 ஆல் பெருக்கியதை ஒன்று கூட்டி 7 ஆல் வகுக்க வேண்டும்.சைபர் வந்தால் 7 என கணக்கிடவும்.

குண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்

குண்டலினி சக்தியை யோக வலிமை உள்ளவர்கள் மட்டுமே எழுப்ப இயலும்.புத்தகம் படித்து பத்மாசனம் போட்டு குண்டலினி எழுப்புகிறேன் என்றால் நித்யானந்தா சீடர்கள் போல துள்ளி துள்ளி குதிக்க வேண்டியதுதான்.அலை மனம் நிலை மனம் ஆனால் இறைவனை காணலாம் என்ற சித்தர்களின் தத்துவப்படி மனதை நிலை நிறுத்தும் பயிற்சி புரிவோர்க்கு  சிரம் தாழ்ந்த வணக்கம்

குண்டலினி பயிற்சி பெறுபவர்களுக்கு சோதிட ரீதியாக ஒரு குறிப்பு;

கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுகிழமையும் இணைந்த நாளில் ஆக்னியை நினைந்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும்.இது புலிப்பாணி,அகத்தியர் சொன்ன நல்ல நாள் தான்.நான் சொல்வது அல்ல.

மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான; மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை .பல அற்புதங்களை செய்பவர்கள்...உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால்தான்..சாதரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும்.இவை சுழல ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும்.

நட்சத்திரங்கள் பொறுத்து சித்து வேலைகளையும்,யோக பயிற்சிகளையும் நம் சித்தர்கள்மேற்க்கொண்டனர்.,மிருகசிரீடம்,அவிட்டம்,உத்திரம்,உத்திராடம்,கிருத்திகை போன்ற நட்சத்திரங்கள் யோக பயிற்சிக்கு சிறந்த நாட்கள்...மகம்,மூலம் நட்சத்திரம் வரும் நாளில் குருவை வணங்கி பயிற்சி தொடங்க சிறந்த நாள் ஆகும்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

நடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்

ஆப்பிரிக்காவில் ஹைடி என்னும் இடத்தில் பொகார் என்னும் மந்திரவாதிகள் இருக்கிறார்கள்.அவர்கள் இறந்து போன மனிதர்களின் பிணத்தை எடுத்து சில மூலிகைகள் மூலம் அவர்களை உயிர்ப்பித்து தங்கள் விருப்பப்படி இயக்குவார்கள்.

அந்த பிண மனிதர்களை கொண்டு தங்கள் விருப்பப்படி எல்லாம் மிக கடினமான காரியங்களை எல்லாம் செய்து கொளவார்கள்.
அவர்கள் எப்படி பிணத்திற்கு உயிர் தருகிறார்கள்?எப்படி பிணத்தை இயக்குகிறார்கள்?என்றால் இந்த முறையில்தான்.

புத்தர்,ராமானுஜர்,ரமணர்,பாரதியார் -ஜாதகம்

லக்கினத்தில் உயர்ந்தது கடக லக்கினம்.புனிதமானதும் கூட.பெரும்பாலான இந்திய மகான்களும் ,சித்தர்களும் கடக லக்கினத்தில் தோன்றியவர்களே.அரசியலுக்கும் இந்த லக்கினமே காரகத்துவம் பெறுகிறது.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் உலகை ஆளவும் அது ஆன்மீக ஆட்சியாக இருந்தாலும் இந்த லக்னமே உதவிசெய்கிறது.தெளிவான,உறுதியான, அன்பான மனமே மகான் ஆக்கும்.அந்த மனதுக்கு அதிபதி சந்திரன்.நுணுக்கமான ஆராய்ச்சி,நடப்பது நடக்க இருப்பது,நடந்தது என ஆராய்ச்சி செய்ய உதவுவதும்,கடவுள் சித்தாந்தத்தை அறிய உதவுவதும் குரு.இந்த இரண்டு கிரக அமைப்புகளும் மகான்கள் ஜாதகத்தில் எப்படி அமைந்தது என பார்ப்போம்.


வியாழன், 15 செப்டம்பர், 2011

பெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்

பெங்களூர் ஐ.டி யில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் யோகா பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம்.எந்த நேரமும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணி புரிவதால் ஏற்படும் மன உளைச்சலை தீர்த்து உற்சாகத்தை யோகா தருகிறது என்கிறார்கள்.இதனால் பெங்களூரில் யோகா வகுப்புகள் பிரபலமாக தொடங்கி உள்ளன..ஏற்கனவே பெங்களூர் ஆச்சார்யா போன்ற யோகா மாஸ்டர்களை உடைய ம்பெருமை கொண்டது பெங்களூர்.இன்று பெங்களூர் என்றாலே நினைவுக்கு வருவது ஐ.டி தான்.அத்தயக கலர் ஃபுல் பெங்களூர் இன்று யோகா நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது.இப்போ ஃபேஷன் யோகாதானுங்கோ!


மெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை

மெய்தீண்டாகால வர்மம் என்பது ஒருவரை தொடாமலே பிராண சக்தி வசிய மூலிகைகள் கொண்டு தாந்திரீக அடிப்படையில் அந்த மூலிகைகளை வாயில் அடக்கி கொண்டு பிறரை நெற்றி பொட்டில் உற்று பார்த்து அவரது உடலில் இருந்து பிராணனையே உறிஞ்சி எடுத்து விடுவர் .எதிரி உடலில் இருந்து பிராணன் தானாக குறைய ஆரம்பிக்கும்.அவன் மயக்கம் அடைந்து மாண்டு போவான்.

ஈரோடு உணவகங்கள்;குப்பண்ணா (அசைவம்)

ஈரோடு பக்கம் நீங்க வந்தா,அங்க சாப்பிட நல்ல மெஸ் எது னு நீங்க தேடும்போது உங்களுக்கு உபயோகமா இருக்கும்னுதான் இந்த கட்டுரை.

ஈரோடு பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல ,ரவுண்டானா அருகில் வ.வு.சி பார்க் செல்லும் வழியில் ஆக்ஸ்போர்டு லாட்ஜ் அருகில் இருக்கிறது குப்பண்ணா ஹோட்டல்.அசைவத்துக்கு புகழ் பெற்ற ஹோட்டல்.மதியம் செம குமபலாக இருக்கும்.ஈரோடு விஐ.பி வீடுகளுக்கு பார்சல் போய்க்கொண்டு இருக்கும்.காரில் வருபவர்கள்,வெளியூர்காரர்கள் என வந்துகொண்டே இருப்பதால் மதியம் சாப்பிட இடம் கிடைப்பதே அபூர்வம்.பெண்கள் பரிமாறுகிறார்கள்.சுத்தம்னா அப்படியொரு சுத்தம்.மினரல் வாட்டர்..ஃபேமிலி ரூம்.ஸ்டார் ஹோட்டல் போல மேஜை,நாற்காலி அலங்காரம்.



விவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி

விவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி;

குண்டலினி யோகத்தின் சாராம்சம் இதுதான்;பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு நாடி சுத்தி செய்து சுவாசத்தை சூட்சும்னா நாடியில் ஓடும்படி செய்துகொள்ள வேண்டும்.
பின் சுவாசத்தை இழுத்து பிராணயாமத்தின் மூலம் கும்பகம் செய்ய வேண்டும்.அப்போது இந்த குண்டலினி (ஆழ்மனம்) ஐ கவனிக்க வேண்டும்.நமது வாசியை கொண்டு மூலாதரத்தை தாக்க வேண்டும்.
இவ்வாறு பல வருடம் தொடர்ந்து சுவாசித்து கும்பகம் செய்து குண்டலினியில் வாசியை (சுவாசத்தை) கொண்டு தாக்கினால் மூலாதாரத்தில் ”ஓளி “ தோன்றும்.அதன்பிறகு ஆதர சக்கரங்கள்: தெளிவாக தெரியும்.அதன்பிறகே குண்டலினி சக்தி மேலெழும்.-ஆழ்மனம் மேல் எழும்.


மூலாதாரத்தில் ஒளியை காணாதவரை குண்டலினி மேலே எழாது.மூலாதரத்தை (ஆழ்மனம்) எழுப்ப இதுவே ஒரே வழி என்று சித்தர்கள் திட்டவட்டமாக குண்டலினி யோகத்தில் கூறுகிறார்கள்,

நாடிகளை பயன்படுத்தும் அக்குபஞ்சர்

நாடிகளை பயன்படுத்தும் அக்குபஞ்சர்;

சீனர்கள் இந்த நாடிகளை பற்றி பழங்காலம் திட்டே அறிந்துவைத்திருந்தனர்.நாடிகளுக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.இதற்கு காரணம் போகர் சித்தர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ததாக அவரது குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறதே அதனாலா என்றால் இருக்கலாம்..உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் இந்த நாடிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அறிந்து வைத்து இருந்தனர்.
அவர்கள் நாடியை பற்றி சொல்லும் கருத்துக்கள் இதுதான்.


நாம் உணவின் மூலம் சுவாசத்தின் மூலம் பெறும் சக்தியானது,இந்த நாடிகளின் மூலம் பிறவி உடலையும் பிராண உடலையும் புத்தியையும் மனதையும் நல்ல நிலையில் வைத்து இருக்கிறது.
இந்த நாடிகளில் எங்காவது மிக சிறிய அடைப்பு ஏற்படுமேயானால் சக்தி இயக்கம் தடைபடும். அல்லது சக்தி இயக்கம் மெதுவாக நடைபெறும்..அதனால் ஸ்தூல உடல் ,புத்தி,பிராணன்,மனம் அனைத்தும் பாதிக்கப்படும்.

சதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்


சதுரகிரி மலைக்கு ஏற்கனவே ஒரு முறை சென்று வந்திருக்கிறேன்.மீண்டும் ஒருமுறை சென்று வர ஆசை ஏற்பட்டதால் ,கடந்த வெள்ளியன்று என் நண்பருடன் சென்று வந்தேன்.சதுரகிரி மலை சித்தர் பூமி.18 சித்தர்களும் தவம் செய்த இடம்..உலாவும் இடம் என்று சொல்வார்கள்.அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள்,வியப்பு தரும் மரங்கள்,விலங்குகள் நிறைந்த வனம் நிறைந்த மலை சதுரகிரி.

ஜோசியத்தை நம்பு

ஜோசியம் உங்கள் வாழ்வின் அனைத்து விவரங்களை தெளிவாக எடுத்துரைக்கும்.

எதிர்காலத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருந்தால் வெற்றி கிடைக்கும் என வழிகாட்டும்.

குடும்ப வாழ்வில் சிறந்த ஆலோசனை சொல்கிறது.
ஏமாற்றுகாரனை,உனக்கு துரோகம் செய்பவனை அடையாளம் காட்டுகிறது.

புதன், 14 செப்டம்பர், 2011

திருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க!

திருமண பொருத்தம் பற்றி எழுத நிறைய இருக்கிறது.கற்பை இழக்கும் பெண்கள் ஜாதகம் என்ற பதிவில் ஐடியா மணி கற்புன்னா என்ன சார்னு கேட்டார்.கற்புன்னா கற்புக்கரசி குஷ்பூ சொன்ன மாதிரி காண்டம் யூஸ் பண்ணினா கற்பு.காண்டம் யூஸ் பண்ணாட்டா கற்பு போயிடும் அப்படீன்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா கற்புன்னா ஒரு பெண் ஒரு ஆடவனை மனதால் ஆசைப்பட்டு களங்கப்பட்டாலே கற்பு போச்சுன்னு நம் இந்து மத சாஸ்திரம் சொல்கிறது.ஆற்றில் நீர் எடுக்கும்போது சூரியனை பார்த்து மனம் பறிகொடுத்த மனைவியை விலக்கி வைத்த முனிவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.அந்தளவு அந்தாளு சைக்கோவான்னு கேட்க கூடாது.கற்பு ஸ்தானம் நு லக்கினத்தில் இருந்து நான்காம் இடத்தை ஜோதிடம் சொல்கிறது.இதை பற்றி இன்னொரு பதிவு எழுதுகிறேன்.
திருமணபொருத்தம் கவனிக்க வேண்டிய குறிப்புகள்;

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012


சனி பெயர்ச்சி -ரஜினி,ஜெயலலிதா,கருணாநிதிக்கு பாதிப்பா?-ஜோதிடம்   
சனி பெயர்ச்சி /கைரேகை/ஜோதிடம்/ஜாதகம்,குருபெயர்ச்சி/ராசிபலன்


சனி பெயர்ச்சிஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது.சனி கடகத்திற்கு வரும்போது கடகம் சந்திரன் வீட்டிற்கு வரும்போது கடகம் சந்திரன் வீடு ,நீர் கிரகம் என்பதால் சுனாமி உண்டானது.கடல் கொந்தளித்தது.பேரழிவு ஏற்படுத்தும் 26 ஆம் நாளில் இது நடந்தது.
சனி சிம்ம வீடான சூரியன் வீட்டிற்கு வரும்போது சூரியன் அரசு கிரகம்,நெருப்பு கிரகம் என்பதால் முக்கிய மந்திரிகள் மரணம்,ரயில் விபத்து,விமான விபத்து,அரசியல் மாற்றம் போன்றவை உண்டானது.